• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிறேம்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  395
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About பிறேம்

 • Rank
  உறுப்பினர்

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0
 1. ஒரு சிறு அறிவிப்பில் புலம் மற்றும் புலம்பெயர்ந்த என்ற இரு சொற்கள் ஒரே கருத்திற்குப் பாவிக்கப்பட்டிருக்கின்றது. இது அனைவராலும் மிகவும் சாதாரணமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒரு அறிப்பிலேயே இவ்வாறு பாவிக்கப்பட்டிருப்பதானது இதனை ஆக்கியவர்களின் தமிழ் மீதான ஆர்வத்தினைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
 2. இப் படத்தினைப் பார்த்து அங்கு மஞ்சள் நிறத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் எதனைக் கூற வருகின்றன என்பதனைக் கண்டு கொள்ளவும்......
 3. கீழுள்ள இணைப்புக்களைப் படிக்கவும்.. இதே செய்தி கீழுள்ள இணைப்பில் 2007 ஆம் ஆண்டு பதியப்பட்டுள்ளது. http://message.snopes.com/showthread.php?t=14935 இதனுடன் தொடர்புடைய மேலதிக தகவல் http://www.snopes.com/pregnant/octopus.asp
 4. ஜனவரி 25இல் தமிழ் ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் பொறுப்பற்றவர்களின் வதந்தியால் பலர் யாழ்.கொம் இணையத்தளத்திற்கு வந்திருந்தனர். அப்போது கல்மடு குளம் உடைக்கப்பட்டு பல சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக செய்தி வந்ததும் பலர் அதுபற்றிய தகவல் அறிய வந்திருந்தனர். ஆயுதப் போராட்டம் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது மிகப்பெரும் எண்ணிக்கையானவர்கள் யாழிற்கு வருவார்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே நான் கருதுகின்றேன். ஒவ்வொருவருக்கும் இருக்கும் தேவையைப் பொறுத்தே அவர்கள் ஒரு இணையத்தளத்திற்கு வருகின்றார்கள். பொழுதுபோக்கு அம்சங்கள் குறைந்த, அரசியல் மற்றும் பாலியல் சார்பற்ற இணையத்தளங்கள் பலவும் ஒரேநேரத்தில் பல எண்ணிக்கையான பயனாளர்களைக் கொண்டுள்ளன என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது! கருத்துக்கள script யாழ்.கொம் தனக்கென உருவாக்கியதல்ல. இது ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்று. அதில் அவர்கள் இதனையும் இணைத்து வைத்துள்ளார்கள். அதனை அவ்வாறே பயன்படுத்துவதில் எந்தவொரு தவறும் அல்லது பெருமையும் இருப்பதாக நான் கருதவில்லை. அது ஓர் இணையத்தளம் தொடர்பான பார்வையாளர்களின் பாவனையை புதிதாக பார்வையிடுபவர்கள் பார்வையிடுவதற்குப் பயனுடையதாக இருக்கும் என்பதே எனது கருத்து.
 5. அது அவரவர் பின்புலங்களைப் பொறுத்தது. மற்றும் அவர்கள் விவாகரத்து எடுக்கும் காரணங்கள் மற்றும் சமூகங்களைப் பொறுத்தது. எனக்குத் தெரிந்த இரண்டு பெண்களில் ஒருவர் விவாகரத்தின் பின்னர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றார். இன்னொருவர் அடுத்த நிமிடம் உயிருடன் இருப்பது கேள்விக்குறியான நிலையில் தனது அடையாளத்தை மறைத்து, காவற்றுறையுடன் உடனடி இணைப்பை ஏற்படுத்தக்கூடிய தொலைபேசியுடன் வாழ்ந்து வருகின்றார் (இவர்கள் வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள்) கலைஞன், இப்பொழுது கனடாவில் $275 இலிருந்து வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்துகொள்ளமுடியும்!
 6. கழுகு ஒரு மனிதனைத் தன் இரைக்காகக் காவிச்செல்வது போல் படம் போட்டுவிட்டு அமைதி, சமாதானம், மனிதம் பற்றியெல்லாம் பேசுவது அமெரிக்கா உலகநாடுகளில் போர் ஓயவேண்டும் என்று கூறுவதுபோல் உள்ளது... இருந்தபோதிலும், உறவுகளின் இரத்தம் தோயும் வாழ்விற்கு விடிவுபெறும் என்ற நம்பிக்கையுடன் விடிந்துள்ள இப்புத்தாண்டில் அதே நம்பிக்கையுடன் உங்களிற்கும் புத்தாண்டு வாழ்த்துகள்....
 7. எனக்கும் அவ்வாறே தோன்றியது. பக்கத்தில் ஒரு தராசு வைத்திருப்பார்களேயானால் அவர்களிற்கு விலைகூறுவதற்கு அது இலகுவாக இருக்கும். சிலவேளைகளில் உள்ளே இருக்கும் இந்திய விலையைப் பார்த்து அதன் விகிதாசாரத்தில் விலைகூறுவதும் உண்டு.
 8. விளையாட்டிலும் அரசியலைப் புகுத்தியதால் தான் தென்னாபிரிக்காவில் அடக்குமுறைக்கு முடிவுகட்டக்கூடியதாக இருந்தது.
 9. இலங்கை அணிக்கு எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொண்டு கனேடிய அணிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை நோக்கி பேசிக் கொண்டு எல்லைக் கோட்டிற்கு அருகாமைக்கு வந்த சனத் ஜெயசூரியா பின்னர் அவர்களை நோக்கி விரலினை உயர்த்தினார்.
 10. களத்தடுப்பில் இருக்கும் ஒருவர் அதுவும் 20/20 போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வர்ணணையாளருடன் கலந்துரையாடிக்கொண்டிருப்ப
 11. இந்தப் படத்தில் ஜெயசூரியா நடுவிரல் காட்டுவது பார்வையாளர்களை நோக்கியல்ல. களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கியே தனது நடுவிரலினை உயர்த்தியிருந்தார். கனடா மற்றும் சிறீலங்கா அணிகளிற்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்த துடுப்பாட்டப் போட்டியின் போது, கனடிய அணியானது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போது அவ்வணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதரவு தெரிவித்த போதே இந் நிகழ்வு இடம் பெற்றது. மைதானத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோதிலும் மைதானத்தின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதி தெளிவாகவே பார்க்கூடியவாறு இருந்தது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பல்வேறு நாடுகளிலும் விளையாட்டில் ஈடுபடும் ஒருவர், போட்டி நேரடியாக ஒளிபரப்பாகின்றது என்ற விடயம் அறிந்தவர் விரல் காட்டுவதாக இருப்பின் நேரடியாக விரலைக் காட்டுவார் என்று எதிர்பார்க்க முடியாது.