kavi_ruban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  372
 • Joined

 • Last visited

Everything posted by kavi_ruban

 1. காதல் அவரவர் இஷ்டப்படி தான் விரும்பிய உருவமெடுப்பதால் காதலும் கடவுளே! வென்றவர்கள் ஆஹா... அற்புதம் என்றார்கள் தோற்றவர்கள் வெறும் கல்லென்று காறி உமிழ்ந்தார்கள்!
 2. நடந்து சென்ற 2007 நன்மை பயக்கவில்லை நாடி வந்த 2008 ஏ நன்மை பல கொண்டு வா! அழுகையும் அவலமும் அனுதினம் கேட்ட செவிகளுக்கு சிரிப்பும் மகிழ்ச்சியும் தினம் தினம் கொண்டு வா... நடந்த போர்களில் போன உயிர்கள் உடைந்த மனங்களுடன் ஓடிய மக்கள் கிடைத்ததை உண்டு ஏப்பம் விட்ட பரிதாபங்கள் அனைத்தும் அலையில் அகப்பட்ட துரும்பாய் ஓடி மறைந்திட ஓர் புது வழி சமைத்து வா! தாய் ஓர் இடம் தனயன் ஓர் இடம் வாழ்ந்திடல் தகுமா? ஊர் ஓர் இடம் உற்றார் உறவினர் ஓர் இடம் - நான் மட்டும் இங்கு வாழ்தல் முறையோ? பெற்றமும் கன்றும் பிரிந்து வாழ்ந்தால் பாசமும் அன்பும் தான் விளைவதெங்கே? சொல் வீரராய் இருப்பார் செயல் வீரராய் ஆவதெப்போ? உள் மனதில் உறங்கிய கனவுகள் உயிர் பெற்று வாழ்வது தப்போ? கல் மனத்தார், கொலைக்கஞ்சார் கணப்பொழுதும் வாழ்தல் ஏற்போ? சொந்த ஊரில் சொற்பமும் சுகமாய் வாழமுடியாத வாழ்க்கை சத்தோ? சிறுமையும் பெருமையும் இடம் ஒவ்வா இடத்தில் உரைத்திடல் தகுமோ? சென்ற ஆண்டு சேர்த்து வைத்த சோகங்கள் வந்த ஆண்டு நீ தீர்த்து வைத்தல் வேண்டும் வருங்காலத்தில் ஓர் வலது காலாய் நீ தடம் பதித்தல் வேண்டும் பின்னும் நீ சமாதான வீணைகளை மனங்கள் தோறும் மீட்டி வைத்தல் வேண்டும்! கன்னியரைக் கண்ணடித்து காதலித்து கரம்பிடித்து இன்ப வாழ்விடை இன்பங் காணல் வேண்டும்! 'சொந்தச் சகோதரர்' நாம் என்று சொர்க்கத்திற்கு இணையாய் ஓர் உலகு மண்ணில் நாம் சமைக்க வழி செய்ய வேண்டும் இன்னும் நீ என்னென்ன எமக்கு நன்மை பயக்குமோ அத்தனையும் சமைத்திடல் வேண்டும்!
 3. அற்புதம் தான் அத்தான் உன் கைவண்ணம் யாரடித்தோ அழுத நான் உன் கையணைப்பில் உலகு மறந்தது உனக்குத் தெரியாது!
 4. குருதி ஓடையும் பிண வாடையும் என் தேசத்து தெருக்களில்... உயிர் சுமந்து இருப்பதில் சில சுமந்து இடையில் குழந்தை சுமந்து நடையில் என் தேசத்து எல்லை கடக்கின்றனர் மக்கள்! என் மண்ணின் உயிர் ஆயிரமாயிரம் 'பூட்ஸ்' கால்களின் காலடியில் நசுங்குண்டு சுதந்திர தாகத்தோடு காத்திருக்கிறது! பலிகள் பல கொடுத்து நரிகளின் ஊளை கேட்டு பரிகளாகி மேனி விடைத்து அரிகளின் தேகத்தை 'ரவை' களால் கிழித்து கரிகாலன் கண்ணசைவில் பாய்கின்றனர் புலிகள்! இருந்தும் அரசு கட்டில் அமர்ந்திருக்கும் ஆந்தைகள் அலறும் ஒலி கேட்டு காது பொத்தி 'அடைத்த செவியினர்' ஆக வெளிநாடுகள்! படை மட்டும் நடாத்தி கிடைப்பதல்ல வெற்றி! சடை நிறைய ஈரோடு பேன் ஓடும் அரசியல் அரங்கமேறி உரை செய்தெம் ஞாயம் சரியென செவிகள் தோறும் சொல்லி மரை கழண்ட எம் நாட்டு அரசியல் வாதிகளின் செவிகள் திருகி ஞானம் தருவதே வெற்றி! நான் ஒரு கோழையாய் சில சேதிகள் சொன்னேன்! ஆனாலும் மறுபடியும் மனசுக்குள் கனவொன்று விரியும்... அது என் கடவுச் சீட்டில் என் நாடு 'தமிழீழம்' என்றிருப்பது! -------------------- புரட்டாதி 2007
 5. வெல்லலாம் பெண் மனதை என்று வெளிக்கிட்டால் வில்லெல்லாம் பழுது பார்த்து - எனைக் கொல்லலாம் என்று முடிவுகட்டி கொவ்வையிதழ் வெடிப்புக்களில் எனை வீழ்த்தி புருவ வில் வளைத்து பருவக் கணை தொடுத்து நிராயுதபாணியைக் கொல்கின்றீரம்மா! நிறுத்துங்கள் என்று ஒரு குரல் வரக் காணோம்... என்ன செய்குவேன்? வேறேதும் செய்யாது வேண்டாமிவள் என்று விரைந்து செல்லின் கனவுக் காட்சியில் முதல் காட்சி உன் மூச்சு வாங்கும் முன்னிரு எழில் தானடி... திடுக்கிட்டு விழித்தெழுந்து திரு திருவென முழித்து நாளை மீண்டும் போர்க்களம் போக முடிவெடுப்பேன்... நடப்பது நடக்கட்டும் அடிப்பவளே அணைப்பது தானே காதல்...!
 6. க.பி அக்கா நன்றி வந்து பின்னூட்டல் இட்டதற்கு...
 7. கெளிரிபாலன் வருகைக்கு நன்றி... வெண்ணிலா, என்ன தீட்டிய மரத்தில் கூர் பார்க்கலாமா? //ரூபனின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தில் முடியாமல் நல்லதாக அமமய வாழ்த்துக்கள். // உங்க கரிசனையை கடவுள் கணக்கில் எடுத்து ரூபனை காப்பாற்றுவார் என்று நம்புவோம்... (அவருக்கு வேற வேலை இல்லை?) அது சரி வெண்ணிலா தமிழில் ஏதேனும் சீர்திருத்தம் செய்திருக்கினமா? 'மை' யை 'மம' என்று எழுதலாம் என்று ? (கவனிக்க அமமய... ) வல்வைசாகரா(ம் வித்தியாசமான பேர் தான்...) நீங்கள் சொல்வது சரி ... சில விசயங்கள் ஏன் பிடிக்கிறது என்றே புரியாது... காதலி திட்டுவதைக் கூட சிலர் ஆகா... அற்புதம் ... என்று ரசிக்கும் போது வேறு சிலருக்கு என்ன அபத்தம் இது என்று தோன்றுவதும் உண்டல்லவா? கவிதை மலரைப் போல நேரத்திற்கு ஒரு அழகு காட்டவேணும்... ஆக வல்வைசாகரா ரசனை முக்கியம்... ஏன் என்பது அவசியமற்றது... (உங்க பேர் ரொம்ப பிடிக்குது... ஏன்? தெரியலையே... ) வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி... _/\_/\_
 8. நுநாவிலான்,காவலூர் கண்மணி நன்றிகள்.... ஜம்மு பேபி (நடிகைகள் வயது சொல்வது போல என்றும் பேபியா?) உங்க பட்டியல் எப்படி இருக்கும்? இப்படி இருக்கலாமோ? - புது சூப்பி போத்தல் - தினமும் சொக்கிலேட் - விளையாட ஒரு தம்பி/தங்கை பாப்பா வேணும் என்று அம்மாவிடம் வேண்டுகோள் - நிலா முதுகில் சவாரி (அட வான நிலா ...) அடிக்க வர முதல் நான் ஓடிடுறன்...
 9. வல்வை சாகரா(சரியாக எழுதியிருக்கிறேனே பெயரை?) வளமான வரிகளுக்கிடையில் சோகத்தையும் விடுதலை உணர்வையும் பிசைந்திருக்கிறீர்கள்... குறிப்பாக, // கூதலுக்குள் ஒடுங்கும் குருவிக் கூட்டம்போல - அன்று சுய தேவைகளுக்குள் ஒடுங்கிப்போனது என் சுதந்திரவேட்கை // ம்... சுடுகிறது இந்த வரிகள்...
 10. என்ன வெண்ணிலா பெரிய கவிதை என்றா தான் வாசிப்பீங்களா... ஜம்மு...எப்ப நடக்கிறதா உத்தேசம்..?
 11. மருமகன்(யாருக்கு என்று சொல்லவே இல்லையே...:-)), இன்னிசை கருத்திட்டதிற்கு நன்றிகள்... தொடர்ந்து சந்திப்பம்....
 12. காலக் கலண்டரில் ஒருநாள் கிழிக்கப்பட ஓராண்டு ஓடிப் போனது! வெளிநாட்டிலிருந்து வரும் அப்பாவை எதிர்பார்க்கும் குழந்தை போல நானும் புதுவருட எதிர்பார்புடன்... வழக்கப் போல "இந்த வருஷத்திலாவது செய்யவேண்டியவை" என ஒரு பட்டியல் ரெடி... கண்மடலில் காதல் எழுதி வருவாள் ஒரு வஞ்சி... நேர்த்திக்கடன் செய்தவைபோல மொட்டத்தலையோடு முணுமுணுக்கும் என்னூர் மரங்கள் துளிர்க்கும்... இரத்தத்தில் உடல் நனைந்து... வெட்க்கத்தில் முகம் மறைத்து... ஏக்கத்தில் வாடும் வெண்புறா... சிறகு கழுவி உலர்த்தும்... புண்பட்ட ஈழ மண்ணின் காயங்கள் ஆறும்! "Gun" இல் பூக்காது சமாதானம் "கண்"கள் திறக்கட்டும் இனியாதல்... உதட்டில் ரெடிமேட் புன்னகை வழக்கமான ஹலோ... என்ன இது நாமும் இயந்திரமாய் ஆகிப் போனோமா? வாருங்கள் தோழர்களே... போலிகளை களைவோம்... சபதம் செய்வோம் சத்துள்ள உலகம் செய்ய...!
 13. காதலன் : கண்ணே ஏர்போர்டில் நீ வந்திறங்கும் போது மாலை கொண்டு வந்து கழுத்திலே சூட்டுவேன் நான்... காதலி : என் ஆசை அத்தான் கழுத்திலே சூட்ட மாலை எதற்கு? உன்னிரு கையால் கழுத்தை வளைத்து என் இதழில் இங்கிதமாய் முத்தமொன்று வை அது போதும் எனக்கு! காதலன் : அது போதுமடி கண்ணே சொன்னதோடு சொல்லாத பலவும் செய்குவேன் நான் யாரும் அறியா வண்ணம்!
 14. அகலாத நம்பிக்கையோடு அகலமாய் ஆசை விரித்து நிற்பதேனம்மா? இதழில் தேன் ஊறும் கண்ணம்மா... விலகாத அன்பிருந்தால் இன்னும் விலகாத இருள் கிழித்து நிலவாக நீ வரலாம் ஒளி வெள்ளம் நாம் பெறலாம்! பல காலம் பழகியென்ன? அன்பு வெள்ளம் வடிவதுண்டோ? நிலாக் காலம் நீ மறந்திருக்கலாம் உனக்கு அது கனாக் காலம் போல் இருந்திருக்கலாம் விழாக் கோலம் வீடு தேடி வரும் விறாந்தை மேல் பல உறவு கூடி அமரும் விருந்து நடக்கும் அப்போது உனக்கு விசயம் புரியும்!
 15. எத்தனை பேர் உன்னைப் போல்... ஓரே தோற்றத்தில் ஏழு பேர் இருக்க வாய்ப்புண்டு சிந்தனையும் அப்படியே அமையுமா அடியேனுக்கு அறிவு போதாது... இந்த விடி காலையில் என்ன எழுத...? கவிதை எழுதும் மனநிலை இப்போது இல்லை "அட...ட... நீ எழுதுவதற்கு பெயர் கவிதையா?" என்று எதிர்க்கேள்வி கேட்டால் எப்படி? உனக்கு மட்டும் ரகசியமாய் ஒன்று... சும்மா ஏதோ கிறுக்குகிறேன் "ஆகா கவிதை..." என்று ஒத்துக் கொள்ளேன்... அட போங்கப்பா கவிதையும் கற்பனையும் "ம்... தம்பி அடக்கிவாசி நாம் பிழைக்க வேண்டாமா?" ஓம் அண்ணா அதுவும் சரி தான்...
 16. வ.ஐ.ச, இங்கே புதியவன் இவன். உங்கள் கவிதைகளை ஒழுங்காக படிக்கிறேனோ இல்லையோ, கவிதையின் இயல்பான நடை அழகு... இங்கே சில வார்த்தைகளை நேரடியாக சொன்னால் கொடி பிடிப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. நீ எப்படி அப்படிச் சொல்லலாம் என்கின்ற உணர்ச்சிப் பெருக்கில் எதிர் அம்பு விடுவர். கோயில் கோபுரங்களில் வெளிப்படையாக சிற்பங்களைச் செதுக்கி அழகு பார்ப்பவர்கள், அவை சொல்லவரும் பொருளில் முகம் சுளிப்பது கட்டாயம் நடக்கும். சில வேஷம்... சில ரசனைக் குறைவு ... அவ்வளவே... (தாழ்மையான கருத்து...) நன்றி...
 17. மிடுக்கும் சொல்லடுக்கும் சரி அடுக்கடுக்காக சொல்லம்பெறியும் புலமைச் செருக்கும் சரி நிலவை நின்று கொண்டே சுகம் விசாரிக்கும் கவிதைத் துடிப்பும் சரி எல்லாமிருந்தும் இவன் சொல்கிறான் ஏதுமறியாதவன் இவவென்று! (அடியேன் தன்னையே இப்படிச் சொல்வானா?)
 18. இவன் இப்படித்தான் கவன் இழுத்து கல்லெறிந்து கண்ணாடி உடைந்த பின் காலில் விழுந்து புலம்புவான் இவன் இப்படித்தான்...! சிவன் முன் போய் நின்று நக்கீரப் பரம்பரையின் கடைசி வாரிசு நானென இறுமாந்து சவால் விடுவான் இவன் இப்படித் தான்...! சரி விடு அண்ணா சண்டை வேண்டாம் பல வரி நான் தமிழன்னையின் சொல்லழகு காட்ட எழுதினால் ஒரு வரி பிடித்து தொங்குகின்றாயே... நம் முன்னோரின் வீர விளையாட்டு அது! நாம் தான் பரிணாம வளர்ச்சியின் உச்சியில் நின்று கொண்டு ஆறறிவு ஆணவத்தில் ஓரறிவு உயிரின் குணம் கூட அறியோம்! வீணே சீர் கெட்டுப் போனோம்... யாழில் வந்து சடுகுடு, கிட்டிப் புள், தாச்சி மறித்தல் ஏதேனும் விளையாடாமல் சொலோடு விளையாடுகிறோம் என்ன சின்னத் தனம் இது! (வீணான கற்பனைகளுக்கு இடம் கொடாதீர்... அடியேன் தன்னையே திட்டுவதாக அர்த்தம் கொள்க...)
 19. ஓ என் டைசன் என்ன கொடுமையடா இது? உனக்குக் கூட ஆங்கிலத்தில் பெயரா? பெயரில் என்ன இருக்கு என்று சும்மா குரைக்காதே... உன்னை அடையாளப்படுத்துகின்ற அவசிய முத்திரையடா அது...! கொஞ்சம் யோசித்துப் பார் நீ எப்படிக் குரைக்கின்றாய்? "வள்... வள்..." என்று தானே அது கூட தமிழ் என்று தானே நான் சந்தோசப் பட்டேன்... ஏனடா உன் எஜமானை கோபித்துக் கொள்ளவில்லை...? ஆனாலும் நீ கொடுத்து வைத்தவன்டா ஈழத்தெருக்களில் தானே உன் வாசம் இப்போதும்!
 20. அணைப்பேன் என்று தான் நீயும் சொல்கிறாய் எவ்வளவு நேரமாய் விளக்கு எரிகிறது... முதலில் அதை அணை பிறகு என்னை அணை இருட்டில் உனக்கு நானும் எனக்கு நீயும் துணை! (சேர்த்துப் படிக்காதீர்கள்... கடவுள் காக்க....)
 21. அட வெண்ணிலாவுக்கும் தட்டச்சில் தகராறு வருமா? வருதே..... (நீயூற்றனின் மூன்றாவது விதி நினைக்க... சும்மா ஒரு தமாசுக்கு தான்... சினம் தவிர்க்க...) கவிதையில் பொருள் மயக்கம் வருவது போல அடியேன் எண்ணம்....
 22. என்னுயிர் இங்கில்லை எழுந்து வாடி பெண்ணே - நீ தான் என் உள்ளத்தில் பூத்த முல்லை! மன்னுயிர் காக்கும் மன்னவன் போல் உன்னுயிர் காப்பேன் நான்... புதிதாய் பயிர் வளர்க்கும் விவசாயி போல் கெதியாய் எனக்குள் வளர்ந்த காதல் பயிர் தினம் தினம் நான் பார்க்கிறேன் வாடாமல் வதங்காமல் நான் வளர்க்கிறேன்! தனம் நீ மட்டும் என்னோடு இருந்தால் போதும் சினம் விடுகிறேன் சிகரெட்டும் தொடேன்! வரம் தாடி பெண்ணே சிவன் பக்கம் பார்வதி போல் - என் தனம் பக்கம் கவியிவனென வரம் தாடி இல்லையேல் இவன் வளர்க்கக்கூடும் பெருந் தாடி! உனக்குப் பிடித்தால் பிரன்ஞ் தாடி!
 23. அழகினை அணுஅணுவாய் அள்ளி ரசித்திட முனைந்தேன் கிள்ளி எறிந்தாள் தரையில் விழுந்த மீனாய் துள்ளி விழுந்தேன் பள்ளி கொள்ளும் பாவனையில் படுத்துறங்குவதாய் பாசாங்கு செய்தாள் கள்ளி - கன காலம் எனை ஏமாற்றிய பெருங் கள்ளி முள்ளுள்ள கள்ளிச் செடி பார்த்ததுண்டு அழகுள்ள கள்ளிச் செடி இங்கே கண்டேன் பாசமுள்ள நெஞ்சத்திற்கு மோசம் செய்யும் இவள் வேண்டாமென தள்ளியே நடக்கிறேன் பழைய நினைவையும் தள்ளியே நடக்கிறேன்!
 24. "வாய்விட்டு ஒருமுறை சிரிப்போம்" இதிலென்ன கஞ்சத் தனம்? யார் வீட்டு சங்கதியேனும் சந்திக்கு வந்தால் சீர்கெட்டுப் போனதப்பா அக்குடும்பமென கொடுப்புக்குள் சிரிப்பதுவும் வார்த்தையாலே வாள் சண்டை பிடிப்பதுவும் இருக்கட்டும்... "ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும் பழைய பழ மொழியை எத்தனை நாள் காவடி தூக்குவாய்? யோசித்துப் பார்... கேலிப் பேச்சுக்கு மட்டும் உதடுகளுக்கு சிரிக்கக் கற்றுக் கொடுத்தாய்! சிந்தனை மாற்றடா சந்தனக் காற்று மேனி தடுவுகையில் காற்றின் கைகளை தட்டிவிட்டு மெதுவாய் புன்னகை அப்படியே நிலைக் கண்ணாடியில் நின்றுன் மேனி ரசி எத்தனை அழகடா நீ புன்னகைக்கும் போது என உனை நீயே ரசி கொஞ்ச நாளில் மறப்பாய் கேலிச் சிரிப்பை புன்னகைக்க மட்டுமே உதடுகளுக்கு உத்தரவிடுவாய் ஒன்று தெரி்ந்து கொள் உன் உதடுகள் புன்னகைக்கும் போதெல்லாம் நீ அழகாவாய்... உன்னைப் பார்ப்பவனும் அழகாவான்... ஆக வீட்டுக்கு வரவேற்பறை போல மனிதனுக்குப் புன்னகை... ஆகவே தயங்காது இன்றே நீயும் புன்னகை...!
 25. என்ன வெண்ணிலா பிழைகள் என்று பன்மைப் படுத்தி இருக்கிறீர்கள்.... பல பிழையோ என்று நினைச்சன்.... ஒரு பிழை தானே....(யானைக்கும் அடி சறுக்குமாமே .... உண்மையா?) ------- ஜம்மு பேபி...(இன்னும் தொட்டிலிலா....?) நன்றி......