kavi_ruban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  372
 • Joined

 • Last visited

Everything posted by kavi_ruban

 1. பின் வந்து கருத்திட்டவர்கள் அனைவருக்கும் நன்றிகள். குறிப்பாக: அரவிந்தன் ஜெனனி குமாரசாமி ஈழவன் சுகன் மீண்டும் இன்னொரு முறை சந்திக்கும் வரை... _/\_/\_
 2. இருப்போமா என்று கேட்டாய் வெண்ணிலா... கசக்குமா கரும்பு தின்ன? வெறுக்குமா நிலா ஒளியில் மேனி நனைய? பலாச் சுளையில் பதுங்கியிருக்கும் இனிப்பாக இனிக்குமே நம் வாழ்க்கை! எதுகைக்கு மோனை தேடும் இவன் கவிதையில் கன அர்த்தம் உள்ளதென்று வெள்ளை நிலா எண்ணுமாயின் அரச மர நிழலில் வீற்றிருக்கும் என்னப்பன் விநாயகன் முன் கற்பூரமணைத்து சத்தியம் செய்வேன் அப்படி எதுவுமில்லையென்று! சொன்ன கதையெல்லாம் நம்புவாயா நீ? அம்புகள் விடும் உன் விழி என்று பல அடுக்கடுக்காய் கவிதையில் புழுகுவேன் நான்! ஒரு வித மயக்கத்தில் எல்லாம் கடந்து போகும் வேறேதும் எண்ணாதே நிலா எழுத எழுத வந்து விழும் தமிழ் சொல் மயக்கத்தால் வந்த வினை காண்!
 3. வணக்கம் யாழ் கள நண்பர்களே/உறவுகளே, களத்தில் யார் என்று தெரியாத என்னை இந்த காலக் கண்ணாடி 'இவன் தான் அவன்' என்ற விதத்தில் அங்கீகரித்துவிட்டது. மனசுக்குள் இருந்து நிஜமான நன்றி உணர்வு தோன்றுகின்றது. 'நன்றி' என்று ஒரு வார்த்தையில் சொன்னால் முழுமையடையுமா? இந்த உணர்வை கள உறவுகளிடம் பரிமாறிக்கொண்டு... இந்தக் களத்தில், இது வரை பார்த்த வகையில் தம் கருத்துக்களை முன் வைத்த, ஜம்மு பேபி (எங்கிருந்தாலும் ஓடி வந்து கருத்துச் சொல்லும் அன்புக் குரியவர்...) ---------------------------------------------------------------------------- வெண்ணிலா (கண்ணில் என்ன கவிதையா?) ---------------------------------------------------------------------------- நெடுக்காலபோவான் (குறுக்கால போவான் என்ற போடாமல் விட்டீர்களே ;-)) ---------------------------------------------------------------------------- புத்தன் (கையெடுத்து கும்பிடவேண்டியவர், இலங்கை நிலவரம் வெறுப்பேத்துது...பிக்குகள் கனவில வரக் கூடாதா?) ---------------------------------------------------------------------------- கெளரிபாலன் (இந்தப் பேரில் எனக்கு ஒரு மயக்கம் உண்டு... ) ---------------------------------------------------------------------------- இனியவள் (எழுத்துப் பிழைவிடுபவர்களில் தானும் ஒருத்தி என்று ஒத்துக் கொள்ள பெரிய மனசு வேணும்... கவலை வேண்டாம் தமிழன்னை மன்னிப்பாள்... ஒரு சின்ன வீட்டுப் பாடம் இனியவள். "இனியவள் இனி எழுத்துப் பிழை விடமாட்டாள்" என்று நூறு முறை எழுதலாம்... ;-) ) ---------------------------------------------------------------------------- வலைஞன் (வலை கடலில் - இணையத்தில் - வலை வீசுவதால் வலைஞனா? ஒலி வாங்கிக்கு சளி பிடித்துவிட்டது... ;-) நேரமின்மை காரணமாக நேர்ந்த பிழை மன்னிக்க.... ஓம் மறந்துவிட்டன் அடுத்த வார காலக்கண்ணாடியை தொகுத்து வழங்க முறைப்படி கீழே அழைப்பு விடுக்கப்படும்... ) ---------------------------------------------------------------------------- ஈழப்பிரியன் (ம்...நாமும் தான்...) ---------------------------------------------------------------------------- வல்வை மைந்தன் (என்னை காலக் கண்ணாடி செய்ய முன் மொழிந்தவர்.... ) ---------------------------------------------------------------------------- கந்தப்பு (என்ன அப்பு நீங்க பார்க்க முடியல என்று சொன்னபோது டங்டஸ் சொன்னது போல என்ன கொடுமை சார் என்று தான் சொல்ல நினைத்தேன்...;-) கடைசியில ஒரு மாதிரிப் பார்த்திட்டீங்க... எப்படியப்பு பார்த்தியள்... நீங்க போட்டிருக்கிற Avator படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...) ---------------------------------------------------------------------------- டங்டஸ் (பேரை சரியா எழுதியிருக்கிறனா? ...) ---------------------------------------------------------------------------- ஆதிவாசி (ஆதிவாசி உங்களை எப்படி களத்தில விட்டவை? கவி ரூபனை விடும்போது என்னை விடமாட்டினமா என்று கேட்பீங்க... எதுக்கு வம்பு.... ;0) ) ---------------------------------------------------------------------------- மேல் குறிப்பிட்ட அத்தனை உறவுகளுக்கும் என் நன்றிகள்... /-------------முக்கிய அறிவித்தல் ------------------ / இந்த வாரத்திற்கான காலக்கண்ணாடியை தொகுத்து வழங்க நாம் உத்தியோகபூர்வமாக அழைப்பது.... ......................................ஜனனி.............................. .. ஜனனி அடுத்தவாரத்தில் கலக்குங்க.... வாழ்த்துக்கள்...
 4. வணக்கம் யாழ் கள உறவுகளே, யாரடா இவன் என்ற கோதாவில் ஏன் பார்க்கிறீர்கள்? எங்கையாவது களத்தில கண்டிருப்பியள்.;-) இந்த வாரத்திற்கிற்கான (20-08-08 - 26-08-08) காலக் கண்ணாடியை அடியேன் தான் தொகுத்து வழங்கிறன் (அறிவிப்பு ஒன்றும் வந்த மாதிரியே தெரியல.... ம்... எங்க தலையெழுத்து என்று சலிப்பது புரிகிறது...) ஒன்றும் பெரிசா வித்தியாசம் செய்யல... என்னால முடிந்த வகையில் .... கீழுள்ள வீடியோ தோன்றமறுத்தால் இங்கே அழுத்தவும் : http://video.google.com/videoplay?docid=-4...15774&hl=en தவறுக்கு வருந்துகிறேன். ஒரிடத்தில் வலைஞன் என்பதற்குப் பதிலாக கலைஞன் என்று பதிவாகிவிட்டது.(ஒரெழுத்துதான
 5. வாழ்கின்றேன் என்று தான் சொல்கிறாய் நீயும் உண்மையில் வாழ்தல் என்றால் என்ன? சூரியனுக்குப் பின் எழுந்து பல் துலக்கி தேநீர் தயாரித்து குடித்து முடிய கணினியின் உயிர் பொத்தான் அழுத்தி இணையத்தில் கொஞ்சம் நடந்து திரிந்து நாலைந்து தொ(ல்)லை பேசி நேரம் கரைத்து மதியம் ஏதேனும் சமைத்துப் புசித்து குட்டித் தூக்கத்தில் தேகக் களைப்பகற்றி மீண்டும் கணினி,இணையம் இரவுணவு என்று அதே பழைய பல்லவி பாடி நீயும் சொல்கிறாய் வாழ்கின்றேன் என்று! என்ன இது காலத்தின் கை பிடித்து நடை பழகாமல் என் விதி இதுவென மண்வாரித் தூற்றி சந்தோசம் தொலைக்கின்றாய்! நான் சொன்னது கேட்டாய் சொல்லாத சேதி எல்லாம் உய்த்தறிந்து சொல்லாததும் புரிவாய்! உலக இயக்கம் இம்மியும் நிற்காது விலகி நிற்பதால் விந்தைகள் நடக்காது விம்மி நீ அழுதால் கையொன்று நீளவேண்டும் உனை நோக்கியும்! தொட்டுத் துடைக்க கையொன்று நீளும்மெனின் பொய்கை போல் நீர் கொண்டு கண்கள் அழுவதில் கூட சுகமுண்டு!
 6. புரியும் சமாதானங்கள் என்று ஒதுங்கி நின்றோம்! எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பதன்றி எதுவும் புரியவில்லை அந்த மடையருக்கு! அரியும் புலியும் மோதினால் ஓட்டமிடும் அரியும் தெரியும் நீல வானம் அண்ணாந்து பார் விரியும் வானவில்லில் தெரியும் புலியின் வரியும்! சிரியும் ஐயா சிரிசேன ஐயாக்களால் சரிசமன் எமக்கு என்றும் வராது போலியாய் நெற்றியில் பட்டையிடும் பக்தன் போல் காவிப் பல் தெரிய இவா்கள் சமாதான வேதம் ஓதுவது ஒன்றும் புதிதி்ல்லை! வேலியாய் நாம் தான் இருக்கவேணும் ஐயா! ஆளிக் கடலலை மேவி விரியும் வானத்தில் நீந்தி வரிசையாய் புலிப்படை நடத்தும் அண்ணன் வீரத்தால் பரிசாய் கிடைக்கும் எமக்கு ஈழம்!
 7. வீழமாட்டோம் அண்ணன் சொல் மீறமாட்டோம் காலனாவோம் கரிகாலன் ஆணையேற்று சிங்களஞ் சேனை முடித்து வெற்றி வீரனாவோம்! மங்களம் பாடவேணும் மற புலி வீரம் காணவேணும் அங்கிள் அன்ரி எல்லாம் கைசேருங்கோ எம் தேசத்தின் கங்குல் விடியும் கோலம் பாருங்கோ!
 8. தான் எனும் தன்மை கூடி மனிதம் வீண் எனும் எண்ணம் தோன்றுதம்மா! வானென விரிந்துகிடந்த மனித மனம் - ஒரு சாணென சுருங்கியதும் ஏனம்மா? வாடிய பயிர் கண்டபோதெல்லாம் உருகிய வள்ளளார் காட்டிய வழி மறந்தான் தமிழன் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று உலக சொந்தம் பேசியவன் தமிழன் எழுதியதெல்லாம் ஏட்டிலே தூங்கிவிட புழுதி படிந்த மனங்களுடன் நடக்கின்றான் மனிதன் வேறென்ன சொல்ல அவன் மரந்தான்!
 9. துடைத்து வைத்த கண்ணாடி போல இருந்ததடி என் உள்ளம்! இப்போதெல்லாம் அதில் தெரிகின்றதடி உன் விம்பம்! சலனம் இன்றிப் பயணித்தவன் நான் என்னுள்ளே நீ வந்தபின் உன் பெயரை மனனம் செய்யப் பழகிக் கொண்டவன் மரணம் வரும் எப்போதோ நானறியேன் அதுவரை சரணம் என்றுன்னை அணைப்பேன் ஊரெல்லாம் ஏதேதோ கதைக்க நீயும் நானும் வாய்மூடி மெளனிகளாவோம் உன் மனம் நானறிய என் மனம் நீயறிய உதவாத கதையெல்லாம் எமக்கெதற்கு? சிந்தை சிதறாது காதலி முந்தை வினையெல்லாம் கூடி எம்மை அலைக்கழிக்கும் பந்தை பக்குவமாய் வெட்டி விளையாடும் கால்பந்து வீரனாவோம்! விந்தை எதுவுமின்றி விரண்டோடும் வினையெல்லாம்! கற்கண்டு இதழ் அங்கிருக்க கண்ணே நான் இங்கிருக்க எப்போது தமிழ்ச் சொற்கொண்டு விளையாடி உன்மேல் தள்ளாடி விழுவது? என்னப்பன் விநாயகன் மனசு வைக்கவேணும் தன் தம்பிக்கு உதவியது போல்!
 10. இருளுக்குள் தவித்துக் கொண்டும் பொல்லாத நினைவில் என்னைத் தொலைத்துக் கொண்டும் எத்தனை காலம் இருப்பேனடா கண்ணா? உலகுக்குள் உண்மையில்லை மயங்கி மயங்கி அலைபாய்கின்ற மனசினால் நிம்மதியொன்றில்லை சிலைகளுக்குப் பின்னால் கடவுளைத் தேடியும் சேலைகளுக்குப் பின்னால் பெண்மையைத் தேடியும் புரிந்து கொண்டது எதுவுமில்லை! நான், அவள் சல்லாபிகின்ற எல்லாம் ஐம்பூதச் சேர்கையின்றி வேறெதுவுமில்லையெனும் ஞானம் கூடவில்லை வீணாகக் கரைகின்றது காலம் கோலங்கள் பல வரையும் ஆசை மீன்கள் மனசுக்குள் ஓடித் திரிந்தாலும் சோம்பித் திரிகிறேன் சோகமடா எல்லாம்! கண்ணா அண்ணாந்து பார்த்து அரோகரா எனக் கோஷம் போடும் சராசரி மானிடனாக என்னையும் ஆக்காதே விண்ணெல்லாம் தொட்டு விண்மீன் அளைந்து விளையாடும் நீல மேனி வண்ணா வாய் திறந்து நான் சொன்னால் தான் என் மனம் புரிவாயோ? காலமெலாம் உனை மனதில் ஏந்தி உற்ற தோழானாக்கி உறவு கொண்டேனே மீதமெல்லாம் நான் சொல்லவும் வேண்டுமோ? மங்களங்கள் தருவாய் என் ஈழ மண்ணின் விடுதலை தருவாய் கோல விளிப் பாவையர் அழகில் லயித்து கட்டற்ற கவி செய்யும் புலமை தருவாய்!!!
 11. பயணி கஜனி முகமது போல் எத்தனை முறை வேண்டுமெனினும் பயணி கோட்டை உனக்குத் தான்! வீணே சயனித்திருப்பதிலும் 'விசர்'க் கதை பேசி சாதாரண நரனாய் நீ இருப்பதிலும் என்ன பயன்? நடந்தால் தான் நதி நுரை கக்கினாலும் கரை தொட்டால் தான் கடல் குறை இருந்தாலும் உனக்குள் நம்பிக்கை நிரப்பி கறை யளித்து பிறையென வளந்து முழு நிலவாய் ஒளி கொடுத்தால் தான் நீ மனிதன்!
 12. தேடுகின்றாய் நீயும் எனக்குள் உறங்கும் இன்னொருவனை... சூடுகின்ற மலரிலும் சுந்தரத் தமிழிலும் பாடுகின்ற பட்சியின் குரல் விநோதத்திலும் என் வாசம் கலந்திருக்கும்! காது திருப்பி மெய் சிலிர்த்து மனசுக்குள் உள்வாங்கு வடிவாய் விஷ்வரூபமாவேன்! நண்பனாய் நான் சிரிப்பேன் நல்ல உள்ளதோடு உனை அணைப்பேன்! கண்களை மூடி நீ தூங்கு கண்டறியாத உலகம் காறியுமிழும் விடு... விழி மூடி தியானி வழி காட்டாத உலக செய்கை உனக்கேன் பயணி!!!
 13. தவிக்கின்றேன் மெத்தை மேல் நான் அத்தை பெத்த அருமை அத்தானே அங்கங்கே தொடுகின்றாய் அங்கங்கள் வலிக்காமல்... இதழில் இளைப்பாற வேண்டுமென்கிறாய் - என் நுதலில் இதழ் ஒத்தடம் தருகின்றாய் மஞ்சமென என் நெஞ்சில் தலைசாய்கின்றாய் கொஞ்சமோ நீ செய்யும் கூத்து...? இன்னும் இன்னும் வேண்டுமென கெஞ்ச வைக்கின்றாய் நொடிக்கொரு முறை சொர்க்கத்தில் தூங்கவைக்கின்றாய் எல்லாம் சொர்பனமாய் தோன்றுதடா கண்விழிக்க நிஜத்தில் எப்போதடா புரிவாய் எல்லாம்?
 14. வழி என்னவென்று கேட்டு விழி மூடும் பாவாய் கவி நான் வரைய கருவாக நீயே ஆவாய் கரையும் சில திங்கள் காத்திருக்கப் புரியும் என்னுள்ளம் புரிந்துவிட்டால் சொர்க்கம் உனதில்லம்! சுந்தரியே புரிவாயா? புரிந்து பின் என்மேல் கருணை மழை பொலிவாயா? மந்திரியாய் நீயாவாய் மன்னனாக நானாவேன் நீதிகள் எனக்குச் சொல்வாய் நிறைவாக அமையுமடி எம்மரசு!
 15. ஆடித் திங்கள் பதினொராம் நாள் கூடி வரும் நல்ல நேரத்தில் ஜோடி ஒன்று சேருது இல்லறத்தில் பாடி வாழ்த்துகின்றேன் நான் தன்னந்தனியாய் பறந்த ஒரு சோடிப் புறா ஜோடியாக இனிப் பறக்கட்டும் பூங்கொத்தொன்று பரிசளிக்கும் வழியறியேன் நான் என் அன்னை தமிழ் கொண்டு செய்த 'பா' வொன்று பரிசளித்தேன் பெற்றுக் கொள்க! ----------------------------------------------------------------- குறிப்பு : கலைஞன் மன்னிக்கவும். காலம் கடந்து போனதற்கு. -----------------------------------------------------------------
 16. இது என்ன உங்கள் மனக் குப்பைகளை இறக்கி வைக்கும் இடமா? மல்லாந்து படுத்து காறி உமிழ்கின்றீர் மள மளவென்று கருத்து மூட்டைகளை அவிழ்கின்றீர் சிலர் இங்கு வந்து சில்லறைச் சண்டைகள் செய்கின்றார் சிந்திக்க மறக்கின்றீர் கணினிச் சாளரம் திறந்து கன சனம் பார்க்குதய்யா! ஆகவே கருத்துக்களில் கொஞ்சம் கரிசனம் சேரும் இல்லையெனில் வந்தசனம் சோரும்! பெண், காதல் இவைகடந்து ஏன் உங்கள் கற்பனைக் குதிரைகள் பயணிக்கவில்லை! சுற்றி சொல்ல பல சேதி இருக்கு சும்மா சுழன்று நானும் எழுதுவன் கவிதையென்று காதலாகிக் கசிந்துருகாமல் பாடுபொருள் மாற்றும் பல முத்தான கவிதைகள் பிறக்கட்டும்!!!
 17. எப்போது கண்ணே என் தேசம் விடியும்? கடிகார முள் சுற்றுகிறதே தவிர எம் வாழ்க்கை இன்னும் சூனியமாய்... சுழன்றடித்த காற்றில் பறந்து போன சருகுகள் போல ஆளுக்கு ஒரு பக்கம்! இன்று வரும் நாளை வரும் என்று சொன்னாலும் என்று வரும் என்று தெரியாததால் எம் நம்பிக்கையின் நாடித் துடிப்பும் தளர்கிறது கண்ணே முற்றத்து மண்ணில் பாயின்றிப் படுத்தாலும் பயங்கரமாய் தூக்கம் வருமே... குமுறி அழுகின்றேனடி குங்குமப் பூக் கன்னம் தடவி... குவிகின்ற இதழ் தொட்டு முத்தமிட துடிக்கின்றதே என் மனது நடக்குமாடி கண்ணே? அடுக்குமாடியில் குடியிருந்து அங்கேயும் இங்கேயும் விழியசைந்தாலும் ஓரு மையத்தில் வட்டமிடுதே நினைவெல்லாம் உற்றுப் பார்த்தால் அது நீயும் என் தேசமும்!
 18. இருட்டுக்குள் இருப்பதாக சொல்பவர்களே ஒரு விளக்கேற்றும் அறிவில்லையா? அறிவு இருட்டுக்குள் இருக்குமெனின் சிந்தனைத் திரிதூண்டியை திருகுங்கள் அடுத்தவரின் அனுதாபத்திற்காக ஏங்கின்றீர்கள் வேண்டாமே... இந்தச் சமூகம் வேதனைப்படும் போதும் வேர்வை வடிக்கும் போதும் வேடிக்கை பார்பதோடு சரி தொட்டு அணைத்து தோளில் சாய்த்து ஆறுதல் தராது அறிவுரைகள் தருவதில் என்ன பயன்? வேண்டாம் வெங்காயமும் இந்த வேடிக்கைச் சமூகமும்!
 19. புரிந்து கொள்ளாக் கவிதை உன் புன்னகை!
 20. சகோதரி, // யாரோடும் சொல்ல முடியாச் சோகங்கள் எம் முரண்பாட்டால் நாளைய முதியோர் இல்லத்திற்காய் தயார்ராகின்றது // ஏற்கனவே முதியோர் இல்லங்களை நோக்கி இந்த முரண்பாடு நகர்ந்துவிட்டது... இந்த வெள்ளைக் காரனும் அன்னையர் தினம், தந்தையர் தினம், அந்தத் தினம் இந்தத் தினம் என்று அறிவிச்சது வேறெதற்கு? ஒரு நாள் சரி நினைப்பம் என்ற அடிப்படைச் சிந்தாந்தம் தான்.... எங்கட சனமும் காட் அனுப்புது... பரிசு அனுப்புது... "Wish u happy father's / mother's day" என்ற கோஷம் வேற... இதில என்ன சந்தோசம் இருக்கோ எனக்கு விளங்கல... நாங்கள் எப்பவும் பின்பற்றுபவர்களாக தானே இருக்க விரும்புகிறோம்... உனக்கு ஒரு நாள் என்று பிரிப்பது எல்லாம் பேத்தல்... உறவுகளின் அருமை எல்லா நாளிலும் சிறு மணித்துளியாவது கொண்டாடப்படணும்... (விரும்பியவர்கள் லீவு போட்டு கொண்டாடுங்கள் ... அது உங்க செளகரியம்.... ்-) ) என்னமோ போங்கள்.... என்னடா இவன் என்னோட முரண்படுறான் என்று யோசிக்காதீங்க... ஒரு விசயம் சொல்லட்டா... (சரி ...சரி சொல்லு... நீ சொல்லுறதை கேட்கணும் என்று தலைவிதி.... ) முரண்பாடுகள் இல்லாட்டி வாழ்கையின் உயிர்ப்பு இல்லாமல் போயிடும்... சின்ன சின்ன முரண்பாடுகள் வாழ்க்கையை அழகாக்கும்... ஆனால் என்ன முரண்பாடுகள் முள்ளாக குற்றாமல் ... குற்றியவுடன் ஒத்தடம் தருகின்ற உதடுகளாக இருக்கவேண்டும் என்பது தான் என் கருத்து .... (ம் ஏதோ கருத்து சொல்லுற மாதிரி தான் தோணுது.... )
 21. பாரதி பார் இந்த வேடிக்கையை வாழ்ந்தபோது ஏன் என்று கேட்காத இந்த தமிழகம் கழிவறையில் கழிசடைகள் ஒட்டியதற்காய் அறிக்கைவிட்டு அலம்புகின்றது துடிக்கின்ற மீசைக்குள் கூர்வாள் ஒளித்து வைத்தவனே வடிக்கின்ற கவிக்குள் அக்னிக் குஞ்சுகள் ஆயிரம் வைத்தவனே படிக்கின்ற மக்களை தீயெனச் சுட்டவனே தமிழுக்காய் தரைக்கு வந்த சூரியனே என்னவெல்லாம் நடக்கும் நீ பிறந்த நாட்டில் என்று அறியாதவனே (?!) கன்னடத்து கனிமொழியை உன் பாட்டுத் தேரில் அமர வைத்தாய் கழிசடைகள் நன்றி மறந்தனை என தருமைத் தமிழைப் பழித்தனை! அறிக்கைகளை நிறுத்தச் சொல் பாரதி உருப்படியாய் ஏதேனும் செய்யட்டும் இவர்கள் உன் தலையில் குட்டுவதாய் எண்ணி தன் தலையில் குட்டிக் கொண்டது கன்னடம் உனதருமை உலகுக்கு உரைக்க இது ஒரு சந்தர்ப்பம்!
 22. ஜம்மு, கஜந்தி, வெண்ணிலா (கன நாளைக்கு பிறகு???) நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும்...
 23. பின்னூட்டல் இட்ட கள நண்பர்களுக்கு நன்றி... _/ \_
 24. நாளை நாளை என்றொரு நாளை எண்ணி மனம் வெம்பிப் போகாதே தம்பி - அந்த நாலுந் தெரிந்தவன் நடத்தும் நாடகத்தில் குறை சொல்லி மாளாதே தம்பி விதை விதைப்பதும் அது முளைப்பதும் உந்தன் கையிலா தம்பி? எல்லாம் இயற்கையின் கையினை நம்பி! கவலைகள் கிடக்கட்டும் காரியம் நடத்திவிடு மலைகள் எதிர்க்கட்டும் துணிவாய் இருந்துவிடு பிறந்தது இன்று வாழ்வது இன்று சாவதும் இன்றே என்று எண்ணி விடு துன்பங்கள் ஓடும் இன்பங்கள் கூடும் உல்லாசம் உன் மார்பைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்டும் கொண்டாட்டம் நாமெல்லாம் இன்று பூத்த மலர்க்கூட்டம் நமக்கு ஏது கவலை - ஊதடா உல்லாசப் பண்பாடும் குழலை நாமெல்லாம் இன்று பிறந்த மழலை நமக்குள் இனி இருக்காதே கவலை!
 25. மழை அடிக்கடி அழைக்காமலே எனக்குள் விஸ்வரூபம் எடுக்கும் உன்னைப் போல தூறலாகிக் கனக்கின்றது! குளிர்காற்று காதுமடல் தடவி தலைகோதும் போதெல்லாம் உன் உதடும் கைகளும் நினைவில் பாதங்கள் வெள்ளம் அழைகையில் உன் கால் கொலுசின் ஒலி! மழைத்துளி மண்ணில் மோதிச் சிதறித் தெறிக்கையில் மரணத்தின் வலி! மழை எல்லோருக்கும் பொதுவாய் கடவுள் எடுக்கும் பால பாடம்! புரிந்தவர்கள் ஞானம் பெறுகிறார்கள்!