Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

manimaran

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  169
 • Joined

 • Last visited

Everything posted by manimaran

 1. புலிகள் இயக்கத்தில் மட்டுமல்ல உலகில் உள்ள எந்த அமைப்புக்களிலோ அல்லது நிறுவனங்களினிலோ முகாமையாளர்களாக உள்ளவர்கள் தங்களுடன் எதிர் முரண் கருத்துள்ளவர்களை அருகில் வைத்தபடி நிர்வாகம் செய்வது முடியாதது. சனனாயக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தில் கூட ஒத்த கருத்துள்ளவர்களை மட்டுமே முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களில் வைத்திருப்பார்கள். விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து அதனை நோக்கி தமது உழைப்பை கொடுப்பதற்கு தயாராக இருந்தவர்களை புலிகள் இயக்கம் பல சந்தர்ப்பங்களில் தட்டிக் கொடுத்து வளர்த்திருந்தது.
 2. தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல தமிழ் அரசியல் உலகிலும் தீர்க்க தரிசனமிக்க ஆளுமைமிக்க ஒரு தலைவனாக கமல் இருக்கின்றார். தமிழினம் அவரது அரசியல் அறிவை முற்போக்குத்தனமான அவரது தொலைதூர நோக்கு அணுகு முறையை அடையாளம் காணாதது தமிழினத்தின் இழப்பே. தமிழினம் கண்ட ஒரு பெரும் சகலவலா வல்லவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 3. ஓம் அவையளுக்குத்தான் கடவுள் ஒன்று இல்லை என வடிவாத் தெரியும். எத்தணை பொய் பிரட்டுச் சொன்னாலும் அவைக்கு ஒரு பிரச்சணையும் வராது. மாறாக அவையின்ர புகழும் செல்வமும் அதிகரிக்கும். எனவே அவைக்கு கடவுள் என்பது மற்றவனை மடையனாக்க பாவிக்கப்படும் ஒரு கருவி என நல்ல வடிவாகத் தெரியும்
 4. 'தாழ்த்தப்பட்ட' சாதியை சேர்ந்த எமது மக்கள் சிங்கள பேரினவாதத்தினால் பாதிப்படைந்ததை விட பக்கத்து 'உயர்சாதிக்காரரினால்' பாதிப்படைந்தது அதிகம்.
 5. https://www.macrotrends.net/countries/LKA/sri-lanka/life-expectancy 1950 காலப்பகுதியில் இலங்கையினரின் சராசரி ஆயுட்காலம் 50-60 வயதுகள் என இந்த தரவு சொல்கின்றது. நீங்கள் சொல்வதுபோல 85 வயதுவரை வாழ வரம் பெற்றவர்கள் ஆரோக்கியமுள்ளவர்களாக இருந்திருக்கலாம்.....
 6. உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. கவனத்தில் கொள்வார்கள் என நம்புவோமாக...........
 7. புலித் தலைமையிடம் இருந்த இந்த நீள்பார்வை அரசியலை புரிந்துகொள்ளும் பக்குவம் ஈழத்தமிழருக்கு இருக்கவில்லை. ஈழத்தமிழர் தங்களுக்குள்ள பிரச்சணைகளுக்கெல்லாம் வெளியார்தான் காரணம் என்று சொல்லி தமது வளர்ச்சியை குறுக்கிக் கொண்டனர். இங்கு யாழில்கூட பல புலி தீவிரஆதரவாளர்கள் புலிகளின் ஆத்மார்ந்த வழிகளை, கொள்கைகளை புரிந்தவர்களாக அவர்களது எழுத்துக்களில் வெளிப்படாதது கவலைக்குரியது.
 8. வணக்கம் குமாரசாமி அண்ணா, நீங்கள் சொல்வது சரியே, தனிமனிதர்களின் அளப்பரிய முயற்சியாலும் திறமைகளினாலும் இவற்றிற்கான இறுதி விளைவுகள் கிடைக்கப்பெற்றவை உண்மையே. ஆனாலும் அக் கண்டுபிடிப்புக்களிற்கான அத்திவாரங்கள் மற்றைய சகமனிதர்களினால் பல்வேறு வடிவங்களில் அதற்கு முன்னய காலப்பகுதிகளில் போடப்பட்டவையே. எனவே கண்டுபிடிப்புக்கள் தொழில்நுணுக்கங்கள் என்பது ஒட்டு மொத்த மனித சமூகத்திற்குரியதே. தனிஒரு குழுமம் அதற்குரிய ஒட்டுமொத்த உரிமையையும் கொண்டாட முடியாது
 9. தொழில் நுணுக்கங்கள் என்பது திடீரென ஒருவராலோ அல்லது ஒரு நாட்டினராலோ கண்டுபிடிக்கப்பட்டதல்ல. மனித சமூக வளர்ச்சியின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் அது கட்டி எழுப்பப்பட்டது. எந்வொரு கண்டுபிடிப்பும் பூச்சியலிருந்து தொடங்கப்படவில்லை. ஏலவே அறியப்பட்ட தெரியப்பட்ட விடயங்கள் மூலமாக கிடைத்த அறிவை அனுபவத்தை வைத்து அதன் மேல் கட்டப்பட்டவையே. எனவே அதற்கு தனி ஒரு குழுமம் உரிமை கோரமுடியாது.
 10. எங்களது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சணைகளுக்கு எல்லாம் காரணம் வெளியார்கள் (சிங்களவர்கள்/மேற்குலகம்/எமது அரசியல்வாதிகள்) என்று சிந்திக்கும் தன்மை எம்மிடையே நன்றாக வேரூன்றிவிட்டது. நாம் ஒரு தனிமனிதனாக அல்லது ஒரு சமூதாயமாக எமக்கு எம்மைச் சுற்றி நடக்கும் விடயங்களுக்கு நாம் ஒரு பக்குவம் மிக்க ஒரு சமூதாயமாக பொறுப்பெடுக்கத் தொடங்கும்போதே எமக்கான தீர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத்தொடங்கும். அதுவரை நாம் வெள்ளி பார்க்கும் கூட்டமாக இருந்து புழுங்கிக் கொண்டு இருக்வேண்டியதுதான்.
 11. எனது ஒன்றுவிட்ட தங்கை 'தாழ்த்தப்பட்டதாக' எமது சமூகத்தில் கருதப்படும் இன்னொரு சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தார். இப்போது அவர்கள் பிரித்தானியாவில் இருக்கின்றனர். அவர்கள் எமது குடும்ப நிகழ்வுகளுக்கு வர விரும்புவதில்லை அத்துடன் எமது ஊருக்கும் குடும்பமாக போவதில்லை. காரணம்.....................? யாழ்ப்பாணத்தில் சாதியம் இல்லை என்று சொல்பவர்கள் பெரும்பாலானோர் யாழில் ஆதிக்க நிலையில் உள்ள சாதியைச் சேர்ந்தவர்களே. அவர்கள்வெளிநாடுகளில் இருக்கும் இனவாதம் தொடர்பாக பெரியளவில் முழங்குவார்கள். ஆனால் தங்கள் மனங்களில் தங்களிடையே ஆழ வேரூன்றி இருக்கும் சாதியத்தின்கொடுமைகளை ஏற்க மறுப்பர்.
 12. மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் மனிதஉரிமை பேணல் குறைவாக இருக்கலாம். ஆனால் ஆசியநாடுகளுடன் ஒப்பிடும் போது அதன் தரத்தில் பெரிய மாற்றம் இல்லை. இந்தியாவின் காசுமீரில் நடப்பதைவிட. மியன்மாரில் நடப்பதை விட சீனாவில் நடப்பது குறைவு
 13. அழகாக எழுதப்பட்ட அர்த்பூர்வமான கட்டுரை. உலகில் வளர்ச்சியடைந்த கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் குடும்ப வாழ்க்கையில் அடுப்பறை நேரம் ஒழுங்குக்கு கொண்டுவரப்பட்டதும் அவர்களின் வளர்ச்சிக்கு காரணம் என்பது கண்கூடு. நம்மவர்களும் அவ்வாறு சிந்தித்து செயல்படுது முன்னேற்றத்திற்கான படியே.
 14. நான் சிறுவயதில் ஊரில் இருக்கும்போது பார்த்து வேதனைப்பட்ட இப்படியான சம்பவங்கள் மிக அதிகம். மலையகத்தமிழ் பெண் பிள்ளைகள் மிக இளவயதிலேயே அழைத்து வரப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட சம்பவங்கள் அநேகம். எமது வீட்டிற்கு அன்மையில் இருந்த ஒரு பெண்பிள்ளை (12 அல்லது 13 வயது இருக்கும்)மலையகத்திலிருந்து வேலைக்காக அழைத்து வரப்பட்டு கடும் கொடுமைப்படுத்தப்பட்டார். நாங்கள் நன்னீர் எடுக்கச் செல்லும் கிணற்றிற்கே அவரும் வருவார் (பெரும்பாலும் மங்கிய மாலைப்பொழுதுகளில்) அப்போது எம்மை சந்திக்கும்போது தனக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லி அழுவார். உடம்பில் இருக்கும் தழும்புகளை காட்டுவார். சில காலங்களிற்கு பின்னர் அவர் இறந்து விட்டார் (சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்றே எமது அயலில் பேசிக் கொண்டார்கள்). எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மலையத் தமிழர்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுவதை எமது சமூகம் இயல்பாகவே அனுமதித்துக் கொண்டிருந்த காலம் அது (புலிகளது ஆழுகைக்கு முற்பட்ட காலம்)
 15. ஊரிலுள்ளள உறவுகளுக்கு உதவ நினைக்கும் உள்ளங்களுக்கான நல்ல முன்னுதாரணம். நன்றிகள்
 16. கமல் போன்ற சமூக அக்கறையுள்ள ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் தமிழக மக்களிடம் அங்குள்ள ஊடகங்களிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. எம்மக்கள் சீமான் போன்ற உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களுக்கு ஒரு புறமும் சாதிய மதவாதங்களை மையப்படுத்தி மற்றவர்கள் மீது வசைபாடும் பிரமுகர்களுக்கு மறுபுறமுமே தமது கவனத்தை செலுத்துகின்றார்கள். கமல் தனது 'விதையை' பக்குமடையாத விளை நிலத்தில் விதைக்கின்றார். அந்த நிலம் பக்குவமடைய இன்னும் சில தசாப்தங்கள் தேவை.
 17. நிச்சயமாக. மனித தர்மம் மற்றும் மனித உரிமை என்பன அந்தந்த நாடுகளின் அரசியல் நலன்களுக்கேற்ப அவற்றின் சுருதி கூடிக் குறையும். நாம் ஈழத்தமிழர் எம்மை பலமுள்ள ஒரு மக்கள் கூட்டமாக (எவ்வயையிலாவது) மாற்றாத வரை மற்றவர் பிச்சையிடுவார்கள் என்று பாத்திரம் ஏந்தி திரியவேண்டிய பரிதாப நிலை தொடரவே செய்யும்
 18. நிச்சயமாக. எமது பாரம்பரிய சாதிய அடிப்படையிலான தொழில்முறை நிறுத்தப்படவேண்டும். மேற்குலகில் உள்ளதுபோல யாரும் எந்த தொழிலும் செய்யும் முறைமை உருவாகினால் எமது சமூக வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும்.
 19. இந்த தலைப்பைத் தொடங்கிய விவசாயிவிக்ற்கு நன்றிகள். இயற்கை விவசாயத்தை இலகுவாக செய்து இலாபம் ஈட்டும் வழிகளை தொடர்ந்து தாருங்கள். பலர் பயனடைவார்கள்
 20. நான் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் உள்ள யாழ்ப்பானத்தவர்களுடன் பழகியதிலிருந்து புரிந்து கொண்டது யாழ்ப்பாணத்தாரில் பெரும் சதவீதத்தினர் மற்ற பிரதேச மக்களை கிடைக்கும்போதெல்லாம் மட்டம்தட்டுவர். அதை சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்காது விதண்டாவதம் செய்வர். இங்கும் அது நடக்கின்றது
 21. தமிழினத்தின்மீது பற்றுக்கொண்ட ஒரு அர்ப்பணிப்புள்ள நல்ல மனிதம்.
 22. துல்பன் உங்களது தர்க்கரீதியான பார்வை எனக்குப்பிடிக்கும். ஆனால் உங்களது அப்பட்டமான புலிஎதிர்ப்பு பார்வை உங்களது தர்க்கரீதியான சிந்தனையை மறைப்பதை பலமுறை அவதானிக்க முடிந்தது. கரும்புலிகள் எப்படி உருவானார்கள் அவர்கள் எப்படி அந்த தாக்குதல்களுற்கு தம்மை உட்படுத்துகின்றார்கள் என்ற புரிதல் உங்களிடம் இல்லாதது மேலுள்ள சொல்லாடலில் தெளிவாக காணக்கூடியதாகவுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த போராளிகள் பொறுப்பாளர்கள் பல தவறுகளை தமது விடுதலை நோக்கிய பயணத்தில் செய்திருக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளது. அவ்வாறு நிறைய சம்பவங்கள் நிறையவே நடந்தது, எனது அனுபவத்தில் மற்றைய மக்கள் போல் நானும் கண்டுள்ளேன். விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்களும் எமது சமூகத்திலிருந்து சென்றவர்களே. ஒரு சிலமாத பயிற்சிகள் அவர்களை முற்று முழுதாக மாற்றிவிடப் போவதில்லை ஆனால் அவர்களது தவறுகளை இயக்கத்தின் திட்டமிட்ட கொள்கையாகவும் தலைமை வேண்டுமென்றே இவற்றை செய்ய அவர்களை தூண்டிவிடுதாக கருதுவதும் எமது சமூகம், போராட்டம், விடுதலைப் புலிகள் போன்றன தொடர்பான புரிதலின் குறைபாடாகவே என்னால் பார்க்க முடிகின்றது.
 23. மக்களினால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் (அரசு) என்பது அது ஒரு தனிஅலகல்ல, அது அந்த மக்களின் பிரதிபலிப்பு. ஒவ்வொருமுறையும் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மறுப்பது என்பது அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பை நிறைவேற்றும் ஒரு செயலே
 24. எங்கள் மனத்திருப்திக்கு இவ்வாறு சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் சீன உலக அரங்கில் மறுக்கமுடியாத ஒரு பெரும் சக்தி. அதன் புதிய கண்டுபிடிப்புக்கள், வினைத்திறன் மிக்க உற்பத்தி நுணுக்கம் மற்றும் நிர்வாகத்திறன் என்பவை மேற்கு நாடுகளினால் பயபக்தியுடன் பார்க்கப்படுபவை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.