சின்னப்பொடியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  614
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About சின்னப்பொடியன்

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  கனடா
 • Interests
  எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற பேராசை!

Recent Profile Visitors

1,034 profile views
 1. எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை. " " " நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க...... மாப்பிள்ள.... சீக்கிரம் தாலி கட்டுங்க... நல்ல நேரம் போய்ட போகுது... அப்ப தாலி கட்டினதும் நல்ல நேரம் போய்டுமா? நான் செல்லம்மா பேசறேன் ஹலோ யார் பேசறது? நான் செல்லம்மா பேசறேன்? நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசறோம்…. யாருனு சொல்லும்மா!
 2. தாங்கள் இளையோர் அமைப்பில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பலர் பெரிய அட்டகாசங்கள் செய்துகொண்டு இருக்கினம். மக்கள் உண்மையாக இவர்கள் இளையோர் அமைப்பில் இருக்கின்றார்களா என்ற உறுதிப்படுத்த வேண்டும். சிலர் செய்யும் இந்தக் குழப்பவேலைகளுக்காக ஒட்டுமொத்த இளையோர்களையும் குற்றம் சொல்வது அங்கு தொடர்ந்து நின்று வேலை செய்யும் இளைஞர்களையும் பாதிக்கிறது.
 3. நீங்கள் என் கூற்றோடு உடன்படுகின்றீர்களோ இல்லையோ தெரியாது ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் எந்தப் பெற்றோருமே தன் பிள்ளை தீய வழியில் போகவேண்டும் என்று விரும்புவதில்லை. அவர்கள் கணி வாங்கிக் கொடுப்பது அவர்களின் படிப்புக்கு உதவும் என்று. அதற்காக அவர்களுக்கு கணி பற்றி எல்லாமே தெரிந்திருக்குது என்று சொல்ல முடியாது. அவர்களும் தங்களுக்குத் தெரிந்த நாலு பேரிடம் கேட்டுத்தான் கணி வாங்குகின்றார்கள். இவ்வாறு பிள்ளைகள் முன்னேற வேண்டும் என்று கணி வாங்கிக் கொடுத்தா அதைத் தவறான வழியில் பயன்படுத்திவிட்டு சுலபமாக பெற்றோர்கள் மீது பழியைப் போடுகின்றீர்கள். நீங்கள் சொன்னமாதிரி அடிக்கடிப் போய் எட்டிப் பார்ப்பது கடினமான காரியம் இல்லைதான். ஆனால் அதிலிருந்தும் தப்புவதற்கு Windows + D இருக்கும்போது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்பது நீங்கள் நினைக்குமளவு சுலபம் இல்லை. இந்த விடயத்தில் குற்றம் சொல்வதற்கு பல காரணிகள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் பெற்றோர்கள் மீது மட்டும் பழியைப் போடுவதை மறுத்திருந்தேனே ஒழிய கணி மீது நான் எவ்விடத்திலும் குற்றம் சாட்டவில்லை என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
 4. பெற்றோர்களைக் குறைகூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. பிள்ளைகள் தாங்கள் பாடசாலைக்கு கட்டுரை எழுதுகிறம் என்று சொல்லிவிட்டு இணையத்தளங்களுக்குப் போய் அரட்டை அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். பெற்றோர்களுக்கு கணிணி மற்றும் இணையம் பற்றிய போதிய அறிவு இல்லாததால் அவர்களாலும் பெரிதாக இதைக் கட்டுப்படுத்த முடியாது.
 5. குறுக்காலபோவான் நீங்க ஒரு மேதை என்பதை நாங்க எல்லோரும் ஒத்துக்கிறம். கொஞ்சநாளைக்கு எங்களை கொஞ்சம் எங்கட வழியில போக விடுங்க. நாங்களும் பட்டுத் தெளிந்து உங்களப் போல மேதையாக முயற்சிக்கிறம்.
 6. கீறிட்ட இடத்தை நிரப்பினால் தான் ஆதி என்ன சொல்ல வருறார் என்று கொஞ்சமாவது விளங்கும் போல இருக்குது. எனக்கு இந்த விளையாட்டெல்லாம் தெரியாதப்பா!
 7. நல்ல முயற்சி. இதை களத்தில் மட்டும் கதைத்துவிட்டு விட்டுவிடாமல் தற்போதைய தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி பரந்துபட்ட பரப்புரையில் ஈடுபடவேண்டும். முக்கியமாக யூரியூப் போன்ற தளங்களில் காதலின் பின்விளைவுகள் பற்றி வரும் காணொளிகளை உடனுக்குடன் தரவேற்ற வேண்டும். இதைவிட பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள் அந்த நாட்டு அமைச்சர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது சாலச்சிறந்ததாகும். எப்படியாவது ஒரு அமைச்சராவது காதலில் தோல்வியடைந்தவராக இருப்பார் என்பதால் இந்த முயற்சி மிகுந்த பயனைத்தரும். இதைவிட காதலர் தினத்திறகு எதிராக காதல் அல்லர் தினம் தொடங்கப்படவேண்டும். இவ்வாறான விடயங்களே உங்கள் போராட்டத்தின் நியாயத்தை உலகம் விளங்கிக்கொள்ளும். எதையும் தூரநோக்குப் பார்வையோடு அணுகக் கற்றுக்கொள்ளவேண்டும்.
 8. வணக்கம் ஒளவையார் அவர்களே! முருகன் போன்று யாழ்களமும் ஒளவையாருடன் சிறிது விளையாடிப் பார்த்தது. இப்பொழுது களம் முழுக்க தமிழைப் பொழிய அருள்பாலித்துவிட்டது. இனிக் கலக்குகின்றீர்களா இல்லை கலங்குகின்றீர்களா என்று பார்ப்போம்.
 9. உங்களைத் திருத்த முடியாது. நுணாவிலான் சொல்லுறதைப் பார்த்தா நான் இப்ப வடமொழிதான் கதைத்துக்கொண்டிருக்கிறேன் போல கிடக்குது. எங்கள் மதத்தில் சில இடைச்செருகல்களைச் செய்து அதைத் தங்கள் மதம் என்று சொல்லி தமிழர்களிடம் இருந்து இந்து சமயத்தை பிரிக்க நினைக்கின்றார்கள் சிலர். அதற்கு பகுத்தறிவுச் சிங்கங்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் சிலர் துணைபோகின்றார்கள். அதே போல் தமிழில் சில சொற்களைப் புகுத்தி தமிழிலிருந்து சில சொற்களை களவாடி அதற்குத் திருத்தம் செய்து அதை வடமொழிச்சொல் என்று என்று உரிமை கொண்டாடுகின்றார்கள். அந்த கருத்தை வலுவூட்ட மின்னல் மற்றும் நுணாவிலான் போன்றவர்கள் சிறப்பான சேவை செய்துகொண்டிருக்கின்றார்க
 10. மாளிகை சுரங்கம் போன்ற சொற்கள் தமிழ் இல்லையா? விட்டால் தமிழே தமிழ் இல்லை என்று சொல்லுவீர்கள் போல இருக்குது. இதற்கு எதாவது ஆதாரம் இருக்கின்றதா? சமற்கிருதத்தில் உள்ள சொற்்கள் எல்லாம் தமிழிலிருந்தால் அது தமிழ் இல்லை என்று முடிவு செய்துவிடுவீர்களா? அது தமிழிலிருந்து சமற்கிருத்திற்குப் போன சொல்லாகக் கூட இருக்கலாம். உங்களைப்போல் சமற்கிருத்தில் உள்்ள சொற்கள் எல்லாம் தமிழ் இல்லை என்று முடிவு செய்தா கடைசியில் நாம் ஒன்றும் இல்லைமல் தான் அலைய வேண்டி வரும். ஏற்கனவே இந்துசமயத்தோடு தொடர்புபட்ட எந்த ஒரு சொல்லும் தமிழ் இல்லை என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்குது. இதற்குள் நீங்களும் எழுந்தமானத்திற்கு இது தமிழ் இல்லை இதுதான் தமிழ் என்று மக்களைக் குழப்பாதீர்கள்.
 11. ஆதிவாசி முழிக்கிறதை விட்டுவிட்டு கருத்தைச் சொல்லும்.
 12. இதைப் பற்றி மேலதிக தகவல்களை தரமுடியுமா? ஸ்கைடோமில்தான் நடைபெறும் என்று நினைக்கின்றேன். இப்பொழுதிருந்தே ஒழுங்கு செய்தால் இதில் பெரிய ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்த முடியும். முதலில் இதற்கு அனுமதி கிடைக்குமோ என்று தெரியவில்லை. கிடைக்காவிட்டாலும் ஸ்கைடோமிற்கு வெளியே டொவுன்ரவுன் வீதிகளில் நடாத்தலாம் என்று நினைக்கின்றேன். இதைப் பற்றி கனடாவில் வாழ்பவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம். பி.கு: இதை யாராவது முன்னின்று நடாத்தினால் புரட்டாதி 2 மற்றும் 3ம் திகதிகளில் நடாத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால் நாங்கள் "கொண்டாட்டம்" செல்ல வேண்டும். :angry: :angry: :angry: