• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

kavi_ruban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  372
 • Joined

 • Last visited

Everything posted by kavi_ruban

 1. ஒலி வடிவம் ------------------------------------- நெஞ்சில் ஓர் மூலையில் ஏதோவொரு சோகம் எனை அணைக்கும் உடம்பு சோர்வின் கைப் பிள்ளையாகும்! மனசு விரக்தியின் விளிம்பில் தற்கொலை செய்யும் எதிர்காலம் கண்முன் விஷ்வரூபமெடுக்கும் தனிமையில் தத்தளித்து தாய் மடி தேடும் மனம் பொல்லாத கற்பனைகளால் இதயம் வெடிக்கும் தலை கோதி நெஞ்சில் முகம் சேர்த்து அணைக்க ஓருயிர் வாராதா என விழிகள் தேடும்! "எனக்கு மட்டும் ஏன் இப்படி" கண்முன் தெரியா கடவுளிடம் விசாரணை நடக்கும் கால் போனால் ஊன்றுகோல் மனசு உடைந்தால் என்ன உதவும் ? "நம்பிக்கை" என்ற பழகிப்போன பதிலில் சமாதானம் ஆகாமல் போலியாய் சிரிக்கும் உதடுகள்... விநாடிகளை விழுங்கி காலம் கன கதியில் பறக்கும்! சூரிய தேவன் இரதமேறி ஒளிக்கைகளால் பூமிப்பெண்ணை தொடுவான் மனசு இலேசாகிப் பஞ்சாகப் பறக்கும்! 'ம்..." புரியவில்லை தான் எனக்கும்! -------------------------------- 5-12-2007
 2. விலகுவது சுலபம் அப்பனே விந்தைச் செயல் ஏதும் இல்லை முந்தைக் கதையெல்லாம் முழுசாய் மற... பழசாய்ப் போன சங்கதி நமக்கெதற்கு? ஆளுக்காள் கல்லெறிந்து விளையாடி என்ன பயன்? கல்லெறிந்தால் காயம் ஆறும் - சுடு சொல்லறிந்தால் வடு மாறாது... கொடு உன் கையை முகத்தில் புன்னகை கீறு மெதுவாய் குலுக்கு சொன்னதற்கெல்லாம் வருத்தம் தெரிவு சொல்லாத கதையேதும் காதுக்கு வரின் நில்லாது ஓடிப் போய் உன் நிலை விளக்கு உன் மனசுக்குள் ஒளி வரும் பிறகேன் உனக்கு விளக்கு!
 3. ஒரு வார்த்தை சொல்லிடு என்று நீ கெஞ்சினாலும் கிட்ட வந்து கொஞ்சினாலும் கிஞ்சித்தும் நான் என் நிலை விட்டு இறங்கேன் உன் மேல் இரங்கேன்... கூட்டில் அடைத்தா உனை வளர்த்தேன் என்று கேள்வி கேட்கிறாயே பெண் கிளியே... உன் மனக் கூட்டில் ஏனடி எனை அடைக்கவில்லை என்று நான் கேட்பேனடி.... பறந்த திசை எங்கே என்று முழிக்காதே திறந்து கிடந்த இன்னொரு மனக் கூட்டில் மகிழ்ந்து நானே அடைபட்டேன் அறிவாய் நீ கிளியே!
 4. கவியும் அழகு கவி புனையும் கவியும் அழகு சுதியும் நயமும் நெளியும் நதி போல என் நெஞ்சில் பாயும் விரியும் கற்பனையில் தெரியும் பல காட்சி சரியும் பிழையும் தெரியா கவியொன்று பிறக்கும்! அரியும் அவனிடை தழுவும் உமையும் விழி மலர்த்தி கை உயர்த்தி ஆசீர்வதிப்பார்! நீயும் நானும் வெறும் பேனைகள் தமிழன்னை தன்னை நிரப்பி தன்னையே தாளில் எழுதுகிறாள் நானும் வந்து களத்தில் பிரதி செய்கிறேன் அவ்வளவே என் கவி!
 5. எனக்கும் ஒரு சின்ன லொள்ளுக் கவிதை எழுதிப் பார்க்க ஆசை வந்திட்டு (யாரேனும் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்தால் மன்னிக்க..... ) சும்மா கிறுக்கினேன்.... -------------------------------------------------------- அத்தான் இவ்வளவு ஆசையாய் என் கழுத்தைப் பார்கிறீர்களே அத்தனை அழகா என் கழுத்து? அதில்லை பெண்ணே கழுத்தை அலங்கரிக்கும் தங்கச் சங்கிலி எத்தனை பவுன் என்று இன்னும் புரியவில்லை...
 6. நிலா, நேசிப்பதற்கு எதற்கு யோசிக்க வேண்டும்? யாராவது அதீத சக்தி உடையவர்கள் (அட பாவி நம்ம சக்தியே என்னவென்று புரியவில்லை.... நீ வேற...) வெண்ணிலா இணைத்திருக்கிற படத்தில படுத்திருக்கிற இந்த அழகுப் பெண்ணை தொட்டு எழுப்புங்களேன்... (தொட்டு எழுப்ப ஏன் அதீத சக்தி ....?)எவ்வளவு அழகு ... ஆனாலும் ஒரு விசயம் படுத்திருக்கிற அழகு எழுந்தால் அதே அழகு இருக்குமோ தெரியாது... படுத்திருக்கும் போது இருக்கிற இயல்பு நிலை எழுந்தால் காணாமல் போய்விடும்.... (தென்னையை பற்றி எழுதச் சொன்னால் இவனொருத்தன் அதில் கட்டியிருக்கிற மாட்டைப் பற்றி எழுதிறானே.... ரொம்ப சுத்தம்....!) சும்மா சொல்லக் கூடாது படுத்திருக்கும் இந்த அழகுப் பெண் மிக அற்புதமான கவிதை.... (அதனால வெண்ணிலாவின் கவிதையை சரியாக அலச முடியல....மன்னிக்க....)
 7. வந்திடுவீர் என்றெண்ணி வாசல் படி நோக்கித் தவம் கிடந்தேன்! படலை திறக்கும் ஓசை கேட்டு மழலை போல துள்ளியெழுந்து வாசல் தாண்டி ஓடி வந்தேன் கையில் காகிதக் கட்டு தோளில் தொங்கும் துணிப் பை எல்லாம் பார்த்து ஆவலோடு உன் முகம் பார்த்தேன்... வழமையாக உதடு சுளிக்கும் உன் முகம் புன்னகையோடு...! மனசுக்குள் ஏதேதோ இன்பத் துடிப்புகள்... 'அப்பாடா...' இன்றாவது என் அத்தான் கோபம் தணிந்து மடல் வரைந்தாரே...!
 8. இவன் ஒரு சிவன் புலியாடை அணிந்தவன்! சூலம் சிவனது ஆயுதம் சுடுகலன் இவனது ஆயுதம் பூதகணங்கள் புடை சூழ வருபவன் சிவன் சேனைத் தலைவர்கள் தனைச் சூழ வருபவன் இவன்! நஞ்சுண்ட கண்டன் அவன் நஞ்சைக் கழுத்திலே கட்டிய வீரன் இவன்! சுடுகாடு சிவன் நடமாடும் வீடு பலநாடு இவன் புகழ்பாடும் பாரு! சிவன் பாத தொழ அறுபடும் பிறவித் தளை பிரபாகரன் பாதம் தொடர நமதாகும் நாளை விடுதலை!
 9. நக்கலென்ற பெரிய கல்லெறிந்து காயப்படுத்துகிறாய் என்று புலம்பியது கேட்டு பல முறை எனக்கு விக்கல் வந்தது விருந்துண்ணும் போது! நீ உன் புலம்பலில் சொன்ன சேதி பல என் சிந்தை கடைகின்றது... முந்தை ஒரு நாள் மணல் வீடு கட்டி விளையாடியதாய்ச் சொன்னாய்... சிந்தை குடைந்து நினைவு அலுமாரி எங்கும் தேடியும் ஏதும் கிடைக்கவில்லை அப்படி! சில சமயம் எனகெழுதும் வரிகளுக்கிடையில் ஏதேனும் தூது அனுப்புகின்றாயா வேறெவருக்கும்? சும்மா இப்படித்தான் ஏதேனும் கேட்பேன் மருண்டு போகாதே நீயும்!
 10. வெண்ணிலாவை செங்கம்பளம் விரித்து வரவேற்கின்ற அவசியம் ஏதேனும் உண்டா? நீலக் கம்பளம் விரித்து இயற்கை வரவேற்பதை விட அடியேன் பெரிதாக என்ன செய்துவிட முடியும்? நிம்மதி ஆளை நீங்குவதாலோ ஆளோடு கூட இருப்பதாலோ கிடைத்துவிடுமா என்ன? மனதுக்குள் சாந்தப் பன்னீர் தெளித்தால் கூட்டத்தில் கூட குட்டித் தூக்கம் போடலாம்... என்றாலும் வரவேற்பியா என்ற கேட்டபடியால் யாழ் களம் எங்கணும் போஸ்டர் அடிக்கலாம் என்று இருக்கிறேன்... செலவு மட்டும் உன் பொறுப்பு..!
 11. இறுதிக் காலம் வரை இடைவிடாது தொடரும் உறுதிமொழி ஏதும் தரமுடியாது என்னால்... சும்மா உதட்டளவில் உச்சரிக்கப்படும் உறவுகளில் எனக்கு உடன்பாடில்லை! உள்ளத்தில் கொப்பளிக்கும் அன்பருவியில் நீராடுகின்ற உற்சாகத்தை தருகின்ற உறவு முற்றுப்புள்ளி எதுவுமின்றி முடிவிலிக்கு அழைத்துச்செல்லும்! ஆகவே இறைவா.. என் உள்ளத்தில் என்றும் அன்புப் பூக்கள் பூத்துக் குலுங்கவிடு... அது போதும் உறவு தொடர...!
 12. கரம் கோர்க்க நான் வருவதானால் சிரம் தாழ்த்தி நீ ஒன்று கேட்கவேண்டும் பரம் பொருள் காலடியன்றி என் காலடி என்றும் தொழக்கூடாது...! ஏனெனில், கால் வாருகின்ற ஆசை உனக்கேதும் இருந்தால் அடியேன் பாவமன்றோ...!
 13. வெண்ணிலா, நீங்கள் மஞ்சத்தில் கொஞ்சி (கெஞ்சி) விளையாடுகிறீர்களோ இல்லையோ.... இங்க கருத்துச் சொல்லும் கன பேர் தங்கட ஆசைகளை சொல்லி விளையாடுகினம்... (களத்தில யாரும் கோவிக்கக்கூடாது... ) ஆனாலும் வெண்ணிலா நீங்கள் காலை வாரணும் என்று எழுதிறதெல்லாம் மகா தப்பு தான்...(பழங்காலத்தில பெண்கள் கணவன் காலில் ஏன் விழுந்தாங்க என்று இப்ப தானே விளங்குது... என்ன பாவம் என்றால் யாருக்கும் காலை வார சந்தர்ப்பம் கிடைக்கலப் போல....நீங்க என்றாலும் சாதிச்சுக் காட்டுவீங்க என்று நம்பிறன்.... பாவம் யார் அந்த அப்பாவியோ....?கடவுள் காக்க.... )
 14. ஆதி அருள் கிடைத்திடும் என்று எத்தனை நாள் காத்திருந்தேன் பாதி அருள் கூடக் கிடைக்கவில்லை இது வரை! என்றாலும் சோதி ஒரு நாள் என் வாசல் வரும் கூவி எனை அழைத்து புகழ் குன்றில் எனை ஏற்றிவிடும்...! காவிப் பல் தெரிய ஏளனமாய் சிரிக்காதீர் ஆதி தமிழின் செல்லப் பிள்ளை நான்!
 15. அவனாகட்டும் உன் காதல் வானம் - உன் செவ்விதழாகட்டும் அவன் பருகும் தடாகம்! மொட்டு அவிழட்டும் அவன் கைகள் பட்டு சொட்டுச் சொட்டாய் ஜீவன் உருகட்டும் கட்டு அவனை காதலில் கட்டு விட்டுப் பறக்காது இனி அவன் காமனின் சிட்டு! காட்டு உன்னழகை அவன் முன் காட்டு பார்த்து கண்கள் இமைக்காது பார்த்து எழுதுவான் பல பாட்டு! நிப்பாட்டு மின்சாரத்தை அவன் ஆழட்டும் உன் அழகின் சாரத்தை!!!
 16. என்ன வெண்ணிலா வெண்புறாவை உங்களிட்ட தந்தால் சூப் வைச்சு சாப்பிட மாட்டியள் என்று என்ன நிச்சயம்...? என்றாலும் ஆசைப் படுறியள் ... இந்தாங்கோ....
 17. காலம் யார் பற்றியும் கவலைப் படாமல் தன் சுழற்சியில் கவனமாய் இருக்கிறது. வருடம் தோறும் பல நூறு பண்டிகைகள் ஒவ்வொரு இனச் சமூகத்திற்கும் சொந்தமாக இருக்க... நம்மவரும் பல பண்டிகைகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது வழமை. தீபாவளி தமிழர் பண்டிகையா என்கின்ற வாதத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு அது தருகின்ற செய்தியோடு ஐக்கியம் ஆவது நன்மை பயக்கும். அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதை அழிக்கக் கூடிய வல்லமையோடு சக்தி ஒன்று தோன்றும். அதன் பின்னர் ஒளி மயமான வாழ்வு கிடைக்கும்... இன்றைய காலத்தில் தீபாவளி தருகின்ற செய்தி அர்த்தம் நிறைந்தது. ஏதேனும் ஒளி பிறக்குமா? எதிர்பார்ப்புடன்... இக்கவிதை... பாவம் படர்ந்த வாழ்வது தொலைந்த தீபாவளி! தீண்டும் துன்பமெல்லாம் பொசுங்கும் இனி! திரைகடல் மீதில் தீபம் விடுவோம் - அந்தத் திங்களவனை விருந்துக்கழைப்போம்! வீணை தீண்ட விரல்கள் என்போம் விசைகள் தீண்டும் விரலை அவிப்போம் பாசாங்கில்லாப் பெண்ணை மதிப்போம் பழகுவதற்கினிய அன்பை வளர்ப்போம் போருக்கு ஒரு போர்வை கொடுப்போம் வெள்ளைப் புறாவை எங்கும் பறக்கவிடுவோம்.
 18. தொடர்வதேனோ என்னை? நிமிர்ந்து பார்த்து நிலவைக் கேட்டேன்! தலை கவிழ்ந்து முகம் பார்த்துச் சொன்னது நிலவு... களவு போன என் உள்ளத்தை களவாடிய கள்வன் இவனா என அறியத் தொடர்ந்தேன்!
 19. காலை வந்தது காபி வந்தது நா இனிக்கவில்லை! சேதி கேட்டதும் உள்ளம் உடைந்தது யாருக்கும் புரியவில்லை! ஆதி முதல் தலைவன் கூட இருந்த ஒருவன் பாதி வழியில் போவான் என்று யார் அறிவான்? பாவி ஒருவன் செய்த செயல் ஆவி துடிக்க வைத்ததம்மா! சிரிக்கின்ற ஒரு புலி எரிகின்ற தீயில் வேகுதம்மா! தெரிகின்ற ஈழத்துவாசல் பார்க்குமுன் விரிகின்ற சிரிப்படக்கி பறந்தாயே செல்வா...! முதலில் ஒரு சிங்கம் போனது இப்போது ஒரு புலியும் போகுது வலியும் வஞ்சகமும் எம் ஈழப்பாதை எங்கும் விரிந்தே கிடக்குது! தமிழ்ச் செல்வா... வலிக்குது நெஞ்சம்... கோபத்தின் கொந்தளிப்பில் எரியுது உள்ளம்... ஏய்! பகையே அடாது செய்தாய் விடாது எம் வீரர் பகை! இன்னொரு பெரும் தோல்விக்காக காத்திரு! ------------- 03-11-2007 (படம் உபயம் : pathivu.com. நன்றி)
 20. துளி கண்ணீரும் கிடைக்காதே என்று கவி பாடும் கவியே களி கொண்டு துள்ள வேண்டாமா? கண்ணீர் இல்லாது சந்தோசப் பன்னீர் தெளிக்கும் காதல் வாழ்க்கை சத்தல்லோ? இதை மறந்தது தப்பல்லோ? பழி சொல்வதெந்தன் ஆசை இல்லை கிலி காட்டிக் கவி சொல்லல் என்ன நியாயம்? நீயும் நானும் வந்த கதை தெரியுமா? காதல் கொள்ளல் என்ன பாவமா? அன்னை அப்பன் காதல் நமை ஈன்றது! காதல் எனில் கடலை கொறித்து கடலலை ரசித்து கட்டழகை அணைப்பது மட்டுமா? சொந்தச் சோகத்தின் சுமை தாங்காது வந்த கோபத்தில் காதல் பழித்தீர் கூதல் வந்தால் தேடும் போர்வை போல் காதல் வந்தால் கைகள் கூடல் பாவமா? நயத்திற்காக கவி ரசத்திற்காக கவி செய்தால் எல்லாம் நிஜத்தில் எழுந்து நடக்குமா? பயம் தெளிக நயம் புரிக!
 21. உனக்காக தருவதற்கு என்னிடம் எதுவுமில்லை உன் நினைவுகளைத் தவிர... தனக்காக எதையும் சிந்திக்காது காதல்... நமக்காக என்ற சிக்கன வார்த்தையில் சிறைப்படுவதில் தனிச் சுகம்! உயிரையும் தருவேன் என்று உளறுவதெல்லாம் மகா கிறுக்கு! வாழ்கைப் புத்தகத்தை புரட்டும் போது கூடவே நானும் இருப்பேன் என்பதில் தான் சுகம் இருக்கு! வார்த்தைகளில் ஜாலம் காட்டிப் புரியவைப்பதில் இல்லை அன்பு!
 22. கஜந்தி, அதிகாலை தேநீர் கசக்கிறது என்றால் சில காரணங்கள் இருக்கலாம் - கசப்பு மருந்து ஏதேனும் தேநீரில் கலந்திருக்கலாம் - வாயில் ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம் (குறிப்பாக நாக்கில்... ) ஆகவே கவிஞர்களுடன் கலந்தாலோசிக்காமல் வைத்தியருடன் கலந்தாலோசியுங்கள்... சரியா?
 23. எப்படிப் புரியும் இவர்களுக்கு உனக்கும் எனக்குமிடையில் உருகாத மெழுகுவர்த்தியொன்று ஒளி தருவது...! எப்படிச் சரியும் இத் தேகம் உன் பஞ்சுத் தலையணை மீது பிஞ்சு விரல்கள் ஸ்பரிசம் தராமல்! எப்படி அறியும் இவ் உலகம் உனக்கும் எனக்குமிடையில் பொதுவான மொழி அன்பு என்பதை! எப்படி அறிவார் நம் பெற்றோர் நம்மிருவர் வாழ்விலும் நலம் வரும் என்பதை! உன் நலனில் நானும் என் நலனில் நீயும் மனசுக்குள் அழுகின்றவேளை நம் நலனில் நமையாளும் இறைவன் கை தரானா? தருவான் என்கின்ற நேர் சிந்தனையோடு மட்டும் வாழ்கின்றேன்!
 24. *னோனா நீ யார் வீட்டு மானோ? வீணே நீயும் ஏன் எனைத் தேடுகின்றாய்! யாரேனும் வந்து வழக்குப் போடுவர் கவனம்! உயிர் உருகும் சத்தம் உனக்கு மட்டும் கேட்டால் அது காதல்! களத்தில் வந்து கனபேர் காது கொடுத்துக் கேட்கினம் பார் இனி வரும் பல மோதல்! 'தயிர் கடையும் மத்தாக உயிர் கடைகின்றாள் என்னத்தை மகளென்று' கவிதை பல செய்தவன் நான்...! சோகம் சுமக்கும் சில கவிதை சொந்தக் கதை உரைக்குமடி! வேகமெடுக்கும் என் தமிழின் அழகில் எல்லாம் மறையும் காண்! பாவம் பல பேர் வந்து நம் கவிதைக் கோலம் கண்டு கொடுப்புக்குள் சிரிப்பார்! சாபம் ஏதும் இட வேண்டாம் சல சலத்து ஓடும் நம் கவி ஓடையில் நீந்தி மகிழட்டும் இவர்கள்! --------------------- குறிப்பு : *னோனா - சிங்கள வார்த்தை பெண், மனைவி ஏதேனும் பொருளில் வரலாம் (பொருள் தவறு இருப்பின் திருத்துங்கள்.)
 25. உன்னிடமிருந்து பெரிதாக ஏதேனும் நான் கேட்டேனா? மூன்று இரவில் மீண்டும் நீ வரும்போது அன்பிற்குச் சான்றாக தாஜ்மஹால் வேண்டாம் அல்வாவேனும் கொண்டுவருவியா என்று தானே கேட்டேன்?! கைக் காசு செலவழிக்க நீ விரும்பாது மழுப்பலாக கதை ஏதோ சொல்லிப் போவதென்ன? இரு இதயம் இதமாக கை குலுக்கும் போது அன்பளிப்புகள் அன்பிற்கு அடையாளமாகுமே! இரு விழி உருட்டி என்னைப் முறைக்காதே - நீ வரும் வழி நோக்கி விழித்திருப்பேன் நான்!