• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

kavi_ruban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  372
 • Joined

 • Last visited

Everything posted by kavi_ruban

 1. வெண்ணிலவு மறையுமுன் தூக்கம் வரவேண்டி கண்ணிரண்டு இறுக மூடி ஜன்னலோரம் படுத்திருந்தேன்... பலமுறை புரண்டுபடுத்தும் வரவில்லை கண்ணுறக்கம் கண்திறந்து ஜன்னலூடு கண்கள் உலவவிட்டேன்... பளிச்செனச் சிரித்தது பால் நிலா...! "உன் நிலா அருகில் இல்லாது ஏதடா உனக்கு கண்ணுறக்கம்..." என்று கேட்பது போலிருந்தது பால் வெளிச்சம்! சிறிது நேரத்தில் முகில் போர்வை இழுத்துப் போர்த்தி உறங்கப் போனது வான் நிலா! மீண்டும் புரண்டு படுக்கிறேன் நான்...
 2. விடுவான் இனி என் பக்கம் வராது என்றெண்ணி அண்ணாந்து நிலவு நோக்கி ஏதோ முணுமுணுத்து ஏகாந்தம் தேடி வீட்டுவாசல் மீது அமர அவன் நினைவன்றி வேறேதும் தோன்றக் காணோம்! பின் தொடர்ந்து வருகையில் தேடாத என்னுள்ளம் இனி வராதே என்று அவனை முறைத்த பின் ரோசக் காரன் அவனும் மறைந்துவிட்டான் கண்களிலிருந்து! அருகிலிருக்கும் போது நினைக்காத என்னுள்ளம் தொலைவில் ஒரு புள்ளியான பின் அருகில் வரானோ என்று ஏங்கித் தவிக்கும்!
 3. கஜந்திக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் அவர் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன்... (வெண்ணிலா கணக்கில் கெட்டிக்காரியோ...?)
 4. அனுபவிக்க வேண்டுமடி அத்தனையும்! ஆகுதியில் நெய் வார்ப்பது போல் என் ஆவியில் அன்பைச் சொரிந்தாய் என் சோகம் துடைத்தாய்! வாழும் இவ்வுலகில் நாளை கூட சொந்தமில்லை எமக்கு... போகும் வரை கூடி வாழ்வது தானே எம் இலக்கு...! கூழும் பழஞ்சோறும் உண்டு மகிழ்ந்தது ஓர் காலம் ஆலும் அரசும் தரு நிழல் தேடி அதனடி அமர்ந்து நாளும் மகிழ்ந்ததும் ஓர் காலம்! பாழும் போரில் சாவின் நீளும் கரத்தை தட்டி பறந்து வந்து பாதை மறந்து ஏதோ வாழ்கின்றோம் இங்கே... நீயும் நானும் திக்குகள் வெடித்துச் சிதறியதில் துடித்து விழுந்தவர்கள்! உன் கரம் தேடி என் கரம் நீளும் பொழுதில் இறுக்கிப் பிடித்தது நம் வாழ்வின் ஆசை! வாழ்க்கை வசந்தம் தான் வீழுகின்றபோதெல்லாம் தேடி ஒரு கை கண்ணீர் துடைத்தால்!
 5. மன்னிக்கவும் எல்லோரும்... பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்... (அட பாவி நீ உருப்படுவியா என்று திட்டக்கூடாது... நான் கவனிக்கவில்லை...) நன்றிகளோடு கவி
 6. வாழ்த்துக்கள் கூறி வாழ்த்த ஓர் இதயம் இருந்தால் கூட்டுக்குள் வீணே அடைபட்டுக் கிடப்பேனோ? பாட்டுக்குள் பல சங்கதி வைப்பேன் பலர் பாடி மகிழ பல் சுவை விருந்தளிப்பேன்! காட்டுக்குள் கூவும் குயில் போல் தன் ஓட்டுக்குள் தலை மறைக்கும் ஆமை போல் பூட்டுக்கள் பல கொண்டு எனை நானே பூட்டி வைத்தேன்! தட்டுங்கள் கைகளிரண்டை வானக் கூரை தட்டி வாழ்த்துங்கள் உதிருகின்ற நட்சத்திரங்கள் என் மேல் பூவாய் விழட்டும்... ஒளிருகின்ற நிலவது நில்லாது என் கன்னந் தொட்டு முத்தமிடட்டும்! ஏதும் செய்யாது ஏன் இப்படி நிற்கின்றீர்? போதும் விளையாட்டு உங்களை நம்பி எப்படி புனைவேன் நான் கவி!
 7. வட்டம் போட பழகுகிறதா வானில் சுற்றிவரும் பருந்து? கட்டம் வைத்து சுற்றியொரு சூழ்ச்சி வலை பின்னி கணத்தில் தரையிலிறங்கி தனிமையில் நிற்கும் குஞ்சைக் கவ்வி மீண்டும் எழும் வானில் பருந்து! "விட்டம் பார்த்து நோட்டமிட்டது போதும்... வானில் வட்டமிடும் பருந்து போல உனை வாழ்வில் கொல்ல பலருண்டு... எழுந்து நில் தாழ்ந்து வரும் பருந்தை பாய்ந்து கொல்..." இப்படி பல சொல்லி தன் அடுத்த குஞ்சுக்கு பாடம் எடுத்தது தாய்க் கோழி! இழப்பு இடிந்து போகவல்ல...!
 8. என்னருகில் நீ இல்லை இப்போது மனசுக்குள் தீ வளர்க்கும் காதலெனும் காட்டாறு! முன்னழகில் பின்னழகில் முகத்தழகில் இவ்வழகில் எவ்வழகில் மயங்கினேன் எனும் எதிர்க் கேள்வி கேட்டால் மனசழகில் என்னும் மறுமொழி தவிர வேறேதும் வாராது! கண்ணே காலத்தின் சுவடுகளை கடிகார முள் அளக்கும்... நம் காதலின் தெரியாத சுவடுகளை யாரும் அறியாமல் முத்தமிடும் நம் உதடுகள் அளக்கும்! பரிவாக தலைகோதும் உன் விரல் தரும் சுகத்தில் வடிவான இளம் பெண் மீட்டும் வீணையிசையும் தோற்குமடி! சரிவாக எனை நோக்கும் உன்னிரு அழகுப் பெட்டகமும் விரைவாக என் விரல் தொட விரகத்தின் உச்சிக்கு எமை அழைக்கும்! நிறைவாக எழுதவெண்ணி சரியான சொல் தேடின் உயர்வான நம் காதல் எண்ணி மடை போல சொல் வந்து சேரும் சொல்லாத கதையெல்லாம் சொல்லென்று எனைத் தூண்டும்!
 9. மனதில் ஆசையோடு எனக்கொரு ஆணைபோடு மடியில் வந்து விழுந்து மங்கை உன்னை வீணையென மீட்டுவேன்! நாளை என்று இன்னொரு நாள் தேவையில்லை ஆளையாள் அணைத்துக் கொள்ள ஐயர் வந்து நேரம் பார்க்கத் தேவையில்லை! காலை விடியும் பொழுதில் கற்கண்டு நினைப்பில் உன் முகத்தை வெட்கம் மெழுகும் நல்ல சமயமென்றுணர்ந்து என் கை உன் இடை தழுவும்! உடை அவிழும்! அவிழும் உன்னுடை பற்ற விரையும் உன்னிரு கை படை நடாத்தும் காமனின் முன் நடை தளர்ந்து பஞ்சணையில் நீ விழுவாய்! - உன் நெஞ்சணை தேடி என் முகம் மறையும்! வேறென்ன சொல்ல வேதியலில் சொல்லாத பலவும் களவியலில் நடக்குமடி கண்ணே!
 10. யாவும் என்றோ முடியும் ஆகும் அத்தனையும் அழியும் என்ற விதியின் படி யாவும் என்றோ முடியும்! நீயும் நானும் நொடியில் மயான மடியில்! சாவின் மடியில் சண்டியனும் போவான் நொடியில்! தாயின் பாலில் உடம்பில் ஓடும் இரத்தம் நோயில் விழுந்து பாயில் படுத்த பின்னர் ஓடி அடங்கும்! வாழும் நாளில் சூழும் சோகம் வாடி வதங்கிச் சோரும் நெஞ்சம்! ஆழும் கடவுள் அருள் ஒன்று தரவேண்டும் நாளும் பொழுதும் சோகச் சுவடறுத்து சிந்தனைச் சுடர் வளர்த்து தூய அன்பில் உயிரத்தனையும் மூழ்கி தேட வேண்டும் பெரும் வாழ்வு தரும் ஜோதி!
 11. ஏதுமில்லை... ஏதுமில்லை ஊருமில்லை உறவுமில்லை உனக்கு நீயே சொந்தமில்லை உலவிடும் உயிர் பறந்துபோனால் தேடிவரப் பருந்துமில்லை இங்கே போடா போ... தமிழன் நீ என்பதால் கோடி சாமி உனக்குண்டு தேடி ஒரு சாமி வரவில்லை உதவிட இன்று!
 12. கோலம் அம்மா போட்டது - ஒரு புள்ளியில் தொடங்கி பல புள்ளிகள் சேர்த்து அழகாக உருவானது! வாழ்க்கையின் வடிவான தத்துவம் கோலத்திற்குள் தன் கோலம் மறைத்து நிற்பது புரியாது எத்தனை முறை கடந்து போயிருப்போம் கோலத்தை! ஒரு புள்ளியில் கோலம் ஒரு துளியில் மனிதன்! கோலத்தை கூட்டி அள்ளினால் ஒரு பிடி... உடலை எரியூட்டி அள்ளினால் ஒரு பிடி சாம்பல்! அதிகாலையில் மீண்டும் நேற்றுப் போட்ட இடத்தில் மறுபடிபடியும் புதுக் கோலம்! ம்... வாழ்க்கை இப்படித் தான்! எம் கோலத்தை நாமே போட முடிகின்ற சலுகை மட்டும் நம் கையில்!
 13. நன்றி கலைஞன்... விடிகின்ற ஒவ்வொரு பொழுதும் பெப்ரவரி 14 தானே...!!!!
 14. சொன்னால் தான் புரியுமா என் கண்ணே மனசுக்குள் பல வண்ணப் பட்டாம்பூச்சி பறப்பது... உள்ளுக்குள் தெரிந்தாலும் உண்மையிது புரிந்தாலும் நான் சொல்லிக் கேட்பதில் உனக்குப் பரவசம்! நாடுகள் எமைப் பிரிக்கும் எம் உயிர் தாங்கும் கூடுகள் தான் அதை மதிக்கும்... எம் உயிருக்கு ஏதடி இடைவெளி? உலவலாம் எங்கெங்கும் உலகமிது சமவெளி! விண்ணில் ஏறுவோம் விண்மீன் எறிந்து விளையாடுவோம் மண்ணில் இறங்கிப் பாடுவோம் பூக்களின் மகரந்தப் பொடி அள்ளித் தூவுவோம் வண்டுகள் எமை மொய்க்கும் உன் கண்ணிரண்டு கண்டு தம்மினமோ என்று யோசித்து நிற்கும்! யாசித்து வருவதில்லையே அன்பு நமைப் போல் நேசித்து நின்றால் ஓடிவரும் முன்பு! ஆண்டுகள் பல காதலிப்பதால் காதல் ஆழமாகுமோ? நேற்று வந்த நீ என் உயிர் உருக வைக்கவில்லையா? காலம் கடந்தது இந்தக் காதல் ஆகுமே! கன்னி நீ பிரிந்து போனால் இந்தக் கூடு விட்டு உயிர் போகுமே! பாடு கண்ணே பாடு... நாளைய பொழுது எமக்காய் விடியும் என்றே பாடு...!
 15. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஆண்டு. ஒன்று பெப்ரவரி 4 இல் வரக்கூடிய சுதந்திர தினம்! (அப்படியென்றால்...? என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்?) மற்றையது பெப்ரவரி 14 இல் வரக்கூடிய காதலர் தினம் (அதாவது... அட போடா எங்களுக்கு தெரியாதாக்கும்...) சரி அதை விடுங்கோ... மிகவும் அக்கறையோடு யோசித்து எழுதிய கவிதையை(?) படிக்கலாம் வாங்கோ... --------------------------------------------------------------------------------- வாலைச் சுருட்டிக் கொண்டு அவரவர் வீட்டுக்குள்ளே பதுங்கி இருங்கள் இன்று சுதந்திர தினம்! சுருட்டு வாங்கப் போகும் தாத்தாவும் கவனம்! உன்னையும் சுருட்டிக் கொண்டு சென்றிடுவர்! சட்டப்புத்தகம் சட்டக் கோவைகளால் கொழுத்திருந்தாலும் நடைமுறைப் படுத்துவதில் இன்னும் அதே மெலிவு தான்! சும்மா உதடுகளால் உச்சரிக்கப்படுவதெல்லாம் உயிர்த்தெழும் என்பது உதவாத கதை! வெறும் கோஷங்களையும் கொள்கை முழக்கங்களையும் கக்கத்தில் வைத்து கொண்டு களமிறங்கிய காரசாரமான அரசியல்வாதிகள்! மீசை இருக்கின்றதே என்று முறுக்குவதைத் தவிர வேறெதையும் மிடுக்காக முடிக்கத் தெரியாதவர்கள்! சகல பாதுகாப்புடனும் அரச தலைவர் கொடியேற்றுவார்! சுதந்திர தின உரை படிக்கப்படும்... வீடுகளில் மக்கள் தொலைக்காட்சி முன்னமர்ந்து வேடிக்கை பார்ப்பர்! நம்பினால் நம்புங்கள் இன்று சுதந்திர தினம்!
 16. நாளும் பொழுதும் நகர்கின்ற திசை நோக்கி விளி திறந்து பார் நீயும் நானும் இன்னும் அதே உவமை வட்டத்தில் உழுதுகொண்டிருக்கிறோம்... நிலவை விட்டால் காதலியின் முகத்திற்கு உவமை இல்லை... தேய்பிறை... வளர்பிறை எனும் வார்த்தை விளையாட்டையே கவிதை என்று கற்பிதம் செய்கிறோம்... கோபித்துக் கொள்ளாதே என்னை... யாரையும் இங்கே திட்டுவதாக அர்த்தப்படுத்தாதே என்னை நானே வம்புக்கிழுக்கிறேன்... சத்திர சிகிச்சை செய்து கவிக் குழந்தை பெறுவதில் எனக்குள் உடன்பாடு ஏதும் இல்லை தானே வலியெடுத்து நெஞ்சுக் கூட்டில் பல முறை முட்டி காட்டாறாக வருகின்ற கவிதையை தாள் எடுத்து ஒழுங்கமைத்து நடை போட செய்வது மட்டுமே என் பணி... இப்படித் தான் அருமையாய் முடித்து வைத்த உன் கவிதைக்கு பதில் கவிதை எழுத வந்து ஏதோ எழுதி நிற்கிறேன்...! என் செய்வேன் நான் இன்னும் அதே விளையாட்டுப் பிள்ளை கூட கோபியர் மட்டுத் தான் இல்லை! இருந்துவிட்டால் என் விளையாட்டுக்கு ஏது எல்லை...?
 17. // நீங்க இருக்கிற நாட்டை பற்றி நேக்கு தெரியாது பட் நாம இருக்கிறது நாடு கிரேட் என்று தான் சொல்லுவேன்..சோ வெறி சாறி இதில இருக்கிற எந்த வரிகளுடனும் என்னால ஒத்து போக முடியாது // வரிகளோடு ஒத்துப் போகச் சொல்வது என் வேலையில்லை... இந்தக் கவிதை எந்த நாட்டுக்குப் பொருந்தும் பொருந்தாது என்கின்ற வரையறையை விட்டிட்டு... சும்மா... ஒரு குறிப்பு மட்டும் சொல்லலாம்... கவிதையில் ஒரு இடத்தில்.... // யூரோவில் பவுண்சில் நீ அனுப்பும் காசில்................. // மேலுள்ள வரிகள் ஏதோவொரு குறிப்பு உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாம்... (யூரோ - ஐரோப்போ, பவுண்சு - இங்கிலாந்து) எழுதும் போது தெரியாத அர்த்தம் எழுதிய பிறகு இப்படியோ என்று வருவதும் உண்டு.... மேலே நான் சொன்னது அப்படியே.... கருத்திட்ட சுவி(பெயர் சரியா?), மருகமகன்,க.பி அக்கா நன்றிகள்... மீண்டும் சந்திக்கலாம்... கலந்து சிந்திக்கலாம்...
 18. பின்னூட்டல் இட்ட ஜம்மு பேபி, மருமகன் (யாருக்கு என்று இன்னும் சொல்லவேயில்லை ;-) ) மற்றும் க.பி அக்கா நன்றிகள்.......
 19. என்னடா நீ நாலுக்கு ஐந்தடி அறையில் கொண்டாட்டம் ஏதுவுமின்றி கொல்கின்றாய் நிமிடங்களை! வெளிநாடு வந்துமென்ன கண்டாய் இங்கே? ஒருநாடு உனக்கில்லாது குளிர்நாடு வந்து குமைகின்றாய் உள்ளே! காலைச் சூரியன் பார்த்ததுண்டா? கடலலை கால் நனைக்க மகிழ்ந்து சிரித்ததுண்டா? போடா... போ... சூரியனுக்கு முன்னெழுந்து நடுங்கும் குளிரில் வீதியில் நடைபயின்று வேலைக்குப் போனால் நடுநிசியில் வீடு திரும்பி மீண்டும் மறுநாள் அதே செக்குமாட்டு வாழ்க்கை...! கேட்டால் நாளை சந்தோசத்திற்கென்பாய்! உனை கேலியாய் பார்த்துச் சிரிக்கும் சமகாலத்தைக் கவனி... கண்களில் மின்னும் தங்கையின் கல்யாணக் கனவு... கஸ்டத்தில் ஆடும் குடும்பத்தின் வாழ்க்கைப் படகு... எல்லாம் சரி... உன் முகமூடி கழட்டி உண்மை நிலை உரை சமாந்திரக் கோடு கிழி குடும்பத்தோடு உன் வாழ்வும் பயணிக்க வேண்டுமடா...! வெளிநாட்டில் இருப்பது கெளரவம் என்று நம்நாட்டில் நினைப்பு... யூரோவில் பவுண்சில் நீ அனுப்பும் காசில் இந்திரலோகத்தின் அதிபதியாய் நீ தெரிவாய்! யாரேனும் இங்கு வந்து நாம் படும் துன்பம் அறிந்ததுண்டா? உள்ளுக்குள் ஏதோவொரு சோகச் சிலுவையை மனசு சுமப்பது புரியுமா? வெளிவேஷம் போட்டுன் வேதனை மறைக்காதே... வாழ்வென்பது நீயும் வாழ்ந்து மற்றவரையும் வாழவைப்பது...!
 20. எங்கிருந்தோ எனை ஆழ்கின்ற என்னவளே... முன்னொருபோதும் இத்தனை சந்தோசம் அடைந்தவனில்லை நான்! பின்பு ஒருநாள் தேவதை நீ வருவாய் எனும் அசரீரி ஏதும் கேட்டதில்லை... ஆனாலும் உன் தரிசனம் கிடைத்தது... காதலெனும் புதுசுகம் மலர்ந்தது! நீ இல்லாத போது வலிக்கின்ற நெஞ்சம் அருகில் வந்தபின் கவனிப்பதே இல்லை பிரிவின் போது தான் உள்ளிருக்கும் காதல் விழித்துக் கொள்கிறது! கண்ணே கலங்காதே... நகருகின்ற நாட்களில் எம் வாழ்வு எங்கே என்று தேடாதே... நாட்களின் வரையறைக்குள் இல்லையடி நம் வாழ்வு! பூக்களைப் பார் மாலையில் மரணம் என்றாலும் காலையில் இதழ்விரித்துச் சிரிக்கின்ற பக்குவம் அதற்கு... அதனால் தானடி மீ்ண்டும் மறுநாள் காலை மறுபடியும் உயிர்த்தெழும்! கவனி... பூக்களுக்கு மரணமில்லை! ஆகவே, நாட்களை எண்ணி கைவிரல் சோராதே! மறுநிமிட சந்தோசத்திற்காய் இந்த நிமிடம் கொல்லாதே! கண்ணே... நெஞ்சில் இருத்தி நினைக்க கற்கண்டு நினைவுகள் நிறைய உண்டு! யன்னல் திற இதமான காற்றுன் இதயம் தடவட்டும் ஏனெனில் அந்தக் காற்றைத் தான் நானும் சுவாசிக்க வேண்டும்!
 21. வெங்காயம் இதுவென வெறுத்து ஒதுக்க முடியாது உரிக்க உரிக்க தன் காயம் பொறுத்து தனக்காய் உனை அழவைத்து சமையலுக்கு சுவை சேர்ப்பதால் வெங்காயம் இதுவென வெறுத்து ஒதுக்கமுடியாது! உன் காயம் வெறும் உயிர் தாங்கும் கூடு பெருங்'காயம்' பட்டுவிட்டால் தாங்காது வாடும்! யமதூதன் உன் உயிர் பறித்தபின் உன் காயம் சதத்திற்கும் உதவாது மயான பூமியில் தானே போய் எரியாது! நாலு பேர் கத்தியழ நாலு பேர் சுமந்தோட நாலு பேர் நினைவில் என்றும் இருக்க - நீ செய்ய வேண்டிய செயல் நாலல்ல பல! ஆகவே கறிக்குதவும் வெங்காயம் போல் உன் காயம் யாருக்கும் உதவாது மரித்துப் போனால் உன் பரம்பரை சுமக்கும் பெரும் பாவம்!
 22. அழகென அவனை நினைத்தாய் அவனிலும் அழகன் அவன் நண்பனாகிவரில் உன் நிலை பாவம் அம்மா!
 23. உறவு வெறுத்துப் போய் துறவு கொள்ள ஆசைப்பட்டேன் கண்ணே உனை என் கண்கள் காணும் வரை
 24. 1997 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பொங்கல் கவியரங்கில் பாடப்பட்ட கவிதை இது. பொருத்தப்பாடு கருதி இப்போது பதிகின்றேன். புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது - அதில் ஒரு நிமிஷம் கூட அர்த்தமாகுது ஆண்டு பல கண்டோம் - அதில் என்ன சுகம் கொண்டோம் வேண்டும் வரம் வேண்டி நின்றோம் '97 இன் உதயத்தையே தொழுது நின்றோம் தையே நீ கிழிந்த மனங்களை தையேன் வெய்யோன் கண்டு அஞ்சாதே அவனுன்னை வையான் பையவே வருவாய் நல்லதே தருவாய் மின்னலே உன்னைத் தொழுதேன் என்னுள்ளே புகுவாய் கோடிப் பிரகாசம் கூட்டுவாய் 'தை' என்ற தையலுக்கு தாலி கட்டவென்றே 'வெய்' என்ன வெய்யோனும் வேளை பார்த்து நின்றான் மை பூசும் தையலவள் சுடர் வீசும் சுந்தர புருஷனுடன் ஜோடி சேர்ந்து நின்றாள் 'பொங்கல்' என்னும் இன்பவிழா தந்தாள் புதுநெல் அரிந்தெடுத்துப் பக்குவமாய் குற்றிப் புடைத்து குறுநெல் நீக்கி புதுப் பானை தனை அடுப்பேற்றி பால் பொங்க... அது கண்டு... மனம் துள்ள... பெண்டுடன் வண்டுறங்கும் புதுமலரில் பட்டுச் சிரிக்கும் சுடர் கதிரை உண்டி உண்ண, அண்டி வருகவென்று அருகழைத்து மண்டி நிற்கும் மகிழ்ச்சி தன்னைக் கொட்டி பொங்கல் உண்ணச் செய்யும் உழவரைக் கண்டு மகிழும் கதிரும் அவன் அருளால் மறையும் அவர்தம் வாழ்க்கைத் துயரும்! பொங்கும் நாளில் எங்கும் தங்கும் இன்பம் சுடரும் ஒளியில் சுட்டுப் பொசுங்கும் துன்பம் மலரும் மலரில் தெரியும் எங்கள் வாழ்க்கை அலறும் தீமை ஓடி மறையும் சேய்மை "ஆகா..." இதுவென்ன புதுமை என்று மனம் பாடும் கவிதை உலகமெல்லாம் தொழுது நிற்கும் அந்தச் சுந்தரக் கதிரை! ஆண்டாண்டாய் எதிர்பார்த்த அத்தனையும் புத்தாண்டாய்ப் பூத்திட்ட '97 இன் வசந்தத்தில் சுகந்தமாய் சுடர்கவென்று தொழுது நிற்போம் அந்தச் சுடர் ஒளியை தையென்ற தையலின் உயிர் போன்ற கதிரே நீ தானே எம்மவர்க்கு கதியே என இறைஞ்சி நிற்போம் இன்னருள்ச் சுடரை! சூழும் யுத்தத்தில் சாகும் உயிரை வாழும் உயிரென வரம் அருள்வாய் என வேண்டி நிற்போம் அந்த திங்களவனின் பள்ளித் தோழனை! செயற்கையின் கடைக்கண் பார்வையில் இழந்தோம் எங்கள் மனப் போர்வையை இயற்கையாய் வீசும் சுடரொளியே செயற்கையாய் பூசும் ஒவ்வொன்றையும் குப்பையாய் கொழுத்து எம்மை சந்தோச வெள்ளத்தில் அழுத்து! பகட்டாய் வெளியில் பல தெரியும் உள்ளத்தில் உருளுகின்ற சோகப் புயல் யாருக்குப் புரியும்? நாளை துவக்கோடு தான் பிள்ளை பிறக்கும் அது கண்டு ஒவ்வொருவர் மனமும் அதிர்ச்சியால் பிளக்கும்...! யுத்த காளான்கள் உலகில் முளைக்கின்றபோது வாழ்க்கை எப்படிச் சிறக்கும்? இன்னும் சொற்ப காலத்தில் மனித வாழ்க்கையே கசக்கும் கண்டு விட்ட கவலையை எந்த மனித மனம் மறக்கும்? கதிரே இனி உன்னையல்லோ தினம் தினம் துதிக்கும்! முக்கனியாய் மூன்று தமிழ் ஓங்கும் சர்க்கரையாய் சந்தோசம் உள்ளங்களில் தேங்கும் இளங்கரும்பாய் இன்னல் கூட மறைவிடத்தில் தங்கும் இன்பப் பாட்டினையே உயிர் பாடும் எங்கும்! இத்தனையும் வாய்க்கவே பொங்கல் பானை பொங்கும் பால் பொங்கும் வேகத்தில் இன்னல்கள் அழிந்து போகும் கோலங்கள் கண்களில் மின்னிடட்டும் இளவேனில் வண்டியேறி இளசுகள் காதல் பாட்டு பாடிடட்டும் நின்று பல ஆண்டு ஆண்டு விட்ட சோகம் மண்ணோடு மண்ணாய் மரித்து விடட்டும் கண்ணோடு கண் கவ்வி உயிரோடு உயிர் கலந்து ஜோடியோடு கூடி வாழும் யோகமான வாழ்க்கையொன்று வேகமாக மண்ணினில் நிலைத்திடட்டும் உலக உயிரனைத்தும் ஊற்றெடுக்கும் அன்பருவியில் மூழ்கி மூழ்கி இன்பம் மாந்தி மாந்தி எங்கும் நிலவிடட்டும் சாந்தி சாந்தி! பொங்குகின்ற பொங்கலிலே மனித நேயம் மலிந்து கிடக்கட்டும் எங்கள் மனங்களிலே சங்கெடுத்து எங்கும் முழங்கு... 'சண்டை' என்ற ஒன்றை உயிரினி அறியாதென இயம்பு! சமாதானமாய் வாழவே தீர்வுப் பொதி ஒன்று தீட்டி விட்டோம் - அதில் திட்டமாய் மூன்று தீர்வினையே குறித்து விட்டோம் ஒன்று அன்பு இரண்டு அன்பு மூன்று அன்பு...! எங்கும் அன்பு அன்பே வடிவம் சிவம் இனி அகிலமே அன்பின் வடிவம்...! உயிரே அதில் தெய்வம் ஒவ்வொன்றை ஒவ்வொன்றும் வணங்கும் சந்தோச வாழ்க்கையே அதிலிருந்து தொடங்கும்! பொங்கலோ... பொங்கல்... என ஒவ்வொருவர் வாயும் உச்சரிக்கும் அத்தனை இன்ப சாகரத்தில் மூழ்குவதால் எந்தன் மூச்சடைக்கும்! நிலவும் நிலவும் உலவும் உலகமொன்று புதிதாய்க் கருத்தரிக்கும் - அதில் புத்தொளி கூடி ஒவ்வொருவர் உயிரையும் ஆசீர்வதிக்கும்! போருக்கு ஒரு கல்லறை ஒவ்வொருவர் மனவறையிலும் கட்டப்படும் ஆகவே, செத்துவிட்ட போர்தன்னை உயிர் என்றென்றும் நினைக்காது சுகம் கொண்டு சுகித்திருக்கும்! பொங்குக பொங்கல் - அதில் ஓங்குக இன்பம் வளமான வாழ்வொன்று விரைவாக நீவீர் காண உளமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் எங்கும் தை... த... தை... தாளங்கள் சென்று வருகிறேன் அன்பாய் விடை கூறுங்கள்... தை, 1997 ------------------------------------------------------------------------ என்னை ஒவ்வொரு கவியரங்கிலும் அழைத்து உற்சாகப்படுத்தி கவிதை பாடச் செய்த செல்வி சிறிகுமாரி அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்... _/\_
 25. ஜம்மு (பேபி) உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... இன்பக் கூத்துக்கள் வருடத்தை சந்தோசமாக்கட்டும் .... ஈழ நிலா, ஆசை, ஆர்வம் என்ற எண்ணம் தான் பலதை இணைக்கச் சொல்லுது. தரமானவையா தெரியல... நீங்கள் சொல்லும் போது 'தரமா இருக்கலாமோ' என்று தோணுது.... என்றாலும் உங்கள் அன்பிற்கு நன்றிகள்.... உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....