kavi_ruban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  372
 • Joined

 • Last visited

Everything posted by kavi_ruban

 1. வெண்ணிலா கண்களில் என்ன கண்ணீரா? விழி நீர் துடை செருக்கறுத்து வாவென தம்பியை அழைப்பது இருக்கட்டும் நீயே தம்பியிடம் செல் உள்ள(த்)தை சொல் வரமறுத்தால் அமைதியாய் வா அணைக்க ஆயிரம் உறவுகள் உண்டு!
 2. //நாங்களும் மனிதர்கள் தான் // நாங்களும் மனிதர்கள் தான் அடிக்கடி இப்படிச் சொல்லிக் கொள்வது அவசியமாகிறது மறந்துவிடுகின்ற அபாயம் உண்டு அடுத்தவரின் கரிசனையை எதிர்பார்க்கின்ற போதெல்லாம் ஏமாற்றங்கள் தான் புரிந்து கொள்ளாமை புரிந்தும் உணர்ந்து கொள்ளாமை இப்படிப் பல காரணங்கள் பிரச்சனை புரியாதவரெல்லாம் பாதை இதுவெனச் சொல்வதில் அர்த்தமுண்டோ? தள்ளி நின்று வேடிக்கை பார்த்து வேண்டாமெனத் தடுப்பதை விடுவீர் கிட்ட வாரும் பிரச்சனையின் வேர் தேடும் பிறகு சொல்லும் எது வழியென... நாங்களும் மனிதர்கள் தான் விலங்குகளோடு சண்டைபோடுகிறோம்!!! விலங்குகள் உடையுமோ? விரதங்கள் முடியுமோ? விரக்தியோடு புன்னகைப்பதைத் தவிர எதுவும் தோன்றவில்லை....
 3. //மச்சான் மார் இருக்கிறதை விட இல்லாமலே இருக்கலாம் செவ்வந்தி. // ஜனனி என்ன இப்படிச் சொல்லுறீங்க.... அவரவர் அனுபவத்துக்கு ஏற்ற மாதிரி கருத்துப் போய்க்கொண்டிருக்கு ... ஒரு மச்சாளுக்கு கதை எழுதினால் என்ன எல்லோரும் உங்க சோகங்களைக் கொட்டுறீங்க... ம் நாட்டில கன சனம் என்னைப் போல இருக்குது என்று விளங்குது... "முட் பாதை" என்று ஒரு நாவல் வந்தது ... எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியது ... முடிந்தால் கள நண்பர்கள் வாசிக்கவும்... அதில வாற மச்சாள் எனக்கு கிடைக்காதோ என்று பல நாள் ஏங்கியிருக்கிறன்... (ஐயோ பாவம்...) அதில வாற மச்சான் எனக்கு கிடைக்காதோ என்று பெண்கள் ஏங்குவீர்கள் அந்த நாவலைப் படிச்சால்.... (இந்த நாவலை கருவாக வைச்சு தொடர் நாடகம் ஒன்று வந்த ஞாபகம்.... ) ம்... என்ன செய்ய.... அடுத்த மச்சாளைப் பாப்பம்....(அட பாவி... )
 4. எத்தனையோ பெண்கள் தங்களை ஆண்கள் புகழ்வதைப் பார்த்திட்டு கொடுப்புக்குள் சிரிப்பது சகோதரிக்கு தெரியல போல... அட நம்மளையும் கிளி ... மைனா (சும்மா) என்று புகழ்கிறானே என்ற ஆச்சரியத்தின் வெளிப்பாடு... இன்னும் சில பெண்கள் புகழ்ச்சியா ஒரு வார்த்தை சொல்லாட்டி எவ்வளவு கோபப் படுகினம் என்று தெரியுமோ? புகழ்ச்சி உண்மையோ பொய்யோ அதை விரும்பிற பெண்கள் இருக்கத் தான் செய்கினம்... சகோதரி உணர்ச்சி வசப்படாதீங்க... (உங்களை யாரும் புகழவில்லை என்ற கவலையில் பிறந்த கவியோ....? )
 5. நீங்க சொல்கிறதைப் பார்த்தால் பிரான்ஸ் நாட்டில் மட்டும் தான் இப்படியான அனுபவம் கிட்டும் போல... ?
 6. போதுமென்று நீர் உரைத்தாலும் மனசுக்குள் ஆசை நரைக்கவில்லை... 'சாது'வாக தான் இருப்பீர் காவி தரிப்பீர் ஆனாலும் காரில் வருகின்றீர் வசை சொற்களை வாந்தி எடுக்கின்றீர் மனித நேயம் மலரவேண்டிய மனங்களில் முட்களை பரப்பி முட்டாளாகின்றீர்... பிழைக்க பல வழிகள் உண்டய்யா... புத்தன் என்னும் புனிதன் பேரைச் சொல்லிப் பிழைக்க வெட்கமில்லையா? அரசின் கீழிருந்து தியானம் செய்யாமல் அரசில் ஆசை ஏனய்யா? சிரசு தடவிச் சொல்லும் பரிசு கெட்டதனம் இதுவய்யா... புத்தபிட்சு சொல் கேட்டு ஆசோகன் போர்வாள் மறந்தான் லட்சம் பிட்சு கூடி போர் செய் போர் செய் என்று கூர் வாள் கொடுக்கின்றீர் பிட்சு இல்லை நீர் மரந்தான்...!
 7. உயிரே என்றென்னை உருகி அழைத்தவளே... உயிர் மறந்து போனதென்ன? வீணே வாய்பிதற்றுகின்ற வார்த்தைகளை உண்மையென்று நான் உணர்ந்தது தான் என்ன? உண்மைதான் பலரும் மனிதர்களைக் காதலிப்பதை விட வார்த்தைகளைக் காதலிப்பதே அதிகம்...
 8. பூக்கள் மரங்கள் தேனள்ளி வழங்கும் குடங்கள் வழிகின்ற தேனுண்ண ரீங்காரிக்கும் வண்டுகள் சில பூக்கள் வண்டுகளின் வருகைக்காக காத்திருந்து உடல் வாடி உதிர்கின்றன... சில பூக்கள் வண்டுகளின் ஸ்பரிச சுகத்தில் மெய் சிலிர்த்து சந்தோசமாய் மடிகின்றன... சில பூக்கள் காற்றின் பலாத்கார உறவில் வேண்டாமென தலையசைத்து வேதனையோடு மடிகின்றன பூக்கள் பூசைக்காகவென்று யார் சொன்னது? உண்மையில் பூக்கள் மரங்களின் புணர்ச்சி உறுப்புக்கள்! மரங்களின் மகிழ்ச்சிக்காக மலரும் பூக்களை மனிதர்கள் தங்கள் மனங்களின் மகிழ்ச்சிக்காக ரசிப்பதில் தவறில்லை கரங்கள் கொண்டு காம்பு முறித்து கிள்ளியெடுக்கும் போதெல்லாம் மரங்களும் கண்ணீர் வடிக்கும் என்பதை மறவாதீர் கடவுளுக்கு அர்ச்சிக்கப்படும் பூக்கள் எல்லாம் ஏதோ ஒரு புரியாத மொழியில் புலம்புவதை கேட்கக்கூடாதென்றே கடவுளும் கல்லானார்!
 9. இப்படியும் அப்படியும் எப்படியும் வாழலாம் ஈழநிலா சொன்ன நட்பில்லாமல் வாழலாமா? ஈழநிலா நல்லா இருக்கு.... "உன் நண்பனைச் சொல் உன்னை யாரென்று சொல்கிறேன் " என்பது போன்ற மொழிகள் நட்பின் அருமை சொல்லும்.....
 10. வாங்கித் தா ஈழத்தை தூக்கத்திலும் துட்டர் பயம் வந்தெழுப்பி 'வா' வென்று உறுமி வசை மொழி பேசி வரிசையாய் ஏற்றுகின்றார் பஸ்சில்... வாழ வழியில்லையாம் கொழும்பில் கோழைகாள் எம்மையடா துரத்துகின்றீர்? எமனின் கரம் தொட்டா விளையாடுகின்றீர்? சிவப்புத் தோல் போர்த்திய வெள்ளை நரியே ஈழத்தின் வீதியெங்கும் சிவப்பை அள்ளித் தெளிக்கின்றாய் சிந்திக்கும் திறன் மறந்தாய் அலரி மாளிகையில் குளறி அழுவாய் பொறு! ஈழமே உன் பெறுமாதம் நெருங்குகின்றது காலமே சுகப் பிரசவம் நடக்கும் வகை செய்வாய் உலகமே குந்தியிருந்து குறட்டைவிட்டு கனவில் விழித்து 'ஆ' வென்று கேட்காதீர் குழந்தைக்கு வாழத்துச் சொல்வீர் அங்கீகரிப்பீர் முடியாவிடின் ஊமையாவீர் எம் விதியை நாமே வரையும் பிரமாக்களாவோம்!
 11. Suvy இறப்பதும் இருப்பதும் அவளிரு விழியாலே...! Suvy ம்... என்ன இப்படி பீல் பண்ணுறீங்க...? அதுவொரு சுகானுபவம்.... சரி ... சரி இப்ப என்ன காலம் இருக்கு தானே ... நடக்கும்....
 12. அரங்கேறும் என்பாடல் ஒருநாள் தமிழ்கூறும் உலகெங்கும் எழுந்தாடும் திருநாள் மரமேறும் மந்தியும் மகிழ்தாடும் பலவேறு புதினங்கள் எனைப் புகழ்ந்தெழும் ஒருவாறு தமிழ் உலகாளும் - நாம் உரையாடும் பாஷை தமிழாகும் அழகுத் தமிழாகும்
 13. ஜமுனா, தமிழன்பு நன்றிகள்... தமிழன்பு 'ள' வுக்குப் பதில் 'ழ' தான் சரி நீங்கள் சுட்டிக் காட்டியது போல.... திருத்தப்படும்...
 14. காதலி வார்த்தைகளுக்கு வாள் வீசக் கற்றுக் கொடுத்தாய்! என் இதயச் சுவரில் எத்தனை கீறல்கள்... கீறல்கள் மேல் இதழ் தேடல்கள் நடத்து... என் வாலிப வானம் விடியட்டும்! குரலில் எதைக் குழைத்தாய்...? என் இதய நாளங்களில் குளுக்கோஸ் ஏறுகிறதே...! விழிகளில் சொருகிய வேல்களைக் கழற்று எத்தனை தடவை நான் இறப்பது?
 15. வல்வை மைந்தன் (உங்கள் பேரில எனக்கு ஒரு மயக்கம் உண்டு... கவர்ச்சியான பேர்.... ) அது இருக்க... பாராட்டுக்கு நன்றி.... பார்க்கிற விசயத்தை பதிவு செய்தனே தவிர வேறொன்றுமில்லை... (ரசிக்கவும் செய்தன் என்பதை மறந்துவிடுங்கள்.... அட எனக்கு கிடைக்கலையே என்ற ஆதங்கம் வேற.... அதையெல்லாம் மறந்து விடுங்கள்..... ஹா.......ஹா.......... ) என் பாத்திரம் என்ன என்றால் எப்படிச் சொல்ல.... ரசிகன் (ஆகா ரசிகன்... என்ற பாட்டு நினைவுக்கு வந்தால் என் தப்பில்லை.... )
 16. ஜம்மு, நீங்களும் அண்ணா என்று கூப்பிடுறீங்க... கண்ணாடிக்கு முன்னால நின்று கேளுங்க ஏன் என்று .... (ஓ நீங்க மச்சாள் மார் அண்ணா என்று ஏன் கூப்பிடுகினம் என்று சொல்லுறீங்களா? )சரி .... சரி... அதுவென்ன அந்த நேரத்தில் நீங்க இருந்தா என்ன செய்வீங்க....? நடக்கிறதே வேற என்று கதை விடுறீங்க.... கன்னா பின்னா என்று அடிச்சிருப்பீங்களோ?
 17. இலக்கியன் கவிதைக்குள் உலவ விட்டிருக்கிற கருத்து நல்லாய் இருக்கு .... நீங்கள் தவறாக எண்ணாவிட்டால் ஒரு சின்னக் கருத்து .... // காற்றோடு காற்றாக பறந்து செல்லும் வெற்றுக் காகிதங்கள் நாங்கள் அல்ல எழுதப்பட வேண்டிய புதுக்கவிதைகள் நாம் உறவுகளை இழந்து உணர்வுகளைப் புதைத்து முற்களின் பாதையில் நடக்கின்ற சிட்டுக் குருவிகள் நாம் `அ` எழுத வேண்டிய பிஞ்சுக்கைகள் பழுத்து சிவப்பாக புத்தகம் சுமக்கும் வயதிலே... சிலுவைகள் சுமக்கின்றோம் // இது வரைக்கு ஒரு நடையில் கவிதை அழகாக வருகிறது.... ஆனால் .... // அன்னையவள் அன்பு முத்தம் எங்கே? அணைத்திடும் தந்தை கைகள் எங்கே? கண்ணீ ர் துடைத்திடும் தங்கை எங்கே? // மேற்கண்ட பகுதி அந்த முன்பாதியில் வரும் கவி நடையை உடைப்பது போல எனக்குப் படுகிறது... ஒரே நடையிலேயே சொல்லியிருந்தால் வாசிக்கும் போது நன்றாக இருக்கும் என்பது என் கருத்து... மற்றும் படி நல்லா இருக்கு ... குறிப்பாக ... // உறவுகளை இழந்து உணர்வுகளைப் புதைத்து முற்களின் பாதையில் நடக்கின்ற சிட்டுக் குருவிகள் நாம் // பிடிச்சிருக்கு....
 18. Suvy உங்கள் கருத்துக்கு முதல்ல நன்றி .... என் வருத்தமெல்லாம் அப்படி இருந்தபின்னும் மாறுகிற சிலர் பற்றியது....
 19. நன்றி ஜனனி... (ரசிக்கிறமாதிரி இருந்ததா? )
 20. மாறும் எல்லாமே ஒரு நாள் மாறும் மாற்றம் என்பதைத் தவிர சீறும் புலியின் சீற்றத்தின் முன்னே சீயங்கள் (சிங்கங்கள்) சிதறி ஓடும் ரணங்கள் ஆறும் வாழக்கை ரம்மியமாய் மாறும் ரகசியமாய்ச் சேர்த்து வைத்த என் ஈழக் காதல் ஐ.நா வில் முழங்கி உலக வீதியில் கேட்கும் ... ஈழம் இன்னொரு சிங்கப்பூராய் ஆகும் எதுவும் தூரமில்லை எழுந்து நடந்தால்!
 21. காத்திருப்பதற்கு ஒரு கால எல்லை வைச்சுக்கொண்டு காத்திருங்கள் ஜமுனா.... வாழ்த்்துக்கள்...
 22. புலி மூவேந்தர் கொடியில் பறந்தது அன்று ஈழத்து என் மண்ணில் பறக்குது இன்று... நரியாக சிலர் நாட்டுக்குள் அலைய பரியாகிப் பார்ப்பவர் வியக்க வரிப் புலியாகி கரிகாலன் காட்டிய வழியில் சமராடி தரையோடு கடலும் கொண்டு வானுமாகி வளர்ந்த வீரம் சிங்கங்கள் சீறினாலும் பங்கங்கள் வராமல் காத்த தனி வீரம் அங்கங்கள் கிழித்தே மனச் சிக்கல்கள் காட்டும் பகையே சங்கங்கள் அமைத்து சங்குகள் முழங்க வளர்ந்த வீரமடா எம் வீரம் அம்புகள் தொடுத்து ஆக்கினைகள் கொடுத்து ஆரையடா பயமுறுத்துவீர்? வம்புகள் விடுத்து ஈழத்து வளைகாப்புக்கு வசதிகள் தருவீர் இல்லையேல் வரிசையாய் மடிவீர்!!!
 23. விகடகவி, உங்க எண்ணங்களுடன் நான் நிறையவே உடன்படுறன்.... ஆரோக்கியமான சொல்லாடலுக்கு நன்றி... //உங்க கவிதை அழகு. எது காதல் எண்டு தான் தெரியல // காபி... காதல் எதுவென தெரியாதவரை காப்பியம் தெரிந்தபின் வெறும் காகிதம்! அழகான விசயங்கள், ரசனைக்குரிய விசயங்கள் எல்லாம் எட்ட இருந்து ஆகா ... என்று வியக்்குறவரை... அருகே போனாலோ அசிங்கமாகி 'சீ...' என்று சினக்க வைக்கலாம்.... ஆகவே எது காதல் என்று தெரியாதவரை அது அருமந்த பொருள்.... தெரியமாலே இருக்கட்டுமன்....
 24. அது ஒரு இளவேனிற் காலம்..... இலையுதிர் காலமாகி பின் மீண்டும் துளிர்விட்டு இன்னொரு இளவேனிலுக்காய்.... மாமிமாருக்கு உங்களைப் போல மருமகன்களின் மனசு புரிஞ்சால் நல்லது....
 25. என்ன மருமகன் நீங்க.... விலக்கு தீர்பீங்க என்று பார்த்தால் உசுப்பேத்தி விடுறீங்க... பிறகு நாங்கள் உண்மையாகவே உதைச்சுக் கொண்டாலும் கொள்ளலாம்.... நாங்க பேசினது உங்களுக்கும் கேட்டுவிட்டதா? (விகடகவி அப்ப இவரும் எமக்கு தெரிஞ்சவரோ? )