kavi_ruban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  372
 • Joined

 • Last visited

Everything posted by kavi_ruban

 1. மல்லாந்து படுத்திருப்பது (வெண்)நிலவோ என ஒரு கணம் நினைத்தேன்... மறு கணம் நகைத்தேன்...! கனவிலும் நிலா நினைவு வருவதால் வந்த வினை இதுவெனத் தெளிந்தேன்! சரி யார் இது? எந்த ராஜாவுக்காக இந்த ரோஜா வாடிக் கிடக்கிறது? தேக்குமரத் தோள்ச் சொந்தக்காரன் தேடி வரும் வரை கோடி கற்பனையில் வாடிக் கிடக்குதோ? யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் நான் வாரி அணைக்க...!
 2. முன்னுரை : எழுதியது சற்றே நீண்டு விட்டது. தோன்றிய எண்ணங்கள் அதை விட நீளம்... ஆனால் பாவம் நிலா என்று சுய தணிக்கை செய்த பின் கிடைத்தது இது... (ஆ! சுருக்கமே இவ்வளவு என்றால்...? பிறகென்ன ஞாபகங்கள் சும்மாவா?) --------------------------------------------------------------------------------------------------------- நீ வரைந்த கடற்கரை காட்சியில் நம் காதலின் சாட்சியாய் இருந்த படகைக் காணோம்! நாம் பேசிய காதல் மொழி கேட்க ஆர்வமாய் துள்ளி வந்த கடல் அலை காணோம்! கடலை வண்டி தள்ளிப் போகும் வயசான கிழவர் இல்லை... அக்கம் பக்கம் பார்த்துவிட்டு முத்தமிடும் உன் குறும்பில் குங்குமமாய்ச் சிவக்கும் என் நிலா முகம் போனதெங்கே? கடற்கரை கிணற்றில் தண்ணீர் அள்ளிப் போகும் பெண்களின் பார்வை படாது என் முகம் மறைக்கும் உன் உருவம் கரைந்தது எப்படி? அடிக்கடி என் பெயரை உச்சரிக்கும் உதடுகள் கடற்கரை மணலிலும் எழுதிப் பார்த்த அழகு மறைந்தது எப்படி? வசதியாக இப்படிப் பல நினைவுகள் மறைந்து வரைந்த ஓவியம் எதற்கு என்று கசக்கி எறிந்தாயா என் காதலனே? உன் புன்னகை சொல்லும் ஆயிரம் அர்த்தம் புரிகிறது எல்லாம்!
 3. கவிதையை வாசித்து முடித்த பின் எழுகின்ற கேள்விகளை முன் வைக்க விரும்பிகின்றேன்... // நிலவை ரசிக்க நினைத்தோம். ஆனால்.. இரவுவரை தனித்திருக்கும் தைரியம் நமக்கிருக்கவில்லை. // சேர்ந்து தான் நிலவை ரசிக்கவேண்டியதில்லையே... (அது சரி இன்னும் எத்தனை காலத்திற்கு தான் ரசிக்கப் போறியள் நிலவை...? ) // கடற்கரை சென்று காலாற நடந்து காற்று வாங்க நினைத்தோம். ஆனால்… நம் கைகளைக் கோர்த்தபடி காலடி பதித்து அலை நுரை ரசிக்க முடியவில்லை. // கைகளைக் கோர்த்தபடி தான் ரசிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே... // மூழ்கப் போனவளை மீட்டு வந்தது கண்டும் எங்களுக்குள் ஊடல் என்று ஊர் சொன்னது. // மேலுள்ளது இப்படி வருமென நினைக்கிறேன்... //எங்களுக்குள் ஊடல் என்று // ---- எங்களுக்குள் காதல் என்று (ஊடல் வேறு ....) இன்னும் எங்கட சனத்தை எத்தனை நாளைக்கு இப்படியே நினைக்கப் போறியள்? சனம் எவ்வளவோ மாறிட்டது...
 4. எந்த இராமன் பிடித்து வந்த பெண் மான் இது? (எந்த மானைச் சொன்னேன் என்று நீங்கள் குழம்பினால் தான் இது கவிதை!)
 5. உனக்குமா அது இல்லை என்று என்னைக் கேட்டால் எப்படி அப்பனே... காதலெனும் அருமந்த அனுபவத்தை கடக்காது காதலெனக்கு கசக்காது...! தோல்வி எதில் இல்லை? தோற்றபின் போதனை செய்கின்ற உம் செயல் ஏற்பில்லை காண்! காதல் ஒரு தவம் சில நேரம் வரம் கிடைக்கிறது சில நேரம் சாபம் கிடைக்கிறது அவ்வளவு தான்! தேவதைகளை மட்டுமே அர்ச்சிக்கப் பழகியவர்கள் நாங்கள்... தே(ள்)வதைகளையும் தாங்கப் பழகவேண்டும்!
 6. ஏது கண்ணாடி என்று ஏங்கி நின்ற காளை... உன்னிரு கன்னக் கண்ணாடி கண்டபின் களிப்பில் துள்ளினான்!
 7. போர்வைக்குள் தூங்கும் இரு மலர்கள் இங்கே கண்டேன் போரோடு வேரோடு அறுபடும் மலர்கள் அங்கே கண்டேன்! படைத்தவன் விடையளிப்பானா? பகுத்தறிவுக்கு விளங்கா இவ் முரண்பாட்டுக்கு!
 8. வாழ்வோம் நாம் என்று வாழ்த்த ஒரு நாதி இல்லை வீழ்வோம் விரைந்தே என்று வாழ்த்த தேடி வருவார் பலர்! காலன் கால்களுக்கு சொடுக்கு எடுக்கும் வித்தை அறிந்த ஒருவன் விந்தை பல நடத்துவான்! மொந்தை நிறைய கள்ளருந்து தள்ளாடி வரும் பதர்களே... முன்னாடி வந்து முக்குடைப்பர் வீர மைந்தர்...! கண்ணாடி பார்த்து தலை வாரிக் கொள்ளும் கடைசியாக உன் முகம் பார்த்த சந்தோசம் உனக்கு ஆகட்டும்! சுடலையில் சிவனாடி முடிப்பான் மனித வாழ்க்கை! களத்தில் இவனாடி முடிப்பான் பகைவர் செருக்கை!
 9. உங்களுக்காக எதுவும் செய்யவில்லை நாம்...! களமாடி வீழ்பவர்கள் நீங்கள்... பலமாடி கட்டி இங்கு வந்து வாழ்பவர்கள் நாங்கள்...! போரின் புகைக்குள் உடல் வருத்துபவர்கள் நீங்கள்... காரின் புகையை மட்டுமே கண்டு பழகியவர்கள் நாங்கள்...! ஏதும் செய்யாது எப்படி விமர்சிப்பதாம்? போதும் நிற்பாட்டு குறை சொல்லாது வாழ்தலே பெரும் சிறப்பு!
 10. எப்போது அடி விழும் எப்போது கை சுடும் என்று இப்போது நாம் அறியோம்... இப்போது நடப்பது குருசேஷ்த்திரம் அல்ல.. பொல்லாத குளவிகள் யாரோ எறிந்த கல்லில் நில்லாது பறக்கின்றன! விழுகின்றனவே சில இலைகள் என்று மரம் அழுதால் புதிதாக இலைகள் துளிர்க்காது...! சரித்திரம் மறுபடி திரும்பும் அதுவரை பொறுத்திருந்தால் உண்மை விளங்கும்!
 11. மாமா என்றழைத்த மச்சாளே...! உறவு முறை ஏதுமெனக்கு விளங்கலையே... சரி அஃதிருக்க சந்தை போல் கல கலக்கும் கவிதை அந்தாதியில் சண்டித்தனம் செய்யக் கூட ஆள் இல்லையே இப்போது... தொடக்கிய கறுப்பி அக்கா அடிக்கடி வந்து கிறுக்குவதுமில்லை விகடமாய் கவி செய்யும் விகடகவி கவி வரைய வருவதுமில்லை நிலவு கூட நின்று பேசுவதில்லை எல்லோரும் அவரவர் வேலைகளில் நீயும் நானும் வேலையற்று காலை எழுந்ததும் சிந்தனை வேறின்றி சிதறியே கிடக்கிறோம் கவிதை அந்தாதியில்! ஆளை விடு அக்கா... சோலை போல சுற்றி வர பல பூங்கா உண்டு... அடுக்களையில் முடங்கிக் கிடப்பது போல கவிதை அந்தாதிக்குள் முடங்கிக் கிடக்க மாட்டேன் நான் இனி! ஏதோ நீ சொல்வதால் சாது ஆக சண்டித்தனம் செய்யாதிருக்கிறேன்! சரி பார்ப்போம் வரிக்கு வரி குறையாது தமிழ் வார்ப்போம் படிக்க ரசிக்க நீ இருப்பதால்!
 12. காதலியே உன்னைப் பற்றி இதுவரை ஒரு கவிதை எழுதத் தோணலையே... மூன்றாம் பிறையாய் தான் நீ இருந்தாய் முழு நிலாவாய் எப்படி நீ எனக்குள் வளர்ந்தாய்? சும்மா இருந்த முனியும் உன் முகம் கண்டு கனியும்! சனியும் உன்னிடம் கொஞ்சம் தணியும்! பனியும் மழையும் பாவடை தாவணியில் உன்னைக் கண்டபின் கொஞ்சம் குறையும்! விரியும் இயற்கை கூடப் ஒரு நாள் புரியும்! நீயோ எனக்கு என்றும் புரியாக் கவிதை! நீ செய்யும் புரியாணியும் கவிதை! ;-) அது வரை சரியாய் கவிதை வராவிடினும் வார்த்தையாய் விதைப்பேன் உன் வடிவழகை என்றும் ரசிப்பேன்!
 13. இதயத்தை கொடுத்து விடச் சம்மதம்... எத்தனை கைமாறி எங்கிருக்கிறதோ என் இதயம் என்று அறிந்த பின் இதயத்தை கொடுத்து விடச் சம்மதம்...! காதலின் சின்னம் இதயம்... "லப்... டப்..." அதன் மொழி! இன்னொரு பார்வையில் இதயம் எழுதும் ஹைகூ கவிதை இந்த "லப்... டப்..."! காதலுக்கும் இதயத்திற்கும் என்ன சம்மதமோ? அடியேன் அறியேன்! நான்கு அறைகள் கொண்ட கூடு அது... உயிர் ஒழித்துப் பிடித்து விளையாட வசதியாய்...! ஒருத்திக்கு ஒரு அறை எனக் கணக்கிட்டால் நாலு பேரை ஏக காலத்தில் காதலிக்கலாம்! (அட பாவி - கவனிக்க கவிதையில் இது சேர்த்தியில்லை)
 14. நானிங்கு காத்திருப்பது காதலனுக்காக அல்ல கவிஞரே... கடலலை மெல்ல கால் நனைக்கும் சுகத்திற்காக... மரணித்து விளையாடுதல் பற்றி எங்கேனும் அறிந்ததுண்டா கவிஞரே? பாரும் கடலலையை மரணம் அதற்கு விளையாட்டு! அருகில் நெருங்கி வாரும் கவிஞரே இப்படி அமர்ந்து பேசலாம்... உப்புக் கலந்த காற்று... அலையடிக்கும் கடல்... காலுக்கு இதம் தரும் கடற்கரை மணல்... சும்மா இராமல் கடலுக்குள் விழுந்தெழும்பும் சூரியன்... என கண்முன் விரியும் இயற்கையை கொண்டாடாமல் ஏதோ வாழ்கின்றோம்! இந்த உலகம் பரபரப்புக்குள் சிக்கி இதயங்களை இளைப்பாற விடுவதில்லை... மெல்லிய உணர்வுகளின் மகத்துவமும் புரிவதில்லை... என்ன கவிஞரே அப்படிப் பார்க்கின்றீர்? என் பேச்சில் வியக்க எதுவுமில்லை... விடை தெரியாத கேள்விகளோடு மனசு தவிக்கிறது! அது இருக்க கவிஞரே... ஒன்று கேட்கின்றேன் பதில் சொல்ல வேண்டும்! என் உதடு எழுதும் புன்னகையை விட அழகாய் உம்மால் கவி புனைய முடியுமா? முடியுமெனத் தலையசைத்து நானும் புன்னகைத்தேன்! புரிந்தவளாக கடற்சோகிகள் பல ஒன்றாய்ச் சிதறியது போலச் சிரித்தாள்!
 15. ஏய்... கடல் அலையே கரையை முத்தமிடும் உன் தாகம் எப்போதும் அடங்காதது போலவே என் காதலனுக்கான காத்திருப்பும்...!
 16. கண்ணியமாய் தொடர்வேன் நான் விண்மினியாய் நீ இருந்தால்... நிலாவாகிச் சிரிக்கும் ஓரழகே நின்று நிதானிக்கும் நிலையில் நானில்லை விண்மீன் கடலில் குளிர் புன்னகை தந்து விளையாடுகின்றாய் நெற்றி வியர்வை ஒற்றி எடுக்க மேகப் பஞ்சள்ளி முகம் மறைக்கின்றாய் மின்னலாய் வெளியே வருகின்றாய் மிருதுவாய் எனைத் தொடுகின்றாய் கண்ணியமாய் நானிருக்க கருத்தில் நினைத்தாலும் தள்ளாடும் உன்னழகு கண்டு தாங்காது சரிகின்றேன் கண்ணியமும் மறக்கின்றேன்! அப்போதும் அதே குளிர் புன்னகை என் செய்கை உனக்குப் பிடித்தது என்று உணர்த்துமே! சொல்லடி இப்போது நான் என்ன செய்வேன்?
 17. வெண்ணிலா நீங்கள் கொடுத்து வைச்ச ஆள் தான்... கனவில் வந்த கடிதமும் கவிதை வடிவில் இருந்திருக்கு.... அது சரி எத்தனை நாளைக்கு ஒரே கிளைமாக்ஸ் ஐ கவிதையிலும் சரி ... கதைகளிலும் சரி வைப்பார்களோ தெரியாது... நீங்க என்ன சொல்லுறீங்க நிலா...
 18. நிலாமதி, ஆசைகள் எல்லாம் சரி தான்... // மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை ................ // பறிக்கிறது தான் பறிக்கிறீங்க... பழமா பறிச்சா என்ன? (அட யார் இந்த அதி புத்திசாலி என்று கேட்கவேண்டாம்...) எனக்கும் ஒரு ஆசை உண்டு நிலாமதி... நீங்கள் எழுதும் கவிதைகள் பாடல் எதையும் நினைவு படுத்தாமல் இருக்கணும் என்று...
 19. தர வேண்டும் நீ உன் பூ முகம் என் கையில்... தாள் மீது கை கொண்டு கன கவிதை எழுதியது போதும் உன்னிதழ் மீது என்னிதழ் கொண்டு எழுத வேண்டும் சில கவிதை! குங்குமம் உன் முகத்தில் அள்ளி பூசியது போல் நாணமென்ன பெண்ணே நம்மிருவர் நெஞ்சும் சங்கமம் ஆக நேரம் பார்ப்பதுமென்ன? போது மடி உன் பொய் விளையாட்டு! கோது மடி என் விரல்கள் உன் கூந்தல் தனை நீ அருகில் வந்தால்! ஓது மடி என் நா பல காதல் பா... சம்மதமா?
 20. நீ வா நிலா நீ 'வானிலா'? எங்கிருந்தாலும் நீ வா நிலா... ஏனிப்படி ஏணிப்படியாய் நிற்பவர் தமை எட்டி உதைக்கிறாய்? நானிப்படி எழுதுவன் என்று நீ நினையாமல் இருந்ததும் தப்படி...! பல படியேறி பரமனைத் தொழுதென்ன? அவன் சொன்னபடி வாழாமல்... இப்படிப் பல சொல்லிப் புலம்புவன் நான்... மேற்படி கவிதையில் முடித்தது போல் அழகிய வார்த்தையில் உன் கவி முடிந்தால்...
 21. வா என் கண்ணே வாடி இருப்பது ஆகாது! கூடிப் பேசி மகிழப் பல கதையிருக்கு ஓடிப் போய் ஒழியாதே என் கண்ணே... மாடி வீட்டழகே தலை அண்ணாந்து பார்த்து உன்னழகைப் பருகுகையில் நிலா என்னவென்று எனைக் கேட்குதே...! சூடிக் கொள் இந்தா புது மலர்... நீ ஆடி அசைந்து வருகையில் உன்னழகெல்லாம் கை நீட்டி எனை அழைக்குதே! உன் மடி மீது தலைவைத்து நான் உறங்க விடிகின்ற இரவை 'சீ விடியாதே' என்று நீ சிணுங்க மறுபடியும் வாடும் இந்த மலர் இரவோடு இரவாக மலரவே!
 22. ஓடுகிறது நதி சலனமேதுமின்றி... யாரோ எறிந்த கல் நதியில் எழுதியது விளங்க முடியாப் புதுக் கவிதை...! படித்துப் பார்த்த பாமரன் சொன்னான் "அலை" அதுவென்று உற்றுப் பார்த்து கவிஞன் சொன்னான் "நதி நடக்கின்ற பாதச் சுவட்டை எறிந்த கல் காட்டிக் கொடுத்தது" என்று! அருகில் வந்த அறிவாளி சொன்னான் "கவனிக்க சங்கதி பல உண்டு வேறு திசை நோக்கி நடக்க இந்த வையம் சிறக்குமென்று..." இவை ஏதுமறியாது நதி ஓடுகிறது சலனமின்றி!
 23. உன் பட்டுக்கரம் நீட்டாயோ? பயிலப் பல பாடம் உண்டு! கண் எட்டும் தூரம் வரை விண்ணோடு விளையாடும் வெண்ணிலா அன்றி வேறொரு காட்சியில்லை! என்னோடு நீ இருந்தால் எதிர் வரும் இடர் எல்லாம் கால் தூசு! கண்ணோடு கண் உரசும் கவி மலரே உனக்குள்ளே பதுங்கியிருக்கும் சுகமெல்லாம் சுடரச் செய்வேன் தொடத் தொட பட படவெனப் பறக்கும் பல பறவை உள்ளிருந்து... எழுந்து வா என் எழிலே... கொழுந்து ஆய்வது போல் நோகாமல் உன் சின்னிடை நுடங்காமல் அருந்துவேன் அழகத்தனையும்!
 24. நிஜமாக்கத் துடிக்கிறது மனசு! பல பிரமாக்கள் கூடி படைத்த பெண்ணவளை என் புஜத்தோடு அணைத்து புன்முறுவல் பூக்கும் இதழில் இளைப்பாறி இமை மூடி அவள் மடியில் படுத்துறங்கும் நினைவு அத்தனையும் நிஜமாக்கத் துடிக்கிறது மனசு!