Jump to content

Mathan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    3400
  • Joined

  • Last visited

Posts posted by Mathan

  1. காத்திருந்த அனைவருக்கும் நன்றிகள்.

    இன்று விஞ்ஞானம் ஓங்கி வளர்ந்து அண்ட சராசரங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறது என்றால் மனிதன் சோம்பேறியாகியிருந்தால் சாத்தியமா? அன்று அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதன் உற்சாகமாகக் காட்டும் உற்சாகத்தில் தான் அடங்கியிருக்கிறது....மனித உற்சாகமின்றி விஞ்ஞான வளர்ச்சியேது? மனித உற்சாகத்தினால் உண்டான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மனித உற்சாகத்திற்கு மேலும் ஊட்டச்சத்தாகிறது...மனிதன் உற்சாகம் இன்றியிருந்திருந்தால்; தான் வளர்த்த விஞ்ஞானத்தின் பலனாய் என்றோ மாண்டிருப்பான் மண்ணில்...ஆனால் மனித உற்சாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுக்காத வண்ணம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

    இதில் மழலை நவீன விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகின்றது மனிதன் உற்சாகமாக இருந்ததால் தான் விஞ்ஞான வளர்ச்சி சாத்தியமாயிற்று என்று கூறுகின்றாறே தவிர நவீன விஞ்ஞானம் எப்படி மனிதனை உற்சாகப்படுகின்றது என்பதை கூறவில்லை, மனிதன் உற்சாகமாக இருந்தான் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் கூட அந்த உற்சாகத்துக்கு வேறு ஏதும் காரணம் இருந்திருக்கலாமல்லவா? ஆக நவீன விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகின்றது என்பதை அது எப்படி சாத்தியம் என்று கூறாதாமையின்னால் இந்த கருத்தை கவனத்தில் எழுக்க தேவையில்லை,

    அடுத்ததாக அன்றைய மனிதர்கள் அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள். ஆனால் நாளைய சந்ததிக்காக இன்றே உற்சாகமாக வித்து இடும் அளவிற்கு இன்றைய மனிதர்கள் வளர்ந்து விட்டார்கள் என்றால் அதற்கு காரணம் எது? விஞ்ஞானம் தொழில்நுட்பமும் தான். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் இன்று நானும் நீங்களும் பட்டிமன்றம் வைக்கவும் விவாதிக்கவும் கூட முடியாத சோம்பேறிகளாகி படுத்திருப்போம். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்பமும் தந்த உற்சாகத்தால் உற்சாகமாகி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்

    இதில் மனிதர்கள் அடிப்படை தேவைகளை சந்திக்கவே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள் என்றால் என்ன அர்த்தம், அப்போது உற்சாகமாக செயல்ப்பட்டார்கள் என்று தன்னையும் அறியாமல் கூறிவிட்டார் மழலை அவருக்கு எனது நன்றிகள், அடுத்து பட்டிமன்றம் வைப்பதற்கு நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தேவையில்லை இவற்றின் துணையின்றி தானே போர் சூழலில் யாழில் பட்டிமன்றங்கள் நடந்தன? ஆக இந்த கருத்த்தையும் கவனத்தில் எடுக்க தேவையில்லை,

    மனிதன் சோம்பியிருந்தால் எப்படி நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தோன்றும்? இல்லை.. அன்றை விஞ்ஞானம் தான் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் எவ்வாறு நவீன அதாவது இன்றைய விஞ்ஞானம் வானை முட்டுமளவிற்கு வளர்ந்து நிற்கும்? சோம்பேறிகளாயாக்யிருந்திருந
  2. பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து நடாத்தி கொண்டிருக்கும் தூயாவிற்கும் நடுவர்களாக பணியாற்றும் சோழியன் அண்ணா, சண்முகி அக்கா ஆகியாருக்கும் பட்டிமன்ற நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வணக்கம் வணக்கம் வணக்கம்.

    எனக்கு பட்டிமன்றத்தில் பேசி பழக்கமில்லை. தூயா இதை ஆரம்பித்தவுடன் ஒரு ஆர்வகோளாறில் இணைந்துவிட்டேன். ஆனால் பின்பு மற்றவர்கள் எழுதிய கருத்துக்களை படித்த பின்பு இவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கின்றார்களே நான் எப்படி எழுத போகின்றேனோ என்று தயங்கி நின்றேன். அது தவிர தேர்தல் உள்ளிட்ட சில வேலைகளை காரணாமாக எனது வாதத்தை வைப்பதில் தாமதமேற்பட்டது. அப்போது சோழியன் அண்ணா என்னை உற்சாகப்படுத்தி இயன்றவரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அவ்ருடைய அழைப்பையும் சியாம், இளைஞன், மழலை உட்பட மற்றய நண்பர்களின் அழைப்பையும் ஏற்று இதுவரை என்னால் பட்டிமன்றத்தில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பை கேட்டுக்கொண்டு எனது வாதத்தை தொடங்குகின்றேன்.

    முதலில் பட்டிமன்ற தலைப்பை பற்றி ஒரு விளக்கம். அது "நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா" என்பதே. இந்த தலைப்பில் எதிரணியில் பேசும் பலரும் நவீன விஞ்ஞானதின் பயன்களை கூறுகின்றார்களே அன்றி அது எப்படி மனிதனை உற்சாகப்படுக்கின்றது என்பதை கூறாமல் தவிர்க்கின்றார்கள். பயன்களை மீண்டும் மீண்டும் அழுத்தி கூறி நவீன விஞ்ஞானமும் தொழிற்நுட்பமும் மனிதனுக்கு நன்மையா தீமையா என்று தலைப்பை திசைதிருப்ப பார்க்கின்றார்கள். இதனை நடுவர் அவர்கள் கவனித்து அவர்கள் குறிப்பிட்ட பயன்களை தவிர்த்து உற்சாகப்படுத்துகின்றது என்று கூறிய (கூறி இருந்தால்) கருத்துக்களை மட்டுமே கவனித்தில் எடுக்கவேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.

    அடுத்து இந்த நவீன விஞ்ஞானம் மனிதனை எப்படி சோம்பேறியாக்குகின்றது என்பது பற்றி பேசுவோம். இந்த நவீன விஞ்ஞான வாரிசுகளில் ஒன்றான தொலைக்காட்சி மனிதனை எப்படி எப்படியெல்லாம் மனிதனை சோம்பேறியாக்குகின்றது. இந்த தொலைக்காட்சியின் சின்னத்திரை தொடர்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மனிதர்களை அவற்றில் முன்னால் கட்டி போடுவதை கண் கூடாக பார்த்திருப்பீர்கள். அவை எப்படி மனிதனை சோம்பேறியாக்குகின்றது என்பதை பாருங்கள் .....

    > தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பார்ப்பதால் கண்கள், உடல் என்பன சோர்வடைவதுடன் அவை மூளையை களைப்படைய செய்து சோம்பலை உருவாக்குகின்றது. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதனை நீங்களே அனுபவித்து உணர்ந்திருப்பீர்கள். இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்மவரை பெரிதளவு கட்டி போடும் சின்னத்திரை தொடர்களை எடுத்து பாருங்கள், அவற்றை பார்த்து கோபம், பழிவாங்கும் உணர்ச்சி, ஏமாற்றம், கவலை போன்ற உணர்வுகள் மனதில் உருவாகி மனிதனை சோர்வடைய செய்கின்றதே தவிர எவ்விதத்திலும் உற்சாகப்படுத்துவதில்லை, மனமும் உடலும் சோர்வடையும் மனிதன் சோம்பேறியாகாமல் என்ன செய்வான்?

    > இந்த நிகழ்சிகளை பார்பதற்காக தொலைக்காட்சி பெட்டிக்கு முன் முடங்கி கிடப்பதால் அயலவர், நண்பர்கள் உள்ளிட்ட ஏனைய மனிதர்களுடன் பேசும் நேரம் குறைகின்றது, அதனால் மனிதர்களுடனான புரிந்துணர்வு, நட்பு, கருத்து பகிர்வு என்பது குறைகின்றது. இதனால் பார்ப்பவர்கள் எல்லாம் புதியவர்களாகவும் விரோதிகளாவும் தோற்றமளித்து தன்னம்பிக்கை குறைகின்றது, அது குறைந்தால் மனிதன் சோம்பேறியாவான் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

    இது தவிர இந்த இடியற் பாக்ஸ் என்று அழைக்கப்படும் தொலைக்காட்சியுடன் முடங்குவதால் வெளியே சென்று உடல்பயிற்சி செய்வது, விளையாட செல்வது போன்ற உற்சாகமூட்டும் செயல்பாடுகள் குறைந்து மனிதன் சோம்பேறியாகின்றான் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

    தொடர்ந்து வருவது நவீன விஞ்ஞானதின் குட்டி பிசாசான கணணியும் இணையமும். இதை குறித்து பலரும் பேசியிருக்கின்றார்கள் என்பதால் சுருக்கமாக இரண்டும் சம்பவங்களை மட்டும் சொல்கின்றேன்.

    > பல்கலைகழகங்களிலும் பாடசாலைகளிலும் ஏதாவது ஒரு தலைப்பை தந்து அது குறித்து அலசி ஒரு கட்டுரையை எழுத சொல்வார்கள். அதன் நோக்கம் என்ன விடயமாக இருந்தாலும் அது குறித்து தெரிந்தவர்களிடம் பேசி புத்தகங்களில் அலசி ஆராய்ந்து கட்டுரையை எழுத கூடிய தன்மையை உருவாக்கி அதன்மூலம் உலகம் குறித்து ஒரு விசாலமான பார்வையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கி மனிதனை உற்சாகப்படுத்துவதுதான். ஆனால் இப்போது என்ன நடக்கின்றது? கட்டுரை எழுத சொல்லி கேட்டவுடன் இணையத்தில் சென்று கூகிள் போன்ற ஒரு தேடல் பொறியில் அதை தேடியவுடன் நேரடியாக பதில் கிடைக்கின்றது அந்த பிறர் உழைப்புகளை அனைத்தைய்யும் கலந்து கட்டுரையை எழுதி புள்ளிகளும் பெற்று விடுகின்றோம். இதில் அந்த கட்டுரையை எழுத சொன்ன நோக்கம் அனைத்துமே இல்லாமபோய் பிறர் உழைப்பை உபயோகிக்கும் சோம்பேறிதனத்தையே நவீன விஞ்ஞான இணையம் மூலம் பெறுகின்றோம்.

    > இப்போது நவீன விஞ்ஞான வசதிகளுடன் கூடிய ஒரு மென்பொருள் தொழிற்சாலையில் கணணிக்கு முன்னால் இருந்து செய்யும் வேலைக்கு ஒருவர் போகின்றார். அவர் வீட்டுக்கு வரும்போதே களைப்பாக (டயர்டாக இருக்கு, டெட் லைன் முடியபோகுது, தலை வலிக்குது இன்ன பிற புலம்பல்கள்) வருகின்றார். இப்படி அவர் களைப்படைந்து சோம்பேறி தனத்துடன் வர காரணமேன்ன சிந்தித்து பாருங்கள். தாயகத்தில் வயல்வெளிகளிலும் தோட்டங்களிலும் காலையிலிருந்து மாலைவரை வேலை செய்துவிட்டு வருபவர்கள் உடலை வருத்தி வேலை செய்துவிட்டு வந்தாலும் உற்சாகமாக இருக்கின்றார்கள். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கே புரியும் நவீன விஞ்ஞானம் மனிதனை எப்படி சோம்பேறியாக்குகின்றது என்பது.

    இனி சோம்பேறியாக்குகின்றது என்பதற்கான இறுதி கருத்தை பார்ப்போம். இந்த நவீன விஞ்ஞான தொழிற்நுட்பம் காரணமாக சூழல் மாசடைவதும் பூமியின் வெப்பம் அதிகரிப்பதும் ஓசோன் ஓட்டை விழுவது உங்களுக்கு தெரிந்தகதை, இது தீமைகளை தானே இவற்றால் மனிதன் எப்படி சோம்பேறியாகின்றான் என்று கேட்கிறீர்களா அதுதான் உங்களுக்கு தெரியாத கதை, இந்த சூழல் மாசாக்கம் வளிமண்டல மாசாக்கம் காரணமாக வளியில் ஒட்சிசன் அளவு குறைகின்றது. சுற்று சூழலில் ஒட்சிசன் அழுத்தம் குறைவதனால் நாம் உள்ளேடுக்கும் ஒட்சிசன் அளவும் இரத்ததில் இணையும் மற்றும் மூளைக்கு செல்லும் ஒட்சிசனும் குறைகின்றது, மூளைக்கு செல்லும் ஒட்சிசன் குறைவதால் மூளை சோர்வடைந்து சோம்பல் உருவாகி மனிதன் சோம்பேறியாகின்றான்.

    இதனுடன் எனது கருத்துக்கள் நிறைவு பெறுகின்றது இனி மழலையின் கருத்துகளுக்கு பதில் கருத்து எழுதலாம் என நினைக்கின்றேன்.

    மிகுதியை தொடர்ந்து எழுத முடியாமல் வெளியே செல்லவேண்டியிருக்கின்றது. ஏற்கனவே காலதாமதமாகிவிட்டதால் இவ்வளவையும் இணைத்துள்ளேன். மழலையின் வாதத்திற்குரிய பதிலை இன்றிரவு எழுதி எனது வாதத்தை நிறைவு செய்வேன் கொஞ்சம் காத்திருங்கள் நன்றி

  3. வியாசனின் உட்பட பலரின் வேண்டுகோளை ஏற்று அனைவருக்கும் பார்க்கும் வகையில் பட்டிமன்றத்தை பொழுதுபோக்கு பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.

  4. இல்லை ஏதாவது நம்பிக்கையான சாத்திரி சொன்னால் மாத்தி களத்திலை நம்மளை பாதுக்காப்பம் எண்டு தான்.... மதன் தான் தொடக்கிந்து ... சோ...... ஏதோ.... இருக்கு... :roll: :lol:

    எனக்கு எண் சாத்திரமென்ன ஒரு சாத்திரத்திலையும் நம்பிக்கை இல்லை, கனாமி அழிவு செய்திகள் ஏற்பட்ட புறக்கணிப்பை தொடர்ந்தே அந்த பெயரை மாற்றினேன்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.