• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

puthalvan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  305
 • Joined

 • Last visited

 • Days Won

  1
 1. 2004ம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தம் நடந்தவுடன் நாங்கள் வாழ்கிற நாடுகளில் எமது மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பும் பணியில் இறங்கினோம். 2005 சித்திரை அளவில் எமது பணிகள் உடனடி நிவாரணம் என்ற நிலையில் இருந்து தட்காலிக்க தங்குமிடம் மற்றும் மருத்துவமி தாய் சேய் நல திட்டங்களுக்கு உதவுதல் என விரிவடைந்தது. அதனால் உடனடி நிவாரணத்துக்காக சேர்த்த உடைகள் காலணிகளின் ஒரு பகுதி எமது மக்களுக்கு இனி தேவை வராது என்ற காரணத்தால் உள்நாடு தொண்டமைப்புக்கு கொடுக்க வழிசெய்தோம். சக தொண்டர் தனது வானில் பொருட்களை கொண்டுசெல்ல முன்வந்தார். எல்லோரும் சேர்ந்து பொருட்களை வானில் ஏற்றினோம். ஏற்றிய பின்னர் பொருட்களை இறக்க உதவிக்கு ஆள் தேவைப்பட்டது. வந்த தொண்டர் ஒவொருவரும் ஒவொரு சாட்டு சொன்னார்கள். நான் உள்ளே அடுத்த தடவை கொண்டு செல்லவேண்டிய பொருட்களை பொதிசெய்து அடுக்குவதில் மும்மரமாக இருந்தேன். நான் அந்த வேலையை விட்டுவிட்டு வானில் ஏறி சென்று பொருட்களை இறக்குவத்திட்கு உதவினேன். இவ்வாறு இருமுறை செய்து அன்றைய வேலையை முடித்தோம். சில வாரங்கள் கடந்து எங்களுக்கு அயராது உதவுகிற ஒரு அம்மாவுடன் நான் கதைத்துக்கொண்டிருந்தபோது எங்களுக்கு வான் தந்து உதவிய தொண்டர் தனக்கு செய்த உதவிகள் பற்றி கூறி நீங்கள் வானிலை போய் அவருக்கு உதவி செய்ததுக்கு எவ்ளவு நல்லது. மற்றவை அப்படி செய்ய மாட்டினம் என்றார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. மேலும் வினவிய பொழுது சொன்னார் "அவர் தாழ்ந்த சாதி" என்று சொல்லி அவருடன் போக பலர் தயங்குகிறார்கள் என்றார். அவரை எப்படி எங்கள் சமூகம் தமது தேவைக்கு பாவித்துவிட்டு பின்னர் இப்படி செய்கிறார்கள் என்று மனம் நொந்தார். இதை போல பல நிகழ்வுகளை நான் கண்டிருந்தாலும் இந்த ஒரு நிகழ்வு எனது சக தொண்டர்கள் மீதும் எமது சமூகம் மீதும் பெரும் வெறுப்பை கொண்டுவந்தது. எனது சக தொண்டர்கள் பலர் என்னை விட வயதில் கூடியவர்கள். பெரிய பதவிகளி பட்டம் பெற்றவர்கள். நாங்களோ பல்கலைகழகம் முடித்திவிடு அப்போதான் வேலை வாழ்கையை தொடங்கின காலம். நாங்கள் எல்லோரும் வாழ்த்த நாட்டில் இருந்து கலைக்கப்பட்டு வேறு நாட்டில் வேரூன்றி வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். எல்லாவற்றையும் இழந்த நாங்கள் சாதியை மட்டும் இழக்கவில்லை. கடல் கடந்து வந்தாலும் சாதி மட்டும் எமக்கு பெரிதாக தெரிகிறது. எமது சமூகத்தில் ஒருபகுதியை சாதி அடிப்படையில் ஒடுக்கிக்கொண்டு நாங்கள் வாழும் நாடுகளில் இனத்துவேசம் இருப்பதாக அதே கூட்டம் அலறுவது நகைப்பிட்குரியது
 2. விக் நேரம் கிடைக்கும் போது இந்த காணொளிகளை பாருங்கள். Indigenous Australians Are Being Imprisoned At A Startling Rate Are Australian Laws Biased Against Aborigines? (2000)
 3. இவர் 2018இல் இப்படி சொன்னவர்: இப்ப இன்னொரு கதை அதுவேற இவர் தான் Marylebone Cricket Clubங்கு தலைவர் வேறை!.
 4. இவர் Trumpன் முன்மாதிரியை பின்பற்றி தன்னை ஒரு பெரிய தலைவனாக காட்ட முனைகிறார். யுத்தம் நடத்த சர்வதேச நாடுகளிடம் கையேந்தியபொழுது வராத மானரோசம் இப்பவருது. தமிழ் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை மீட்டதாக மார்தட்டும் இந்த பயல்கள் உண்மையில் அந்த நாட்டை விரைவில் சீனருக்கு முற்றாக இழப்பது திண்ணம். ஆப்பிரிக்காவில் சில இடங்களில் நடப்பதுபோல போல ஒரு நாள் இவை சீனருக்கு கீழ் வேலைசெய்து அவர்கள் சொல்லும்படியாக வாழும் நாள் வரும்.
 5. அவர்கள் அனுமதிக்கவில்லை. எல்லாம் முடிந்தபின் அனுமதிக்கவேண்டும் என்பதில் பயனில்லை. எமக்கு அஞ்சலி செலுத்த உள்ள உரிமையை சட்டம்பிகளால் நிரம்பிவழியும் கூட்டமைப்பு நீதிமன்றம் நாடி உறுதிசெயுங்கள். ஆயுத கிளர்ச்சி நடத்திய JVP யினால் ஒவொரு வருடமும் பயங்கரவாதியாக சித்தரிக்கப்படட ரோஹன விஜேவீரவுக்கு அஞ்சலி வைக்க முடியுமாயின் எங்கள் மக்கள் தங்களது உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி உரிமை ஏன் மறுக்கப்படுகின்றது என்பதை நீதி மன்றில் கேளுங்கள்.நீங்கள் வலிகாமம் காணி தொடர்பாக வழக்கு போட்டபோது நாமும் உதவினோம். இப்போதும் இந்த விடயம் தொடர்பாக உதவுவோம். செய்வீர்களா அல்லது வழமை போல தேர்தல் கண்கொண்டு வெறும் பேச்சா ? ஆயுத போராடடம் ஓய்ந்து நல்லிணக்கம் என்று பம்பரம் ஆடிய பின்னரும் பழைய பல்லவி என்றால் நாடு எப்படி உருப்படும்.
 6. ஜனாஸாவை தூக்கி வீசினால் மட்டும் நாங்கள் வழக்கு போடுவம். எனவே பொறுத்திருங்கள் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினரே.
 7. சரியான கருத்து. நீதியை தொலைத்துவிட்டு நிதிபதியாகிவிட்டதால் வந்த வினை. திரு ஜயந்த குணரட்ன மற்றும் கிஷாலி, ஜெஹான் ஆகியோர் சுதந்திரத்துக்கு பின் இலங்கையின் நீதி துறையால் சிறுபான்மையினர் தொடர்பான வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் கூடுதலான சந்தர்ப்பங்களில் அந்த சிறுபான்மையினருக்கு எதிராக அமைந்ததை ஆதாரத்துடன் புத்தகமாக எழுதியிருந்தனர். (The Judicial Mind In Sri Lanka; Responding To The Protection Of Minority Rights By Jayantha de Almeida Guneratne, Kishali Pinto-Jayawardena and Gehan Gunatilleke). எனவே இந்த நீதித்துறை கலாச்சாரம் நன்றாக ஊறிப்போன ஒன்று. இன்றைய இந்த உதாரணத்தில் சட்ட வல்லுநர்களை பாவித்து தீர்ப்பை இவர்கள் மறுபரிசீலிக்க வைத்துளார்கள். ஆனால் ஒரு தனிமனிதன் அதுவும் நிதி/பொருள் வளம் இல்லாத அப்பாவி தமிழ் குடிமகனால் அநீதிகளை சுமந்து வாழ்வுதான் ஒருவழி. இந்த நிலை மாறவேண்டும் என்ற காரணத்தால் தான் அன்று நார்வே பேச்சுவார்த்தை நேரத்தில் ஸ்தாபிக்கப்படட சர்வதேச புலமையாளர் குழு (The International Independent Group of Eminent Persons (IIGEP)) பேராசிரியர் ஐவன் சேரர் (Prof. Ivan Sherer) சாட்சியாளர்களும் வழக்குத்தொடுநர்களுக்கும் நிதி மற்றும் சட்ட உதவிக்கு ஒரு கட்டமைப்பு தேவை என்று வலியுறுத்தியிருந்தார். இதோபோல தான் அமெரிக்காவிலும் நீதிமன்றுகளின் தீர்ப்புகள் கறுப்பினத்தவருக்கு எதிரான இனவாதத்தை கூர்மைப்படுத்தியது என்று பல ஆய்வுகள் உள்ளன. இப்படியான அடிப்படை காரணிகளின் (root causes of a conflict) தாக்கத்தால் ஒடுக்கப்படட ஒரு இனம் தன்னை மீட்க எல்லாவழிகளையும் தேடி தனது பயணத்தை தொடர்கிறது. ஆனால் சிலர் மற்றவர்கள் கடந்தது வந்த அநீதிகளையும் அதன் விளைவுகள், எதிர்வினைகளை புறக்கணித்துவிட்டு எழுந்தமானமாக பேட்டி கொடுப்பதும் அதட்கு பின்னர் விளக்கம் கொடுப்பதிலும் தம்மை திருப்திபடுத்திக்கொள்வது தெரிகிறது.
 8. சமூக/அரசியல் புறநிலைகள் சிலரை தலைமைத்துவம் நோக்கி நகர்த்திய வரலாறு எமக்குள் இருந்தாலும் தலைவர்களும் எங்களது சமூதாயத்தில் இருந்துதான் உருவார்க்கின்றார்கள் என்பதை நாங்கள் மறக்கக்கூடாது. எனவே நாம் எம்மை திருத்துவதுடன் எமது வருங்கால சந்ததியை சரியான வழியில் வளர்த்தால் எமக்குள் இருந்து நல்ல தலைவர்கள் வர சந்தர்ப்பம் மிக அதிகம். தலைவர்கள் வந்த பின் தான் நாங்கள் திருந்துவோம் என்றால் தலையெடுக்க விரும்பியவர்களும் கொஞ்சம் யோசிப்பார்கள் அல்லது வாற நல்லவர்களையும் எப்படியாவது கழுத்தறுப்பதில் கண்ணாக இருப்போம்.
 9. ஆழ்ந்த இரங்கல்கள் விசுகு அண்ணர். இந்த இக்கட்டான காலத்தில் உங்களுக்கு இந்த இழப்பு. உங்களின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம்.
 10. அதே வெள்ளை மாளிகை தான் கிருமி கொல்லிகளை மனித உடம்பினுள் ஏற்றுவதனால் கொரோனவை கொல்லலாமா என்று ஆராயவேண்டும் என்று சொல்லி முழு உலகமே சிரிக்க காரணமாகிவிட்டது. வெப்பம் பரவலை தடுப்பதில் ஒரு காரணியாக இருந்தாலும் அதுவே ஒட்டுமொத்த பரிகாரம் என்ற அளவுக்கு கருத்துரைத்த ஒரு தலைவரை கொண்ட வெள்ளை மளிகை கோமாளிகளின் கூடாரமாகிவிட்டது .
 11. காணாமல் போன முன்னணி உறுப்பினர் சடலமாக மீட்பு! நேற்று (24) இரவு முதல் காணாமல் போன வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் (37-வயது) இன்று (25) காலை தொண்டமனாறு, மயிலந்தனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொண்டமனாறு மயிலந்தனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் செந்தூரனின் மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும தலைக்கவசம் உள்ளிட்டவை நேற்று இரவு 7.20 மணியளவில் காணப்பட்ட நிலையில் பொலிஸார் அவற்றை மீட்டனர். இதன் பின்னரே அவர் காணாமல் போனார். இது குறித்து குடும்பத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது https://newuthayan.com/காணாமல்-போன-முன்னணி-உறுப/ என்ன நடக்கிறது?.
 12. மாநில உத்தியோகபூர்வ மொழி - தமிழ் ஆனால் அரை ஆங்கில தலையங்கமும் சூப் தமிழும் கலந்து எழுதுகிற அளவுக்கு ஊடக கலா(விப)ச்சாரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தமிழ் ஊடகங்களில் ! ரேபிட் - விரைவு டெஸ்ட் - பரிசோதனை ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் - விரைவு பரிசோதனை உபகரணங்கள்