Alternative

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  378
 • Joined

 • Last visited

Community Reputation

23 Neutral

About Alternative

 • Rank
  உறுப்பினர்

Recent Profile Visitors

1,248 profile views
 1. ஹிஸ்புல்லாவுக்கு எதிராக களத்தில் குதித்த பழங்குடி மக்கள்! திருகோணமலை உப்பூறல் பகுதியில் பதட்டம்!! 2009 இற்குப் பின்னர், தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் கையகப்படுத்தப்பட்ட மூதூர் உப்பூறல் பகுதியிலுள்ள தமிழர் காணிகள், மீண்டும் அப்பகுதியிலுள்ள தமிழ் பழங்குடியினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன . ஹிஸ்புல்லாவால் அபகரிக்கப்பட்ட காணிகளுக்குள் தமிழ் மக்கள் வெகுஜன அமைப்புகளின் உதவியுடன் நுழைந்த தமிழ் பழங்குடியினர் அந்த காணியில் குடிசைகள் அமைத்து தங்கிவருகின்றார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மேலதிக தகவல்கள் https://www.ibctamil.com/srilanka/80/121094?ref=home-imp-parsely தமிழர்களின் நிலங்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வளைத்துப் போட முயன்ற ஹிஸ்புல்லாவிற்கு விழுந்த சம்மட்டி அடி!
 2. உங்கள் நம்பிக்கை அப்படியே இருந்து விட்டு போகட்டும். அதனை இன்னும் கொஞ்சம் மெருகூட்டி எந்த இயக்கத்திலுமே உட்படுகொலை நடக்கவில்லை என்று நம்புவது மனதிற்கு நிம்மதி தரும். துணுக்காயில் இருந்த வதைமுகாமில் யாருடைய நகமும் பிடுங்கப் படவில்லை, சும்ம நகம் மட்டும் வெட்டி விட்டார்கள்.
 3. "கந்தன் கருணை" படுகொலை அருணாவின் தலைமையில் நடந்திருந்தாலும் அவர் தனியாளாக அத்தனை தமிழ் இளைஞர்களையும் கொன்றொழித்திருக்கவில்லை. அந்தக் கொலைகளில் சம்பந்த பட்டவர்கள் ஏற்கனவே இவ்வகை கொலைகளிற்கு பழக்கப் பட்டவர்களே. அதற்கு முன் கிட்டு தலைமையில் புலிகள் பகிரங்கமாகவே சகோதரப் படுகொலைகளை செய்து சந்தியில் போட்டு உடல்களை எரித்த போது யாருமே தண்டிக்கப் படவில்லை. இப்போது அந்த தலைமை அதே வகை கோர முடிவைச் சந்தித்த பின்னர் தான் பலருக்கும் அதன் வலி புரியத் தொடங்கியிருக்கிறது.
 4. நீங்கள் குறிப்பிடும் நபர் அருணா என்று நம்புகிறேன். இவர் தான் புலிகள் செய்த 'கந்தன் கருணை' படுகொலையின் கதாநாயகன்.
 5. இனி எதையும் பூசி மெழுகி ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்தப் படுகொலைகளில் ஈடுபட்ட பலர் பகிரங்கமாக தமது செயலுக்காக மன்னிப்பு கேட்கும் காலமிது. சகோதர படுகொலைகளை ஆதரித்தவர்கள் ஜெனீவாவில் தாம் மதிக்காத மனித உரிமை நீதி கேட்டு இறைஞ்சுவது சகஜமாகி விட்டது. எல்லா இயக்கங்களுமே தற்போதுள்ள வாள்வெட்டு குழுக்களின் பண்புகளுடன் தான் வளர்ந்தன அதே போல எல்லா பெரிய இயக்கங்களும் இந்தியாவால் அதீதமாக வளர்க்கப் பட்டு பயன்படுத்தப் பட்டு பின்னர் அழிக்கப் பட்டன. இன்று நமக்கு முன்னாலுள்ள சவால்கள் புலிகளைப் பற்றியதல்ல என்பதைக் கருத்தில் கொண்டு எல்லா போராளிகளின் தியாகத்தையும் மதிக்கப் பழகுவோம்.
 6. பாரபட்சமில்லாமல் அனைத்து தமிழ் ஆயுதக் குழுக்களாலும் படுகொலை செய்யப் பட்ட அனைத்துப் போராளிகளுக்கும் அஞ்சலிகள்!
 7. 1956-ல் வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாநாடு நடந்தபோது எனக்கு எட்டு வயது. அப்பு அந்த மாநாட்டு ஊர்வலங்களிலெல்லாம் என்னைத் தனது தோள் மீது ஏற்றி நடந்துசென்றார். ‘துப்பாக்கிக் குண்டு விளையாடும் பந்து’, ‘சிறைச்சாலை பூஞ்சோலை’ என்ற கோஷங்களிலெல்லாம் நானும் குரல் கொடுத்திருக்கிறேன்... ...பலநாட்கள், பலமாதங்கள், பலமுகாம்கள் என அலைந்தேன். அவன் இன்னமும் இவர்களிடம் கைதியாகத்தான் இருக்கிறானோ என்ற சந்தேகமும் என்னைக் கலங்க வைத்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்ட சிலரை நான் சந்தித்து அவர்களிடம் மகனைப் பற்றிக் கேட்டேன். அவர்களில் யாரும் அவனைப் பார்த்திருக்கவில்லை. எனினும் புலிகளிடமுள்ள சித்திரவதை முறைகள், விசாரணை முறைகள் பற்றி அவர்கள் கதைகதையாக என்னிடம் சொன்னார்கள். ‘கடவுளே! என்மகன் புலிகளிடம் கைதியாக இருந்தால் அவனைக் கொன்றுவிடு’ என்று கோயில் வாசலில் கிடந்து கதறினேன். ...ஒரு பாடலில் ‘முருகனுக்கே அவன் நிகரானவன்’ என்ற வரி இடம் பெற்றிருந்தது. தலைவர் மிகுந்த வேதனையுடன் ‘இதெல்லாம் என்ன பேத்தல், இந்தப் பாடலை ஒலிபரப்ப வேண்டாம்’ என்றார். யார் கேட்டார்கள்! எந்த ஒலிநாடாவிலும் அவரைப்பற்றி ஒரு பாடல் கட்டாயம் போட்டார்கள். அவரிடமிருந்தது புகழ்ச்சிக்கு மயங்கும் குணம் என்ற பிரமை எனக்கும் உண்டு. அவர் காதலித்த பின்பாக காதல் சரி என்றது போல, அரசனுக்குப் பின் இளவரசன் என்ற கொள்கையும், முன் வழுக்கையை மறைக்க அவர் தொப்பி அணியவேண்டி இருந்தபோது அனைத்துப் போராளிகளுக்கும் தொப்பி சீருடையின் ஒரு பகுதியானது எனவும் நான் நினைக்கிறேன். அவரும் சாதாரண மனிதர்தானே.... ...புலிகள் போரிட்டு நாட்டைப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இது ஒரு வெல்லப்பட முடியாத யுத்தம் என்பதை நான் இயக்கத்தில் இணைவதற்கு முன்பே என்னால் உணர முடிந்தது. தலைவரே ஒரு தடவை “நாம் இப்படித் தாக்குதல்களைச் செய்து நாட்டை அடையமுடியாது. அது ஒரு பேச்சுவார்த்தையில் தான் முடியும். நமது தாக்குதல்கள் மூலம் ஒரு நெருக்கடியை அரசாங்கத்துக்குக் கொடுத்து அதைப் பேச்சுவார்த்தைக்கு இழுப்பதே எனது நோக்கம்” என்றார்... ...ஆயினும் வெளியே தெரிந்த புலிகளின் பிரமாண்ட பிம்பம்போல உள்ளே நிலைமைகள் இருக்கவில்லை. இவர்கள் வெல்லப்போவதில்லை. சாண் ஏற முழம் சறுக்கும் நிலையே இருந்தது. தலைவருடன் முன்னரங்கக் காவல் நிலைகளில் சாவை எதிர்பார்த்து எதிரிக்காகக் காத்து நின்றவர்களை மட்டுமே போராளிகள் எனக் கருத முடிந்தது. அதேவேளையில் இயக்கத்தின் உள்ளே அதிகாரப்போட்டி, பொறாமை ,தகடுவைத்தல் (கோள்சொல்லுதல்), காத்து இறக்குதல் (பதவி பறிப்பது), அதிகாரமுள்ளவருக்கு யாரையாவது பிடிக்காது போனால் பிடிக்காதவரை முன்னரங்கக் காவல் நிலைக்கு அனுப்புவது எனப் பல சீர்கேடுகள் நிறைந்து கிடந்தன... ...புலிகளின் மட்டு - அம்பாறை பகுதிதான் முதலில் கட்டாய ஆட்சேர்ப்பை 2003-2004 காலப்பகுதியில் செய்தது. வன்னியில் 2006-ன் பிற்பகுதியில் வீட்டுக்கொருவர் கட்டாயம் எனவும், இயக்கத்திலிருந்து விலகியவர்கள் கட்டாயமாக மீண்டும் இணைக்கப்பட்டதும் நடந்தது. இயக்கத்திலிருந்து விலகக் கடிதம் கொடுத்து, தண்டனைக் காலம் இரண்டு வருடங்கள் முடிந்து வீட்டுக்குப் போனவர்கள் வர விரும்பவில்லை. அவர்களைக் காவற்துறையினர் வேட்டையாடிப் பிடித்தனர். அகப்பட்டவர்கள் கைதிகள் போல் ட்ரக்குகளில் ஏற்றப்பட்டு மணலாற்று காட்டுப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வீதியில் இந்த ட்ரக்குகளில் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் கொண்டு செல்லப்படும்போது அழுதுகொண்டே செல்வார்கள். அப்போதெல்லாம் என் மனம் அழியும்... ...ஒரு போராளி புதிய போராளியாக இணைந்த பெண்ணொருவரை பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்றும் பிடிபட்டது. எனினும் அவன் சிறு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டான். காரணம், பிள்ளை பிடியில் அவனை மிஞ்ச ஆளில்லை என்பதாகும். ஈற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் அவனைக் கொன்றனர். அவனுக்கு லெப்.கேணல் விருது கூட வழங்கப்பட்டது. இப்படி நிறையச் சம்பவங்களுண்டு... ...இன்பம்- துன்பம் எல்லாமே சமமாகிவிட்டது. அவமானம் என்று எதையும் கருதவில்லை. அவை எனக்களித்த பாடங்கள் தெளிவானதாக இருந்தன... http://www.shobasakthi.com/shobasakthi/?p=1157
 8. நான் இத் தளத்துக்கு புதியவன், எப்படி பதிவு இட முடியும் என்பதை சொல்லவும். நன்றி.

 9. பௌத்த மதம் அசோக சக்கரவர்த்தி காலத்தின் பின் வேகமாக இந்தியா எங்கும் பரவியிருந்தது. இதன் விழைவாக இது இலங்கைக்கும் அசோகனின் நேரடி வாரிசுகளாலேயே பரப்பப் பட்டதாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இந்த காலத்தில் தவிர்க்க முடியாமல் தமிழர் மத்தியிலும் பௌத்த மதம் பிரசித்தி பெற்றிருந்ததாக நம்பப் படுகிறது. பௌத்த மத கட்டடங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இன்னும் யாழ் கந்தர்மடத்தில் உள்ளது. தொண்ணூறுகளில் யாழ்ப்பாணம் அரசின் கைக்கு வந்த பின் இந்த இடத்தை அவர்கள் பராமரிப்பதுடன் ஏற்கனவே இருந்த சின்னங்கள் மேல் தமது அடையாளங்களை திணித்து இலங்கை முழுவதும் சிங்களவர்களே வாழ்ந்தனர், தமிழர் வெறும் வந்தேறு குடிகள் என்று நிரூபிக்க முயல்கின்றனர். (கடைசி சமாதான காலங்களில் சிங்கள மக்கள் நயினா தீவுக்கு அடுத்து கந்தர் மடத்துக்கும் சென்று வழிபட்டிருந்தனர்) ஆகவே பௌத்த மதம் என்பது எல்லோருக்கும் பொதுவான மதமென்பதோடு அது ஒப்பீட்டளவில் உயர்வான தத்துவவியல் வளர்ச்சி கொண்ட மதம். எமது எதிரி சிங்கள பௌத்த பேரினவாதமே தவிர சிங்கள மொழியோ பௌத்த மதமோ அல்ல.
 10. மூன்றரை இலட்சம் மக்கள்... இனி அவர்களுக்கு போக இடமில்லை. எங்கை அடிச்சாலும் மனித உயிர்கள் ஊசலாடும் நிலையில் தமிழர். இந்த வெற்றிகள் கருக் கொண்டு நிக்கிற நேரத்திலை அங்கை தமிழ் நாட்டிலை ஒருத்தர் தீர்க்க தரிசனம் இல்லாமல் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து சண்டையை நிப்பாட்ட பாக்கிறார். சுனாமி... அதிரடி... மழை... ம்ம்ம்ம் தொடருங்கோ அக்கா.
 11. கொஞ்சம் தாமதம் தான் எண்டாலும்.... மீண்டும் வாங்கோ நெடுக்காரே