Jump to content

இளைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1013
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Posts posted by இளைஞன்

  1. யாழ் அரிச்சுவட்டில் 4 கருத்துக்கள் எழுதி விட்டேன் .............

    எனைய பகுதிகளில் எழுத எப்படி வழி கிடைக்கும்??????

    வணக்கம். வாங்கோ.

    அனுமதி வழங்கப்பட்டிருக்கு மாருதி.

  2. எனது பெயரை ராசம்மா என தமிழில் மாற்றும்படி நிர்வாகத்திடம் மிக தாழ்மையுடன் விண்ணப்பிக்கின்றேன்.

    பெயர் தமிழில் மாற்றப்பட்டுள்ளது.

    நன்றி இளைஞன் அண்னை என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தேன் இந்த பெயரை வைக்க வேண்டும் என்று பைங்கிளிகள் சொல்கின்றன ஆசாமி

    உங்கட பெயர ஆசாமி எண்டு மாத்துறதோ முனிவர்??

  3. ஏற்கனவே முனிவர் எண்ட பேரில ஒராள் இருக்கிறார். :lol:http://www.yarl.com/forum3/index.php?showuser=4194

    அதனால் அப்படி மாற்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும். வேறு ஏதாவது பெயர் தெரிவு செய்து சொல்லுங்கள்.

  4. அனைவரின் வேண்டுகோளற்க்கு இணங்க :lol: எனது யெரையும் தமிழில்

    ரசிகன் என்று மாற்றித்தரும்படி மோகனை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி.

    "ரசிகன்" எண்ட பெயரில ஏற்கனவே ஒராள் பதிஞ்சிட்டார் சஜீவன். :lol: வேற பெயர் சொல்லுங்கோ.

  5. * அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். [குறிப்பாக உங்களுக்குத் தெரிந்த தமிழக நண்பர்களுக்கு, மக்களுக்கு, ஊடகங்களுக்கு, அரசியற் கட்சியனருக்கு, அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கவும்.]*

    * flash:

    http://ebook.yarl.com/ipkf/

    * pdf zipped:

    Part 1

    http://www.mediafire.com/?emj0zigyjyu

    Part 2

    http://www.mediafire.com/?i5tzkzyjfny

    Part 3

    http://www.mediafire.com/?tz1mvzdgggz

    * pdf:

    Part 1

    http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part1.pdf

    Part 2

    http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part2.pdf

    Part 3

    http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part3.pdf

    அன்பான உறவுகளே,

    தற்போதைய இலங்கையின் போர்ச்சூழல் பற்றி நீங்கள் அறிவீர்கள். திட்டமிட்ட வகையில் நடத்தப்படும் இனவழிப்பு / இனக்கருவறுப்புப் போரில் - ஒவ்வொரு நாளும் - குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் - எந்தவிதப் பாகுபாடுமின்றி - கொத்துக்கொத்தாக கொத்தணிக் குண்டுகளாலும், பொஸ்பரஸ் அடங்கிய எரிகுண்டுகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். "பாதுகாப்பு வலயம்" என அறிவித்து - அங்கும் மக்களை அரக்கத்தனமாகக் கொல்கிறார்கள். சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி - ஆண்கள் பெண்களென வகைபிரித்து - பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிப் பின் கொன்று புதைக்கிறார்கள். புதிய ஆண்டும் அவர்களுக்கு கொலைக்களமாகத்தான் பிறந்தது. இந்த ஆண்டின் இரண்டு மாத காலத்தில் மட்டும் - 1500 க்கும் அதிகமான மக்கள் சிறிலங்கா பேரினவாத அரசால் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஒரு இளம் சந்ததியே - ஒரு புதிய தலைமுறையே - கை, கால் இல்லாத சந்ததியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்தச் சூழலில் - இந்த இன்னல் நிறைந்த காலகட்டத்தில் - தமிழகத்திலிருந்து எழும் ஒவ்வொரு ஆதரவுக் குரலும் புலம்பெயர் மக்களாகிய எமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறதென்பதை நீங்கள் அறீவீர்களோ தெரியாது. உங்களின் ஆதரவான ஒவ்வொரு சொல்லும் எங்கள் கண்ணீரைத் துடைக்க வல்லன. எமக்கு ஆதரவாக நீங்கள் வீதியில் இறங்கும் போதும் - உரக்கக் குரல் கொடுக்கும் போதும் - நாம் நம்பிக்கை கொள்கிறோம். சாதாரண நம்பிக்கையல்ல - சரித்திரம் படைக்கிற நம்பிக்கை.

    ஆனாலும் உறவுகளே - இன்னொரு கசப்பான உண்மையையும் நாம் உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம். உங்கள் ஆதரவான நம்பிக்கை தரும் குரல்களுக்கும் மத்தியிலிருந்து - தமிழகத்திலிருந்து - எம்மீது வெறுப்பைக் கக்குகிற சில குரல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை, மீண்டும் மீண்டும் எம்மைக் காயப்படுத்துகின்றன. நாம் காயப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அந்தக் குரல்கள் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவுக் குரலையும் பலவீனப்படுத்திவிடும் என்றே பயப்படுகிறோம். உலகத் தமிழினமே இன்று ஒன்றுபட்டு நிற்கையில் - பகைவளர்க்கும் இந்தச் சில குரல்கள் - தமிழினத்தின் விடுதலையில் கீறல்களை ஏற்படுத்திவிடக் கூடாதென்றே விரும்புகிறோம்.

    ஈழத்தமிழர் பிரச்சனை/அவலம் பற்றி நீங்கள் பேசுகிற போதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - உங்களின் வாயை அடைக்கப் பார்க்கிறார்கள். ஈழத்தின் விடுதலை பற்றிப் பேசுகிறபோதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - கொச்சைப்படுத்துகிறார்கள். உங்களின் எழுச்சியை அவர்கள் ஒற்றை வார்த்தை கொண்டு ஒதுக்கிவிடப் பார்க்கிறார்கள். உலகத் தமிழரின் ஒற்றுமையை ஒற்றைவார்த்தையால், சாத்தியமற்றதாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எனவே அன்பான உறவுகளே, எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் சோர்ந்துவிடக்கூடாது - எவருக்கு முன்னும் நீங்கள் தலைகுனியக்கூடாது - உண்மைகளை உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கோடு இந்தப் புத்தகத்தை மின்னூல் வடிவில் உங்கள் முன் வைக்கிறோம்.

    ராஜீவ்காந்தியின் கொலையை யார் செய்தார்கள்? அவர் கொலை செய்யப்பட்டது சரியா பிழையா? யார் யாருக்கு அதில் பங்குள்ளது என்பது பற்றியெல்லாம் நாம் இங்கு பேச முனையவில்லை. அவற்றை ஒருபுறம் நாம் ஒதுக்கிவைத்துவிட்டு - எங்கிருந்து எல்லாம் தொடங்கியது என்று பார்த்தால் - சிலவேளை உண்மைகள் புரியக்கூடும். அமைதிப்படை என்கிற பேரில் ஈழத்து மண்ணில் கால்வைத்த இந்திய சாத்தான் படை - எப்படியெல்லாம் ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொலை செய்ததென்பதைப் பாருங்கள். ஈழத்தமிழரின் விடுதலைப் போரைச் சிதைக்க எப்படியெல்லாம் துணைநின்றார்கள் என்பதைப் பாருங்கள். மீண்டும், அதே கொடுமையையும் துரோகத்தையும் - சிங்கள அரசுக்கு உதவுவதினூடாக/சிங்கள இராணுவத்தின் பின்னாலிருந்து யுத்தத்தை நடத்துவதினூடாக - இந்தியா செய்கிறது.

    இப்படியான சூழலில் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்புகிற குரலை நசுக்க ராஜீவ்காந்தியின் கொலையைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இதை தொடர்ந்து கவனிக்கிற போது, ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் பேசப்படக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர்களுக்கு தமிழகம் உதவக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படுகிறபோது ராஜீவ்காந்தி கொலை கண்ணுக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவும் - யாரோ திட்டமிட்டு நீண்டகால அரசியல் இலாபத்தோடு இதைச் செய்திருக்கிறார்கள் என்றே உணர முடிகிறது.

    இந்திய/தமிழக நண்பர்களே, உறவுகளே, ஊடகங்களே நாம் பழையதை நினைவுபடுத்தி, எமக்குள் உள்ள உறவைக் காயப்படுத்த விரும்பவில்லை. எனினும், உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். உங்களின் ஆதரவுக் குரல்கள் "ராஜீவ்காந்தியின் கொலை" என்கிற ஒற்றை வார்த்தையைக் கொண்டு அடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்புகிறோம். நாம் மீண்டும் மீண்டும் எல்லோராலும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    * அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    --நன்றி: யாழ் இணையம்--

  6. யாழ் களத்தின் விகடகவிக்கு

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

    உடல் நலமும்

    உள மகிழ்வும்

    என்றும் நிலைத்திருக்க

    வாழ்க வளமுடன்!

  7. வணக்கம்...

    வாழ்த்திய யாழ்கள நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

    வேலைகள் காரணமாக அதிகம் களத்தில் எழுத முடிவதில்லை.

    இருந்தும் பிறந்தநாளை ஞாபகம் வைத்து வாழ்த்திய நண்பர்களுக்கு

    உங்கள் அன்புக்கும், நட்புக்கும் எனது நன்றிகள். :lol:

    நன்றி

  8. நவீன விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனிதரை உற்சாகப்படுத்துகின்றதா அல்லது சோம்பேறியாக்குகின்றதா என்னும் கருப்பொருளை/விவாதப்பொருளைத் தந்து "யாழ் கருத்துக்களத் தோழர்களை"யெல்லாம் ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமானதும் அறிவுபூர்வமானதுமான ஒரு கருத்தாடலை ஒழுங்கமைத்த அன்புத் தோழி தூயாவிற்கு முதலில் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வணக்கங்களும். பட்டிமன்ற நடுவர்களில் ஒருவராக இருந்து இடையிடையே அனைவரது கருத்துக்களையும் தொகுத்து வழங்கி கருத்தாடலர்களையும் பட்டிமன்றத்தையும் சிறப்பிக்கும் சோழியான் அண்ணாவுக்கும், இன்னொரு நடுவராக அனைத்துக் கருத்துக்களையும் "ஆர்வத்தோடு" பார்த்துக்கொண்டிருக்கும் சண்முகி அக்காவிற்கும் எனது வணக்கங்கள். பட்டிமன்றத்தில் எதிரணியினர் உணர்ச்சிவசப்பட்டு குழப்பம் செய்யாமலும், பார்வையாளர்கள் அழுகிய தக்காளி, முட்டை, கல்லு போன்றவற்றை அவர்கள் மீது வீசாமலும் களத்தின் பின்னணியிலிருந்து கண்காணிக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் குறிப்பாக மோகன் அண்ணா, இராவணன் அண்ணா ஆகியோர்க்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.இறுதியாக தம் சோம்பேறித்தனங்களையெல்லாம் மறைப்பதற்காகவும், தம்மிடம் நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதரை உட்சாகப்படுத்துகிறது என்பதற்குரிய சரியான வாதங்கள் இல்லாத காரணத்தாலும் எம்மணியினரை சோம்பேறிகள் என்று கூறிக் கூறியே அரைவாசி பக்கங்களை வீணடித்துவிட்டு சோம்பேறிகளாய் ஓய்ந்துபோயிருக்கும் எதிரணியினருக்கும் - உற்சாகமாகவும் தம் வாதத்தில் உறுதியோடும் கருத்தெடுத்துரைத்த என் அணித்தோழர்களுக்கும் எம்மையெல்லாம் வழிநடத்திக்கொண்டிருக்கும் எம்மணித் தலைவர் சியாம் அவர்களுக்கும் வணக்கம் வணக்கம் வணக்கம் கூறி என் தரப்பு வாதங்களை முன்வைக்கிறேன்.

    1. இணையத்தில் பொருட்களை தெரிவுசெய்து, இணையம் மூலமாகவே அவற்றை வாங்கி வீட்டிற்கு தருவித்தல்:

    ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து, ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும். அதேவேளையில் உடற்செயற்பாட்டுக்கு வழிவகுக்கும். போராட்டங்களின் மத்தியில் பெறப்படுகின்ற ஒன்றே எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. உள்ளம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உற்சாகம் பிறக்கும். அதைவிடுத்து கணினிக்கு முன்னால் 24 மணிநேரம் அமர்ந்திருந்து, கணினித்திரையை உற்று நோக்குவதால் கண்கள் சோர்வடைகின்றன - கண்கள் சோர்வடைவதால் மூளை சோர்வடைகிறது. கணினித் திரையின் ஒளிக்கதிர்கள் பார்வைச் சக்தியையும் மெதுமெதுவாகக் குறைக்கிறது. இருக்கையில் நீண்டநேரம் அமர்ந்திருப்பதனால் முதுகுநோ போன்றவற்றின் தாக்கத்திற்கு மனிதஉடல் ஆளாகின்றது.

    2. கணினி விளையாட்டுக்கள்:

    ஓடியாடி - துள்ளிக்குதித்து - சூரியஒளிபட - மெல்லிய காற்று வருடிச் செல்ல - புழுதிமண் உடல் தழுவ விளையாடிய காலம் போய் கணினித் திரைக்கு முன், அறையை இருட்டாக்கி மணிக்கணக்காக அதில் ஈர்க்கப்பட்டு குந்தியிருக்கும் நம் இளைஞர்களின் உடலில் தேவையான அசைவுகள் எப்படி ஏற்படும்? கண்கெடும் - சோர்வுண்டாகும் - உற்சாகம் எப்படிப் பிறக்கும்?

    3. இணைய அரட்டை:

    தூரத்திலிருப்பவர்களை சந்தித்து கதைத்து மகிழ இணையம் வழிவகுக்கிற போதிலும், இணைய அரட்டையின் மூலம் அருகில் இருக்கும் நண்பர்களை சந்திப்பதை பலர் குறைத்துக் கொள்கிறார்கள்.இணைய அரட்டை பலரை போதைக்குள்ளாக்கி அடிமைப்படுத்தியுள்ளது. வெளியில் சென்று நண்பர்களை சந்தித்து வீதியோரமாய் நடந்து, ஊர்சுற்றி திரிந்தபோது அதில் உளம் களைகட்டும் - உற்சாகம் தன்னில் பிறக்கும். வீதியில் இளம்பெடியங்கள் பெட்டைகள் பின் சுற்றுவதும் - இளம்பெட்டைகள் பெடியங்கள் பின் சுற்றுவதும் - ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்காய் செயல்கள் புரிவதுவும் - உளத்துக்கு எவ்வளவு உற்சாகம் கொடுத்தது? இன்று அப்படியா? கணினித் திரைக்கு முன்னால் இருந்து பொழுது இருள்வதும தெரியாமல் - என்ன செய்கிறோம் என்றும் தெரியாமல் - இருந்த இடத்தைவிட்டு அசையாமல் - உணவுகூட உட்கொள்ளாமல் எத்தனைபேர் இருக்கிறார்கள் தெரியுமா? இப்படி இருந்தால் உடற்பலம் என்னவாகும்? உடல் ஒழுங்காக இயங்கினால் தானே சோம்பேறித்தனம் அற்றிருக்கலாம்.

    4. இணையக் காதல்:

    காதலிக்கிறோம் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இணைய அரட்டையில் தம் காதலர் பற்றி எதுவுமே அறியாமல் மணிக்கணக்காய் காதலைப் பரிமாறுகிறார்களாம். காதலென்றால் என்னவென்றும் தெரியாது - வாழ்க்கையென்றால் என்னவென்றும் தெரியாது - தான் அரட்டையில் சந்தித்த அந்த "X" எப்படிப்பட்டவர் என்றும் அறியாது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். இணையம் ஊடாக கோப்புக்களை(Files) பரிமாற முடியும், கருத்துக்களைப் பரிமாற முடியும், செய்திகளை பரிமாறமுடியும் ஆனால் மனித உணர்வுகளை , அதன் தன்மைகளையும் எப்படிப் பரிமாறமுடியும்? Smilies போடுவதாலும், Webcam காட்டுவதாலும், Micofon இல் உரையாடுவதாலும் எந்த உணர்வுகளும் உண்மையாகப் போய்ச் சேர்வதில்லை. Digital தொழில்நுட்பம் என்பதே "மாற்றியமைக்கும், திருத்தியமைக்கும்" தன்மை உடையது. அதாவது Webcam மூலமாக உங்கள் முகத்தைக் காட்டும் போது மெருகூட்டி, அழகூட்டி காண்பிக்கலாம். Microfon மூலம் உரையாடும் போது ஆண்குரல் பெண்குரலாகவும், பெண்குரலாகவும் மாற்றப்பட்டு உரையாடலாம். படங்களைக்கூட Grafic மென்பொருள்கொண்டு உருவ அமைப்புக்களை மாற்றியமைக்கலாம். இப்படி உணர்வுகளைக் கூட உண்மையாக வெளிப்படுத்த அல்லது பரிமாற முடியாது போது உற்சாகத்தை இந்த இணைக் காதல் எப்படிப் பிறப்பிக்கும்?

    காதல் ஒவ்வொரு மனதருக்குள்ளும் வாழ்வின் அர்த்தத்தைப் புரியவைக்கிறதென்கிறார்கள். காதலித்தால் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் உடலில் உள்ளத்தில் பாயுமென்கிறார்கள் - அதாவது உற்சாகத்தைத் தான் இப்படி சொல்கிறார்கள். வாழ்வியக்கத்தின் சக்தியாகவே அதனைப் பார்க்கிறார்கள். அந்த சக்தி உண்மையாக வெளிப்படும் போதுதானே உளத்தில் உற்சாகம் என்கிற மின்சாரம் பாயும்? இப்படி இணையஊடகம் மூலமாக காதலிக்கிறோம் என்பவர்களையும், நேரில் பழகி - விரும்பிய இடங்களிற்கெல்லாம் சென்று வாழ்வு பற்றிய கனவுகளை, கருத்துக்களைப் பரிமாறி - மனித உணர்வுகளை நேருக்கு நேர் வெளிப்படுத்தி - கைகோர்த்து - காலாற நடந்து - கடக்கப்போகும் எதிர்காலத்தைக் கதைத்து - கண்ணெல்லாம் ஒளிபாய - காதில் தேனினிமையூற - மனதெல்லாம் சுகம்தர - வாழ்வதற்கான உற்சாகத்தைப் பெறுகின்ற காதலர்களையும் சந்தித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.

    5. கணினியில் சிறு வேலைகள்:

    உடல் உழைப்பின் மூலமும், மூளை உழைப்பின் மூலமும் செய்யக்கூடிய சிறிய சிறிய வேலைகளைக்கூட இன்று கணினி மூலம் செய்கிறார்கள். மனித உழைப்பின் அநாவசியமாக செலவழிக்கிற வேலைகளுக்கு கணினியைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் மனித உழைப்பு பயன்படுத்தக்கூடிய சிறு சிறு வேலைகளைக்கூட இன்று கணினியைப் பயன்படுத்தி செய்கிறார்கள். உழவு செய்த எம் பாட்டனிடம் உற்சாகமிருந்தது - பாடியாடி வேலைசெய்த அவர்கள் மனதில் தெளிவும் தெம்பும் இருந்தது. இன்று உங்களிடம் என்ன இருக்கிறது? தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் உங்களை சோம்பேறிகளாக்குவதற்காகத்த

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.