Jump to content

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  5753
 • Joined

 • Last visited

 • Days Won

  37

Posts posted by வல்வை சகாறா

 1.  

  28 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

  பிரிந்தவர்களுக்கு ஜாலி,சந்தோசம்,கும்மாளம்.. பிள்ளைகளுக்கு பூமி நழுவி தலையில் வீழ்ந்தது போல் துயரம்.. என்னய கேட்டா நானும் சொல்லுவன் கலியாணம் கட்டினதில இருந்து மனிசற்ற நிம்மதியே போச்சு.. வேலையால வந்து கொஞ்சநேரம் கதிரையில சரிஞ்சு இருந்து நிம்மதியா யாழிலை எழுத முடியல.. எந்த நேரமும் போனுக்க தலைய கவுண்டு கொண்டு.. உந்த நேரத்துக்கு பிள்ளையளுக்கு குளிக்கவாத்து வீடு கிளீன் பண்ணி வீட்டு வேலையல் செய்யலாம்தான எண்டு புறுபுறுப்பு.. லீவு நாளையில நிம்மதியா படுத்து ரெண்டு மூண்டு மணிக்கு எழும்புவம் எண்டால் விடிஞ்சாப்பிறகும் வீட்டில படுத்திருந்தால் வீட்டுக்கு தரித்திரமாம்.. நிம்மதியா மனுசர் லீவு நாள் எண்டு நித்திரை கொள்ள முடியுதில்ல.. வேலையால வந்தா பிள்ளையளுக்கு பால் முடிஞ்சுது பழம் முடிஞ்சுது கடைக்கு போ எண்டா வேலை உடுப்பும் மாத்தாமால் அந்தக்களையோட கடைக்கு ஓடோனும்.. ஒரு பக் நிம்மதியா குடிக்கேலா.. ஏச்சு பேச்சு.. வீட்டில இறைச்சி சமைக்கிறதெண்டா பெரும் சண்டை.. நான் மட்டும்தான் சாப்பிடுறது.. கிழமையில அஞ்சு நாள் மாமிசம் இல்ல.. தனிய இருக்கேக்க நானே ராஜா நானே மந்திரி.. ஊர் ஊரா.. நாடு நாடா சுத்துவன்.. கலியாணம் கட்டி எல்லாம் போச்சு..😢😢😂.. என்னய இப்ப கேட்டா நானும் டைபேர்ஸ்க்கு டபில் ஓகே சொல்லுவன்..😂 ஆனால் பிள்ளையள என்னட்ட தரோனும்..

  எனக்கு வேலையால வந்து கதவு திறக்க பிள்ளயள் ஓடிவந்து கட்டிப்பிடிச்சு கொஞ்ச எல்லா களைப்பு கவலை எல்லாம் போயிடும்.. இப்ப கொரோனாவால வந்து குளிச்சுதான் பிள்ளையள தூக்கோனும்.. அதே எவ்வளவு கஸ்ரமா இருக்கு குளிக்கும் வரையும் வெயிட் பண்னுறது.. என்னால எல்லாம் பிள்ளையள விட்டிட்டு வாழுற ஒரு வாழ்க்கையை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது.. அதற்காக நான் என்னுடைய எல்லா சந்தோசங்களையும் இழக்க தயார்..

   

  கலியாணம் கட்டிட்டு டைவேர்ஸ் எடுக்குரது ஒரு பிரச்சினையே இல்லை.. அது அவரவர் சுதந்திரம் எண்டிட்டு போகலாம்.. ஆனால் பிள்ளைகளை பெற்ற பின்பு டைவேர்ஸ் எடுப்பது என்பது மிகப்பெரிய ஒரு முடிவு.. மிகத்துயரமானது… குழந்தை உள்ளவர்களுக்கிடையே நடக்கும் ஒவ்வொரு டைவேர்சிலும் இருவரில் யாரோ ஒருவர் குழந்தைகளை விட்டு பிரிகிறார்கள் தம் சுயநலன்களுக்காக.. எப்படி இப்படி சுயநலவாதி ஆகிறார்களோ தெரியவில்லை.. ஆராய்ந்துபார்த்தால் தம்பதிகளில் டைவேர்ஸ்க்கு காரணமான அந்த ஒருவரோ அல்லது இருவரோ இவர்களின் ஏதோ ஒரு குழந்தைகளை விட முக்கியமான சுயநலம் இருக்கும்(உ+ம்- குடிகார கணவனுக்கு பிள்ளைகளை விட குடி முக்கியம்) குழந்தைகளுக்காக உங்கள் சுயநலன்களை விடமுடியாதவர்கள் திருமணம் செய்தபின் கொஞ்சகாலம் எடுத்து யோசிச்சு நமக்கு இது ஒத்துவருமா எண்டு சிந்தித்து விட்டு பிள்ளபெறுவது உத்தமம்.. உங்கள் சுயநலன்களுக்காக பிள்ளைகளை கேட்காமல் நீங்களா பெத்த பிள்ளைகளை நீங்களே தண்டிக்க குடாது..

  பி.கு- கலியாணம் கட்டாமல் இருக்கும் பசங்க என்னமாரி பொறுப்பில்லாமல் ஜாலியா இருக்கவேணும் எண்டு ஆசைப்பட்ட தயவு செய்து கலியாணம் கட்டாதைங்கோ.. பிறகு கு.சா அண்ணை போட்ட படம் மாதிரி அழுத கண்ணீரும் சோறும்தான்..😂😂😂

  அன்ரன்பாலசிங்கம் அண்ணை சொன்னமாதிரி.. அது ஒரு துன்பியல் சம்பவம்… அதை ஏன் கேக்குரியல்..😂😂😂

  ஓணாண்டி வேலைக்கு ஒஞ்சி விவாகரத்து என்பது மேட்டரே இல்லை வாழ்வோம் என்று எத்தனிப்பதும் ஒவ்வொரு கட்டத்திலும் தோற்று விரக்தியடைந்து மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இருசாரரும் தமக்கு தாமே உபத்திரமாவது மட்டுமின்றி தம்மைச் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனையானவர்களாக மாறுவதைக் காட்டிலும் அந்நிலையில் இருந்து விலகிச் செல்லலாம். நீங்கள் குறிப்பிடும் வாழ்க்கை இரசனைக்கு உரியது. செல்லச் சண்டைகள். அன்பான ஊடல்கள் உரிமைகளை உணரவைக்கும் சின்னச்சின்ன கண்டிப்புகள் ரம்மியமானவை. இவை விவகாரத்துக்கு ஒரு காலமும் அடிகோலாது😁

  • Like 5
 2. ஏதாவது புதிய அணுகுமுறையை புதிய வருடத்தின் பிரகடனமாக ஐயா சம்பந்தர் எடுத்திருப்பாரோ?

 3. இலங்கையை உலக வரைபடத்தில் காணவில்லை என்று நாளைக்கு செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை😁

 4. மகிந்த ஆதரவாளர்கள், நெருங்கிய சகாக்கள் இம்மாதம் வெளிநாட்டு விசாக்கள் சகிதம் நாட்டைவிட்டு வெளியேறுவதில் மும்முரமாக இருப்பதாக காற்றுவாக்கில் கதை அடிபடுகிறது யாருக்கேனும் தெரியுமா?

 5. 19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

  சேம் கியர்… நான் நினைக்குரன் வயசாகுறதால வாற சோர்வோ தெரியலை..

   

  அட இவ்ளா நாளும் இந்த திரி என் கண்ணுல படேல்ல.. நல்ல ஒரு திரி..

  யோவ் ஓணாண்டி இப்பல்லாம் வயசுபோனாப்பிறகுதான் வாழ்க்கையே... இப்பவே சோர்ந்தால் மிச்சம் இருக்கிற 50 வருசத்தை எப்படிப்பா தாண்ட முடியும்?

  லைப்ல த்ரிலிங் இல்லாமப்போச்சு அதான்...

 6. 1 minute ago, ஈழப்பிரியன் said:

  திண்ணை எப்போதும் போல இருக்கும்.
  ஒரு மாதகாலம் களத்துக்கு வரவில்லை என்றால் தானியங்கி எட்டி உதைத்துவிடும்.
  அப்புறம் கொஞ்ச கருத்து எழுதினாலே சாதாரண களஉறசுகள் போல உறவாடலாம்.

  சுலபமான வழி மட்டுறுத்தினர்களுடன் தொடர்பு கொண்டால் தானியங்கியை இயக்கிவிடுவார்கள்.
  விரும்பிய மாதிரி புகுந்து விளையாடலாம்.

  களத்திற்கு ஒவ்வொரு நாளும் வந்தேனே.. ( வாசிக்க மட்டும்) எப்படி என்னை எட்டி உதைக்கலாம் ஆ?

  இது கூட்டுச்சதியா? அல்லது கூட்டாளிகள் சதியா?🤬

  • Like 1
  • Haha 1
 7. இங்க பார்ரா இவ எங்கேர்ந்து வர்றா என்றெல்லாம் கேட்கப் படாது. இந்த களமாற்றங்கள் செய்த பிறகு திண்ணை இல்லையோ.... கூட்டாளிகளை குசலம் விசாரிக்க ஏலாம இருக்கு......

  • Haha 1
 8. ' நான் நெரிசலான தொழிற்சாலைகளில் இருந்து வளர்க்கப்படாத கோழி!

  நிம்மதியாக பறக்கும் ஒரு பில்லியன் பறவைகளில் ஒருவன்.'

   

  இதுதான் அடையாளம்.🙂

  • Like 1
 9. நல்ல பதிவு கிருபன்.ஒன்றிரண்டைத்தவிர மிச்சமெல்லாம் பார்த்திருக்கிறேன். ஒரு தொகுப்பாக வரும்போது அட நாம இவ்வளவு கதைகளையும்  நம்ம மண்டைக்குள்ளேயும் போட்டு கரைச்சிருக்கிறோமே என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. முன்பு ஒரு காலத்தில் இருந்த கதைகள் அறிதல் கிரகிப்பு என்பதில் இருந்த அதீத ஆர்வம் இப்போது இல்லை. எதையாவது வாசிக்கப் போனாலே தூக்கம் வந்து விடுகிறது.😴

  • Like 1
 10. ஒரு காலத்தில் அண்ணன்களுடன் சேர்ந்து ரஜனி படம் பார்க்கப் பிடிக்கும். இந்தப் படத்தை பார்க்கும்போதுதான் நம்ம ரசிப்புத்தன்மை இவ்வளவு மொக்கையா? என்று கொஞ்சம் வெட்கமாகிவிட்டது. இனி ரஜனி படம் பார்ப்பதென்றால்.... ரைம் வேஸ்ட் என்று விலகிப் போகவேண்டியதுதான்.🤔

 11. வாழ்த்துகள் சுமெ.

  இந்த யாழ்க்களத்தில் உங்களை அறிந்தவரை உங்கள் ஆரம்ப காலங்களையும் படிப்படியாக உங்களை நீங்கள் செதுக்கி செழுமையாக்கி தொடர்ச்சியான எழுத்துகளால் உங்கள் துணிச்சலையும் தளராத முயற்சியையும் அறிவேன், பாராட்டுகள்.

  மற்றவர்கள் கருத்து எவரையும் முடக்க முடியாது. எழுதுவது எல்லோருக்கும் சாத்தியமன்று. கிடைத்த வரத்தையும் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளங்கள்.

 12. இந்த கொரோனாக்  காலத்திலும் கு.சாவின் லொள்ளென்டா பேய் உச்சம் கண்டியளோ... . உடம்புக்குள்ள ஏகப்பட்ட கோதாரி இதுக்குள்ள விடுப்புக்கும் சிவலிங்கத்தாற்ர வீரப்பிரதாபங்களுக்கும் வக்கணையா கதைக்கிறதுக்கும் குறைவில்லை 🤣

  வேதனையைக்கூட இதழ்கடையில் முறுவலிக்க எழுதுவதற்கு கு.சா, இலையான் கில்லர் போன்றோரிடம் கற்கவேண்டும்.  அநுபவபகிர்வுக்கு நன்றி கு.சா

  • Like 1
 13. அன்புத்தோழியர் கண்மணி தமிழினிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு சில வருடங்களாக துயர் சூழ்ந்த காலத்தில் மூழ்கி இருப்பதை அறிவேன். பொலிற்றாவிற்கு ஆத்ம சாந்தியையும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மனத்திடத்தையும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்

  • Thanks 1
 14. இப்ப இல்லை எப்பவோ சிங்கள மக்களும் உணரத் தொடங்கிவிட்டார்கள். தமிழர்களை ஓப்பினாக உலக ஆதரவோடு அடிமையாக்கியவர்கள் தங்கள் இனத்தையும் வெளியே தெரியாதமாதிரி பயமுறுத்தி பழிவாங்கி அடக்குகிறார்கள். எப்போதோ அழியத் தொடங்கிய நாடு இப்போது மிகவும் வேகமாக அழிகிறது.

 15. 4 minutes ago, சுவைப்பிரியன் said:

  சரி சரி நீங்கள் இப்பவும் யாழில் இருக்கிறியள்.ok வா.😁

  அடுப்படிப்பூனை அவ்வளவு சீக்கிரம் யாழை விட்டு போய்விடமுடியுமா?

  சதா எல்லாவற்றையும் வாசிக்கிறனாக்கும்.

  இங்க கனபேர் கிரீடங்களோட சுத்தினம் நமக்கு பூந்திரிதான்... 🙃

 16. இப்ப என்னதான் முடிவு தெளிவாக சொல்லுங்கள். பௌத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டல் பற்றி, அதற்கு மறுப்புத் தெரிவித்து எமது தமிழர் தரப்பு ஏதாவது அறிக்கை விட்டார்களா? அத்து மீறிய செயலாக அறிவித்தார்களா? அல்லது நமது தனித்துவங்களைத் தாரவார்த்து சிங்களத்திற்கு எழுதிக் கொடுத்து விட்டார்களா?

 17. 5 hours ago, Maruthankerny said:

  தொண்டு நிறுவனம் வைத்திருப்பவர் என்றால் சுய கருத்தை வெளிப்படுத்தினால் அந்த நிறுவனம் பாதிக்கப்படும்.

  ஆம் நிச்சயமாக காரணம் அந்த நிறுவனத்துக்கு எல்லா கருத்து உடையவர்களும் நன்கொடை கொடுத்து கொண்டு இருப்பார்கள் ஒரு சாராரை கருத்தால் சீண்டும்போது அவர்கள் தங்கள் நன்கொடையை நிறுத்திக்கொள்வார்கள். ஆதலால்தான் பல பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தமது கருத்துக்களுக்கு அடிக்கடி அப்போலீஜிஸ் செய்வதை செய்திகளில் படித்து இருப்பீர்கள். 

  சுய தொழில் வைத்திருப்பவரும் சுரணையற்றவராக இருந்தால் முன்னேற முடியும். உண்மைதான்.

  அது  உங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பதை பொறுத்தது 
  சில தொழிலில் சுரனையுடன் இருந்தால் அதிக லாபம் ஈட்ட முடியும்  

   

  நேற்று வரைக்கும் வீரமாகவும் மொக்கையாகவும் கர்ச்சித்தவர் இன்று கும்பிடு போட்டு கூனலாக மாறிய பொழுதில் உரையாடுகிறோம்.

  தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் நலனுக்காக ஒரு கட்சி நடத்துகிறவர் 
  தமிழ்நாட்டு முதல்வரை சென்று சந்திப்பது எப்படி கூனல் ஆகி குறுகும்?

  புலிகள் சந்திரிக்கா ரணில் மகிந்த வென்ற போது வாழ்த்து தெரிவிக்கவில்லையா?
  ஏன் அப்போது இந்த கூனல் கும்பிடு பற்றி நீங்கள் எழுதவில்லை? 

   

  உங்கள் எவரிலும் எந்த மாற்றமும் இல்லை.

  உண்மையுடனும் உரிமைக்காகவும் நிற்கும்போது எந்த மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
  ஏன் மாறவேண்டும்? எப்படி மாறவேண்டும்? என்பதை நீங்கள் எழுதினால் ... மேற்கொண்டு எழுதலாம். 
  மாறுவதுக்கு ஒரு இஞ்சி கூட இல்லை வென்றாகவேண்டும் விடுதலை என்பதே எமது பேச்சு 

  எல்லோரையும் எதிர்ப்பதும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் நிறைய எதிரிகளை உருவாக்குமேயன்றி வளர்ச்சியைத் தராது.

  அப்படியே பிளேட்டை மாற்றுகிறீர்கள் ...
  தலைப்பு சீமான் தமிழக முதல்வரை சந்தித்தார் 
  கருத்துக்கள் போதுமான சாணியை சீமான் மீது அடித்தல் 
  ஆமையை ஓட விடுதல் நடக்க விடுதல் என்று சித்திர வேலையெல்லாம் செய்துவிட்டு (உங்கள் தரப்பு) 
  இப்படி ஒரு வார்த்தையை எப்படி எழுதுகிறீர்கள்? 

  தமிழ் இனத்தின் எதிரிகள் எல்லா வேஷத்திலும் இருகிறார்கள் அவர்கள் வேஷங்களை 
  வெளிக்கொணர வேண்டிய தேவை இப்பொது இருக்கிறது. யார் அடிக்கிறான் என்பதே தெரியாமல் 
  எமது இனம் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறது .. அடையாளம் காட்டினால் கொஞ்சம் விழிப்புணர்வு இருக்கும். தமிழகத்தில் இந்த விழிப்புணர்வு இப்போ வர தொடங்கி இருக்கிறது 

  "கூடாதார் நட்பு கூடாதே" என்பது எம் மூதையாரின் உபதேசம் பல இடங்களில் எனக்கு கை கொடுத்து இருக்கிறது நீங்களும் நம்பி கடைப்பிடிக்கலாம்.  

  தோற்போம் என்று தெரிந்தும் மிகத் தீவிரமாக எதிர்ப்போம். எதிர்ப்பக்கம் வென்றபின் மண்டியிடுவோம்

  "தன்னிலை தாழாமையும் தாழும் இடத்து உயிர் வாழாமையும் மானம் எனப்படும்"  

  எதிரி எவ்வளவு பெரியவன் என்பது துரதிஷ்டாவசமாக களத்தை நிர்ணயிப்பது இல்லை 
  எமது இனம் சூழல் எவ்வளவு அழிவின் ஆபத்தில் இருக்கிறது என்பதே களத்தை நிர்ணயிக்கிறது.
  வரலாறு பூராக தோல்விகள் இருக்கிறது என்பதுக்காக புதிய வரலாறை எழுத போராடாதே என்பதுதான் 
  மிக பெருத்த தோல்வி. மற்றது எல்லாம் அதற்கு அடுத்தாற் போல் வருவதுதான். 
   

  இதனை நீங்கள் சரியென்று ஆணித்தரமாக ஆதரிப்பவராக இருந்தால் சாந்தியையோ என்னையோ ஏன் எச்சரிக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை.

  இப்படி ஒரு புது புரளியை ஏன் கிளப்புகிறீர்கள் என்பதுதான் இங்கு புரியாதது .
  வரப்போகும் எதிர்வினையை முன் கூட்டியே சொல்லப்பட்டு இருக்கிறது 
  நேசக்கரம் தோல்வியடைய சாந்தியக்காவின் இப்படியான எழுத்துக்கள்தான் காரணம் 
  அதை அவர் புரியவில்லை எனபதுக்காக... பார்த்துக்கொண்டு இருக்கும் நாமும் சேர்ந்து கவிழ்த்துவிட வேண்டுமா? 

  ஆக சூழலுக்கேற்ப மாறிப்பயணித்தாலே வளர்ச்சி என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். கொள்கை கோதாரியெல்லாம் நம்ம வளர்ச்சிக்கு உதவாது அப்படித்தானே.

  என்னய்யா நாதம் உங்கள் அத்திவாரமே ஜெலி மாதிரி நொழுநொழுக்கிறது.

  சூழலுக்கு ஏற்ற மாறுதல் என்பதே இலக்கு நோக்கி நகர்வதுக்குத்தான் 
  இலக்கு இல்லாதவன் அந்த இடத்திலேயே நின்று கொள்ளலாம் ஒரு நஷடமும் இல்லை 
  இலக்கு இருப்பவன் எந்த சூழலையும் தனக்கு சாதகமா பயன்படுத்தி முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் 
  ஏற்ற சூழலுக்காக காத்திருக்க முடியாது ....... எந்த சூழலையும் தனக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் 

  வெளித்தோற்றத்தை ஒரு சூழலால் ஜொலி மாதிரி வைத்த்திருந்தால் பரவாயில்லை 
  உள்ளுக்குள் அந்த இரும்பு பிடி என்பது கொள்கையில் இருக்கவேண்டும் 

  தொல் திருமா 2009 இல் மகிந்தவைச் சந்தித்தது தவறு என்றுதான் நிறையக் கூப்பாடுகளை இக்களத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது உங்கள் கூற்றின் படி அது தவறல்ல, காரணம் தொல் திருமா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு தலைவன் அந்த மக்களுக்காக அன்றைய நிலையில் ஆட்சியில் இருந்தவர்களுடன் இணைந்து நடக்கவேண்டிய கடப்பாடு அவருக்கு முன்னே இருந்தது. அவர்களுடைய நலனுக்காக அவர் செயற்பட்டார். உங்கள் கூற்றின் அடிப்படையில் அவரின் மீதான சேறடிப்பு விலத்தப்படுகிறது. இது உதாரணந்தான் நாதம்.

  துரோகத்துக்கு தெரிந்தே துணை போவதும் 
  மக்களுக்காக பணி செய்வதையும் எப்படி ஒரே தராசில் போட்டு 
  நிறுவுகிறீர்கள் என்பது புரியவில்லை. மகிந்த மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆக 2009இல் என்ன இருந்தது?
  ஏன் சென்றார்கள்? என்ன செய்தார்கள் என்பது எல்லாம் எமக்கு காலம்தாழ்த்தி என்றாலும் 
  எமக்கு தெரிந்த பின்பும் ஏன் இதை பற்றி விவாதிக்க வேண்டும்?
  திருமாவும் இதில் ஏமாளித்தான் ..... அந்த அறிவாவது அவருக்கு இனி வரட்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு. 
  இழைத்த துரோகங்களை இனி மாற்ற முடியாது என்றாலும் ....... தொடர் துரோகங்களை தடுக்க வேண்டிய தேவை இருக்கிறது 

  நீண்டகாலமாக இந்த களத்தில் நீங்கள் எழுதுகிறீர்கள். ஏதோ வாதாடுவதாக நிறையவே சொதப்புவது உங்களுக்கு அத்துப் படி மருது. நீங்கள் ஆதரிக்கும் ஒரு விடயத்தை சரியென்று நிறுவ ஏகப்பட்ட சம்பந்தம் இல்லாதவற்றை பத்தி பத்தியாக எழுதுவதொன்றும் உங்களுக்குப் புதியதல்ல. நாதமும் நீங்களும் ஒருவரா? உங்களுக்கு பழைய கதைகள் நிறையத் தெரியும்.  அவ்விடயங்களில் நிறையவே ஏற்புடைய கருத்துகள் உள்ளன. ஆனால் பல இடங்களில் விவாதங்களை நீர்த்துப் போகவைக்கும் பாணி உங்களுடையது.  இப்ப என்ன சொல்ல வருகிறீர்கள்.  உங்களுடைய சீமான் சொக்கத்தங்கம் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். தயவுசெய்து என்னை என் ஒழுக்கத்தை சேறடித்து விடாதீர்கள் 🤣🤣🤣🤣🤣

  • Like 1
  • Haha 3
  • Confused 1
 18. 42 minutes ago, Nathamuni said:

  உங்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

  நேசக்கரம் ஒரு தொண்டு அமைப்பு. அதன் நோக்கங்கள் பாதிக்கபடகூடாது.

  இவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அறிவுரையாக சொல்லி இருந்தேன். நீங்களும் ஒரு வியாபார நிறுவனம் நடாத்தி, இங்கே விளம்பரமும் கொடுத்துக்கொண்டே, அரசியல் பேசுவது சரியல்ல என்று முன்னர் சொல்லி இருந்தேனே.

  அதனையே மீண்டும் சொல்கிறேன். எமது இனத்தில், எத்தனை பெண்கள் முன்னே வந்து தொழில் அல்லது தொண்டு செய்கிறார்கள்.

  அப்படி வரும் சிலர், அறியாமையினால் தமது தொழிலுக்கு அல்லது சேவைக்கு ஊறு விளைவிப்பதனை சுட்டி காட்டினால், திசை திருப்புவது ஆகாது.

  வேலை என்றால் என்ன என்று தெரியாத வீணர்கள் சொல்லட்டும். ஒரு தொழில் செய்யும் நீங்கள் சொல்ல கூடாது அக்கா.

  builders, garden  வேலை செய்பவர்கள் வியாபார பெயர் பொறித்த வான் வைத்து இருப்பார்கள். 15, 20 வருடங்களுக்கு முன்னர், அவர்கள் வீதியில் பெரிய அட்டகாசம் செய்வார்கள். அவர்களுக்கு இப்போது சொல்லப்பட்டது என்னவென்றால், வீதியில், அடுத்தவர்களுடன் கொழுவி பெயரை கெடுத்தால் வியாபாரம் எப்படி வரும். இப்போது அநியாயத்துக்கு நல்லவர்களாக இருக்கிறார்கள். காரணம் வியாபாரம் / தொண்டு. 

  யோசித்துப் பாருங்கள்.
   

  தொண்டு நிறுவனம் வைத்திருப்பவர் என்றால் சுய கருத்தை வெளிப்படுத்தினால் அந்த நிறுவனம் பாதிக்கப்படும். சுய தொழில் வைத்திருப்பவரும் சுரணையற்றவராக இருந்தால் முன்னேற முடியும். உண்மைதான்.

  கடந்த காலத்தில் நமக்காகப் போராடியவர்கள் எல்லோருக்கும் அறிவுரை சொல்ல உங்களைப் போன்றவர்கள் இல்லாததே எங்களின் தலைவிதியை இப்படி மாற்றிவிட்டது.

  தொழில் , தொண்டு என்பதைக் கருத்தில்கொண்டுதான் இந்த உலக இயக்கம் இருக்கிறது. தொல் திருமா 2009 இல் மகிந்தவைச் சந்தித்தது தவறு என்றுதான் நிறையக் கூப்பாடுகளை இக்களத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது உங்கள் கூற்றின் படி அது தவறல்ல, காரணம் தொல் திருமா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு தலைவன் அந்த மக்களுக்காக அன்றைய நிலையில் ஆட்சியில் இருந்தவர்களுடன் இணைந்து நடக்கவேண்டிய கடப்பாடு அவருக்கு முன்னே இருந்தது. அவர்களுடைய நலனுக்காக அவர் செயற்பட்டார். உங்கள் கூற்றின் அடிப்படையில் அவரின் மீதான சேறடிப்பு விலத்தப்படுகிறது. இது உதாரணந்தான் நாதம்.

   

  நேற்று வரைக்கும் வீரமாகவும் மொக்கையாகவும் கர்ச்சித்தவர் இன்று கும்பிடு போட்டு கூனலாக மாறிய பொழுதில் உரையாடுகிறோம். வீரமாக  கர்ச்சித்தவர் மொக்கையாகவும் கர்ச்சிப்பதை முன்னர் சுட்டிக்காட்டி இருந்தேன். அப்போதும் மென்போக்காக சில எச்சரிக்கைகளை நாதம் நீங்கள் மட்டுமல்ல இன்னும் சிலரும் முன்வைத்திருந்தீர்கள் என்பது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. உங்கள் எவரிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே பல்லவி. எல்லோரையும் எதிர்ப்பதும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் நிறைய எதிரிகளை உருவாக்குமேயன்றி வளர்ச்சியைத் தராது. தோற்போம் என்று தெரிந்தும் மிகத் தீவிரமாக எதிர்ப்போம். எதிர்ப்பக்கம் வென்றபின் மண்டியிடுவோம். இதெல்லாம் எதற்கு? ஓ... உங்கள் பார்வையில் நமது பொது வளர்ச்சிக்கு என்பதாக இருககும். இதனை நீங்கள் சரியென்று ஆணித்தரமாக ஆதரிப்பவராக இருந்தால் சாந்தியையோ என்னையோ ஏன் எச்சரிக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை.

   

  ஆக சூழலுக்கேற்ப மாறிப்பயணித்தாலே வளர்ச்சி என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். கொள்கை கோதாரியெல்லாம் நம்ம வளர்ச்சிக்கு உதவாது அப்படித்தானே.

  என்னய்யா நாதம் உங்கள் அத்திவாரமே ஜெலி மாதிரி நொழுநொழுக்கிறது.

   

   

   

  1 hour ago, Maruthankerny said:

  உங்களில் பிரமணப் பெண்களின் சாயல் இருக்கிறது ........
  எதோ ஒரு முன்கோபத்தை சாந்தியக்க மீது வைத்துக்கொண்டு 
  நாதத்தால் அவருக்கு போட்டு கொடுக்க ஆசைப்படுவதுபோல தெரிகிறது 

  சாந்தியக்க மீதான கருத்துக்கள் 
  நிச்சயமாக நேசக்கரத்தை பாதிக்கும் 
  நேசக்கரம் மீது அக்கறை உள்ளவன் எவனும் இதை கடந்துதான் போவான் 

  உதாரணத்துக்கு ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரின் 
  பாலியல் குற்றம் அந்த நிறுவனத்தை பாதிக்கும் என்பதால்தான் அப்படி ஏதும் 
  நடக்கும்போது நிறுவனங்கள் அவர்களை எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் 
  வேலையில் இருந்து தூக்குவது 

  ஆனந்தியின் விடயம் ..... அவர் அவசரப்பட்டு அரசியல் அறிவற்று தான் 
  அப்படி பேசினார் அதன் பலனை அவர் அறுவடை செய்தார். 

  யாரோ ஒருவர் எழுதியத்துக்கு சீமானும் சீமானை ஆதரிப்பவரும் பதில் தரவேண்டும் என்று நீங்கள் 
  எதிர்பார்த்துக்கொண்டு  ..... சாந்தியாக்கமீதான கருத்து அவர் நடாத்தும் சாரிட்டியை பாதிக்காது 
  என்று நீங்கள் தெரியாமல் எழுதுவதாக .......... எனக்கு தெரியவில்லை. 
  (எதோ சூழ்ச்சி போலவே தெரிகிறது) 

  இங்க பாருங்கோவன் மருதற்ற சீண்டலை......

  போற போக்கில  தேன் கூட்டில கல்லெறியிறன் என்று நம்ம மருதர் நினைத்தால் பாவம் மருதர் ஏமாந்து போவார். குளம் குட்டையில கல்லெறிந்தால் எதிர் வினை வராது கண்டியளே.

  • Like 2
  • Haha 1
 19. 17 minutes ago, Nathamuni said:

  உங்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

  நேசக்கரம் ஒரு தொண்டு அமைப்பு. அதன் நோக்கங்கள் பாதிக்கபடகூடாது.

  இவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அறிவுரையாக சொல்லி இருந்தேன். நீங்களும் ஒரு வியாபார நிறுவனம் நடாத்தி, இங்கே விளம்பரமும் கொடுத்துக்கொண்டே, அரசியல் பேசுவது சரியல்ல என்று முன்னர் சொல்லி இருந்தேனே.

  அதனையே மீண்டும் சொல்கிறேன். எமது இனத்தில், எத்தனை பெண்கள் முன்னே வந்து தொழில் அல்லது தொண்டு செய்கிறார்கள்.

  அப்படி வரும் சிலர், அறியாமையினால் தமது தொழிலுக்கு அல்லது சேவைக்கு ஊறு விளைவிப்பதனை சுட்டி காட்டினால், திசை திருப்புவது ஆகாது.

  வேலை என்றால் என்ன என்று தெரியாத வீணர்கள் சொல்லட்டும். ஒரு தொழில் செய்யும் நீங்கள் சொல்ல கூடாது அக்கா.

  builders, garden  வேலை செய்பவர்கள் வான் வைத்து இருப்பார்கள். 15, 20 வருடங்களுக்கு முன்னர், அவர்கள் வீதியில் பெரிய அட்டகாசம் செய்வார்கள். அவர்களுக்கு இப்போது சொல்லப்பட்டது என்னவென்றால், வீதியில், அடுத்தவர்களுடன் கொழுவி பெயரை கெடுத்தால் வியாபாரம் எப்படி வரும். இப்போது அநியாயத்துக்கு நல்லவர்களாக இருக்கிறார்கள். காரணம் வியாபாரம். 

  யோசித்துப் பாருங்கள்.
   

  நாதம் நான் முற்றிலும் உங்களிடம் எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனையில் இலாவகமாக மாட்டிவிட்டீர்களே. விளக்கத்தை சற்று நேரம் கழித்து பதிவிடுகிறேன். வீட்டில் ஒரு கடமை அதை முடித்துவிட்டு வருகிறேன்

 20. 9 minutes ago, Nathamuni said:

  பதில் அளித்தாகி விட்டது. திசை திருப்பும் நோக்கம் எதுவும் இல்லை. ஒரு கேள்வி எழுந்தது. கேட்டேன். பதில் தருவார். இல்லாவிடில், தலையிடாதே தம்பி எண்டுவார், போவேன், அவ்வளவுதான்.

  நாதம் ஒருவர் ஒரு தொண்டு நிறுவனத்தை நடாத்துபவராக இருந்தால் நியாயமாக எழும் கேள்விகளை கேட்பதை தவிர்க்கவேண்டும் என்பதை நீங்கள் மென்மையாக சுட்டிக்காட்டுவது ஏற்க முடியாது.  ஒருவர் தனது கருத்தை ஒரு விவாதத்தளத்தில் முன்வைக்கும்போது பின்னால் ஏற்படப்போகும் தாக்குதல்களுக்கும் தயாரான நிலையில் இருப்பார். பெண் என்ற பிம்பத்தின் மீதான தாக்குதல்கள் கீழ்த்தரமானவையாக இருக்கும் . இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பேசக்கூடிய பெண்கள் ஏதோ வகையில் பொதுத்தளத்தில் நிற்பவர்களே தயவு செய்து சேவையைக் காட்டி முடக்க எண்ணாதீர்கள் 

 21. 27 minutes ago, Nathamuni said:

  சாந்தி அக்கா,

  ஒரு சிறு கேள்வி, முடிந்தால் பதில் தாருங்கோ.

  எனக்கு தெரிந்து, நீங்கள், நேசக்கரம் என்னும் அமைப்பினை நடாத்திக்கொண்டுதானே இருக்கிறீர்கள்.

  அதனை செய்து கொண்டே, இந்த பாழாய்ப்போன அரசியலுகிலை வந்து கருத்து எழுதுவதன் பயன் என்ன?

  சீமான் அரசியலை எதிர்த்து பேச, இங்கே பல வித்துவான்கள் உள்ளார்களே. ஒரு தொண்டு அமைப்பினை திறம்பட நடாத்தும் நீங்கள் அந்த சகதிக்குள் இறங்க என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

  ஒரு பெரிய சேவை செய்யும் பெண்மணி என்ற புரிதல் தான் எனக்கு உண்டு.

  இந்த அரசியல், நேசக்கரத்தின் நோக்கத்தினை பாதிக்காதா என்று கவலை கொள்கிறேன்.

  எனது கேள்வி தவறானது எனின், இந்த தம்பியை மன்னித்து விடுங்கள் அக்கா. 
   

  நாத்ஸ் இந்த திசை திருப்பல்கள் வேண்டாம் சாந்தியின் கேள்விக்கு என்ன பதில்? 

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.