Manivasahan

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    2,687
  • Joined

  • Last visited

  • Days Won

    11

Manivasahan last won the day on August 13 2015

Manivasahan had the most liked content!

Community Reputation

499 ஒளி

About Manivasahan

  • Rank
    Advanced Member

Contact Methods

  • AIM
    avatar
  • MSN
    manivasahan@hotmail.co.uk
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    CANADA
  • Interests
    Literature

Recent Profile Visitors

3,629 profile views
  1. யாழின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து களத்திற்கு தனது படைப்புகளால் மெருகேற்றி ஏனைய அங்கத்தவர்களையும் எழுதுவதற்கு உற்சாகப்படுத்திய கள உறவான சோழியான் அண்ணாவின் மறைவுச் செய்தி கவலை தருகிறது. அவரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைப் பதிவு செய்கிறேன்.
  2. நீங்கள் என்ன தொழில் செய்பவர் என்று தெரியாது. ஆனால் அவுஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்த பலர் பொறியியலாளர்களாக பணி புரிகிறார்கள் அல்லது பொறியியலாளர்கள் பலர் அவுசிற்கு குடிபெயர்ந்தார்கள் என்ற வகையில் நீங்க்ள உரு தரமான உத்தியோகத்தில் இருந்தால் கனடா வருவது அவ்வளவு உசிதமில்லை என்பதே எனது கருத்து. காரணம் இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியா இலங்கை பல்கலைக்கழக பட்டத்தை அல்லது கல்வியை அங்கீகரிக்கின்றன. ஆனால் இங்கே பெரும்பாலும் பலவற்றை திரும்பப் படித்து பரீட்சை எழுத வேண்டி இருக்கும். நாடுகளைப் பொறுத்தவரை அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற நிலை தான். என்னைப் பொறுத்தவரை நான் வாழ்ந்த கனடாவையும் இங்கிலாந்தையும் ஒப்பிட்டால் இங்கிலாந்து சிறந்தது என்பது எனது அபிப்பிராயம்.
  3. இன்று தான் இந்தப் பதிவை பார்த்தேன். ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அழகாக எழுதுகிறீர்கள். கனடாவின் இடங்கள் பலவற்றை நீங்கள் வர்ணிக்கும் விதத்தைப் பார்த்த பின்னர் நானும் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. சி.என் ரவர் உட்பட...
  4. கனடாவிலை இந்த அட்டமி நவமியாலை வேலை போனதெண்டு சொன்னவை. கன நாள் வேலையில்லாமல் இருந்த ஒரு ஆள் றெஸ்ற்ரூறன்ரிலை போய் வேலை கேட்டு அவங்களும் சரி நாளையிலை இருந்து வேலைக்கு வா எண்டு சொல்லியிருக்கிறாங்கள். இவர் சந்தோசமா வேலை கிடைச்ச விசயத்தை மனிசிற்றைச் சொல்ல அவ இஞ்சையப்பா நாளைக்கு அட்டமீ அடுத்த நாள் நவமி அதை விட்டு மூண்டாம் நாள் வேலையைத் தொடங்குங்கோ அப்பதான் கெதி கெதியாப் புறமோசன் வரும் எண்டு சொல்ல அவரும் ரெண்டு நாள் கழிச்சு போயிருக்கிறார். முதலாளிக் காறன் நான் அவசரத்துக்குக் கேக்க நீ இப்பவே வாறாய். நான் வேறை ஆளை எடுத்திட்டன் நீ பொயிட்டு வா எண்டு அனுப்பிப் போட்டாராம்.
  5. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் மிகவும் மதிக்கும் (தலைவருக்கும் மேலாக) பலரில் இவரும் ஒருவர்.
  6. 83 என்பது எம் இன அழிப்பின் ஒரு அடையாளம் மட்டுமே! ஆனாலும் ஒரு நாட்டிலிருந்தாலும் நாம் இரண்டாம் தரப் பிரஜைகளே என பலருக்கு குறிப்பாக கொழும்பு வாழ் தமிழர்களுக்கு உணர்த்திய ஒரு சம்பவம் இது
  7. இல்லற பந்தத்தில் இணையும் நெற்கொழுதாசன் தம்பதியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
  8. இதோ போட்டிக்குரிய கேள்விகள் 1. யாழ் மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ----------------- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ................................. ஐக்கிய தேசியக் கட்சி ...................................... ஈபிடிபி ................................................ வித்தியாதரனின் குழு ..................................... ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2. யாழ்ப்பாணத்தில் வெற்றி பெறும் 9 பேரையும் தெரிவு செய்யவும் (வேட்பாளர் பட்டியலை பின்னர் இணைக்கிறேன். 3. வன்னி மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ----------------- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ................................. ஐக்கிய தேசியக் கட்சி ...................................... ஈபிடிபி ................................................ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4. மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ----------------- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ................................. ஐக்கிய தேசியக் கட்சி ...................................... ஈபிடிபி ................................................ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5 அம்பாறை )திகாமடுல்ல) மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ----------------- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ................................. ஐக்கிய தேசியக் கட்சி ...................................... ஈபிடிபி ................................................ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 6 திருகோணமலை மாவட்டத்தில் பின்வரும் கட்சிகள் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கை எத்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ----------------- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ................................. ஐக்கிய தேசியக் கட்சி ...................................... ஈபிடிபி ................................................ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 அகில இலங்கை ரீதியில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சி எது 8. யாழ்ப்பாணத்தில் அதிக விருப்பு வாக்குக்களைப் பெறுவது யார் 9 வன்னியில் அதிக விருப்பு வாக்குக்களைப் பெறுவது யார் 10. மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குக்களைப் பெறுவது யார் 11. அம்பாறையில் அதிக விருப்பு வாக்குக்களைப் பெறுவது யார் 12. திருகோணமலையீல் அதிக விருப்பு வாக்குக்களைப் பெறுவது யார் 13 கொழும்பில் அதிக விருப்பு வாக்குக்களைப் பெறுவது யார் கேள்விகளைச் சரிபார்க்க வேண்டியுள்ளது. எனவே இப்போதைக்குப் பதில்களை இணைக்க வேண்டாம். அத்துடன் மேலும் சில கேள்விகளை இங்கு இணைக்க உத்தேசித்துள்ளேன்
  9. தாங்கள் அளிக்கும்; ஆதரவிற்கு நன்றி. வேட்பு மனுத் தாக்கல் இறுதியடையும் எதிர்வரும் திங்கட்கிழமை கேள்விகளை இணைக்கிறேன்.
  10. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் முழுமையான போட்டியொன்றை விரைவில் நடத்த இருக்கிறேன். ஆனால் இது வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்கள் தொடர்பில் உங்கள் எதிர்வுகூறல்களை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு போட்டி இங்கு புள்ளிகள் எதுவும் வழங்கப்படப் போவதில்லை. ஆனால் தேர்தல் முடிவடைந்ததும் உங்கள் எதிர்வுகூறல்களை முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான ஒருகளம். இந்தப் பதிவு யாழ் மாவட்டத்திற்கு மட்டுமானது. வடக்கு கிழக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்காக இது போன்ற தனித்தனியான பதிவுகளையும் ஆரம்பிக்க இருக்கிறேன். இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் பதிலளிக்க வேண்டும். ஆனால் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் அதாவது 13ம் திகதி தொடக்கம் நீங்கள் பதில்களை வழங்கலாம். சரி கேள்விகளுடன் விரைவில் சந்திக்கிறேன்.
  11. கடவுள் மேல் முழு நம்பிக்கையுடன் தான் மனிதன் செயற்படுகிறானா அல்லது தனது துன்பத்துக்கு வழியைக் காண முடியாமல் வேறு வழியின்றி கடவுள் என்ற கற்பனையை நம்புகிறானா என்பதுவும் ஒரு கேள்வி...
  12. எலக்சன் காலத்தில இவர் எங்களுக்கு நல்லது செய்வார் இவர் எங்களைக் காப்பாற்றுவார் எண்டு நம்பிக்கை வைச்சு ஒராளுக்கு வாக்களிப்பம். அவர் வெண்டதும் ஏதோ நாங்களே வெண்டது மாதிரி சந்தோசப்படுவம். கேக் வெட்டுவம் கொண்டாடுவம். ஆனால் மனிசன் பாளிமென்றுக்குள்ளை போய் கொஞ்சம் பகட்டுகளைக் கண்டதும் ஆள் மாறிப் போயிடும். ஆளைக் காணவே கிடைக்காது. நாங்கள் எதாவது கடிதத்தை மனுவைப் போட்டாலும் பதில் கிடைக்காது. என்னடாவெண்டு வெறுத்துப் போய் அடுத்த எலக்கசினிலை வேறையாளுக்குப் பின்னாலை போவம். அந்தாள் பேசிற பேச்சை வைச்சுப் பாத்து இந்தாள் எங்களைக் காப்பாற்றும் எண்டு முறிஞ்சு வேலை செய்வம். அந்தாளும் தன்ரை புத்தியைக் காட்டிப் போட்டு நாங்கள் கேக்கிற கதைக்கிற ஒண்டைடயும் காதிலை வாங்காமல் த்னரை பாட்டைப் பாக்கும். இப்படியே நாங்களும் மாறி மாறி இந்தாள் செய்யும் இந்தாள் செய்யும் எண்டு ஓடித் திரிவம். இது அரசியல்வாதிகளின்ரை கதை. இப்ப எங்கடை கடவுள்மாருக்கும் இதே நிலைதான். முந்தியெல்லாம் ஊரிலை இருக்கேக்கை முருகன் அம்மன் சிவன் பிள்ளையார் எண்டு கொஞ்சப் பேரைப் பற்றித் தான் கேள்விப்பட்டனாங்கள். அவைக்குப் பின்னாலை அவை எல்லாம் செய்வினம் எண்டு போட்டு அபிசேகம் அது இது எண்டு ஓடுப்பட்டுத்திரிஞ்சம். அவைக்கு தங்கடை குடும்பப் பிணக்குகளைப் பாக்கவே நேரங்காணாது. அதுக்குள்ளை இந்தச் செல்லடி பொம்மர் அடி எண்டு அவையளும் ஓடுப்பட்டுத் திரிஞ்சதாலையோ என்னவோ அவை எங்களைக் கவனிக்க இல்லை. உவை சரிவர மாட்டினம் எண்டு நாங்களும் ஐயப்பன் ஆஞ்சநேயர் எண்டு புதுக் கோஸ்டிக்குப் பின்னாலை திரியத் தொடங்கினம். அவைக்குக் கோயில் கட்டினம். கூத்தாடினம். ஆவையும் தங்கடை புத்தியைக் காட்டிட்டினம். முள்ளிவாய்கக்கால் வ்நதால்என்ன சுனாமி வ்நதால் என்ன எண்டு மூச்சுக் காட்டாமல் இருந்திட்டம். எங்களை ஏமாத்தினால் நாங்கள் விட்டுவைப்பமே. உவையும் வெலைக்கு ஆகாது எண்டு நினைச்சுப் போட்டு உசிருள்ள சாமிகளைத் தேடிப் பிடிச்சம். சாயிபாபா, அம்மா பகவான் எண்டு ஆயிரத்தெட்டு புதுக் கடவுளுகள் எங்களுக்குக் கிடைச்சினம். அவைக்கு ஆராத்தி எடுத்தம். அவையும் மூச்சுக் காட்டுறதாக் காணேல்லை. இனி ஆரைப் பிடிக்கலாம் எண்டு ஐடியாச் சொல்லுங்கோவன்....