kavi_ruban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  372
 • Joined

 • Last visited

Everything posted by kavi_ruban

 1. வெண்ணிலா, ஜனனி மற்றும் இனியவள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்....
 2. வாழ்கவென வாழ்த்தியென்னை போகின்ற ஒளி நிலாவே... மறக்கின்றேன் காதலையென்று மற்றவர் அறியச் சொன்னாய் துறக்கின்றேன் கவிதையையென்று துறவறம் பேசி நின்றாய் அவஸ்தையானது காதலென்று நான் உரைத்தேன் காதல் ஆகாதது என்று எங்கேனும் நான் உரைத்தேனா? 'அழகிய' என்ற அடைமொழி கவனிக்க கன்னியே... சொல்லுகின்ற சொல்லுக்கு நேர் பொருள் நோக்கின் நேருகின்ற பெருந் தவறு உன்னாலே அறிந்தேன்! எழுதுகின்ற எழுத்துக்குள் எழுதாத பொருள் ஒன்று ஏங்கிக் தவிக்குமே ஏனடி மறந்தாய்! கட்டை விரல் மண் தேய்க கடைக் கண் எனைப் பார்க்க அறிந்தவர் சொல்வார் இதற்குப் பெயர் காதலென்று அறியாதவர் சொல்வார் அவளுக்கு ஏதோ வியாதியென்று! ஏதும் அறியாது ஏங்கித் தவிக்கின்றாய் போதும் விளையாட்டென்று விலகிப் போகின்றாய்! மண் மீது கொண்ட காதலை வானத்து நிலா என்றேனும் மறந்ததுண்டா...? ஒளி தர மறுத்ததுண்டா? கல் மனமடி பெண் மனம் காட்சி புரியாவிட்டால் கல் எறியும்! புரிந்து விட்டால் கற்கண்டு போல் கசிந்துருகும்!
 3. நீ எய்கின்ற கவிப் பூக்கள் நன்று நிமிடத்தில் பல கவிதை எனக்குள்ளே தோன்றதடி இன்று! பூ பூக்கின்ற மெல்லிய ஓசை செடி அறிந்திடும் பெண் மனசில் பூக்கின்ற காதலின் பாஷை அவள் கண்ணில் புரிந்திடும்! விழியாலே அழைப்பாள் விரதங்கள் உடைப்பாள் மெளன மொழி பேசுவாள் மயக்கத்தில் ஆழ்த்துவாள் முதல் ஸ்பரிசத்தில் இதயத்தில் சிறகு முளைக்கும் அவள் அருகிருந்தால் எல்லாமே அந்நியமாகும்! காதல் சொல்வது போல் அழகானதல்ல - அது அழகிய அவஸ்தையானது!
 4. //ரூபன் க்கு இப்ப எல்லாம் நக்கல் கூடிட்டு. வாறன் இருங்கோ // வெண்ணிலா எங்க வரப்போறியள்...
 5. விகடகவி, //கசக்கிய காகிதத்தைப் பார்த்து பேனா சிரிக்கிறது.. அதன்..மை முடிவது தெரியாமல். // கடைசியில் நல்ல முத்திரை வைத்திருக்கிறீர்கள்... வாழ்க்கையின் பாடமும் அதுவே தான்... சொல்லாமல் சொல்லும் உத்தி.... நல்லது... ஒரு சின்னச் சந்தேகம்... (உனக்குமா என்று கேட்காதீர்கள்..) //அமாவாசை இரவுகளில்.. அவளோடு புறப்பட்டால்.. நிலவை மறந்து விடுகிறேன்...// இதில் அமாவாசை இரவுகளில் என்று தொடங்கியிருக்கிறீர்கள்.... பெளர்ணமி இரவுகளில் என்று தொடங்கியிருந்தால் கன கச்சிதமாய் இருந்திருக்கும் போல் தோன்றுகிறது... பெளர்ணமி இரவில் தான் நிலாவின் அழகைப் பருகலாம்.... அவளோடு புறப்படுவதால் வானத்து நிலா எதற்கு என்ற சிந்தனையில் நிலாவை மறந்திருக்கலாம் என்று யோசிக்கலாம்.... (அது சரி வெண்ணிலா இல்லை தானே ;0) ) ஆனாலும் உங்கள் வரிகளை வைத்துக் கொண்டு படிக்கும் போதும் கருத்து சரியாக வருகிறது ... இல்லாத போது தானே நினைப்பு வரும்... இன்று அமாவாசை ...நிலா இருக்காது... அவளோடு நடப்பதால் அந்த நினைப்பை மறந்து விடுகிறேன் என்று கூட யோசிக்கலாம்... என்ன விகடகவி உங்கள் பெயரைப் போல எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒரு பொருள் வருகிறதே... கவிஞர்கள் எழுதும் போது யோசிக்காத கருத்தை வாசகன் இப்படி நினைந்து தான் கவிஞர் எழுதியிருக்கிறார் என்று கருதிக்கொள்வதுமுண்டு...! என் சந்தேகம் என்னவென்றால் இதில் நீங்கள் எதை யோசித்து எழுதினீர்கள்...? ஆரோக்கியமான கேள்வியாகக் கருதி பதில் சொல்லுங்கள்...
 6. நிலாவைப் பிடித்திடுவென்று நிலாவே சொல்லும் போது இன்னொரு கலாவை நான் நினைப்பேனா? கற்பனைத் தேரேறி கவிதை கூட எதுமா என் பேனா! பலாவை மொய்கின்ற ஈயாவேன்... மார்போடு உனை அணைத்து உனக்கொரு தாயாவேன்! இராவை இன்னும் கொஞ்சம் நீளச்செய் - இந்தப் புறாவை நான் இன்னும் முத்தமிட! நாம் காவியம் படைக்கவேண்டாம் கண்ணே நம் உறவு கண்டு பலர் இங்கே கவிகளாவார்! நாம் படைக்கின்ற காவியம் உன் வயிற்றில் வளரப்போகும் ஓவியம்! ஓயாமல் நான் வருவேன் கலங்காதே கண்ணே என் நெஞ்சில் சாயாமல் சாய்ந்திடு சல்லாபம் புரிந்திடு!
 7. தமிழா எனக்கொன்றும் புரியவில்லையடா... எங்கேயோ தொடங்கி பேச்சை வேறு திசையில் நகர்த்திப் போவதென்ன? நிலாவொன்று முகம் காட்டக் காத்திருக்க நின்று ரசிக்கக் கூட நேரமில்லையா? ஒன்றுக்கு இரண்டு வேலை ஓயாமல் "ஐ யாம் பிஸி" சேர்த்துச் சேர்த்து என்ன கண்டாய்? பால் போல பல நிலா இங்கே பவனி வருகையில் கால் மேல் கால் போட்டு கண்ணடிச்சு ரசிக்க வேண்டாமோ? வேல் எறியும் விழிகளுக்கு உன்னிதயம் காட்டவேண்டாமோ? கீல்ஸ் போட்டு நடக்கும் வெள்ளைக் காரி கதை விடு பார்க்காமல் பார்கின்ற நிலாவுக்காய் உயிரை விடு!
 8. வித்தை காட்ட விருப்பப்பட்டே நானும் இங்கே வந்தேன்! மெத்தை மீது தத்தை தவழ்கின்ற காலம் எப்போது வரும்? உலகுக்கு ஒளியூட்டும் வானத்து நிலாவே... மண்ணகத்தில் உலவுகின்ற பெண்ணவளின் உள்ளத்தை உளவு பார்த்துச் சொல்லாயோ? களவு போனதெந்தன் உள்ளம் மென்று நிலவு நீயும் சொல்லாயோ? அழகு நிலா ஓடி வந்து அருகில் அமர்ந்தால் போதும்... பங்கயக் கன்னம் வருடி என்கையில் முகத்தை ஏந்தி இதழிலே எழுதுவேன் பல கவிதை நான்! எழுத எழுத ஏதேதோ உளறுகிறேன் கள்ளுண்டு மயங்கலாம் கன்னியவள் இதழ் உண்டும் மயங்கலாம் கன்னித் தமிழ் அறிய அறிய மயங்கலாம் எதனால் நான் மயங்கினேன்? ஏன் இப்படி உளறினேன்? பெரியவர்(ன்) வந்து என் சிந்தை தெளிய வைப்பீர்(பான்) என்றெண்ணிப் போகிறேன் - மீண்டும் இங்கு ஏகுவேன்! மிடுக்காகப் பல கதை பேசுவேன்!
 9. முத்தங்களை நான் தருவேன் அர்த்தங்களை நீ புரிவாயா? வித்தகக் கவியிவன் விண்ணாளாவும் தமிழோடு விளையாடும் வெள்ளை நிலாவே கொள்ளையழகும் சின்னவிதழும் நான் சுவைப்பேன் சிணுங்காமல் சிறைப்பட்டு நீ கிடப்பாயா? பாஷை பல பேசி நேர முட்களை சோம்பலோடு நோக்குவதென்ன? ஆசை புரிய வைக்க அன்பால் சிறை வைக்க மீசை குற்றினாலும் மிடுக்காக நான் தரும் முத்தங்களே பல பாஷை பேசுமடி! பதிலாக நீ ஏதும் பேசாதே... சரியாகக் கணக்கிட்டு முத்தங்கங்களைத் திருப்பித் தருவாயா?
 10. கொஞ்சி விளையாடலாம் தான் அஞ்சி அஞ்சி நீ போனால் ஆவதெப்போது? பஞ்சி பார்க்காது பக்கத்தில் வாவேன் கஞ்சி குடித்தபடி கதைக்க பல கதை உண்டு! குஞ்சி பார்த்தால் குடும்பத்திற்கே தெரியவரும்... ஆதலால் யாரும் பார்க்காமல் என்னிடம் வா நீ! கை கோர்த்தபடி பொது மைதானத்தில் நடை பழக எனக்கு விருப்பமில்லை மெல்லிய இருட்டில் நட்சத்திர வானம் பார்த்தபடி நடப்பதெனில் கொள்ளைப் பிரியம்... என்ன ஒன்று கூடவே வெண்ணிலாவும் வரும்...
 11. ஒரு நாடு வேண்டும் அது எப்போது கிடைக்கும்? வெளியில் வந்து புன்னகைத்து பொது மேடைகளில் ஆசையாக இப்படிக் கேட்பதால் கிடைக்குமா? ஒன்று செய்யலாம் ஊரெல்லாம் வலம் வரும் வானத்து வெண்ணிலாவை உளவு பார்க்கச் சொல்லலாம்! ஏதேனும் சேதி கிட்டின் கேட்டுச் சொல்லுங்கள் கனக்க எழுத ஆசை தான் எனக்கும்... நேர முட்கள் எந்தன் கட்டைவிரல் உரசி அடுத்த வேலையின் அவசியம் உரைப்பதால் மீண்டொரு கணம் வருவேன் மெதுவாகப் பேசலாம்!
 12. சுடும் நினைவுகளுக்கு அந்தச் சூடு மாறாமல் கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்... ஜம்மு சிட்டுவேஸன் கவிதை ரசிக்க வைக்குது...
 13. நாமா ஐயா.. தமிழர் என்று கேட்ட விகடகவி கவி நன்று! நாமம் மட்டும் தமிழய்யா வேறென்ன சொல்ல ? வேட்டி கட்டினால் குளிருக்காகாது என்று வேட்டியை மறந்திருக்கலாம்... தமிழில் பேசினால் 'இங்க வந்தும் இங்கிலீஸ் தெரியாது போல' என்று சனம் புறு புறுப்பினம் என்று இங்கிலீஸில் பேசியிருக்கலாம் மற்றது அரகேற்றமெல்லாம் சும்மா வீட்டிலிருக்கிற சேலை நகையை காட்ட ஒரு இடம் வேண்டாமோ? இப்படித் தானய்யா எங்கட சனம் சும்மா வறட்டுக் கவுரத்தில அடையாளம் தொலைக்குதுகள்... வேறென்ன சொல்ல விகடகவி ஆனாலும் உம் கவி பிடிச்சிருக்கு!
 14. கண் மூடி உள் நினைக்க படம் போல உன் நினைவு விரியும்! தடம் மாறி பல மனம் மாறி அலைந்த என்னை உன்னோடு அணைத்துக் கொண்டாய் உள்ளத்தில் அமிர்தத்தை தெளித்துச் சென்றாய் வனம் போல் இந்த மனம் பல மிருகங்கள் அதில் நடமாடும் உன்னிரு கரம் பட்டதாலே அவை சாந்தமாகிச் சாதுக்களான விந்தையென்ன? உருவத்து அழகில் மயங்குவது சில மாதத்தில் முடியும் உள்ளத்து அழகில் வாழ்நாள் உள்ளளவும் மயங்கலாம் என்று உன்னாலே அறிந்தேன்! நில்லாத உயிர் நிலைக்காத வாழ்க்கை எல்லாமே புரிகிறது நீயில்லாத வாழ்வை நினைக்க நினைவெல்லாம் சுடுகிறது! திட்டுவது போல் பாசாங்கு செய்வதும் சற்றே என் முகம் வாடினால் 'என்னடா' என்றென்னைத் தழுவி அணைப்பதும் 'இன்னும் கொஞ்சம் திட்டேனடி' என்று ஏங்க வைக்குமே! சொல்லச் சொல்ல ஊறுதடி பல நினைவு உன்னை நினைத்திருக்கின்ற சுகம் பெரிது!
 15. இலக்கியன், மருமகன் (கன நாளா ஆளைக் காணலைப் போல....), கவரிமான் உங்கள் கருத்துகளுக்கு நன்றி... எல்லாம் ஒரு வகை சுகம் தானே....
 16. மாலைப் பொழுதுகள் தரும் மயக்கங்கள்...! வானச் சிவப்பை முகத்தில் பூசி தேனொழுக என்னென்னமோ பேசி உன்னிரு கண்ணாலே வலை வீசி எனைச் சிறைப்பிடிப்பாயே ஒரு கணம் யோசி அவ் பொழுதுகளை! விருப்பமாய் நானும் சிறைப்பட்டு கிறக்கமாய் கிடப்பேனே உன் மடி மெத்தை மீது! வருமா கண்ணே அந்தப் பொழுதுகள் மீண்டும்? சாபமா வேண்டி வந்தோம் தமிழனாய் பிறப்பதற்கு? திக்கெட்டும் சிதறினோம் எம் காதல் நினைந்து நெக்குருகி அழுகிறோம்! விலகுமா இருள்? விந்தைகள் ஏதும் நடக்குமா? கலங்காதிரு கண்ணே கரிகாலன் ஆட்சியில் ஈழம் விடியும் எம் பிள்ளை ஈழத் தெருக்களில் ஓடித் திரியும்!
 17. கடற்கரையில் நாம் நடந்த சுவடுகளை கடலலை அழிக்கும்! கண்ணே நீ என் இதயத்தில் நடந்த சுவடுகளை யாரழிப்பார்? *********** மனசுக்குள் மத்தாப்புக் கொளுத்தியவள்... மனசையே கொளுத்துவாள் என்று யார் அறிவார்? *********** வீணை அங்கே விரல்கள் இங்கே இராகத்தை மட்டும் ஏனடி திருடிக் கொண்டாய்? *********** என் இதயச் சுவற்றில் உன் ஞாபகச் சிலுவைகள்! எப்போதடி உயிர்த்தெழும்?
 18. பின்னூட்டல் இட்ட வல்வை மைந்தன்,ஜம்மு (பேபி ;-) மற்றும் க.பி அக்கா அனைவருக்கும் நன்றி... நாங்கள் எல்லாம் சுதந்திர விடாயுடன் உள்ளோம்... களத்தில் கையில் ஆயுதம் ஏந்திப் போராடாத கோழை நான்... இந்தக் களத்தில் கவிதையால் என்னால் இயன்ற பங்களிப்பை செய்யவேண்டும் என்ற அணில் பிள்ளை ஆசை ... அடுத்து ஒரு கவிதையோடு சந்திப்போம்...
 19. ஓயுதல் தீருமடா புதியதோர் ஒளி பிறக்குமடா! பாயுதல் இன்றிப் பதுங்கியிருந்த புலி பாய்ந்தே சீறுமடா! சீயத்தின் பிடறி கிழித்து விளையாடி காயங்கள் ஆற்றுமடா! சிங்கத்தை கொடியில் தாங்கியதால் வீரம் வருமோடா? அடே மோடா... பாடங்கள் இன்னும் பல இருக்கு படிக்க! கூட்டங்கள் பல கூடி கூவிப் பிதற்றி நின்றோரெல்லாம் ஓட்டங்கள் விடுவர் ஆட்டங்களின்றி தலைவன் போடும் திட்டங்கள் கண்டு திசையெங்கும் வியந்தே நிற்குமடா! பயந்தே நடுங்கிப் பகை யோடுமடா விரைந்தே எமக்கொரு தனி ஈழம் உருவாகுமடா!
 20. எதிர்பார்ப்பு ஏதுமில்லை எனக்குள் கண்ணே உன் கை விரல் பிடித்து நடப்பதுவும் கண்ணசைவில் காலங்கள் மறப்பதுவுமல்லால் வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லை எனக்குள்! புதிர்போல இவ்வாழ்க்கை முடிச்சுக்கள் அவிழ்கின்ற போது அர்த்தங்கள் புரியும்! எதிர்படும் இடர் எல்லாம் என் அருகில் நீ இருந்தால் விரைந்தே ஓடுமடி! கண்ணே கடைசிவரை காதலிப்போம் கட்டிலறைப் போர் தொடுப்போம்!
 21. ஜெனனி, உங்களிடம் நிறைய எதிர்பார்த்தேன் (கடன் ஏதோ கேட்டன் என்று நினைக்கப் போகினம்... ). நீங்க இப்படிச் சுருக்குவீங்க என்று நினைக்கல... ஆனாலும் குறை சொல்லும் படியாக இல்லை.... வாழ்த்துக்கள்...
 22. க.பி அக்கா உங்கள் கருத்துக்கு நன்றி. தாங்கள் ஆவன செய்யவேண்டிய சிலதை குறிப்பிட்டிருந்தேனே. உங்கள் எண்ணம் என்ன?
 23. பல நொடிகள் மறந்து போனால் என்னம்மா? காதல் இலக்கியத்தில் ஊடலுக்குமோர் இடம் உள்ளதம்மா! மோதல் கனிந்து காதலாகிக் கசிந்துருகுதல் காதலின் ஒர் நிலையம்மா! ஆடல் கலையின் தலைவன் சிவனும் விழி மூன்றும் சிவந்து சக்தியைக் கோபித்ததுவும் பின் தணிந்த கோபம் உடலில் சரிபாகம் தந்ததம்மா! விண்ணோடம் ஏறி விரைந்தே நீ போனாலும் உன் மனசில் சிறகடிக்குமே என் நினைவுப் பறவை! என் செய்வாயோ? பாவம் நீ யம்மா!