kavi_ruban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  372
 • Joined

 • Last visited

Everything posted by kavi_ruban

 1. தியா, இயல்பான நடையில் ரசிக்கவைக்குது கவிதை... தொடரட்டும்...
 2. எழுந்து வாருங்கள் இனியும் ஒதுங்கி நிற்கும் சாபம் வேண்டாம் எழுந்து வாருங்கள்! சந்து, பொந்து எங்கிருந்தாலும் வாண்டு, பெண்டு அனைவரும் சேர்ந்து முந்தி வாருங்கள் முழு மனசாய் வாருங்கள்! அந்திவானச் சிவப்பை அள்ளி விழிகளில் பூசுங்கள்... ஆதவன் வெப்பம் அள்ளி நாக்கினில் தடவுங்கள்... அடி மேல் அடி அடித்தால் அம்மி நகருமெனில் மனசும் மாறும் எனும் மந்திரம் பழகுங்கள்! தலை ஆறு போல் நீவீர் திரண்டு வந்தால் வரலாறு இதனைப் பதிவு செய்யும் வற்றாத வெள்ளம் போல் எங்கு போய் உற்றாலும் வற்றாத ஈழ வேட்கை கண்டு உலகோரும் புரிந்து கொள்வர் உதவிட முன்வருவர்! முற்றாக எம்மினத்தை அழிக்கின்ற முட்டாள்கள் நட்டாற்றில் நிற்கவேணும் நமக்கொரு நீதி கிடைக்க வேணும்! நாற்றிசையும் அதிரட்டும் நாளிழிதழ்கள் எழுதட்டும் நாளை எமக்கெனும் வேளை பிறக்கட்டும்! சாலை எங்கும் தமிழ் ழுழங்கட்டும்! தமிழன் சாவை தடுத்து நிறுத்தட்டும்!
 3. எங்கிருந்தோ ஒரு பட்சி வந்து சொன்னது மங்குவது போலிருக்கும் யாவும் மங்குவது கிடையாதென்று! எத்திசையும் எக்காளச் சிரிப்பு... சுற்றி வரப் பகைவனின் இருப்பு... வீழ்ந்துவிட்டோம் என்று இவர் நினைப்பு விழ விழ எழுந்த கதை பல இருக்கு! அப்போது தெளியும் மகிந்தனின் கிறுக்கு! கால காலமாய் நாமிருந்த மண் வேழம் போல் பொருதும் வீரம் நிறைந்த மண் நாணல் போல் விழுவதும் நேரம் பார்த்து எழுவதும் கூனல் வீரம் கொண்ட பகைவனுக்குப் புரியாது! புரியும் போது அவனுடலில் உயிர் தரியாது! அப்பாவிகள் பலர் இப்ப ஆவிகள்! புலி வேட்டையென்ற பெயரில் ஹெலியில் கூட வந்து குண்டு போடுகின்றீர் ஹெகலிய ரம்புக்வல்லவிற்கு தீனி போடுகின்றீர்! அடியும் உதையும் அண்ணன் தந்தால் புரியும் விடியும் போது காட்சி மாறலாம் விந்தை எதுவுமில்லை முந்தை நடந்ததெல்லாம் சிந்தை நினைத்துப் பார்த்தால் ஆந்தை கூட அலறும் உம் ஆட்டம் கொஞ்சம் அடங்கும்!
 4. உயிரை அரிகின்ற பார்வை உனக்கு யார் கொடுத்தது? உளறித் திரிகின்றேன் உருகாதோ உன் நெஞ்சம்...? அஞ்சுவது போல் சில சமயம் கொஞ்சுவது போல் சில சமயம் எனை மிஞ்சுவது போல் சில சமயம் எப்படி முடிகிறது எல்லாம் உன்னால்...?
 5. கிளி பறந்து போனால் என்ன? ஒளி கொடுக்கும் சூரியன் எங்கிருந்தாலும் வழி பிறக்கும் அறிவாயா...?
 6. // நீ இறந்த பிறகு ஆவது உன் கல் அறயில் ஆவது எனக்கு இடம் தருவயா? // preethi82(அல்லது சுஜி), கல்லறையில் இடம் தரலாம்... நீங்க அங்க வருவீங்க என்பதை எப்படி நம்புவது? ;-) வாழும் போது தேடாமல், இறந்தபின் நடப்பதை பற்றி பேசுவதா காதல்... என்னமோ நடக்கட்டும்...
 7. நிச்சயம் நினைவில் உள்ள அந்தப் பயம் எமை விட்டுப் போகும் ஒரு நாள்... உற்சவம், உறியடி ஊர்த் திருவிழா காண கன சனம் வந்து போகும் இன சனம் கூடிச் சிரிக்கும் எம் ஊர்த் திண்ணையில்! ஊரின் பெயர்ப் பலகை தொடங்கி கடைகளின் பெயர்ப் பலகை வரை தமிழின் சங்கப் பலகை ஆட்சி செய்யும்! எமக்கான ஆட்சி எம்மவர் கட்சி எல்லாமே நாமாகிச் சிரிக்கின்ற தமிழீழம் மலரும்!
 8. //நல்ல நகைச்சுவையாகவும் கவிதை எழுதுவார்.// முரளி முதல்ல உங்களுக்கு ஒரு கும்பிடு... நான் எழுதிறதை கவிதை என்று சொன்னதற்காக... (நீங்க வேற... சும்மா ஒரு சபை நாகரீகத்திற்காக சொன்னா... ) நல்ல விசயம் ஒன்றைச் செய்யிறீங்க... கவனிப்பு என்பது ரொம்ப முக்கியம்... நீங்க ஓராளப் பற்றி எழுதிறதே அவங்களைப் பற்றிய சின்ன அங்கீகாரத்தை ஏற்படுத்தின மாதிரி... ஆக அடியேன் சொல்ல வாறது என்ன என்றால்... (அப்பு... பேசாமாப் போறீங்களா...? ம்... சரி... சந்திப்பம்... )
 9. கோலம் போட்ட கவி நீ(வீர்) போட்ட கோலம் நன்று... காலம் இது காட்டும் புள்ளியில் நின்று கொண்டு ஒவ்வொருவராய் முடிந்தளவு புள்ளிகள் இடுவோம்... எங்கிருந்தாலும் மறவாது நீயும் ஒரு புள்ளியிடு புள்ளிகளுக்குக் இடையில் தூரம் முக்கியமில்லை புள்ளிகளை இணைப்பது இப்போதெல்லாம் சுலபம்! தள்ளி நின்று புள்ளிகளை வேடிக்கை பார்க்கும் கரும் புள்ளி நீ எனில், இப்போதே போய்விடு! ஆனால், ஒன்றை மறவோதே காலம் கட்டாயம் உன் முகத்தில் செம் புள்ளி குத்தும்! பெரும் புள்ளி சிறு புள்ளி எனும் பேச்சே இங்கில்லை சிறு துளியில் வந்தவன் தான் நீ ஆகவே சிறு புள்ளிதான் உன்னால் முடியும் என்று சிணுங்காதே...! நீ இங்கிடுகின்ற புள்ளிகள் தான் புலிகளுக்குத் தெம்பு பிறகென்ன கிடைக்காதோ ஈழம் நீ நம்பு! ஒவ்வொரு தமிழனும் பகைவனுக்கு அம்பு!
 10. சொந்தம் சொல்லப் பலருண்டு ஆனாலும் அருகில் எவருண்டு? முந்தநாள் இறங்கி விளையாடியது போல் நினைவில் உள்ள என் வீட்டு முற்றமும் கூடி இருந்து ரசித்த சுற்றமும் போனதெங்கே? ஆளுக்கொரு திசையில் யார் யாரோ போட்டு வைத்த பாதையில் நடக்கின்றோம் எமக்கான பாதை வந்து போவார் யாருமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றது வீட்டு வளவில் நின்ற வடலிகளும் உயர்ந்த மனித தோரணை செய்யும் பனைகளும் காற்று வந்து ஓலைகளுக்கிடையில் ஒளித்து விளையாடுகையில் விதம் விதமாய் ஒலி செய்யும் காய்ந்த ஓலை சில களைத்து விழ குருத்தோலைகள் கைகொட்டிச் சிரிக்கும்! வாழ்க்கையின் வடிவான தத்துவம் அது! எங்கிருந்தோ ஒரு குயில் தன் குரல் செருமி 'ஒரு படப் பாடல்' பாடும்! கழுத்தில் மணி கட்டிய சில காளைகள் காலில் சலங்கை கட்டிய மங்கையரைப் பழித்துச் செல்லும்! அந்தி நேர வானச் சிவப்பைக் காட்டி தன் காதலியின் நிறம் பழிப்பான் காதலன் விடாது அவளும் 'அத்தான் கைவிளக்கை ஏற்று இருட்டில் உன்னைத் தேட முடியாது' என்பாள் தன் பங்குக்கு! திண்ணையில் அமர்ந்து சில பழசுகள் சுருட்டை புகைத்தபடி உலகப் பிரச்சனைகளுக்கு இங்கிருந்தே தீர்வு சொல்வர்... எழுத எழுத பல நினைவு தனை எழுது என்று எனை வருத்தும் எந்தப் புள்ளியில் முடியும் என்று அறியாது இத்தோடு முற்றுப் புள்ளியிடுகிறேன்!
 11. மெளனத்தால் ஒரு கவிதை எழுத விரும்பி அடியேன் எழுதிய கவிதை வருமாறு: ..................... ..................... ..................... ..................... ..................... ..................... (குறிப்பு : புரிந்தவர்களுக்கு மெளனமாய் நன்றி/வாழ்த்துச் சொல்வேன்.)
 12. நிலம் அநாதையாகிப் போய் அழுதது... யார் யாரோ மிதித்துச் செல்கின்ற வலி தாங்கி வேறெதற்கோ நிலம் அழுதது...! நிலத்தைப் பிரிவது மனிதர்களுக்கு மட்டும் துக்கமல்ல... பரம்பரையாய் வாழ்ந்த மனிதர்களைப் பிரிவது கண்டு நிலமும் துக்கப்பட்டது... வயலாகி வடலி முளைத்த வளவாகி பூ மணத்த தோட்டமாகி எம் வாழ்வோடு கைகோர்த்த நிலம் இப்போதெல்லாம் மெட்டந்தலையோடு முணுமுணுக்கும் மரங்களின் சோகம் கேட்டு தானும் அழுதது...! பல இடங்களில் நிலத்தில் ஈரமிருப்பது அதன் கண்ணீரை அடையாளப்படுத்துகிறது! சில இடங்கிளில் காய்ந்து போய் நிலம் இருப்பது அழுது அழுது அதன் கண்ணீர் வற்றியதை அடையாளப்படுத்துகிறது!
 13. ஓயாது எங்கரங்கள் துடுப்புப் போடட்டும் காயாத ஈழ வேட்கை எனும் கரையை எங்கள் ஓடம் ஒரு நாள் முத்தமிடும்...!
 14. இளங்கவி வாழ்த்துக்கள்... எழுத எழுத கையெழுத்து அழகாவது போல பழகப் பழக தமிழும் அழகாகும்... அதனால தொடர்ந்து எழுதுங்கோ... நல்லா வருவீங்க... அது நிற்க... அடியேனுக்கு ஒரு விடயத்தில் உடன்பாடில்லை... அது ... // அழுவதும் எழுத்தில் தான்... சிரிப்பதும் எழுத்தில் தான்... முகம் பார்க்க முன்னர் ''என் கேஜ்'' ஐ முடிவு செய்வதும் எழுத்தில் தான்.... // மேலே நீங்க சொன்னது பற்றியது... இப்ப யார் தட்டச்சு செய்கிறாங்க... குரல் வழி உரையாடல், முகம் பார்த்து உரையாடல் இப்படிக் கலக்கிறாங்களே... (சும்மா என்னால் முடிந்த உதவிக் குறிப்பு... ;-))
 15. // ஏன் இந்த photo வை இணைத்தீர்கள்?சுய புத்தியுடன் தான் இணைத்தீர்களா? அல்லது ஏதாவது கோளாறுகள் உள்ளதா?நிர்வாகத்தினராவது தயவுசெய்து கவனியுங்கள்........ // படத்திற்குப் பின்னால் இருக்கும் சங்கதி (அரசியல்) எனக்குத் தெரியாது...(எனக்கும் பிழையெனப் பட்டதால் நான் மாற்றிவிட்டேன்.) சுய புத்தியோடு(!) எழுதும் உங்களைப் போன்றவர்கள் சொன்னால் புரிந்து கொள்கிறேன்... கோளாறுகளோடு பார்க்கின்றவர்களை திருப்திபடுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை...
 16. இரவாய் இருந்த எம் வாழ்க்கை பகலாய் விடிய வந்துதித்த தலைவா வாழீ நீ! முதலாய் வந்த குடியின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்ட போது உனக்கு மீசை கூட முளைக்கவில்லை! ஆசை அரும்புகின்ற அந்த வயதில் ஆயுத பாஷையன்றி வேறெதுவும் இவர்க்குப் புரியாதென உணர்ந்தவன் நீ! துவக்கை கைகளில் எடுத்தவன் நீ! தமிழின விடுதலைக்குப் புது துவக்கம் கொடுத்தவன் நீ! உலகில் தமிழின இருப்பை எதிரொலிக்கச் செய்தவன் நீ காந்திய வழியில் நடந்து சோர்ந்தவர்களுக்கு நீ பிறந்தது பெரும் தெம்பு! ஏந்திய துவக்கின் வாய் திறந்து பேசிய வார்த்தையால் தான் பேச்சு வார்த்தை கூட நடந்தது! உன் வேர்கள் ஆழமானது நீ பரப்பிய கிளைகள் பிரசித்தமானது கொரில்லாவாகி மரபுசார் இராணுவமாகி அலை மீதேறி கடற் புலியாகி 'வானுமாகிப் பரந்த' பரம்பொருள் போல் வான் புலியாகி நீ பரப்பிய கிளைகள் பிரசித்தமானது! தலைவா, நீண்ட ஆயுள் கொண்டு எமைத் தீண்ட வரும் பகை அறுப்பாய் பகலவன் போல் தமிழீழ ஒளி கொடுப்பாய்!
 17. துளிரானாய் பின் மலரானாய் என் மனதின் நினைவெல்லாம் நீயே ஆனாய்! கனவானாய் கனவில் வரும் காட்சி நீயானாய்! துணையானாய் துவளும் போதெல்லாம் எனைத் தாங்கும் சுமை கல்லானாய்! அழும் போதெல்லாம் கண்ணீர் துடைக்கும கையானாய் விழும் போதெல்லாம் மார்பில் தாங்கி தாயானாய்! தேவ தேவா ஒரு போதும் பிரிவு வாராத வரம் தாராய்!
 18. தேவனே... கவிஞர்களின் கண்டறியாத கற்பனையில் இருந்து இந்தப் பெண்ணைக் காப்பாற்று!
 19. தமிழனத் தோனை கூட்டி தமிழ் எனும் தேனை ஊட்டி நெஞ்சு நிமிர்த்துவாய் பாரதியாய் இல்லாவிடினும் நினைத்திருப்போம் உன்னை தமிழுக்கு கிடைத்தவொரு சாரதியாய்...!
 20. சனி, ஞாயிறு தான் விடுமுறை என்று பார்த்தன்... வார நாட்களும் அப்படித் தான் போல... சரி ஆறுதலாகவே வாங்க...
 21. உன் கொட்டம் எப்போது அடங்கும் தாயே... அது வரை பொறுத்திருப்பேன் எல்லாம்...! சும்மாட்டில் குடம் வைத்து அதன் பாரம் பொறுக்கலாம்...! என் மன வீட்டில் சுமையெனில் உன் தலை மாட்டில் தலை வைத்துப் படுப்பதல்லால் வேறு வழியில்லை! விம்மட்டும் மக்கள் என்று விலகி இருத்தல் ஆகாது! விண் முட்டும் அருள் சோதியே... என் விரல் தொட்டுவிடும் தூரத்தில் வா...! உன் கால் தொட்டு வணங்குவேன்... உன் விழி பட்டு கவலையெல்லாம் போகும் பட்டு! சிட்டுப் போல் பறக்கும் வரம் தா அம்மா விட்டு விட்டுப் போகும் உயிர் தாங்கி - ஒரு கூட்டுக்குள் எத்தனை காலம் சுற்றிச் சுற்றி வருவேன்...? பதில் சொல் தாயே... இம்மட்டில் நிற்பாட்டி உன் பாட்டு அறிந்து மீண்டும் தொடரும் இவன் பாட்டு!
 22. கவிதைக்கு ஏன் இந்த தாமதம் என்று யாரேனும் கேட்டால் (யாரடா கேட்கப் போகினம்...) அவர்களுக்கு என் பதில்: "இவள் ஏன் காத்திருக்கிறாள் என்று அறிய அடியேன் பல முறை முயன்றதால் ஏற்பட்ட காலச் செலவு இது..." ----------------------------------- திரை விலத்தக் குறைவில்லாது காற்று வரும்... காதலும் வந்ததெப்படி காதலனே? பிறை போலிருந்த அம்புலி வளர்ந்து முழு நிலவானது போல்... சிறு கறை போலிருந்த உன் உருவம் ஓங்கி வளர்ந்து என்னுள்ளம் நிறைத்த விந்தையென்ன சொல்...! தினமும் திரை விலத்திச் சிலை போல் காத்திருக்கிறேன்... உனக்காய்... மனச்சாட்சி மறக்கும் மனிதச் சாட்சிகளை விட மகத்தான இயற்கையே இதற்குச் சாட்சி! நான் காத்திருக்கின்ற இரவுகளில் பார்த்துவிட்டுப் போகும் நிலவைக் கேள்... அவ்வப்போது நிலவைக் கொற்றித் தின்பதாய் பறக்கும் பட்சிகளைக் கேள்... அவை சொல்லும் என் காத்திருப்பின் நீண்ட இரவுகள் பற்றி! (இவ்வளத்தோடு முடிக்க ஆசை இல்லை தான்.... ஆனாலும்...) ----------------------- (ம்... பெரிய காரணம் இது... )
 23. நிலவு ஒரு நாள் களவு போகக் கூடாதா? கவிஞர்களின் தொல்லை தாங்க முடியலை!
 24. ////கவிரூபன் நிலா கூட லொள்ளு விடுறதுக்கு கொஞ்சம் கூட அளவே இல்லையா. பிச்சுப்போடுவன் பிச்சு ஆமா நல்லாவே இல்லை கவிரூபன். கவிதை எழுத தெரிஞ்ச உங்களுக்கு அந்த படத்தை பார்த்து கவிதை தோன்றாமல் இபப்டி நக்கலடிக்க எப்படி தான் மனசு வந்திச்சோ? நான் உங்க கூட டூ டூ டூ டூ.... இனி போடுற படத்துக்கு ஏற்ப கவிதை எழுத தோன்றாது விடில் ........................ கவிரூபன் நிலாவையும் நிலாவின் கோபத்தையும் நேரில் அறிந்த ஒருவர் என்பதால் மீதி புரியும் /// சரி இனி நிஜமாவே என் கவிதை... வண்டொன்று சிரிக்குது மலரொன்று ஏனென்று கேட்குது? அதற்கு வண்டு இப்படிப் பதில் சொன்னது! நம் நிலை பிறிதொரு நாளில் மாறும்... அப்போது... மலரொன்று சிரிக்கும் வண்டொன்று ஏனென்று கேட்கும்! புரிந்ததா? (புரியாதவர்கள் நிலாவிடம் விளக்கம் கேட்கவும்...)
 25. ஜம்மு, // "தூங்கிட்டு இருந்த சிங்கத்தை "இச்" என்று சத்தமிட்டு எழுப்புவது நியாயமா? // நியாயம் இல்லை தான்... நாங்க குழந்தை என்றெல்லோ நினைச்சம்... (குழந்தை இல்லையா அது? நிலா கவனிக்க...) அதோட சத்தமிட்டு எழுப்பினா சிங்கமென்றாலும்... குழந்தை என்றாலும்... மிரளத்தான் செய்யும்.... ஆகவே இனி முத்தமிட்டு எழுப்புங்க... எதுவும் மிரளாது... சரி என் கவிதை இதோ... "தூங்கிட்டு இருந்த ஜம்மு பேபியை "இச்" என்று முத்தமிட்டு எழுப்புவது நிலாவா? குறிப்பு : ஜம்மு பேபி - எங்கட பக்கத்து வீட்டு பேபி, நிலா - வான்நிலா அல்ல பேபியின் அக்கா... (அப்படா இப்ப தான் நிம்மதி...!) அப்ப நானும் வரட்டா? (அட பாவி நீயுமா?..... உருப்பட்ட மாதிரி தான்...!!!)