kavi_ruban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  372
 • Joined

 • Last visited

Everything posted by kavi_ruban

 1. கலைஞன் நன்றிகள்... கண்ணனை காதலனாக, காதலியாக இப்படிப் பல விதங்களில் பாரதி பாடுவதை சகிக்க முடியுமென்றால் சாவால் விடுவதையும் ஏற்றுக் கொள்ளலாம். கடவுளை உயர்ந்த இடத்துக்கு கொண்டு போவதால் தான் இன்னும் கிடைக்கமாலே இருக்கிறார் போல... 'என்னடா மச்சான்...' என்ற தோரணையில் கதைச்சுப் பாருங்கள்... பக்கத்தில ஓடி வருவார்....
 2. நான் ஒரு படத்தை இணைக்கிறேன்.... (யாரும் கோவிக்க மாட்டீங்க தானே...?) எங்க பார்ப்போம் உங்க கற்பனைக் குதிரையை ஓடவிடுங்கள் பார்ப்போம்..... (களத்தை விட்டு ஓடாமல் இருந்தால் சரி) இதற்கு நான் ஒரு கவிதை தருகிறேன்... நீங்களும் எழுதுங்கள் .... // இன்று நீ நாளை நானும் உனக்குப் பக்கத்தில் படமாக...! // படத்தின் இணைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.
 3. சமாதான தேவதை - நீ சமர் கண்டு சோர்வதா? அவமான அர்ச்சனை - நீ அருகிராமல் எங்கெங்கோ போவதே! சுகமான வாழ்வது சுடராமல் அணைவதா? சாவின் கரத்தில் உயிர் சடுகுடு விளையாடி மாய்வதா? நிழலாக எம் கழல் தனை தொடர்கின்ற சுற்றமது சுவர்க்கமதை அணைப்பதா? இமையாக நின்றெமை சுமையாக நினையாத அன்னை, அப்பனை அடுத்தடுத்து அவலமாய் இணைப்பதா? தமையனாய் நின்றவர் தம்பியாய் வந்தவர் தமக்கையாய் அணைத்தவர் தங்கையாய்ச் சிரித்தவர் நீட்டி முழங்கிப் போக அனுமன் வாலாய் நீள்பவர் கவலை மறந்து, சிரித்து மகிழ்ந்து இந்நாட்டு மன்னராய் நின்றவர் அன்பென்னும் ஆகுதியில் உயிர்தனைச் சலவை செய்து அவலம் எதுவென மறந்தவர் பட்... பட்... எனப் பறக்கும் வேட்டுக்கு சட்... சட்... என மடிவோம் எனும் உண்மை மறந்தவர் ஐயகோ... என்னென்று சொல்வேன் அவர் பட்ட அவலம்? மண்மீது வரிசையாய் கிடந்ததே அவர்தம் சடலம் இதுதானோ இறைவன் எழுதும் சாவுப் படலம்? இறைவா... என் கையில் நீ கிடைத்தால் நிச்சயம் மரணம்!
 4. அழைப்பாயா என்று கேட்டபின் முறைப்போடு முறுவலா? தமிழோடு விளையாடி கவிதையால் எனைச் சாடாமல் மெளனியாகிப் போனாயோ பெண்ணே? கற்பனையது ரசிக்க! அது கண்டு நீ தெளிந்தால் மயக்கங்கள் வாரா! தயக்கங்கள் வேண்டாம் தடையிலாது தமிழோடு விளையாடு பூனையென்றே பிடிக்க வந்தால் புலியாகி அவர்தம் உயிரோடு விளையாடு!!!
 5. ஆசைகள் நீ உரைத்தாய் கண்ணே - என் மீசை துடிக்குதடி பாஷைகள் தேவையில்லை பார்வைகள் போதமடி ரோஜாக்கள் அழைப்பு விடுத்தால் ராஜாக்கள் மறுப்பாரோ? தேனுண்ண பூக்கள் அழைப்பு விடுத்தால் வண்டுகள் மயங்காதோ? வருவேனடி கண்ணே நானும் வாசலிலே காத்திருப்பாய் வாய் முத்தம் தந்தே என்னை மச்சத்துக்கு அழைப்பாயா?
 6. வாழ்க்கை ஒன்றும் புதிரில்லை நாளைய ஏக்கம் நேற்றை கவலை பலருக்கு... இன்று, இந்த நிமிஷம் நாமிருப்பதே நிஜம்.. இன்றையப் பொழுதைக் கொண்டாடுங்கள் சந்தோஷங்களை ஒத்தி வைக்க இது ஒன்றும் கூட்டத் தொடரில்லை! வாருங்கள் நண்பர்களே வசந்தங்கள் காத்திருப்பதில்லை வசந்தாக்களும் கூடத் தான்!!! :P
 7. பயணத்தோடு என் துக்கமும் காலாவதியாகிப் போனது... 'ம்...' பயணம் நல்லது பல முகங்களைப் படிக்கின்ற வாய்ப்பைத் தருவதால்... வேலையில் களைத்துப் போன மனசுக்கு குஞ்சம் கட்டி அழகு பார்க்க பயணம் நல்லது சிலருக்கு வாழ்க்கைத் துணை கூட கிடைக்கலாம் பயணம் செய்வீர் இடங்களை மட்டும் கடக்காமல் மனங்களைக் கடந்தும்! பயணங்கள் உங்கள் கால் தடத்தை பதியாவிட்டாலும் நினைவுத் தடத்தை அழுத்தமாகப் பதிவு செய்யும் ஆகவே பயணம் செய்வீர் !!!
 8. கூர்ப்பு விதி சரத்து ஏதோவொன்றின்படி காலப்போக்கில் மனிதர்கள் நாய் முகங்கொண்டு வருவது நடக்குமாம்... உண்மையா? 'சீ நாயே' என்று மறந்தும் திட்டாதீர்கள் நண்பர்களே... வேணும் என்றால் கண்ணாடி முன்னால் நின்று திட்டிப் பயிற்சி எடுக்கவும்.... (உதவலாம் இல்லையா பிறகு...)
 9. பிரியசகி, முதலில் நன்றிகள்... நீங்க சொல்வதை உண்மை என்று ஏற்றுக் கொள்ளலாம் என்று யோசித்தாலும் முடியவில்லை. (வேற ஒண்ணுமில்லைங்க... அவையடக்கமாம்.... அட பாவி.... இல்லைங்க அப்பாவி... )
 10. உங்கள் புரிதலுக்கு நன்றி லிசான்... தொடர்ந்து வாருங்கள்... நன்றிகள்
 11. செய்கை ரீதியாக பிஞ்சிலே முத்தாமல், கருத்து ரீதியில் முத்துவது ஒன்றும் தப்பில்லை லிசான். நீங்கள் எழுதிய விமர்சனம் என் கவிதைக்கல்ல என்று புரிகிறது. நீங்கள் , மேற்சொன்ன செய்திக்கு தான் உங்கள் விமர்சனம் வந்திருக்கிறது. கவிதையின் களம் தெரிந்தால் ரசனைக்கு நல்லா இருக்குமென்பதாலே மேற்சொன்ன செய்தியை இடவேண்டி வந்தது. யாரையும் இங்க ஒப்பிட வேண்டிய அவசியம் கூட இல்லை... களத்தில் அவர்கள் அடிக்கடி வந்து கருத்துச் சொல்வதால் பழுத்துவிட்டார்கள் என்று சொல்வது பொருந்தாது... கருத்து ரீதியில் செறிவான அறிவும் வார்த்தையாடலும் இருப்பது விரும்பத் தக்கது தானே லிசான்...
 12. கவிதை எழுதியது 16 வயதுப் பையன் அல்லவா...
 13. உங்கள் ரசனைக்கு நன்றி கறுப்பி...
 14. விரிகின்ற எந்தன் நினைவதிலே திரிகின்ற ஒர் உரு உன்னையன்றி வேறெது குவிகின்ற உந்தன் இதழ்தனை இமைக்காமல் நோக்குங்கால் அவிகின்றதம்மா எந்தன் மனது! நடக்கின்ற நிலாவோ நீ? அட.... ட... ட... சுவைக்கின்ற பலாவோ நீ? தவிக்கின்ற மனமெங்கும் நீ தவிக்க விடலாமோ என்னை இனி? பிறக்கின்ற கவிக்குள்ளே உள்ள கரு நீ துடிக்கின்ற இதயத் துடிப்பினிலுள்ள சுதி நீ கடக்கின்ற ஒவ்வெரு நாழியும் நான் நினைக்கின்ற பாவையம்மா நீ மொத்தத்தில் மன்மதன் மனதில் நின்று விளையாடும் ரதிக்கு ஒப்பான மதி நீ!
 15. கவிதை பிறந்த கதை : மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்) மலைப் பதியிலே என் மனங்கவர்ந்த மங்கை மலந்திருக்கின்றாள் மணிப் புறாவே உன்ணணிப் பறவை - என் மனங்கவர் இளமை உற்றவள் பால் தூது ஏகாயோ? மல்லிகை சூடி மனதில் என்னை நிறுத்தக் கூறாயோ? சந்தனத்தின் சாயல் எடுத்து வெண்மதியில் முகமெடுத்து ஆனந்தத்தின் சுளையெடுத்து அழகூற இலங்கும் மங்கையவள் என் அண்டை வந்து இன்ப மூட்ட வேண்டும் காதல் கொண்ட ஏழை நெஞ்சம் பாவையவள் படுத்துறங்கும் மஞ்சமாக வேண்டும் காதல் கொண்டு அர்ச்சிக்க கன்னியவள் கருத்தொருமிக்க வேண்டும் காளை எந்தன் நெஞ்சம் களிப்பில் ஊர்ந்து இன்பம் காணவேண்டும் மணிப்புறாவே என் எண்ணப்புறா அப்பெண்புறா பால் செல்லத் துடிக்கிறது வழி ஒன்று கண்டு கூறமாட்டாயா?
 16. யமுனா சொன்னா சரி தான்.... வேறு கருத்துக்கு இடமில்லை ....
 17. இனியவள், படம் நல்லா இருக்கு. அது சரி நீங்க என்ன தான் சொல்ல வாறீங்க என்று விளங்கல. விளக்கம் கொடுங்கள் பார்ப்பம் இது விளங்கி களத்தில சிலர் ஆகா ஓகோ என்று வேறு சொல்கிறார்கள்... அதுவும் விளங்கல...
 18. நன்றி Tamilcowboy (இதை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்திய கஜந்திக்கும் நன்றிகள்), தொடர்ந்து எழுதுவம் ... இசையோட வாங்க....
 19. வானில் பறக்குதடா புலி தம்பி வந்து பாரடா பகைவன் மனசில் கிலி காகம் பறந்தாலும் துவக்கு தூக்கிறான்டா கட கட ரெயின் போனாலும் வானைப் பார்கிறான்டா அட தம்பியோ தம்பி வானில் பறக்குதடா புலி தம்பி வந்து பாரடா பகைவன் மனசில் கிலி வந்து வந்து குண்டு போட்டானே எங்கள் முற்றத்தில் வடிவான பிஞ்சுகளை கொண்டு போட்டானே அன்னை பக்கத்தில் ஓடி ஓடிப் போகிறான்டா இப்போ அச்சத்தில் இனி ஆடி ஆடிப் பறக்குமடா புலிக் கொடி உச்சத்தில் .. ... .... ............. .................. (பிடிச்சிருந்தா சொல்லுங்க தொடர்ந்து எழுதுவம். உங்களிடம் ஏதாவது மெட்டு இருந்தால் சொல்லுங்க மெட்டுக்கு பாட்டு எழுதுவம் )
 20. எனக்கு என்ன என்று இருக்க முடியவில்லை தம்பிகாள்... அதுவென்ன காதல் விட்டு வேறெதுவும் உங்கள் கற்பனைக் குதிரைக்குத் தெரியாதோ? கொஞ்சம் குதிரையை அவிட்டுக் காலாற ஓட விடுங்கள் பிறகு பாருங்கள் பிரமிக்கும் கவிதை நாம் படிக்கத் தருவீர் செய்வீர்களா?
 21. ம்... கவிதையில் தத்துவ விசாரிப்பு புரிகிறது... ஒரு விசயம் கவனித்தீர்களா? ஒரு நாள் தான் மலரின் ஆயுள்... இதில் கவலைப்படுவதால் ஆவதென்ன என்ற யோசனை காரணமாக அழகாய் இருக்கின்றனவோ என்னவோ?
 22. ஆதி வாசி, எல்லாரும் உங்கவாசி என்று நீங்க நினைத்தது எனக்குப் புரியவில்லை. சரி... சரி...
 23. வணக்கம் Cowboy சிலேடை என்றால் கனக்கச் சொல்லலாம். வான் படை பற்றி பல கவிதைகள் களத்தில் இருக்கிறது. பிடித்திருந்தால் சம்பந்தப் பட்டவர்களுடன் பேசி பயன்படுத்தலாம். நீங்க கவிஞர்களே என்று விளித்தது தான் சரி. கவிகளே என்று ஆதிவாசி சொன்னது போல செய்திருந்தால் வேறுமாதிரிக் கூட அர்த்தம் வரும். [கவி - குரங்கு என்று பொருள் உண்டு. என் பெயரோடு குழப்பிக் கொள்ளாதீர்கள் -0) ]
 24. காதலா உன் மேல் எனக்குக் காதலா? கண்டபடி கற்பனை செய்யாதே எட்டி நின்று பல்லிளித்தால் உன் மனசுக்குள் வலியா? மயக்கங்கள் வருதா? களையான பெண்னென்னை கண்டு கண்ணடிப்பீர் முறுவலித்தால் கிட்டவந்து கையணைப்பீர் கலியாணம் என்று வந்தால் கடைசி வரை காணமல் போவீர் போமய்யா