Jump to content

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5810
  • Joined

  • Last visited

  • Days Won

    39

Posts posted by வல்வை சகாறா

  1. அண்மையில் பச்சைப்புள்ளிகளால் வாழ்த்துப்பெற்றிருக்கும் குட்டிச்சாத்தான் குசாவுக்கும் மிஸ்டர் ரோமியோ புங்கையூரானுக்கும் மனம்நிறைந்த மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் பல

    யாழில் இருவரும் கலகலப்பானவர்கள் மட்டுமல்ல காத்திரமானவர்களும் கூட மாறுபட்ட பதிவுகள் மூலம் எங்களையெல்லாம் வாசகர்கள் ஆக்கி ஆக்கங்களையோ அல்லது அவர்களின் பதிவுகளையோ வாசிக்க தூண்டும்பாணி இருவருக்குமானது. முகம் தெரியாமலே உரிமையோடு கிண்டல் அடிப்பதை இரசிக்கும் நட்புவெளியில் நம்மை யாழ் இணைத்திருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் பதிவுகளும் பச்சைகளும் குவிய வெற்றிநடை போடுவீர்களாக.

    happy-friends.jpg

  2. ஒவ்வொரு திரியையும் திறக்க நீண்டநேரம் எடுக்கிறது... எனக்கு மட்டுந்தான் இப்படியா மற்றவர்களுக்கும் காத்திருப்பைக் கொடுக்கிறதா?

     

  3. ஒரு வழியாக தேடித்துழாவி, களத்தின் திரிகளை வடிகட்டி பார்க்கும் முறையை (Content Filters) கண்டுபிடித்து, விருப்பமான செட்டிங்கை தெரிவுசெய்து சேமித்தும் வைத்துவிட்டேன்..

    நன்றி! :)

    :o ஐயய்யோ

  4. படம்: பாலூட்டி வளர்த்தகிளி
    பாடகர்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
    இசை; இளையராஜா

     

     

    நான் பேச வந்தேன்
    சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
    திருவாய்மொழி திருவாசகம்
    நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்

    நான் பேச வந்தேன்
    சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
    உன் வாய்மொழி மணிவாசகம்
    நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை

    நான் பேச வந்தேன்
    சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

    ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
    படபட படபட படவென வரும் பாவங்கள்
    ஆலிலை மீது தழுவிடும் காற்று
    சலசல சலசல சலவென வரும் கீதங்கள்
    குலமகள் நாணம் உடன் வரும் போது
    மௌனமே இடைதான் தூது
    ஒரு கிளி ஊமை…ஒரு கிளி பேதை
    இடையில் தீராத போதை…ஹா

    நான் பேச வந்தேன்
    சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

    கார்குழல் மேகம் மூடிய நெஞ்சில்
    கலகல கல கலவென வரும் எண்ணங்கள்
    ஓவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
    பளபள பளபள பளவென வரும் கிண்ணங்கள்
    சொல் என கண்ணும்…நில் என நெஞ்சும்
    சொல் என கண்ணும்…நில் என நெஞ்சும்
    சொல்வதே பெண்ணின் தொல்லை
    சிறுகதை ஓர் நாள் தொடர்கதை ஆனால்
    அதுதான் ஆனந்த எல்லை

    நான் பேச வந்தேன்…ஹா
    சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை…ஆ
    உன் வாய்மொழி மணிவாசகம்
    நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
    நான் பேச வந்தேன்
    சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

     

     

  5. வயலின் :- Shine Kk

     

     

    படம் :- மன்னன்

    பாடல் வரிகள் :- வாலி

     

    பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
    நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

    ஆண் : மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
    நீயும் நாளும் ஆட்டம் போடவா

    பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
    நீயும் காதல் தோட்டம் போடவா

    ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ

    பெண் : பூமேனி கொண்டாடும் வெண் பனி
    என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
    நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

    ***

    ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற
    கண்ணிரண்டிலே என்ன மயக்கம்

    பெண் : மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார் சேர்ந்து
    சின்ன மலர் தான் சிந்து படிக்கும்

    ஆண் : கையோடு கை சேரும் கல்யாண வைபோகம்
    கண்டு களிக்கும் காலம் பிறக்கும்

    பெண் : மேள சத்தம் கேட்பதெந்த தேதியோ

    பெண்குழு : லால லால லால லால லால லா

    ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ

    பெண்குழு : லால லால லால லால லால லா

    பெண் : காதும் காதுமாய்

    ஆண் : காதல் மந்திரம்

    பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ என்னாளும் இங்கு

    ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
    நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

    ***

    பெண் : நின்றாலும் சென்றாலும் பின்னோடு என்னாளும்
    வந்த நிழலே வண்ண மயிலே

    ஆண் : தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும்
    என்ன சுகமே என்ன சுவையே

    பெண் : உன்மேனி பொன்மேனி இன்னாளும் என்னாளும்
    என்னை மயக்க தன்னை மறக்க

    ஆண் : ஓடை மீது ஓடம் போல ஆட வா

    பெண்குழு : லால லால லால லால லால லா

    பெண் : உன்னை அன்றி யாரும் இல்லை ஆட வா

    பெண்குழு : லால லால லால லால லால லா

    ஆண் : காதல் கன்னிகை

    பெண் : காமன் பண்டிகை

    ஆண் : காணுகின்ற காலம் அல்லவா என்னாளும் இங்கு

    பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
    நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

    ஆண் : மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
    நீயும் நாளும் ஆட்டம் போடவா ஹஹா

    பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
    நீயும் காதல் தோட்டம் போடவா

    ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
    பூ மேனி கொண்டாடும் வெண்பனி

    பெண் : என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
    நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

     

  6.  

    என்ன 1980ஆம் ஆண்டு எடுத்த போட்டோவை போட்டிருக்கு ?
    யாரும் சின்ன பெடியளுக்கு வலை விரிக்கிற விளையாட்டு மாதிரி இருக்கு ......
     
    வீட்டு காரரின் தொலைபேசி எண் கிடைக்குமா ?
    (இதையெல்லாம் உடனே உடனேயே போட்டு கொடுக்கணும்)

     

     

    மருதங்கேணி மலரும் நினைவுகள்ம்மா இதையெல்லாம் கண்டுக்கப்படாது.

     

    போட்டுக்கெடுத்து எதுவும் ஆகாது... ஆகா எனக்கு விடுதலை கிடைச்சிடிச்சி என்று ஏதோ படத்தில பொண்டாட்டி ஊருக்குப்போட்டா என்று ஜனகராஜ் துள்ளிக்குதித்து ஓடித்திரிகிறமாதிரி ஒரு சீன் கனடாவில நடக்கும் அவ்வளவுதான் :rolleyes::lol::icon_mrgreen:

  7. படம் : இளமை ஊஞ்சலாடுது
    பாடகர்கள் : எஸ்.பி .பாலசுப்ரமணியம்
    இசை : இளையராஜா
    வரிகள் : வாலி
    பாடல் : ஒரே நாள்
    ________________________________

    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
    மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
    நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

    கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
    மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

    ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

    ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
    ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர

    பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
    பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
    கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
    கையிறேண்டிலும் ஒரே லயம்
    இரவும் பகலும் இசை முழங்க

    ஒரே நாள் …….. 
    உன்னை நான் ………. 
    நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
    ஊஞ்சலாடுது …
    அஹ அஹ அஹ ஆஹா

    • Like 1
  8.  

    படம்: உயிரே உனக்காக
    பாடியவர்கள்: ஜானகி
    பாடலாசிரியர்: வைரமுத்து

     

     

    பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
    பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
    (பன்னீரில்)

    வசந்தம் வரும் காலம்
    விழியில் வண்ணக் கோலம்
    கூ.கு....குக்குக்கூ.
    கூ.கு....குக்குக்கூ.
    சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே..
    (பன்னீரில்)

    நானுமோர் தென்றல் தான்
    ஊரெல்லாம் சோலை தான்
    எங்குமே ஓடுவேன்
    நதியிலே நீந்துவேன்
    மலர்களை ஏந்துவேன்
    எண்ணம் போல் வாழுவேன்

    தந்தனத் தான தன
    தந்தனத் தானனா

    இளமைக் காலம் மிக இனிமையானது
    உலகம் யாவும் மிகப் புதுமையானது
    (பன்னீரில்)

    மாளிகைச் சிறையிலே
    வாழ்ந்த நாள் வரையிலே
    சுதந்திரம் இல்லையே
    விடுதலை கிடைத்தது
    வாசலும் திறந்தது
    பறந்ததே கிள்ளையே

    தந்தனத் தான தன
    தந்தனத் தானனா,

    நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும்
    எளிமையான அந்த இறைவன் ஆலயம்
    (பன்னீரில்)

     

  9. படம்: மெல்ல திறந்தது கதவு
    இசை: இளையராஜா
    பாடியவர்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

     

    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போனதேன்
    (வா வெண்ணிலா..)

    முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
    திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
    ஒரு முறையெனும் திருமுகம் காணும்
    வரம் தர வேண்டும் எனக்கது போதும்
    உன்னைச் சேர உனைச் சேர எதிப்பார்த்து
    முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்
    (வா வெண்ணிலா..)

    மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
    நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
    இணை பிரியாமல் துணை வர வேண்டும்
    உனக்காக உனக்காக பனிக்காற்றை
    தினம் தூது போக வேண்டினேன்
    (வா வெண்ணிலா..)

  10.  

    பாடல்: அந்திமழை
    படம்:ராஜபார்வை
    பாடியவர்கள்:S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி

     

    அந்திமழை பொழிகிறது
    ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
    இந்திரன் தோட்டத்து முந்திரியே
    மன்மத நாட்டுக்கு மந்திரியே

     

    தேனில் வண்டு மூழ்கும் போது
    பாவம் என்று வந்தாள் மாது
    நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
    தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்
    தனிமையிலே வெறுமயிலே எத்தனை நாளடி இளமயிலே
    கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளில் சுமையடி இளமயிலே

     

    தேகம் யாவும் தீயின் தாகம்
    தாகம் தீர நீ தான் மேகம்
    கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
    தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
    நெஞ்சுகொடு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்
    மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்
    சிப்பியில் தப்பிய நித்திலமே, ரகசிய ராத்திரி புத்தகமே

     

     

     

  11. படம்: கடல் (2013)
    இசை: A.R.ரஹ்மான்
    பாடியவர்கள்: அப்ஹாய் ஜோத்பூர்கர், ஹரிணி
    பாடல்வரிகள்: வைரமுத்து

     

    மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
    நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
    பௌர்ணமி இரவு பனிவிழும் காடு
    ஒத்தையடி பாதை உன்கூட பொடி நட
    இது போதும் எனக்கு இது போதுமே
    வேறென்ன வேணும் நீ போதுமே

    இது போதும் எனக்கு இது போதுமே
    வேறென்ன வேணும் நீ போதுமே

    மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
    நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்

     

    குளத்தாங்கரையில குளிக்கும் பறவைக
    சிறகு உலத்துமே துளிக தெறிக்குமே

    முன்கோபம் விடுத்து முந்தானை எடுத்து
    நீ மெல்ல துடைக்க நா உன்ன அணைக்க

    இது போதும் எனக்கு இது போதுமே
    வேறென்ன வேணும் நீ போதுமே
    இது போதும் எனக்கு இது போதுமே
    வேறென்ன வேணும் நீ போதுமே

    மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க
    ரத்தம் உறையும் குளிரும் இருக்க

    உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க
    ஒத்தப் போர்வையில இருவரும் இருக்க
    இது போதும் எனக்கு இது போதுமே
    வேறென்ன வேணும் நீ போதுமே

    இது போதும் எனக்கு இது போதுமே
    வேறென்ன வேணும் நீ போதுமே


    மூங்கில் தோட்டம்... மூங்கில் தோட்டம்
    மூலிகை வாசம்... மூலிகை வாசம்
    நெறஞ்ச மௌனம்... நெறஞ்ச மௌனம்
    நீ பாடும் கீதம்... நீ பாடும் கீதம்
    பௌர்ணமி இரவு... பௌர்ணமி இரவு
    பனிவிழும் காடு...பனிவிழும் காடு
    ஒத்தையடி பாதை... ஒத்தையடி பாதை
    உன்கூட பொடி நட... உன்கூட பொடி நட

    இது போதும் எனக்கு இது போதுமே

    வேறென்ன வேணும் நீ போதுமே

     

  12.  

    ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
    ஆட்சி புரிந்தானே அன்று

    ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
    ஆட்சி புரிந்தானே அன்று
    தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்
    ஏறி நடக்கின்றான் இன்று
    காலை விடிந்தது என்று பாடு
    சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

    எட்டு திசையாவும் கொட்டு பெருசோழன்
    ஏறி கடல் வென்றதுண்டு
    அவன் விட்ட இடமெங்கும் வென்று வருகின்றான்
    வேங்கை கடல் வீரர் இன்று
    காலை விடிந்தது என்று பாடு
    சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

    எங்கள் கடல் மிதில் எதிரி வருகின்ற
    இன்னல் இனி மேலும் இல்லை
    புலி பொங்கி எழுந்திட்ட தங்க தமிழீழ
    பூமி தனிலேது தொல்லை
    காலை விடிந்தது என்று பாடு
    சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

    கடலில் என்றாலும் தரையில் என்றாலும்
    காவல் இருக்கின்ற தம்பி
    எதிர் படைகள் வரும்போது பாயும் புலிவீரன்
    பகையை முடிப்பானே பொங்கி
    காலை விடிந்தது என்று பாடு
    சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

    வலிமை தரும் எங்கள் தலைவன்
    வழிதன்னில் வங்ககடல் நின்று படும்
    கடல் புலிகள் எழுகின்ற போர்கள்
    தனிவெற்றி பெற்று தமிழீழம் ஆடும்
    காலை விடிந்தது என்று பாடு
    சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

  13.  

    பாடியவர் : ஜெயச்சந்திரன், S ஜானகி
    பாடல் : தாலாட்டுதே வானம்
    படம் : கடல் மீன்கள்
    இசை : இளைய ராஜா

     

    தாலாட்டுதே...
    தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
    காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
    இது கார்கால சங்கீதம் - தாலாட்டுதே...

    அலை மீதில் ஆடும் உள்ளம் எங்கும் ஒரே தாகம்
    நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்

    மேல்வானத்தில் ஒரு நட்சத்ரம்
    கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்
    எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம்

    தாலாட்டுதே...
    தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
    காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
    இது கார்கால சங்கீதம்

    இரு கண்கள் மோதி செல்லும் போதும் ஒரே எண்ணம்
    ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
    சொர்கத்திலே இது முடிவானது
    சொர்க்கம் என்றே இது முடிவானது
    காதல் ஒரு வேதம் அது தெய்வம் தரும் கீதம்

    தாலாட்டுதே...
    தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
    காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
    இது கார்கால சங்கீதம் - தாலாட்டுதே...

     

     

     

  14. சாக்ஸ்போன் இசை:-  நாதன்

    படம் : சாந்தி
    குரல் : பி.சுசீலா
    இசை : எம்.எஸ்.வி
    வரிகள்: கண்ணதாசன்

     

     

    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
    நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்….
    நினைவு தராமல் நீயிருந்தால்
    கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

    (நெஞ்சத்திலே)

    நூலிடை மீதொரு மேகலையாட
    மாலைக்கனிகள் ஆசையில் வாட …
    ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
    எண்ணம் யாவும் எங்கும் ஓட
    காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
    கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
    நிம்மதி ஏது…நிம்மதி ஏது…

    (நெஞ்சத்திலே)

    காவிரி ஆறென நீர் விளையாட
    கன்னி மலர்கள் தேன்மழையாக …
    பாதி விழிகள் காதலில் மூட
    பாலில் விழுந்த பழம் போலாட
    நீ தரவேண்டும் நான் பெறவேண்டும்
    நிலவில் ஆடும் நிம்மதி வேண்டும்
    நிம்மதி வேண்டும்…நிம்மதி வேண்டும்…

    (நெஞ்சத்திலே)

    http://www.youtube.com/watch?v=6KqU4Bijx00

  15. கீ போர்ட் : -  ஸ் ரீபன்

    மிருதங்கம் :- குழல்மண்டம் இராமகிருஸ்ணன்

     

    ஓரு வித்தியாசமான வாத்திய மொழி இதுவரை இத்தகைய ஒரு வாத்திய வாதத்தைப்பார்த்திருக்க மாட்டீர்கள் மிருதங்கம் கடத்தோடும் நாவோடும் மோதியதைத்தான் அறிந்திருக்கிறோம் இப்போதுதான் கீபோர்டோடு இதுவே முதல்தடவை என்று நினைக்கிறேன்.

     

    http://www.youtube.com/watch?v=51yduyy-nMM

    • Like 1
  16. புல்லாங்குழல் :- சாய் நரசிம்மன்

     

     

    படம் - தர்ம யுத்தம்

    பாடல் ஆசிரியர் - வல்லபன்

    பாடியவர்கள் - மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

     

    ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
    பொன்மான் விழி தேடி
    மேடை கட்டி மேளம் தட்டி
    பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

    குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
    சீதா புகழ் ராமன்
    தாளம் தொட்டு ராகம் தொட்டு
    பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

    காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
    மேள தாளம்..ஓஓஒஒ
    காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
    மேள தாளம்..ஓஓஒஒ
    காலை வேளை பாடும் பூபாளம்
    மன்னா இனி… உன் தோளிலே…
    படரும் கொடி நானே
    பருவப் பூ தானே
    பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

    குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
    சீதா புகழ் ராமன்
    மேடை கட்டி மேளம் தட்டி
    பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

    தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே
    தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
    தேவை யாவும் ஹே ஹே ஹே
    தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
    பூவை நெஞ்சில் நாணம் போராடும்

    ஊர்கூடியே உறவானதும்
    தருவேன் பலநூறு
    பருகக் கனிச்சாறு
    தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

    ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
    பொன்மான் விழி தேடி
    தாளம் தொட்டு ராகம் தொட்டு
    பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

     

    • Like 1
  17.  

    படம் : அக்னி நட்சத்திரம்
    இசை : இளையராஜா
    பாடியவர் : K.S.சித்ரா, K.J.யேசுதாஸ்
    பாடல் வரி : வாலி


    வா வா அன்பே அன்பே
    காதல் நெஞ்சே நெஞ்சே
    உன் வண்ணம் உன் எண்ணம்
    எல்லாமே என் சொந்தம்
    இதயம் முழுதும் எனது வசம்

    வா வா அன்பே அன்பே
    காதல் நெஞ்சே நெஞ்சே

    நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
    காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
    பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
    மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

    காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
    ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
    காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
    ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

    நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
    நீயின்றி ஏது பூவைத்த மானே
    இதயம் முழுதும் எனது வசம்
    வா வா அன்பே அன்பே
    காதல் நெஞ்சே நெஞ்சே

    கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
    கானல் அல்ல காதல் என்னும் காவியம்
    அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
    பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

    காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
    நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
    காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
    நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

    உன் தோளில் தானே பூமாலை நானே
    சூடாமல் போனால் வாடாதோ மானே
    இதயம் முழுதும் எனது வசம்
    வா வா அன்பே அன்பே
    காதல் நெஞ்சே நெஞ்சே

    உன் வண்ணம் உன் எண்ணம்
    எல்லாமே என் சொந்தம்
    இதயம் முழுதும் எனது வசம்
    வா வா அன்பே அன்பே
    காதல் நெஞ்சே நெஞ்சே

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.