Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சபேசன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  3158
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by சபேசன்

 1. "இந்துக்களின்" இடங்களில் விகாரைகள் கட்டப்படுவது பற்றி இந்தத் துண்டுப்பிரசுரம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? தங்களின் வீரத்தை அங்கே காட்டலாமே?!
 2. என்னுடைய பார்வையில் தமிழர்களும் முஸ்லீம்களும் இணைய வேண்டும் என்பது தமிழர்களின் நலனுக்கு ஆதரவான கருத்து. முஸ்லீம்களை தூற்றி வருகின்ற கருத்துக்கள் தமிழர்களின் நலனுக்கு எதிரான கருத்துக்கள். "தமிழர்களுக்காக கதைப்பது" என்பதை எப்படிச் செய்ய வேண்டும் என்று யார் முடிவு செய்வது?
 3. "புலம்பெயர் மக்களின் தாயகப் பயணம்" என்பது தனிப்பட்ட நலன் மட்டும் அல்ல, அது ஒரு இனத்தின் நலன். அதனால் தாயகம் சென்று வருபவர்கள் சில இடங்களில் மௌனமாக இருப்பதையும், சமாளித்து போக முனைவதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
 4. நாரதர்! நான் சில வேளைகளில் தேவை கருதி உண்மை பேசுவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் உண்மைகளை பொய்யென்று எழுதியது இல்லை. உண்மை என்றும் உண்மைதான்.
 5. நிழலி! இன்றைக்கு கவிஞர் நாடுகடத்தப்பட்டிருக்கிறார். அவர் என்றைக்காவது ஒருநாள் மீண்டும் தாயகம் செல்லுவதை நோக்கமாக கொண்டிருப்பார். இதற்கு சிலரை நோகடிக்காமல் இருப்பது அவசியம்தான். வேறு வழியில்லை. கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கின்ற காலத்தில், கவிஞரால் அது பற்றி பேசவாவது முடிகிறது. எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.
 6. சசிக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்து இதற்கு முன் பிறந்த நாள் கொண்டாடிய மதுகா, அரொங் ஆகியோருக்கும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள்
 7. நவம், பொயட் மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். நிழலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து நிழலி! இன்னமும் பந்தி பிரித்து எழுத முடியவில்லை!!!!
 8. சகாராவுக்கும், ரகுநாதனக்கும், ராஜாவுக்கும் என்னுடைய அன்பான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். சிதம்பரநாதன் என்று ஒருவரும் பிறந்த நாள் கொண்டாடுகிறார். 2007இல் இணைந்து இதுவரை இரண்டு கருத்துகள் எழுதியிருக்கிறார். இங்கே பார்வையாளராகவது வருகிறாரா என்று தெரியவில்லை. அவரையும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துவோம்.
 9. அகூதா! உங்களுக்கு நான் சொல்ல வருவது கட்டாயம் புரியும். ஆனால் வேண்டும் என்றே இப்படி எழுதுகிறீர்கள். தனித் தனியாக மோதல்கள் இன்றி பயணிக்கலாம். நிச்சயமாக இலக்கில் ஒன்றாகத்தான் சேருவோம்.
 10. தமிழரசு சொல்வது போன்றுதானே நானும் சொல்கிறேன். ஒன்றாக போக முடியாத நிலையில் தனித் தனியாக மாவீரர் தினங்களை செய்யலாம். மக்கள் தமக்கு விரும்பிய இடங்களுக்கு செல்லலாம். ஆனால் மோதல்கள் இருக்கக் கூடாது. மாவீரர் தினம் செய்கின்ற ஒரு தரப்பை மறு தரப்பு துரோகி என்றும் சிங்களத்தின் கைக்கூலிகள் என்றும் பரப்புரை செய்து கொண்டு திரிவதும், போக விரும்புகின்ற மக்களை தடுப்பதும்... இது போன்ற செயல்களை வேண்டாம் என்கிறேன். ஒருவரை ஒருவர் குழப்பாமல், துரோகிப் பட்டம் வழங்காமல், மற்றவர்களும் மாவீரர்களையே போற்றுகிறார்கள் என்பதன் அடிப்படையில் சிந்திப்பதே நாளைய ஒற்றுமைக்கு பயன்படும்.
 11. பொதுவாக ஜேர்மனியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள். இம் முறை இரண்டு நிகழ்வுகளிலும் சேர்த்து 2500 பேர் வரையிலேயே வந்திருந்தார்கள். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடத்துகின்ற தமிழாலயங்களின் மாணவர்கள், பெற்றோர்கள் என்று திரட்டினாலே இலகுவாக பத்தாயிரம் பேரை திரட்டி விடலாம். ஆனால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. நூறு கிலோமீற்றர்கள் பயணம் செய்து என்ன செய்யப் போகிறோம் என்கின்ற கேள்விக்கு சரியான பதில் அவர்களுக்கு சொல்லப்படவில்லை. உலகம் உண்மையிலேயே புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற மாவீரர் நிகழ்வை கவனிக்கிறதா என்பது பற்றி சரியான பதில் யாரிடமும் இல்லை. முன்பு தேசியத் தலைவரின் உரை கேட்கவே 80 வீதமான மக்கள் வருவார்கள். அவர் என்ன சொல்லப் போகிறார், அடுத்த ஆண்டின் போராட்டத்தின் பாதை எது என்பதை எல்லாம் அறிவதற்காய் வருவார்கள். இன்றைக்கு அவரின் உரை இல்லாமல் போய் விட்டது. இரண்டாக நடத்துவதால் போட்டி போட்டுக் கொண்டு ஓரளவு ஆட்களையாவது திரட்டுகிறார்கள். ஒன்றானால் வருபவர்களின் தொகை இன்னமும் குறையக் கூடும்.
 12. பையனுக்கு அன்பான நன்றிகள். அன்னிலிங்கத்திற்கு என்னுடய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
 13. எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து தமிழரசு, புங்கையூரான், தமிழ்சிறி, தப்பிலி, ஜீவா, தமிழ்சூரியன், ரதி, கறுப்பி, சாந்தி, உடையார், இசைக்கலைஞன், நந்தன், வல்வை சகாறா, துளசி மற்றும் அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றிகள். வாத்தியாருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள்.
 14. தமிழ்சிறி, போன முறை அர்ச்சனை எல்லாம் செய்தீர்கள். இம் முறை வெறும் புத்தகத்தோடு நிறுத்தி விட்டீர்கள். என்னிடம் ஏற்கனவே மூன்று பகவத்கீதைப் புத்தகங்கள் இருக்கிறது. நான்காவதாக இதையும் வைத்துக் கொள்கிறேன். உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்னுடைய நன்றிகள் கறுப்பி உங்கள் வாழ்த்துக்கு நன்றி ரதி உங்களுக்கு என்னுடைய அன்பான நன்றிகள் விசுகு உங்களுக்கு நன்றிகள் பல பல நுவி, மிக்க நன்றி இசைக்கலைஞன், இறைவன் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றட்டும். அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி வாத்தியாருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள்
 15. இதை இன்றுதான் கவனித்தேன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். யாகம் வளர்த்து எனக்காக பிரார்த்தித்த தமிழ்சிறியின் அன்புக்கு விசேட நன்றிகள்
 16. நெடுக்காலபோவானுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.