Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

விசுகு

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  29,688
 • Joined

 • Last visited

 • Days Won

  100

Everything posted by விசுகு

 1. ஒன்றை MD 90 மோட்டச் சைக்கிளில் புத்தளத்திற்கு வந்தவர் 15/16 வருடங்களாக அமைச்சராக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜனநாயக கட்சியின் தலைவர் குறித்த இனத்தின் மக்கள் பிரநிதி 04 பாராளுமன்ற உறுப்பினரை கொண்ட கட்சியின் தவைவர் 169 பிரதேச சபை உறுப்பினரை கொண்ட கட்சியின் பிரதிநிதி நாட்டின் முக்கிய செல்வந்தர் ஆசியாவின் முக்கிய செல்வந்தர் தர வரிசையில் உள்ளவர் 70+ கம்பனிகளின் Chairman, MD/ CEO 2000+ ஏக்கர் காணிகளை அசையா சொத்துகளாக கொண்டவர். (இலங்கை காணி உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் வயல் காணி+ மேட்டு நிலம் உள்ளங்களாக ஒரு தனி நபர் 75 ஏக்கர் மட்டுமே சட்ட ரீதியாக வைத்திருக்க முடியும். ஆகவே தான் தனது தாயார், சிறிய தாயார் பெரிய தாயார் அத்தை மனைவி மனைவியின் சகோதர/ சகோதரிகள் சகோதரன் சகோதரனின் மனைவி சகோதரனின் மனைவியின் சகோதர/ சகோதரிகள் என்று முறையில் பட்டியல் நீளும் அத்தோடு தொலைக்காட்சி அலைவரிசை, வானொலி அலைவரிசை ஆகியவற்றுக்கு சொந்தக்காரன் ஆகியவர் தனது வீட்டில் சிறுமியை வேலைக்கு அமர்த்தியது மட்டுமல்லாது அந்த சிறுமியை துஷ்பிரோகத்திற்கு உள்ளாக்கியதிலும் இந்த மக்கள் பிரதிநிதிக்கும் பங்கு இருக்குமா? சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவரும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து இருப்பாரா என்றே சந்தேகம் எழுகிறது. உயிர்த்த ஞாயிறு (April-21) குண்டு வெடிப்பில் தொடர்பு என்ற வகையில் தன்னை கைது செய்த போது மனித உரிமை மீறல் அது இது என்று எல்லாம் கதறிய போது ஒரு வேளையில் அரசின் பழிவாங்கல் தானோ என நினைத்தோம். இப்போது புரிகிறது. சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் நிலைமைக்கு கூட அஞ்சாத இவர்கள் நிச்சயமாக தேவாலயத்திற்கு குண்டு வைப்பதற்கு ஒத்துழைக்க தயங்கி இருக்க மாட்டார்கள் என்றே சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். அத்தோடு சிறுமியை தனது வீட்டில் வைத்து அவரும் துஷ்பிரயோகம் செய்திருக்க கூடலாம்/ அவரும் உடந்தையாக இருந்திருக்கலாம்/ கண்டும் காணாதது போல் கடந்து சென்று இருக்கலாம். இதில் எதுவுவே இல்லை என்று மட்டும் மறுக்க முடியாது. இங்கு குற்றம் நிருபிக்கபட்டால் உடந்தையாக இருந்தவர் உட்பட குடும்பத்தோடு அதி உச்ச தண்டையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். நீதியின் பிடியில் குற்றத்திற்கு நியாயமான தீர்ப்பு வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் முதற்கொண்டு சம்மந்தப்பட்ட அவரின் மனைவி மனைவியின் சகோதரர் மனைவியின் தந்தை என துஷ்பிரயோகம் செய்தவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் என அனைவருக்கும் அதி உச்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அத்தோடு சிறுமி என்றும் பாராமல் வேலைக்கு அனுப்பிய பெற்றோர், தரகர் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும். https://m.facebook.com/story.php?story_fbid=931333840779102&id=435991913646633
 2. இந்த திரி பிள்ளைகளின் படிப்பு மற்றும் பணம் சம்பாதிப்பது பற்றி அதிகம் பேசியதால் தான் இவை பற்றி எழுதவேண்டி வந்தது. எனது அனுபவங்களும் பிள்ளைகளின் படிப்பும் அதன் இன்றைய பெறுபேறுகளும் சிலருக்கு உதவக்கூடும். அதிக பணம் சம்பாதிப்பதற்காக அல்லது மேலும் வசதிகளுக்காக நாடுகளை மாறுவதற்கு ஏதிரானவன் நான். அதையும் எனது மக்களுக்குள் ஊட்டி வைத்துள்ளேன். மற்றது என்னைத்தொடர்ந்து பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் உதவிகள் அல்லது நன்கொடைகள் சேமிப்புக்கள் .................. சார்ந்தும் இங்கே பதியணும் ஏனெனில் வீட்டில் இருந்தே நாட்டுக்கான நற்பிரசை உருவாகிறது. அதை உருவாக்குவதும் நமது கடமை அதிலும் தமிழருக்கு அது மிகமிக அவசியம். நேரம் தான்????
 3. தயாரிப்புச்செலவு எவ்வளவு செலவானாலும் எங்களுக்காக ஒரு பக்கம் உங்களுக்காக ஒரு பக்கம் ....
 4. இது பற்றி எழுதுவதென்றால் அது புத்தகமாகிவிடும் மூத்தவள் சாதாரண படிப்பாளி தனக்கு தேவையானவற்றை மட்டும் படித்துக்கொள்வாள் தற்பொழுது RH ஆக இருக்கிறாள் மூத்தமகன் கடுமையாக படித்து தான் புள்ளிகள் எடுப்பான் எஞ்சினியரிங் முடித்து இப்போ வங்கியில் Business Analyst ஆக இருக்கிறான் அடுத்த மகன் வீட்டில் படிக்கவே மாட்டான் ஆனால் நல்ல புள்ளிகள் எடுப்பான் (என்னைப்போல) எஞ்சினியரிங் முடித்து business management முடித்து இப்போ வங்கியில் Control Manager ஆக இருக்கிறான் அடுத்தவள் வீட்டில் இருந்தாலும் காரில் போனாலும் யாருடைய வீட்டுக்கு போனாலும் கையில் புத்தகம் இருக்கும் கடுமையாக முன் தயாரிப்பு மற்றும் ஊக்கம் உயர் தரப்பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் 20 க்கு 19.6 எடுத்தாள் வைத்தியம் படிக்காதே என்று சொல்லவா முடியும்??? ஒரே ஒரு விடயம் தான் நான் கேட்பது அதுவும் அவர்களுக்காக. படிக்கணும் அதில் மட்டும் செல்லம் கிடையாது மற்றும்படி அவர்களின் நல்ல நண்பன் 10 பாடம் என்றால் அவர்கள் என்ன துறையில் போக விரும்புகிறார்களோ அதில் மட்டும் நல்ல புள்ளிகள் எடுத்தால் எனக்கு சரி. 10 இலும் பிரகாசிக்கணும் என்பதெல்லாம் கிடையாது சிலவேளைகளில் அவர்களுக்கே அதிசயமாக இருந்ததுண்டு. என்ன இந்த பாடத்தில் இவ்வளவு மட்டமான புள்ளி எடுத்தும் அப்பா ஒன்றுமே சொல்லவில்லையே என்று. போன கிழமை இங்குள்ள லூர்து மாதா கோயிலுக்கு போயிருந்தேன் 1985 இல் முதன் முதலில் இங்கே போயிருந்தேன் கொழும்பில் இனக்கலவரத்தால் பறிக்கப்பட்ட எனது கல்வியை லண்டனுக்கு சென்று Chartered Accountant ஆகும் எனது கனவை கலைத்து தொடங்கிய வாழ்வு இன்று எங்கே நிற்கின்றேன் என்று கண்களை மூடி நினைத்தபோது.........??? எனது கனவை தொலைத்ததை நினைத்தபோது கண்கள் கலங்கினாலும் மக்கள் அதை முடித்து தந்த பேருணர்வு அமைதி தந்தது. முதன்முதலாக கடவுளுக்கு நன்றி சொல்லி புறப்பட்டேன்.
 5. இனி அவர்களுக்கு கத்தி வாளே போதும்??? கேட்க எவருமில்லை???
 6. இது தான் முதலாளித்துவ நாடுகளுக்கும் சோசலிச நாடுகளுக்குமான வித்தியாசம் அண்ணா.
 7. இரண்டு தரம் போடவேண்டும் இரண்டு தரம் போடவேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்திருப்பார். ஒரேநாளில் போட்டதால் சந்தோஷமாக அனுமதித்திருக்கலாம்
 8. இதில் எனது அனுபவத்தை குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்... 1 - எனது அறிவுரை இவ்வாறு இருந்தபோது அவள் வகுப்புக்கு சென்றபோது அங்கு அறிவுரை வேறாக இருந்தது உடனடியாக காசு உழைக்க விரும்புபவர்கள் இந்த துறையை விடுத்து வேறு உதாரணமாக எஞ்சினியரிங் படித்தால் 3வது வருடத்திலிருந்தே நீங்கள் பணத்தை பார்க்கமுடியும் ஆனால் இங்கு அப்படியல்ல. என்றே அறிவுரை சொல்லப்பட்டது எனது மகள் இதையும் என்னிடம் சொன்னாள் ஆனால் எனது வீட்டில் ஏற்கனவே 3 பேர் காசு சார்ந்த துறையில் இருப்பதால் அவளுக்கு அது முதலிலேயே தெரிந்திருந்தது 2 - வைத்தியத்துறையில் படிக்கும் எனது மகளுக்கு படிப்பிக்கோ அல்லது தொழில் பயிற்சிக்கென்றோ நான் இதுவரை ஒரு சதமேனும் செலவளித்ததில்லை. முழுக்க முழுக்க இலவசம்.
 9. கோதாரிவிழ இப்ப நானும் தவிக்கிறேன் தவழ்கிறேன் புகுந்து விளையாடி??? நானும் இதைத்தான் நினைத்தேன் ஏனெனில் வாதிடுபவர்கள் பலமானவர்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே.....??? நாலு பேருக்கு உதவும் என்றால் ????????? இது நம்ம பாணி..........
 10. ஆட்கள் மட்டுமல்ல வீடும் அராபிய நாடுகளின் குடும்பமாகவே இருந்திருக்கிறது???
 11. எனது மகள் வைத்தியத்துறைக்கான தெரிவில் எடுபட்டதும் நான் அவளுக்கு சொன்னது. நீ தெரிவானதால் எங்கள் வீட்டில் கொண்டாட்டம் சந்தோசம். இன்று நீ தெரிவாகாது ஒருசில புள்ளிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீ வேதனைப்பட்டிருப்பாய் ஏன் அழுதும் இருப்பாய் ஏன் நாம் அனைவரும் அழுதிருப்போம் ஆனால் உனக்கு இந்த இடம் கிடைத்ததால் உன்னை போல் எம்மைப் போல் இன்னொரு பிள்ளை குடும்பம் இன்று அழுதபடி இருக்கும். இதை ஒரு போதும் நீ மறக்கக்கூடாது. இதற்குள் சென்ற நீ தோற்றவர்களின் கனவுகளையும் சுமந்தபடி படிப்பது மட்டும் அல்ல சேவைகளுக்கும் உன்னை தயாராக்கி கொள்ளணும் என்று.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.