• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Paravaikal

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    423
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About Paravaikal

  • Rank
    உறுப்பினர்

Profile Information

  • Location
    பறவைகள் சரணாலயம்
  • Interests
    உயரப்பறப்பதில்
  1. யாழ் முகப்பில் போட விரும்பின்... அதன் அளவுகளுக்கு ஏற்ற பனர் தரவேற்றப்பட்டுள்ளது.
  2. From: mediaunion cmrtvi <unioncmr@gmail.com> Date: 2010/6/1 Subject: உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள் யூன் 01, 2010 அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே! உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள் கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம். இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் ;செலவு செய்யும் நேரத்திற்கும் எமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சம்பந்தமேயில்லாத அளவிற்கு நாங்கள் பல மணித்துளிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இப்போது இடம்பெறும் இந்த நிகழ்வு நூற்றுக்கு மேற்பட்ட எங்களது வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ள படியால் உங்கள் முன் உண்மைகளை வைக்கிறோம். தாயகத்தில் எமக்காகப் போராடிய உறவுகள் மௌனித்துப் போனதும் இங்கே நிலைமை தலைகீழாக மாறியது. இந்த மூன்று ஊடகங்களையும் நிர்வகிக்க என தாயகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தனிமனிதனால் அடக்கு முறையாகவே நடத்தப்பட்டு வந்தோம். இந் நிலையிலேயே இந்த ஊடககங்களை தனது சொந்தச் சொத்து எனக் கூறி “அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி சுவீகரிக்க முற்பட்டார். எங்களிடமே பலமுறை இது பொதுப் பணமல்ல, எனது சொந்தப் பணம் என்று உண்மைக்கு மாறாக கதைக்க முற்பட்டார். ஆனால் அவர் எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பதை நாங்கள் அறிவோம். இந்த நிலையிலேயே இந்த மூன்று நிறுவனங்களையும் ஒரு பொது நிறுவனம் கையேற்க வேண்டுகோள் எங்கள் மத்தியில் வலுப்பெற்றது. எங்களது உணர்வுகளைப் பிரதிபலித்து இதையே தான் ரி.வி.ஐ. நிர்வாகமும் தற்போது செய்திருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம். மக்களாகிய நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரி.வி.ஐ. நிர்வாகத்தினர் ஏதோ தனியாகப் பிரிந்து போவதாகக் கூறப்படும் கதையில் உண்மையில்லை. ரி.வி.ஐ நிர்வாகத்தினர் தனியார் கபடமாக அபகரிக்க முற்பட்ட தமிழர்களின் சொத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே முழுப்பிழையும் சி.எம்.ஆர் – சி.ரீ.ஆர் நிறுவனங்களை இப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நபரையே சாரும். ரி.வி.ஐ நிர்வாகம் கேட்பது தான் எமது கோரிக்கையும் என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறோம். இந்த மூன்று நிர்வாகங்களையும் ஒரு பொது அமைப்பின் (trustee company) கீழ் கொண்டு வாருங்கள். ஊழியர்களிற்கு தகுந்த சம்பளம் வழங்குங்கள். தனியான ஒரு ஆள் அமைப்பின் பேரால் சுருட்டிச் செல்லும் அநியாயத்தை தடுக்க விரும்புகிறோம். ஒரு கிழமையில் ஒரிரு நாட்கள் அலுவலகத்திற்கு வரும் “தாயக அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி 150,000 டொலர்களை வருடச் சம்பளமாகவும் கார், விமானச்சீட்டு என ஏனைய வசதிகளையும் ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு பெற நாங்களோ மணிக்கு 15 டொலர்களையே பெறுகிறோம். இந்த நபர் இரண்டு வருடங்களிற்கு முன்பே திடீரெனக் கொண்டு வந்து புகுத்தப்பட்டவர். ஆனால் நாங்கள் 7 வருடங்களிற்கு மேலாக இந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறோம். இதைவிடக் கொடுமைபல ஊதிய விவகாரத்திலும் ஏனையவற்றிலும் இடம்பெறுகின்றன. குறிப்பாக 3,500 டொலர்கள் பெறப்படும் ஒரு மணி நேர நேரடி விளம்பர ஒளிபரப்பிற்கு நாங்கள் குறைந்தது 6 மணித்தியாலங்களை அந்த நேரடி ஒளிபரப்பு நடைபெறும் கடையில் செலவளிப்போம். ஆனால் எங்களிற்கு தரப்படுவது வெறும் 100 டொலர்கள் மட்டுமே. இது ஒரு ஜனநாயக விரோத செயலாக இருந்தும் நாங்கள் தொடர்ந்து பணி புரிகிறோம். எனவே ரி.வி.ஐ. நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த மூன்று நிறுவனங்களiயும் கனடாத் தமிழ் மக்கள் ஒரு பொது நிறுவனத்தின் மேற்பார்வையில் கொண்டு வந்து தனிநபர்கள் பொது மக்களின் சொத்துக்களை அபகரிப்பதைத் தடுக்க பணிவாக வேண்டிக் கொள்கிறோம். இந்தப் பிரச்சினையை மக்கள் முன் கொண்டு வந்து எமது பிரச்சினையை முன்னெடுத்து நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம். - பாதிக்ப்பட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் விசன் தொலைக்காட்சி, கனடியப் பல்கலாச்சார வானொலி, கனடியத் தமிழ் வானொலி. www.cmr.fm www.tamilvision.tv www.ctr24.com குறிப்பு: இம்மின்னஞ்சலிலுள்ள கருத்துக்களிலில் அனைத்திலும் உடன்பாடு இல்லை எனினும் பொது நிறுவனமயப்படுத்தப்பட வேண்டும் என்பதை விரும்புபவர்களிற்கான ஆதரவாக இங்கே பதிவு செய்கின்றேன்.
  3. என்னமாகலக்குறானுகப்பா.... சூப்பபரோ சூப்பர்.... என்னமோ அனுபவப்பட்ட மாதிரியே பேசுறீங்க மச்சான்...
  4. யாழ்ப்பாண மக்கள் எந்த துருவத்தில் போனாலும் அது எந்த காலத்திலும் முகாமீல் இருக்கும் மக்களின் நிலையையோ அல்லது ஈழத்தமிழர்களின் நிலையையோ மாற்றப்போவதில்லை.. இப்போதைக்கு புலத்து தமிழர்களை ஓரணியில் திரட்டி இந்தியாவுக்கு நிகரான ஒரு சகத்தியின் ஆதரவை நாம் பெற்றாக வேண்டும்..
  5. உணர்வுகள் தளம் சில காலம் இயக்கமற்றிருந்தது எப்போது இது அவர்களால் இயக்கப்பட்டது என்பது தான் தெரியவில்லை... ஆரூரன் உங்களையும் உங்கள் உணர்வுகளையும் அறிவேன்.. அது தற்ஸ் தமிழ் களத்தில் இடம்பெற்ற விவாதங்கள் முதல் பின்னர் யாழ்.. அதன் பின் உணர்வுகள் என்று.... எனவே இது பற்றி நீங்கள் அக்கறைப்படத் தேவையில்லை... அதே நேரம் உணர்வுகள் தளம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலே. அது தமிழ்த்தேசியத்துக்கு எதிரான தளம் என்று சிலரால் கூறப்பட்டதை நினைவில் நிறுத்திக்கொள்ளும் அதே வேளை நீங்கள் அதை மறுத்திருந்தீர்கள்... அப்படியானால் இன்று நடாத்துபவர்கள் அப்படி பட்டவர்கள் எனில் இது அவர்களின் நீண்ட காலத்திட்டத்தின் வெளிப்பாடா?
  6. இளங்கவி உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள் வழமை போல உங்கள் கவிதை யதாhத்ததை தொட்டு நிற்கின்றது. விடுதலைப்பாதையில் வீறுநடை போட்ட அந்த வீராங்கணைகளுக்கு இன்று கிடைத்திருக்கும் வாழ்வு துரதிஸ்டமானது. அவர்களின் விடிவு என்பது தூங்கி கிடக்கும் புலம் பெயர் சமூகத்தின் கையில் கண்டிப்பாக இல்லை.......என்பது வேதனையான வெட்கப்பட வேண்டிய விடயம். அவர்களது ஒரு சில முகாம்கனை பற்றி அறிந்த வகையில் படுக்க பாயின்றி... மாற்றுடையின்றி இருந்த காலத்தை நெஞ்சில் காயத்தை தந்தது. இன்று நிலமைகளை மாற்றப்பட்டுள்ளன. அவர்களைப்பற்றி அக்கறை உள்ளவர்களின் அவர்களுக்கான உதவியில் இயன்றவரை பங்கெடுத்துக்கொள்வோம்....
  7. குவிந்திருந்த வைகோற் பட்டடைகள் மீது நாமே கொள்ளி வைத்தோம். ஒவ்வொரு கவியல்களும் எரியும் போதும் நாமும் இணைந்து தான் வேலைக்கு போனோம். கலியான வீடு, சடங்கு, நடனம் என்று எத்தனையோ செய்தோம். இன்னும்.... யார் யார் மீதோ எல்லாம் பழியைப் போட்டு நாம் தப்பிக்க நினைக்கின்றோம் சமூகத்தின் மீதும்... இளைஞர்கள் மீது.... அமைப்புக்கள் மீது... பொறுப்பாளர்கள் மீது... இன்னும் இன்னோரென்னா சம்பவங்கள் மீது நாம் பழியைப்போட்டு தப்பித்துக்கொண்டோம். ஏன் எனில்... நாம் இதற்க்கு காரண கர்த்தாக்கள் இல்லை என்பதை பறை சாற்ற! தவறுகள் இல்லை என்று சொல்லவி;ல்லை ஆனால் தோல்வி முகத்தை நீங்கள் கடந்த சில மாதங்களாக காட்டும் வேகம்... விதம் இரண்டுமே ஆபாத்தானது அபத்தமானது. தோல்வி என்பது தவிர்க முடியாது என்ற கட்டத்தில் அதை எதிர்கொள்ள வேண்டும். அதை எதிர்கொள்ள முடியாதவர்கள்... ஒதுங்கி கொள்ள வேண்டும்.,. இங்கு யாரையும் போராட்ட களத்திலிருந்து ஒதுங்க சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை எனினும் இன்னமும் ஈழக்கனவை நெஞ்சில் சுமந்த படி இருக்கும் எத்தனையோ ஆயிரம் மாவீரர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ஒரு தமிழனாய் நம்பிக்கை இல்லாது மற்றவர்களையும் குழுப்பத்தில் ஆழ்த்தி அவநம்பிக்கையை தரும் கவிதைகள், ஆக்கங்கள், கட்டுரைகள், ஆய்வுகள் என்பவற்றை தவிர்ப்பது நல்லது என்று சொல்கின்றேன். நமக்கு ஒரு நாடு வேண்டும். அது தாயகத்தமிழர்களை பொறுத்தது அல்ல தமிழர்களைப் பொறுத்தது. ஒட்டுமொத்த தமிழர்களை பொறுத்தது....
  8. அடிமையின் எண்ணம் எப்போது அடிமையாய் வாழ்வது பற்றியதாகவே இருக்கும். முகாமிலிருக்கும் இருக்கும் ஒரு சாராருடன் தான் நீங்கள் பேசுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் அதற்க்கும் ஒரு மறுபக்கம் இருக்கின்றது. இளைஞர், யுவதிகளை கேட்டுப்பாருங்கள். மரநிழலில் ஒவ்வொரு மணித்தியாலமும் நிழல்கள் மாறும் திசை நோக்கி நகர்ந்த படியே நாலு திசையேகிலும் ஆயதப்படையுடன் பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவனை கேட்டுப்பாருங்கள். அவன் கண்டிப்பாக பதில் சொல்லுவான். நாமும் ஏதோ ஒரு விதத்தில் முகாமோடு நெருங்கிய தொடர்பில் இருக்கின்றோம் நண்பரே! குறிப்பாக நீங்கள் பேச வேண்டிய பலர் zoon-4 இருக்கின்றனர். ஆற்றங்கரையினில் அமைந்த அந்த முகாம் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நீங்கள் காட்சிகளாக கூட பார்த்திருப்பீர்கள். இந்த வாழ்வு வாழும் மக்கள் கண்டிப்பாக அடிமை வாழ்வைத் தெரிவு செய்ய நினைக்கவில்லை சந்தர்ப்ப கூ+ழல் அவர்கள் மீது அடிமை வாழ்வை திணித்துள்ளது. அவர்களை சூழ்ந்துள்ள அடிமை விலங்கு உங்களை போன்றவர்களால் நிச்சயம் உடை படப்போவதில்லை. எனவே! முயன்று பாருங்கள் ஆனால் முடியாது விட்டு விடு என்று மற்றவனுக்கு அறிவுரை கூறாதீர்கள் ஏன் எனில் உங்களால் முடியாத ஒன்றை எவனோ ஒருவன் செய்தே ஆக வேண்டும் இது யதார்த்தம்...! நேற்று போற்றி இன்று தூற்றும் எழுத்தாளர்கள் நாளை போற்றுவார்கள் அது நாள் வரை காத்திருப்போம்...
  9. வார்த்தைகள் கணக்கிறது..... கோபம் கணல்கிறது... இத்தனை நாள் அடக்கி வைத்தை ஒற்றை நாளில் அள்ளியேறிந்த கோலம் மடிந்தவர்கள் மீது தாளாது கொண்ட நேசம் மண் மீதும் மக்கள் மீதும் கொண்ட பாசம் இத்தனைக்கும் மத்தியில் தலைவன் மீது கொண்ட பக்தி! எத்தனை தடவைகள் ஆனாலும் மீள முடியாத சோகம் இத்தனையும் உள்ளாக்கிய கவிதை வாழ்த்துக்கள் சாந்தி அக்கா! எத்தனை சொன்னாலும் ஏற்க முடியா எத்தனையோ வரிகள்! தாழ்ந்து கிடப்பதற்கானதல்ல போராட்டம் வாழ்வு வேண்டியதே ஈழப்போர் அழிந்து போவென்று யாரும் உளமாற எண்ணவில்லை... எப்போதுமே... ஏட்டிக்கு போட்டிகள்... அவை எங்கும் சகஜமே... எல்லாமே பேச்்சானால் எதிர்காலம் எப்படியாகும்...!
  10. தமிழீழ தேசிய கீதம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் கொடி வணக்கப்படலே தேசிய கீதத்திற்க்கு இணையாக உபயோகத்தில் உள்ளது. எழுஞாயிறு.... யாழ் இணையத்தை நடாத்துபவர்கள் அதன் உறுப்பினர்களான நானும் நீங்களுமே அன்றி யாழ் நிர்வாகம் அல்ல. எனவே குறைகளை காணுவதை விடுத்து... நாம் இணைந்து செயற்ப்படுவோம்...
  11. நெடுக்கால போவானுக்கு அடிக்கடி கனடா கடுக்குது ஏன் என்று தான் புர்pயல்ல..
  12. என்ன கலைஞன் நீங்களும் துரோகிகள் பற்றி பேச்சுக்கு வந்திட்டீங்க... போல...
  13. நிஜங்கள்... பேசுகிறது... எத்தனையோ பேரின் உள்ளளத்தை நீங்கள் எழுத்தாக்கியுள்ளீர்கள்... நன்றி.. தொடருங்கள்... உங்கள் ஆற்றலுக்கு என் வாழ்த்து
  14. நெடுங்கால போவான் அவர்களே... பல நூறு ஆண்டுகளாக வெள்ளைகள் ஒன்றும் வெட்டி புடுங்கல்ல கனடா என்ற தேசம் கட்டமைக்கப்பட்டு வெறும் 143 ஆண்டுகள் தான் ஆகுது. அப்பிடி பார்க்க போனாலும் கனேடிய பொருளாதாரத்தில அதன் கட்டமைப்புக்களில் தங்கள் உயிர்களை கூட அர்பணித்தது சீனர்களே.... கொட்டும் பனிக்குள்ளும் வெயிலுக்குள்ளும் 3000 கீலோ மீற்றர் நீளமான ரெயில் பாதையை அமைத்தது முதல் சீனர்கள் தான் கனேடிய கட்டுமானத்தில் கை கொடுத்தவர்கள். அதை விடுத்து விடயத்துக்கு வருவோம்.... நீங்கள் நினைப்பது உங்களது குறுகிய மனப்பாங்கு அல்லது தாழ்வு மனப்பாங்கு என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதாவது நான் நான் இப்படித்தான் வாழ வேண்டும் ஏன் எனில் நான் இப்படித்தான் வாழ்ந்தேன் என்று நினபை;பது. அந்த தாழ்வு மனப்பாங்குக்குள் வாழும் தமிழர்களாக நாம் இருக்க விரும்பவில்லை. உங்கள் ஊர்களில் இந்திய தமிழர்களை நீங்கள் உங்கள் முப்பாட்டன்கள் மதிக்க வில்லை என்பதற்க்கா எமது சுய மரியாதையை கிடைக்க வேண்டிய இடத்தில் நாம் இழக்க அனுமதிக்க முடியாது. நீங்கள் சொல்லும் வெள்ளையினத்தவர்கள் அரசாங்கம் அமைக்க தமிழர்களாக எமது வரிப்பணமும் உழைப்பும் கூட காரணமாகின்றது. நீங்கள் நினைப்பது போல அல்லது நீங்கள் கருத்தை உள்வாங்கியது போல நாம் முரண்படுவது நாம் கனேடியர்களா இல்லையா என்பதில் அல்ல. மாற்றினத்தவர்களை ஏன் அவர்களது பூர்வீகம் கொண்டு அழைக்கவில்லை? ஏன் தமிழர்கள் மட்டும் அப்படி அழைக்கப்படுகின்றனர் என்பதே? அவர்கள் அழைப்பது தவறு என்று சொன்னாலும் இங்கிலாந்தில் இருந்து கொண்டு இல்லை இல்லை இவர்களை அப்படித்தான் அழையுங்கள் என்று நீங்கள் சொல்வீர்கள் போல கிடக்கு. கனடா... பல்கலாச்சார நாடு - இது மற்றைய நாடகளில் இருந்து வேறுபடுவதும் இதில் தான். இது ஒரு குடியேற்ற நாடு என்ற வகையில் தான் குடியேற்றியவர்களை சமனாக மதிக்க கற்றுக்கொண்டுள்ளது. அரசியல்... பொருளாதார.... மற்றும் சமூக ரீதியில் கனேடியர்கள் என்ற ரீதியில் சகல உரிமைகளையும் அது எமக்கு வழங்கியுள்ளது. ஆனால்... கனாவில் இயங்கும் ஊடகங்களால் ஏன் அப்படி செய்ய முடியவில்லை.... எனக்கு ஒரு வெள்ளையின நீதிபதி ஒருவர் கேட்டார்.. எங்கிருந்து வந்தாய் என்று? நான் இலங்கை என்றேன..... இல்லை இல்லை இல்லை நீ எங்கிருந்து வந்தாய் என்றார் மீண்டும்... அப்போது தான் டவுன்ரவுன் என்றேன்... அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். இது தான் இங்கிருக்கும் பிரச்சினை என்று.... எனவே தெளிவாக அவர்கள் எம்மை அங்கீகரிக்கின்றனர். அவர்களோடு நாம் சிற்சில சந்தர்பங்களில் முரண்பட்டுக்கொள்கின்றோம் ஆனால் இங்கு பிரச்சினை எல்லாம் ஊடகங்களே! பிரதமர் ஸ்ரீபன் ஹர்பர் வருடப்பிறப்பு வாழ்த்தை சொல்லும் போதோ... அல்லது நாங்கள் போராட்டங்களை நடாத்தி போதோ.. ஊடகங்கள் தமிழ் -கனேடியர்கள் என்ற பதத்தையும்.... ஒரு குழுவுக்கிடையேயான சண்டைகளின் போது தமிழர்கள் அல்லஐ இலங்கை -தமிழர்கள் என்று இரு வேறு நிலையில் எழுத வேண்டிய தேவை என்ன? அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஸ் ரீபன் ஹர்பர் பிரதமாராக முடியும் எனில்.... கறுப்பினத்தை சார்ந்த ஒருவர் கவர்னல் ஜெனரல் ஆக முடியுமெனில் எம்மாலும் முடியும் (அதுக்கு முதல் அரசியல் ஒற்றுமை வேணும்)