நிழலி! இன்றைக்கு கவிஞர் நாடுகடத்தப்பட்டிருக்கிறார். அவர் என்றைக்காவது ஒருநாள் மீண்டும் தாயகம் செல்லுவதை நோக்கமாக கொண்டிருப்பார். இதற்கு சிலரை நோகடிக்காமல் இருப்பது அவசியம்தான். வேறு வழியில்லை.
கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கின்ற காலத்தில், கவிஞரால் அது பற்றி பேசவாவது முடிகிறது.
எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.