Jump to content

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5811
  • Joined

  • Last visited

  • Days Won

    39

Posts posted by வல்வை சகாறா

  1. 4 hours ago, தமிழ் சிறி said:

     

    இடைவேளை... !!! ??? :grin:
    இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில்,  மீண்டும் தொடரும்....  🤣

    😡 கொலைவெறி என்று சொல்லுவாங்களே.... அது இப்ப எனக்கு வந்திருக்கு. இலையான் கில்லர் மாட்டினா அவ்வளவுதான் 

    • Like 1
    • Haha 3
  2. லொட்டோவில் அதீத பணம் கிடைத்த இருவர் வாழ்வை இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையான அன்புக்காக ஏங்கிக்கொண்டே விரக்தியுடன் காலம் கழிக்கிறார்கள். மனம் விட்டு என்னுடன் பேசுவார்கள். கிட்டத்தட்ட நான் ஒரு கவுன்சிலிங் செய்பவர்போல . அவர்களின் கதைகளைக் கேட்கும்போது தடாலடியாக இப்படி பணம் வரக்கூடாது என்று நினைப்பேன். பணத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு இல்லை.

     

    • Like 1
  3. அரிதாரம் போடாத எழுத்துகள் வளவன். எத்தனையோ முறை மனம் சொல்வதை எழுத முயல்வதும் பின்னர் அழிப்பதுமாக கடந்த காலங்களைக் கடந்திருக்கிறேன். நிதர்சனத்தை புரிந்து கொள்ள விரும்பாத பக்கங்களை யாழின் கருத்துக்கள நண்பர்களில் காண்பதுண்டு. சில சமயங்களில் அதுவும் நன்றே என்றும் தோன்றும். எழுத்துக்களில் அதி மேதாவித்தனம் அல்லது அடிமுட்டாள்த்தனம் அவை மட்டுமே கருத்துக்களத்தை கொண்டு நகர்த்தும் அடிப்படையாக உணர்வதுண்டு. போட்டு உடைத்து எழுதும் திராணி எப்போதும் இருந்ததில்லை. மேலே கிருமி சொன்னதைப்போல் யாழ் இணையம் இளமைதான் எழுதும் கருத்தாளர்கள் அரும்பும் முதுமையில்.... எழுத்துகளுக்கு அப்பால் நாமெல்லாம் வெறும் பூஜ்ஜியங்கள் ஆகிவிட்டோமோ என்றும் அதிகம் தோன்றுகிறது. உங்கள் மனதில் தோன்றிய எண்ணம்போல் நமக்கும் தோன்றுகிறது.

    • Thanks 1
  4. ஆகா கிடைக்கிற காப்பில இந்த சிட்னி முருகனை கலாய்க்கிறதில புத்தனுக்கு தனி இன்பம். இந்தக்கதையை வாசித்த பிறகு நாங்கள் பாவம் பார்க்கவேண்டியது புத்தனுக்கா? முருகனுக்கா? கிட்டத்;தட்ட இரண்டு கெரக்டரும் ரிலாக்ஸாக இருக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் பக்தை / துணைவி யின் முயற்சி இருவரையும் ஒரு நேர் கோட்டில் நிறுத்தி இப்படி இருவரையும் புலம்ப வைக்கிறதே. புத்தனிள் புலம்பலுக்கும் முருகனின் அங்கலாய்ப்பிற்கும் பாராட்டுகள்.

    • Like 1
  5. இந்தப்பிரச்சனைக்குள் அகப்படாமல் தெளிவடைய முடியாது எங்கள் குடும்பத்தில் எனது துணைவரின் தமையனார் மொன்றியலில் வசிக்கிறார் நாங்கள் ரொரன்டோ எங்கள் வீட்டின் எனது பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெயர் முதற்பெயராகவும்  துணைவரின் பெயர் குடும்பப் பெயராகவும் உள்ளது. அதே நேரம் மொன்றியலில் உள்ள துணைவரின் சகோதரரின் மகனுக்கு முதற்பெயராக மகனின் பெயரும் குடும்பப் பெயராக எனது துணைவரின் தந்தை பெயரும் உள்ளது அதே நேரம் அண்ணியாருக்கும் அவரின் குடும்பப் பெயராக மாமாவின் பெயரே அமைந்துள்ளது. ஆனால் எனது குடும்பப் பெயராக எனது துணைவரின் பெயர் இல்லை. பதிவுத் திருமணத்தின்போது ஒரு கேள்வி உள்ளது மணப்பெண்ணிற்கான பகுதியில் அவள் தன்னுடைய குடும்பப் பெயரை துணைவரின் குடும்பப் பெயருக்குக்கீழ் மாற்ற விரும்புகிறாரா என்பது... அதற்கு ஆம் என்று பதிலளித்திருந்தால் அது துணைவரின் தந்தை பெயரை தனது குடும்பப் பெயராக ஏற்றுத் தொடரவேண்டும் இல்லை எனது தந்தையின் பெயரையே வைத்திருக்க விருப்பம் என்று தெரிவித்தால் அவள் தனது கன்னிப்பெயரையே குடும்பப் பெயராக தொடர முடியும். உண்மையிலேயே இந்த நிலை வெளியிடங்களுக்கு செல்லும்போது சிக்கலானதாக உள்ளது நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம் என்று பயண இடங்களில் நிரூபிக்க மேலதிக ஆவணங்களை கைவசம் வைத்திருக்கவேண்டியுள்ளது.

     

    கட்டுரை நன்றாக உள்ளது கிருமி.

    நாங்கள்தான் எப்படி தெளியப்போகிறோம் என்று தெரியவில்லை. 🤔

    • Like 2
  6. 4 hours ago, suvy said:

                                             

    இன்று --- அவள் 

    சங்கு கழுத்தில் முகம் புதைக்க 

    மூச்சின் சுவாசம் சீராகியது 

    செவ்விதழில் முத்தமிட 

    செவ்வாயில் அமிலம் சுரந்தது 

    பிடியிடை தழுவிட 

    மூலாதாரம் முழுதும் துடிக்குதடி 

    கண்ணை விட்டு தூரம் நீ மறைந்தாய் 

    கண்களுக்குள் நிறைந்து நின்றாய் 

    கண்களுக்குள் உன்னைப் பார்த்து 

    யானை பார்த்த குருடனானேன்......!

     

    யாழ் அகவை 23 க்காக 

    ஆக்கம் சுவி.......! 

     

    spacer.png

     

    இன்றைய நாட்களில் அநேகமாக இந்தமாதிரி சங்கு அமைப்பில்தான் சுவாசம் சீராகிறது.

     

     

    நிறையக்காலம் காத்திருந்து எழுதிய கவிதை மாதிரி இருக்கு கடைசியிலை நாங்களெல்லாம் கொக்குப்பார்த்த குருடன் கதைதான் கேட்டிருக்கிறோம் அம்மாடி யானை பார்த்த குருடனா?????????? கொக்கை என்றாலும் குருடன் தடவிப்பார்த்து புரிந்திருப்பான்.

    யானையை எப்படி?

    பின்னால வந்து கருத்தெழுத வெளிக்கிட்ட ஆண்சிங்கங்களின் ஆர்வத்தின் வெளிப்பாட்டை நன்றாக இரசிக்கமுடிகிறது. அதிலயும் மாங்காய் பிடுங்கி திண்டதாக எழுதினவர் சுவியாரை விட ஒரு படி மேலே போய் விட்டார்...... சரி சரி வாழ்த்துக்கள் சுவி அண்ணா

  7. அன்புத்தோழி கண்மணி கதை ஆரம்பித்தபோது மனம் திக்கென்றது.... சரி எப்படி போகிறது என்று பார்ப்போம் எனறு தொடர்ந்து வாசித்தேன். ஒரு கணம் கடந்த காலத்தில் லொக்டவுனை நான் அலட்சியம் செய்திருந்தால் நிச்சயம் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கக்கூடும். எல்லோருடைய நலமும் பாதுகாப்பும் இந்நாட்களில் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. ஒரு கணம் நான் தவறியிருந்தால் இந்தக்கதை என்னுடையதாக இருந்திருக்கும் என்பது நிதர்சனம். லொக்டவுன் உண்மையின் தரிசனம். வாழ்த்துக்கள் தோழி

  8. 3 hours ago, யாயினி said:

    பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அக்கா.பேர்த்திக்கு. என்ன பெயர் வைத்தீர்கள்.
    ✍️

    நன்றி யாயினி 

    என்னுடைய பேர்த்திக்கு "ருத்ரா" என்று பெற்றோர் பெயரிட்டுள்ளனர் யாயினி 

    spacer.png

    வெட்டுக்கிளிக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் 

    • Like 1
  9. On 4/12/2020 at 23:40, Kavi arunasalam said:

    பிறந்தநாள் வாழ்த்து சகாறா

    spacer.png

     

    நன்றி கவி அருணாசலம் அண்ணா

    ஓவியத்திற்கும் மனம் நிறைந்த நன்றி இந்த ஓவியத்தை நிச்சயமாக என் சந்ததியே பாதுகாக்கும்.

    புரட்சி, உடையார்,ஜெகதா, அடுப்படிப்பூனை, சுவிஸ் அண்ணா, கிருமி, நண்டு, ஈழப்பிரியன் அண்ணா மற்றும் 

  10. 8 hours ago, கிருபன் said:

    யாழ் களத்தினுள் உள்ளே நுழைவது கொரோனா காலத்தில் ஷொப்பிங் போவது மாதிரி அதிக நேரம் எடுக்கின்றது. சுத்திக்கொண்டே இருக்கின்றது இன்று.

    ஏற்கனவே யாழுக்குள்ளும் கோவிட் 19 நுழைஞ்சிட்டுதாம் அதான் பழைய கிருமிகளை வெளில நிற்பாட்டி வச்சிருக்கு என்று தகவல்🤣🤣

  11. பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன நண்பர்களுக்கு நன்றிகள்.

    அடா அடா அடாபிறந்தநாள் வாழ்த்துக்குள்ளேயே இன்னாமா கலாய்ச்சிருக்கறாங்கப்பா282-2824805_shocked-face-open-mouse-emoj

     

    அரசியலில இதெல்லாம் சகயம்பா

    இருந்தாலும் அண்மைக்காலத்துல கொஞ்சூண்டு பேமசாயிட்டம்போல... சகாறா கீப் இட் அப்  ரொம்ப  நன்னா வரப்போறேன்னு பட்சி சொல்லுது

    kisspng-emoticon-smiley-question-mark-cl

     

    கேலிச்சித்திரம் வரைந்து கலாய்க்கும் "மூனா" விற்கும் நன்றிகள். மனதில் எதிர்காலம் பற்றி பெரிய இலட்சியங்கள் வியாபித்தே இருக்கின்றன. நிச்சயமாக அரசியல் சார்ந்து அல்ல. ஆனால் தாயகத்தோடு பின்னிப்பிணைந்ததே..... இந்தக் கேலிச்சித்திரம்கூட மனதில் உதித்த இலட்சியம் கைகூடும் அந்நாளில் மிகப்பெறுமதியானதும் காலத்தால் நினைவுகொள்ளக்கூடியதாகவும் அமையக்கூடும்.

    • Thanks 1
  12. மதி சுதா நானும் பத்து பங்குகளை வாங்குகிறேன். பேபால் மூலமாக பணம் அனுப்புவது இலகுவாக இருக்கும் அதற்கான வசதியை ஏற்படுத்தித் தாருங்கள்

  13.  

    இந்த லிங்கில் நான் இணைத்த படத்தைக் காணவில்லை அதற்குப்பதிலாக இலக்கங்கள்தான் தெரிகின்றன. அவ்விலக்கத்தில் கிளிக் பண்ணினால்தான் படம் தெரிகிறது

  14. கிருமி, ரோமியோ, புரட்சிகர தமிழ்த் தேசியன், பெருமாள், இணையவன், தனிக்காட்டு ராஜா, ஈழப்பிரியன், தமிழரசு, பாஞ்ச், வெட்டுக்கிளி, ரதி மற்றும் ராவய , கு.சா, நிலாமதி அக்கா, இலையான் கில்லர், மற்றும் சச்சு ஆகியோருக்கு மனமுவந்த நன்றிகள்.

    பிறந்தநாளை மறைப்பம் என்று பார்த்தா நடக்காது போல.... இல்ல வரவர வயசு ஏறிக்கொண்டு போவதை அதுதான் அடிக்கடி வந்து ஞாபகப்படுத்தித் தொலைக்குது... ச்சா ஒருத்தரும் என்றும் பதினாறாக இருக்க வாழ்த்தேல்லை....

    நம்ம பிறந்தநாளை யாரும் மறக்கவிடாமல் இருக்கும் ரகுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.