இங்கே நடைபெறுகிற விடயங்களைப்பற்றிய அரை குறைத் தகவல்களுடன் .. அழுக்குத்துணியை வெளியில் வைத்துக் கழுவும் வேலையில் சிலர் இறங்கியுள்ளார்கள். இதற்கு அவர்களே அறியாமல் செய்கின்ற உளவியல் காரணம் ஒன்று இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை தோல்வியை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, யாருடைய தலையிலாவது (scapegoat) இறக்கி தாங்கள் திருப்திபட்டுக் கொள்கிறார்கள்.
இப்பொழுது இவர்களுக்கு எதிரியாகத் தெரிவது சிங்கள இனவெறி அரசோ அல்லது அதற்கு முண்டு கொடுக்கும் மனிதவுரிமைகளைப்பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படாத முரட்டு அரசுகளோ அல்ல. மாறாக இன்னொரு தமிழன் அல்லது தமிழர் குழு. இங்குள்ள தமிழர்கள் அல்லது தம