Jump to content

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5811
  • Joined

  • Last visited

  • Days Won

    39

Posts posted by வல்வை சகாறா

  1. படம்: தூறல் நின்னு போச்சு
    இசை: இளையராஜா
    பாடியவர்: ஜானகி, மலேசியா வாசுதேவன்
    பாடலாசிரியர்: வைரமுத்து


    தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...
    தங்கச் சங்கிலி...

    மலர்மாலை தலையணையாய்
    சுகமே பொதுவாய்
    ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
    தங்கச் சங்கிலி...

    காவல் நூறு மீறி
    காதல் செய்யும் தேவி
    உன் சேலையில் பூ வேலைகள்
    உன் மேனியில் பூஞ்சோலைகள்

    அந்திப் பூ விரியும்
    அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
    இவளின் கணவு கனியும் வரையில்
    விடியாது திருமகள் இரவுகள்
    தங்கச் சங்கிலி...

    ஆடும் பொம்மை மீது
    ஜாடை சொன்ன மாது
    லாலா லாலலாலா லால லால லாலா

    கண்ணோடு தான் போராடினாள்
    வேர்வைகளின் நீராடினாள்
    ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

    அன்பே ஆடை கொடு
    எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

    இதழில் இதழால் கடிதம் எழுது
    ஒரு பேதை உறங்கிட மடி கொடு
    தங்கச் சங்கிலி...
    மலர்மாலை...
    தங்கச் சங்கிலி...

  2.  

     

    நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி

     
    நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
    நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
    அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
    அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

    நான் என்ற சொல் இனி வேண்டாம்
    நீ என்பதே இனி நான்தான்
    இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
    இதுப்போல் வேரெங்கும் சொர்கமில்லை
    உயிரே வா

    நாடகம் முடிந்த பின்னாலும்
    நடிப்பின்னும் தொடர்வது என்ன
    ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
    உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
    உயிரே வா
    (நீ பார்த்த..)

    படம்: ஹேராம்
    இசை: இளையராஜா
     
     
     

     

     

     

     

     

     

     

  3. ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
    இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
    மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
    நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
    ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
    (தொல்காப்பியம் மரபியல்)

    6+senses.jpg

    • Like 1
  4. நேற்றும் இன்றும் இங்கின மேத்திரியார் திரியிறபோதே தெரிஞ்சிருக்கோணும் கிண்டிக்கிளறப்போகிறார்கள் என்று....... இப்பிடி ஒவ்வொரு பக்கத்திற்கும் போகும்போது கதவு திறக்க நீண்ண்ண்ண்ண்ண்ட நேரம் மக்கர் பண்ணுது tw_angry:

  5. பின்னேரம் திண்ணையில நிண்ட ஆக்கள எனக்கு தெரியும் அவிங்க தான் கொண்டு போயிருப்பாங்க,அதில ஒரு பொம்பிள கனநாளைக்கு அப்புறம் இண்டைக்கு தான் திண்ணைக்கு வந்தவா

    அடப்பாவிகளா இன்று காலையில்தானே திண்ணையில் ஜாலியாக கதைக்கும் வாய்ப்பு கிட்டியது..... நான் ஒன்றும் செய்யவில்லை

    வாலிக்கு வணக்கம் சொன்னேன் வாலி முகத்தில் அடித்தமாதிரி தனக்கு யாரும் வணக்கம் வைக்கவேண்டாம் என்றார். தன்னோடு ஒருவரும் பேச வேண்டாம் என்றும் கூறினார்..... அதற்கு நான் நீங்கள் திண்ணையில் நின்றால் வணக்கம் வைக்கவும் பேசவும் செய்வோம் உங்களுக்கோ மற்றவர்களுடன் பேசப் பிடிக்கவில்லை என்றால் திண்ணைக்கு வருவதைத் தவிர்த்தாலே யாரும் வணக்கம் சொல்லவோ பேசவோ மாட்டார்கள்தானே என்றுதானே சொன்னேன்... பேச விரும்பாத ஒருவரை திண்ணைக்கு வருவதை தவிருங்கள் என்றால் திண்ணையே காணாமல்போகுமென்று நான் கனவிலையும் நினைக்கேல்லை:grin:tw_angry:tw_angry:

    • Like 1
  6. அநாமதேயமாக... களத்திற்கு வந்து போவதில், பல நன்மைகள் உண்டு.... வல்வை. :grin:
    அதற்கும், ஆப்பு வைத்து விட்டார்கள்... பாவிங்க. Ohmy

    ஏன் காத்துக்கறுப்பு அடிக்காமல் தப்பவா?

  7. அனைவருக்கும் வணக்கம். 
    எனக்கு ஒரு சந்தேகம். நான் யாழ்களத்தில் எனது பெயரை... அனாமதேய (Anonymous)  பெயராக தான், பதிந்துள்ளேன். 
    அப்படியிருந்தும்...  எனது பெயர் வெளிப்படையாக தெரிவது ஏன்? எல்லோருக்கும்... அப்படியா? 
    ஆனால்.... நெடுக்ஸ் போன்றவர்கள் களத்தில் நின்றால், அவர்களது பெயரை காட்டுவதில்லை. ஏன்... ஏன்... ஏன்...? :grin:

    உங்களை அநாமதேயமாக ஆக்குவது தடை செய்யப்பட்டுள்ளதாம்:grin:

  8. முடியல முடியல முடியல பழைய யாழை மீளப் போடுங்கள்.

     

     

    கிழடுகளான எங்களாலேயே யாழின் வேகத்திற்கு ஏற்ப நின்று நிலைச்சு பாக்கமுடியல....சிறிசுகள் எல்லாம் என்ன செய்யுதுங்களோ..... மோகனுக்கு வில்லத்தனம் கூடிப்போச்சு... யாழை சுழல விட்டுட்டு நான் கேம் விளையாடிக் கொண்டு இருக்கவேண்டியதாக இருக்கு....யாழை உடனடியாக மாற்றி துரிதமாக இயங்க வைக்காவிட்டால் நான் யாழோடு :(நட்பு  ரத்து செய்யப் போகிறேன். மோகன் தலையில இருக்கிற கொஞ்ச நஞ்ச முடிகளைப் பிய்த்தாவது யாழை வேகப்படுத்தவும் புதிய பேயைக்காட்டிலும் பழைய வேதாளம்:love: நல்லா இருக்கு.... நாங்கள் விக்கிரமாதித்தர்கள் வேதாளத்தோடுதான்  முருங்கையால :innocent:இறங்குவோம். புதுப் பேய் சீச்சீ வேண்டாம்:grin:

    Angry-Face-Smiley3.jpg

     

  9. அண்மையில் பச்சைப்புள்ளிகளால் வாழ்த்துப்பெற்றிருக்கும் குட்டிச்சாத்தான் குசாவுக்கும் மிஸ்டர் ரோமியோ புங்கையூரானுக்கும் மனம்நிறைந்த மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் பல

    யாழில் இருவரும் கலகலப்பானவர்கள் மட்டுமல்ல காத்திரமானவர்களும் கூட மாறுபட்ட பதிவுகள் மூலம் எங்களையெல்லாம் வாசகர்கள் ஆக்கி ஆக்கங்களையோ அல்லது அவர்களின் பதிவுகளையோ வாசிக்க தூண்டும்பாணி இருவருக்குமானது. முகம் தெரியாமலே உரிமையோடு கிண்டல் அடிப்பதை இரசிக்கும் நட்புவெளியில் நம்மை யாழ் இணைத்திருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் பதிவுகளும் பச்சைகளும் குவிய வெற்றிநடை போடுவீர்களாக.

    happy-friends.jpg

  10. ஒவ்வொரு திரியையும் திறக்க நீண்டநேரம் எடுக்கிறது... எனக்கு மட்டுந்தான் இப்படியா மற்றவர்களுக்கும் காத்திருப்பைக் கொடுக்கிறதா?

     

  11. ஒரு வழியாக தேடித்துழாவி, களத்தின் திரிகளை வடிகட்டி பார்க்கும் முறையை (Content Filters) கண்டுபிடித்து, விருப்பமான செட்டிங்கை தெரிவுசெய்து சேமித்தும் வைத்துவிட்டேன்..

    நன்றி! :)

    :o ஐயய்யோ

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.