• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  5,677
 • Joined

 • Last visited

 • Days Won

  37

Everything posted by வல்வை சகாறா

 1. உயிரோட்டமான ஓவியம். மூக்கு கண்கள் அவை நோக்கும் திசை இருகண்களிலும் கச்சிதமாக அமைந்திருக்கிறது உடையார் ஒரு தலைசிறந்த ஓவியராக வருவார். வாழ்த்துக்கள். பதின்ம வயதில் நிறைய ஓவியங்களைக் கிறுக்கிய அநுபவம் உண்டு. பள்ளிக்கூடத்தில் போர் அடித்தால் படிப்பதைத்தவிர பிடித்தமானது விளையாட்டு, மற்றும் ஓவியம் வரைதல் ஆரம்பித்தது ஐந்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலிருந்த நடன விநாயகரை வரைவதிலிருந்து ஒரு தடவை பள்ளிகூட விடுமுறைக்கு முதல் நாள் ரிப்போர்ட் கார்ட் வாங்கிக் கொண்டுதான் வீடு செல்ல வேண்டும். சிநேகிதிகள் அவரவர் பாட்டுக்கு படக்கதைகள், டக்கோ டிக்கோ டொஸ், இலக்கப்பெட்டி என்று விளையாட நான் எனது நோட் புக்கில் ஏதோ ஓவியத்தை கற்பனையில் நிறுத்தி வரைந்து கொண்டிருக்க என் அன்புத்தோழி ஏதோ கதைகேட்க நான் பதில் தரவில்லை என்பதற்காக எனது ஓவியத்தின் மேல் சரக் புரக் என்று இரு கோடுகளைப்போட்டு கிறுக்கலாக்கி விட்டாள் அன்றைய நாள் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது அந்த நிமிடத்தில் எனது ஆருயிர்தோழியிடம் கோபம்போட்டேன். வருடக்கணக்காக அவளிடம் பேசுவதை தவிர்த்திருந்தேன். கிட்டத்தட்ட 10 வருடங்களாக பேசவில்லை. கனடா வரும் சமயத்தில்தான் அவளுடன் மீளப்பேசினேன். நானும் என் நண்பியும் அச்சம்பவத்தால் இழந்த அழகான பொழுகள் ஏராளம். எல்லாம் ஓவியக்கிறுக்கு செய்த வேலை.
 2. தேர்தல் காலம் தெளிவாகவே சிங்களம் தமிழர் பலத்தை(?) சிதைக்க எத்தனிக்கிறது ஒரு வீர வரலாறு காணாமல் ஆக்கப்பட்டு நிகழ்காலத்தில் அங்கலாய்த்துக் கிடப்பதிலேயே கழிகிறது. கலங்கரைகள் தெரியாத இடத்தில் கரை ஏறும் சாத்தியம் இல்லை உறுதியான வழி காட்டிகளை உருவாக்க கூடிய நிலையிலோ அல்லது உருவாகக் கூடிய நிலையிலோ நாம் இருக்கிறோமா என்பது கேள்விக் குறி இங்குநாம் விவாதிக்கும் பாணி எனக்கு கருணாாவைப் பற்றி அதிகம் தெரியும். துரோகி , ஒழுக்கம் கெட்டவன் மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவன் என்ற கருத்துகளுக்கு அப்பால் நகர முடியாத சுழிக்குள் சிக்கி இன்னும் மீளமுடியாத பலவீனத்தை வெளிப்படுத்துவதைத் தவிர நம்மால் வேறெதனையும் செய்ய முடியாது. புதிய வரலாற்றை கட்டி எழுப்ப எந்த கல்லை எவர் சுமக்கலாம்? மன்னிக்கவும் எந்த கல்லை நான் சுமக்கிறேன் என்று வழிகாட்டக் கூடாதா?
 3. யாழ் இணையத்தில் எழுதும் ஒவ்வொரு வரிக்கும் நான் திக்கு முக்காடிய திரி இப்போது வாசிக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை நான் மௌனமாக வாசித்து வாய்விட்டு சிரிக்க வாழ்க்கப்பட்ட துணை எனக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று அச்சத்தோடு பார்க்கிறார்....
 4. அடேங்கப்பா நாமளும் நட்சத்திர எழுத்தாளர் லிஸ்டில் இருக்கிறமா???????????
 5. ஒவ்வொரு செய்திக்குமான கருத்தாடல்களில் வேறொருதிரியில் விவாதத்திற்கு உட்படுவதை இன்னொரு திரிக்குக் காவுவது சமீபகாலமாக யாழ்க்கருத்துக்களத்தில் அதிகரித்து வருகிறது. தலைப்போடு ஒட்டி விவாதியுங்கள். ஒரு திரியில் இடம்பெறும் விவாதத்தை அதன் தாக்கத்தை பிரிதொரு திரியில் காவும் கருத்தாளர்கள் கலகக்காரர்களாக மட்டுமே உள்ளதை பார்க்க முடிகிறது. ஆக யாழில் எவ்வகையிலும் ஆரோக்கியமான நகரல்களை திரிகளில் காணமுடியவில்லை. வெறும் உட்பூசல்களையும், குழும கும்மியடிப்புகளையும் மட்டுமே வளர்க்க யாழ்கருத்துக்களம் உபயோகப்படுகிறதா?
 6. வாய்ப்பந்தல் போடாமலே நடைமுறையில் அரைக்கிணறு தாண்டி விட்டேன் ஒரு குடும்பத்திற்கு தொடர்ச்சியான தொழில் வளத்தை கொடுத்துள்ளேன். யாழ் இணைய வெளியில் உங்களுக்கு முன்பிருந்தே நீண்ட காலமாக பேசி வருகிறோம். இன்று போல் நாளை நிச்சயமாக இல்லை. சுமே நிச்சயமாக யாழ் இணைய நண்பர்கள் எதிர் காலத்தில் என்னை தாயகத்தில் சந்திக்கும வாய்ப்பே அதிகம் அமையும். யாரு கண்டா நம்ம அடுத்த சந்திப்பு அங்காகக்கூட இருக்கலாம்.
 7. பெரும் காணிகளில் தனித்த வீடுகள், விசாலமான வீடுகள் , சாளரங்கள் இடைவெளிகள் என்பனவற்றிற்கு நகரசபைகள் குளிரூட்டிகள் அற்ற நிலையில் வீடுகட்டுவதற்கான அநுமதியை வழங்குகின்றன. குறுகிய காணி, நெருக்கமான எல்லைச்சுவர்கள் ,விசாலமில்லாத அறைகள், காற்றோட்டத்தை இலகு ஆக்க முடியாத சாளர வடிவங்கள் என்பனவற்றுக்கு நகரசபைகள் அநுமதியை மறுக்கின்றன. அவ்விடத்தில் வீடு கட்டுவதாக இருந்தால் குளிரூட்டிகள் படங்களில் காட்டப்பட்டால் மாத்திரமே வீடு கட்டுவதற்கான அநுமதி கிடைக்கிறது. ஒரு வீடு கட்டுவதற்கு முறையே வீதியின் நடுவிலிருந்து 36 அடிகள் பின் தள்ளியே வீட்டின் முகப்பு அமைய வேண்டும். மற்றைய சுற்று எல்லைச் சுவர்களில் இருந்து குறைந்தபட்சம் 6அடிகள் உள் ஒதுங்கியே வீடு இருக்கவேண்டும் என்பது கட்டாய விதி.
 8. நெடுக்கு என்னுடைய வீடு எந்த நிறுவனத்தைக் கொண்டும் கட்டமைக்கப்படவில்லை. குத்து மதிப்பாக என்னுடைய எண்ணங்களை படமாக வரைந்து சதுர அடிகளையும் தீர்மானித்து அங்கு அனுப்பி அறிந்த ராஸ்மன் இருவரிடம் வரைந்து எடுத்து கட்டிடக்கலை அறிந்த உறவினர் ஒருவர் ஊடாக தொடர்புகளை சிறு சிறு குழுக்களாக உருவாக்கி அங்கு வாழும் எனது சகோதர் ஊடாக கட்டியது. தளம் தூண்கள் அத்திவார கனதி என்பனவற்றிற்கு தனிப்பட்ட முறையில் இஞ்சினியரிங்கோடு சம்பந்தப்பட்ட ஒருவர் கட்டடக்கலை நிபுணருக்கு ஊதியத்தோடான உதவி செய்தார். தனிப்பட்ட வேலை வாய்ப்பாக பலருக்கு அமைந்தது. 1984 ஆம் ஆண்டு சிங்கள இராணுத்தால் எரிக்கப்பட்ட வீடு பின்னர் திருத்தி அமைக்கப்பட்டது மீளவும் 87 ஆம் ஆண்டு ஒபரேசன் லிபரேசன் காலத்தில் இலங்கை இராணுவத்தால் சேதப்படுத்தப்பட்டது. மீளவும் அவ்வாண்டே பல வெடிப்புகளூடாக சீரமைக்கப்பட்டு வாழ்விடமானது அதற்குப் பின்னர் மீளவும்1992 இல் இலங்கை வான்படையின் பொம்மர் அடியில் சீரிழந்தது. அந்தக்கால வீடு பிறந்து வளர்ந்த வீடு அம்மாவின் இறப்பிற்கு பின்னர் பாட்டன் வழிச்சொத்தாக என் அண்ணன்களால் எனக்கு கையளிக்கப்பட்டது. அலங்கோலமாக ஒருவாயாக இருந்த என் பிறந்தகத்தை மீள மீள புனரமைக்கப்பட்டதால் வீடே நேர்த்தியின்றி சிதறிக்கிடந்தது. எனக்கு வீட்டைத்தந்ததால் என் சகோதரர்களாலும் அதனை மேம்படுத்தமுடியவில்லை. அதனை பெற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. நான் அங்கு வரவேண்டும் வாழவேண்டும் என்பதே இன்று வரைக்கும் அவர்களுடைய எதிர்பார்ப்பாகவும் என் சந்ததியின் உறவுக்கொடியை ஊரோடு வலிமையாக வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவும் என்னுடையவற்றை மிகவும் வாஞ்சையோடு வைத்திருக்கிறார்கள். என் முப்பாட்டன் தேடியவற்றை காக்கவேண்டிய கடப்பாடு எனக்கும் இருக்கிறது என் சந்ததிக்கும் தொடர்வதற்கான வழியை வைக்கவேண்டும்.
 9. அநேகமாக புலம்பெயர்ந்து வாழும் பலருக்குள் இருக்கும் அவா. எங்களுடைய சந்ததியைத் தொடராத வேர்மடிக்கு ஏங்கும் வாழ்வு. எங்களில் பலருக்கு அவர்கள் விருப்புகள் பூர்த்தியடையாமலே விடுபடப்போகும் விதியாக அமைந்துவிட்டது தாய்நாட்டுவாழ்வு. விடாப்பிடியாக சிலருக்கு கடின வாழ்வில் அமைதியைத் தேடுவதும் கிடைக்கத்தான் செய்கிறது. நீண்ட காலமாக யாழ் இணையத்தில் இதுபற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நேற்றைய காலத்தில் நாங்கள் தீர்மானித்த எதிர்காலத்திற்கு எதிர்ப்பக்கமாகவே காலம் உருண்டோடிக்கொண்டிருக்கிறது. சென்றடைய வேண்டிய இடத்தை அடையாமல் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்குள்ளேயே தேங்கவேண்டிய கட்டாயத்தால் பல புலம்பெயர்ந்தவர்கள் பின்வாங்கி தாயகம் சென்று வாழ்தல் பற்றியே பேசும் சக்தியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையை எதிர் கொண்டும் ஊரில் வீடுகட்ட எத்தனிக்கும் சுமேயை பாராட்டாமல் நகர முடியவில்லை. வீடுகட்டுதல் என்பது அங்கு வாழாதபோது இலகுவானதல்ல. புலம்பெர்ந்த நாடுகளில் ஒவ்வொருவரும் வாழ்வைத் தொலைத்துத்தான் வளத்தை எடுக்கிறார்கள். முதுமை கோடிட்டபின்னர் இழந்த வாழ்வை எண்ணி ஏங்குவது அனைவருக்கும் பொருந்தும். இங்குதான் நமக்கான என்ற தேடல் தொடங்குகிறோம். இருக்கும் சொற்ப வளத்தைக் கொண்டு முதுமையை செதுக்க எத்தனிக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றமே பலருக்கும் மிஞ்சிவிடுகிறது. துணிந்து பெருங்காரியங்களில் இறங்க முடியாமை. மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலமை என நிலை மாறிவிடுகிறது. ஒரு விடயம் செய்ய எண்ணினாலும் சூழல் சாதகமாக அமைவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் சுமேயும் அந்நிலைக்குள் அகப்பட்டுவிடுவார். அதற்குப்பின்னர் சுமேயால் தன் சுய எண்ணங்களை ஈடேற்றுவது கடினம். இப்போது சுமேயால் முடியும். மேலே பல நண்பர்கள் நன்றையும் தீதையும் தத்தம் அநுபவங்களையும் எழுதி உள்ளார்கள். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்வழி செல்லுங்கள். மனம் கொண்டதே மாளிகை. கடினவாழ்வு கண்டு அமைதி கிடைப்பது வரம். நாளை என்னுடைய பேரப்பிள்ளைகள் வேர்மடி தேடும்போது வெறுமையாகிவிடக்கூடாது என்பதற்காக நிலவேறிய கிழக்கு வான் என்வீட்டு மொடடைமாடியில் இருந்து அந்திசாயும் தெற்கு முகம் சூரியன் விடைபெறும் மேற்கு எல்லை
 10. TNRA ஒன்றியத்தினரால்... பணம் கிடைத்தமைக்கான, நன்றிக் கடிதம் யாழ் இணைய பொறுப்பாளர் மோகனால் அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. தொடர்ந்தும் இணைந்திருப்போம். யாழ் இணையத்தின் பணி தொடரட்டும். இணைந்து செயற்படும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
 11. வணக்கம் பாலபத்திரர் வாங்கோ ஆமா "ஓணாண்டி" என்றால் என்ன பொருள்?
 12. சுமே எனக்கும் இந்த விடயத்தை கற்றுக் கொள்ள ஆசையாக இருக்கு. எப்படி கற்றுக் கொள்வது?
 13. ஏற்கனவே யாழுக்குள்ளும் கோவிட் 19 நுழைஞ்சிட்டுதாம் அதான் பழைய கிருமிகளை வெளில நிற்பாட்டி வச்சிருக்கு என்று தகவல்
 14. The Ontario government has ordered all publicly funded schools to be shut down for two weeks after March Break due to concerns about coronavirus. “Since we first learned of COVID-19 as an emerging public health issue, Ontario has been diligently monitoring the developing situation to protect the health and well-being of all Ontarians,” a joint statement from Premier Doug Ford, Health Minister Christine Elliot and Education Minister Stephen Lecce said Thursday afternoon. “Based on advice from Dr. David Williams, Ontario’s Chief Medical Officer of Health and the experts at the COVID-19 Command Table, the minister of education has issued a ministerial order to close all publicly funded schools in Ontario for two weeks following March break in response to the emergence in Ontario of COVID-19.” https://globalnews.ca/news/6668240/coronavirus-ontario-schools-closed/
 15. ணக்கம் சுமே சர்வதேச மகளிர்தின வாழ்த்துகள் “கல்யாணம் பேசட்டோ” இன்றைய நாளில் பேசப்படவேண்டிய விவாதிக்க வேண்டிய விடயம். இந்த தலைப்பில் எழுத முற்படும்போது “திருமணம் அவசியமா” என்ற கருத்து என்னுள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. இக்கேள்வி எனக்குள் எழுவதற்கான காரணங்கள் பல அவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம். முதலில் திருமணம் பேசுதல் என்பது ஒரு ஆணோ பெண்ணோ தம்மை தம்முடைய வாழ்வை நிர்ணயிக்கும் திறமையற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் பெற்றோரால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆக பெற்றோரால் சுட்டிக்காட்டப்படும் வரன்களுக்குள் முடக்கப்பட்டதாகவே அந்த ஆண், பெண் இருவருக்குமான கனவு குறுக்கப்படுகிறது. பெற்றோரால் இந்த பரந்த வெளியில் விரிந்து பயணிக்கமுடியாது. புலம் பெயர்ந்து வாழும் பிள்ளைகளால் முடியும், ஆனால் அவர்களுக்கான அனுமதி பெற்றோர் தமக்குள் வகுத்திருக்கும் எல்லை மீறிப் போனால் மாத்திரமே கிடைக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த நிலைக்குள் தத்தளிக்கும் பிள்ளைகள் அதிகம். பெற்றோரை மீறுவதா இல்லை தமக்கான எல்லைகளை பெற்றோர் சமூகத்திற்கு ஏற்ப மட்டுப்படுத்திக் கொள்வதா என்பதில் இருதலை கொல்லியாக தடுமாறி தோற்றுப்போனவர்களும் உண்டு. வெற்றி பெற்றவர்களும் உண்டு. ஆக திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் குடும்ப, சமூக வாழ்விற்கேற்ப மாறுபடும். முற்போக்கு என்று எடுத்துக் கொண்டால் ஆணோ , பெண்ணோ தனக்கான துணையை தானே தெரிவு செய்து வாழ்வது ஆகும். அங்கு இனம், சாதி , மதம் , பிரதேசம், தராதரம் , சாதகம் என்பன விடை பெற்றிருக்கும். அவர்கள் திருமணம் செய்வது கூட அவர்கள் விரும்பினால் மாத்திரமே. இதில் துணை மாற்றங்கள் கூட அடிக்கடி நிகழ வாய்ப்புண்டு. இதை நமது சமூகம் மிருகவாழ்விற்குள் உள்ளடக்கிவிடும். ஆக கூடிய சுதந்திரம் என்பதை நம்மால் ஒருகாலமும் ஏற்றுக்கொள்ளமுடியாது. தனது இனத்திற்கான வாழ்வியல் பண்பை எந்த ஒரு இனமும் அவ்வளவு சீக்கிரம் இழந்து விடாது. அந்த வகையில்தான் நாம் இன்று., கடந்த 3 வருடங்களாக ஒரு திருமண ஒருங்கிணைப்பாளராக பயணித்துக் கொண்டிருக்கிறேன். எனது அடிப்படை அநுபவத்திலிருந்தே இங்கு எழுத முற்படுகிறேன். “கல்யாணம் பேசுதல்” என்பது பெற்றோரின் விருப்பு அடிப்படையிலேயே நிகழ்கிறது. முக்கியமாக சமூக குழும ம் (சாதி) மதம், பிரதேசம், தராதரம், உத்தியோகம், சாதகம் இந்த ஆறுவகையாக எதிர்பார்ப்புகளும் நிரவப்படும்போதே பெற்றோரால் பிள்ளைகளுக்கு அவர்களுக்காக தாங்கள் தெரிவு செய்தவர்களின் படங்களைக்காட்டி உனக்குப் பிடிக்கிறதா? என்ற கேள்வியே முன்வைக்கப்படுகிறது. அங்குதான் விருப்பம் அல்லது இல்லை என்பதை பிள்ளைகளுக்கு முடிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. படத்தை மட்டுமல்லாமல் கதைக்கவும் அதன் பின்னர் முடிவெடுக்கவும் பெற்றோர் சுதந்திரம் வழங்குகிறார்கள். அதாவது தாங்கள் தீர்மானித்தவர்களுக்குள் மாத்திரமே பிள்ளைகள் தெரிவு செய்ய வேண்டும் என்று பெற்றோரின் எதிர்பார்ப்பு இருக்கிறது. உண்மையிலேயே பல வழிகளிலும் வடிகட்டி பிள்ளைகளுக்கான தெரிவுகளை மட்டுப்படுத்தி பிள்ளைகளில் திணிக்க முற்படுகிறார்கள். இக்காரணத்தாலேயே இன்றைய காலத்தில் புலம் பெயர்ந்த நமது சமூகத்தில் அதிகபடியான பிள்ளைகள் திருமணம் செய்யும் எண்ணமே குறைந்தவர்களாக இருக்கிறார்கள். அதிலும் 83 ஆம் ஆண்டுக்கும் 90 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த பலரின் திருமணம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. பெற்றோர் பிள்ளைகளின் விருப்பிற்கேற்ற துணையைத் தெரிவு செய்வதைக்காட்டிலும் தம்முடைய விருப்பிற்கேற்ப பிள்ளைகளுக்கான துணைகளைத் தேடி தோற்றுப் போய்கொண்டிருக்கிறார்கள். 90 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட பிள்ளைகள் தமக்கு முன்னரானவர்களின் நிலையை உணர்ந்து தமது வாழ்வை நிர்ணயிக்கும் வலிமையை அதிகம் பெற்றிருக்கிறார்கள். பெற்றோர் திருமணம் பேசுவதில் தவறில்லை. ஏனெனில் புலம் பெயர்ந்த இனமாக இருக்கும் நாம் நம் இனத்தின் அடையாளத்தை பேணுதல் வரவேற்கவேண்டிய விடயமே ஆனால் நாமோ வச்சா குடுமி அடிச்சா மொட்டை என்பதற்கு ஒப்பாகவே உள்ளோம். பிற நாட்டவரை பிள்ளைகள் திருமணம் செய்தால் ஏற்றுக்கொள்வதில் காட்டும் அக்கறையை நம்மவர்களுக்குள் பிள்ளைகள் காதலித்தால் காட்டுவதில்லை. ஏகப்பட்ட விசாரணகளூடாகவே கடக்கிறோம். அல்லது பிள்ளைகளின் மனங்களில் விசவிதைகளை நம்மை அறியாமலே திணித்துவிட்டு திருமணத்திற்கு சம்மதிக்கிறோம். பெற்றோர் சம்மதித்து திருமணம் செய்து கொடுத்த பிற்பாடு பிள்ளைகள் மனதில் அவர்கள் விதைத்த விசவிதைகள் இளங்குடும்பத்தில் பிரச்சனையையும் பிரிவினையையும் ஏற்படுத்தி விடுகின்றன. விவாதிக்க வேண்டிய விடயத்தை விட்டுவிட்டு வேறு எங்கோ செல்கிறேன் என்று எண்ண வேண்டாம். இத்திரியில் கல்யாணம் பேசட்டோ என்று ஆரம்பித்து தராதரத்தில் வந்து நிற்கிறோம். நமக்குள் மாற்றங்கள் சாத்தியமற்றது( இன்றைய பெற்றோர்) இந்த தலைப்பை தொடக்கிய சுமேயே பல இடங்களில் முற்போக்காக இருந்தாலும் நம் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாபங்களின் எச்சத்தையும் அவரிடம் காணமுடிகிறது. என்னுடைய அநுபவத்தில்… என்னிடம் திருமணம் பேசத் தந்தால் தங்கள் பிள்ளைக்கு வேற சாதி ஆட்களை தருகிறீர்கள் என்று என்னிடமிருந்து தம்முடைய விண்ணப்பங்களை மீளப்பெற்ற அதி உச்ச சாதிய திமிரில் என்னைக் காயப்படுத்தியர்களையும் கடந்திருக்கிறேன். தீவுப்பகுதி , மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குள் மணமக்கள் வேண்டாம் என்று நிபந்தனைகள் இட்டவர்களையும் கண்டுள்ளேன், யூனியில்கூட தராதரம் தேடுபவர்களோடும் பயணிக்கின்றேன். நம்மவர்களுக்குள் இரத்த த்தோடு ஊறிப்போனவை சாதி , மதம், பிரதேசம், தராதரம் , சாதகம் ஆக்குறைந்த பட்சம் இதில் ஏதாவது ஒன்றாகிலும் கல்யாணம் பேசும் பெற்றோரிடம் கண்டிப்பாக இருந்தே தீரும். சாதியே தேவையில்லை என்று விண்ணப்படிவத்தில் கேள்வியைச் சேர்க்காமல் விட்டேன். பதிவு செய்பவர்கள் கேள்வியைக்காணாமல் தேடிவிட்டு சொல்கிறார்கள். நாங்கள் நல்ல ஆட்கள் பாருங்கோ மற்ற ஆட்களுக்குள் எங்களுக்கு மணமகனோ மணமகளோ வேண்டாம். நானும் அப்படியா நல்ல ஆட்கள் என்றால் யார் என்று கேட்பேன். பதில் இதில் வாசிக்கும் அனைவருக்கும் விளங்கும். இந்த இடத்தில் நான் தென் தமிழீழ மக்களுக்கு மிகப்பெரிய சல்யூட் அடிக்கவேண்டும். இன்னொரு இனத்தால் அதிக துன்பத்தை அநுபவிக்கும் அவர்களுக்குள் சாதி, மதம், தராதரம், பிரதேசம் என்ற எண்ணப்பாடு மிகக்குறைவு. திருமணத்திற்குத் தகுதியான பெண் அல்லது ஆண் என்பதை மாத்திரமே எதிர்பார்க்கின்றார்கள். சுமே கல்யாணம் பேசட்டோ என்ற கேள்வியில் நீங்கள் பேச முற்பட்ட விடயங்களுக்கு தீர்வு கிடைக்காது. விவாத்தில் தெளிதலை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும் முடிவை அடைவது மிகக்கடினம்.
 16. கண்மூடி திறந்த மாதிரி இருக்கு அதற்கு; 1 வருடம் கடந்துவிடடதா? ஏதாவது கிறுக்கவேண்டுமே.......