யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Naasamaruppan

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  50
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About Naasamaruppan

 • Rank
  புதிய உறுப்பினர்
 1. வினித், அப்போ இன்று பிபிசி தமிழேசை எப்படி மொழிபெயர்ப்பார்கள். எனது கற்பனை. மாலை ஒப்பிட்டுப்பாருங்கள் பாதுகாப்பு படையினருக்கும், புலிகளுக்கும் இடையே சிக்கி பல பொதுமக்கள் கொல்லப்பட்டும், காயப்பட்டும் உள்ளார்கள். இதேவேளை தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது ஆயுததாரிகள் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டார்கள். :P :P
 2. COLOMBO, June 17 (Reuters) - Sri Lanka's military said around 37 people were killed in a sea and land battle with Tamil Tiger rebels on Saturday, and three suspected rebels in diving gear were seized at a beach near the capital's airport. Sri Lankan government jets hit targets near the Liberation Tigers of Tamil Eelam (LTTE) stronghold Kilinochchi overnight in retaliation for an attack on a bus earlier this week that killed 64, the worst incident since a 2002 truce halted two decades of war. The Tigers deny the bus attack. "Eight LTTE boats destroyed by naval fire," a military spokesman said, revising down an earlier figure of 11. "Six navy sailors died. We have around 30 deaths of LTTE. Navy and police have witnessed the bodies. One civilian succumbed to his wounds. Three naval craft slightly damaged." Attack helicopters were joining the military in searching for more rebel craft, he said. Death tolls could not be independently confirmed. Pro-rebel Web site Tamilnet said five civilians had been killed and 44 wounded. International truce monitors in the northwest Mannar district said they heard heavy firing, much more serious than the hit-and-run attacks that have become commonplace in the last two months as the truce collapsed into low intensity conflict. Each side blamed the other for hitting a church that was sheltering civilians trying to flee the conflict to India. The military said rebels had thrown grenades into it as they withdrew, wounding civilians. But rebel media coordinator Daya Master said the military had shelled the church. BLAST NEAR AIRPORT There has been a sharp increase in violence since early April and almost 700 people have died this year. So far trouble has largely been confined to the north and east, where the Tigers want a separate Tamil homeland. A defence spokesman said three suspected rebels in diving gear were seized in Pamunugama, some 18 km (10 miles) north of Colombo near the resort town of Negombo. They were about 10 km (6 miles) from the international airport. All were arrested, but two took cyanide capsules and were taken to hospital, he said. As the third diver was seized, a large underwater explosion took place a few metres off the beach, a witness said, shattering some nearby windows. "It was just off the reef," he told Reuters from the scene. He did not give his name. "It was a massive explosion. It sprayed water for a 50-metre (yard) radius." Analysts fear attacks on civilian or military targets, trying to pressure the government into concessions. A 2001 suicide attack on the airport destroyed half the Sri Lankan Airlines fleet on the ground, smashing tourism and economic confidence. Both sides have repeatedly said they want peace, but diplomats say neither has shown the flexibility needed to make concessions. Earlier in the month, the Tigers walked out of talks in Norway without even meeting the government delegation. The bus attack on Thursday provoked the government into launching its heaviest air raids on rebel territory since the ceasefire. Analysts had worried that would provoke a heavy Tiger retaliation that could escalate to full-scale war. (Additional reporting by Ranga Sirilal) Thanks - http://www.alertnet.org/thenews/newsdesk/SP209837.htm
 3. Scores killed in Lanka bus blast Violence has been rising after the breakdown of peace talks At least 58 people have been killed when their bus struck a mine in north-eastern Sri Lanka, police say. Another 45 people were wounded in the explosion, which hit a passenger bus in Anuradhapura district on Thursday, a senior official said. No group has claimed responsibility yet, though similar attacks in the past have been blamed on Tamil Tiger rebels. Violence has risen in Sri Lanka since early April when talks between the rebels and the government broke down. Army officials said the bus was hit by a mine on Thursday morning. Military spokesman Brig Prasad Samarasinghe told Reuters news agency the vehicle was carrying "children, ladies and clergy". Wave of violence Reuters also quoted a government spokesman as saying the Tamil Tiger rebels were "definitely" behind the attack. There was no immediate comment from the rebels, but they have previously denied involvement in similar attacks on soldiers in the Tamil-dominated north and east. Suspected attacks by Tamil Tigers on security forces and killings of Tamils blamed on the army and others have soared in recent months. Earlier this month talks between the rebels and the Sri Lankan government in Oslo broke down. The Tamil Tigers want autonomy for minority Tamils in the north and east of Sri Lanka. More than 60,000 people have died during two decades of conflict. http://news.bbc.co.uk/2/hi/south_asia/5082026.stm
 4. நேற்று ஜெயா ரீவியில் சாத்திரிகள் ஜெயலலிதாதான் வெல்லுவார் என்றார்கள். ஏதோ இலக்கங்கள் எல்லாம் கூட்டிக் கழித்து, ஆகவே ஜெயலலிதாதான் வெல்லுவார்கள் என் அடித்து சொன்னார்கள். அப்ப தமிழ்நாட்டு மக்களுக்கு பொற்காலம் பிறந்திருக்கு எண்டுறியள். அப்பிடித்தானே, இல்லாவிட்டால் 2 ரூபாய்க்கு கிலோ அரிசி இலவச வர்ணத்இ தொலைக்காட்சிப்பெட்டி 2 ஏக்கர் நிலம் சமையல் வாயூ பெண்ணுக்கு 15000 ரூபா 2 முட்டை நமது இந்திய நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
 5. நிறைவு செய்யும் புலிகள் அண்மைக்காலத்தில் சில யுத்தநிறுத்த மீறல் சம்பவங்கள் தொடர்பாகப் புலிகள் மீது கண்காணிப்புக் குழுவும், இலங்கை அரசும் குற்றம் சுமத்தி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று தம் இஷ்டப்படி கிழக்கில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடற்பய ணம். மற்றையது மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட் டங்களின் எல்லைப் புறத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக் குள் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி ஊடு ருவி, ஒட்டுப்படையினர் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய சம்பவம். இந்த இரண்டுமே யுத்தநிறுத்தத்துக்கு வழி செய்த புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் யுத்தநிறுத்த மீறல்களே. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் இந்த யுத்தநிறுத்த மீறல்களைச் செய்வ தற்குப் புலிகள் தள்ளப்பட்டார்கள் என்பதையும் நாம் கவ னிக்கவேண்டும். அதை அறிந்துகொண்டால் இந்த யுத்த நிறுத்த மீறலுக்குப் பின்னால் இருக்கும் நியாயப்பாடும் வெளிப்படும்; நாமும் அதைப் புரிந்தும் கொள்ளலாம். யுத்தநிறுத்த உடன்பாட்டை அதன் விதிகளின் பிர காரம் செயற்படுத்தவதில் இலங்கை அரசுத் தரப்பு காட் டிய உதாசீனமும் யுத்தநிறுத்த உடன்பாட்டை மீறும் வகையில் அரசுத் தரப்பு செயற்பட்டதுமே இந்த இரு யுத்தநிறுத்த மீறல் நடவடிக்கைளுக்கும் விடுதலைப் புலிகளைத் தூண்டி வழிப்படுத்தின என்பது இங்கு நோக்கற்பாலது. போர் நிறுத்த உடன்பாட்டின்படி வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள், ஒட் டுப்படைகள், துணைப்படைகள் போன்றவற்றின் ஆயுதங் கள் களையப்பட்டு அவை வடக்கு கிழக்கிலிருந்து அகற் றப்படவேண்டும். அதைச் செய்யத் தவறிய அரசு, அதற்குப் புறம்பாக தனது படைகளின் புலனாய்வுப் பிரிவுகள் மூலம் தமிழர் தாயகத்தில் ஒட்டுப்படைகளை ஸ்தாபித்து, ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி, வளர்த்து, தமிழரின் விடுதலைப் போராட்ட ஆதரவு சக்திகளுக்கு எதிராக அவற்றை அட்டகாசம் புரி யக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்
 6. ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் அரச பயங்கரவாதம்: ஊடக அமையம் அச்சம் பகவன் Thursday, 04 May 2006 நன்கு திட்டமிட்டதும், காட்டுமிராண்டித் தனமானதும் ஐனநாயக விரோதத் தன்மை கொண்டதுமான கொலைகள் தமிழ் ஊடகவியலாளர்களையும் தமிழ் ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் உள்நோக்குடன் கூடிய அரச பயங்கரவாதத்தின் ஒரு அம்சமாகவே நாம் கருதுகிறோம். இவ்வாறு தமிழ் ஊடகவியளாளர் அமையத்தினால் நடாத்தப்பட்ட கண்டனப் பேரணியின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவடிவம் வருமாறு:- செயலாளர் நாயகம், ஜக்கியநாடுகள் சபை ஊடாக பொறுப்பதிகாரி, யுனிசெவ் கிளிநொச்சி மதிப்புக்குரிய ஐயா, வணக்கம். தமிழ் ஊடகத்துறை மீதான அராஜகத்திற்கான கண்டனம் தமிழ் ஊடக அமையத்தைச் சேர்ந்தவர்களாகிய நாம் எமது ஊடக செயற்பாட்டு சுதந்திர, சனநாயக உரிமைக்கு ஏற்பட்டுள்ள அரச பயங்கரவாதத்தின் அடிப்படையிலான பாரிய அச்சுறுத்தல் தொடர்பான கீழ் காணும் விடயங்களை தங்களின் மேலானதும் உன்னிப்பானதும் விசுவாசம் மிக்கதுமான கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒரு சனநாயக நாட்டின் தரம், அரச நீதியின் தன்மை என்பன அந்த நாட்டின் ஆட்சியாளர் மக்களுக்கு வழங்கும் எழுத்து, பேச்சு மற்றும் சிந்தனை சுதந்திரத்தின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்யப்படுகின்றது என்பது தங்களுக்கு தெரிந்தவிடயமே. சிறிலங்காவின் பேரினவாத ஆட்சியாளர்கள் கடந்த சில தசாப்த காலமாகவே இத்தகைய சனநாயகப் பண்புகளற்ற தன்மையுடன் தான் இயங்கி வருகின்றார்கள் என்பதையும் இதனடிப்படையில் இந்த நாட்டின் ஊடகவியாளார்கள் அதுவும் குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் பன்முகப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் என்பதையும் சர்வதேச சனநாயக சமூகம் பாராமுகமாக அலட்சியப்படுத்துவது தான் துயரம் தரும் விடயமாகும். தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான சிறிலங்கா அரச ஆயுதப் படையினரதும் ஆயுதந்தாங்கிய துணைப்படையினரதும் தொடர்ச்சியானதும் நன்கு திட்டமிட்ட வகையிலானதுமான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் கொடூரமான கொலைகள் இன்று ஓர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒட்டு மொத்தமாக தமிழ் ஊடகத்துறையே இத்தகைய கலாசாரமற்ற மந்த புத்தியுள்ள படையினரால் இலக்கு வைக்கப்படுகின்றது என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இந்த சனநாயக விரோத, மனித அடிப்படை உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு சிறிலங்காவின் அரச பீடத்தின் ஆசீர்வாதமும் அங்கீகாரமும் இருப்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. அரச தரப்பினர் மறுத்தாலும் கூட இதுவே உண்மையாகும். தமிழ் ஊடகவியலாளர்களை தமிழ் தேசியம் தழுவிய போக்கில் சிந்திக்கும் ஊடகவியலாளர்களை தமது எதிரிகளாக கருதி அவர்களின் சனநாயக ரீதியிலான ஊடக செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரினவாதிகளின் சிந்தனைக்கு பலியானவர்களின் பட்டியல் நீளமானது என்பதுடன் தொடர்ந்து கொண்டும் வருகின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். கடந்த செவ்வாய்கிழமை (02.05.2006) அன்று மாலை யாழ்ப்பாணம் உதயன் தமிழ் நாளிதழ் அலுவலகத்தில் மாலை ஏழு மணியளவில் அத்துமீறி பின்வழியால் உள்நுழைந்த கறுப்பு உடையணிந்த ஆயுதபாணிகளான ஐவர், அங்கு இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை ஆயுதமுனையில் அச்சுறுத்திக் விட்டு ஆசிரிய பீடத்துள் நுழைந்து தேடுதலை மேற்கொண்டதுடன் அங்கு எவரும் அவர்களிடம் சிக்காததால் அங்கிருந்த கணனிகள் உட்பட சாதனங்களை நிர்மூலம் செய்துவிட்டு கண்மூடித்தமான துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர். இவர்களின் இந்த காட்டுமிராண்டித் தனத்திற்கு அங்கு பணிபுரியும் அப்பாவிகளான சந்தைப்படுத்தும் முகாமையாளர் சுரேஸ் என்பவரும் விநியோகப் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரும் பலியாகியதுடன் மேலும் இருவர் படுகாயமும் அடைந்துள்ளனர். மறுநாள் (03.05.2006) கொண்டாடப்படவிருந்த சர்வதேச ஊடக சுதந்திர தினத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும், அவமதிப்பாகவுமே இதனை பார்க்கவேண்டியுள்ளது. இந்த ஆயுதக்குழுவினர் யார் என்ற கேள்விக்குரிய விடையை அந்தநாளிதழின் ஆசிரிய பீடத்தவரே அச்சத்தின் காரணமாக மறைமுகமாகக் கூறியுள்ளார். சம்பவம் நிகழ்ந்த பதினைந்து நிமிடங்களில் அப்பத்திரிகையின் முக்கியஸ்தரோடு தொடர்பு கொண்ட சனாதிபதி, நிகழ்வின் முழுப் பரிமாணங்களையும் தெளிவாக விசாரித்து அறிந்து கொள்ளாமல் பொறுப்பற்ற வகையில் மறுநாள் ஊடக சுதந்திர தினத்தில் தான் கலந்து கொண்டு உரையாற்றும் வைபவத்தை குழப்பி தனக்கு அபகீர்;த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் புலிகளே இதனைச் செய்துள்ளனர் என்றுள்ளார். ஆனால், இதனைப் புலிகள் செய்யவில்லை என அவரின் கூற்றை நிராகரித்த உதயன் நிர்வாகியிடம் அப்படியானால் அது குறித்து விசாரணை செய்கின்றேன் என சமாளித்தார். அவரின் இந்த பேச்சிலுள்ள அலட்சியம், உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அவரது மனோபாவத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது என்பதுடன் எந்தப் பழியையும் புலிகள் மீது சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முனைப்புக்காட்டும் அவரது நியாயமற்ற குரூர சிந்தனையையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இது சமாதானத்திற்காக உழைப்பதாகக் கூறும் ஒரு சனாதிபதிக்குரிய பண்பாக இல்லை என்பதே கவலை தரும் விடயமாகும். ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய உணர்வுடனும் சத்திய வேட்கையுடனும், உண்மைகளை உலகிற்கு அறிவிக்கும் இலட்சியத்துடனும் செயற்பட்ட நிமலராஐன் முதல் சிவராம் (தாரகி), மற்றும் சுகிர்தராஐன் வரையிலான பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோரின் மரண விசாரணைகளை அரசாங்கம் எவ்வாறு கையாண்டது, கையாளுகின்றது என்பதை நாமறிவோம். இவற்றிற்கு தான் சாட்சியங்கள் இல்லை, ஆதாரம் இல்லை என அரசு காரணங்களைக் கூறினாலும், சில மாதங்களின் முன்னர் Nஐ.வி.பியினர் கொழும்பில் நடத்திய பேரணியின் போது செய்தி சேகரிக்கச் சென்ற சுடரொளி பத்திரிகையின் செய்தியாளர் யதுர்சன் Nஐ.வி.பி குண்டர்களால் தாக்கப்பட்டமைக்கு ஆதாரமாக ஒளி நாடாக்கள் உட்பட சான்றுகள் இருந்த போதும் அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். இது தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி தாக்கி, கொலை செய்வோரை அரசாங்கம் பாதுகாக்க விரும்புகின்றது என்ற செய்தியை உரத்துச் சொல்வதாகவே உள்ளது. உதயன் பணியாளர்கள் மீதான இந்த படுகொலை தொடர்பான அரசின் விசாரணை என்பதும் இந்த அடிப்படையிலேயே அமையும் என்றே எண்ணவேண்டியுள்ளது. நன்கு திட்டமிட்டதும், காட்டுமிராண்டித்தமானதும் ஐனநாயக விரோதத் தன்மைகொண்டதுமான இந்தச் கொலைகள் தமிழ் ஊடகவியலாளர்களை மட்டுமல்ல, தமிழ் ஊடகத்துறையையே நிர்மூலமாக்கும் உள்நோக்குடன் கூடிய அரச பயங்கரவாதத்தின் ஒரு அம்சமாகவே நாம் கருதுகிறோம், அஞ்சுகின்றோம். முன்னெப்போதுமில்லாதவாறு இந்த சமாதான காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும், தமிழ் ஊடகத்துறைக்கும் ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலானது ஒரு சனநாயக நாட்டின் இறைமைக்கு அவமானகரமானது என நீங்கள் கருதவில்லையா? தமிழ் ஊடகவியலாளர்களையும், ஊடகத்துறையையும் இந்த பேராபத்து நிலையிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசுக்கும் அதன் ஆயுத துணைப்படைகளுக்கும் எதிராக கண்டனம் தெரிவிக்கவும், சனநாயகத்தின் பெயராலும், சமாதானத்தின் பெயராலும் உங்களுக்கும், ஏனைய சர்வதேச சமூகத்திற்கும் பாரிய தார்மீக பொறுப்புண்டு என்றே நாம் நம்புகின்றோம். இது குறித்து எடுக்கப்போகும் நியாயபூர்வமானதும் கடுமையானதும், தீர்க்கமானதுமான நடவடிக்கையே தமிழ் ஊடகவியலாளர்களினதும், ஒட்டுமொத்த தமிழ் தேசிய இனத்தினதும் எழுத்து, பேச்சு மற்றும் சிந்தனை சுதந்திரத்துடன் கூடிய ஐனநாயக உரிமைகளை பாதுகாக்கும் எனவும் நாம் நம்புகின்றோம். மட்டு ஈழநாதம்
 7. புலிகளின் பொறுமையைச் சர்வதேசம் புரிந்து கொள்ளுமா? பரணி Friday, 05 May 2006 தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தம் ஒன்று மீண்டும் தொடங்கினால் பாரிய அழிவுகள் ஏற்படும். இவ்வாறு அழிவுகள் ஏற்பட்ட பின்பும் பேச்சுவார்த்தைக்குத்தான் செல்ல வேண்டும். எனவே, அழிவுகள் ஏற்பட்டாமல் தவிர்க்க வேண்டுமானால் சின்னச் சின்ன சாட்டுகளைக் கூறிக் கொண்டிருக்காமல் பேச்சுவார்த்தை மேசைக்கு உடனடியாகச் செல்வதே நல்லது. மேலெழுந்தவாரியா இதனைப் பார்க்கும் பொழுது நல்ல கருத்தைக் கூறியிருப்பதாகவே புலப்படும். இதனைக் கூறியவர் வெளிநாட்டில் வாழும் ஒரு பத்தி எழுத்தாளர் என்றும், இக்கருத்தை இவர் வெளிநாட்டு வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே தெரிவித்திருந்தார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். இதேநேரம் சிறிலங்காவின் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதனையும் இங்கு பார்க்க வேண்டும். ஜெனிவாவில் நடைபெற்ற முதலாம் கட்டப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளுக்கு அமைய விடுதலைப்புலிகள் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவேண்டும் என்றும் என்றும் கூறியுள்ளார். சனாதிபதின் இக்கூற்றை நோக்கினாலும் ஜெனிவாவில் ஒப்புக்கொண்டதற்கமைய விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகின்றார்களே என்று எண்ணும் அளவுக்கு மஹிந்தரின் அரசு பரப்புரைகளைச் செய்து வருகின்றது. மேலே இருக்கும் இருவரினதும் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், தமிழ் மக்களும் சமாதானப் பேச்சுவார்த்தையை எதிர்பார்த்திருப்பதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லாது பின்னடிப்பதாகவும், யுத்தத்தின் மேல் பற்றுக்கொண்டவர்களாகவும் காட்டப்படுகின்றனர். பெப்ரவரி 22, 23களில் ஜெனிவாவில் ஏட்டப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:- முதலாவது அரசுப் படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்கள் அல்லது துணை ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதாகும். இரண்டாவது மேற்கொண்டு அடுத்த நடைமுறைகளைப் பற்றி ஏப்ரல், 19, 20, 21களில் மீண்டும் ஜெனிவாவில் எடுக்கப்பட்ட முதலாவது முடிவை சிறிலங்கா அரசு எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தியுள்ளது? இந்தக ;கேள்விக்குப் பதில் பூச்சியம் என்பதேயாகும். துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையாதவர்கள் இவ்வாயுதக் குழுக்கள் அலுவலகங்ளை மட்டக்களப்பு நகரிலே திறந்து நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றார்கள். வெலிகந்தை, பகுதியில் இராணுவப் பாதுகாப்புடன் தங்கி இருக்கும் ஆயுதக் குழுக்களுக்கு மட்டக்களப்பில் அலுவலகம் திறக்கும் வாய்ப்பையும் வழங்கியதன் மூலம் ஜெனிவாவில் ஒப்பமிட்ட உடன்படிக்கையை அரசு முற்றுமுழுதாக மீறிவிட்டது. ஆயுதக்களைவைச் செய்யாது மேலும் எதைப்பற்றிப் பேசுவது? என்ற கேள்வி எழுகின்றது. ஜெனிவாவிற்கோ அல்லது வேறு எங்காவதோ போய்பேசிப் பேசிக்கொண்டிருப்பதோடு அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விடுவது என்ன பலனைக்கொடுக்கும்? வெறுமனே பேச்சுவார்த்தை என்பது அதில் எடுக்கப்படும் முடிவுகளைச் செயற்படுத்துவதில் முடியவேண்டும். இந்தச் சூழ்நிலையில்தான் பல இடைஞ்சல்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தி விடுதலைப்புலிகளின் மத்திய குழுக்களைக் கூடவிடாது தடுத்துவருகின்றது அரசு. இதன் மூலமே விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லவிடாது தடுப்பதில் அரசு அக்கறை காட்டிவருகின்றது. அதேநேரம் விடுதலைப்புலிகள் மேசைக்குச் செல்லவிடாது தடுப்பதில் அரசு அக்கறை காட்டிவருகின்றது. அதேநேரம் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வரப் பின்னடிப்பதாகப் பரப்புரை செய்து வருகின்றது. இதுவரை நடைமுறையிலிருந்த பயண ஒழுங்குகளில் மாற்றங்களை ஏன் ஏற்படுத்த வேண்டும்? உண்மையில் பேச்சுவார்த்தையில் அரசுக்கு அக்கறை இருக்குமானால் இதுவரை நடந்தமாதிரி விடுதலைப்புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களை பிராந்தியத் தளபதிகளின் போக்குவரத்தை அங்கீகரித்திருக்கவேண்டும். இவற்றைச் சர்வதேச சமூகம் சரியான கண் கொண்டு பார்க்கும் எனத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். மஹிந்தரின் அரசின் கருத்துகளுடன் ஒத்தூதும் கருத்தாகவே மேலே காட்டப்பட்டவரின் கருத்தும் அமைந்துள்ளது. அவரது கூற்றுப்படி தமிழ் மக்கள் சமாதானத்தை விரும்புவதாகவும், விடுதலைப்புலிகள் யுத்தத்தை விரும்புவதாகவும் கூறுகின்றார். இவர்கள் தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்க அல்லது காட்டமுற்படுகின்றார்கள். மக்களின் ஆதரவு இல்லாமல் இவ்வாறு ஒரு இயக்கம் இயங்க முடியுமா? என்று கேள்விகேட்காது எழுந்தமானமாக எதையும் எழுதலாம், பேசலாம் என்பது அவரின் கருத்தாக உள்ளது. தற்பொழுது எழுந்துள்ள நெருக்கடியான நிலையில் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களுடன் வாழ்பவர்களால் தான் அறிந்துகொள்ள முடியும். தமிழின ஆதரவாளர்கள், தமிழப் பற்றாளர்கள் என்று பலர் நாளும் படுகொலைக்கு உள்ளாகி வருகின்றனர். சமாதான காலம் என்று ஒன்று வந்தபொழுது அக்காலத்தில் தமிழினத்தின் விடுதலையை எதிர்பார்த்து முன்னின்று உழைத்தவர்கள் இனம் காணப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். சமாதான காலம் என்ற ஒன்று வந்திராமல் யுத்தம் தொடர்ந்திருக்குமானால் இந்த நிலை ஏற்பட்டிருக்கமாட்டாது. 1976இல் வாருங்கள் யாழ்ப்பாணத்திற்கு என இடம்பெயர்ந்த மக்கள் காணாமற் போனார் பட்டியலில் அடக்கப்பட்டுள்ளனர். அதே போன்ற நிலைதானே சமாதானம் என்ற பெயரில் தற்பொழுதும் காணப்படுகின்றது. இதைக் கண்டிக்கவோ அல்லது புட்டுக்காட்டவோ தெரியாதவர்கள் மக்களின் மனங்களை அறிந்தவர்களாக கூறுவதைத் தவிர்த்துக் கொள்வது நன்றாக இருக்கும். புலிகள் யுத்தத்தை விரும்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார் அந்த கட்டுரையாளர் - தற்பொழுது அரசு முற்றுமுழுதாக யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறி வான், கடல், தரை என்பவற்றிலிருந்து அப்பாவி மக்கள் மேல் குண்டுகளை வீசி வருகின்றது. இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாகக் குண்டுவீச்சால் கொல்லப்பட்டுள்ளார்கள். சிறுவர்கள், குழந்தைகள் என்பவர்கள் அடங்கப் பலரும் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். யுத்தத்தின் மீது புலிகள் பற்றுக்கொண்டவர்களாயிருந்தா
 8. கந்தப்பு கொஞ்சம் மேலே பாருங்கள். முழுதாக இணைக்கப்பட்டிருக்கு
 9. பிரபாகரனின் திருமணத்தை நடத்திவைத்தவர் ஆண்டன் பாலசிங்கம்தான்! அந்த நிகழ்வை அழகாக விவரிக்கிறார்... "அப்போது பிரபாகரனுடன் நானும் சென்னையில் இருந்தேன். இந்தியா கொடுக்கிற ராணுவப் பயிற்சியை முறையாகப் பயன்படுத்துவதிலும், சரியான திட்டமிடலோடு பணியாற்றுவதிலும் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தார் பிரபாகரன். இந்நிலையில், திருவான்மியூரில் நாங்கள் வசித்த வீட்டுக்கு மதி, வினோஜா, ஜெயா, லலிதா என்ற நான்கு இளம் பெண்கள் வந்தனர். யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த இந்த நால்வரை யும் சிங்கள ராணுவத்திடமிருந்து காப்பாற்றி சென்னைக்கு அனுப்பிவைத்திருந்தார்கள் போராளிகள். இந்தப் பெண்களுக்குக் குடும்பமோ உறவுகளோ இல்லாத நிலையில், பிரபாகரன் இந்த நால்வரின் நலனிலும் அக்கறையுடன் இருந்தார். இந்தப் பெண்களின் வருகை, புலிகள் இயக்கத்துக்குள் ஒரு குட்டி புரட்சி ஏற்படக் காரணமாகும் என்று முதலில் நான் நினைக்கவில்லை. எங்களுடைய அமைப்பைப் பொறுத்தவரை, யாழ்ப்பாண இந்து மரபில் பேணக்கூடிய ஒழுக்கக் கோட்பாடுகள் எல்லாமே கண்டிப்பாகவும் கறாராகவும் கடைப் பிடிக்கப்பட்டன. திருமணத்துக்கு முன் ஓர் ஆணும் பெண்ணும் தனித்தனியே பிரிந்துதான் வாழ வேண்டும் என்ற கோட்பாட்டைப் போராளிகளும் பேணினார் கள். மக்களிடையே பரந்த ஆதரவைப் பெற வேண்டு மானால், இந்தச் சமூகப் பண்பாட்டு அம்சத்துக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதில் பிரபா கரன் கவனமாக இருந்தார். இந்த ஒழுக்கக் கோட் பாட்டில் எனக்கும் உடன்பாடு தான். ஆனால், இந்த ஒழுக்க விதிகள் நெகிழ்ச்சித்தன்மை இல்லாமல் இறுக்கமாக இருப்பதில் உடன்பாடில்லை. பிடிவாதத்தால் பேணப்படும் கட்டுப்பாடுகளைக் கட்டாயத் தால் கடைப்பிடித்தால், இயற்கை தன் போக்கில் ஆண் - பெண் உறவைத் தோற்றுவிக்கும். எங்கள் தலைவரின் விஷயத்திலும் இதுதான் நடந்தது. வந்த நான்கு பெண் களில் மதி என்கிற மதிவதனியிடம் ஆழ்ந்த காதல்வயப் பட்டார் பிரபாகரன். மதியையும் பிரபாகரனையும் திருமண வாழ்க்கையில் இணைத்துவைக்கும் பொறுப்பு எனக்கும் அடேலுக்கும் இருந்தது. அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களிடம் தமிழ்ச் சமூகத்தில் காதலுக்கு உள்ள முக்கியத்துவத்தை எடுத்துப் பேசினேன். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு ஒப்புக்கொண்டார்கள். 1984-ல் திருப்போரூர் கோயிலில், பிரபாகரனின் திருமணத்தை தமிழ் முறைப்படி நடத்திவைத்தோம். ஒரு காதல் திருமணமாக பிரபாகரனின் திருமணம் நடந்தது, புலிகளிடையே நல்ல பல மாற்றங்களைத் தோற்றுவித்தது. இன்றைக்குப் போராளிகளுக் கிடையே காதல் திருமணங்கள் சாதாரணமாக நிகழ்வதற்கு மதி - பிரபாகரன் காதல் திருமணம்கூட ஒரு காரணமாக இருக்கலாம்" என்று தன் நெருங்கிய நண்பனின் காதல் கதையை விவரித்துச் சிரிக்கிறார். பேச்சு தற்போதைய சூழல் பற்றி திரும்புகிறது. மிகுந்த நிதானத்துடனும் கவலையுடனும் பேசுகிறார் ஆண்டன். "இலங்கைப் பிரச்னையில் இந்தியா விலகியிருப்பதால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் சில சுயநலங்களோடு இந்த பிரச்னையில் தலையிடக்கூடும் என்று புலிகள் நினைக்கிறார்களாமே?" "ஆம்! எங்களைப் பொறுத்த வரையில், இதற்கான ஒரு புறச் சூழல் ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். தற்போதைய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர். சில மாதங்களுக்கு முன் அவர் இந்தியா வந்து, இந்தப் பிரச்னையில் இந்தியா தலையிட்டுத் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரினார். 'நீங்கள் சமாதான வழியில் ஓர் அரசியல் தீர்வை முன்வைத்து இந்தப் பிரச்னையைத் தீருங்கள். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்' என்று கைவிரித்துவிட்டது இந்தியா. தற்போது பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஆயுதங்களை வாங்கி சிங்கள ராணுவத்தைப் பலப்படுத்தி, புலிகளுக்கு எதிராக ஒரு யுத்தத்தைத் துவங்கத் திட்டமிட்டிருக்கிறது இலங்கை அரசு. அதற்காகத்தான் அதிபர் ராஜபக்ஷே போன வாரம் பாகிஸ்தான் சென்றார். அங்கே ஒரு ரகசிய ராணுவ ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆயுதங்களைப் பெற்று, ஸ்ரீலங்கா ராணுவத்தை பலப்படுத்தி புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். இதே போன்று அவர் அடுத்த மாதம் சீனாவுக்கும் செல்லவிருக்கிறார். பாகிஸ்தான், சீனா போன்றவை இந்தப் பிரச்னையில் தலையிட்டால், இந்தியாவின் செல்வாக்கு நிரம்பிய இந்த பிராந்தியத்தின் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பங்கத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகும். அது இந்தியாவுக்கும் ஆபத்தாக அமையும்." "இன்னொரு பக்கம், இந்தியாவை மட்டுமே அழைத்துப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று இலங்கையில் ஜே.வி.பி. அமைப்பு கூறிவருகிறதே?" "அது வேறு கணக்கு! ஜே.வி.பி. ஒரு தீவிரவாத கம்யூனிஸ்ட் அமைப்பு. சிங்கள பேரினவாதத்தை லட்சிய மாகக்கொண்ட ஒரு தீவிரவாத இயக்கம். அவர்கள் எண்பத்து மூன்றுக் குப் பிறகு, ஈழப் பிரச்னையில் இந்தியா தலையிடுவதைக் கண்டித்துப் பெரும் புரட்சிகளை நடத்தியவர்கள். இந்தியத் துருப்புகள் ஈழ மண்ணில் வந்து இறங்கியபோது அதை எதிர்த்து இலங்கையில் பெரும் கிளர்ச்சிகளை நடத்தியவர்கள். இவர்கள் தற்போது இலங்கைப் பிரச்னையில் மீண்டும் இந்தியா தலையிட வேண்டும் என்று அழைக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்தியா மீதான நன்மதிப்பல்ல. இந்தப் பிரச்னையில் இந்தியா தலையிட்டு, ராணுவ ரீதியாக புலிகள் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் உள்ளார்ந்த விருப்பம். கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்துவரும் நீண்ட போராட்டத்தில் "கிழக்கு இலங்கையிலுள்ள ஜிகாத் குழுக்கள் பற்றி தாங்கள் சமீபத்தில் கவலை தெரிவித்து, சில கருத்துகளை வெளியிட்டிருந்தீர்களே..?" "ஆம். கிழக்கு மாகாணங்களில் தற்போது ஜிகாத் என்ற பெயரில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குப் பாகிஸ்தான் நிதி உதவியும் ஆயுதப் பயிற்சியும் வழங்கியுள்ளது. இங்கிருந்து பல இளைஞர்கள் பாகிஸ்தான் சென்று ராணுவப் பயிற்சி பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள். வட கிழக்கு இலங்கையில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் காலங் காலமாக சகோதரர்களாகப் பழகி வருகிறார்கள். இந்த நல்லுறவைக் கெடுத்து, எமக்குள் பிளவை ஏற்படுத்தும் நோக்கிலேயே இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரிகளும், பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரும் இணைந்து சில இஸ்லாமிய அமைப்புகளைப் பயன்படுத்தி, இந்தப் புதிய சதி வேலையைச் செய்திருக் கிறார்கள். இது குறித்த அனைத்து விவரங்களையும் ஸ்ரீலங்கா அரசாங் கத்துக்கும், நார்வே அரசாங்கத்துக்கும், சர்வதேச உலகத்துக்கும் நாங்கள் தெரிவித்திருக்கிறோம். இலங்கை அரசு இப்போது அவசர அவசரமாக, இஸ்லாமிய படைப் பிரிவு ஒன்றினைக் கிழக்கு இலங்கையில் அமைத்து, அதை வைத்து முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதுவும் மிகவும் ஆபத்தான விஷயம். இஸ்லாமிய இளைஞர்களை அணி திரட்டி, அவர்களின் கையில் ஆயுதங்களைக் கொடுத்து, அவர்களை விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதி ராகத் திசை திருப்பும் நோக்கத்துடன்தான் சிங்கள அரசு இந்தக் காரியத்தைச் செய்கிறது." "விடுதலைப் புலிகளின் மீதான 'பயங்கரவாதிகள்' என்ற குற்றச்சாட்டுக்குத் தங்கள் பதில்தான் என்ன?" "எங்களது இயக்கம் நீண்ட வரலாறு கொண்ட ஒரு விடுதலை இயக்கம். பதினெட்டாயிரம் போராளிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து, ஆக்கிரமிப்பில் இருந்த எங்கள் தமிழ் மண்ணை மீட்டெடுத்து, இன்று அந்த நிலப்பரப்பில் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வருகின்றோம். ஆனால், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். எமது போராட்டத்தின் வரலாறு, அதன் உள் நிகழ்வுகள், புலிகள் செய்த மகத்தான தியாகங்கள் ஆகியவற்றைத் தமிழக மக்கள் தெரிந்துகொள்ளும் நாள் வரும். அப்போது எம்மைப் பற்றிய உண்மைகளை அவர்கள் அறிந்துகொள்வார்கள். எமக்கும் தமிழக மக்களுக்குமான தொப்புள் கொடி உறவை அறுக்க நினைப்பவர்கள், அப்போது காணாமல்போவார்கள்." "கருணா ஏன் இந்த இயக்கத்திலிருந்து வெளியேறி, உங்களுக்கு எதிராக மாறினார்?" "கருணா எங்கள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்தவர். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பற்றி பல புகார்கள் வந்தன. குறிப்பாக, இயக்க நிதியில் பெரும் மோசடி செய்து, தனிப்பட்ட வங்கிகளில் காசுகளைப் போட்டு, சில ஊழல்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இயக்கத் தலைமைக்குத் தெரியாமல், வயது குறைவான பள்ளிச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்து, அவர்களைத் தனக்குக் கீழான ஒரு சிறுவர் படையணியாக உருவாக்கினார். இவை போக, பெண் போராளிகளைப் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார். இஸ்லாமிய மக்களுக்கு எதிராகச் சில படுகொலை களையும் நிகழ்த்தினார் என்பது போன்ற பல உண்மைகள் வெளி வந்ததும், தலைவர் பிரபாகரன் இவரை விசாரணைக்காக வன்னிக்கு அழைத்தார். விசாரணைக்குப் போனால் தனது குற்றங்கள் அம்பலத்துக்கு வரும், இயக்க ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தில், கருணா திடீரென்று இயக்கத்திலிருந்து விலகி, எங்களுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டார். ஆனால், நாங்கள் உடனடியாக எங்கள் படையணிகளை அனுப்பி, அவரது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீட்டெடுத்தோம். அதைத் தொடர்ந்து, அவர் கொழும்புவுக்கு ஓடிப்போய் ஸ்ரீலங்கா ராணுவத்துடன் இணைந்து, தற்போது எமக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். இவருக்குக் கீழ் ஒரு சிறு குழு செயல்படுகிறது. இவர்கள் இப்போது எமது ஆதரவாளர்களைக் கொல்வது, எம்மை ஆதரித்து எழுதும் பத்திரிகையாளர்களைக் கொல்வது, கல்விமான்களைக் கொல்வது எனப் பல படுகொலைகளைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆகவேதான், எங்கள் பேச்சுவார்த்தைகளின்போதுகூட, கருணா குழு என்ற துணைப் படைக் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், அவர்களால் நிகழ்த்தப்படும் வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தோம்." "நீங்கள் வெளிநாடுகளில் 'இறுதி யுத்தம்' என்ற பெயரில், அங்குள்ள தமிழர்களை மிரட்டிக் கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே..?" "இல்லவே இல்லை! ஆனால், ஈரத்துடன் இங்கே ஒன்றைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்... உலக நாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான், ஈழத்திலுள்ள தமிழர் களின் ஜீவாதாரத்துக்குக் காலங் காலமாக உதவி வருகிறார்கள். பொரு ளாதாரரீதியாகத் தமிழீழம் ஒதுக்கப் பட்டிருக்கிறது. வேலையின்மை, வறுமை, போர் அழிவு, இயற்கை இடர்ப்பாடுகள்... இப்படிப் பல துயரங்களை எமது சமூகம் அங்கு சந்தித்து வருகிறது. எமது மக்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்க உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. எங்கள் மக்கள் தாமாக மனமுவந்து செய்யும் கொடை யினால்தான் எமது இயக்கமும், இயக்க வேலைகளும், சமூக அமைப்புகளும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. தாய் மண்ணுக்காக எம் தமிழ்ப் பிள்ளைகள் தருகிற நிதி இது!" இந்தச் சந்திப்பின்போது சிக்கலான சில கேள்விகளுக்குப் பதிலளிக்க நாசூக்காக மறுத்த ஆண்டன் பால சிங்கம், என்கிறார். "தம்பி, அடுத்த முறை வரைக்குள்ள எங்களுடனேயே சாப்பிட வேணும்!" - ஈழத் தமிழில் கை கூப்பி வழியனுப்புகிறார் அடேல் பாலசிங்கம் என்கிற வெள்ளைக்காரத் தமிழச்சி! படங்கள்: லண்டன் சாந்தன் ஆனந்தவிகடன்
 10. ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே இனக் குழுமம் கொண்ட மக்கள் நீண்ட நெடிய காலமாகத் தொடர்ந்து பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் அம்மக்களினத்தின் தாயகம் என்பது வரலாறு புகட்டும் அசைக்க முடியாத ஆணித்தரமான பாடமாகும். இது மிக மிக சாமானிய மக்களே புரிந்து, தெளிந்து கொண்ட உண்மை. இந்த உண்மையைக்கூட புரிந்து கொள்ளத் தடுமாறுபவர்களே நம் அரசியல்த் தலைமைகள் என்றால் அது வேறொன்றுமல்ல. சிங்களத் தலைமைகளின் அரசியல் அனுபவம் வரட்சியையும் - வங்குரோத்துத் தன்மையையுமே புடம் போட்டுக் காட்டுகின்றது. LAND is not onily necessary for selp the expression and ethaic group. butir also necessary for the very survival of the ethiai cgroup. ‘ஒரு இனம் எதையும் இழக்கலாம். மீண்டும் வாழ்வு பெறலாம். ஆனால் ஒரு இனம் தன் தாயகத்தை இழந்தால் அந்த இனம் தலை தூக்க முடியாத ஒரு இனம் தன்னைத்தான் உணர்த்துவதற்கு மட்டுமல்ல, அந்த இனம் உயிரோடு ஒட்டிய வாழ்வு பெறுவதற்கும் தாய கம் மிக மிக முக்கியமானதாகும் என மேலைநாட்டறிஞனின் கூற்றின் ஆளத்தையும், நீளத்தையும் பார்ப்பதானால் ஒரு கால் தன் தாயகத்தை இழந்த யூத இனம், தன்னுள் எத்தனை வல்லமைகளை, அறிவை, ஆற்றலை, ஆளுமையை, நாகரிக செழுமையை உள்ளடக்கியிருந்தும் உலக நாடெல்லாம் அனாதையாக அகதிகளாக தஞ்சம் புகுந்த நாடெல்லாம் ஓட ஓட வெருட்டியதையும் கிட்லர் என்ற சர்வதிகாரி துரத்தி துரத்தி சுட்டழித்ததையும் இஸ்ரேல் என்ற நாட்டைப் பெற்று இன்று உலகை வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ள சிறப்பு தாயக மண்ணின் அவசியத்திற்கோர் எடுத்துக்காட்டு. அமெரிக்காவின் ஆதிக்குடிகளும் பேரு, மெச்சிக்கோ நாகரிகத்தின் தந்தைகளான செவ்விந்தியர்கள். இன்று மயோலிஸ் மக்கள் என அழைக்கப்படும் அன்று ஈழத்தின் மாந்தையை ஆண்ட மயனின் வாரிசுகள். பிரித்தானிக்க கலைக்களஞ்சியத்தால் சிறந்த அறிவாளர்கள் வானசாஸ்த்திரிகள், கட்டிடக்கலை விற்பன்னர்கள், விஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள் கணித மேதைகள சிவசர்ப்ப வழிபாட்டுக்காறர்கள் என அவர்களை எதிர்த்து அழித்த ஸ்பானியர்களே வாய்விட்டுக் கூறும் செவ்விந்தியர்கள் தாயகத்தை இழந்ததால் உலக வரலாற்றில் ஓரங்களுக்குத் தள்ளப்பட்டு ஒதுக்கப்படுகின்றார்கள். இது வரலாறு தரும் பாடம். எனவே தாயகம் ஒரு தேசிய இனத்தின் உயிர் மூச்சாகும். நிலம் மனிதனின் வாழ்க்கைத் தோட்டம், இயக்கப் பின்னணி, மனிதனுடைய வாழ்வு அதை காலம் காட்டுகின்றது. வரலாற்றுக் கால வரை முறையும், நில இயல்பும் தேசிய இனத்திற்கு இரு கண்களுக்கு ஒப்பானவை என அறிஞர் ரிட்;சாட் ஹேக்கிலியூட் கூறுவதுவும், மனித வாழ்வு நிலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவனுடைய வாழ்வின் வளமும், வளர்ச்சியும், வரட்சியும், தளர்ச்சியும், நகைப்பும், ஏக்கமும், ஒளியும், இருளும், நிலயியல் கூறுகளின் பின்னணியைப் பொறுத்து அமைகின்றன. எனவே மனித வரலாற்றின் இயக்கம் நில இயல் என (History is eyeogr aph in motin) என்ற நூல் அறிஞர் ஹெடர் (Hador) கூறியது. மனிதனின் வாழ்வின் வளர்ச்சிக்கு நிலம் தாயகம் எத்தனை ஊந்து சக்தி என்பதை எடுத்துக்காட்டுகின்றது. குழந்தைக்குத் தாய் எப்படியோ அப்படிப்பட்டது மனிதனுக்குத் தாயகம். ஒரு தாயிடம் இருந்து குழந்தை தன் வளர்ச்சிக்கு வேண்டியதைப் பெறுவது போல தாயகம் மனித பரிணாம வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்தையும்- படைத்தளித்து வருகின்றது. இதை உணர்ந்த பட்டுக்கோட்டையார் ‘மனிதன் ஆரம்பமாவதுவும் பெண்ணுக் குள்ளே. அவன் ஆடி அடங்குவதுவும் மண்ணுக்குள்ளே" என்று பாடினார் எனவே மண்ணுக்கும், மனிதனுக்கும் உள்ள உறவு உயிருக்கும் உடலுக்குமுள்ள உறவு போன்றதாகும். ஒருகாலத்தில் சீனாவின் பெரிய அறிஞன் ஒருவன் உலகை சுற்றிப் பார்க்கத் தயாரானான். சீனாவின் சர்க்கரவர்த்தியை சந்தித்து விடைபெறச் சென்றான். அறிஞனை சந்தித்து விடயங்களைத் தெரிந்து கொண்ட சக்கரவர்த்தி அறிஞனின் உலக வலம் நலமே முடிய வாழ்த்தி அவருக்கு ஒரு முடிச்சை பரிசளித்து அனுப்பி வைத்தார். பரிசை பெற்றுக் கொண்ட அறிஞன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். பல நாட்களின் பின் ஒரு நாள் அறிஞருக்குச் சக்கரவர்த்தி அளித்த பரிசு ஞாபகம் வந்தது. எனவே அதைத் தேடி எடுத்து பிரித்தார். அங்கே, பொன்னோ, பொருளோ, பணமோ இருக்கவில்லை. பயணிகளுக்குப் பரிசளிப்பது யோவற்றை? ஆனால் மன்னருக்கெல்லாம் மன்னனான சீனிச் சக்கரவர்த்தி அறிஞருக்கு அளித்த பரிசு அவையல்ல. அவற்றுக்கு மேலான கிருஷ்ன பரமாத்மா மகாவலி மன்னனிடம் கேட்ட மூன்றடி மண்ணல்ல. ஒரே ஒரு பிடி மண் ஏன்? எதற்கு? பொதுவாக அறிஞர்கள் சென்ற இடமெல்லாம் கிடைக்கும் சிறப்பால் ‘யாதுமூரே யாவரும் கேளீர்’ என அமர்ந்து விடுவார்கள். அந்த நிலையையும் நினைப்பையும் மாற்றி தாயகத்தை நினைத்துத் திரும்ப வேண்டும் என்பதற்காகவே ஒரு பிடி மண்ணை பரிசாகக் கொடுத்து அனுப்பி வைத்தார் என்பதை புரிந்து கொண்ட அறிஞர் நாடு திரும்பினார். எனவே தாயகத்தின் அவசியம் தாயகத்தை நேசிப்பவர்களுக்கே புரியுமே ஒழிய அதை யாசித்தவர்களுக்;குத் தெரிய அவசியமில்லை. இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் நாகர், இயக்கர்தான் என்பதை பௌத்த சிங்கள பாளி வரலாற்று நூல்களான மகாவம்சம், சூளவம்சம், தீபவம்சம் என்பன மறுப்பின்றி ஏற்றிருக்கின்றன. இவர்கள் அன்று திராவிடர்கள், சிவநெறினர், தமிழின் ஆரம்ப மொழியான எலுவைப் பேசியவர்கள் நாகர்கள் வாழ்ந்து வளர்ந்த, ஆண்டு அணுபவித்த வடபகுதியில் இன்றைய மொழி தமிழ். அது போல இயக்கர்கள் வாழ்ந்து வளர்ந்த, ஆண்டனுபவித்த தென்கிழக்கிலங்;கையின் இன்றைய மொழி தமிழ். எனவே எலு மொழியின் பரிணாம வளர்ச்சியின் தோற்றம் தமிழ் மொழி. ஆகவே நாகர் இயக்கர் தமிழர்கள். இவர்கள் வடக்கையும் தென்கிழக்கையும் பரம்பரைத் தாயகமாகக் கொண்டவர்கள். விஜயன் பௌத்த கதை கட்டுக்கதை என்று பௌத்த சிங்கள புத்திஜீவிகள் ஒட்டு மொத்தமாகக் கூறிவிட்டதால். இனி அதில் இரண்டாம் பேச்சு மூச்சிக்கு இடமில்லை. பௌத்தம் இலங்கையில் காலூன்றிய காலம் நாகம ன்னன் தேவநம்பிய தீசன் கி.மு 244-207 காலமாகும். தேவநம்பிய தீசனின் தாய்தந்தையர்கள், சிவநெறியுடையவர்கள், நாகபரம்பரை. எவ்வாறு கௌதம புத்தர் ஒரு சிவநெறியாளனாக இருந்து பௌத்த மதத்தை தோற்றுவித்தாரோ, அவ்வாறே தேவநம்;பிய தீசனும் சிவநெறியாளனாகப் பிறந்து வளர்ந்து அரசனானாதும் பௌத்தத்தை ஆதரித்தானே ஒழிய அவன் பௌத்த சிங்களவனல்ல. பௌத்த தமிழன் அவனுடைய ஆட்சிக்குட்பட்ட குடிகள் சிவநெறியை மூலமாகக் கொண்ட நாகர்கள். அவர்கள் பௌத்தத்தை தழுவினார்களே ஒழிய சிங்களவர்களல்ல. சிங்களம் என்ற வார்த்தை உலகில் எப்பாகத்திலும் அன்றில்லை. இல்லாத மொழி அடிப்படையில் ஒரு இனத்தை பின் எழுதிய வரலாற்றாசிரியர்கள் பௌத்தர்களை சிங்களவர் எனக் குறித்தது மிக மிகத் தவறாகும். பிழையான வரலாற்றுப் பதிவாகும். ‘தமிழர்களின் பழமையின் திறவுகோல் மண்ணில் மறைந்திருக்கும் அகழ்வாராய்ச்சிச் சின்னங்களை வெளிக் கொணர்வதிலே உண்டு "என 1919ம் ஆண்டு மாசி மாதம் 20ம் நாள் வெளிவந்த டெயிலி நீயுஸ் பத்திரிகைக் கட்டுரையில் சேர் போல் பீரிஸ் எழுதியுள்ளார். இவர் எழுதுவதற்கு முன் 1917ம் ஆண்டு கதிரோடையில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை மையமாக வைத்தே இக்கட்டுரையை எழுதினார். எனவே ஈழத்தின் ஆதிவாசிகள் தமிழர்கள். ஆகவே ஈழம் சிங்களவரிலும் பார்க்க தமிழரின் தாயகம் என்பதை சிங்களத் தலைமைகள் வெறுக்கவும், மறுக்கவும், மறைக்கவும் முடியாது. தேவநம்பிய தீசன் கி.மு244-207 காலத்தில் நாகரும் இயக்கருமே வாழ்ந்தார்கள். சிங்களம் என்ற வார்த்தை உலகில் திருவிலுமில்லை, கருவிலுமில்லை. தேவநம்பியதீசனின் பிரஜைகள் நாகர்கள். அவர்கள் சிங்களவரல்ல. சிங்கள மொழியே 10ம் நூற்றாண்டின் பின்பே தமிழ் வட்ட எழுத்தையும், கிரந்த எழுத்தையும் கொண்டு சிங்கள எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது என அறிஞர் எவ்.டபிள்யூ குணவர்த்தன குறித்துள்ளார். 6ம் நூற்றாண்டில் சிங்களம் என்ற சொல்லில்லை. இதை மகாவம்சம் கூறவில்லை. 17ம் நூற்றாண்டில் கண்டியில் சிறை இருந்த றொபட் நொக்ஸ் எழுதிய (A Histor ical relation of the islandof ceylon) என்ற நூல் குறிப்பில் தான் தப்பியோடி வந்த போது அனுராதபுரத்தில் இருந்தவர்களால் சிங்களத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தான் ஒரு மொழி பெயர்ப்பாளரின் உதவியோடு பேச வேண்டி இருந்தது என்றும் அவர்கள் தமிழே பேசினார்கள் எனவும் குறித்துள்ளார். இலங்கையை ஆண்ட மன்னர்கள் தமிழ் மொழியையே ஆட்சி மொழியாகவும், அன்னிய தொடர்பு மொழியாகவும் வைத்திருந்தார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளுண்டு. எனவே சிங்களம், சிங்கள இனம் என்பவை காலத்தால் பிந்திய அடையாளங்களாகும். இக்காலத்திற்க்கு முந்தியவர்கள் பௌத்த தமிழர்களே ஒழிய பௌத்த சிங்களவர்களல்லர். இன்றைய ஜனாதிபதி பிறந்து வளர்ந்து வாழும் தங்கால தங்காலை என்ற தமிழ் பெயரின் திரிவாகும். ஏன் 17ம் நூற்றாண்டில் கண்டி மன்னனாக கீர்த்திஸ்ரீ இராஜசிங்கனுக்கும், பிரான்சு மன்னன் 16ம் லூகிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தமிழ் மொழியிலே எழுதப்பட்டுள்ளது. இதை பாண்டிச்சேரி நூதனசாலையில் இன்றும் பார்க்கலாம். 1815ம் ஆண்டு கண்டி பிரதானிகளுக்கும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்குமிடையே கைச்சாத்தான ஒப்பந்தத்தில் கண்டி சி;ங்களப் பிரதிநிதிகளே தமிழில் கையெழுத்திட்டுள்ளார்கள். தென்னிந்திய அரசுகளில் திராவிடர்கள் திராவிடர் செல்வாக்கு மிகுந்திருந்த காலம் முதல் இலங்கையின் வரலாற்றில் திராவிடர் செல்வாக்கு இருந்திருக்கிறது. இன்றுள்ள சிங்கள இனத்தின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த இனத்தவர்களுள் திராவிடரும் அடங்குவர். அவர்கள் இத்தீவுக்கு எப்போ வந்தார்கள் என்பது தெளிவாகவில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி மிகப் பழைய காலம் தொட்டே இவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவு Sri Lanka the holocakst and after என்ற நூலில் அதன் ஆசிரியர் எல்.பியதாச குறித்துள்ளார். கி.மு இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் தமிழர்கள் மிக செல்வாக்குப் பெற்று வாழ்ந்தார்கள் என அறிஞர் கிளாரன்ஸ் மலோனி சுட்டிக் காட்டுகிறார். கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் வடக்கில் தமிழர் ஆட்சி நிலை பெற்றிருந்தது. சிவனின் மகன் முருகனின் ஆட்சி கதிர்காம த்தில் இடம்பெற்றது. வடக்கு, தெற்கு, மேற்குவரைத் தமிழர் ஆண்டார்கள் என ரோம இராச்சியத்திற்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட வாணிபம் என்ற நூலில் 123ம் பக்கத்தில் அறிஞர் வார்மிண்டன் குறித்துள்ளார். கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழர் முக்கிய பங்கைப் பெற்றிருந்தனர் எனக் கலாநிதி எஸ்.ப ரணவிதான கூறியுள்ளார். அன்னியரான போர்த்துக்கீசர்கள் 1581 ஆண்டு கோட்டை அரசைக் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து வடகிழக்கு ஆட்சியையும் தம் வசமாக்கினார்கள். இருந்தும் வன்னிப் பிரதேசம் தனியரசாகவும், கண்டி தனித் தமிழரசாகவும் இருந்தன. கி.பி 1560ல் யாழ்ப்பாண ஆட்சி போர்த்திக்கீசர் வசமானது. 1591ல் போர்த்திக்கீசர் யாழ்ப்பாணத்தில் தங்கள் பிரதிநிதியாக எதிர் மன்னசிங்கம் என்பவனை நியமித்தார்கள். அதன் பின் சங்கிலிகுமாரன் ஆட்சிக்கு வந்தான். இவன் சிலகாலம் அவர்களோடு ஒத்துழைத்தான். பின் அவர்களை எதிர்த்தான். இக்காலத்தில் வன்னியிலிருந்த கொட்டியாற்றுப் பற்று, பழுகாமம், பாணமை, யால, மண்முனை என்ற பகுதிகள் சுதந்திரமாக இயங்கின. போர்த்துக்கீசர் காலத்தில் இலங்கையில் இருந்த தமிழரசு குறித்து டி.குரோசலஸ் என்பவர் வாந வநஅடிழசயட உழபெரநளவ ழக உநலடழn என்னும் நூலை எழுதினார். அதில் இந்த அமைதியான யாழ்ப்பாண பட்டினம் என்ற சிறுபகுதியை மட்டும் உள்ளடக்கியதல்ல, அதன் அண்மையிலுள்ள பகுதிகள் எல்லாம் அதனைச் சேர்த்தது. ஒரு உப்புநீர் நிலையால் பிரிக்கப்பட்டுள்ள வன்னிப் பகுதியும் அதனோடு சேர்ந்தது. வலிகாமம், தென்மராட்சி பச்சிலைப்பள்ளி, வடமராட்சி என்ற பகுதிகளையும் உள்ளடக்கி வன்னி வரை பரந்து குறுக்காக, மன்னார். திருகோணமலை என்பவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய நிலப்பரப்பாகும். போர்த்திக்கீசரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த டச்சிக்காரர்கள் இலங்கையின் வளங்களை கைப்பற்றுதலில் கவனமாக இருந்ததால் சுதேசிகளின் விருப்பங்களை அனுசரித்தே நடந்தார்கள். அவர்கள் சுதேசிகளின் தேசியத்தை மதித்து, தமிழரைத் தமிழ் மக்களின் மரபுக்கிணங்கவும் சிங்களவர்களை சிங்கள மரபுக்கிணங்கவும் ஆட்சி செய்தார்கள். டச்சுக்கார தேசாதிபதிகளான பின்வருவோர் கூறிய வரலாற்றுத் தரவுகளைப் பார்ப்போம். யாழ்ப்பாணத்தில் இருந்த டச்சுக் கொமாண்டரான பவிலோன் ஒருவர் அவர் 1665ல் எழுதிய குறிப்பில் 'வன்னி உட்பட கிழக்கில் திருகோணமலை முதல் மேற்கில் கற்பிட்டி வரையும், யாழ்பாணத்தை சுற்றியுள்ள தீவுகள் மன்னார்த் தீவு எல்லாவற்றையும் உள்ளடக்கிய அரசு யாழ்ப்பாண அரசு எனக் குறித்துள்ளார். வான்கோயன்ஸ்: (1675 இருந்த டச்சு தேசாதிபதி) யாழ்பாணம் மட்டக்களப்பு, பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழ். கிழக்கில் மட்டக்களப்பு மேற்கில் கற்பிட்டி, நீர் கொழும்பு, வடக்கில் கொட்டியாரம் உட்பட யாழ்ப்பாணப் பட்டினம் முழுவதும் தமிழ்ப் பகுதியாகும் எனக் குறித்துள்ளார். வான் இம்ஹோவ்: இவர் 1740ல் இலங்கையிலிருந்து டச்சுத் தோசாதிபதி. இவர் எழுதிய குறிப்பில் யாழ்ப்பாண பட்டினம் என்ற தமிழ் இராட்சியம் தனி அரசனின் கீழ் முதலிருந்தது. இந்த இராட்சியம் மற்றைய பகுதிகளை விட வேறுபட்ட அரசியல் சிவில் முறையில் நிருவாகிக்கப்பட்டது. அந்தோனிமூயாட்: இவர் 1766ல் யாழ்ப்பாணத்தில் டச்சுத் தேசாதிபதியாக இருந்தவர். இவர் னரவஉh ழக உநலடழn என்றும் எழுதிய புத்தகத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் எனப்படும் பிரதேசம் இலங்கைத் தீவின் மூன்றில் ஒரு பங்கு கொண்டது. அது கண்டி அரசிலிருந்து வேறுபட்டது மன்னார் முல்லைத்தீவு இதன் நீதி பரிபாலனத்துக்குள் அடங்கும.; டச்சுக்காரர்கள் கண்டியரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் தமிழ் பிரதேசம் உள்ளடக்கப்படவில்லை. வடக்குக் கிழக்குட்பட சிலாபம் ஆற்றுக்கும் குமுக்கன் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி தமிழ்ப் பகுதியாகும். கிறிஸ்ரபர் சுவைட்சர் இவர் ஒரு டச்சு எழுத்தாளர் டச்சுக்காரர் ஆட்சியின் போது இலங்கை வந்த உல்லாசப் பயணி இவர் தன் குறிப்பில் இலங்கையைப் பற்றியும் இலங்கையின் மற்றுமோர் இனத்தவர்களான தமிழர்கள் வடக்கு கிழக்கு உட்பட அளிப்பு கற்பிட்டி, நீர் கொழும்பு, உள்ளடக்கிய பகுதிகளில் வாழ்கின்றார்கள் எனக் குறித்துள்ளார். இலங்கையின் டச்சு ஆளுனராக இருந்த ரிக்கு லூப்பான் கோயன்ஸ் கி.பி1665ல் இருந்தவர் அவர் தன் மேலதிகாரிக்கு எழுதிய குறிப்பில் ‘மட்டக்களப்பில் வாழ்வோரின் மரவு, சமயம், மொழி, பழக்கவழக்கங்களால் மலைபார் தேசத்தைச் சேர்ந்தவர்களாகும். அதே போன்று யாழ்பாணப் பட்டினம், திருகோணமலை, மேற்கிலுள்ள கற்பிட்டி, கங்குன் கோறளை வடபகுதிவரை வாழ்பவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள். நீண்ட காலமாக இலங்கையை தமக்குள் பங்கிட்டு இரு பெரும் தேசிய இனங்கள் ஆண்டு வருகின்றார்கள். அவர்கள் தமிழரும், சிங்களவர்களுமாகும் சிங்களவர்கள் இலங்கையின் தெற்கு முதல் மேற்கேயுள்ள வளவை ஆறுவரை வாழ்கின்றார்கள் தமிழர் வடக்குக் கிழக்கு முதல் புத்தளம், சிலாபம் தொடக்கம் மன்னார் வரை கிழக்கில் குமுக்கன் ஆறுவ ரையும் வாழ்கின்றார்கள் எனக் குறித்துள்ளார். கி.பி1813ல் இலங்கையில் பிரித்தானிய ஆட்சியாளராக இருந்த சேர் பிறவுன்டிக் என்பவர் பிரித்தானிய குடியேற்ற நாட்டு மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் "இலங்கையில் சிங்கள மொழி எவ்வளவு அவசியமோ அது போல தமிழ் மொழியும் அவசியமாகவுள்ளது. வடக்கு, கிழக்கு, புத்தளம், கற்பிட்டி, மன்னார் வரை வாழ்வோர் மொழி தமிழாகவே இருக்கின்றது. ஆகவே நான் சிங்களத்துடன் தமிழ் மொழிக்கும் சம உரிமை வழங்குகின்றேன் என எழுதியுள்ளார். கி.பி1770ல் இலங்கையில் பிரித்தானிய ஆளுனரான ரெலென் என்பவர் தானே எழுதிய குறிப்பில் இலங்கையின் பெரும் பகுதி தமிழர் வாழ்விடமாகவே தெரிகின்றது. வன்னிப் பகுதி வன்னியர்களால் ஆளப்படுகின்றது. இது தங்கள் நாடு என அவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் சிங்கள ஆட்சிக்கு உட்பட்டவர்களல்ல. இலங்கையின் கரையோரங்களில் வாழ்வோர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசுகிறார்கள். மிகவும் ஆரம்பகாலம் முதல் தமிழினத்துவ சிறப்புடைய மக்கள் இங்கே வாழ்ந்து வந்ததற்குக் கிராமிய கல்வெட்டுகள் சான்று பகிர்கின்றன. அதற்குச் சமமான உறவுகள் யாதெனில் ஆதி வரலாற்றுக் காலத்திலும், பௌதீகப் பண்பாட்டும், பௌதீக பண்பாடு அல்லாத பண்பாட்டுத் தோற்றப்பாடுகளும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்பட்ட உறவுகளாகும் என பேராசிரியர் சேனக்க பண்டாரநாயக்க இலங்கை இன உருவாக்கலில் சிக்கலான பிரச்சினை என்ற தொடர் கட்டுரையில் கூறியுள்ளார். ஒரு இனம் பண்டு தொட்டு தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் பிரதேசம் அந்த இனத்தின் தாயகமாகும் அந்த இனத்திற்கும் அம்மக்களுக்குமுள்ள தாயக உறவை மறுக்கும் உரிமை, நிராகரிக்கும் பொறுப்பு யாருக்கும் கிடையாது. மகிந்த ராஜபக்ச அவர்கள் முழுக்க முழுக்க சிங்களவரின் அங்கீகாரம் பெற்ற ஜனாதிபதி. தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்றவர் அல்ல. அவர் எவ்வாறு தமிழ் மக்களின் நியாயமான தாயகத்தை மறுக்கவும் நிராகரிக்கவும் முடியும். தமிழ் மக்கள் தங்கள் இறமையை பிரித்தானியரிடம் இழந்தார்களே ஒழிய சிங்களவரிடம் இழக்கவில்லை. சிங்கவரால் 1972லும் 1978லும் கொண்டுவரப்பட்ட அரசியல் திட்டங்கள் தமிழரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல. எனவே தமிழர் தாயகம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழரின் பிறப்புரிமை. அதை நிராகரிக் கும் உரிமை வேறொறு இனத்தவர்களுக்குமில்லை. பூ.ம.செல்வராசா மட்டக்களப்ப ஈழநாதம்
 11. "எந்தக் குழந்தையும் நல்லகுழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே - அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பினிலே - அது அன்னை வளர்ப்பினிலே..." என்கிறது திரையிசைப் பாடல். உண்மை தான். ஆனாலும் தாய் மட்டும் இதற்குப் பாத்திரவாளியல்ல. தந்தையும் தான். நிச்சயமாக குழந்தையிலே எந்தக் கள்ளம் கபடமும் கெட்ட நடத்தையும் பிறக்கும் போது இருப்பதில்லை. அதனால் தான் 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்று கூறப்படுகிறது. குழந்தை பிறந்து வளர்ந்து பிள்ளைப் பருவத்துக்கு வரும் போது தான் ஒன்றில் நல்லதாகிறது, அன்றேல் கெட்டதாகிறது. மண்ணில் பிறக்கும் போது நல்லதாகப் பிறந்த குழந்தை நாளடைவிலே ஏன் தீயதாகிறது? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நல்லதாகப் பிறந்த குழந்தையை நல்லதாகவே வளர்த்து வீட்டுக்கும், நாட்டுக்கும், ஏன் முழு உலகுக்கும் சிறந்த நற்பிரஜையாக உருவாக்க வேண்டிய முக்கிய பொறுப்பு முழுப் பொறுப்பாக பெற்றோர்களின் தலைகளில் தான் சுமத்தப்பட்டிருக்கிறது. ஆகவே தான் தாய் மாத்திரம் அன்றி அக்குழந்தையின் தந்தையும் அதனது ஆளுமை வளர்ச்சிகளிலே அதிக அக்கறை காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கருவிலேயே குழந்தையின் கல்வி ஆரம்பிக்கப்படுகின்றது. அக்கல்வியை நற்கல்வியாகப் புகட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களில்த் தான் தங்கி இருக்கிறது. ஆக, கருவிலே இடம் பெறும் இக்கல்விக்குக் குருவாகத் தாயும், தந்தையும் தான் தலைமை வகிக்கின்றார்கள். இந்த இரு குருமாரின் வழி நடத்தல்களும் வழி தவறிப்போனால் "கருக்கல்வி" பாழாகி விடும். கருக்கல்வி பாழாகிப் போனால் பிள்ளையின் காலம் முழுதுமான வாழ்வும் பாழாகிப் போகும். இது அத்தலைமுறையையே தாக்கும். எனவே தான் ஒரு குழந்தை கருவாகும் போது தாயும் தந்தையும் குருவாக உருவாக வேண்டும். எத்தனை தாய் தந்தையர்கள் இப்படி உருவாகிறார்கள் என்பது தான் கேள்விக் குறியாக இருக்கிறது. அக்கேள்விக்குறி தான் பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது. கருவுற்ற நாளிலிருந்து கற்பவதியான தாய் மெல்லிய, துல்லிய - இனிமையான இன்னிசைப் பாடல்களை கேட்டு ரசிக்க வேண்டும். கருத்தாளம் மிக்க சின்னச் சின்னப் பாடல்களைப் பாடி மகிழ வேண்டும். சிறந்த நல்ல குட்டிக் கதைகளை வாசிக்க வேண்டும். நல்ல நல்ல சிந்தனைகளை சீரிய நல்லெண்ணங்களை தம்மிடையே வளர்த்துக் கொள்ள வேண்டும். இதே போன்று அக்குழந்தையின் தந்தையானவர் காலை, மாலை முதலான இதமான வேளைகளில் மனைவி அருகாக நெருங்கி இருந்து இன்னிசைப் பாடல்களைப் பாட வேண்டும். நல்ல பல கதைகளை மனைவிக்குக் கூறுவதாகக் கூற வேண்டும். அறிவுச் சிந்தனைகளை நல்லெண்ணங்களை மனைவியோடு பரிமாற வேண்டும். இப்படி செயற்படும் போது கருவிலே இவை பதியும். இவை சிறந்த கல்வியாக பிள்ளைக்கு உருவாகும், உதவும். பிள்ளை கருவுற்று இருக்கும் போது பெற்றோர் மிகவும் நிதானமாகவும், புத்தி சாதூரியத்துடனும், சண்டை சச்சரவுகள் எதுவும் அற்ற வகையிலும் நடந்து கொள்ள வேண்டும். அன்பும், அகிம்சையும், ஐக்கியப்பாடும், நல்லெண்ணங்களும், நன்னடத்தைப் போக்குகளுமே குடும்பத்தில் நிலைத்திருக்க வேண்டும். இப்படியாக குறிப்பிட்ட தாயும், தந்தையும் செயற்படுவார்களாக இருந்தால் இருவருமே சிறந்த குருமாராக விளங்குவார்கள். அதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தை அறிவொளி பெற்றுத் துலங்கும். சுருங்கச் சொல்லப் போனால் கருவறை காத்திரமான படிப்பறையாக இருந்து குழந்தையை வளர்த்தெடுக்கும். இவை அனைத்தும் குழந்தை கருவாக இருக்கும் போது பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடப்பாடுகளாகும். இதனுடன் நின்று விட்டால் போதுமா? நிட்சயமாக இல்லை. குழந்தை பிறந்த பின்பு தான் பெற்றோர் கூடிய கட்டுப் பாட்டுக்கும், பொறுப்புக்கும் உள்ளாக வேண்டியவர்களாக இருக்கிறார்கள். குழந்தை தவழும் வரை கருவில் இருக்கும் போது மேற்கொண்ட கற்பித்தல் நெறி முறைச் செயற்பாடுகளை இருவரும் மேற்கொள்ளலாம். பின்பு அது தத்தி தத்தி நடக்க முற்படும் போது, மழலை மொழி பேசத் தொடங்கும் போது இலகுவான மொழிப் பாவனைகளை பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டும். மழலையோடு மழலையாக மழலை மொழி பேச வேண்டும். ஆடிப்பாடி அக்குழந்தையை மகிழ்விக்க வேண்டும். பல் திறப்பட்ட நற் சிந்தனைகளை குழந்தையின் நெஞ்சிலே விதைக்க வேண்டும். குழந்தை படிப்படியாக பேசக் கற்றுக் கொள்ளும் போது பெற்றோரும், மற்றோரும் உற்றார் உறவினரும் குழந்தைக்கு முன்பாக வேண்டத் தகாத வார்த்தைகளையும், கெட்ட கதை பேச்சுக்களையும் கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றையே பிள்ளை மனதிலே அழியாது பதித்துக் கொள்ளும். அது பின்பு 'தொட்டிற்பழக்கம் சுடுகாடு வரை' என்பது போல அப்பிள்ளையின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும். எனவே இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களையும், தான்தோன்றித் தனங்களையும் தவிர்த்து நல்ல கதை பேச்சுக்களையும், நன்னடத்தை நெறிமுறைகளையும் கடைப்படிக்க முடியும். இதன் மூலம் தான் அக்குழந்தை சிறந்த குழந்தையாக வளப்படவும், வளரவும், வாழவும் முடியும். மண் விளையாட்டிலே நாட்டம் கொள்ளும் பருவம் வந்ததும் அனேகமான பெற்றோர்கள் அப்பிள்ளையை திட்டித் தீர்ப்பதும், அடிப்பதுமாகத் தான் இருப்பார்கள். இது தவறாகும், தண்டனைக்குரிய குற்றமுமாகும். மண் விளையாட்டிலும் எவ்வளவோ கற்க வேண்டிய விடயங்கள் அடங்கி இருக்கின்றன. அவற்றைப் பிள்ளை கற்றுக் கொள்ளும். இதனாலே தான் 'வளரும் பயிரை முளையிலே தெரியும்'. வாழும் பிள்ளையை மண் விளையாட்டிலே தெரியும்' என்பார்கள். ஏன் சும்மாவா? இல்லை. பிள்ளை மணலாலே பாதை அமைக்கும். பாலம் உருவாக்கும். வீடு கட்டும், பூக்கள் அமைக்கும், இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் செய்யும். இவற்றிலெல்லாம் பிள்ளையின் புத்திக் கூர்மை தெரியும். கலைநயம் காட்சியளிக்கும். இலட்சியம் கூடத் தென்படும். ஆகவே மனமார பிள்ளைகளை விளையாட விடவேண்டும். அக்கம் பக்கம் பிள்ளை விளையாடச் செல்கிறது என்றால் அதற்கும் விட வேண்டும். அதன் மூலம் பிள்ளை பலவித புதுமுகங்களை, புதிய நண்பர்களைக் கண்டு கொள்ளும். சமூக மயப்படுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்ளும். ஆனால் இந்த இடத்திலே பெற்றோர் மிகவும் கண்ணும், கருத்துமாக இருக்கவும் வேண்டும். பிள்ளை விளையாடச் செல்கின்ற இடம் சூழல் பொருத்தமற்றதாயின் அங்கே செல்வதை புத்திசாலித்தனமாக தவிர்க்கச் செய்ய வேண்டும். நல்ல இடத்தில், நல்ல சூழலில் நல்ல பிள்ளைகளுடன் சேர்வதற்கே சந்தர்ப்பம் அதிகம் கொடுக்க வேண்டும். பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் பராயம் வந்ததும் பெற்றோர் தமது கவனத்தையும், கடப்பாட்டையும் மேலும் கூட்டிக் கொள்ள வேண்டும். பிள்ளை ஒழுங்காக பாடசாலை செல்கிறதா? படிக்கிறதா? எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேர்கிறது? என்பது போன்ற விடயங்களில் அவதானம் அதிகமாக இருந்து பிள்ளைகளை வழி நடத்துவது இன்றியமையாததாகும். "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி" என்பதற்கேற்ப பிள்ளையின் வளர்ச்சி இரண்டு விதமாகவும் இருக்க வேண்டும். ஆளோடு சேர்ந்து அறிவும் வளர வேண்டும். அறிவு வளரும் போதுதான் ஆளுமை வளரும். எனவே இந்த விடயத்திலும் பெற்றோர் முக்கிய கவனம் எடுக்க வேண்டும். பிள்ளையை ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். ஒழுக்க நெறிமுறைகளை கடவுள் சிந்தனைகளை, அன்பை, பண்பை, மனித நேயத்தை, இரக்க சிந்தனைகளை கடைப்பிடிக்கப் பழக்க வேண்டும். நல்லவர்களாக, வல்லவர்களாக, வீட்டுக்கும், நாட்டுக்கும், வெளி உலகுக்கும் உகந்தவர்களாக நானிலத்திலே நற்பிரஜையாக தமது பிள்ளைகளை உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோருக்குமான உரிய கட்டுப்பாடுகளாகும். பிள்ளையின் அறிவும், ஆளுமைச் செயற்பாடுகளும் சிறப்புற அமைந்து செழுமையும், மகிமையும் பெறுவதற்குப் பெற்றோர்கள் முழுமை பெற்றவர்களாக, நாலும் அறிந்தவர்களாக, நற்பெற்றோராக இருக்க வேண்டும். பானையிலே முழுமையாக இருந்தால் தானே அகப்பையிலும் முழுமையாக வரும். ஆகவே முழுமை பெற்றவர்களாக பெற்றோர்கள் மாற வேண்டும். அந்த மாற்றமே ஆளுமை படைத்த அதிசிறந்த சந்ததியை உலகினுக்கு உருவாக்கிக் கொடுக்கும். கன்னிமுத்து வெல்லபதியான் மட்டக்களப்பு ஈழநாதம்
 12. தூயவன், ஏன் நகைச்சுவைப் பகுதியில் இட்டேன் என்பதற்கு இங்கே பல உதாரணங்களை காட்ட முடியும். மேலோட்டமாக கண்ணில்பட்ட சிலவற்றை தருகின்றேன் மணமகள் தேவை யாழ்.இந்து கௌரவ குடும்பம், 34 வயது, பரணி, உயரம் 5'9'' நியூசிலாந்தில் கொம்பியூட்டர் B.SC முடித்து, ஆஸ்திரேலியா செல்லும் மணமகனுக்கு அழகிய, படித்த, மெல்லிய, வெள்ளை நிறமுடைய மணமகள் தேவை. முழு விவரத்துடனும் தொடர்பு கொள்ளவும் (மணமகன் ஒரு வாரத்தில் யாழ்.வரவுள்ளார்) விளம்பர இல. 2824 மே/பா உதயன். (47740) இதில் பாருங்கள். அழகிய, படித்த, மெல்லிய, வெள்ளை நிறமுடைய மணமகள் தேவை இப்படி அனைத்தும் ஒருவரிடம் சேர்ந்து வருவது அபூர்வம். என்ன அச்சில போட்டு எடுக்கச் சொல்கின்றார்களா? ஏன் இங்கு மாப்பிள்ளையின் அழகைப்பற்றி குறிப்பிடவில்லை. அடுத்தது எதாவது ஒன்று குறையக் குறைய சீதனத் தொகையைக் கூட்டுவார்கள். அதென்ன அழகிய, படித்த, மெல்லிய, வெள்ளை நிறமுடைய என்று பெண்ணிடம் மட்டும் எதிர்பார்ப்பது. அடுத்தது மணமகள் தேவை யாழ்.இந்து கௌரவ குடும்பம் 1969, புனர்பூசம், பாவம் 14½ புள்ளி, 5'10'' உயர முடைய பட்டம் பெற்று அரச உயரதிகாரி யாக கடமையாற்றும் மணமகனுக்கு அரச உத்தியோகம் பார்க்கும் பெண் கொழும்பு வீட்டுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்பு: விளம்பர இல.2761, மே/பா உதயன், யாழ்ப்பாணம். இதைப்பாருங்கள். அரச உத்தியோகம் பார்க்கும் பெண்ணை கொழும்பு வீட்டுடன் எதிர்பார்க்கின்றார்கள். இவரைப்போலத்தான் அந்தப்பெண்ணிற்கும் அவர்கள் பெற்றோர் செலவு செய்து படிப்பித்து நல்லதொரு நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள். இவரைப்போலத்தான் அந்தப்பெண்ணும் கைநிறையச் சம்பாதிப்பார். கொழும்பில் ஒரு வீடு என்ன விலை என்று தெரியும் என்று நினைக்கின்றேன். இப்படி பகல்கொள்ளையடிக்கின்றார்கள
 13. இது யாரையும் புண்படுத்துவதற்காக இங்கு இடவில்லை. . தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தொரு வரன் அமைய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் இங்கே கேட்கப்பட்ட விடயங்களை மனவேதனையுடன் நோக்குவதால் அப்படியே தருகின்றேன். மீண்டும் யாருடைய மனதையும் புண்படுத்துவதாக இருந்தால் மன்னிக்கும் படி கேட்டுக்கொண்டு..... மணமக்கள் தேவை யாழ்.இந்து கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த29 வயதுடைய, மலேசியாவில் Computer Scienceபடித்து தற்போது லண்ட னில் Student Visa வில் இருக்கும் மணமக னுக்கு லண்டன் P.R உடைய மணமகளும் பரதநாட்டியம், A.A.T Computer Diploma படித்து கொழும்பில் தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் அழகிய மெல்லிய 5'4'' உயரமுள்ள 25 வயது மணமகளுக்கு லண்டன் P.R உடைய மணமகனும் தேவை. தொடர்பு : 0713055865 (48609) மணமகள் தேவை யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1972இல் பிறந்த, விசாக நட்சத்திர முதலாம் பாதம் துலா ராசி 7இல் செவ்வாயுள்ள குறைந்த கிரகபாவ முடைய அரிசி ஆலை உரிமையாளரான மண மகனிற்கு பொருத்தமான அழகிய மணமகள் தேவை. தொடர்பு: விள.இல.2838, மே/பா, உதயன், யாழ்ப்பாணம். (48537) மணமகள் தேவை யாழ். இந்து, 1977, திருவாதிரை நட்சத் திரம், சிங்கப்பூரில் எஞ்சினியராகத் தொழில் புரியும் யாழ். வரவுள்ள மணமகனுக்குப் பொருத்தமான, பண்பான மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டு மணமகளும் விரும்பத்தக்கது. தொடர்பு: E&mail: jaffna06@yahoo.com T.P.: 006591482491, 0776176476 மணமகள் தேவை யாழ். இந்து, 1977, திருவாதிரை நட்சத் திரம், சிங்கப்பூரில் எஞ்சினியராகத் தொழில் புரியும் யாழ். வரவுள்ள மணமகனுக்குப் பொருத்தமான, பண்பான மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டு மணமகளும் விரும்பத்தக்கது. தொடர்பு: jaffna06@yahoo.com T.P.: 006591482491, 07761764 மணமகள் தேவை கனடா குடியுரிமையுடைய யாழ்.இந்து கௌரவ குடும்பம் 1973, 5' 3'' உயரம், பூரட் டாதி Computer Cum ( Net Work Engineer)மணமகனுக்கு டாக்டர், எஞ்சினி யர், எக்கவுண்டன் or விஞ்ஞானப் பட்டதாரி பண்புள்ள அழகிய மணமகள் தேவை. தொடர்பு : 021 222 2168, 077 6341541. (47988) மணமகள் தேவை யாழ். இந்து, 1977, திருவாதிரை நட்சத் திரம்,சிங்கப்பூரில் எஞ்சினியராகத் தொழில் புரியும் யாழ். வரவுள்ள மணமகனுக்குப் பொருத்தமான, பண்பான மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டு மணமகளும் விரும்பத்தக்கது. தொடர்பு: Email: jaffna06@yahoo.com T.P.: 0065 91482491, 0776176476 (48209) மணமகள் தேவை பிரித்தானியாவில் Studian visa வில் வசிக்கும் யாழ். இந்து கௌரவ குடும்பம், 1973, மூலம், தனுசு ராசி, 16லு கிரக பாவம், உயரம் 5'4'', Engnieer (civil) பொறி யியலாளராகப் பணிபுரியும் மணமகனுக்கு A/L இற்கு மேல் படித்த வெளிநாட்டில் குடி யுரிமை உடைய மணப்பெண் தேவை. தொடர்பு: Shivaalaya International marrage Bureau, No. 11, Jamuna Street, Nallur, Jaffna, Sri Lanka T.P.: 0776528641 (48216) மணமகன் தேவை நோர்வே நாட்டில் குடியுரிமையுடைய யாழ்.இந்து கௌரவ குடும்பம், மூலம், தனுசு ராசி, 7இல் செவ்வாய், சூரியன், 47லி கிரக பாவம், 5'4'' உயரம், சிவப்பு நிறம், A/L படித்த, Bio Science Computer Engineer (net work)- Norway Ministry of Financeுஇல் பணிபுரியும் மணமகளுக்கும் பட்டதாரி, வெளிநாடு, உள்நாடு மணமகன் தேவை. தொடர்பு: Shivaalaya International marrage Bureau No.11, Jamuna Street, nallur - Jaffna, Sri Lanka. T.P.: 0776528641 (48188) மணமகன் தேவை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 36 வயதுடைய தாரம் இழந்த கத்தோலிக்க மணமகளிற்கு அவரது பெற்றோர்கள் தகுந்த மணமகனைத் தேடுகின்றார்கள். (குழந்தை இல்லை) தொடர்புகளுக்கு: T.P. 0779527517 மணமகள் தேவை கனடா குடியுரிமையுடைய, யாழ்.இந்து கௌவர குடும்பம் 1973 இல் பிறந்த, 5'3'' உயரம், பூரட்டாதி Computer Cum (Net work Engineer) மணமகனுக்கு டாக்டர், எஞ்சினியர், எக்கவுண்டன் or விஞ்ஞானப் பட்டதாரி பண்புள்ள அழகிய மணமகள் தேவை. தொடர்பு: 021 222 2168, 0776341541 மணமகள் தேவை கனடா குடியுரிமையுடைய யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1973 இல்பிறந்த, 5' 3'' உயரம், பூரட்டாதி, இணிட்ணீதtஞுணூ இதட் (Computer Cum (Network Engineer)) மணமகனுக்கு டாக்டர், எஞ்சினியர், எக்கவுண்டன் ணிணூ விஞ்ஞானப் பட்டதாரி பண்புள்ள அழகிய மணமகள் தேவை. தொடர்பு: 021 222 2168, 077 6341541. (47988) மணமகள் தேவை யாழ்.இந்து கௌரவ குடும்பம், 34 வயது, பரணி, உயரம் 5'9'' நியூசிலாந்தில் கொம்பியூட்டர் B.SC முடித்து, ஆஸ்திரேலியா செல்லும் மணமகனுக்கு அழகிய, படித்த, மெல்லிய, வெள்ளை நிறமுடைய மணமகள் தேவை. முழு விவரத்துடனும் தொடர்பு கொள்ளவும் (மணமகன் ஒரு வாரத்தில் யாழ்.வரவுள்ளார்) விளம்பர இல. 2824 மே/பா உதயன். (47740) மணமகள் தேவை யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1974ஆம் ஆண்டு, விசாக நட்சத்திரம், 3ஆம் கால் 7இல் செவ்வாய் தோசமுடைய MBBS டாக்டராக தொழில் செய்யும் மணமகனிற்கு படித்த பண்புள்ள மணமகள் தேவை. குடும்ப விவரம் சாதகக் குறிப்புடன் தொடர்பு கொள்ளவும். தொடர்பிற்கு: விளம்பர இல. 2821, மே/பா உதயன், யாழ்ப்பாணம். (47564) மணமகள் தேவை U.K யில் வசிக்கும் யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1978 சுவாதி, துலாம்ராசி, 4இல் செவ்வாய் சூரியனும் 5'6'' 17 கிரகபாவம், GCE A/L Business் மணமகனுக்கும் பிரான் ஸில் வசிக்கும் 1977, அத்தம், கன்னிராசி, 12இல் சூரியன் செவ்வாய் 22 கிரகபாவம், 5'7'' உயரம், A/L படித்த, கம்பனியில் பணி புரியும் மணமகனுக்கும் வெளிநாடுகளில் குடியுரிமையுடைய மணமகள்கள் தேவை. தொடர்பு: சிவாலயா, Nணி.11, யமுனாவீதி, நல்லூர். கூ.க. 0776528641. (47564) மணமகள் தேவை யாழ்.இந்து கௌரவ குடும்பம், உயரம் 5'4'', சிவில் பொறியியலாளர், 1976ஆம் ஆண்டு பிறந்த, உத்தரம், கன்னி லக்கினம் செவ்வாய் தோஷமற்ற பாவம் 33, தீய பழக்கங்கள் எதுவுமற்ற மணமகனிற்கு படித்த, அழகுள்ள சிவந்த மணமகள் தேவை. ஜாதகம், படம் சுயவிவரத்துடன் தொடர்பு கொள்ளவும். பொருத்தமற்றவை திருப்பி அனுப்பி வைக்கப்படும். தொடர்பு: விளம்பர இல.2816 மே/பா உதயன், யாழ்ப்பாணம். மணமகள் தேவை யாழ்.இந்து கௌரவ குடும்ப 1972ஆம் ஆண்டு அனுஷம் பாவம் 19, A/L, NDBS படித்து சொந்தத்தில் வியாபாரம் செய்யும் மாதவருமானம் 40, 000/= இற்கு மேல் பெறும் சொத்துக்கள் நிறைந்த அழகான மணமகனிற்கு படித்த அழகான மணமகளைப் பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். தொடர்பிற்கு: விளம்பர இல. 2815, மே/பா உதயன், யாழ்ப்பாணம். (47203) மணமகள் தேவை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இந்து உயர்குல பெற்றோர் 32 வயது 5’7’’ உயரமுள்ள பிரிட்டிஸ் பிரஜா உரிமையுடைய தமது மகனுக்கு (விஞ்ஞான ஆராய்ச்சித்துறை Bsc Phd) பாரம்பரிய பண்பாடுகளைக் கடைப்பிடிக்கும், உத்தியோகம் பார்க்கும் (டாக்டர்,பல்வைத்தியர்,CIMA தேர்ச்சி பெற்ற)பெண்ணை மணமகளாக்கி கொள்ள விரும்புகின்றனர். தொடர்பு: suthan1980@hotmail.com், 00447931526465. மணமகள் தேவை கிரகபாவம், ஐம்பது, ஏழில் செவ்வாயுள்ள 1968 Bank AGM இற்கும் 1970 Doctor இற் கும் அழகான, விரிவுரையாளர், பொறியிய லாளர், Doctor தரத்து மணப்பெண்களும் 1966, செவ்வாயற்ற, கிரகபாவம் 40, சொந்தக்கடை உரிமையாளருக்கும் தொழில் உள்ள மணப்பெண்தேவை. தொடர்பு: 0776140273 அல்லது விளம்பர இல. 2814 மே/பா, உதயன், யாழ்ப்பாணம். (47161) மணமகன் தேவை யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1972 ஆயிலியம் கடகராசி, 5'2'' உயரம், கிரகபா வம் 51 லு, M.B.B.S. டாக்டர் மணமகளுக்கு டாக்டர், எஞ்சினியர், எக்கவுண்டன், பட்ட தாரி மணமகன் தேவை. கிறிஸ்தவர்கள், வெளிநாட்டில் தகுதியானவர்கள், விவாகரத்து ஆனவர்கள் விரும்பத்தக்கது. சிவாலயா 11, யமுனா வீதி, நல்லூர், யாழ். தொ.பே. 0776528641, E.mali - SK.Shivagaran @ yahoo. com. மணமகள் தேவை இந்து கோகுலம், 33 வயது வயது, குற்ற மற்ற, உத்தராடம் 2ஆம் பாதமுடைய, கன டாவில் பணிபுரியும் இலங்கை M.Sc.. பொறியியலாளருக்கு 30 வயதிற்குட்பட்ட, நற்குணமுள்ள, நன்கு படித்த, அழகான மணமகளைப் பெற்றோர் தேடுகின்றனர். தொடர்பு: விளம்பர இல. 2807, மே/பா. உதயன், யாழ்ப்பாணம். மணமகன் தேவை யாழ். இந்து கௌரவ குடும்பம், 1981, உத்தராடம், 4ஆம் பாதம், 29¼ பாவம், 5'2'' உயரம் உடைய A/L Science External Pharmacist, B.A. படித்துக்கொண்டிருக் கும் அழகிய, சிவந்த, நற்குணமுள்ள மண களுக்கு வெளிநாட்டில் PR உடைய, டாக் டர், எஞ்சினியர் அல்லது உயர் கல்வி படித்த மணமகன் தேவை. T.P.: 021 2263054, 0776610829, E-mail Ponalvaippillai @ yahoo.com.அமுதசுரபி, நெல்லியடி கிழக்கு, கரவெட்டி. மணமக்கள் தேவை ஆஸ்திரேலியாவில் பிரஜாவுரிமையுடைய 40 வயது எஞ்சினியருக்கு மணமகளும், 35 வயதுடைய M.B.A. . பட்டதாரியும் கெமிக்கல் எஞ்சினியருமான மணமகளுக்கு மணமகனும் தேவை. விவரங்களுடன் தனித் தனி சாதகக்குறிப்பு அனுப்பவும். தகுதியுடைய, பொருத்தமானவர்கள் மட்டும் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளவும். தொடர்பிற்கு: ஸ்ரீலஸ்ரீ சு.சிவஷண்முகானந்தக்குருக்கள
 14. ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன்படிக்கையினை அமுலாக்கம் செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் அமுல்படுத்தவில்லை. கடந்த ஒரு மாதகாலமாக பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களை அமுல்படுத்தாது இழுத்தடித்து வரும் அரசு அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்ளாத ஒரு சூழலை உருவாக்குவதில் தற்போது அதிதீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஏனெனில் கடந்த பெப்ரவரி 22ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் போது விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்பட்ட பிரதான விடயம் ஒட்டுக் குழுக்களின் விவகாரம். போர் நிறுத்த உடன்படிக்கையின் 1.8 விதிக்கு அமைய வடக்குக் கிழக்கில் படையினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வடக்குக் கிழக்கிற்கு வெளியே அகற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். இதில் குறிப்பாகக் கருணாகுழு, முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத்குழு தொடர்பாகவும் சுட்டிக் காட்டியிருந்தனர். ஆனால் இதுவரை ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக படை ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கொலை, ஆட்கடத்தல், கப்பம் போன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன. அவை மாத்திரமின்றி விடுதலைப்புலிகளை வலிந்து போருக்கு இழுக்கும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் ஜெனீவாப் போச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் கலந்து கொள்ளாத வகையில் வன்முறைகளை மேற்கொள்வதே சிங்களப்படைத் தரப்பினரது பிரதான நோக்கமாகும். இரண்டாம் சுற்று பேச்சுக்கள் ஜெனீவாவில் நடைபெறுமாகவிருந்தால் இணக்கப்பாடு காணப்பட்ட விடயங்கள் எதனையும் அமுல்படுத்தாதுள்ள சிங்கள அரசு இக்கட்டில் மாட்டநேரிடும். அதற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் மீது தாக்குதலை நடத்துவதன் மூலம் இவ்வாறான ஒரு சூழலை உருவாக்கலாம் என அரச தரப்பு கருதுகிறது. அண்மையில் திருமலையில் இடம்பெற்ற சம்பவங்கள் இதன் வெளிப்பாடுதான். திருமலை மூதூர் கிழக்குக் கரையோரக் கிராமங்கள் மீது இரு நாட்கள் சிறிலங்கா கடற்படையினர் பீரங்கித் தாக்குதலை நடத்தினர். இச் சம்பவத்தில் பொதுமக்கள் காயப்பட்டு வீடுகள் சேதமடைந்த போதிலும் விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. போர் நிறுத்தத்தை கடைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக விடுதலைப்புலிகள் பதில்த் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. தப்பித்தவறி விடுதலைப்புலிகள் படையினருக்கு எதிரான பதில் நடவடிக்கையிலீடுபட்டிருந்தா
 15. திரு. சொல்ஹெய்ம் வந்தும் கிழக்கில் தடுத்து நிறுத்தமுடியாமல் போன அரை மென்தீவிர யுத்தம் வடக்கில் வவுனியாவிற்கும் பரவத்தொடங்கிவிட்டது. துணைப் படைகளுக்கு எதிரான பரவலான ஒரு சர்வதேச அபிப்பிராயம் நிலவும்போதும் துணைப்படைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயின் நிலை மைகள் இணைத்தலைமை நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா? இந்நிலையில் அடுத்தசுற்று ஜெனீவாச் சந்திப்பு சாத்தியமா? சாத்தியம் என்றே தோன்றுகின்றது. ஒரு மென்தீவிர யுத்தத்துடன் சேர்ந்துவாழும் ஒரு யுத்தநிறுத்தம் சாத்தியம் என்றால் ஒரு மென்தீவிர யுத்தத்தையும் பேச்சுவார்த்தை களையும் சமாந்தரமாக எடுத்துச் செல்வதும் சாத்தியமே.அப்படியொரு அபத்தமான வளர்ச்சியை நோக்கியே நாடு போய்க் கொண்டிருக்கிறது. இதற்கான அதிகபட்ச பொறுப்பை மேற்கு நாடுகளே ஏற்றுக்கொள்ளவேண்டி யிருக்கும். மேற்குநாடுகளின் பிடியில் உள்ள வழுவழுத்த தன்மை காரணமாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக நழுவி நழுவிச் செல்லக்கூடியதாய் இருக்கிறது. இணைத் தலைமை நாடுகளின் நிகழ்ச்சி நிரலில்; உள்ள இறுதித் தீர்வு அல்லது இடைக் காலத் தீர்வு எனப்படுவது தனது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வைவிட பெரி யது என்பது மகிந்தவுக்கு அச்சுறுத்தலாய் இருக்கிறது. ஆனால் இன்னொரு புறம் மேற்கு நாடுகளின் அணுகு முறையில் உள்ள இரட்டைத்தன்மைக் குள் அவரும் அவரையொத்த எல்லா சிங்களத்தலைவர்களும் சுழிக்கவும் உச்சவும் முடிகிறது. இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரை இணைத்தலைமை நாடுகளிடம் தொடக்கத்திலிருந்தே ஒருவித இரட்டை அணுகுமுறைதான் காணப்பட்டு வருகிறது. இணைத்தலைமை நாடுகளில் முதன்மையானதும் உலகப்பெரு வல்லரசு மாகிய அமெரிக்காவில் எல்.ரி.ரி.ஈ தடை செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமெரிக்கா எல்.ரி.ரி.ஈயைப் பொறுத்தவரை ஒரு கண்டிப்பான நெகிழ்ச்சியற்ற மூத்த அண்ணனைப் போன்ற தோரணையுடனான ஒரு அணுகுமுறையைப் பேணி வருகிறது. ஆனால் அதேசமயம் இணைத்தலைமை நாடுகளில் காணப்படும் ஏனைய நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் இது விசயத்தில் கண்டிப்புக் குறைந்த ஒரு சின்ன அண்ணனைப்போல நடந்துகொள்கிறது. அமெரிக்காவும் சரி இணைத்தலைமை நாடுகளும் சரி யுத்தநிறுத்த மீறல்களைக் கண்டிக்கும்போதெல்லாம் நன்கு தெரிந் தெடுத்த வார்த்தைகளையே பிரயோகித்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிவந்த அறிக்கைகள், பேட்டிகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்த்தால் இது தெரியவரும். புலிகளைக் கண்டிக்கும்போது மிகவும் கூரான, காட்டமான வார்த்தைகளைப் பாவிக்கும் அமெரிக்கா அரசாங்கத்தைக் கண்டிக்கும்போது ஒப்பீட்டளவில் மென்மை யான, பூடகமான வார்த்தைகளையே பயன்படுத்தி வருகிறது. ஒரு மரபு ரீதியான அரசாங்கத்தை அணுகு வதற்கும் ஒரு விடுதலை இயக்கத்தை அணுகுவதற்கும் இடையில் அவர்கள் ஏதோ ஒரு வித்தியாசத்தைப் பேணவே முயல் கிறார்கள். இந்த வித்தியாசம் எப்பொழுதும் சிங்களக் கடும்போக்காளர்களை உற்சாகப் படுத்துவதாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு எல்.ரி.ரி.ஈ உத்தியோகபூர்வமாக பயணம் செய்வதற்கு அங்கு வரவேற்பில்லை என் றொரு நிலை சிங்களக் கடும்போக்காளர் களை அதிகம் ஊக்குவிப்பதாகக் காணப்படுகின்றது. ஜெனீவாச் சந்திப் புக்கு முன் இலங் கைக்கான அமெ ரிக்கத் தூதுவரும் அமெரிக்க இணை இராஜாங்க செயலர் நிக்கலஸ் பேண்ஸ{ம் கொடுத்த ஊக்கமாத்திரைகளின் வீரியம் இன்னமும் தீராதிருக்கிறது. நிக்கலஸ் பேண்ஸ் கொழும்பில் வைத்துக் கருத்துத்தெரிவித்தபோது எல்.ரி.ரி.ஈ யும், அல்ஹைதாவும் ஒன்றல்ல என்ற தொனிப்பட பூடகமாகச் சொல்லியிருந்தார். ஆனால் எல்.ரி.ரி.ஈ யைக் கண்டிக்கும்போது கூரான நேரடியான வார்த்தைகளைப் பாவித் திருந்தார். அந்த கூரான வார்த்தைகள் தந்த பரவசத்தில் இன்னமும் மிதந்து கொண்டிருக்கும் மகிந்தவின் அரசாங்கமும் கொழும்பில் உள்ள ஊடகக்காரர்களும் நிக் கலஸ் பேண்ஸ் எல்.ரி.ரி.ஈ யும் அல்ஹைதா வும் ஒன்றல்ல என்று சொன்னதன் மூலம் எதை உணர்த்த முற்பட்டாரோ அதை அதற் குரிய முக்கியத்துவத்துடன் புரிந்துகொள்ள வேயில்லை. ஜெனீவாவில் நிகழ்ந்த முதல் சந்திப்பின் போது இணைத்தலைமை நாடுகளின் நிலைப்பாடு அரசாங்கத்துக்குச் சாதகமற்ற தாகவே காணப்பட்டது. ஆனாலும் அரசாங் கம் அதற்குப் பின்பு சுதாகரித்துக்கொண்டு விட்டது போலவே தோன்றுகிறது. துணைப் படைகளின் நடவடிக்கைகள் தொடர்வது என்பது அப்படித்தான் சிந்திக்க வைக்கிறது. துணைப்படைகள் விவகாரம் ஒரு சர்வ தேச அபிப்பிராயமாக உருவாகிய பின்ன ரும் கூட துணைப்படைச் செயற்பாடுகள் வவுனியா வரைக்கும் வந்துவிட்டிருப்பது என்பது மகிந்தவின் மீது தமது செல்வாக் கைப்பிரயோகிப்பதில் இணைத்தலைமை நாடுகள் போதியளவு வெற்றியைப் பெறத் தவறிவிட்டதையே காட்டுகிறது. இதற்குக் காரணம் இணைத்தலைமை நாடுகளின் மேற்படி இரட்டை அணுகுமுறையே. இந்த இரட்டை அணுகுமுறையை தனக்கு வசதியாக வடிவமைத்துக்கொண்ட தாலேயே மேற்கின் செல்லப்பிள்ளையான திரு.ரணில் விக்கிரமசிங்க சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்றைப்பற்றி கதைத்துவந்தார். இந்த இரட்டை அணுகுமுறை காரண மாகப்பெற்ற துணிச்சலால்தான் திருமதி சந்திரிகா ரணிலை சமாதானத்தின் பேரால் பலியிட முடிந்தது. அதாவது இரட்டை அணுகுமுறையின் படி எல்.ரி.ரி.ஈ யின் மீது பிரயோகிக்கப்படக்கூடிய அழுத்தங்களை விடவும் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப் படக்கூடிய அழுத்தங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. எனவே ரணிலைக் கவிழ்த்தாலும் இணைத்தலைமை நாடுகள் தன்மீது ஒரு கட்டத்துக்கும்மேல் அழுத்தங் களை பிரயோகிக்கமுடியாது என்ற துணிச்சல் சந்திரிகாவிடம் இருந்தது. அதே துணிச்சல் இப்பொழுது மகிந்த விடமும் காணப்படுகிறது. அமெரிக்கா எல்.ரி. ரி.ஈ யை ஒரு துடக்காகத்தான் பார்க்கிறது என்ற வெளித்தோற்றம் உண்டாகும் விதத்தி லேயே அமெரிக்காவின் வெளிப்படையான உத்தியோகபூர்வ வார்த்தையாடல் கள் காணப் படுகின்றன. இந்தத் தோற்றப்பாட்டை தனக்கு ஆகக் கூடிய பட்சம் அனுகூலமானதாக ஆக்கிக் கொள்ள மகிந்த முயல்கிறார் என்ப தால்தான் இணைத்தலைமை நாடுகளின் அபிப்பிராயங்களையும் பொருட்படுத்தாது தனது அரசியல் இராணுவ வியூகத்துள் துணைப்படைகளை பங்காளிகளாக வைத் திருக்கிறார். பிலிப்பைன்ஸ் சமாதான முயற்சிகளிலும் இதுபோன்ற ஒரு தோற்றப்பாட்டைக் காணலாம். அங்கே தெற்குப் பிலிப்பைன்ஸில் தனி நாடு கோரிப் போராடும் எம்.ஐ.எல்.எவ் இயக்கத்துக்கும் அல்ஹைதாவுக்கும் அல்ஹைதா வின் துணை அமைப்புக்களான அபுசாயவ், ஜெம்மா இஸ்லாமியா போன்றவற்றுக்குமிடை யில் ரகசியத் தொடர்புகள் உண்டு என்ற ஒரு பரவலான சந்தேகம் நிலவுகிறது. இதைச் சாட்டாக வைத்து அமெரிக்காவின் உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான யுத்த வியூகத்துள் எம்.ஐ.எல்.எவ்.யும் சிக்க வைக்க முயல்வதன் மூலம் சமாதான களத் தில் அதன் பேரம்பேசும் சக்தியைக் குறைத்து விடலாம் என்று பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நம்புகிறது. இதில் அவர்கள் குறிப்பிடத்தக் களவு வெற்றியைப் பெற்றிருப்பதாகவும் தெரிகிறது. மகிந்தவும் எல்.ரி.ரி.ஈ யின் விசயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை அதாவது இணைத்தலைமை நாடுகளின் இரட்டை அணுகுமுறையை தனது பேரம்பேசும் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்குப் பாவிக்க முயல்கிறார். அரசாங்கமும்-எல்.ரி.ரி.ஈயும் சம அந்தஸ்துடைய இரண்டு தரப்புக்கள் அல்ல என்று மகிந்தவும் அவருடைய கூட்டாளிகளும் தயான் ஜெயதிலக போன்ற விமர்சகர்களும் பெரும்பாலான சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் நம்புகின்றன. இந்த நம்பிக்கைதான் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை ஒரு நட்சத்திர அந்தஸ் துடைய கதாநாயக நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கிறது.ஒரு இராணுவத் தளபதிக்கு இருக்கவேண்டிய வாயடக்கத்தை அவர் அண்மைக்காலங்களில் காட்டத் தவறியதற் குரிய காரணமும் இதுவே. எனவே நிலைமை கையை மீறிப்போவ தற்குரிய ஒருபக்க வளர்ச்சிக்குத் தேவை யான ஊக்கவிசைகளை இணைத்தலைமை நாடுகளின் இரட்டை அணுகுமுறையே வழங்கிவருகிறது. இலங்கைத்தீவில் மட்டுமல்ல பலஸ்தீனத்திலும் அமெரிக்கா இத்தகையதொரு இரட்டை அணுகுமுறையைத்தான் பேணிவரு கிறது.அங்கே நடப்பது ஒரு அருவருப்பான இரட்டை அணுகுமுறை. உலகத்தின் மனச் சாட்சியைக் கூசச்செய்யும் விதத்தில் அங்கே அமெரிக்கா தனது செல்லப்பிள்ளையான இஸ்ரேலை எல்லா விதங்களிலும் பாது காத்து வருகிறது. அங்கு சமாதானம் இழு வுண்டு செல்லக்காரணமே அமெரிக்காவின் இரட்டை அணுகுமுறைதான். ஆனால் சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சமாதான களங்களில் அமெரிக்கா அங்குள்ள அரசுகளின் மீது அல்லது பலம்வாய்ந்த தரப்பின் மீது அதிகரித்த அழுத்தங்களைப் பிர யோகித்திருக்கிறது. இஸ்ரேலைப் பாதுகாக்கும் அதேயளவுக்கு அவர்கள் மகிந்தவைப் பாதுகாக்கவில்லைத்தான். ஆனால் சமாதானத்துக்கான அவர்களுடைய இரட்டை அணுகு முறையே இலங்கைத்தீவில் சமாதானம் இழு வுண்டு செல்லப் பிரதான காரணம் என்பதை அவர்கள் உணர இது ஒரு நல்ல தருணம். ஒரு சர்வதேச அபிப்பிராயத்தை மதியாது மகிந்த துணைப்படைகளை தனது வியூகத் துள் ஒரு பங்காளிகளாக்கத் தேவையான துணிச்சலை இந்த இரட்டை அணுகுமுறையே வழங்கியிருக்கிறது. மட்டுமல்ல, மகிந்தவைப் போன்ற அவருக்கு முன்பிருந்த மற்றும் இனி வரப்போகின்ற எல்லாச் சிங்களத்தலைவர் களும் தமது இனக்குரோத அரசியலைக் குறித்து இந்த நூற்றாண்டிலும் வெட்கப்படத் தேவையில்லாத ஒரு சர்வதேசச் சூழலை யும் அது தொடர்ந்தும் பேணிவருகிறது. முன்னைய நூற்றாண்டுகளில் அடிமை வியாபாரம் ஒரு வழமையாக இருந்தது. ஆனால் பிந்திய நூற்றாண்டுகளில் அதற்காக மனிதகுலம் வெட்கப்பட்டது. தென்னாபிரிக்காவில் நிலவிய இன ஒதுக்கல் அரசியலின் கீழ் மண்டேலா கால்நூற்றாண்டுகாலம் சிறையிலிருந்தார். ஆனால் இன்று இன ஒதுக்கல் எனப்படுவது ஒரு வெட்கப்படும் விவகாரமாகிவிட்டது. கம்பூச்சியாவில் போல்பொட் தனது சொந்த மக்களில் சுமார் பத்து இலட்சம் பேரை வேட்டையாடி கம்பூச்சியாவின் வயல் வெளிகளை மண்டையோடுகளால் நிறைத் தார்.இன்று அந்த மண்டையோடுகளைப் பார்த்து மனிதகுலம் கூசிநிற்கிறது. அண்மையில் சிறையில் இறந்துபோன மிலோசவிச் அதிகாரத்தில் இருந்த காலங் களில் அகன்ற சேபியாவை உருவாக்குவதற் காக ஆயிரக்காணக்கான பொஸ்னியர்களை யும் ஏனைய இனத்தவர்களையும் கொன்று குவித்தார். ஆயிரக்கணக்கில் முஸ்லிம் பெண் களைச் சிதைத்து வலுக்கட்டாயமாக சேர்பியக் குழந்தைகளைப் பெறுவித்தார். ஆனால் வரலாறு இப்பொழுது அவரை ஒரு இறைச் சிக்கடைக்காரனாகத் தீர்ப்பளித்துவிட்டது. இதுபோலவே இலங்கைத்தீவிலும் சிங்களத் தலைவர்கள் தமது இனச்சாய்வு மற்றும் இனக்குரோத அரசியலுக்காக எப் பொழுது வெட்கப்படப்போகிறார்கள்? அல் லது அவர்கள் வெட்கப்படவேண்டிய ஒரு சர்வதேசச் சூழலை இணைத்தலைமை நாடு கள் எப்பொழுது ஏற்படுத்தும்? நிலாந்தன் ஈழநாதம்