விசுகு

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  27,035
 • Joined

 • Last visited

 • Days Won

  93

விசுகு last won the day on July 25 2016

விசுகு had the most liked content!

Community Reputation

3,571 நட்சத்திரம்

2 Followers

About விசுகு

 • Rank
  Advanced Member
 • Birthday September 30

Contact Methods

 • MSN
  vskugan5@gmail.com

Profile Information

 • Gender
  Male
 • Location
  ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests
  எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Recent Profile Visitors

8,850 profile views
 1. வாழ்த்துக்கள் நெடுக்ஸ் தம்பி வானுயரணும் என் தம்பிகள் 1981-82 காலப்பகுதியில் பம்பலப்பிட்டியில் இவ்வாறு கணணி படிப்பிப்பதாக அறிந்த எனது தமையனார் படி என்று சேர்த்து விட்டார் நோட்களும் செய்முறைகளும் பிடித்திருந்தாலும் கணணி ஒன்றை வாங்கும்படி கேட்டதால் (அப்பொழுதைய விலை தலையை சுற்றியதால்) அண்ணரிடம் சொல்லாமலேயே நிறுத்தி விட்டேன் அப்பொழுதே நண்பர்கள் சொன்னார்கள் இது தான் இனி உலகை ஆளப்போகிறது என்று தொடரந்திருந்தால் சுந்தர் பிச்சையப்பாவின் இடத்தில் இருநதிருக்கலாம்..
 2. பட்டது + படிச்சது + பிடித்தது - 150 வரலாற்று வெற்றியும் தோல்வியின் தொடக்கநாளும்..... இன்று உலகமே அதிர்ந்து போன உலக வல்லரசான அமெரிக்காவால் எவராலும் அசைத்துக்கூட பார்க்கமுடியாது என உத்தரவாதம் தரப்பட்ட ஆனையிறவு முகாமை புலிகள் தமது தியாகத்தையும் தமது மக்களையும் மட்டுமே நம்பி தகர்க்கத்தொடங்கிய நாள். எதிரிகளாக பகைவர்களாக இருந்த உலக நாடுகள் அனைத்தும் இவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என முடிவெடுக்க வைத்த தாக்குதல். https://www.thaarakam.com/2019/03/26/உலகை-அதிரவைத்த-புலிகளின்/
 3. இனி 24 மணியும் தடையற்ற வெட்டில்லா மின்சாரம் என போன கிழமை அறிக்கை ஒன்று பார்த்த ஞாபகம்??
 4. படித்த தமிழர்கள் பிழைப்புக்காக எம்மை விற்பது வரலாற்றில் இது முதற்தடவையல்லவே....
 5. உங்களுக்கு கருத்தாடலில் தடுமாற்றமும் ஒருவரை பழி தீர்க்கணும் என்ற வெறியும் இருக்கிறதே தவிர உண்மையை தேட அறிய எந்த எத்தனிப்பும் இல்லை மேலே ஒரு பொறி தான் வைத்தேன் மாட்டிக்கொண்டீர்கள் தாயகத்தில் பிரபாகரனை எவரும் தலைவனாக கொண்டாடுவதில்லை என்று தொடர்ந்து எழுதிக்கொண்டே இன்றும் அவர் தான் தமிழர்களின் தலைவர் என்பதை இங்கே ஒப்புக்கொள்கிறீர்கள் மக்கள் புத்திசாலிகள் என்பதை காவியபடி அவர்களது தற்போதைய தலைவர்களை ஓரம் கட்டுகிறீர்கள்
 6. எதுக்கும் ஒருக்கா கடைசியா எனது நிலையை பார்த்து வைப்பம்
 7. எமது இனத்தின் ரத்தத்தில் தோய்ந்த நாடுகள் நூறுக்கு மேல்.. அத்துடன் அநேகமான அரச அரச சார்பற்ற அமைப்புக்களும் தான் (ஐநா உட்பட) இவை எமக்கான நீதியை தீர்வை தரமாட்டா ஆனால் எமக்கு ஒரே ஒரு நம்பிக்கையுண்டு எமக்கான தீர்வை நீதியை தராமல் இவர்களால் நீதி தர்மம் பற்றியோ இன்னொரு இனத்துக்குள்ளோ அல்லது மக்களுக்குள்ளோ நீதி தீர்வு தர்மம் என்று சொல்லி புகவோ அல்லது சமாதானம் பற்றி பாடமெடுக்கவோ இனி வரலாறு இடம் தராது
 8. வரலாற்றுக் கடமையை தவறவிடாதீர்கள் ஈழமுரசு விடுக்கும் பணிவான வேண்டுகோள்! இன்னும் பல நூறு வருடங்கள் எம்மை கடந்து போனாலும் தமிழினத்தால் மறக்கமுடியாத வலிமிகுந்த ஓர் ஆண்டாக 2009 மே எமக்குள் ஆயிரம் இலட்சம் உணர்வுக் கலவைகளைத் தந்தபடியே இருக்கும். உன்னதம் மிகுந்த எமது விடுதலைப் போராட்டம் மௌனித்த பொழுது அது. பல ஆயிரம் எமது இரத்த உறவுகள் குதறி எறியப்பட்டு, கொன்று குவிக்கப்பட்ட குருதிகாயாத நாட்கள் அவை. உலகம் கள்ள மௌனத்துடன் பார்த்தும் பாரா முகமுமாக நின்றிருக்க, உலகின் பெரும் சக்திகள் சிங்கள பேரினவாதத்துக்கு ஆயுத, நிதி, வலுவூட்டல்களை எந்தவோர் அற உணர்வும் அற்று வழங்க, ஒரு தேசிய இனத்தின் மீது இனப்படுகொலை உச்சம் பெற்ற பொழுது அது. இப்போது பத்து வருடங்கள் கடந்துவிட்டன. நினைத்துப் பார்க்கமுடியாத பெரு வெறுமையையும் திசைகள் எதுவென்று தெரியாத காரிருளையும் இந்தப் பத்து வருடங்கள் எமக்கு தந்திருக்கிறது. பெரும் புயலும் ஊழிப்பெரு ஆட்டமும் நடாத்தி முடித்த மண்ணாக எமது நிலம் காணப்படுகிறது. உயிர்களையும் உடமைகளையும் மட்டுமல்லாமல் மானுடத்தின் மிக முக்கியமான உந்துசக்தியான நம்பிக்கையும் அந்த மே மாதத்து 2009 எம்மிடம் இருந்து வலுக் கட்டாயமாக பிடுங்கிச் சென்றுவிட்டது. ஒரு தேசிய இனம் என்று நாம் அடையாளம் காணப்படுவதற்கு ஏதுவான அத்தனை அடையாளங்களும் சிதைக்கப்பட்டு, குழப்பப்படுகிறது இந்த பத்துவருடங்களில். ஆனாலும் இத்தனை நம்பிக்கையீனங்கள் ஒளியே தெரியாத இருள் இவற்றுக்குள்ளாகவும் இந்த பத்துவருடங்களில் மிகச் சில குரல்களும் மிகச் சில எழுது கோல்களும் இன்னும் இன்னும் எமது விடுதலை வேட்கையை வென்றாகி விடவேண்டும் என்ற வேட்கையுடன் எமது தாயக விடுதலையை என்ற இலட்சிய நெருப்பை வெளிப்படுத்தியபடியே இருக்கின்றார்கள். யாரோ ஒரு சிலர் இப்போதும் தெருக்களிலோ, இராணுவமுகாம் வாசல்களிலோ, புலம்பெயர் தேசத்து வீதிகளிலோ - வெயிலிலும் மழையிலும் கொட்டும் பனியிலும் நின்றபடி தமிழ் மக்களுக்கான நீதிக்கான குரலை எழுப்பியபடியே இருக்கின்றார்கள். அந்த குரல்களில் ஒன்றாக கடந்த பத்து வருடங்களின் நினைவை, குருதி தோய்ந்த நினைவுகளை, உலகை நோக்கி நாம் இந்த பத்து வருடங்களில் எழுப்பிய குரல்களை நாம் பதிவுசெய்தாக வேண்டும். முப்பது வருடத்துக்கும் மேலாக எமது மாவீரர்களின் அற்புதமான அர்ப்பணிப்புகளாலும் மானுட வரலாறு காணாத தியாகங்களாலும் உருவான சுதந்திர எண்ணம் என்பது அழியாது அழியாது அழியாது என்பதை சொல்லுவதற்கும் இந்த பத்து வருட நினைவு பொழுதில் ஓர் ஆவணத் தொகுப்பை அச்சு வடிவில் வெளியிட உள்ளோம். இது வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சி மட்டுமல்ல. காலம் கடப்பதற்குள், நினைவுகள் அழிவதற்குள் நடந்த கொடூரங்களின் சாட்சியங்களாக உள்ள நாம் அவற்றை அப்படியே பதிவாக்கி வைத்துவிட வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பும், வரலாற்றின் கடமையும் கூட. இது எங்கள் நீதிக்கான சாட்சிப் பதிவு மட்டுமல்ல, எங்கள் இனத்திற்கு நடந்த பேரழிவு என்ன என்று அடுத்த தலைமுறைகள் வந்து தேடும்போது, நாம் அவர்களுக்கு விட்டுச் செல்லும் ஒரு பெரும் ஆதாரமாகவும், ஆவணமாகவும் இருக்கவேண்டும். இனத்தின் பேரழிவுகளை நேரில் பார்த்தவர்களும் அனுபவித்தவர்களும், அதற்காக உலகெங்கும் தொடர்ச்சியாக குரல் எழுப்பிப் போராட்டங்களை முன்னெடுத்தவர்களும், அமைப்புக்களும் இந்த அச்சு ஆவணத்துக்கு உங்கள் ஆதாரத்தை பதிவாக்குங்கள். நீங்கள் வழங்கும் சிறு பதிவும் வரலாற்றின் சாட்சியாக, தமிழர்களின் மீள் எழுச்சிக்கு உரம் சேர்ப்பதாக அமையும். உங்கள் அனுபவப் பதிவுகளை எதிர்வரும் 18.04.2019 இற்கு முன்னதாக எழுதி அனுப்பி வையுங்கள். இது வேண்டுகோள் அல்ல. உங்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமை. அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: eelamurazu@gmail.com நன்றி! ஊடகமையம் - பிரான்சு