Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

விதுரன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  27
 • Joined

Profile Information

 • Gender
  Not Telling

Recent Profile Visitors

691 profile views

விதுரன்'s Achievements

Apprentice

Apprentice (3/14)

 • Conversation Starter
 • First Post
 • Collaborator
 • Week One Done
 • One Month Later

Recent Badges

12

Reputation

 1. தமிழ்ப்பிள்ளை ஒன்று தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது என்று மட்டும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மற்றும்படி சொல்வதற்கு எதுவும் இல்வை
 2. மஞ்சள் தடையின் பின்னர் கிழக்கில் மட்டும் 2000 ஏக்கரில் மஞ்சள் பயிர்ச்செய்கை செய்யப்படுவதாக அறிய முடிந்தது
 3. கொரோனா வைரஸ் முன்பு நினைத்ததை விட அதிக தூரம் பயணிக்கின்றது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ----------------------------------------------------------------------------- கொரோனாவில் இருந்து தப்பவேண்டும் என்றால் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தால் மாத்திரமே சாத்தியம் போல் இருக்கின்றது. கொரோனா வைரஸ் குறைந்தது அரை மணி நேரம் காற்றில் உயிர்வாழும் என்றும் , சில மேற்பரப்புகளில் பல நாட்களுக்கு உயிர்வாழும் என்றும், கிட்டத்தட்ட 15 அடி தூரம் பயணம் செய்யக்கூடும் என்றும், ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. COVID-19 தோற்றை தவிர்ப்பதற்காக பொது இடங்களில் 3 முதல் 6 அடி இடைவெளியில் “பாதுகாப்பான தூரம்” இருக்குமாறு பரிந்துரைத்த சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை சீன அரசாங்க தொற்றுநோயியல் நிபுணர்களின் ஆராய்ச்சி சவாலுக்கு உட்படுத்துகின்றது என்று தென் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. "ஏர் கண்டிஷனிங் கொண்ட ஒரு மூடிய சூழலில், புதிய கொரோனா வைரஸின் தொற்றக்கூடிய தூரம் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான தூரத்தை விட அதிகமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும்," என்று ஆராய்ச்சியாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . சுற்றுச்சூழலைப் பொறுத்து வைரஸ் ஒரு மேற்பரப்பில் பல நாட்கள் நீடிக்கும் என்று ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, 37 C வெப்பநிலையில் , கண்ணாடி, துணி, உலோகம், பிளாஸ்டிக் அல்லது காகிதத்தில் இது இரண்டு முதல் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று அவர்கள் கண்டறிந்தனர். இது மனித மலம் அல்லது உடல் திரவங்களில் ஐந்து நாட்களுக்கு மேல் உயிர்வாழ முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஜனவரி 22 அன்று நீண்ட தூர பயணம் மேற்கொண்ட வைரஸ் பாதிப்புக்குள்ளான ஒரு பஸ் பிரயாணியை வைத்து விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை செய்து முடிவுகளை வெளியிட்டனர். இதில் மொத்தம் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டது என்று கண்ணுபிடித்துள்ளனர். நான்கு மணிநேர சவாரி முழுவதும் நோயாளி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை CCTV காட்சிகள் காண்பித்தன - ஆனால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் ஆறு வரிசைகள் அல்லது 15 அடி தூரத்தில் அமர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். வைரஸ் தொற்றை பெற்ற ஒரு நபர் பாதிக்கப்பட்டவர் இறங்கி 30 நிமிடங்களுக்குப் பிறகு பஸ்ஸில் ஏறினார் என்றும் - முதல் குழுவால் சுவாசிக்கப்பட்ட காற்றை சுவாசித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதே பயணி பின்னர் மற்றொரு பேருந்தில் ஏறி, அங்கும் 15 அடி தூரத்தில் அமர்ந்திருந்த இரு பயணிகளுக்கு தனது வைரஸை தொற்றவைத்துள்ளார். "சாத்தியமான காரணம் என்னவென்றால், முற்றிலும் மூடப்பட்ட இடத்தில், காற்று ஓட்டம் முக்கியமாக எயர் கொண்டிஷன் (ஹீட்டர்) மூலம் உருவாக்கப்படும் சூடான காற்றால் உருவாக்கப்படுகின்றது. சூடான காற்றின் உயர்வு வைரஸ் நிறைந்த நீர்த்துளிகளை அதிக தூரத்திற்கு கொண்டு செல்ல முடியும், ”என்று அந்த ஆய்வறிக்கை கூறியது. விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி முகமூடி அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகக் கூறினர் - ஏனெனில் இரு பேருந்துகளிலும் இருந்த முகமூடிகளை அணிந்த பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. “சுரங்கப்பாதைகள், கார்கள், விமானங்கள் போன்ற மூடிய பொது போக்குவரத்தில் சவாரி செய்யும்போது, நீங்கள் எப்போதும் முகமூடியை அணிய வேண்டும், அதே நேரத்தில், உங்கள் கைகளுக்கும் பொதுப் பகுதிகளுக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்கவும், சுத்தம் செய்வதற்கு முன் உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும் , ” என்று அவர்கள் அறிவுறுத்தினர். பொது போக்குவரத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் - ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உட்புறங்களை சுத்தம் செய்வது உட்பட - மற்றும் முடிந்தவரை புதிய காற்று வருவதை உறுதிசெய்ய ஏர் கண்டிஷனிங் சரிசெய்யவும் அவர்கள் பரிந்துரைத்தனர். இருப்பினும், நோய்காவிக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணிகள் - அதிக வைரஸ் தொற்றை பெற்றிருக்கவேண்டியவர்கள் - ஏன் பாதிக்கப்படவில்லை என்று அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. "இந்த வைரஸ் பரவுவதைப் பற்றிய எங்கள் அறிவு இன்னும் குறைவாகவே உள்ளது" என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறினார். Thanks: -Kumaravelu Ganesan- (FB) https://nypost.com/2020/03/09/coronavirus-can-travel-much-farther-than-previously-thought-study-finds/?utm_source=facebook_sitebuttons&utm_medium=site buttons&utm_campaign=site buttons&fbclid=IwAR0vwWKxMAgnmhSkkClnXlPMPSIsvAFtDKSb5A49fCYHhMD8WeQefoc7DEU
 4. நெடுக்காலபோவன் தலைவருக்கும் ஈழப் போரட்டத்திற்காக தங்கள் உயிரை ஆகுதியாக்கியவர்களுக்கும் நான் நீங்கள் ஏன் இன்னமும் பல தனிநபர்களும் உரிய மரியாதையைும் கெளரவத்தையும் வழங்கித் தான் வருகின்றோம். தனி நபர்களைத் தாண்டி சமூகத்தினை வழி நடத்த என்று பல்வேறு அமைப்புகள் உள்ளன. 2009 ற்கு முற்பட்ட காலத்தில் தாயகத்தில் இருந்து இவைகள் ஒழுங்கமைக்கப்பட்டு சரியான முறையில் அனைத்தும் நெறிப்படுத்தப்பட்டன. 2009ற்குப்பின்னர் தான் தோன்றித் தனமாக சுயலாபங்களுக்காக ஒரு சமூகத்தினை இவர்கள் ஏமாற்றுவதை இனியும் தொடர்ந்து அனுமதிக்கப் போகின்றோமா? ஆம் விடுதலைப்புலிகளால் செய்யப்பட்ட சில தாக்குதல்களுக்கு உரிமை கோரப்பட்டதுமில்லை. அப்படி உரிமை கோரப்படாத தாக்குதலில் தங்களை ஆகுதியாக்கியவர்களின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் குடும்பத்திற்குக்கூட பல காலத்தின் பின் வீரச்சாவு என சொல்லப்பட்டதேயொழிய எங்கு வீரச்சாவடைந்தார்கள் என்ற தகவல் சொல்லப்பட்டதில்லை. ஆனால் பெயர்கள் வெளிப்படுத்தப்படாதபோதும் அவர்களுக்கு பெயரின்றி நினைவு நடுகற்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் நடப்பட்டு உரிய மரியாதை செய்யப்பட்டது. இங்கு எனது கேள்வி தலைவர் வீரச்சாவு என்று தெரிந்தும் ஏன் இந்தச் சுமூகத்தினை தொடரந்து ஏமாற்றுகின்றார்கள் என்பதே.
 5. முதலில் செல்வி திக்சிகா அவர்களுக்கு அஞ்சலிகள். தாயகத்தின் விடுதலைக்காக உழைத்தவர்களுக்கு அவர்களுக்கு உரிய கெளரவம் கொடுக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த அனைத்துலகச் செயலகம் இன்று யாரால் யாரின் தேவைகளுக்காக இயங்குகின்றது அல்லது இயக்கப்படுகின்றது. 2009 ற்குப்பின்னர் பகுதிகளாகப்பிரிந்த தாயகப்பற்றாளர்களில் அவர்கள் சாகவடைந்தால் ஒரு பகுதியினருக்கு மட்டுமே மதிப்பளிக்கப்படுகின்றது. சரி அதெல்லாம் விட்டுவிடலாம். என்றுமே எமது மதிப்பிற்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் அவருடன் தளபதிகள் பலரும் இறுதிப் போரில் வீரச்சாவடைந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் வீரச்சாவினை இந்த அனைத்துலகத் தொடர்பகம் மறைப்பதன் காரணம் என்ன? அவர்களுக்கான உரிய மரியாதையை இதுவரை செய்யாததும் அந்த இயக்கத்தின் பெயரினை தமது சுயநலன்களுக்காகப் பாவிப்பதும் எந்த வகையில் சரியாக அமையும்?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.