யாழின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து களத்திற்கு தனது படைப்புகளால் மெருகேற்றி ஏனைய அங்கத்தவர்களையும் எழுதுவதற்கு உற்சாகப்படுத்திய கள உறவான சோழியான் அண்ணாவின் மறைவுச் செய்தி கவலை தருகிறது.
அவரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைப் பதிவு செய்கிறேன்.
இந்தப் போட்டியில் நேரடியாக இணையத்தில் இருந்து இணைக்கும் படங்களை குறுக்கு வழியில் கண்டு பிடிப்பதற்கான மார்க்கம் உள்ளதால் எனது கணணியில் புகைப்படக்கடையை (அதுதாங்க போட்டோசொப்) ஐ பதிவு செய்து விட்டு புதிய படங்களுடன் சந்திக்கிறேன்.
நீங்கள் கோண்டாவில் என எங்கோ பார்த்த ஞாபகம். அப்படியானால் டாக்டர் றாஜசுந்தரம் அவர்களின் சகோதரர்கள் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைத்தேன். மற்றது நீங்களும் இங்கிலாந்தில் தங்கியிருந்தமையால் அறிந்திருப்பீர்கள் என நினைத்தேன்...
சந்தர்ப்பம் கிடைக்கும் போது உரையாடுவோம்.
ஆம் அவரை நான் லண்டனில் சந்தித்தேன். டேவிட் ஐயா குறித்த பல விடயங்களையும் சாந்தி அன்ரியின் மூலம் அறிந்து கொண்டேன். பாவம் இப்போது மிகவும் கஸ்ரப்படுகிறார்.
இவர் குறித்த பதிவொன்று அண்மையில் யாழிலும் இணைக்கப்பட்டிருந்தது.
டாக்டர் றாஜசுந்தரம் வெளிநாட்டில் சுகபோகமாக வாழ வழியிருந்தும் மக்களுக்காகவே சிந்தித்து காந்தீயம் இயக்கத்தின் வாயிலாக வன்னி மக்களுக்கு பெரும் சேவைகளைச் செய்து வெலிக்கடையில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்.
மக்களை நேசிப்பவர்கள் எப்போதும் மக்களுடனேயே இருக்க விரும்புவர். மக்களுக்கு சேவையாற்றுவர். வெளிநாடுகளில் பத்திரமாக இருந்து கொண்டு மக்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள்.
அந்த வகையில் பலருக்கும் உதாரணமாக இருந்த ஒரு தமிழ் உணர்வாளர் என்பதில் ஐயமில்லை. அவரது மனைவி மற்றும் சகோதரர்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள்..
தெரியாத முகங்களை அறிமுகப்படுத்துவதற்கான பதிவே இது, தாராளமாக உங்கள் படங்களை இணையுங்கள் அர்யுன் அண்ணா...
அர்யுன் அண்ணா இணைத்த படங்களில் தாடிக் காறர் ஜேம்ஸ் கமறுன்.. தலைமுடியுடன் இருப்பவர் இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் பெக்கம்..
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகல துறை ஆட்டக்காறர் சோபர்சை அர்யுன் அண்ணா சரியாக இனங்கண்டுள்ளார். வாழ்த்துக்கள்.
சரி நாங்கள் மரத்தை கண்டுபிடிப்போம்...
இது ஆடாதோடை மரம் அல்ல நந்தன்...
ஆரம்பித்து ஒரு நாளே ஆன பொதிலும் ஆர்வத்துடன் பலரும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி...
பதில்களை வழங்கியோருக்கும் வாழ்த்துக்களைப் பகிர்ந்தோருக்கும் எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
இந்தப் படங்களை உடனுக்குடன் கண்டுபிடித்து விடுகிறார்களே எம் களத்துக் கில்லாடிகள்.
இந்தப் படங்களைத் தெரிவு செய்ததன் நோக்கம் பெயர்களை அறிந்திருந்தும் புகைப்படங்களை அறிந்திராத சில நல்ல மற்றும் கெட்டவர்களை அறிமுகப்படுத்துவதற்கே.
இருந்தாலும் உங்கள் ஆலோசனையை கருத்தில் எடுக்கிறேன் அக்கா...
கடைசியாக இணைத்த படத்தை சரியாக இனங்கண்ட வாலிக்கும் அவர் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட குமாரசாமி அண்ணைக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
அத்துடன் பதில்களைப் பதிந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...
யார் இவர்?
அதோடை சேத்து இந்த மரத்தையும் கண்டுபிடியுங்கோ!