Jump to content

ஆதிவாசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2849
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Blog Entries posted by ஆதிவாசி

  1. ஆதிவாசி
    சரி ஏதாவது எழுதுவம்....
    ஆ.... ஆராவது இந்த அடர்அவைக்கு வாறனீங்களோ?
    சரி சரி பதில் போட ஏலாம ஆதி இடுக்கைகளை மூடி வச்சிருக்கன் நீங்க கண்டு பிடிச்சிருக்கீங்க அதுவரைக்கும் மகிழ்ச்சி.
    இப்ப இந்த இடுகைக்குப் பதில் எழுத முடியுதோ என்று பாருங்கோ அச்சாப் பிள்ளைகள் எங்க பதில் போடுங்கோ பாப்பம்.
  2. ஆதிவாசி
    அடர் அவையை எட்டிப்பாத்து ஒரு மசமாப்போச்சு ஒண்டுமில்லை வாலுங்களா ஆதியின் உத்தியோகம் மாறிப்போச்சா சே.....! இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது நீங்களா புரிஞ்சுக்கவேணும்
  3. ஆதிவாசி
    வணக்கம் அன்பர்களே! , நண்பர்களே! , வம்பர்களே! :angry:
    ஆகா ஆதி மறுபடியும் குடியிருப்புக்குத் திரும்பிவிட்டேன்.
    வாருங்கள் அடர் அவைக்கு இடர் தராமல் தொடர்ந்து ஆதியோடு இணைந்து அட்டகாசம் புரியுங்கள்.

    (வாலை அறுக்கும் :P கனவுக்கு மட்டும் இடமளிக்காதீர்கள்)
  4. ஆதிவாசி
    அடர் அவை பரிசோதனைக்களம்
    இங்கு ராடர் எதுவும் பூட்டவில்லை தாராளமாக விமர்சனக் குண்டுகளைத் தூவுங்கள் வெடிக்கிறதா என்று சோதித்துப்பார்ப்போம்.
  5. ஆதிவாசி
    காவியத் தூது


    கிளியினைத் தூது விட்டால்..
    கிறுக்காய் ஆகுமென்றாய்!

    கிள்ளை மொழியினைத் தூது விட்டால்..
    கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்!

    நிலவினைத் தூது விட்டால்..
    களங்கம் நிறையுமென்றாய்!

    நீள்கடலினைத் தூது விட்டால்..
    ஆழமோ புரியாதென்றாய்!

    மலரினைத் தூது விட்டால்..
    மதுவினைச் சொரியுமென்றாய்!

    மானினைத் தூது விட்டால்..
    மருட்சியைப் பெருக்குமென்றாய்!

    முகிலினைத் தூது விட்டால்..
    முனகலே மிஞ்சுமென்றாய்!

    சகியினைத் தூதுவிட்டால்..
    சச்சரவு ஆகுமென்றாய்!

    தென்றலைத் தூது விட்டால்..
    திசை மாறிப் போகுமென்றாய்!

    திரு மடலினைத் தூது விட்டால்..
    அந்தரெக்ஸைக் காவுமென்றாய்!

    தொலைபேசித் தூது விட்டால்..
    தொல்லைகள் கூடுமென்றாய்!

    நினைவிலே தூது விட்டால்..
    நீள்கதையாய் ஆகுமென்றாய்!

    கண்களில் தூது விட்டால்..
    கருத்தழிந்து கருகுமென்றாய்!

    அன்னத்தைத் தூது விட்டால்..
    அழுக்காறு நீந்துமென்றாய்!

    ஓடையைத் தூது விட்டால்..
    பள்ளத்தில் ஒடுங்குமென்றாய்!

    வாடையைத் தூது விட்டால்..
    வர்ணனுள் மாயுமென்றாய்!

    இணையத்தில் தூது விட்டால்..
    இதயங்கள் நோகுமென்றாய்!

    இன்தமிழைத் தூது விட்டால்..
    இக கவிஞர் மேய்வரென்றாய்!

    இரவியைத் தூது விட்டால்..
    இனிமையைப் பொசுக்குமென்றாய்!

    இளமையைத் தூது விட்டால்..
    இப்பிறவியில் முடியுமென்றாய்!

    காவியத் தூதிற்கெல்லாம்
    காரணம் சொன்னாய் தோழி!
    ஏதடி என் காதல் சொல்ல
    உன் இதயம் காட்டும் வழி?
  6. ஆதிவாசி
    சுகம் எதுவோ?




    திங்கள் முகம் சிரிக்க
    திக்கெட்டும் ஒளி பொங்க
    தங்க மண் பரப்பில்
    தலை சாய்ந்தால் அது சுகமா?



    தென்றல் தாலாட்ட
    தென்னங் கீற்றிசைக்க
    தன்னந் தனியிருந்து
    தான் இரசித்தால் அது சுகமா?



    முல்லை முகையவிழ
    முசுரங்கள் தள்ளாட - அதன்
    எல்லையில் போயிருந்து
    எழில் பருகில் அது சுகமா?



    மெல்ல மினுக்கி - வான்
    மின்மினிகள் கண்சிமிட்ட
    காத்திருந்நு அவ்வனப்பில்
    கரைந்திடின் அது சுகமா?



    அலை வந்து தாலாட்டும்
    அழகான புூமியிலே
    அடி பதித்து நடை பயின்றால்
    அகத்திற்கு அது சுகமா?



    கிழவானின் ஒளிச் சிரிப்பில்
    வளமாகும் சிந்தனையால்
    உளப்பாடு உயிர்ப்படையும்
    இளங்காலை அது சுகமா?



    அன்னையவள் அருகிருந்து - என்
    அன்னமே என அணைத்தால்
    அந்நேரம் அவள் அணைப்பில்
    கண் அயர்ந்தால் அது சுகமா?



    கண்களிலே கதைபேசி
    காரியத்தில் ஒருமிக்கும்
    கண்மணிகள் கரமிணைந்தால்
    காதலுக்கு அது சுகமா?



    அள்ளி எனைத் தூக்கி
    ஆயிரம் கதை சொன்ன
    அப்பா தலை வருடல்
    அலுக்காத பெரும் சுகமோ?



    கிள்ளி வலி தந்து
    துள்ளிச் சண்டையிடும்
    அக்காவின் தர்ம அடி
    தந்ததுதான் ஒரு சுகமோ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.