வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  5,601
 • Joined

 • Days Won

  37

வல்வை சகாறா last won the day on September 10

வல்வை சகாறா had the most liked content!

Community Reputation

1,419 நட்சத்திரம்

5 Followers

About வல்வை சகாறா

 • Rank
  Advanced Member
 • Birthday December 5

Profile Information

 • Gender
  Female
 • Location
  கனடா
 • Interests
  ஆன்மாவுடன் பேசுதல்
 1. அண்மையில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். தொட்டியில் 4 கஞ்சாச் செடிகளை வளர்த்துள்ளார்கள். பார்த்தவுடன் விக்கித்து போனேன். வீட்டுக்கு நாலு கஞ்சாச்செடியை சட்டப்படி வளர்க்கலாமாம்... ஒரு செடியின் விலை குறைந்தபட்சம் 800 டொலர்கள் வரை போகிறது. நம்மாட்கள் நாட்டிலேயே புகையிலை வளர்த்த சனமெல்லோ இனிவருங்காலங்களில் வீட்டுக்கு வீடு கஞ்சா மரம் நிற்கும். புத்திசாலிகள் காலத்தைப்பயன்படுத்தி கோடீஸ்வரர்கள் ஆக வாய்ப்பிருக்கிறது. பாம்பு தின்னும் ஊருக்குப் போனா நடுமுறி நமக்கு
 2. இந்த நக்கல்தானே வேண்டாங்கிறது. நமக்கு இலங்கையில் வாக்குரிமையே இல்லை. உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். அப்படி இருக்க எப்படி வாக்களிப்பது? நாம சொல்வது தாயகத்தில் அக்கறையுள்ளவளாக மட்டுமே. ஆதரவு, எதிர்ப்பு என்பது அநேகமாக புலம் பெயர்ந்தவர்களின் எண்ணங்களோடு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது. தளத்தில் உள்ள எதனையும் எங்கள் எண்ணங்கள் புரட்டிப்போடாது. கருத்துச் சொல்வது மட்டுந்தான் தற்போது நம்ம கைவசம். இன்னொரு உண்மையைச் சொல்லவா? பொருளாதார ரீதியில் ஊருக்குள் உதவிகள் செய்திருந்தாலும் அங்குள்ள நல்லது கெட்டதில் நாம பேசமுடியாது. அங்குள்ளவர்கள் புலம்பெயர்ந்த சாதி என்று எங்களை ஒதுக்கிவைத்துவிட்டார்களப்பா.
 3. சிவாஜிலிங்கத்தை எதிர்ப்பதா? அல்லது ஆதரிப்பதா என்று என்னால் முடிவு செய்ய இயலவில்லை. ஆனாலும் விவேகமோ விவேகமில்லையோ ஒரே ஊரவளாக அறிந்த வரைக்கும் அவரின் துணிச்சல் என்னைத் துணுக்குற வைத்திருக்கிறது. நமக்குள் நிச்சயமாக இப்படியான ஒருவர் தேவை. இந்த ஒருவர் எதிர்கால அமைவிற்கான மையப்புள்ளியாகக்கூட மாறக்கூடும். ஏன் இவரை மிதித்தேறி அரசியல் செய்யும் துணிச்சல் உள்ளவர்கள் வெளியே வரக்கூடும். பொறுத்திருந்து பார்ப்போம்.
 4. முதுமை அடைகிறோம் என உணரும்போதே எதிர்காலம் பற்றிய அங்கலாய்ப்பு மனதிற்குள் ஆரம்பித்துவிடும். உண்மையில் இந்த முதுமை என்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியானதுதான். பொதுவாக ஆண்களுக்கு அநேகமாக துணைவி இருந்து பராமரித்து அவர்கள் கடைசிக்காலம்வரை குழந்தைமாதிரி பாதுகாத்துவிடுவார். பெண்கள்தான் மிகவும் பாவப்பட்டவர்கள் உடல் இயக்கம் உறுதியாக இருக்கும்வரை குடும்பத்திற்காக உழைத்து களைத்தவர்களை அவர்களின் இறுதிகாலத்தில் குழந்தைபோல் கவனிக்க யாருமே இருப்பதில்லை. பிள்ளைகள் வெறுக்கிறார்கள் என்பதல்ல இன்றைய இயந்திரத்தனமான பொருளாதாரத்தைத் தேடி ஓடும் வாழ்க்கையில் சுமையாகும் முதியவர்களை கவனிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இயலாமை, கவனிக்க நேரமில்லாமை ஒருங்கே சேர இயல்பாக கோபத்தை வெறுப்பாக்கி முதியவர்கள் நோக்கி வெளிப்படுத்திவிடுவது சூழலாக இருக்கிறது. அண்மையில் எனக்கு வேண்டப்பட்ட ஒருவர் ஒரு முதியோர் இல்லம் அமைப்பது தொடர்பாக என்னிடம் பேசியபோது தனிய ஆண்களுக்கு மட்டும் தான் அத்தகைய இல்லம் அமைக்க இருப்பதாக தெரிவித்தபோது அவருடைய மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனையை விரிவாக்க பரிந்துரைத்தேன். பெண்கள் தொடர்பான நியாயமான புரிதல்களை அவருக்கு எடுத்துரைத்து பெண்களுக்கும் சேர்த்து அமைக்க கேட்டுக்கொண்டேன். பெண்கள் தொடர்பான இல்லத்திற்கு என்னை வந்து பொறுப்பெடுத்துச் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். காலம் கைகொடுக்கும்போது நிச்சயமாக அப்பொறுப்பை ஏற்று செயற்பட எண்ணியுள்ளேன். எதிர்காலத்தில் இன்றைய "யுத்"களாக தங்களைக் காட்டி தில்லாக உலாவும் யாழ் உறவுகளும் அவ்வில்லத்தில் சேரலாம்.
 5. தமிழரின் சக்தியை ஒன்றுதிரட்ட முடியாத நிலை. பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டவேண்டிய இக்கட்டுக்குள்தான் தமிழர்
 6. ம.தி சுதா உங்கள் பேபாலுக்கு எனது பங்களிப்பை அனுப்பி வைத்துள்ளேன். சரி பார்க்கவும்.
 7. பிடிக்காத மண உறவில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல விடுபடும் இருவருக்கும் தத்தம் எதிர்காலத் துணையைத் தேடும் உரிமை இருவருக்கும் உண்டு. இவர்கள் விடயத்தில் மணவாழ்வில் இருந்து விலகிய தனது கடந்தகால மனைவி( விலகிய பின்னர் இந்தச் சொற்பதமே தவறு) வேறு யாரையும் தெரிவு செய்து வாழ்ந்துவிடக்கூடாது என்பதே அடிப்படை ஆணவமாக இருக்கிறது. உண்மை என்ன என்பது எவருக்கும் தெரியாது ஆனால் சட்டப்படி விலகியவர்கள் தமக்கான வாழ்வை தெரிவு செய்வது நியாயமானதே... பிடித்தமில்லாத இருவர் சேர்ந்து வாழ முடியாது...அதில் ஒருவருக்குப் பிடிப்பிருந்து மற்றவருக்கு இல்லையென்றாலும் அதுதான் நிலை.... இன்று புலம் பெயர்ந்த நம்மவர்களை எடுத்துக் கொண்டால் பல வீடுகளில் துணைவனும் துணைவியும் தனித்தனி அறைகளில் வீட்டுக்குள்ளும்,..... வெளியே புறத்தோற்றத்தில் சமூகத்திற்கு ஒஞ்சி கணவன் மனைவியாகவும் தம்மைத்தாமே ஏமாற்றி வாழ்கிறார்கள். ஒவ்வாத திருமணங்களிலிருந்து விலகுவதும் தமக்கான எதிர்காலத்தை நிர்ணயிப்பதும் தற்சமயம் கனடாவில் வாழும் இளையவர்களிடம் பரவலாக நிகழ்ந்து வருகின்றது. விகிதாசாரத்தில் அதிகமாகவே இருக்கிறது. என்னுடைய திருமண சேவையில் முதல் திருமணத்திற்கு விண்ணப்பிப்பவர்களைக்காட்டிலும் மறுவாழ்வுக்கு விண்ணப்பிப்பவர்களே அதிகமாக இருக்கின்றனர். ஆதலால் அவர்களுடைய கடந்த காலத்தை கேட்டும் விசாரித்தும் அறியவேண்டிய தேவை எனக்கு அதிகம் ஏற்படுகிறது. அநேகமானவை தாயகத்திலிருந்து திருமணம் செய்து இங்கு வந்த பின்னர் ஏதோ காரணம் உருவாக்கி பெண்கள் பிரிவதாகவும் அதன் பின்னர் அவர்கள் வேலை செய்து தமது கடந்த கால (திருமணத்திற்கு) முன்னராக தாம் காதலித்தவரை ஸ்பொன்சர் செய்து அழைப்பதாகவும் அதிக குற்றச்சாட்டுக்களை பெண்கள் மீது போட்டபடிதான் ஆண்பிள்ளைகளின் பெற்றோர் தம் மகனுக்கான வரனைத் தேடுகிறார்கள். இவ்விடயத்தில் உண்மைகள் இல்லாமலும் இல்லை.... வெளிநாட்டுக்கு வரும் சந்தர்ப்பத்திற்கு இலட்சக்கணக்கான பணத்தைச் செலவு செய்யாமல் சில பெண்கள் திருமணம் என்னும் பெயரில் ஒரு ஆணின் வாழ்வை கபாளீகரம் செய்துவிட்டு தன் துணையை அழைத்து வாழும்போது, கடந்த திருமணம் தனக்கு விபத்து என்று கூறி தட்டிக்கழித்துச் செல்லும் நிலையையும் கண்கூடாகப் பார்க்கநேர்கிறது. ஆக திருமணம் என்பது மலினப்பட்டுப்போகிறது. தாயகத்திலிருக்கும் பெற்றோரும் உள்ளூர் வரன்களைக்காட்டிலும் வெளிநாட்டு வரன்களையே அதிகம் விரும்புகிறார்கள் உண்மையில் மகளுக்கு பிடிக்கிறதா என்று அவர்கள் சிந்திப்பதே இல்லை... மகளை ... அவளின் கனவுகளைக் காவு கொடுத்து தங்கள் குடும்பத்தை முன்னேற்றவே அரும்பாடுபடுகிறார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளை எத்தகைய பழக்கவழக்கம் உடையவர் என்று சிறிதும் கவலைப்படுவதே இல்லை. அதிகமான வெளிநாட்டு மணமக்கள் அதாவது இரு பாலரும் போதைக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். ஏகப்பட்ட கனவுகளோடு வாழவரும் மணமகளுக்கு இங்கு வந்தபின்னரே உண்மைகள் மெல்ல மெல்லத் தெரிய வரும். உண்மைகள் தெரியும்போது காலம் கடந்திருக்கும். அதற்குப் பின்னான துயரம் என்பதும் ஏமாற்றம் என்பதும் மன அழுத்தத்தை உருவாக்கி தற்கொலை முயற்சிகள், அடிதடி வன்முறைகளாக வடிவம் கொள்ளும். விவாகரத்துகளும் எதிர்காலம் பற்றிய திண்டாடல்களும் சூழ இன்னொரு வாழ்வை தேடலாமா என்றும் ஏற்கனவே பட்டதே போதும் என்று முடக்கமும் பலர் வாழ்வில் நடந்தேறிக்கொண்டிருக்கும் ஒன்று. இந்த கொலை செய்தவருக்கும் , கொலை செய்யப்பட்டவருக்கும் இடையில் ஏதேனும் ஏமாற்றம், துயரம் பிணைந்திருக்கலாம். விடுபட்டு சென்ற பின்னர் ஒருவரின் தனிமனித வாழ்வில் தலையிடவே கூடாது.. ஆனால் இவ்விடத்தில் ஆதிக்கவெறி , ஆணவம் ஆத்திரம் என பல்வகைப்பரிமாணங்களில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இன்று கொலை செய்யப்பட்ட பெண்ணை அவதூறு செய்யும் யாராகட்டும் இன்று கொலையாளி ஆகி நிற்கும் அந்த மனிதனுக்கு நல்வழிகாட்ட எண்ணினார்களா? கொலையாளி முன்பே அவளைக் கொல்லவேண்டும் என்று கறுவிக் கொண்டிருந்தார் என்று வெளிப்படுத்தும் எவரேனும்.... அந்தப் பையனை ஆற்றுப்படுத்த எண்ணவில்லையா?
 8. முகநூல் பக்கம் ஒரு பெண் இரு ஆண்களுடன் பிறந்தநாள் கொண்டாடினார் என்று தலைப்பிட்டு படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒன்றில் கொலை செய்யப்பட்ட பெண்ணும் கணவரும் பிறந்தநாள் கொண்டாடுவதையும் மற்றையதில் பெண்ணின் பின்பக்க தலை முடி அங்க அடையாளங்கள் கிட்டத்தட்ட ஒத்துப்போகக்கூடிய ஆனால் நேரே தெரியாத கோணத்தில் ஒரு பெண்ணும் இன்னொரு ஆணும் முத்தங் கொடுத்தபடி பதிவிட்டு எழுதியுள்ளார்கள். முத்தமிட்டபடி நின்ற ஜோடியின் சுற்றுப்புறம் நிச்சயமாக வெளிநாடு எதையும் வெளிக்காட்டுவதாக இல்லை. அதிலுள்ள பெண் அவரா என்பதும் தெளிவில்லை. ஆக கொலை செய்யப்பட்ட பெண்ணின் மீது சேறடிக்க தயங்காமல் சிலர் இறங்கியுள்ளனர்.
 9. இப்போது இந்தியாவுக்கு நிகராக சளைக்காமல் வளர்ந்திருக்கிறோம். எல்லா வகையிலும்.... நேற்றுவரைக்கும் காதும் காதும் வச்சமாதிரி நடந்த சங்கதிகள் இன்று இயல்பாக நடக்கிறது. நாங்கள் அங்கு வாழ்ந்த காலத்தில் வறுமை இருந்தது அதே நேரம் நேர்மையும் இருந்தது. நாடு என்று ஆசையாக சென்ற பகுதிகளில் எல்லாம் ஊழல்கள் பல வடிவங்களில் நேர்மைக்கு வாழ்வில்லை என்பதை கண்கூடாக பார்த்தபின்னர் மனதில் வெறுப்பு மண்டுவதை தவிர்க்கமுடியவில்லை.
 10. இந்தக் கொலை தொடர்பாக நிறையவே செய்திகள் காதுவழி புகுந்து கடந்து செல்கின்றன. இரண்டுவிதமான பலத்த சர்ச்சை நம்மக்களிடையே உருவாகி இருக்கின்றன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் தரப்பிலும், கொலை செய்த ஆணின் தரப்பிலும் பலர் பேசுகின்றனர். ஒரு பிரச்சனைக்கு கொலை தீர்வாகாது. இது அப்பட்டமான ஆணின் பலத்தைக்காட்டுகிறது. இங்கு உயிரிழந்துள்ளவர் பெண் இருப்பினும் ஆண்களின் அதிகபட்ச கருத்தாடல்கள் மட்டுமல்ல பெண்களினது நாவீச்சுக்களும் இன்னும் நாம் மீளாத ஏதோ ஒன்றுக்குள்ளேயே அகப்பட்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பலரும் வெளிப்படையாக கொலைக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கும் வேளையிலும் கொலையுண்ட பெண் மீதான பிம்பத்தை தாம் வாழும் சமூகத்திற்கு ஏற்றாற்போலவே மாற்றுகிறார்கள். எங்கள் சமூகம் ஆண் மீதான பிம்பத்தை எப்போதுமே அழுக்கற்று சிருட்டிக்கவே விரும்புகிறது. அதிலிருந்து வெளிவர விரும்பவில்லை என்பதை நாம் பழகும் நம் மினம் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையிலேயே இந்த கொலை செய்யப்பட்ட பெண் மீதான கருத்தாடல்கள் பல தளங்களில் நிகழ்கின்றன. அந்த ஆண் கொலைகாரன் ஆனதற்கும், இந்தப் பெண் பிள்ளை கொல்லப்பட்டதற்கும் உண்மையிலேயே அவர்கள் இருவரும் காரணம் இல்லை. நமது சமூகமே இந்தக் கொலையை ஆணின் கையைக் கொண்டு நிகழ்த்தி இருக்கிறது. நமது சமூகத்தில் தற்காலத்தில் பெண்கள் தெளிவடைந்து வெளியே வந்தளவுக்கு ஆண்கள் வரவில்லை என்பதே நிதர்சனம். இன்னும் எல்லாவிதத்திலும் தன்னுடைய ஆளுமைக்குள் பெண்ணாணவள் தங்கவேண்டும் அதாவது கீழ்படியவேண்டும் என்ற எண்ணம் இல்லாத ஆண்கள் மிகச்சிலரே. இன்னும் சற்று உள்ளாரபோனால் ஆண் பிள்ளைகளைப் பெற்ற பெண்களின் வளர்ப்பை நாம் அலசி ஆராயவேண்டியவர்களாவோம். ஏனெனில் ஒரு ஆணின் செயல் பெண்களுக்கு எதிரான வன்முறையாகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் வளரும் பருவத்தில் துணிச்சலான, அல்லது சுதந்திரமான பெண்கள் மீது அவர்களின் சுதந்திரத்தையும், துணிவையும் ஏற்க விரும்பாத சமூகம் அவர்கள் மீது அவதூறுகளைப்பரப்பி சமூக வெளியில் அவர்களை அவமானப்படுத்துவதில் மும்முரம் காட்டியிருக்கும். அவர்கள் மீதான துன்பியலில் ஒரு வகை சுகம் கண்டிருக்கும் அப்படிப்பட்ட ஒரு மனோ நிலையில் வளர்கின்றவர்கள். சமூக அவதூறுகளுக்கு அஞ்சி அஞ்சியே வாழ்க்கையைத் தொலைப்பவர்களாக இருக்கின்றனர். உண்மையிலேயே நமது சமூகம் நம்மை சுய பரிசோதனை செய்யவேண்டிய தேவை இருக்கிறது. இலகுவாக யாரோ ஒரு பெண்ணை அவள் முன்னாள் துணைவன் கொன்று விட்டான் என்பதற்கு அப்பால் அவன்- அவள் என்று அவர்கள் மீது தம் சுயகற்பனைகளைத் திணித்து சுகம் காண்பதை நிறுத்தவேண்டும். இன்று இக்கொலையின் மூலம் வெளியே வந்திருக்கும் உண்மை என்ன? இன்னும் நாங்கள் அநாகரீகமானவர்களாகவும், பெண்மையை இழிவுபடுத்தும் சைக்கோக்களாகவும் இருக்கிறோம் என்பதே உண்மை. வீட்டுக்கு வீடு நம் எல்லோருக்கும் கவுன்சிலிங் ஏதோ வகையில் தேவைப்படுகிறது. அவை வெவ்வேறு பட்ட காரணங்களுக்காகவும் இருக்கும். ஆனால் அவற்றில் முக்கியமானது. ஆண், பெண் உறவுநிலை சம்பந்தமானது. பண்பாடு என்னாவது? கலாச்சாரத்தை கடாசி எறிவதா? என்று தற்காலத்தில் மேலைத்தேயத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான பெரும் போராட்டம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. அதே நேரம் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள், இந்தியா, இலங்கை என்று அடக்கமான (அதாவது தமக்கு கீழ் தலையாட்டி நிற்கும் பெண்) பெண்களைத் தேடி சென்று திருமணம் செய்ய முனைவதும், அப்படியே அங்குள்ள பெற்றோரால் பெண்பிள்ளையின் விருப்புக்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்படுவதும் பெற்றோருக்கு மதிப்புக் கொடுக்கும் பிள்ளைகள் தலை கவிழ்ந்து வாழ்க்கையை ஏற்பதும், வெளிநாடு வந்த பின்னர் தனித்த வாழ்வில் முகங்கொடுக்கும் ஒவ்வொரு பிடிப்பற்ற நிகழ்வுக்கும் அதனோடு ஒட்டிய வன்முறைக்கும் பின்னராக ஏற்படும் நிமிர்விற்கும் பின்னரான விவாகரத்துகளுக்கும்... அப்படியே அதனோடு ஒட்டி நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்று நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு சிறிய வன்முறைகூட பெரிய பாதிப்பைக் கொடுக்கும் என்பதைச் சிந்திக்கும் திறனை அதிகரிக்கவேண்டும். அநேகமாக குடும்ப வன்முறையை எடுத்துக் கொண்டால் ஆத்திரக்காரக் கணவன் தன் கையால் சுவரோ அல்லது கதவுக்கோ அருகாமையில் நிற்கும் மனைவியை ஓங்கி குத்துகிறார் என்று வைத்துக்கொண்டால் ஒன்று அந்தக் குத்தை எதிர்கொள்ளும் மனைவி காயப்படக்கூடும் மனைவி சற்று விலகினால் சுவரைப்போரையாக்கும் அல்லது கதவை உடைக்கும். ஒரு வேளை மனைவி காயப்பட்டால் பிள்ளைகள் அவசர உதவிக்கு ஆன்புலன்சை அழைத்தால் கூடவே காவல்துறையும் வரும். ஒருவேளை சுவர் அல்லது கதவு உடைந்தால் ஆத்திரத்தோடு ஓங்கியவர் கையும் காயப்படும். அப்போதும் அவசர உதவிக்கு ஆன்புலன்ஸ் வரும். சரி இவற்றைப் பார்த்துக் கொண்டு பயத்தில் நிற்கும் பிள்ளைகள் மன அளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வெளியே தெரியாமல் மன அழுத்தம் அவர்களின் கல்வியிலிருந்து எல்லாவற்றையும் பாதிக்கும். ஆத்திரம் தெளிந்து விடும் பாதிப்பு நிலைத்துக் கொள்ளும். பொருளாதாரத்திலிருந்து ஒற்றுமை, மனவளம்வரை பாதிப்பு நீளும். ஒரு சில நிமிட ஆத்திரத்திற்கே இத்தகை நிலை என்றால் என்பதை சிந்திக்கும் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யவேண்டும். அநேகமானவர்கள் கவுன்சிலிங் செய்பவர்களை கேலியாக பேசுவதை எமது சமூகத்தில் அவதானித்திருக்கிறேன். இந்தக் கேலியான போக்கு நமக்கான நாகரீகமான வாழ்க்கை முறையை அண்டவிடாது தூரமாக்கும். ஆக நமது சமூகம் தொடர்பான நடைமுறைகளில் ஏதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதைத் தவிர அக்கொலை தொடர்பாக எதுவும் பேச முடியவில்லை. எங்கிருந்து தொடங்குவது என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.
 11. மதி சுதா நானும் பத்து பங்குகளை வாங்குகிறேன். பேபால் மூலமாக பணம் அனுப்புவது இலகுவாக இருக்கும் அதற்கான வசதியை ஏற்படுத்தித் தாருங்கள்
 12. விசுகு அண்ணா எப்போதுமே என்னுடனான உங்கள் உரையாடல் என்பது சொந்தமாக சிந்தித்து வருவதில்லை. யாரையாவது இழுத்து வந்து அவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது...... மாறுங்கையா நீங்களாக பேசுங்கள்.
 13. அவள் வீட்டில் இது பற்றிய கேள்வி பதில்கள்... முன்னோர்கள் கடைப்பிடித்தது நாங்களும் அப்படித்தான் என்ற மொக்கை முடிச்சுகளுடன் அப்பெண் பிள்ளையின் விருப்பிற்கு நிபந்தனை இட்டனர் பெற்றோர். எங்கள் சாதியாக இருந்தால் மாத்திரமே என்ற அழுத்தம் அதிகம் இருந்தது. நிச்சயமாக அவன் வேறு என்பதை அவளின் குடும்பம் ஊர் , விபரம், இருப்பு என்பதை வைத்து உறுதிப்படுத்திக் கொண்டனர். மகளுக்கு முழுமையான மறுப்பை உருவாக்கி முடக்கினர். பெற்றோர் மீதான நம்பிக்கை, பற்றுதல் கால ஓட்டத்தில் அவனிடமிருந்து அவளை விலத்தி நகர்ந்தது. பல்கலைக்கழகத்தில் மனப்போராட்டங்களுடனாக விடுபட்டுக் கொண்டார்கள். இருவரும் வெவ்வேறு தொழில்களில் நட்பு வெளி முழுமையாக அஸ்தமனமானது. பெண்ணுக்கான வரன் தேடலில் பெற்றோர் மும்முரமாக ஈடுபட்டனர். அப்பிள்ளையின் கல்வித்தகைமைக்கு தகுந்தாற்போல் வரனை அவர்களின் குழுமத்திற்குள் தெரிவு செய்ய முடியாமல் அப்பெண்ணின் கல்வி மற்றும் தொழில் தகைமைகளுக்கு முற்றிலும் ஒவ்வாத ஒருவரைத் தெரிவு செய்து மணமுடித்து வைத்தனர். இன்று அப்பெண்ணின் மணவாழ்வு விவாகரத்தில் நிற்கிறது. அப்பெண்பிள்ளையின் வாழ்வு கேள்விக்குறியாகி இருக்கிறது. மறுபடியும் அதே குழுமத்திற்குள்ளான தேடலை பெற்றோர் முன்னெடுத்து இருக்கிறார்கள். பேசாமடந்தையான அப்பெண் என்னிடம் பேசினார். இந்த சமூகவெளியில் தனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை என்பதே அது.......
 14. அப்பட்டமான உண்மை சண்ட மாருதன். ஆனால் கசப்பாக இருக்கிறது.
 15. தூங்குபவரை எழுப்பவேண்டும் என்றாலும் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும் அல்லவா..... பெண் ஆணுக்குக் கட்டிய தாலி எவ்வகையில் தவறாகிறது? எவ்வகையில் மற்றவர்களைப்பாதிக்கிறது என்று தவறென்று சுட்டிக்காட்டுபவர்கள் விளக்கம் கொடுத்து அச்செயல் தவறுதான் என்று செவ்வனே உணர்த்தும் இடத்தில் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லையே... இச்செயலை நான் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை காரணம் இச்செயலால் எனக்கு எத்தகைய பாதிப்பும் கிடையாது இதனால் என் சந்ததியினர் பாதிக்கப்படுவர் என்ற எண்ணமும் எனக்குக் கிடையாது அதனாலேயே அந்த மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். தவறென்று சுட்டிக்காட்ட எதுவும் இல்லை.