kavi_ruban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  372
 • Joined

 • Last visited

Everything posted by kavi_ruban

 1. ஆக மொத்தத்தில் என்னையும் கழுதை என்று சூசகமாக (நாசுக்காக) சொல்கிறீர்களா விகடகவி? சரி இருந்திட்டுப் போவம்.... உதைக்காது தான் இப்ப... (திருப்பி உதைத்தாலும் என்ற பயத்தில.... )
 2. விகடகவி உங்கள் விகடம் நன்று. கழுதைகள் என்ற சொல்லிவிட்டீர்கள்.... காலால் அடி வாங்க நான் தயாரில்லை...
 3. கதை கந்தலாகி கன காலாமாகி விட்டது நண்பரே ....
 4. சிறைக் கதவுகள் விரும்பியோ விரும்பாமலோ எம்மவர்க்கு பரிச்சியமான ஒன்று... சுதந்திரத்திற்காக சிறை செல்பவர்கள் அல்ல பலரும் சும்மா இருந்து சுருட்டுப் பிடித்த அப்பு பாவம்.... சிறு சில்லு சுற்றி விளையாடிய சிறுவனும் அங்கே.. காரணம் புலிகளுக்கு வாகன ஓட்டியாம்... தனியாய் இருக்க பயமென்று அவனும் பிடித்தானோ? என்ன தான் என்றாலும் எம்மைப் பொறுத்தவரை சிறை சென்று வருவது ஒரு கெளரவம் வெளிநாட்டில் தஞ்சம் கோரவும் வசதி... ஆனாலும் மனசுக்குள் தத்துவார்த்த விசாரணை ஒன்று... கிறில் வைத்த கம்பியால் ஏன் சிறைக் கதவுகள்? அப்பாவிகள் உள்ளிருந்து பொலிஸ் காரர் தான் சிறையில் என்று ஆறுதல் கொள்ளவா? ஆட்சியாளர்கள் கவனிக்க பூட்டிய சிறைக்குள் பிறந்த குழந்தையால் தான் கம்ச வதம்! புரியுமோ உமக்கு? புரிந்துவிட்டால் தனி ஈழம் எமக்கு!!!
 5. எனது பாடசாலை நாட்களில் எழுதிய சிறுகதை (பாடசாலை மலர் ஒன்றில் வெளிவந்தது) கதையும் பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே என்று நான் சொல்லுவேன் என்று எதிர்பார்காதீங்க.... (அப்ப... ???) ------------------------------------------------------------------------------------------- கண்களை கட்டிப் போட்டுவிட்டு கருத்தினுள் போதையை வார்த்துக் கொண்டிருந்தாள் இயற்கை நல்லாள். இதுவரை நாளும் செயற்கைத் தனத்தின் செழிப்பைச் செம்பு செம்பாக பருகிய எனக்கு இயற்க்கைத் தனத்தின் அந்தக் குறும்பு... புட்டி புட்டியாக மது கிடைத்தது போல் போதையை ஊட்டியது. கொழும்பு பஸ் சற்று முன் தான் கம்பளைக்கு வந்து சேர்ந்திருந்தது. ஒரு வித உற்சாகமும்... ஒரு வித குறும்புத்தனமும் பள பளக்க என் கண்கள் மின்னின. பக்கத்தில் அப்பா, இந்த இடம் எப்படி இருந்தது... இப்போது அடியோடு மாறிவிட்டதே... என்று அங்கலாய்த்த வண்ணம் ஒவ்வொரு இடமும் தனக்கு எப்படிப் பரிட்சயம்... யார் யார் இருந்தார்கள்... வரலாறு... என்று இன்னும் நிறையவே சொல்லிக் கொண்டு உற்சாகமாய் நடந்தார். எனது கவனம் அவரது பேச்சில் முழு ஈடுபாடு காட்டவில்லை. கணநேரத்தில் மாமி வீட்டை அடையப் போகின்றோம்... ஆசையோடு அழகெல்லாம் குழுங்கி நிற்கும் மச்சாளைக் காணப் போகின்றோம் என்று இன்னும் எத்தனை எத்தனையோ கற்பனையில் கவனம் திரும்பியிருந்தது. மாமி வீடு... இயற்கையோடு கரம் கோர்த்து புது அழகு காட்டியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் பச்சை நதியெனப் பாயும் இயற்கையின் இன்பலோகம். ஆசையாய்க் காதோரம் கதை பேசுகின்ற காற்றின் சுகப் பாட்டு. கச்சிதமான வீடு. கரைச்சல் இல்லாத இடம். பார்க்க பார்க்க பரவசமாய் இருந்தது. விழிகளை விரியவிட்டு எங்கு தேடியும் இவளைக் காணோமே... எங்கு சென்றிருப்பாள்... ? 'மருமோள் இப்ப வந்திடுவள், கண்டிக்கு டிசனுக்குப் போனவள் இப்ப வாற நேரம் தான்' அப்பாவிடம் மாமி சொன்னாள். அன்றிரவு அங்கு தங்கிவிட்டு அடுத்தநாள் புறப்பட நினைத்திருந்தோம். நான் கோலில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் புரட்டிய வண்ணம் இருந்தேன். இடையில் ஒரு டீ வந்தது. உறிஞ்சியபடி, புத்தகத்தில் புதைந்து விட்டேன். ஒரு மணி... சுவர்க் கடிகாரம் செல்லமாய் சிணுங்கியது. நான் அந்த அறையில் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு அசதியாய் நெளிவெடுத்தேன். 'கண்ணன்... கண்ணன்... எழும்பியாச்சா?' என்றபடி அருகில் வந்தாள் மச்சாள் மதிவதனி. 'இவள் தான் எவ்வளவு மாறிவிட்டாள். முன்பு நோஞ்சானாய்... கன்னங்கள் ஒடுங்கி... தசை போடாமல் இருந்த அதே மதிவதனியா இவள்? இந்த ஐந்து வருடத்தில் இத்தனை மாற்றங்களா...?' விரிந்து சென்ற நினைவுகளை அவளின் 'என்ன அப்படிப் பார்க்கிறியள்?' என்ற கேள்வி கலைத்தது. ஒன்றுமில்லை... 'நீ இப்பதான் வந்தாயாக்கும் ரீயூசனால' 'இல்ல, ஆறு மணிக்கே வந்திட்டன். வந்ததும் மாமாவைப் பார்த்து சொக்காயிட்டன். மாமாவுடன் நீங்க வந்ததும் தெரிந்தது. இங்கு வந்து பார்த்தேன் நீங்க நித்திரை' நளினமாக வார்த்தைகள் வந்தன. வாடாமல், வதங்காமல், அழகுகாட்டி நிற்கும் இந்த மலர் என் மேனி மேல் படாமல் போய்விடுமோ? ஏனோ இந்த நினைப்பு அப்போது மனதை அரித்தது. 'என்ன கண்ணன் அப்படி பலமாய் யோசிக்கிறியள்? நான் எவ்வளவு ஆசையோடு பேசவந்தன் தெரியுமா?' 'நீ பெண்மகள் ஆசையோடு பேசவந்தன் என்று சொல்கிறாய் நீ துணிச்சல்காரி! ஆனால் நான்...? எனக்கும் உன்னோடு பேச வேண்டும், சிரிக்க வேண்டும் என்று ஆசை இருக்காதா? ஆனால் ஏதோ ஒன்று என் வார்த்தைகளுக்கு வரம்பு போடுகிறதே! அது என்ன? கூச்சமா? அச்சமா?' இப்படி ஒரு மனிதன் உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருக்க, 'இதென்னடா அச்சம், கூச்சம் என்று புலம்பிகிட்டு ஒரு பொட்டச்சிக்குள்ள துணிச்சல் கூடவா உன்னட்ட இல்லை...? அடே நீ ஆண்பிள்ளையடா!' இது அடுத்தவன். 'உனக்கு இராமாயணத்தில் வரும் சூர்ப்பனகையைத் தெரியுமா?' 'தெரியும் இப்ப ஏன் சூர்ப்பனகை ஞாபகம் வந்தது.?' 'கம்பர், சூர்ப்பனகையின் அழகைச் சொல்லவரும் போது ஆயிரம் அமாவாசைகளை வடிகட்டினால் அந்த வர்ணம் சூர்ப்பனகையின் வர்ணம் என்று சொல்லுராரில்ல...' 'அவரது கற்பனை அபாரம்! இராமன் மேல் சூர்ப்பனகைக்கு ஆசை ஏற்படத் தகுதியில்ல.' 'அதே தான்! கம்பர் சூர்ப்பனகையைப் பார்த்துச் சொன்னால் என்ன...? அது எனக்கும் பொருந்தும் தானே...?' புதிர் ஒன்றுக்கு விடை காண்பதாய் உடைந்த குரலில் வார்த்தைகள் தடுமாறிப் பிறந்தன. நெஞ்சில் இனம்புரியாத பயம். பேன் காற்றிலும் வேர்வைத் துளிகள் அரும்பவே செய்தன. கண்களில் நீர் முட்டிக் கொண்டு நின்றது. எங்கே அழுதுவிடுவேனோ என்று பயந்து இதழ்களை மடித்து உள் இழுத்துக் கொண்டேன். ஒருவாறு அவளை கூர்ந்து பார்க்க முயற்சித்தேன். அவள் கண்கள் மின்னின. இதழ்கள் படபடப்பைக் காட்டின. ஹோவென்று அழுதுவிடுவாள் போல் தோன்றினாள். நல்லவேளை! அழவில்லை விசும்பலுடன் பேசத் தொடங்கினாள். 'இனி ஒருபோதும் அப்படிப் பேசாதீங்க கண்ணன் தாங்கமுடியலை. கிருஷ்ணன், அருச்சுனன் எல்லோரும் கறுப்புத்தானே! அவர்களைச் சுற்றி பல பெண்கள் வரலையா? அழகென்பது நிறத்தில இல்ல கண்ணன். குணத்தில... ஆமா குணத்தில தான்! எனக்கு உங்களிட்ட ஏதோ ஒன்று இருப்பதா தோணுது. ஏதோ ஒன்று தான்... அது அன்போ... பாசமோ... எனக்குத் தெரியாது... அதுதான் என்னைக் கவர்ந்திருக்கு.| எனக்கு மெய்சிலிர்த்தது! விடாமல் கேட்டு வைக்க விரும்பினேன். 'அப்ப... அந்த ஏதோ ஒன்று இல்லாட்டி... ? ' சொற்களை வேண்டுமென்றே இழுத்தேன். 'ஏதோ ஒன்ற இல்லாட்டி மற்றொன்று எதிலையும் ஏதோ ஒன்று இருப்பது தானே நியதி' அவள் பேச்சு என்னை என்னமோ செய்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். எனது கரங்களைப் பற்றி தனது இதழ்களைப் பதித்தாள். பின்பு கனிவாக தலைமுடியை கோதினாள். 'என்னை மறக்கமாட்டீங்களே...?' 'இல்லை' என்றேன். 'நாளைக்கு நீங்க போகும் போது நான் நிக்கமாட்டன் அதனால இப்பவே பிரியாவிடை கூறுகிறேன்.' தெளிவான குரலில் பேசினாள். பின்பு சென்றாள். மறைந்தாள். அவளது செய்கை எனக்குப் பிரமிப்பை ஊட்டியது. நானும் அது போல் செய்ய ஏதோ ஒன்று தடுத்துவிட்டது. இப்போது அப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. கைவிட்டுப் போனபின் யாது செய்வது? அடுத்தநாள், அவசரமாக எம்மை வழியனுப்ப விடிந்து பொழுதைக் குறைத்து மாமி குடும்பத்திடமிருந்து பிரியாவிடை தந்து அனுப்பியது. வாழ்க்கைக் கணக்கிற்கு சரியான விடையை அது தர மறுத்துச் சிணுங்கியது. மனம் எல்லாம் மச்சாளிடம். வெறும் உடல் மட்டும் பஸ்சில் ஏறி அமர்ந்து எதையெதையோ சிந்தித்தது. அதற்கு எங்கே தெரியப் போகின்றது நடக்கப் போகும் நாடகம்! 'நடக்கப் போகும் நாடகம் நல்லதாக நடக்கட்டும்...' பாட்டில் லயித்திருந்த என்னை 'டே கண்ணா எத்தனை தரம் கூப்பிடறது இந்தா பிடி கடிதம் வந்திருக்கு' 'யாரம்மா கடிதம் எழுதினது?' 'உன்ர கம்பளை மாமி தான்! அவள் வதனிக்கு வாறமாசம் நிச்சியார்த்தமாம். நேற்று விரல் சூப்பிக் கொண்டு நின்ட பெட்டை விரல் பிடிக்கப் போகுது. ம்... பெட்டைகள் வளர்ரதே தெரியுறேலே... தம்பி உனக்கும் காலாகாலத்தில கலியாணம் காட்சியென்று பார்த்தால் எனக்கு நிம்மதியடா... ஏதோ ஆண்டவன் விட்ட வழி... ' 'ஐயோ அம்மா' என்று வாய் விட்டு அழவேண்டும் போல் தோன்றியது. 'இதற்கு அவள் எப்படிச் சம்மதித்தாள்?' யோசித்து யோசித்து மண்டை வெடித்தது. 'எங்கிருந்தாலும் வாழ்க... என்று வாழ்த்துவது தான் விதியா? ஐயோ! இறைவா! இது கனவாய் இருக்கக் கூடாதா?' கனவாய் இருந்ததே 'என்னடா பிசத்துகிறாய்...' என்று அம்மா பதறினபடி வந்தபோது!
 6. இது எதோ ஒரு காதலர் தினத்தில் எழுதிய கவிதை .... பெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்! பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் என்று பறந்து கொட்டும் பனியில் கொட்டாவி விடக்கூட மறந்து அண்ணனுடன் அப்பா சேர்த்து அனுப்பும் பணம் கையில்லாச் சட்டை வாங்கவும் அங்கம் கொப்பளிக்கும் ஆடை வாங்கவும் உதட்டுக்குச் சாயம் அடிக்கவும் இன்னும் பலப்... பல... செய்யவும் வீணாகக் கரைகின்றது. இந்த 'மேக்கப்' பின் பின்னால் உள்ள உண்மை உருவம் அறியாது நீண்ட 'கியூ' வில் நிற்கின்றாரம்மா பாவம் எம் இளைஞர்! சில நாள் பின்தொடர 'சீ பாவம்' என அவளும் புன்னகைக்க பரிதாபத்தில் தொடங்கியது காதல் பிறகென்ன கையோடு கை சேர்ந்து நடக்குமளவு நெருக்கம் வந்தது. பஸ்சில் ஏறினால் அருகருகே உரசி இருத்தல் கிசு கிசுப்பாய் காதல் வசனம் இன்னும் சில சொல்ல முடியாத சங்கதிகள் பாவம் பக்கத்தில் இருப்பவர் கூச்சத்தில் நெளிவார். காதலுக்கு கண்ணில்லை என்பது சரிதான்! கோல்பேஸ் வந்ததும் கையில் குடை விரியும் ஒதுக்குப் புறமாய் அமர்ந்து கொள்வார்கள் என்ன செய்வார்களோ யாம் அறியோம்! அது மட்டுமா? திரையரங்கில் நுழைந்து பாருங்கள் வரிசையாய் இளஞ்ஜோடிகள்! மனம் படமா பார்க்கும்? எது காதல் என்றறியாது ஏதேதோ செய்கின்றார் ஐயகோ மோகத்தில் அவிகின்றார். கண்டதும் கை அணைப்பது தான் காதலா? வாய் நிறைய பொய் உரைப்பது தான் காதலா? கை நிறைய காசு கேட்பது தான் காதலா? கட்டி அணைத்து முத்தம் தருவது தான் காதலா? கறுப்பென்றும் வெள்ளையென்றும் நிறம் பார்த்து வருவது தான் காதலா? எது காதல்? இன்று நாம் செய்வதெல்லாம் உண்மைக் காதலா? சத்தியமாய் இல்லை இன்றைய காதல் காமத்தின் கருக்கட்டல்! பின் எது தான் காதல்? அன்பெனும் கயிறு திரித்து? இரு இதயம் கட்டி இணைத்து? வெண்பனி போல மெல்ல நெஞ்சம் உருகி, கடலென பரந்து வருவதே காதல்!
 7. புரிந்து கொண்டேன் உன் புன்முறுவலுக்குப் பின் ஒளிந்து கொள்ளும் குட்டிச் சோகத்தை... எட்டி நான் நின்றாலும் விட்டு விலகிப் போவதில்லை கடும் நினைவுக் கறைகளை மனசெல்லாம் பூசிய வண்ணம் உன் நலன் நாடி வேண்டுகின்றேன் நீல வண்ணக் கண்ணனை...
 8. லிசான், உங்கள் கருத்துக்கு நன்றி... எங்கள் எல்லோருக்குமான பொதுவான கனவு இது ... நிறைவேறணும் என்ற தணியாத தாகம் எப்பவும் இருக்கு... இந்த இடத்தில ஒரு பாட்டு நினைவுக்கு வருது ... தொடக்கம் என்ன என்று தெரியல (யாரும் அறிந்தவர்கள் சொல்லலாம்) காதல் .... (ஆண் குரல் ) என்று கேள்வி தொடுக்க "நான்கு கண்ணில் காண்கின்ற ஒற்றைக் கனவடா" (பெண் குரல்) என்று வரும் ... ஈழம் எத்தனையோ லட்சக் கணக்கான சனங்களின் கண்கள் காண்கின்ற ஒற்றைக் கனவு!!! (நன்றி அந்த பாடலாசிரியருக்கு) வரிகளுக்கு இடையில் இடைவெளி குறைப்பு அடுத்த பதிவில் சரிசெய்யப்படும்... (இதுவென்ன ஆடை குறைப்பு சமாச்சாரமா ... தாராளமாக செய்யலாம்... ) அசெளகரியத்துக்கு மன்னிக்கவும் .... இதற்கு முன் கருத்திட்ட ஜம்மு மற்றும் கஜந்தி உங்களுக்கும் நன்றிகள் ....
 9. சிவ சக்தியே சிவனவன் பாதியே கடைக் கண் திறந்தே பாராய் காதலாகி கசிந்துருகும் பெண்டிர் கடைசியில் கரன்சியில் கொழுத்திருப்பவன் பக்கம் சாயும் மாயம் என்ன கூறாய்? அங்கையில் தாங்கி நின்றாலும் அன்பினை பண்பினை வேண்டாது அளவில் செல்வமும் அலுங்காமல் குலுங்காமல் போய்வர பறக்கும் காரும் பள பளக்கும் பங்களாவும் கேட்பதென்ன கேலிகள் செய்வதென்ன? மங்கை மனம் மங்கைக்கு புரியுமாம் மடையர்கள் ! சிவன் சங்கை நெரித்து விடம் அங்கே தங்கச் செய்தவளே தகவல் சொல்வாய் புரியவில்லையம்மா மங்கையர் குணம் மண்ணில் ... கண்ணில் நீர் வர அழுதே காரியம் செய்வார் உனக்கேதும் தெரியுமோ? என் சித்தம் தெளியச் சொல்வாய் தேவி
 10. கலைஞன், விகடகவி நன்றிகள்....
 11. கொடும் தீ வந்தெம்மைத் தீண்டும் சுடும் போதெல்லாம் உண்மை தூங்கும் வெறும் வார்த்தை ஜாலத்தில் அறிக்கை பறக்கும்! உலகும் இவர் பேடித்தனம் கண்டு மெல்லச் சிரிக்கும்! அழும் குழந்தையின் கண்ணீர் கண்டும் விழும் தலைகளின் வணங்காமை கண்டும் வெ(ல்)லும் எம் பகை என்றெம் வீரர் குரல் கேட்டும் உதடு சுளிப்பார் உண்மை மறப்பார் கடும் கோபம் கிளறிவிட்டார் எம் குலப் பெண்மை பறிக்க வந்தார் போலிச் சமரசம் செய்து நின்றார் பொல்லாத போர்தன்னை வேர் ஊண்டித் தளைக்கச் செய்தார் சாயம் மாறும் ஒரு நாள் ஞானம் வரும் பின்னாள்(ல்) ஈழம் வரும் பொன்னாள் காயம் மாறும் அந்நாள் எம் கனவு பலிக்கும் திருநாள்
 12. வாழ்ந்தென்ன லாபம் என்றெனக்குத் தெரியாது தெரிந்ததெல்லாம் நான் உரைப்பேன் காது கொடுத்துக் கேட்பாய்... பூத்திருக்கும் என் மனசில் பூவொன்று வந்திருந்து காது மடல் வருடி கன்னத்தில் கனி முத்தம் கொடுத்து தேகம் தொட்டணைத்தால் கோடி இன்பம் என்பேன் வாழ்வதால் வந்தவின்பம் இதுவென்பேன் தாலி கட்டி என் சொந்தம் என ஆன பின் சில்லறைச் சண்டைகளும் சிணுங்கல் பேச்சுக்களும் கொத்தாக என் முடி கோதும் அவள் விரல் தரும் இன்பமும் வற்றாத வாஞ்சையோடு வடிவழகி எனக்குக் கொஞ்சம் ஊட்டி மிச்சம் தானுண்ண உருகிப் போகுமே என்னுள்ளம் இதற்கேது ஈடு? திங்கள் பத்தாக திங்களே என்னவள் வயிற்றில் வந்துதிக்க சிறு நிலவை பெரு நிலவு ஈன்றெடுக்க வண்டாகி சுற்றியலைந்த நான் தண்டாகி சிறு நிலவை என் கையோடணைக்க குளிர் புன்னகை செய்யுமே என் முத்தாகி வந்த சிறு பிஞ்சு எத்துணை யின்பம் இது... சொல்லிக் கொண்டு போக இது போல் பல கதை விரியும் என்னுள்ளத்தில் காத்திருந்து நீ கேட்பாயா?
 13. ஈழநிலா பின்னூட்டலுக்கு நன்றி... வாழ்க்கையில் பெரிய அனுபவம் ஒன்றுமில்லை... வித்தியாசமான பார்வை இருந்தால் எழுதலாம் என்று நினைக்கிறேன்...
 14. ம்... (பெருமூச்சு..) கற்பனை இல்லை ... ஒவ்வொருத்தருக்கும் பின் (திரும்பிப் பார்க்க வேண்டாம் )ஒரு பிளாஷ்பாக் (FlashBack) உண்டு தானே... பள்ளி நாட்களில் உமா ரீச்சரில் தொடங்கி ....சில.... சேரன் போல சில பேர் தான் Autograph போடுகிறார்கள்... எங்களைப் போல இருப்பவர்களுக்கு கவிதை தானே ஒரு வழி ...? உங்க கவிதையா என்று நீங்க கேட்டதே ஒரு வித பாராட்டு தானே... (அட நீ கூட நல்லா எழுதிறா என்ற வியப்பு தொக்கி நிற்கிறது.... ) மன்னிக்கவும் என்று கேட்டு பாராட்டை வாபஸ் வேண்டப் போறீங்களா? தராளாமா நீங்க பார்க்கலாம் கஜந்தி.... நான் கனவு காணுற நேரத்தில நீங்களும் கனவு காணுங்க... ஹா.... ஹா....
 15. விதியா என்று தெரியல கஜந்தி... ஆனால் எம் கை மீறிய சங்கதிகள் எல்லாம் விதியால தான் என்று ஆறுதல் பட என்றாலும் இப்படி விதி என்று ஒன்று உண்டு என்பதால் பல சமயங்களில் 'Take it easy' என்று மனசு ஆறுதல் பட்டுக்கொள்ளுது....
 16. பிடித்துள்ளது என்று சொன்னாய் நீ ... பிளேன் ஏறி இங்கு வந்த பின் பிடிக்கவில்லை என்றாய் வெறும் தோற்ற மயக்கத்தில் தொலைந்து போனதோ உன் காதல்?
 17. என்னவளே என்னிதயம் ஆள்பவளே சின்னவளே கறுப்பான என் மேல் மையல் கொண்டவளே இதயப் பொய்கையில் அடிக்கடி அமிர்தம் வார்பவளே வருவேன் மீண்டுமென வார்த்தையால் வருடிச் சென்றவளே எங்கையடி சென்றாய் என்னை விட்டு வானை விட்டு நிலவு பிரிந்தால் வானென்ன செய்யும் வாடி என் பெண்ணே முகில் துப்பட்டாவால் உன் மேனி மூடி தொட்டணைக்க உள்ளம் துடிக்குதடி!
 18. வெங்கட், விகடகவி, யமுனா உங்கள் ரசனைக்கு நன்றி.... பின்னூட்டல் இட்டதற்கும் நன்றி.... என் கவி தான் யமுனா...
 19. உள்ளம் பயந்து ஊமையாகுது கள்ளப் பெண்ணவளிடம் காதல் கொள்ளுது கொடி முல்லையென ஆடி வருவாள் குயிலின் நாதமெனக் கூவி வருவாள் செம்பருத்தி அவளென்னை ஊடல் செருமுனைக்கு* அழைப்பாள் பின்னே ஓடி வந்து என்னைக் கட்டி அணைப்பாள் நீள் முடி கோதி நிம்மதி நாடி புன்னகை செய்வாள் பின்னே பெருநகை செய்து என்னை ஏளனம் செய்வாள் முகத்திரண்டு கருவண்டு என்னை கிறங்கடிக்க வைக்கும் மூக்குத்தி மின்னொளியை மழுங்கடிக்கச் செய்யும் பேனாவை எடுத்து சிந்தனைக் குதிரையை தட்டிக் கொடுத்து புதுக் கவிதை ஒன்று எழுத்தில் வடிப்பேன் பூவை அணைத்து உயிர்க் கவிதை ஒன்று மண்ணில் படைப்பேன். ________________________________ * செருமுனை - போர்க்களம்
 20. பின்னூட்டல் இட்ட எல்லோருக்கும் நன்றிகள்....
 21. இனியவள் இனி அவள் என இருக்க மறுத்தது யாரோ? அது சரி, ஆணின் இதயக் கறி கேட்கும் பெண்ணுக்கு இ.பி.கோ செக்சன் என்ன ? என்ற பாட்டு ஞாபகம் வருதுங்கோ.... இதயத்துக்கும் காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாமே? உண்மையா?
 22. அது வேறொன்றுமில்ல.... யமுனா இருக்கிற தைரியத்தில தான்...
 23. யம்மு, எனக்குமொரு உதவி செய்வீங்களா? என் காதலையும் பார்த்துச் சேர்த்து வையுங்களன்....
 24. ம்... அகத்தியருக்கு இதெல்லாம் தேவையா? ஐயனே சரணம் என்று ஆனந்தக் கூத்தாடாமல் இதென்ன வேலை?
 25. தம்பியோ (அண்ணாவோ) தெரியல .... இலக்கியா... நீங்க சொல்லுறதுக்கு ஒன்றும் பாராட்டுச் சொல்ல நான் வரல.... எங்கட சமூகத்தைப் பொறுத்தமட்டில் விதவைகளுக்கு வாழ்வு கொடுக்கிறது என்பதை ஏதோ செய்ய முடியாத ஒன்றைச் செய்வது போலவும் பெரிய மனசுள்ளவர்கள் தான் செய்ய முடியும் என்ற தோரணையிலும் பார்கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். விதவைகளை திருமணம் செய்வதால் ஏதோ வாழ்வு கொடுப்பது போலவும் சிலரின் நினைப்பு ... வாழ்வு கொடுக்க நாம் யாரப்பா... ? வாழ்வு கிடைச்சு தானே மண்ணில் வந்திருக்கினம்... அந்த வார்த்தைப் பிரயோகம் சரியாகாப் படல... என்ன தான் அடிக்கடி விவகாரத்துச் செய்து மறுமணம் செய்கின்ற கலாச்சாரத்தை மேற்குலகத்தினர் கொண்டு இருந்தாலும் அவர்களின் மனநிலை நம்மவருக்கு வர நாளாகும்... (அடிக்கடி விவகாரத்து செய்யுங்க என்று சொல்லல நான்... கவனியுங்க...) சீதனம் கேட்கிறதில தொடங்கி ஆண்களின் கை மேலோங்கிய சமூக அமைப்பாகவே எங்க சமூகம் இன்னும் இருக்கு... என்றாலும் இப்படி சிந்தனை ரீதியில் பின்தங்கி இருக்கிற சமூக அமைப்பில இருந்து விதவைகளை மணம் செய்ய உங்களைப் போன்றவர்கள் முன்வந்தால் வாழ்த்துச் சொல்லலாம்... மற்றும் படி இதில் சிலாகிக்க எதுவும் இல்லை...