• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

putthan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  11,906
 • Joined

 • Days Won

  39

Everything posted by putthan

 1. நிச்சயம் அது மட்டும் நடக்காது கருணா சிங்கள அரசுக்கு செய்த உதவி மாபெரும் உதவி அதை ஒரு நாளும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் மறக்க மாட்டார்கள் ......சேர் பொண் ராமநாதன் செய்த உதவிக்கு சமன் ....
 2. எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது 1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு
 3. எதோ நாங்கள் எல்லாம் நேற்று பிறந்து இன்று அரசியல் செய்தி வாசிக்கிறம் என்ற நினைப்பு நம்ம மத்திய அரசு பிர்திநிதிகளுக்கு
 4. எதிர்வு கூற நான் என்ன அரசியல் சாணக்கியனா? தற்பொழுதைய களநிலவரத்தின்படி அது நடக்கின்ற காரியமில்லை தெற்காசிய பிராந்தியத்தில் நாடுகள் பிரிவடைய சந்தர்ப்பம் இல்லை..ஆகவே தான் இந்தியா பிரிய வேண்டும் என்று சொல்லி இந்திய/தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதிப்பதை விட எமது வடக்கு கிழக்கு பிராந்திய பகுதிகளில் எமது மொழியை தக்க வைத்து கொள்ள வேண்டிய விடயங்களை செய்ய வேண்டும்...... "தமிழ்நாடு" ஒர் நாடாக ஐ.நா சபையில் அங்கிகரிக்கப்பட்டால் மிக்க மகிழ்ச்சியடைவேன் ...அந்த எண்ணம் தமிழக் மக்களில் 50 வீதமானவர்களுக்கே இல்லை ....இதில் நாம் விரும்பி என்ன நடக்கப்பொகின்றது எம்மை அழித்தவர்கள் அழிய வேண்டும் என்றால் அவர்களும் அழியவேண்டும் ...அதுதான்
 5. எதுவும் எமது ஆசைப்படி நடக்காது ....இந்தியா உடைய வேண்டும் அமெரிக்கா உடைய வேண்டும் சீனா உடையாமல் இருக்க வேண்டுமா
 6. இந்தியாவை மட்டுமல்ல சீனாவையும் யாரும் நம்ப மாட்டார்கள்....இந்துசமுத்திரத்தில் இந்தியாவை சண்டியனாக வைத்திருக்க மேற்குலகு முயன்று வருகிறது ..நேற்றும் அவுஸ்ரேலியாவுடனும் இந்தியா ஒர் உடன்படிக்கையை கைசாத்திட்டது அவர்களது போர்கப்பல் அவுஸ்ரேலியா துறைமுகங்களை பாவிக்க முடியும் என்று.... இந்தியா உடைய வேண்டும் என்ற விருப்பம் எமது வாழ் நாளில் நிச்சயம் நடக்கப்போவதில்லை...சிறிலங்கவை உடைக்க நினைத்து எவ்வளவோ உயித்தியாகத்தை எம்மவர்கள் செய்தார்கள் ஆறுமாதத்தில் சர்வதேச்ம் அந்த கனவை அழித்தது நம் கண் முன்னே .....
 7. அவர்களின் பசிக்கு சீனாவினால் மட்டுமே தீனி போடக்கூடியதாக இருக்கின்றது....அதனால் டயபட்டிக் வந்து கால் எடுக்க வேண்டிவருமோ அல்லது கொலஸ்ரோல் அதிகமாகி மாரடைப்பு வருகின்றதோ என பொறுத்திருந்து பார்ப்போம் ...
 8. உண்மை தெரியும் ஆனால் சிங்களத்தை தமது நண்பன் ஆக்குவதில் தான் அதிக கவனத்தை செலுத்துகிறார்கள்....சிங்களம் விலகி விலகி செல்ல செல்ல அவர்களை அரவணைப்பதில் தான் குறியாக இருக்கின்றனர்.....சிங்களத்தை அடிபணியவைப்பதில் பா,ஜ.க வெற்றியடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்....
 9. ,கருணா அங்கு நிற்பதும் மகிந்தாவின் ஆலோசனைப்படி தான்....அது ஒர் முஸ்லீம் பிராந்தியமாக மாறுவதை இனவாதிகள் விரும்பவில்லை அதே நேரம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பகுதிகளை முஸ்லீம் பிரதேசமாக்குவதில் முஸ்லீம்கள் முழுமூச்சாக இருக்கின்றனர் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் இவர் போன்ற மகிந்தா வாசிகள் அங்கு தேவை... (முஸ்லீம்கள் தமிழ் பேசுபவர்கள் அவர்களும் சிறுபான்மையினர் என்பது எனக்கும் தெரியும்) வடக்கு கட்சிகளின் பிரதிநிதி இங்கு வெற்றி பெற்றாலும் இரு வருடங்களில் கட்சி மாறிவிடுவார்...ஆகவே மக்களை ஏமாற்றாமல் மொழிபற்றுடன் வெற்றி பெற்று மக்களுக்கு ஏதாவது செய்யலாம்.... வாலட்டு ,எழும்பு துண்டு ,துரோகி இதுகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு ....தமிழ் அடையாளங்களை அந்த பகுதியில் நிலைநிறுத்த ஏதாவது செய்யவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.....
 10. புலிகளின் தோல்விக்கு நீங்கள் குறிய நாடுகளின் ( UK ,USA India) அதே அளவு பங்கு சீனாவுக்கும் உண்டு ....சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் சிறிலங்கா முக்கிய பங்கு வகிக்கின்றது அந்த நாட்டின்( சிறிலங்கா)ஏனைய துறைமுகபகுதி இரண்டும் , மூன்றில் இரண்டு கடற்பகுதியும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது ...இந்த நிலையை சீனா விரும்பவில்லை இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்தாலும் பேச்சு வார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வை பெறலாம் ஆனால் இருந்ததோ ஒருஅமைப்பின் ,அதுவும் தற்கொலை,மற்றும் கெரில்லா தாக்குதலில் பெயர் போன அமைப்பிடம் இதை சீனா விரும்பவில்லை ....ஆகவே சகலரும் சமபங்கு வகித்து புலிகளை அழித்தனர்... இதே காலகட்டத்தில தான் சதாம் ஹூசன்,கடாபி,பின்லாடன்,இன்னும் பல தலைவர்களை இந்த கூட்டு அரசாங்க சக்திகள் அழித்தனர்....கடந்த வருடம் கொல்லப்பட்ட ஈரானிய இராணுவத் தளபதியும் அடக்கம்(இவர் புரட்சிகர படைக்கு தளபதி எந்த இராணுவ கல்லூரியிலும் பட்டம் பெறவில்லை" " சீனா பாகிஸ்தான் ஊடாக பல உதவிகளை சிறிலங்காவுக்கு செய்தது....
 11. அம்மான் போன்றோர் அங்கு வெற்றியடைந்தால் அந்த மக்களுக்கு சில அபிவிருத்தி திட்டங்களை செய்யலாம் ...ஏனைய தமிழ் கட்சிகள் வெற்றியடைந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது..
 12. சீனாவின் அறிவுரை அதை கொத்தா செயல் படுத்துகின்றார் பாகிஸ்தானில் பல சீனாவின் திட்டங்கள் பாகிஸ்தான் இராணுவத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் நடைபெறுகின்றது
 13. அதைத்தான் நானும் சொல்லுகின்றேன் சீனாவுக்கு எது முக்கியமோ அதை என்ன விலை கொடுத்தாவது செய்வார்கள் ...இந்தியாவும் அதே போன்று தான் தங்களது தேவைக்கு என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள்.....சொந்த மக்களையே அழிக்க தயங்கமாட்டார்கள் இரு நாடுகளும் தங்களது பாதுகாப்புக்கு ஆகவும்,தங்களது சித்தாத்தங்களுகாகவும் அரச அதிகாரிகள் தங்களது அரசுக்குதான் விசுவாசமாக இருப்பார்கள் அவர்கள் ஹிந்தியர்களாக மலையாளிளாக(இந்தியாவில் படித்த மக்கள் அதிக் வீதாசாரம் )ஏன் தமிழர்களாக இருந்தாலும் இனத்திற்காக வேலை செய்யமாட்டார்கள் அரசக் கு சார்பாகத்தான் வேலை செய்வார்கள் .... நாம் எல்லோரையும் பகைவர்களாக பார்க்க முடியாது ....எல்லோரையும் நம்பவும் முடியாது. எமக்கு ஈழம் தேவை என்பதை நாம் தீர்மாணித்தாலும் .அதில் நியாயம் இருந்தாலும் அதை கொடுப்பதா இல்லையா என்று தீர்மாணிப்பது வல்லரசுகள் தான் அவர்களுக்கு தேவைப்பட்டால் அதை நிறைவேற்ற அவர்கள் தீயா உழைப்பார்கள்.. எப்படி சிறிலங்கா என்ற தேசியம் மக்களின் விருப்பு வெறுப்பு அறியாமல் உருவாக்கப்பட்டதோ அதே போன்று... "ஈழம்" என்ற சொல்லுக்கே சிங்கள தேசியவாதிகள் 60 வருடங்களுக்கு முன்பே தடை விதித்தவர்கள்...அதுவும் திரைப்படத்தில் வந்த வசனத்திற்காக தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்தை விட சீனா சிங்களத்திற்க்கும் சிறிலங்கா தேசியதத்திற்க்கும் அதிகம் கொடுக்கின்றார்கள் ..அது தான் சீனர்களுக்கு பலத்த நன்மைகளை கொடுக்கும்.. இந்தியா சிறிலங்காவுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும்...தமிழர்களுக்கு அல்ல இந்தியா உடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புவோம் ஆனால் மேற்குலகும் (இந்திய தேசியத்தை உருவாக்கியவர்களும்) இந்திய தேசிய மக்களில் 80% அதை விரும்பமாட்டார்கள்..... எமது போராட்டத்தை சீனா உடைத்தமைக்கு காரணம் அங்கீகரிக்கப்பட்ட கடற்படையினரால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் பட்டுப்பாதை வியாபரத்திற்கு ஆபத்து இருக்கு அதே வேளை அங்கீகரிக்கப்படாத ஒரு அமைப்பு பெரிய கடற்பரப்பை ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தமை சீனாவின் பட்டுப்பாதை திட்டத்திற்க்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்தமை ....
 14. எமது போராட்டத்தை தோல்வியடைய பண்ணியதில் இந்தியாவுக்கு இருக்கும் அதே பங்கு சீனாவுக்கு உண்டு ....சீனா பாகிஸ்தான் ஊடாக சிறிலங்கா இராணுவத்திற்கு பல உதவிகளை வழ்ங்கியிருந்தது..... இந்தியா உடைய வேண்டும் என்ற ஆசை 80% மான இந்தியர்களுக்கே இல்லை காரணம் அங்கு இந்தியா என்ற தேசிய உணர்வு பலருக்கு உண்டு அந்த மாதிரி மக்களுக்கு மாநில அரசுகளை உருவாக்கி ஆள வைத்த படியால்...
 15. 20லட்சம் தமிழ்மக்களின் ஆசை இதில் நானும் ஒருத்தன்.....இந்தியா உடைந்தால் இந்த பிராந்தியத்தில் இருவர் ஆட்சி செய்வார்கள் ,அட்டகாசம் செய்வார்கள் பாகிஸ்தானும் சீனாவும் இருவர்களுக்கும் மதம் கை கொடுக்கும் ...சீனா சிறிலங்கா பெளத்தர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்வார்கள் பாகிஸ்தான் இந்தியா முஸ்லீம்களுடன் இ லங்கை முஸ்லீம்களுடனும் சேர்ந்து பல இந்து/கிறிஸ்தவ்ர்களை மதம்மாற்றி அகன்ட இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவார்கள்......பிரித்தானியா படை எடுக்காவிடின் எம்மில் பலர் இஸ்லாமியராக இருந்திருப்போம் ......இன்று அரபு நாடுகளும் பணத்தின் மூலம் இஸ்லாத்தை உலகம் பூராவும் பரப்ப முழுமூச்சாக இயங்குகின்றனர்... தேசிய இனங்களை தெற்காசிய பிராந்தியத்தில் தேசியம் அமைக்க பிரித்தானிய முன் வரவில்லை ஏன் என தெரியவில்லை .. ஐரோப்பாவில் அப்படி இல்லை ... இதற்கு பிறகு பதில போடுகிறேன்....
 16. அந்த வகையான ஆக்கிரமிப்பை இந்தியா சிறிலங்கா மீது செய்து விடுவார்கள் என்ற பயம் சிங்கள கொள்கை வகுப்பாளர்களுக்கு அன்றே(சுதந்திரத்திற்கு பின்பு) ஏற்பட்டுவிட்டது அதன் விளைவு தமிழர்கள் மீதும் தமிழர்கள் பகுதிகள் மீதும் அதிக கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார்கள் ...தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றம்(சீனாவின் கொள்கை)தமிழர் பகுதியை இராணுவ மயப்படுத்தல் முக்கியமாக தமிழருக்கு என்ற ஒரு பகுதி அது மாகாணசபையாகவோ ,மாவட்ட சபையாகவோ இருக்க கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்....இந்து மதம் ,இஸ்லாம் மதங்கள் போன்றவை ஒரு பிராந்தியத்தில் பெரும்பான்மையாக இருப்பதை சிறிலங்கா அரசு விரும்பவில்லை....அதன் தொடர்ச்சிதான் கொத்தாபாய அடிக்கடி பேசும் பொழுது சொல்வது வடபகுதி மக்களுக்கு பொருளாதார பிர்ச்சனை மட்டுமே உண்டு மற்றவை பயங்கரவாதிகளால் உருவானவை என்று.... காஷ்மீரின் இந்து மன்னர் இந்தியாவுடன் இணைவதற்கு சம்மதித்து இணைந்து விட்டார் அத்துடன் மேற்கு நாடுகள் ,நாடுகளை உருவாக்கும் பொழுது மதங்களின் அடிப்படையிலயே உருவாக்கினார்கள் . இந்தியாவை உருவாக்கும் பொழுது பல திசைகளிலும் செக் வைத்து தான் உருவாக்கினார்கள் ,முக்கியமாக இந்தியாவின் கிழக்கேயும் மேற்கேயும் ஒரே நாட்டை உருவாக்கினார்கள் இரு பிராந்திய மக்களினதும் மதம் ஒன்றாக இருந்தாலும் கலாச்சாரம் ,மொழி போன்றவற்றால் வேறுபட்டிருந்தார்கள். தெற்கே சிறிலங்கா பெளத்தம் நினைத்திருந்தால் வட பகுதி தீவுகளையும் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ்பேசும் இந்து,கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களை தமிழ்நாட்டுடன் இணைத்திருக்கலாம்...ஆயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் அந்தமான்,மற்றும் லட்ச தீவுகளை இந்தியாவுடன் இணைத்தார்கள் 20 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் தமிழர் பகுதி ????? காஷ்மீரின் இஸ்லாமிய பகுதியை பாகிஸ்தான் படைஎடுத்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது அந்த பகுதியில் சீனா தனது பெரிய அபிவிருத்தி திட்டத்தை தொடங்கிவிட்டது பாகிஸ்தானின் அரபிக் கடலில் இருக்கும் துறைமுகத்துக்கு சீனாவிலிருந்து நேரடியாக வர முடியும்....காஷ்மீர் மக்களின் விருப்பு வெறுப்பை இந்தியா,சீனா,பாகிஸ்தான் கணக்கில் எடுக்கவில்லை...பாகிஸ்தானால் சீனாவின் கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியாவிடின் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சீனாவுக்கு ....(இந்தியா அந்த பகுதியை தங்கள் வசம் எடுப்போம் என குத்தி முறிகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம்). கொவா..போர்த்துகீசர் காலணித்துவத்தின் கீழ் இருந்த பகுதி கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களும் மேற்கத்தைய கலாச்சாரத்தை உள்வாங்கியோரும் அதிகமாக இருந்தனர் ..இந்த நாடு மேற்குலகினால் இந்தியாவுக்கு வைக்கப்பட்டை ம்ற்றுமொரு செக்.. சீக்கிம் இதுவும் கோவா போன்ற ஒர் நாடு கிஸ்தவமும் இந்துக்களும் அதிகமாக இருந்த நாடு இதே போன்று சீனாவுக்கு செக் வைக்கப்பட்ட பிரதேசஙள் தான் கொங்கொங்,தைவான்,மாக்கே(போர்த்துகீஸ்)இந்த பிரதேசங்களுக்கு தனி நாணயங்கள் புலக்கத்தில் உண்டு ....மாக்கே க்கு தற்பொழுது இல்லை. இந்தியாவுக்கு மேற்குலகு செக் வைத்தமைக்கு காரணம் பெரும் மக்கள் தொகையை கொண்ட நாடு போராட்டங்கள் மூலம் வெள்ளையரை வெளியேற்றிய படியாலும் எதிர்காலத்தில் காந்தீயம் என்ற கொள்கையை உலகம் பின்பற்றினால் உலக வியாபாரம் படுத்துவிடும் என்ற காரணமாக இருக்கலாம் (எனது ஊகம் மட்டுமே) ஆனால் இந்தியா மேற்குலகின் ஆசைப்படியே மாறிகொண்டு வந்தது (ஜனநாயகம் என்று உரக்க சொல்ல தொடங்கியது... இந்தியாவிக்கு செக் வைக்கப்பட்ட நாடுகளில் சிரிலங்காவை தவிர எனையவற்றை தனகப் படுத்தியது ... நேபாளமும் அதில் ஒன்று தற்பொழுது ,நேபாளமும் சிறிலங்காவும் இந்தியாவுக்கு பெரிய தலையிடியாக உள்ளது..
 17. சினிமா படத்தில் வந்த காட்சி நினைவுக்கு வந்த படியால் கவிதையை வாசித்தேன் ....உங்கள் தமிழுக்கு ஒரு சலாம்
 18. unarmed black சர்வதேச ஊடகங்களை பார்த்தீர்கள் என்றால் ஒவ்வோரு தடவையும்unarmed black man என்ற வசனத்தை பாவிப்பார்கள்.....இது புலம் பெயர்ந்த எமது சிறார்களுக்கு மனதில் இலகுவாக படிந்து விடுகிறது... எமது மக்கள் இறந்த கதையை கேட் கவோ சொல்லவோ யாருமில்லை... எமது மக்களே அடுத்த சந்ததிக்கு சொல்ல முயலவில்லை என்பது கவலையளிக்கும் விடயம்... கறுப்பர்கள் இன ஒதுக்கலுக்கு ஆளாகின்றனர் என்று மார்டின் லூதர் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லிகொண்டிருப்பதால் ஒரு சிறு சம்பவம் பெரிய எழுச்சியை உண்டாக்கின்றது....
 19. அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும், நில ஆக்கிரமிப்பு செய்வது தான் தற்போதய சீனாவின் நிலை....மாவோவும் சித்தாந்தவாதிகளும் தங்களது அரசியலை உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் புகுத்த பல வருடங்களாக முயன்றுவருகின்றனர்...1975 ஆண்டுக்கு முன்பு புரட்சிகர அமைப்புக்களை உருவாக்கி ஆயுத போராட்டங்களை மறைமுகமாக ஊக்கப்படுத்தினார்கள் ...தற்பொழுது சோசலிசம் பேசும் முதலாளிகளை உருவாக்கி அவர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்... "மொழி, இனம் ஒன்றா? " தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கினறது.. சீனா இந்தியாவின் சீக்கிம் பிராந்தியத்தை ஆக்கிரமிக்க கூறும் காரணம் பெளத்தமும் சீனர்களும் என்ற அடையாளமா? தீபேத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு 800 வருடங்களுக்கு முந்திய சரித்திரம் பேச முடியாது தானே.... இனிவரும் காலங்களில் இனம் மொழி பிரிவினையை விட ,புதிய அரசியல் ஆக்கிரமிப்புக்கு மதங்களை .... பயன்படுத்துவார்கள்...மொழி இனங்களை விட மதங்கள் இலகுவாக மக்களை வெறிகொள்ள வைக்கும்... இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம்,பெளத்தம் நாகரீக போர்கள் நடக்க வாய்ப்புக்கள் இருக்கு
 20. ஆனால் சீனாக்கார்னை விட இந்த இந்தியன் பிழையில்லை என நினைக்கிறேன்.....எம் இனத்தை அழித்தவர்கள் அதில் மாற்றுக்க்ருத்துக்கு இடமில்லை ....சீனாக்காரனின் கொள்கையுடன் தாக்குபிடிக்கமுடியாது... இந்தியா உடைந்தால் சிங்களவன் சீனாக்காரனுடன் சேர்ந்து தமிழ்நாட்டை ஆளநினைப்பான்