Jump to content

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5810
  • Joined

  • Last visited

  • Days Won

    39

Posts posted by வல்வை சகாறா

  1. யார்? இந்த 'வருணகுலத்தான்'
    இராஜராஜ சோழன் காலம்முதல் வளர்ச்சியடைந்துவந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் போத்துக் கேயர் காலத்தில் முழுஅழிவினுக்குள்ளாகியது. 1619 யூன் 5 ந்திகதி யாழ்ப்பாணத்தின் இறுதிமன்னனான சங்கிலி குமாரன் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு கோவா விற்கு கொண்டுசெல்லப்பட்டான். அத்துடன் யாழ்ப்பாண தமிழரசரின் ஆட்சி முடிவுக்குவந்தது. 1505இல் கொழும் பில் (அன்றைய கோட்டைஇராச்சியம்) கரையொதுங்கிய போத்துக்கீச தளபதியான DoLorenzo de Almieida இலங்கை யில் முதன்முதல் காலடிவைத்த போத்துக்கீசனாவான். இந் நிகழ்ச்சியை தொடர்ந்து இலங்கையின் கரையோரப் பகுதிகள் பலவும் போத் துக்கீசரின் ஆட்சியில் கீழ்வந்த ன. எனினும் 1519இல் யாழ்ப்பாணத்தில் ஆட்சிக்கு வந்த சங்கிலியன் எனப்படும் 7ம் செகராசசேகரன் 1561 வரை போத்துக்கீசரின் ஆணையை ஏற்கமறுத்துவந்தான். அத்துடன் இவர்களிற்கு எதிரான பலதாக்குதல்களை கடலிலும் தரையிலும் நடத்திவந்தான். (இவனுடைய தாயார் மங்காத்தா வல்வெட்டித்துறை மணல்குடியை சேர்ந்தவரும் அன்றையஅரசனான பரராசசேகர னின் மனைவியரில் ஒருத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது) குறிப்பாக 1544 டிசம்பரில் மன்னாரில் இவன் நடத்திய தாக்குதல் மிகப்புகழ்பெற்றது. இத்தாக்குதலில் போத் துக்கீச படை களுடன் மக்களை மதமாற்றத்திற்குள்ளாக் கிவந்த பிரான்சிஸ் எனும் மதகுருவும் மதம்மாறிய பலரும் கொல்லப்பட்டனர்.
    இக்காலத்தில் சங்கிலியனின் மாற்றாந்தாயின் மகனான பரநிருபசிங்கன் போத்துக் கீசருடன் இணைந்து சங்கிலி யனுக்கு எதிராக இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது. இவன் யாழ்ப்பாண அரசுரிமையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் போத்துக்கீசரின் உதவியை நாடியதுடன் தன்னை கத்தோலிக்கசமயத்திற்கும் மாற்றிக் கொண்டி ருந்தான். அரசுரிமையை எதிர்பார்த்திருந்த இவனுடைய மகனான இளஞ்சிங்கனும் மேற்படி தாக்குதலில் சங்கிலியனின் படைகளால் கொல்லப்பட்டான்.
    போத்துக்கீசஏகாதிபத்தியத்திற்கு எதிரான சங்கிலிய னின் இத்தாக்குதல் பின்னாட் களில் மதவெறிகொண்ட வனாக சிலரால் வர்ணிக்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து புனிதசவேரியர் என்ற மதகுருவான பிரான் சிஸ் போத்துக்கீச அரசுக்கு 20.01.1545 இல் எழுதிய கடித த்தில் தமக்கு அடங்காத சங்கிலியை யாழ்ப்பாண அர சில் இருந்து விரைவில் அகற்றுமாறும் அவ்வாறு அகற்றி னால் யாழ்ப்பாணத்தில் பெரும் ஆன்மீக அறுவடை(கிறிஸ்தவ மதமாற்றம்) காத்திருப்பதாக வேண்டுகோள் விடுத்திருந் தார். அந்நிய ஏகாதிபத்தி யத்திற்கு எதிரான சங்கிலியனின் இப்போர்க்கால நடவ டிக்கையினை தொடர்ந்து மேலும் பதினேழு ஆண்டுகள் யாழ்ப்பா ணம் தமிழரின் முழுமை யான கட்டுப்பாட்டிலிருந்தது. இக் காலத்தில் மன்னார் முல்லைத்தீவு உட்பட வன்னியின் பலபகுதிகளும் யாழ்ப் பாண அரசின் கீழிருந்து வந்தன. போத்துக்கீசரின் இத்தகைய பலத்த எதிர்ப்புகளைமீறி 1561 வரை சங்கிலியனது முழுமை யான கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் விளங்கி வந்தமை குறிப்பி டத்தக்கது. இறுதியாக போத்துக்கேயரின் கடுமையான எதிர்ப்பா லும் உள்ளி ருந்து கொல்லும் தொடர்ச்சியான துரோகத் தினாலும் நாற்பத்திஇரண்டு வருடங்கள் அரசாண்ட சங்கிலியன் என்ற 7ம் செகராச செகரன் 1561 இல் வன்னிக்கு தப்பிச் செல்ல யாழ்ப் பாணம் போத்துக் கீசரின் மேலாண்மைக்குட்பட்டது.
    மேற்படி சங்கிலியனைப்பற்றி ஆராய்ந்த 'இலங்கையில் தமிழர் ஒருமுழுமையான வரலாறு' நூலின் ஆசிரியரான கலாநிதி முருகர் குணசிங்கம்
    யாழ்ப்பாண மன்னன் முதலாவதுசங்கிலி போத்துக் கீசரையும் அவர்கள் மதத் தையும் தமிழ்ப்பிரதேசத்தில் நிலைகொள்ளாமல் தடுத்துநிறுத்துவதற்கு தன்னாலான முயற்சிகளை எல்லாம் மனவுறுதியோடு செய்தான். ஆனால் அவனுடைய மரணத் திற்குப்பின்னர் சங்கிலி போல் துணிவும் தேசப்பற்றும் மதப்பற்றுமுள்ள மன்னன் போத்துக்கீசர் அட்சிக்காலத்தில் தமிழ்தேசத்திற்கு கிடைக்காமற் போய்விட்டதை காணமுடிகின்றது.
    என தனதுநூலின் 184 ம்பக்கத்தில் கூறுவது இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.
    யாழ்ப்பாணத்தில் சங்கிலியனுக்கு பின்வந்த சிலஅர சர்க ளும் அந்நியரான போத்துக் கீசரின் மேலாண் மையை ஏற்றுக்கொண்ட போதும் இறுதியாக 1616 இல் ஆட்சி க்கு வந்த சங்கிலிகுமாரன் சிலகாலத்திலேயே போத்துக் கீசருக்கு மாறாக செயற்படத் தொடங்கி னான். அத்துடன் அவர்களின் எதிரியான தஞ்சாவூரின் இரகுநாத நாயக்க மன்னனுடன் நட்புக்கொண்டான். இதனால் வெகுண்டெ ழுந்த போத்துக்கீசர் சங்கிலி குமா ரன் மீது போர்தொடுத் தனர். இவர்களுக்கு யாழ்ப்பா ணத்தில் இருந்த பல முதலி மார்களின் ஆதரவும் கிடைத்திருந்தது. குறிப்பாக கத்தோ லிக்கமதத்திற்கு மாறியிருந்த மீகாப்பிள்ளையின் மகனான சின்ன மீகாப்பிள்ளை என்பவன் டொம் லூயிஸ்(
    Domlouis) முதலி என்ற பெயருடன் ஏனைய முதலிகளு டன் இணைந்து 1618இல் சங்கிலிகுமாரனது ஆட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக கிளர்ச்சிசெய்து வந்தான். இக் காலத்தில் தஞ்சாவூர் நாயக்கரிடமிருந்து உதவிபெற்ற சங்கிலிகுமா ரன் இக்கிளர்ச்சியை முறியடித்தான். வருணகுலத்தான் எனும் கரையார்தலைவனின் கீழ் போராடிய அரசனின் படைகள் வெற்றிபெற்றன. இக்காலத்தில் தேவிக்கோட்டை யிலிருந்த தஞ்சாவூர் அரசனான இரகுநாதநாயக்கனே தனதுபடைகளுடன் யாழ்ப்பாணம் வந்ததாக 'தஞ்சாவூர்நாயக்கர் வரலாறு' நூலின் 161ம் பக்கத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. தோல்வியடைந்த டொம்லூயிஸ் முதலி மன்னாருக்கு போத்துக்கீசரிடம் தப்பியோடினான்.
    இவ்வாறு தனது ஆட்சிக்காலம் முழுமையும் எதிர்ப் போராட்டத்துடன் வாழ்ந்த சங்கிலிகுமாரன் இறுதியாக பருத்தித்துறையிலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயன்றான். இவ்வேளையில் 1619 யூன் 5ந்திகதி கடல் மீது இவன் கைது செய்யப்பட்டான். பின்பு கோவாவிற்கு கொண்டுசெல்லப்பட்ட சங்கிலிகுமாரன் சிரச்சேதம் செய் யப்பட்டு கொல்லப்பட்டான். பிலிப் டி ஒலிவேரா யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க தளபதியாக போத் துக்கேய அரசினால் நியமிக் கப்பட்டான். இதனால் சங்கிலி குமாரனை அகற்றிவிட்டு ஆட்சியுரிமையை பெற்று விடலாம் என போத்துக்கீசருடன் இணைந்து செயற்பட்ட டொம்லுயிஸ் எதிர்பார்த்த அதிகாரம் கிடைக்கா மையினால் தஞ்சாவூர் படைகளுடன் இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
    மேற்படி சங்கிலிகுமாரன் கைதுசெய்யப்பட்டதும் போத் துக்கேயரின் நேரடிஆட்சிக்குள் யாழ்ப்பாணம் வந்தது. இந்நிலையில் ஆரம்பம்முதலே அந்நியரான போத்துக் கீசரை எதிர்த்துவந்தவனும் கரையோரத் தளபதியுமான வருணகுலத்தான் அவர்களுக்கு அடங்காது அவர்களை தொடர்ச்சியாக தாக்கிவந்தான். தஞ்சாவூர்நாயக்கரின் உதவியுடன் கரந்தடி முறை யிலான இத்தாக்குதல்களை நடத்திவந்த இவனை 'கரையாரத்தலைவன்' என சுவாமி ஞானப்பிரகாசர் தனது 'யாழ்ப்பாண வைபவ விமர் சனம் ' நூலில் பக்கம்160 இல் குறிப்பிடுகின்றார். கரையாளர் களின் படைகளுக்கு வருணகுலத்தானும் தஞ்சாவூர் படைகளுக்கு கெம நாயக்கன் என்பவரும் தலைமை தாங்கினர் என தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு நூலின் 164ம் பக்கத்து குறிப்பு கவனிக்கத்தக்கது. வல்வெட்டித்துறை சமூகத்தை சேர்ந்த இவ்வீரனை மூல நூலான Conquest of Ceylon என்னும் நூலை எழுதிய Fernando De Oueyroz ( குவரேஸ்பாதிரியார்) அறிமுகப் படுத்தும் விதமே அலாதியானது. Kinglet Of the careaz called VarnaGullata a Great Enemy of the Portuguese. (Page 468) அத்துடன் மீண்டும் அவனைப்பற்றி கூறவரும் அவர் Kinglet Of the careaz With the men Tanjour by night hid themselves in the house of the Fising Pepole.(Page633)
    05.06.1619 இல் போத்துக்கீசரின் நேரடிஆட்சிக்குள் யாழ்ப்பாணம் உட்பட்டிருந்த இந்நிலையில் 1620 இன் தபசு காலம் (இது யேசு உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு (ஈஸ்டர் ஞாயிறு) முன்வரும் நாற்பது நாட்களாகும்) என கூறப் படும் நாட்களொன்றில் வருணகுலத்தா னின் முதலாவது அதிரடித்தாக்குதல் ஆரம்பமா யிற் று. பலம் கூடிய எதிரி யை பலம்குறைந்தவர்கள் திடீரெனத் தாக்கும் இத்தாக்குதல் முறையின கரந் தடித்தாக்குதல் எனவும்வர்ணிப்பர். இவ்வகையில் இத்தகைய தாக்கு தலை எம்மண்ணில் முதன்முதல் நடத்திய வரலாற்று வீரன் வருணகுலத்தான் என்பது போத்துக்கீசவரலாறு எமக்குத்தரும் அரிய செய்தியா கும். யாழ் பண்ணைத் துறையில் அமைந்திருந்த மாதாகோவிலுக்குள் பதுங்கி யிருந்த போத்துக் கீசரின் மேல் இத்தாக்குதல் நடத்தப் பட்டது. யாழ்ப் பாணத்தை கைப்பற்றிய போத்துக்கீசர் அங்கிருந்த பல கோவில்களையே தமது உறைவிடமாக்கியிருந் தமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. எனினும் ஆலயத்தின் பின்புறமாக நுழைந்து போத்துககீச ருடன் இணைந்து போராடிய எம்மவர்களின் செயலி னால் பலம் பெற்ற போத்துக்கேயர் அத்தாக்குலை முறியடித்தி ருந்தனர்.
    மனம் தளராத வருணகுலத் தானினால் மீண்டும் அடுத்த நாள் நல்லூரில் தங்கியிருந்த போத்துக் கீசரின் புகழ்பெற்ற தளபதியான பிலிப் டி ஒலிவேரா வின் மீது மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டது. நவீன துப்பாக்கிகள் சகிதம் போராடிய போத்துக் கீசர் மீண் டும் வெற்றி பெற்றனர். தொடர்ந்த நாட்க ளொன்றில் தஞ்சாவூர் படைகளுடன் வந்த வருண குலத்தான பூநகரியில் ஈழவூர் என்னும் இடத்தில் ஏற்பட்ட மோத லிலும் வெற்றிகரமாக தப்பிக் கொண்டான். இன்று சர்ச்சைக்குள்ளாகும் ஈழம் என்னும் பெயர்கொணட பிரதேசம் போத்துக் கீசர் இலங்கைக்கு வந்தகாலத் தில் இருந்ததனை குவரேஸ் பாதிரியாரின் 634 ம் பக்கக் குறிப்பு ஆதாரமாக தருகின் றது. மீண்டும் 1620 நவம்பர் மாதம் ஆயிரம் தஞ்சாவூர் படைக ளுடன்வந்த வருண குலத்தான் தெண்டைமானாற்றில் தரைஇறங்கினான். நல்லூர் வரை முன்னேறிச் சென்று போராடியபோதிலும் இம்முறையும் இவனுக்கு தோல்வியே கிடைத்தது. எனினும் பிலிப் டி ஒலிவேராவை காயப்படுத்திய வருண குலத்தான் மீண்டும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான்.
    போத்துக்கீசருக்கு எதிரான இத்தகைய கெரில்லாத் தாக்குதல்களை தனது சமூகத் தின் உதவியுடனும் கடல் கடந்துவந்த தஞ்சைப்படைகளின் துணையுட னும் தொட ர்ச்சியாக வருணகுலத்தான் மேற் கொண் டு வந்தான். மேற்படி அதிரடித்தாக்குதல்களை தலைமையேற்று நடத்தி வந்த அவன் இறுதியாக 2 February 1621 இல் தோற் கடிக்கப்பட்டான். நாகபட்டி னத்திலிருந்து புதிதாக வந்து ஓய்வெடுத்துக்கொண் டிருந்த உதவிப்படைகளுடன் வல்வெட்டித்துறை குளக்கரையில் அமைந்திரு ந்த பனந்தோப்பில் பதுங்கியிருந்த வருணகுலத்தானையும் அவன் படை களையும் எதிர்பாராமல் போத்துக்கீசப் படைகள் முற்றுகயிட்டுதாக்கின. எதிரியின் இம்முற்றுகையை முறிய டிக்க போராடிய அவ்வேளையில் தனது சொந்த மண்ணில் இம்மாவீரன் வீரமரணமடைந் தான். மடைந்தான்.
    நள்ளிரவில் நடந்த இத்தாக்குதலில் பருத்தித்துறை க்கு மேற்கேயிருந்த குளக்கரையில் மூன்று மணித்தி யாலத்தில் எண்ணூறு போர்வீரர்களும் வருண குலத்தானும் அழிக்கப்பட்டதாக குவரேஸ் பாதியார் 643ம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். முள்ளிவாய்க் காலுக்கு முன்பாக 2009 ஏப்ரல் ஆரம்ப நாட்களில் நடந்த ஆனந்தபுரம் தாக்குதலுக்கு இணையான தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலை Antonio de Mota Galuao எனும் போத்துக்கீசதளபதி நடத்தியதாகவும் இவன் கட்டளை அதிகாரி பிலிப் டி ஒலிவேராவின் மருமகன் எனவும் மேலும் பல தகவல்களை அவர் தருகின்றார்.
    இதனைத்தமிழரின் கடைசிக்கலகம்என வர்ணிக்கும் யாழ்ப்பாண வைபவகௌமுதி அதன் 67ம்பக்கத்தில் பின்வருமாறு தொடர்கின்றது. தஞ்சாவூர் நாயக்கன் யாழ்ப்பாணத்தை ஜெயிக்க இன்னுமொரு கடைசிப் பிரயத்தனஞ் செய்வானாயினான். அவனனுப்பிய சேனை பருத்தித்துறையில் இறங்கவிருக்கிறதென கேள்வியுற்ற ஒலி வேரா தெமற்றே என்பவனோடு ஒருபறங்கியர்சேனையை அங்கனுப்பினான். ஆயின் தஞ்சாவூர்ச்சேனை வல்லுவெட்டித்துறை கரையிலிறங்கி ஓர்குளக்கரையிலுள்ள பனந் தோப் பில் பாளையமிட்டிருக்கிறதென அறிந்து தெமொற் றா அங்கு இரகசியமாக சென்று பதிவிருந்து மூன்றாம் சாமமாகும்போது போர்ப்பறை அறைந்து கூக்குரலிடத் தமிழர் திகிலடிபட்டு குதிரைகளில் ஏறிப்போவோரும் திசைதப்பி அலைவோருமாய்க கலைவுற பறங்கியர் பின்தொடர்ந்து சிரங்கொய் தனர். விழுத்தப்பட்டவர்களுள் யாழ்ப் பாண சிங்காசனம் வகிக்கும் நோக்கமாய் வந்திருந்த சேனநாயகமும்(தளபதி) ஒருவனாவன். என வருணகுலத்தானின் வீரமரணத்தை கூறுகின்றது.
    05.06.1619 முதல் 02.02.1621 இல்தான் மரணமடையும் வரை போத்துக்கீசரின் படைகளுக்கெதிராக ஆறு தடவைகள் இவன்தாக்குதலை மேற் கொண்டதாக முன்கூறிய Conquest of Ceylon நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. நவீன துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் கொண்ட பீரங்கிகளுடன் தற்துணிச்சலை மட்டும் துணையாகக் கொண்ட வருணகுலத்தானின் தொடர்ச்சியான இப்போராட்டமானது என்றும் மெச் சத்தக்கது. தமிழரின் இறுதிப்போரென வரலாற்றா சிரியர்களால் வர்ணிக்கப்படும் இப்போராட்டமானது The battle between the Portuguese and Tamils at valvedditurai. Which ends in the defeat of the latter என Johan H Martyn எழுதிய Norts of Jaffna நூலில் 3ம் பக்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
    மேற்படி இறுதிப்போர் நிகழ்ந்தஇடம் வல்வெட்டித் துறையில் அமைந்திருந்த புட்கரணிக் குளக்கரை யாகும். புட்கரணி' என்பது தாமரை அல்லது தாம ரைக்குளம் எனத்தமிழில் பொருள்தருவதால் அதற்கு அண்மையில் அமைந்திருந்த பிள்ளையார் கோவில் காரணப்பெயர்கொண்டு புட்கரணிப்பிள்ளையார் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் புட்கரணி என்பது புட்டணி என பின்நாட்களில் திரிபடைந்துள் ளமை இன்று கவனிக்கத்தக்கது. முன்பு புட்கரணிக் குளம் என அப்பகுதியெங்கும் பரந்திருந்த இக்குளம் தூர்ந்தகாலத்தில் அதற்கிணையான தீர்ந்த எனும் பொருள்தரும் 'தீரு' என்னும் சொல்லடையானது குளம் என பொருள் தரும் 'வில்' என்பதனுடன் இணைந்து குளம் அமைந்திருந்த அப்பகுதி தீருவில் என இன்று அழைக்கப்படுகின்றது. இதேபோல் ஒரேபொருள்தரும் வில் = குளம் என்பன இணைந்து அப்பகுதியின் எச்சமாயிருக்கும் குளம் 'தீருவில்க் குளம்' எனவும் அழைக்கப்படுகின்றது.
    வருணகுலத்தானின் தோற்றத்தை வர்ணிக்கும் ஆசிரி யர் Then an aracheset (தளபதி) before him on a sheet a large head, half bald, With a long and beautiful beard, which was turning grey, saying ‘This is the head of the Captain-General என கூறு கின் றார். இத்தகைய முன்புறம் சவரம் செய்யப்பட்டு நீண்டகூந்தலுடன் அழகான தாடியுடனும் காணப்பட்ட அவனுடைய பெரிய தலை வெட்டப்பட்டு மரக்கிளை யொன்றில் குத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அத் துடன் அவனுடன்வந்த மேலும் 800 போர்வீரர்களும் அவ் விறுதியுத்தத்தில் மாண்டுபோயினர். பிலிப் டீ ஒலிவே ராவை புகழ்ந்துரைக்கும் 'யாழ் திருச்சபை வரலாறு' எனும் நூலின் 47 ம்பக்கத்தில் அதன்ஆசிரியர் 'போத் துக்கேய அதிகாரிகளில் குறிப்பி டத் தக்கவர் 1921ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் யாழ்ப்பாணஅரசன் தோற்கடிக் கப்பட்டபின் யாழ்ப்பாண ஆளுநரான பிலிப் டீ ஒலிவேராவும் அவர்காட்டிய ஆன்மீக வாஞ்சையுமா கும் எனக் கூறுமிடத்து யாழ்ப்பாண அரசன் தோற்கடிக் கப்பட்ட இடமென வல்வெட்டித் துறையை மீண்டும்அவர் சுட்டிக்காட்டுகின்றார். இங்கு யாழ்ப்பாண அரசனென வருணகுலத்தானை குறிப்பிடும் மேற்படி நூலின் ஆசிரி யர் 'சுவாமி J.E..ஜெயசீலன' மகாவம்சத்தில் துட்டகை முனுவின் புகழைக் கூறவந்த மகாநாமா அவனது எதிரி யான ஈழாளனை குறிப்பிடுவதுபோல் பிலிப் டி ஒலி வேரா வின் புகழைக்கூறவந்து அவனது எதிரியான வருண குலத்தானை குறிப்பிட்டுள்ளமை கவனிக்கப் படவே ண்டும். போத்துக்கேயரின் இலங்கை வரலாற்றை எழுதிய குவரேஸ் பாதிரியாரும் வருணகுலத்தானை Kinglet Of the careaz கரையார்களின் தலைவன் அல்லது மன்னன் என்றே குறிப்பிட்டிருப்பது இங்கு கூர்ந்து நோக்கத்தக்கது.
    வருணகுலத்தான் வீரமரணமடைந்ததும் அதுவரை யாழ் பண்ணைத்துறையில் வசித்துவந்த பிலிப் டி ஒலி வேரா தலைநகரான நல்லூருக்கு தனது இருப்பி டத்தை மாற்றிக் கொண்டான். இக்காலத்தில் தலை நகரான நல்லூரில் அமைந்திருந்த கந்தசாமி கோவில் உட்பட யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பலகோவில் களும் போத்துக்கேயரால் இடித்தழிக்கப்பட்டன. மக்களின் விருப்பத்திற்கு மாறாக கோவில்கள் இடிக் கப்பட்டதாக மேற்படி குவரேஸ் பாதிரியார் தனதுநூ லின் 642ம் பக்கத் தில் கூறி யிருக்கின்றார். இதுபோல வே இறுதிப்போர் நடந்த வல் வெட்டித் துறையில் அமைந்திருந்த வருணகுலத்தான் வணங்கியதாக நம்பப்படும் பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலும் போத்துக் கேய தளபதியான பிலிப் டி ஒலிவேராவினால் இக்காலத்தில் அழிக்கப்பட்டது.
    (1617 முதல் 1688 வரை தனது வாழ்கைக்காலமாக கொண்ட Fernao de Queyroz எனும் கத்தோலிக்க பாதிரி யார் The Temporal and Conquest of Ceylon எனும் நூலை எழுதியிருந்தார். போத்துக்கீசமொழியில் எழுதப்பட்ட இந்நூல் அவர் மறைவிற்குப்பின் 1689இல் போத்துக் கீசரின் தலைநகரான லிஸ்பனில் வெளி யிடப் பட்டது. போத்துக்கீசர்கால இலங்கையைப் பற்றிய குறிப்பாக அன்றைய யாழ்ப்பாணஅரசு மற்றும் மக்கள்பற்றிய பலவிபரங்கள் இந்நூலில் அடங்கி யிருந்தன.
    1930 SG.Perera என்பவரால் இந்நூல் ஆங்கில மொழி க்கு மாற்றப்பட்டது. எனினும் நானூறு வருடங்களிற்கு முன் நடந்த சம்பவங்களும் முன்னூற்றைம்பது வருட ங் களிற்கு முந்திய அகராதியில் தேடமுடியாத மொழி ப் பாவனையும் கொண்ட இந்நூலை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாண வைபவகௌமுதி, யாழ் திருச் சபை வரலாறு, Nortes of Jaffna மற்நும் சுவாமி ஞானப் பிரகாசர் எழுதிய யாழ்ப்பாண வைபவ விமர்சனம் History of Jaffna under Portugses எனும் நூல்களில் வல் வெட் டித்துறையில் நடந்த போத்துக் கீசருடனான இறுதிப் போர் மற்றும் அதன் நாயகனான வருண குலத்தான் பற்றிய பலவிபரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. எனினும் மேற்படி வெள்ளையின ஐரோப்பி யரின் ஆக்கரமிப் புக்கு எதிராக போராடிய வருண குலத்தானின் வீர சாகசத்தைதையும் ஏன் அவனின் பெயரையும்கூட பின்வந்த யாழ்ப்பாண சரித்திர ஆசிரியர்கள் பலரும் ஏனோ குறிப்பிடாமல் விட்டுச்சென்றுள்ளனர். எனினும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட Nayaks of Tanjore நூல் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு போன்றநூல்களிலும் இதுபற்றிய பல விபரஙகளை காணலாம்.)
    விரைவில் வெளிவரஇருக்கும் 'வல்வெட்டித்துறை மாரியம்மன் வரலாறும் வழிபாடும்' மற்றும் 'வல் வெட்டித்துறையின் போராட்டவாழ்வு' போன்ற நூல் களிலும் எங்கள் மண்ணின் மைந்தனான வருண குலத்தான் பற்றிய மேலும் பலவிபரங்களுக்கு காத்திருங்கள் !..........
    நவீனதுப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொண்ட பீரங்கிகளுடன் தற்துணிச்சலை மட்டும் துணையாகக் கொண்ட வருணகுலத்தானின் இடை விடாத போராட்டமானது என்றும் மெச்சத்தக்கது. வீரர்கள் வீழ்ந்துபடு வதில்லை என்பதற்கு வருண குலத்தானே மாபெரும் சாட்சியம் ஆம் அதனால்தான் நூனூறுவருடங்கள் கடந்தும் அவன் வரலாற்றை இன்னும் நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்.
    வருணகுலத்தானின் வர லாற்றை எனக்குமுதலில் கூறிய சட்டத்தரணி சோமசுந்தரம் காண்டீபனுக்கு(சிவனருள்சுந்தரம்) 'வல்வெட்டித்துறை வரலாற்றின்' நன்றிகள் என்றென்றும் உண்டு.
     
    நன்றி - வர்ணகுலத்தான் ( பொன் . சிவா)
    • Like 4
  2. ஆட்சியும் அதிகாரமும் மகிந்த கையில் என்னும் போது அவர்கள் தெரிவு இதை விட எதுவாக இருக்கும்?

  3. அட கோதாரி பிடிப்பாங்களே....

    உள்நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை சுமூகமாக அந்தந்தத் தரப்புகளுடன் பேசி அதிகாரத்தைப்பயன்படுத்தி அடிமைகளாக வைத்திருக்கு நிலையை மாற்றினாலே போதுமே மற்ற நாடுகளிடம் கையேந்தத் தேவையில்லையே.

    கெடு குடி சொற்கேளாது

    அடிப்படையில் சக இனத்தை காலடியில் மிதித்தபடியேதான் இருப்போம் என்ற அகங்காரத்தைக் காவும் வரை பிச்சை எடுங்க... உங்களை மாற்ற  ஏலாது. இலங்கையின் சாபமும் தீராது.

    • Thanks 1
  4. ஏதாவது அரசியல் மாற்றம் வந்து இலங்கைத்தீவு ஒரு அதிசய பூமியாக மாற்றப்படும் என்று நினைச்சன்.... :(

  5. ரணிலினை நகர்த்தியவர்கள் இந்த டீசலையும் உடனடியாக  இறக்க ஏற்பாடு செய்து மக்களுக்கு ஒரு மாயையான நம்பிக்கையை தோற்றுவிப்பார்கள். இலகுவாக மக்கள் ஏமாறப் போகிறார்கள்.

    • Like 1
  6. அப்பா எட்டடி என்றால் பிள்ளை பதினாறடி பாய்ந்திருக்கவேண்டும். சஜித் விடயத்தில் சஜித் அம்மா பிள்ளைபோல...

  7. என்னதான் சிங்கள இன இளையவர்கள் நாட்டை முன்னேற்றத்துடிக்கும் சமூகம் போராடினாலும் காலங்காலமாக பிழையான ஆட்சிமுறையைக்கையாண்டவர்கள் கைகளிலேயே மீளவும் அதிகாரம் என்பது இலங்கையின் சாபக்கேடு. மாற்றத்தை உருவாக்குவோம் என்று நம்பிக்கையுடன் சாத்வீகப் போராட்டங்களில் குதித்து செயற்பட்ட இளையவர்கள் தங்கள் கையாலாக நிலையால் விரக்தியுறுவதைத் தவிர்க்க முடியாது. இனி மெல்ல மெல்ல அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அரசியல் விளையாடும் ... சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மெதுவாக ஒவ்வொரு விடயத்திலும் பழிவாங்கப்படுவார்கள். உருப்படியான மாற்றத்தை செய்யாததன் விளைவை இனிவரம் காலங்களில் எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கவேண்டும்.

  8. கோமகன் ஒரு நல்ல நண்பர். கருத்துக்களத்தில் வாத விவாத தர்க்கங்கள் இயல்பானது யாரும் விதிவிலக்காக முடியாது. கருத்து முரண்பாடுகளால் சற்று விலகி இருந்தாலும் அதற்கு அப்பால் அவர்களை நேசிக்கும் யதார்த்த மனிதராக வாழ்ந்தார். இன்று கோமகன் இல்லை என்பதை நம்பமறுக்கிறது மனம். அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருடன் இணைகிறோம்.  அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்

  9. யாழ்ப்பாணத்தில் இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருந்து 2010 இதற்குப் பின்னரான காலத்தில் தாயகத்துக்கு மீள்வருகையாகி வாழும் பலரும் இப்படித்தான் அதேநேரம் யாழ்ப்பாணத்தில் வளர்கிற சமூகம் இதைவிட மோசமாக போதைக்கு அடிமையாகி திறன் மழுங்கி தேய்மானமான எதிர்காலத்தோடு வாழ ஆரம்பித்து நீண்டகாலமாகிவிட்டது.

    நமது தாயகத்தில் இளையோர் தொடர்பாக வெறுமை மட்டுமே மிஞ்சப்போகிறது.

    • Like 2
    • Thanks 1
    • Sad 1
  10. "அன்பார்ந்த சிங்களமக்களே....உங்களுக்காக தமிழர்களை அழிக்க எவ்வளவு கஷ்டங்களை நானும் என்னுடைய குடும்பமும் பட்டோம் என்பதை அறியாமல் எங்கள் மீது பெரும் அவதூறுகளை பரப்பி நாட்டை விட்டு விரட்டியடிக்க எத்தனிக்கிறீர்கள். உண்மையை சொல்லுங்கள் நீங்கள்தானே எங்களை இனவாதிகளாக்கி கொண்டாடினீர்கள் இப்போது நீங்கள் நல்லவர்களாகவும் நாங்கள் கெட்டவர்கள் போலவும் நாடகம் ஆடுகிறீர்களே.. "

     

    அடுத்த கட்ட மகிந்த உரை இப்படி அமைந்தாலும் ஆச்சரியம் ஏதுமில்லை 🙄

     

     

     

     

    • Like 1
  11. இலங்கையிலிருந்து நான் கனடா திரும்பி சில நாட்கள்தான். சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களை இரத்து செய்து விமான ரிக்கற்றுகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  12. 13 minutes ago, தமிழ் சிறி said:

    காப்புக் கையாலை…. சமைத்தது தான், அல்வாயனுக்கு வேணுமாம். 😂

    காப்புக்கையால் உணவு கிடைக்க ஏகப்பட்ட புண்ணியத்தை போன ஜென்மத்தில் செய்திருக்க வேணும் இலையான் கில்லர் உங்களைப் போல எல்லாருக்கும் கிடைக்குமோ?

    பாவம் அல்வாயன் வாயிற்கு வாழ்க்கைப்பட்ட மனுசன்போல... இடியப்பத்திற்கும் வடைக்கும் வரிசையில் நின்று வாங்குவதில் இன்னும் வாழ்க்கை வெறுக்காமல் இருப்பது பெரியவிடயம் 

    • Like 2
  13. அல்வாயன் வாய் இலங்கை சாப்பாடுதான் வேணும் என்று அடம்பிடித்தால் கைகளுக்கு சமைக்கப்பழக்கி விடுங்கள்.

  14. சரியான போட்டி

    மதவாதம், இனவாதம் பல்லிளிக்க பிக்குகள் களத்தில் குதிச்சாச்சு. இவர்களாலும் அரசியல் கதிரையில் குந்தியவர்களாலும்தான் நாடு அழித்தது என்று ஆற்றாமையில் குமுறும் சாதாரண சிங்கள மக்களின் மனநிலையை அண்மையில் நிறையவே தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. 

  15. 19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

    சேம் கியர்… நான் நினைக்குரன் வயசாகுறதால வாற சோர்வோ தெரியலை..

     

    அட இவ்ளா நாளும் இந்த திரி என் கண்ணுல படேல்ல.. நல்ல ஒரு திரி..

    யோவ் ஓணாண்டி இப்பல்லாம் வயசுபோனாப்பிறகுதான் வாழ்க்கையே... இப்பவே சோர்ந்தால் மிச்சம் இருக்கிற 50 வருசத்தை எப்படிப்பா தாண்ட முடியும்?

    லைப்ல த்ரிலிங் இல்லாமப்போச்சு அதான்...

  16. 1 minute ago, ஈழப்பிரியன் said:

    திண்ணை எப்போதும் போல இருக்கும்.
    ஒரு மாதகாலம் களத்துக்கு வரவில்லை என்றால் தானியங்கி எட்டி உதைத்துவிடும்.
    அப்புறம் கொஞ்ச கருத்து எழுதினாலே சாதாரண களஉறசுகள் போல உறவாடலாம்.

    சுலபமான வழி மட்டுறுத்தினர்களுடன் தொடர்பு கொண்டால் தானியங்கியை இயக்கிவிடுவார்கள்.
    விரும்பிய மாதிரி புகுந்து விளையாடலாம்.

    களத்திற்கு ஒவ்வொரு நாளும் வந்தேனே.. ( வாசிக்க மட்டும்) எப்படி என்னை எட்டி உதைக்கலாம் ஆ?

    இது கூட்டுச்சதியா? அல்லது கூட்டாளிகள் சதியா?🤬

    • Like 1
    • Haha 1
  17. இங்க பார்ரா இவ எங்கேர்ந்து வர்றா என்றெல்லாம் கேட்கப் படாது. இந்த களமாற்றங்கள் செய்த பிறகு திண்ணை இல்லையோ.... கூட்டாளிகளை குசலம் விசாரிக்க ஏலாம இருக்கு......

    • Haha 1
  18. நல்ல பதிவு கிருபன்.ஒன்றிரண்டைத்தவிர மிச்சமெல்லாம் பார்த்திருக்கிறேன். ஒரு தொகுப்பாக வரும்போது அட நாம இவ்வளவு கதைகளையும்  நம்ம மண்டைக்குள்ளேயும் போட்டு கரைச்சிருக்கிறோமே என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. முன்பு ஒரு காலத்தில் இருந்த கதைகள் அறிதல் கிரகிப்பு என்பதில் இருந்த அதீத ஆர்வம் இப்போது இல்லை. எதையாவது வாசிக்கப் போனாலே தூக்கம் வந்து விடுகிறது.😴

    • Like 1
  19. இயற்கை என்பது வரம்.

    வரங்களை சாபங்கள் ஆக்கியே மானுடத்தேடல்கள் பயணப்படுகின்றன. இயற்கையை பாதுகாக்க மானுடம் தேடல்களை முடக்குமா?

     

    இயற்கையை நேசிக்கும் மானுடத்தை கவிதையில் காணமுடிகிறது. வாழ்த்துகள் பசுவூர்கோபி.

    • Like 1
  20. வெட்டுக்கிளி ராசுக்குட்டிக்கு கதைக்கா.. பஞ்சம் நல்ல இலகுவான எழுத்து நடை. கொஞ்சம் எழுத்துப பார்த்து பொறாமையாகவும் இருக்கிறது.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.