Jump to content

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5811
  • Joined

  • Last visited

  • Days Won

    39

Posts posted by வல்வை சகாறா

  1. "நிகர் வாழ்வில் ஒருவர் நார்ஸிஸ்ட் உளநிலைகளின் ஏதாவது ஒரு கூறைக் கொண்டவராகவோ அல்லது எட்டுப் பொருத்தமும் கொண்டவராகவோ இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதுவும் அவர்களைக் கையாளும் முறை தொடர்பிலும் உரையாடுவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெருந்திரளின் பன்மைத்துவமான அணுகுமுறைகளையும் நீதிகளையும் அடைவதற்கும்இ நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தீர்வின் வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானது."


    மிக ஆக்கபூர்வமான கட்டுரை 
    எழுதியவர் எவ்வளவு தூரம் இந்த கருப்பொருளுக்குள் தன்னை மிக நுட்பமாக நுழைத்து ஆய்வு செய்கிறார் என்பதை வாசித்துக்கொண்டுபோகும்போது நன்றாக உணரமுடிகிறது.
    இதில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்றல் என்பது பாலியல் வன்முறை சார்ந்த விடயங்களில் மட்டும் மட்டுப்படுத்திவிடமுடியாது என்பதை ஆய்வாளரின் எழுத்துகள் நிரூபிக்கின்றன. சாதாரண நீரோட்டமான வாழ்க்கையிலும் நான் பழகும் பலரில் அந்த ஆய்வில் கூறப்பட்ட குணாதியங்களை காண முடிகிறது.மனோதிடம் குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இலகுவாக ஒருவரை மனோதிடம் உடையவராக மாற்றிவிடமுடியாது. ஆய்வாளரின் எழுத்துகள் அவருடைய பலதரப்பட்ட முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. நல்ல முயற்சியும் தேடலும் வழிநடத்தலும் வாழ்த்துகள் கிரிசாந்த்.

    இணைப்பிற்கு நன்றி கிருபன்.
    கட்டுரையை வாசித்தவுடன் நிறையவே எழுதவேண்டும் என்று தோன்றியது ஆனால் கைத் தொலையேசியில் வாசித்ததனால் அப்போது எழுதமுடியவில்லை பின்னர் எழுதலாம் என்று தள்ளிப்போட்டேன் எழுத நினைத்த விடயங்கள் எங்கோ போய் ஒளிந்து விட்டன.
     

  2. பெண்களை மிதிக்கும் சமூகம்      என்பதற்கு இதை விட வேறு சாட்சியம் வேண்டுமா?

  3. விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ?

    வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ?

    மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே!

    அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும் அன்னக்காவடிகளே!

    விலை எங்கு போனீர்?

    வலை பின்னி வாரீர்   வார்த்தைகள் பொய்க்கின்றீர்

    நிசம் இது இல்லை விழிகளே கூறும் மெய்நிலை உணர்கின்றேன்.

    தமிழச்சாதி இவ்வளவு தூரத்திற்கு மலினப்பட்டுவிட்டதா?

    • Like 6
    • Thanks 2
  4. யாயினி ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னையின் இழப்பிற்கும் நேரில் வந்து பங்குபற்ற முடியாமல் பென்டமிக் தடைசெய்தது.  இப்போதும் நேரில் சமூகமளிக்கமுடியாத சூழலில் இருக்கிறேன். அதற்காக வருந்துகிறேன். கண்டிப்பாக நேரில் சந்திப்பேன்.

  5. பிள்ளைகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்துவதை மொக்கை  மாதிரி பார்த்துக் கொண்டிருப்பதே வேலையாகிவிட்டது. ஒரு சொல்லைத் தேட வெளிக்கிட்டால் ஏகப்பட்டவை கொட்டுப்படுகின்றன. கணனி ஒரு உளவாளி. 😒

    • Haha 1
  6. ஒரு சம்பவத்தை மிகவும் இரசித்து வாசிக்கும்படி எழுதும் பாணி வெட்டுக்கிளிக்கு லாவகமானது என்பதற்கு உங்கள் பதிவுகள் சாட்சி. இரசித்து சிரித்தபடியே வாசித்து முடித்தேன். சூப்பர்

  7. என்னதான் வக்கணையாய் ஆயிரம் கதைகள் கதைத்தாலும் பக்கத்தில் உடன் வரும் துணைதான் ஆபத்பாந்தவர். வீட்டுக்குப் போன பின்னால் நிழலி கவிதாவின் காலில் அட்டாங்க நமஸ்காரம் செய்ததாக காற்று வாக்கில் கதை அடிபட்டது நான் தான் நம்பேல்லை. பட் இப்ப நம்புறேன். கிலியை உண்டாக்கும் எழுத்தென்றாலும் அந்த நீட்டி முழங்கல் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விடுகிறது. பாராட்டுகள் வெட்டுக்கிளி

  8. நல்ல கவிதை தியா.

    அரிதாக என்றாலும், சிறகுகள் உடைந்தாலும் மேலும் கீழுமாக என்றாலும் பறவை பறக்கிறது அல்லவா. ஆதலால் பறவை தொலையவும் இல்லை தன்னைத் தொலைக்கவும் இல்லை. நான் சொல்வது சரிதானே.. 🙂

    • Like 1
  9. யாழிணையத்தின் இருபத்தைந்தாவது அகவை தினம் யாழை தினமும் ஆராதிக்கும் உறவுகளுக்கும் யாழுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

    • Like 1
  10. எல்லாம் இருந்தது

    இப்போது இல்லையே கனவா என்று கேட்க வைப்பது

    நாம் கடந்ததை மட்டுமே நினைத்தபடி நடப்பதனால்..... வாழ்வின் ஓட்டம் எதிர் வருவதை நோக்கப்பயப்படுகிறது.

    • Like 1
  11. உண்மையில் இன்று புலம்பெயர்ந்து வாழும் பல குடும்பங்கள் மனநல வைத்திய தேவை இருந்தும் நாடாமல் அவ்வகையான பிரச்சனைகளில் இருந்து மீளாமலும் அல்லது வைத்தியதேவைக்குப் பதிலாக சூழல் மாற்றத்தைக் கூட செய்யத்துணிவில்லாதவர்களாகவும் வாழ்கின்றனர். மாற்றுத் தீர்வுகளை நிராகரிப்பவர்களாகவே அதிகமானவர்கள் வாழ்கிறார்கள்.

    • Thanks 1
  12. கோசான் உங்கள் படைப்பாற்றல் மிகவும் அபாரமாக இருக்கிறது. நம்மைச் சுற்றி நிகழும் சாதாரண விடயங்களுக்குள் அசாதாரணத்தை ஊகிப்பது கடினம். கோசான் உங்கள் கருத்தாடல்களை நாளாந்தம் வாசிக்கத் தவறுவதில்லை. கருத்தாடல்களே அதிகமாக உங்களை மிகவும் புடம்போட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. எழுத்தின் லாவகம் செம்மையாக இருதரப்பு வாதங்களையும் சமாந்தரமாக பயணிக்க வைத்திருக்கிறது. கதாப்பாத்திரங்களின் ஆளுமைதான் கதைகளை வெற்றிகரமாகக் காவிச்செல்லும். அபாரமான எழுத்தாளர். வாழ்த்துகள்.

  13. ஒவ்வொரு அவலங்களுக்குப் பின்னாலும் தர்மத்தின் சாவும் மானுடத்தின் சிதைவும் நிச்சயம் இருக்கும் காது கொடுத்து கேட்காதவரை அது வெளியே தெரியாது.

    • Thanks 1
  14. கோசான் நையாண்டி செம.....

    உண்மையைச் சொல்லட்டா இந்தக் காகம் , வடை, நரி எல்லாம் பசுமையாக நாளாந்த ஞாபகங்களைத் தூண்டுகின்றன. யாழின் செம்பாலையில் நடனம் புரியும் சொல்லாப் பொருளை உணர்த்துமாப்போல் இருக்கிறது. எழுதுவதற்கு அப்பால் வாசிப்பு நிறைய கிரகிக்கும் ஆற்றலை வளர்க்கிறது. ஐயா கோசான் மனதில் பட்டதை எழுதினேன். சரி சரி நான் நடையைக்கட்டுறன். கொஞ்சம் அசந்தாலும் எந்த நரியாவது வந்து என்னை காக்கா ஆக்கிப்போடும்.😆

  15. மெய் தீண்டாக்காதலை வாசித்து மெய் தீண்டியதால் இவ்விடத்தில் மீளவும்.... 90 இற்கு முந்திய காதல்கள் பலரிடம் பசுமையாக இருப்பதற்குக் காரணமே மெய் தீண்டாததினால்தான் சுவியார் மெய் தீண்டப்பட்டதால் நான் அறிந்த நண்பர்கள்  பலரின் தேடல்கள் வெறுமையாகிவிட்டன. எழுத்துக்களில் நல்ல மெருகேற்றம்.

    • Like 1
  16. இன்னும் இலையான் கில்லருக்கு கெட்டிக்காரன் கெட்டிக்காறி அகப்படவில்லை.

     

    நல்ல பதிவு இலையான் கில்லர்.🙂

    • Haha 1
  17. நன்றி தோழர் பிரபுத்த தனுஷ்க தமிழ் மக்களுக்கு எதிரான அநீதி என்பது இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே சிங்கள ஆட்சியாளர்களால் தொடர்ந்து இழைக்கப்பட்டே காலங்கள் கடந்துள்ளன. மொழியாலும் மதத்தாலும் மற்றையோரை ஒடுக்கிய ஆதிக்க மனப்பான்மையில் இருந்து சிங்கள சமூகம் மீளும்வரை இலங்கையை பிடித்த சாபம் நீங்காது.  தோழர் உங்கள் ஒருவர் குரல் குறைந்தபட்சம் பொதுவெளியில் ஓராயிரமாக மாறும்போது நிச்சயம் அனைத்திலும் மாற்றம் ஏற்படும்.  தொடர்ந்து செயற்படுங்கள் தோழர். 

  18. வணக்கம் குருக்கள் உங்கள் பதிலுரைப்புகளே நீங்கள் யாழுக்கு நன்கு பழக்கப்பட்ட  ஒருவராக அறிமுகப்படுத்துகின்றன. நீங்கள் வந்திட்டியள் இனி காவி தரித்த பிக்கு , பிட்சாயினிகள், வெள்ளை ஆடை தரித்த பாதிரிகள் , மற்றும் கன்னியாஸ்திரிகள் என்று அவதாரங்கள் வரக்கூடும். ஆகவே உங்களைக் கனக்க கலாய்க்காமல் எம்பெருமான் பொதிகையில் தென்றல் வாயிலாக எமக்குத் தந்த இன்மொழியில் பண்ணிசைத்து களமெங்கும் பக்திப்பரவசமாக உலவ வருக வருக என்று வரவேற்கிறோம்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.