Jump to content

manimaran

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  153
 • Joined

 • Last visited

Community Reputation

89 Good

About manimaran

 • Rank
  உறுப்பினர்

Recent Profile Visitors

1,557 profile views
 1. கமல் போன்ற சமூக அக்கறையுள்ள ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் தமிழக மக்களிடம் அங்குள்ள ஊடகங்களிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. எம்மக்கள் சீமான் போன்ற உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களுக்கு ஒரு புறமும் சாதிய மதவாதங்களை மையப்படுத்தி மற்றவர்கள் மீது வசைபாடும் பிரமுகர்களுக்கு மறுபுறமுமே தமது கவனத்தை செலுத்துகின்றார்கள். கமல் தனது 'விதையை' பக்குமடையாத விளை நிலத்தில் விதைக்கின்றார். அந்த நிலம் பக்குவமடைய இன்னும் சில தசாப்தங்கள் தேவை.
 2. நிச்சயமாக. மனித தர்மம் மற்றும் மனித உரிமை என்பன அந்தந்த நாடுகளின் அரசியல் நலன்களுக்கேற்ப அவற்றின் சுருதி கூடிக் குறையும். நாம் ஈழத்தமிழர் எம்மை பலமுள்ள ஒரு மக்கள் கூட்டமாக (எவ்வயையிலாவது) மாற்றாத வரை மற்றவர் பிச்சையிடுவார்கள் என்று பாத்திரம் ஏந்தி திரியவேண்டிய பரிதாப நிலை தொடரவே செய்யும்
 3. நிச்சயமாக. எமது பாரம்பரிய சாதிய அடிப்படையிலான தொழில்முறை நிறுத்தப்படவேண்டும். மேற்குலகில் உள்ளதுபோல யாரும் எந்த தொழிலும் செய்யும் முறைமை உருவாகினால் எமது சமூக வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும்.
 4. இந்த தலைப்பைத் தொடங்கிய விவசாயிவிக்ற்கு நன்றிகள். இயற்கை விவசாயத்தை இலகுவாக செய்து இலாபம் ஈட்டும் வழிகளை தொடர்ந்து தாருங்கள். பலர் பயனடைவார்கள்
 5. நான் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் உள்ள யாழ்ப்பானத்தவர்களுடன் பழகியதிலிருந்து புரிந்து கொண்டது யாழ்ப்பாணத்தாரில் பெரும் சதவீதத்தினர் மற்ற பிரதேச மக்களை கிடைக்கும்போதெல்லாம் மட்டம்தட்டுவர். அதை சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்காது விதண்டாவதம் செய்வர். இங்கும் அது நடக்கின்றது
 6. தமிழினத்தின்மீது பற்றுக்கொண்ட ஒரு அர்ப்பணிப்புள்ள நல்ல மனிதம்.
 7. துல்பன் உங்களது தர்க்கரீதியான பார்வை எனக்குப்பிடிக்கும். ஆனால் உங்களது அப்பட்டமான புலிஎதிர்ப்பு பார்வை உங்களது தர்க்கரீதியான சிந்தனையை மறைப்பதை பலமுறை அவதானிக்க முடிந்தது. கரும்புலிகள் எப்படி உருவானார்கள் அவர்கள் எப்படி அந்த தாக்குதல்களுற்கு தம்மை உட்படுத்துகின்றார்கள் என்ற புரிதல் உங்களிடம் இல்லாதது மேலுள்ள சொல்லாடலில் தெளிவாக காணக்கூடியதாகவுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த போராளிகள் பொறுப்பாளர்கள் பல தவறுகளை தமது விடுதலை நோக்கிய பயணத்தில் செய்திருக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளது. அவ்வாறு நிறைய சம்பவங்கள் நிறையவே நடந்தது, எனது அனுபவத்தில் மற்றைய மக்கள் போல் நானும் க
 8. மக்களினால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் (அரசு) என்பது அது ஒரு தனிஅலகல்ல, அது அந்த மக்களின் பிரதிபலிப்பு. ஒவ்வொருமுறையும் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மறுப்பது என்பது அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பை நிறைவேற்றும் ஒரு செயலே
 9. எங்கள் மனத்திருப்திக்கு இவ்வாறு சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் சீன உலக அரங்கில் மறுக்கமுடியாத ஒரு பெரும் சக்தி. அதன் புதிய கண்டுபிடிப்புக்கள், வினைத்திறன் மிக்க உற்பத்தி நுணுக்கம் மற்றும் நிர்வாகத்திறன் என்பவை மேற்கு நாடுகளினால் பயபக்தியுடன் பார்க்கப்படுபவை.
 10. இந்தியாயவில் கழிப்பிட மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாதோரின் சதவீதமும் அமெரிக்காவில் அவர்களின் சதவீதமும் ஒப்பிடக்கூடியளவில் உள்ளதா...................
 11. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை தர்க்கரீதியாக விளங்கி அது அப்பாதையில் சென்றதற்கான காரணத்தை அந்தந்த காலங்களினூடாக ஒரு ஈழத்தமிழன் என்ற நிலையில் விளங்க முனையாததன் வெளிப்பாடு
 12. ஒரு இனஒடுக்குமுறையாளனையும் அந்த இனஅழிப்புக்கு எதிராக போராடிய மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதை எப்படித்தான் நியாயப்படுத்துகின்றார்களோ........................
 13. இதனை சரிவர விளங்கிக் கொண்டாலே உலகிலுள்ள அரைவாசிப் பிரச்சணைக்கு தீர்வு வந்திடும்
 14. கசப்பான உண்மை. எங்களிடையே இது தொடர்பான விழிப்புனர்வின்மையே இதற்கான அடிப்படைக் காரணம். விழிப்பு விடுதலையின் முதற்படி
 15. மிகச் சரியான கருத்து. நாம் பலமாக இருப்பது என்பது எல்லோரும் ஒற்றுமையாக ஒரு குடைக்குள் நிற்பது என்பதல்ல. அது வீண்முயற்சி நாம் பலமாவது என்பது நாம் ஒவ்வொருவரும் எமது இனத்தை பலமானதாக்க என்ன செய்யலாம் என்பதிலிருந்து தொடங்குவது. அது அறிவியல்,அரசியல்,பொருளாதாரம் தொழில்நுட்பம் என்று பலதிசைகளில் அமையலாம். அந்தப் பலத்தை நாம் அடைய முயலாது எமக்கு எந்தவாெரு மீட்சியும் இல்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.