• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

PSIVARAJAKSM

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  164
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About PSIVARAJAKSM

 • Rank
  உறுப்பினர்
 • Birthday 04/25/1973

Contact Methods

 • Website URL
  http://www.sanganatham.blogspot.com
 • ICQ
  0
 • Yahoo
  SIVARAJATAMILNADU

Profile Information

 • Location
  Tamil Nadu
 1. வாழ்த்திய அனைவருக்கும் அன்பான நன்றிகள்
 2. வெள்ளை உள்ளத்துடன் பொக்கை வாய் பல்லை காட்டும் பச்சிளம் குழந்தையின் தொல்லை தாங்கவில்லையென்றா கள்ளை உட்கொண்ட காடையன் போல் காவு கொண்டாய்? இல்லை உனக்கில்லை மன்னிப்பு - இனி எல்லைப் பிரிக்காமல் - உன்னிடம் பல்லை காட்ட நாங்களென்ன மானமென்ற சொல்லை அறியாரோ? காடையனே உன் கணக்கற்ற படைகள் கண்டு நடைபினமாய் வாழ நாங்கள் சோடை போனவர்கள் இல்லையடா பாடை கட்டவே பதிலலிப்போம் நாளை மேடையிலெ வெற்று கோசம் போட்டு சாடையாலே பேசி சட்டென கால்பிடித்து தாடையை சொறியும் தற்குறியோ நாங்கள் - இல்லை கோடை இடியென எழுவோம்! கொட்டும் மழையென கொட்டும் எங்கள் வீரம் பட்டுடுத்தும் எங்கள் பாவையரும் பங்களிப்பர் சொட்டு சொட்டென சொட்டும் உன் ரத்தம எட்டு திக்கெட்டும் எட்டும் உன் மரண ஒலி!
 3. பட்டும் படாமல் இருப்போரை எல்லாம் தட்டிக் கொடுத்து தன் பக்கம் ஈர்க்காமல் - தலைகனத்து கொட்டிடும் தேல் எனவே கொட்டி கொட்டி வெட்டி விடுவதுதான் விடுதலைக்கு பங்களிப்பா? பெயருக்கு தலைவராக இருப்போரெல்லாம் பெரிய தலைவர்களை எல்லாம் சரியாக பகைத்து கொண்டே இருந்தால் யார் பக்கம் சாய்வார் அவர்? பட்ட மரமென்று ஒன்று இருந்தால் விட்டு வெட்டினால், வேர் விட்டு வெட்டினால் சட்டெனெ பெய்யும் மழையில் சடுதியில் துளிர்த்துவிடும் ஒட்ட வெட்டினால் நட்டம் நமக்கல்லவா? உயிர் காக்கும் பிரச்சனைகள் இருக்கும் போது மயிர் காட்டி கட்டுரை வரைவதும் - பதிலுக்கு வயிற்று பிழைப்பிற்க்கெ வக்காலத்து வாங்குகிறார் என்பதும் உயிர் காக்குமா? நம் தமிழர் உயிர் காக்குமா? எலி கூட்டமல்ல கலைஞரே - அது புலிக் கூட்டம்தான் - புவனியில் எதிரிகள் கிலி பிடித்திட படை நடத்தும் புலிக்கூட்டம்தான் பழிப்பதுபோல் சொல்லாமல்; பக்குவமாய் சொல்லுங்கள். விந்தையாய் இருக்கிறது நீங்கள் புலிக்கூட்டம் என்பது தந்தை பெரியாரால் திரட்டபட்ட தமிழர் கூட்டத்தை சந்தையாக்கி சாமர்தியமாக அரியனை ஏறியதை சிந்தையில் கொள்வீர்! சிறுமைப் படாதீர்!!
 4. இக்கரை இருந்தே சக்கரை சொல் சொல்கின்றீர் அக்கரை மீதென்ன அக்கரையா? அதனால் வருவதோ இக் கறை படிந்த வாதங்கள்? அலைந்திடும் மனமென்றே கலைத்திடவே கான்போர் மலத்திடவே; மொழிபெயர்ப்பால் வலைத்திடவே; மானத்தின் காலை எடுத்துவிட்டு மனத்தின் பெயரால் மருட்டுகின்றார் மனத்தின் குணத்தை கூறிடுவார் - நம்மை கணத்தில் சுருட்டிடவே சூது செய்தே வாது செய்வார் வம்பலப்பார் அவர் நம்பலம் வேண்டாமென்பார் மனபலம் போதுமென்பார் அவரை அம்பலம் செய்திடுவோம் நம்பலத்தை நம்பலாமே நம்பலத்தை நம்பினால் வென்றிடுவோம் பிறர் பலமென்றால் வெம்பிடுவோம் மனமென்பார் ஆத்மபலமென்பார் கர்ம பலனென்றே கடைசியி கவிழ்த்திடுவார் பாதை இதுவென்று பகர்ந்திடுவார் பற்பலவாக கதை விரித்திடுவார் நம் ஒற்றுமைச் சிதைத்திடுவார் தலைகாலிங் கறியாதே நிலைபாடு எடுத்திடுவார் - அவர் வலை விரித்திடுவார் பல கட்சியென்பார் மலை உச்சியென்பார் குச்சியில் இருக்கும் கோமனதுண்டே போதுமென்பார் கச்சிதமாய் நம்மை கவிழ்திடவே திரை மரைவில் திட்டஙகள் செய்து உரைத்திடுவார் நம் பெருமை குலைத்திடுவார் கரைத்திடுவார் நம் மனத்தை இல்லையெனில் குரைத்திடுவார் குற்றம் கூறிடுவார் இரையுறும் பொய்க்கு உலகென்றே குறைத்து கூறிடுவார்; குற்றம் கண்டிடுவார் மறையென்றே மருட்டியவர் ஏற்றம் கண்டிருந்தார் கூறிடுவார் எப்போதும் அகிம்சையென்றே கூடுவது சாது சங்கம் வேதாந்தமென்பார் அடிமை கொள்ள அலைந்திடுவார் ஏனையோரை அப்படியும் உலகத்தில் அனேகம் பேர் கழன்றிடுவோம் அவர் அடிக்கும் கூத்தை கணக்கில் கொள்ளார் சிங்களவன் அடிக்கும் கூத்தை கானாமல் தமிழர் நிலையை; புரட்டு பேசி கூத்து ஏணிந்த உலகத்தில் மாய கூத்து! துனிந்து தமிழா நீ இந்த நிலையை மாத்து ஏங்கினார் சீரழிந்தார் வீடிழந்தார் மனையிழந்தார் மாணவர்கள் படிப்பிழந்தார் மங்கையர்கள் மானமிழந்தார் துணைக்கு அங்கு யாருமில்லை சூழ்ச்சியினால் பிரிந்திருந்தார் மாட்சியினால் அரசாண்ட அவர் மண்ணில் சூழ்ச்சியினால் சிங்களவர் குடியேற்றம் தெளிவாக சூட்டசமத்தை தெளிந்ததனால் சொல்லாத மெளனமுதல் அகிம்சை வரை அத்தனையும் செய்துபார்த்தார் அழிக்கப்பட்டார் ஒளிப் பிறக்குமென்றே உறுதிக் கொண்டு அடிமையாய் இருந்து அழிவதைவிட போராடி வீழ்வதென்றே புகுந்தார் சமர்களத்தே வலிமையொன்றே இனி வாழவைக்குமென்று உணர்ந்துவிட்டார் மானம் போற்றும் மறவர் முன்னின்று மங்கையர் மானமிழந்தால் பாதகமில்லை மகத்தான மானத்தில் கால் எடுத்து விக்கினமாக்கி மனத்திலே வலியனாகி; மானம் போக்கி பேரான வறுமையும் அச்சமும் போக்கிடாமல் வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துகின்றார் - அவர் வாய்மைப் பாரீர்; அவரின் தூய்மை பாரீர் அச்சத்தினால் உறுதி அசைத்திடவே அச்சத்தினால் அவர் அமெரிக்கர் கால்பிடித்தால் - என்றே கூசாமல் பகர்ந்திடுவார் அமெரிக்காருக்கு அடைமையாவதை விட அருகிலிருக்கும் சிங்களவருக்கு அடிமையாவதே மேன்மையென்பார் சிறப்பென்பார் சிந்திக்கச் சொல்வார் யாருக்கு அடிமையென்பதே பிரச்சனையாக்கி ஊருக்கு உபதேசம் செய்தால் - அவர் பேருக்கு சுதந்திரம் வேண்டுபவர் என்றே பாருக்கு பாரதியின் பாட்டினாலும் பறையறைவோம்! தொண்டு செய்யும் அடிமை - உனக்குச் சுதந்திர நினைவோடா? பண்டு கண்டதுண்டோ? - அதற்கு பாத்திரமாவாயோ? ஜாதிச் சண்டைப் போச்சோ? - உங்கள் சமயச்சண்டைப் போச்சோ? நீதி சொல்ல வந்தாய்! - கண்முன் நிற்கொணாது போடா! அச்சம் நீங்கினாயோ? - அடிமை ஆண்மை தாங்கினாயோ? பிச்சை வாங்கி பிழைக்கும் - ஆசை பேணுதலொழித்தாயோ? கப்பல் லேறுவாயோ! - அடிமை! கடலைத் தாண்டுவாயோ? குப்பை விரும்பும் நாய்க்கே- அடிமை! கொற்றத் தவிசுமுண்டோ? ஒற்றுமை பயின்றாயோ? - அடிமை! உடம்பில் வலிமையுண்டோ? வெற்றுரை பேசாதே! -அடிமை வீரியம் அறிவாயோ? சேர்ந்து வாழுவீரோ -உங்கள் சிறுமை குணங்கள் போச்சோ? சோர்ந்து வீழ்தல் போச்சோ?- உங்கள் சோம்பரை துடைத்தீரோ? வெள்ளை நிறத்தைக் கண்டால்- பதறி வெறுவலை ஒழித்தாயோ? உள்ளது சொல்வேன் கேள்- சுதந்திரம் உனக்கில்லை மறந்திடடா! நாடு காப்பதற்க்கே - உனக்கு ஞானம் சிறிதுமுண்டோ? வீடுகாக்கப் போடா! - அடிமை! வேலை செய்யப் போடா! சேனை நடத்துவாயோ! - தொழும்புகள் செய்திட விரும்புவாயோ? ஈனமான தொழிலே - உங்களுக்கு இசைவதாகும் போடா!
 5. தன்னைத் தான் புசிக்கும் நரபுசிப்பு - என்றே மண்ணைத் தான் நேசிக்கும் மாவீரர்களை கண்ணைத் தன் நோக்கில் மேயவிட்டு வெந்தப்புண்ணித் தான் வேலைப் பாய்ச்சுகின்றோய்! எண்ணித்தான் பார்த்தீரோ எம் தமிழர்களை தண்டித் தான் தருக்குடை நீசர்களை கண்டித் தான் கள்ளமிட்டோரை மன்னித் தான் மற்ற மற்ற தவறுகளை துன்பத்தில் தான் துவன்டிருந்த மக்களுக்கு துன்பம்மிக தான் கொடுத்தால் மென்மேலும் கன்னத்தில் தான் கை வைப்பனையோ? தன்னைத் தான் எதிர்கும் தற்குறிகளை போல் தமிழரை தான் எதிர்கும் புல்லோருடன் நன்மைத் தான் சிறிதுமில்லா மிலேச்சருடன் தேசமும் தான் வேறான சிங்களவருடன் பேசும் மொழியும் வேறான புலையருடன் கடைச் சிறியோர் காதல் கொண்டே தம்முடைச் சோதரரிடம் மோதல் செய்தல் முறையோ நாட்டில் பொங்கும் சுதந்திர கனலை விட்டில் பூச்சிகள் விரைந்தழித்திடுமோ வீணர்களின் தூண்டுதலால் விபீடனனாகி விடுதைக்கும் விடுதலை வீரருக்கும் விலைகூறினால் அவரை வெம்மையோ டொறுத்தால் வீரர்தஞ் செயலாம் நம்மைத் தடுத்து வழி நடத்த தம்மைச் சாரதியாக்கிக் கொண்டு - கண்ணன் பார்த்தன் வழிப் பாருக்குரைத்ததை பாரதி நமக்குரைக்கின்றார் நல்லதோர் வீணை செய்தே நலம்கெட பூமியில் எறிவதுண்டோ என்றபாரதிதான் முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் காதலின் நண்பர் கலைதரு குரவரென்று இன்னவர் இருத்தல் கண்டு இதயம் நொந்தோனாய்த் தன்னரும் தெய்வத் சாரதி முன்னர் அய்யனே! இவர் மீதம்பையோ தொடுப்போன்? வையகத் தரசும் வானக ஆட்சியும் போயினும் இவர்தம்மை போரினில் வீழ்த்தேன் மெய்யினில் நடுக்கம் மேவுகின்றதுவால்; கையினில் வில்லும் கழன்று வீழ்கின்றது; வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது; ஓய்வுறுங்கால்கள்; உலைந்தது சிரமும் வெற்றியை விரும்பேன்; மேன்மையை விரும்பேன் சுற்றமிங்கருத்து சுகம்பெறல் விரும்பேன்; எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன், சினையறூந்திட்டபின் செய்வதோ ஆட்சி? எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன் கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து சோர்வோடு வீழ்ந்தனன்; கருதியின் முடிவாய்த் தேர்வையின் நின்றநம் தெய்விகப் பெருமான் வில்லெறிந்திருந்த வீரனை நோக்கி புல்லிய அறிவோடு புலம்புகின்றனையால் அறத்தினைப் பிரிந்த சுயோதனாதியரைச் செறுத்தினி மாய்ப்பது தீமையென்கின்றாய் உண்மையை அறியாய்; உறவையே கருதிப் பெண்மைகொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய் வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர் நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் - இன்னோர் தம்மோடு பிறந்த சகோதரர்ராயினும் வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
 6. எம்மொழி பேசி எம்மிலும் பிறறாய் எம்முணர்வு அறிவு இரண்டிலும் வேறாய் என்ன கருத்திலோ கரிகாலன் என்னிலும் அறிவில் குறைந்தவன் போலவும் என்னைத் துணைக் கொண்டு என்னுடை முயற்சியால்... என்னுடை பழகலால் எம்மொழி கேட்டலால் மேம்பா டெய்த வேண்டினன் போலவும் எம்முடை அறிவை என்மதி அளவை இவற்றினைப் பெருமையிலங்கின வென்று கருதுவான் போலவும் கரிகாலன் கண்ணன் சீடனாக வந்தென்னை சேர்ந்தனன், தெய்வமே! பேதை போல் நானும் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்தேன்! கள்ள கண்ணனாம் கரிகாலன் மெல்ல என்னை அனுகி அகிம்சையால் வெல்ல ஆலோசனை வேண்டுமென்றான் மெல்லும் வெறும் வாய் கிழவிக்கு வெல்லம் கலந்த அவுள் கிடைத்தது போல் நல்ல கருத்தினை நவிழ்கின்றேன் - என்றே மெல்ல ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தேன் நல்ல பேச்சை நாட்டிலே முழங்கு வல்ல கருத்தை வரிசையாய் வழங்கு இந்நூல் கற்பாய்; இப்படி மொழிவாய் இணையமுள்ளிட்ட இருநூற்றுக்கும் இரண்டே குறைவான வழிகள்தாம் இனவெறியினின்றும் தப்பிட இவையே போதுமென்றேன் உளவியல் தாக்கும், அரசியல் தலையீடென்றே அமைதியாக அரசுடைமைகளில் ஆளுமை செய் என பல தர்மம் எடுத்துக் கூறி ஓய்வில்லாது அவனொடு உயிர் விட்டேன் கருத்து பரவலை கவனமாக செய்ய பருத்த கொடிகளை பல வண்ணங்களில் கட்டிடென்றேன் சொந்த உடைமைகளை சுக்கலாக்கு கந்தலாடை உடுத்தி கவனத்தை ஈர் நன்றாக நடித்துக் காட்டு நயம்பட பாடிக் காட்டு கொடும்பாவியை எரித்துக் காட்டு கொடும் பாவியிடம் பல்ளித்துக் காட்டு வெளி நடப்பு செய்துக் காட்டு வாயில்லா ஊமைபோல் நடித்துக் காட்டு காட்டு காட்டு என்றே கட்டுக் கட்டாய் கதையை நான் காட்ட அவனோ கதையிலே கணவன் சொல்லுக்கு எதிர் செய்யும் மனைவிப் போல் நான் காட்டும் நெறிக்கெல்லாம் நேர் எதிரே நடக்கலானான் நானும் விடாமல் குறிப்பிட்ட சமூக புறக்கனிப்பு சரிப்பட்டால் சாத்தியபட்டால் சரிபடேல் ஒட்டுமொத்த புறக்கனிப்பு நானிலம் போற்றிடும் புகழும் நன்றாக அறிவும் கொண்டிருந்தும் நான் காட்டிய வழி விலகியே நடக்க என் மனம் நோக நடந்திட கண்டே இன்னும் சிலவற்றை சொல்லிடலுற்றேன் அரசு பணத்தை அவமரியாதை செய் அசலோ வட்டியோ அடைத்திடாதே வாங்கிய கடனை கொடுத்திடாதே வங்கியில் பணத்தை வைத்திடாதே அரசு வேலை செய்யாதே அரசவையில் பங்கு பெறாதே சொல்லிநான் கண்ணனை தொளைத்திடலானேன் தேவ நிலையில் சேர்ந்திடா விடிலும் மானுடந் தவறி மடிவுறா வண்ணம் கண்ணனை நானும் காத்திட விரும்பித் தீயெனக் கொதித்து சினமொழியுரைத்தும் சிரித்துரைக் கூறியும் செள்ளென விழுந்தும் கேலிகள் பேசிக் கிளரியும் இன்னும் எத்தனை வகையிலோ என் வழிக்கவனைக் கொணர்ந்திட முயன்றேன் கொள்பயனொன்றில்லை கவனம் செலுத்தாதது கவனத்தை ஈர்த்ததனால் கடும் கோபம் மேலிட கடுமொழி உரைத்தே செள்ளன விழுந்து சொல் என உரைத்தேன் கொள்ளென சிறித்தவன் கூறினான் ஒவ்வொன்றாய் ஒரு நூற்று தொன்றூற்று எட்டில் ஒன்றிரண்டை பலவற்றை நான் விட்டுவிட்ட போதும் ஒன்றும் விடாமல் ஒன்றொன்றாய் ஒப்பித்தான் ஒன்றும் விடாமல் எண்ணினேன் இருநூற்றுக்கு இரண்டே குறைச்சல் நன்றென்று கூறி நானும் கேட்டேன் எப்படி என்று நாங்கள் நடந்து வந்த பாதையை எங்கள் முன்னோர் கடந்து வந்த பாதையை நீங்கள் படித்து வந்து சொன்னீர் பலவற்றை விட்டுவிட்டீர் நாங்கள் பயண்படுத்தி பார்த்தவர்கள் - என்றே நமுட்டுச் சிரிப்புடன் நயமாகத்தான் சொல்லிவிட்டான் ஆனாலும் நான் நாணிவிட்டேன் சட்டென மறைந்து விட்டான் சடுதியில் ஏடொன்றை எடுத்து கொடுத்தான் படித்துப் பார்த்தேன் பதறிவிட்டேன் என்னவிருந்தது ஏட்டில்? அனைத்துக் கட்சிக் குழுவுக்கு ஜாதிக கெல உறுமய முன் வைத்த யோசனைகளின்படி தமிழர்களுக்கு இந்த நாட்டில் நில உரித்து இல்லை அதனால் அவர்களுக்கு சுயாட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது தமிழர்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினர் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்களுக்கு பிரஜா உரிமை உண்டு ஆனால் நில உரித்தோ சுயாட்சி உரிமையோ அவர்களுக்கு இல்லை, சிங்களவருக்கே உரித்தான ஒரே நாடு இது - கெல உறுமயா (தேதி 24.07.2007 பத்திரிக்கை: உதயன்) சொத்துடைமை இல்லையென்றதும் பொதுவுடைமை அங்கே பூத்துவிட்டதாக புள்ளறிவாளர்கள் சொல்லக்கூடும் நல்லறிவாளர்கள் நம்ப மாட்டார் நன்றி
 7. பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் செருபகையும் சேராதிருப்பது நாடு என வள்ளுவம் காட்டும் வளம்மிகு நாடாக நாடாத, நாடாததற்க்கு நாணாத நம் தமிழர்கள் இன்று இருப்பது போலவே என்றும் இருந்திருக்கின்றனர். எல்லையற்ற புகழுக்கு சொந்தக்காரர்களை ஏளனம் செய்யவும் ஏற்பாடு செய்துவிட்டது போலும் இயற்கை.இயற்கையின் சதியோ, இதயமற்றவர்களின் சூழ்சியோ! இன்று இல்லாதிருப்பதே மேல். இருந்தால் ஈழத்தில் வேழம் இருந்தாலும் வேங்கை இருந்தாலும் கீழாகும் தமிழர் நிலை. பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் உடைத்துவிடக் கூடும் தமிழர்தம் உறுதியை, உதாரணத்துடன் விளக்க உறுதி கொண்ட எமக்கு ஓடி வந்து உதவுகிறார் கலைஞர் இன்றும். இதோ அவர் கூறுகிறார் முதலில். முடிவில் நாமும் கூறுவோம். முதலில் அவர் முறை முதல் அமைச்சர் அல்லவோ அவர், அமைச்சரின் ஆலோசனைக்கு பின்பே அரசனாகிய நாம் (அதாங்க ராசா சிவராசா) முயற்சிப்பது நலம் என்பதால் அவர் ஆலோசனையைக் கேட்கிறோம். அவர் சொல்கிறார். பகல் நேரக் கதிரொளியாய் பரந்து விரிந்து வெளிச்சம் தந்த பழந்தமிழ்ச் சோழர்களாம் பாண்டியர் பல்லவர் சேரர்களாம் பயண் விளைக்கும் ஏர் முனையாய் பகை சாய்க்கும் வாள் முனையாய் பாரினிலே புகழ் எய்திப் பின்னர் தேரினிலே அச்சானி கழன்றாற் போல் தேயமெங்கும் ஒற்றுமை கட்டுக் குலைந்து தேய்ந்திடும் நிலவின் கோட்டும் பிறைகளாகி குழுக்களாய் குறுநில மன்னராட்சிகளும் - அவை குருவித் தலை பணங்காய் எனும் காட்சிகளும்- செங்கோல் மட்டுமே உடைமையாய்க் கொண்ட சிற்றரசர்கள் செயல்பட்ட மாட்சி (?)களும் இப்படி பல பிரிவுடனே களப்பிரர், கள்ளவரும் கலந்து, மூவேந்தர் முத்தரையர் கூட்டும் சேர்ந்து முரண்பட்ட சூழ்நிலைகள் முட்டியும் மோதியும் முடிவாகப் பகை, படை, போர் அழிவு என சிதைந்து "நேற்றிருந்தார் இன்றில்லை என்பதுபோல் எம்மோடு வீற்றிருந்தார் எங்கு போனார்?" என்று வினவிடும் நிலையில் வேற்படை, வாட்படை, வேழப்படை, புரவிப்படையிருப்பினும் வேலைகள் அவற்றுக்குள்ளவற்றை வீரர்பால் ஒப்படைத்துவிட்டு வியர்வை நீக்கிடவும், அயர்வைப் போக்கிடவும்- ஓய்வுக் கொண்டு உல்லாசம் அனுபவிக்க ஓடிவிடும் உத்தம தலைவர்களை விடுத்து; யுத்த களத்தில் போராட உத்தி வகுத்துச் செயல்பட்டவர்களால் பெருவெற்றி கிட்டியது- பெயருக்கு அரசர்களாக இல்லாமல் - அவர்கள் பேரரசர்களாகவே விளங்கினர்- வீரமும் வெற்றியும் கடையில் விற்றிடும் பொருள் என்றும் அதை பெறுவதற்குக் கூட கடவுள் அருள் தேவை என்றும் எண்ணுவோர், லட்சியத்தில் திண்ணியராய் இல்லாத காரணத்தால் கண்ணியம், கடமை, கட்டுபாடு கெட்டுப் போய், அந்த கெடுநிலைக்கான காரணங்கள் அனைத்தும் போக்கிட நெடுநாள் காத்திராமல் பெருந்திரன் காட்டியதால் இடைகாலமென அறுநூறு ஆண்டுகாலம்; எடைக்கேற்பத் தராசுத் தட்டு மேலும் கீழும் மாறி மாறி உயர்ந்தும் தாழ்ந்தும் ஏறியும் இறங்குவதும் போல தோன்றிய பல்லவ அரசில் துளிர்த்துப் பாண்டிய அரசில் செழித்த - இந்தத் தமிழகத்தின் மறுமலர்ச்சி, மீண்டும் சங்க காலப் பெறுமைப் பெற புத்துருகொண்ட சரிதத்தை இங்கிருந்து தொடங்கிடுவோம் இருண்டிடுந்த சோழ கிழக்குச் சங்கின் வெண்மை வானில் பரவும்; நம் வரலாறு, அந்த வான் மேவி ஒளிரும். நன்று கலைஞரே நல் ஆலோசனை நயமுடன் தந்தீர் நடந்ததை நாமும் முன் கூறி நடப்பதை பின்பு கூறி நாடிடுவோம் நல்லோர் கருத்தை கருத்துக் களத்தில். முன் ஒன்று கூறி பின் ஒன்று கூறி தடம் மாறும் தற்குறிகள் பின்கூறி புறமும் கூறிடுவர் தடுமாறி தம் நிலை மாறி செருபகை முன்னே பாழ் செய்யும் உட்பகையால் பல் குழு அரசியல் என்றால் பலமாய் மறுத்துரைப்போம் - தமிழர்களே சீண்டிடும் செருபகையின் முன்னே சீரழிவோம் பாழ்படுவொம் பல் குழுவாய் பிரிந்தால் சிந்தையில் கொண்டால் சிறப்புறலாம். அகிலத்தின் அங்கீகாரத்திற்க்கு பின்னான அரசியல் அமைப்புக் கான - அவர் அடிதளத்தை இட்ட பின்பும் அதுவல்ல அரசியல் முறை அறம் தோற்க மறம் புறம் போக அறங்கேற்றிடலாம் பல் குழுவை அடித்துக்கொள்ள செய்வோம் உட்பகையால் அடித்துகொள்ளும் அவரை அடுத்தடுத்து கெடுத்து கொல்வோம் அடிமை கொள்வோம் அதற்கான அரசியல் அங்கே ஏன் அறங்கேறவில்லை என்று அலுத்துக் கொள்வோர் அவணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பர் அவர் அறவழி நின்று கூறட்டும் அவர் அவாவின் உண்மை நோக்கத்தை.
 8. அவர் இருந்தால் இவர் இருந்தால், அவரெல்லாம் இருந்திருந்தால் இந்நேரம் மாற்று வாய்ப்புகள் மள மள வென்று வந்து ஐ.டியிலும் அண்டை நாட்டிற்க்கு சவால் விட்டிருப்பார். எல்லாம் குட்டி சுவராகிவிட்டது குற்றமில்லையா? குறிக்கோளை அடைய குறுக்கு வழியில் செல்கிறார்கள். அதனால்தான் அத்தனை தாமதம். குற்றம் சாட்டுகிறார்கள் சிலர். அழகான வார்த்தைகளும் வகை வகையான சான்றுகளும் வந்து விழுந்தபோது, நாமும் சற்றே சலனப் பட்டோம், சட்டென வந்து கலைஞ்சர் சொல்கிறார். அவர் இவர் வளரவில்லை என்பது அவசியமற்றது. இந்த மாற்றமே மகத்தானது அதுதான் படிமுறை வளர்ச்சி என்று சொல்லி வழிபடுத்துகிறார் பாருங்கள். மாற்றம் எதுவும் மறுநாள் விடிந்ததும் வந்திடவில்லை மாந்த குரங்கினம் எழுந்து நிற்கவே மாமாங்க காலம் ஒன்றிரண்டு பலகோடி வரவேண்டியிருந்தது மனிதனாய் குரங்கு மாறிட மாநாடு போட்டுத் தீர்மானம் நிறைவேற்றினால் போதுமா? பரிணாம வளர்ச்சி என்பது பல்லாயிரம் ஆண்டுகள் பட்டறையில் வைத்து உளியொன்றை உடை வாளாக்குவதன்றோ? இலெமூர் குரங்குகளுக்கு பற்கள் முப்பத்தி ஆறு இதற்க்கடுத்து தோன்றிய குரங்கிற்க்கு முப்பத்தி நாலு மணிகணக்கில் மாறிவிட்ட பல் எண்ணிக்கையல்ல - அந்த எண்ணிக்கை மாற்றத்துக்கே இடையில் எத்தனையோ நூற்றாண்டு! கற்கால மனிதர்க்கு பற்கள் முப்பத்தி இரண்டென முளைத்துளதும்; பிற்காலத்தில் இருபத்தி எட்டேதான் என மாறிடும் என்கின்றார்; வாலூன்றி நின்ற வானரப் பிராணி காலூன்றி நிற்பதற்க்கும் நடப்பதற்க்கும் ஒலிம்பிக் தடகளத்தில் ஓடுகின்ற மனிதப் பிராணி ஆவதற்க்கும் இடையில் ஓடியது: எத்தனை ஆயிரம் நூற்றாண்டு இதற்குப் பெயர்தானே படிமுறை வளர்ச்சி, பரிணாம வளர்ச்சி என்றும் பகிர்ந்திடுவர். - கலைஞர் பேரின இனவெறியின் இறுமாப்பு இறங்கிட இயங்கியதும் வேங்கையின் இணையற்ற வீரமே காரணம் இயம்பிடுவர் இயல்புணர்ந்தோர் இந்தியாவிற்கு விடுதலை இரவினில் கிடைத்ததனால் இரவே விடுதலைக்கு காலம் - என்று இயம்பிடுதல் அறிவோ! முறையோ! அகிம்சையா? ஆயுதமா? என்பதுவும் அடக்கியாள்பவரின் ஆணவம் தீர்மானிப்பது அகிம்சை காப்பதற்க்கும் ஆயுதம் தேவை அறிவிப்பதும் அகிம்சை நாடுதான் அதனால்தான் அகிலத்தில் நான்காவது பெரிய இராணுவம்! அகிம்சை வென்றும் ஆயுதம் இங்கே அகிம்சை தோற்றதனால் ஆயுதம் அங்கே இது சரி ஆனாலும் அது தவறு! ஆகா! என்னே அழகான நிலைப்பாடு? அவரரெல்லம் வளர்ந்திருந்தால் அகிம்சையாலே விடுதலை அடைந்திருப்பார்! அதற்க்கெல்லாம் காரணம்... அழகாகத்தான் சொல்கின்றார் அதற்கும் கலைஞரே பதிலிருக்கிறார் பழம்பெரும் நாகரிகத்தின் தொட்டில்கள் என சுட்டிக் காட்டப்படும் எகிப்து, மாயா, மெசபதோமியா அவைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு எடுத்த எடுப்பிலேயே சிந்துவெளி நாகரிகம் கண் சிமிட்டுவதால் கருநிலை அதற்க்கெங்கே யென்று கடும் ஆய்வு நடத்தியவர்கள் கடலுக்குள் மூழ்கிய குமரிக் கண்டப் பகுதியை கழறுகின்றார்; நாமும் காணுகின்றோம் மலைப்பு விளைக்கும் கேள்வியொன்றை மதிவாணர் எழுப்பி விடையும் கூறுகின்றார் குரங்கிலிருந்து மாந்தன் தோன்றியதாய்ப் பரினாம வளர்ச்சி பகற்கிறதே இன்றுள்ள குரங்குகள் ஏன் அன்று போல் மாந்தராய் மாறவில்லை? சிறிய செடி பெருமரமாய் வளரும் போது உச்சக் கிளை மட்டுமே உயர்ந்து கொண்டே போகும் பக்கக் கிளைகள் நாம் பார்த்த இடத்திலேயே நிற்கும் நிலை போலவே படிமுறை யெனும் பரிணாம வளர்ச்சியும் பாடமாய் அமைகிறது பகுத்தறிவு பதில் தறுகிறது மிதித்தி குழைத்த சேறு; நம் மதித்து காத்திடும் சுவராய் மாறுது! குழைத்த இடத்தில் கிடக்கும் சேறு குட்டிச் சுவராகக் கூட பெறுவதில்லை பேறு குரங்கினமும் அப்படித்தான் கொலுவேறிக் குந்துகின்ற மனித இனமாக ஒருபக்கம் உயர்ந்தாலும் மண்ணிலே குழைந்த சேறு மிச்சமாக மண்மீதே கிடப்பது போல மனிதரிடையே மாந்த குரங்கும் இருக்கும். அன்புள்ள அங்கைனெட் இப்போது புரிகிறதா? அவரும் இவரும் வளராததற்க்கு காரணம்.
 9. நகைவர நாணம் கொள்வார் நம் காந்திய வழியை வழிமொழிபவர்களும் நாகரிக சமூகத்தின் விடுதலைக்கான வழி இதுவே என்று நாசூக்காக சுட்டுபவர்களும் நடந்ததை உணர்ந்தால். தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியேற்றி தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகளில் அவர்களை சிறுபான்மையாளர்களாக மாற்றிட்ட சிங்கள நய வஞ்சக தந்திரங்களை தரணிக்குணர்த்த தன்னந்தனியனாக தமிழர்களில் ஒருவன் உண்ணா நோன்பிருந்தான். உண்மையை நேசிக்கும் உயர் குணமுள்ள உங்களிடம் கேட்கிறேன், உண்ணா நோன்பை உலகுக்குணர்திய உத்தமர் காந்தி உண்ணா நோன்பிருந்துதான் உயிர் விட்டாரா? இல்லையே! ஆனால் அயோக்கியர்களிடமிருந்து தம்முடைய உயிரை உடமையை மானத்தை காக்க ஆயுதம் ஏந்தியிருக்கும் அந்த தமிழ் மண்ணில் தமிழன் ஒருவன் உயிர் விட்டானே அது தானே உண்மை, அதுதானே வரலாறு. இதோ அருணாசல பிரதேசத்திற்க்கு அருகில் இருக்கும் சீனா, நம்மிலும் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, நம் நாட்டின் அருணாசல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா, நம்மைவிட வலிமையுள்ள சீனா, அய்க்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்க ஆசை கொண்டு ஆள் தேடி கொண்டிருக்கும் நமக்கு முன்னரே அங்கம் வகிக்கும் சீனா, தன் மக்களை வலிந்து குடியேற்றி அருணாசல பிரதேசத்தை தம் பிரதேசமாக தரணிக்குணர்த்த முற்ப்பட்டால், இந்தியாவின் இணையற்ற ஆய்வாளர்களும் ஆலோசகர்களும் என்ன செய்வார்கள்? அகிம்சை நாடுதானே இந்தியா? அகிம்சை நாடுதானே இந்தியா! அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்து அருணாசல பிரதேசம் இந்தியாவின் பகுதி என்று அறிவிக்கத்தான் இந்திய இராணுவத்தை பயண் படுத்துவோமா? அல்லது தமிழ்நாட்டில் தரமான மந்திரங்களை பயின்ற அய்யர்களையும் அய்யங்கார்களையும் அழைத்து சென்று யாகமும் பூசையும் நடத்துவோமா? அல்லது மலையாளத்து மந்திர வாதிகளையும் நம்பூதிரிகளையும் அழைத்து மந்திரம் ஏவுவோமா? அகிம்சை நாட்டிலேயே மொழிவாரி மாநிலங்கள் பிர்க்கப்பட்டு கர்நாடகம், பஞ்சாப், வங்காளம் என்று மொழிகளின் பெயரால் மாநிலங்கள் இருந்த போதும், தமிழ் நாட்டிற்கு தமிழ் நாடு என்று பெயர் வைப்பதற்கே உண்ணாவிரதமிருந்து உயிர் விட்ட சங்கரலிங்கனார் கதையை வரலாற்றை கேட்ட பிறகும் அகிம்சை நாட்டிலேயே அகிம்சை வழி போராட்டங்களின் கதி இதுதான் என்றபோதும் அகிம்சை வழியில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு 1987ல் இலங்கை பேரினவாத இனவெறியாகட்டும் இந்தியாவாகட்டும் அகிம்சைக்கும் அகிம்சை போராட்டங்களுக்கும் எதிராகத்தான் நடந்திருக்கின்றன என்பதை தன் உடலால் உயிரால் நிறுபித்து காட்டிய தீயாக செம்மல் "திலீபன்" 1987 செப்டெம்பர் 15ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திலீபன். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலங்கி நிற்க திலீபன் அழைப்பது சாவையா - இந்த சின்ன வயதில் இது தேவையா திலீபன் உயிரை அளிப்பாரா - அவன் செத்தபின் மாற்றார் பிழைப்பாரா என உணர்ச்சி கவிஞ்சர் காசி ஆனந்தன் குமுற விண்ணிலிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற மகன் கண்ணெதிரே இந்த கட்டிலிலே முடிகின்றான் பத்தோடு ஒன்றா- இவன் பாடையிலே போவதற்கு சொத்தல்லோ - எங்கள் சுகமல்லோ தாலாட்டு பாட்டில் தமிழ் தந்த தாய்குலமே போராட்ட வீரன் போய் முடியப் போகின்றான் - போய் முடியப் போகின்றான் போய் முடியப் போகின்றான் என்று புதுவை இரத்தின துரை கதற உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட திலீபன் சொல்கின்றான் " இந்த இனம் - இந்த தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் போராடும்! புல்லையும் எடுத்து அது போராடும்; அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது; ஆயுதம் இல்லாவிட்டாலும் உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக நியாயத்திற்க்காக நீதிக்காக அது எந்த சக்தியையும் எதிர்த்து போராடும்." ஆனைமங்களத்து செப்பேடுகளும் அகழ்வாராய்ச்சிகளும் அதிசயித்து போற்றும், இதோ இன்றும் தஞ்சை தரணியிலே தலைநிமிர்ந்து நிற்கும் பெருவுடையார் கோயிலும் சொல்லும் இராஜராஜன், புத்த சங்கத்தினர் மனமுவந்து தங்களது அரசை அளித்த போது மறுத்தளித்து தனது 19ம் பிராயத்தில் சொன்னானே "சொந்த தமக்கைகளையே காமுறும், தாயாதிகளையே அரசுக்காக கொள்ளும் இந்த சிங்களவரின் கிரீடத்தை எனது இடது கையாலும் தோடேன்" என்று அந்த சிங்களவரிடமா அகிம்சை போராட்டம் வெற்றிப் பெரும்? இதயமுள்ளவர்களே இயம்பிடுங்கள். இத்தனைக்கும் பிறகும் இதுதான் வழியென்று நீங்கள் சொன்னால்!, நாங்கள் எதைச் சொல்லி எப்படி உங்களுக்கு புரிய வைப்போம்.
 10. ஒழுங்கா மரியாதையா அடிமையாக இருந்தா இப்படி நடக்குமா? இனவெறின்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அது கடுமை குறைய கொஞ்ச நாள் ஆகும் குறையாம கூட இருக்கும். பட்டினியும் படுகொலையும் இருக்கத்தான் செய்யும். பயங்கரமா இருக்குங்க, அவங்கள பார்த்தா பரிதாபமா இருக்குங்க, நெஞ்சு துடிக்குதுங்க. இருக்கும் இருக்கும் இருக்காத பின்னே! அதுக்கு என்ன செய்யிறது, ஆனாலும் பாதகமில்லையே, ஒட்டு மொத்தமா கொல்லலியே அங்கே இங்கேன்னு 100ம் 200மாகதானே கொல்கிறாங்க. இப்போது இருக்கிற இந்த அமைப்பு மட்டும் இல்லாம வேற அமைப்பு இருந்திருந்தா அடடா? என்னங்க சொல்றீங்க? அசடு!, ஈழத்தமிழர் நிலமய முதல்ல பார்த்ததும் சத்தியமாச் சொல்றேன், நான் பயந்துதான் போனேன். ஏன் இனவெறி அப்படி இருந்தது. பிறகுதான் அமைப்பை பார்த்தேன், அது தானே முக்கியம். நல்ல வேலை அது நல்லாத்தான் இருக்கு, அதனால ஒரே அடியா அழிஞ்சிடமாட்டாங்க, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கும், இந்த அமைப்பு மாறுச்சுன்னா ஒட்டுமொத்தமால்ல அழிஞ்சிடுவாங்க! என்னன்னமோ சொல்றீங்க, ஒன்னும் புரியல அசடு! அசடு! நானா சொல்றேன் நாட்டு நடப்பு அப்படித்தானே. அந்த நாட்டிலேயும் அப்படித்தானே இருக்கு இந்த நாட்டிலேயும் அப்படித்தானே இருக்கு, இருக்காதா பின்னே, அதுதானே முக்கியம். நான் என்ன மத்தவங்கள போல உலக அறிவு இல்லாதவனா? அல்லது மூலை சலவை செய்யப்பட்டவனா? நான் சொல்கிறேன் இப்ப இருக்கிறதும் ரொம்ம மோசமில்லை. பிறந்தவங்க எல்லாம் ஒருநாள் சாகத்தானே போறாங்க. எல்லாரும் என்ன கல்லும் சாந்தும் போட்டு கட்டி வச்சிருக்க முடியுமா? அது அவங்க அவங்க விதிப்படிதானே நடக்கும். அண்ணன் தம்பிக்குள்ளேயே அடிச்சிகிறது இல்லையா? அதோட இது கொஞ்சம் பெரிசு அவ்வளவுதான். அதுக்கு ஏன் அலட்டிகிறீங்க. அளவுதான் பெரிசு மத்தபடி எல்லாம் ஒன்னுதான். நாட்டிலே நடக்குறதுதான். நம்மளுக்கு அந்த நாட்டிலேயும் இந்த நாட்டிலேயும் நடக்கிறத பத்தி ஒரு மண்ணும் புரியல. ஆனாலும் அந்த அண்ணன் தம்பி பிரச்சனையின்னு சொல்லுறது சரியாத்தான் படுது. இருக்காதா பின்னே அவரு எவ்வளவு கணக்கு போட்டு கச்சிதமா சொல்லுறாரு!. அவருக்கு தெரியாதா? அவர் சோர(ர)ம் போ(ன்)றவங்க பத்திரிக்கையெல்லாம் படிக்கிறாங்க, ஆங்கிலமெல்லாம் அழகாத்தான பேசிறாங்க. ஆனாலும் அங்க ஒரு அண்ணன் வேற மாதிரி சொல்றாரே! அதனால கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கு! பார்ப்போம். ஆனாலும் ஈழத்தமிழருக்கு அவர் சொன்னதுல அவ்வளவு நம்பிக்கையோ திருப்தியோ இல்லை! சாவு விழுவது அவங்க வீட்டிலல்ல. ஆனாலும் யார் மீதும் நம்பிக்கை இழக்கவில்லை. எல்லோரையும் நம்புறவர்தான் அவர்கள். அனால் அவர் சொல்வது சரியல்ல என்பது தான் ஈழத்தமிழரின் எண்ணம். அது மட்டும் தானா இதோ இன்னொன்று. எல்லாம் தெரிந்த ஏகாம்பர ஆய்வாளர் முழங்குகிறார். சீனாவின் ஆயுதம் இந்தியாவின் ரேடார் தெரிஞ்சு கொடுத்தது தெரியாம என்னன்னவோ! உலகத்தின் தாரள கடன், அமெரிக்காவின் ஆதரவு அய்ரோப்பாவின் பார்வை பாகிஸ்தானின் பார்வை ஆள்பலம், மிக்29, மல்டி பரல் பீரங்கிகள் கூட்டி கழிச்சி பார்த்தா ஈழத்தமிழர்கள் அடிமையா இருக்கிறதே நல்லதா படுது. என்ன நான் சொல்றது? ஒரே அடியா அழியாம, கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சி போறது நல்லதுதானே! இனவெறி அப்பப்ப கூடும் குறையும் அதுக்கு பேரு சமூகவியல்ல என்னமோ சொல்லுவாங்க, சட்டுன்னு நினைவுக்கு வரல, மனசிலேயே இருக்கு வாயில வரல. ஏகாம்பரத்துக்கும் ஊர்ல நல்ல பேரு. ஈழத்தமிழர்கள் சோர(ர)ம் போ(ன்)றவங்க கணக்கு, ஏகாம்பரத்தின் கணக்கு இரண்டையும் தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு அல்ல என கருதி அடிக்கடி மெல்லிய குரலில் ஆனாலும் தீர்மானமான குரலில் இதனால என்ன நடக்கும். இவைகள் எப்படி என் பிரச்சனையை தீர்க்கும் என்று கூறுவார். ஆதோ நம்ம இனவெறி அண்ணன் தன் தம்பிகிட்ட என்னவோ சொல்றார் என்னன்னு கேட்போம். நம்ம நிலம மோசமா இருக்கும்போல இருக்க என்ன செய்யலாம் மிக்29ம் ஆயுதங்களும் வாங்கனும்ண யாரு கடன் கொடுப்பா? இப்படி சொல்வோம்ண எப்படி குடு..குடு...குடு..குடு.................. ஓம் மலையாள பகவதி...... குடு..குடு...குடு..குடு.................. சக்கம்மா சட்டுன்னு வந்து சொல்லு எல்லாருக்கும் கெட்ட காலம் தொடங்கிடுச்சு... அதோ நாராயணன் வந்து சொல்றார் நமக்கும்தான்னு... இந்தியாவுக்கு ஆபத்து!...... ஆசியாவுக்கும் ஆபத்து!...............ஏன் உலகத்துக்கே ஆபத்து.... ஆனாலும் வரப்போற ஆபத்த பத்தி கவலைபடாதீங்க... நான் இருக்கன்ல நான் எல்லோரையும் காப்பாத்துரேன்... எனக்கு காணிக்கையை வெட்டுங்க........ இல்லன்னா நீங்களெல்லாம் அழிஞ்சிடுவீங்க........... சக்கம்மா சொல்றா......... நம்புலன்னா நாராயணன கேட்டுப் பாருங்க.............. இதுவும் ஒர்கவுட் ஆகுத தம்பி. ஆனாலும் அங்க இருக்க அவனுங்க சொந்த கார பசங்க அழுது அழிச்சாட்டியம் பன்ன மாட்டாங்களா.. அத பத்தி நமகென்னண்ணே கவலை..அவங்களுக்கு ஆறுதல் சொல்லதான் நம்மக்கிட்ட சோர(ர)ம் போ(ன்)றவங்க இருங்காங்க இல்ல...அத அவங்க பார்த்துப்பாங்க.. அது சரி தம்பி அவங்க வீரனுங்களா இருக்காங்களே நம்மை ஓட ஒட விரட்டுராங்களே நம்மால அவங்கள அழிக்க முடியுமா? முடியும்னே அதுக்கு 3 ஆண்டு திட்டம் இருக்குன்னே? என்ன தம்பி சொல்றே அங்கே ஈழத்தம்பி ஒருத்தன் இருக்காண்ணே, அவன மூன்று ஆண்டுல முடிச்சுட்டு. அவங்ககுள்ள போட்டிய உருவாக்கி விட்டுட்டா அவனுங்கக்குள்ளேயே அடிச்சுக்குவானுவ.. அதையும் நம்மகிட்ட சோரம் போனவங்க துவக்கி வச்சிடுவானுங்க. அந்த கவலைய விட்டுடுவோம்ன... இவ்வளவு நடக்கும் போதும் அந்த நண்பர் எதோ சொன்னபிறகு ஈழத்தமிழர் கொஞ்சம் பயம் கொறஞ்சாபோல இருக்கிறார் என்னனு கேட்போம் என்ன சொன்னார் அந்த நண்பர்? அதுவாண்ணே, நம்ம தம்பி புத்திசாலியாகவும், திறமையாகவும் இருப்பதாலே அவங்க எங்கேயிருந்து ஆயுதம் வாங்கினாலும் அதுல பலது நம்ம தம்பிக்கிட்ட வந்துடும்ன்னு சொல்லுண்ணே..இல்லியாண்ண பின்னே! தம்பிங்க இருக்கிற வரைக்கும் எங்களுக்கு நிம்மதி அண்ணே! அது நல்லயிருக்க ஏதாவது செய்யினும்ணே!.
 11. விடுதலை வேட்கை கொண்ட வேங்கைகளில் ஆணும் பெண்ணும் சரிசமமாம்- அகிலம் வியக்க ஆற்றிடும் பணிகள் பலப் பலவாம் ஆணும் பெண்ணும் சரிசமமாம்- அதனால் அங்கில்லை பேரணிகள் பெண்கள் நியாம் கேட்டிடவே! கற்புக் கரசி சண்ணகியின் வழித் தோன்றல்களாம் கயவர்களெல்லாம் கலங்கிடவே ஈன்றிடுவர் அவர் களைகளாம் களம் சென்றால் அவர் வேங்கைகளாம் கயவர்கள் இவர் எதிர் நின்றால் பேடிகளாம்! வின்வெளி பயண வில்லியம்ஸ் சுனிதாவுக்கும் வீசிடும் கரத்தால் வெற்றிகள் குவிக்கும் மிர்சாவுக்கும் சமர்களத்தில் சாதனைகள் பலப் புரியும் சத்தியத்தின் புதல்விகளாம் சாதனை மகளிர் இவர் சளைத்தவரோ! பிறர் வாட பலப் பல செயல் புரிச்து பொருள் தேடி பொருள் குவித்து பொதுவுடைமை கொள்கைகளை தூக்கிலிடும் பேய் மகளிர் பிள்ளைகள்தாம் பிள்ளைகளோ! வேடமிட்டு வேடம் மாற்றி வேசம் போட்டு விதவிதமான வேடிக்கை கதை புணைந்து வேண்டியவர்களை காமுற்று பிள்ளைபெறும் வேசி மகளீரெல்லாம் மகளீரோ! சதிராடி சாமார்தியம் பேசி சமயம் கிடைக்கும் போதெல்லாம் சோரம் போய் சபை நடுவே நின்று சத்தியம் பேசுவோர் இவை உணரார் சம தர்ம சமுதாயம் படைத்திடவே சளைக்காமல் செயல் புரிந்த சாதனை மனிதன் லெனினின் தாயை சல்லடையாக துளைத்த வார்த்தைகள் எத்தனை? எத்தனை? உனக்கென்னம்மா கவலை ஒரு பிள்ளை தூக்கில் ஒரு பிள்ளை சிறையில் இதுவல்லவோ குடும்பம் இவளல்லவோ தாய் இவளால் இங்குள்ளவர்களுக்கு எத்தனை எத்தனை பிரச்சனை அன்று அங்கைநெட் இருந்தாலும் அப்படித்தான் கூறியிருப்பார் அவர் கூற்று அவலங்களை துடைப்பதற்க்கா? அவலங்களை காட்டி அச்சுறுத்தி ஆதிக்க வர்கம் அடிமை கொள்ள துணைநிற்க்க அவர் ஆதிக்க வர்கத்தின் அடிவருடிதானே ஏகாதிபத்தியத்தின் எடுபிடிதானே அதனால் தான் கூறுகின்றார் பாருங்கள்! ஆனாலும் அங்கு உணவனுப்ப ஒருக்கார் உடண்படார் மருந்தனுப்ப மானுடம் பேசுவர் இதற்கு மறுப்பது ஏன்? இப்போது திரும்பவும் படியுங்கள் அவர் மொழியை அழகாகத்தான் அழுதிருப்பார் அதற்க்கு இருக்கும் ஆயிரம் காரணங்கள் ஆடு நனைய ஓனாய் அழுதகதை அறீயீரோ நீங்கள்? அதோ பாருங்கள் அங்கைநெட்டை அழகாக புரியும்! அதுவல்லவோ அழுகை ஆராரோ! ஆரிராரோ பாட ஓம்பிரகாஷ் வரலாம், வலியுள்ளவர்களுக்கு தெரியும் வாய் ஜாலாம் அதுவென்று
 12. அண்டம் நடுங்கும் இராணுவமுண்டு பிண்டத்திற்கஞ்சா கப்பல்களுமுண்டு விண்னை கிழிக்கும் விமானமுண்டு வேண்டிய மட்டும் திறமையுண்டு நாட்டில் இழந்ததை மீட்டிடுவார்- அதற்கு நாட்டில் கொடியும் அவர்கண்டார் தபால் தலைகளும் வெளியிட்டார் காற்றினில் ஒலி ஒளியை பரப்பிவிட்டார் அடைந்துவிடுவார் ஈழம் தனையே அகிலம் அறிய அறிவிப்பார் - அங்கு யாழில் குடிபுகுந்த பேய்களை விரட்டிடுவர் அகிலத்தின் அங்கீகாரம் வேண்டிடுவர் அறிவுடையோர் ஆவது அறிவர் அறிவிப்பார் அவர் தேர்தல் - எப்போது அங்கீகாரத்திற்கு பிறகே அறிவிப்பார் அதற்க்கும் வேண்டும் அவகாசம் அய்ந்து வருடம் அகிலத்தில் அதுவே முறையாகும் அகிம்சை நாட்டில் நடந்ததுவும் அதுவேயாகும்! அடைந்த விடுதலையின் ஆண்டு 1947 அகிம்சை நாட்டில் தேர்தல் 1952 அதற்க்கு பின்பே குடியரசு அந்த ஆண்டும் 1956 அனைத்தும் அறிந்தே ஆணவம் பிடித்தே அறிவிழந்து பித்தெரன பேசுவதும் பேச்சோ! அறிந்திடுவர் நன்மதிக் கொண்டோர் அது அறியார் குமைந்திடுவர் குறை கூறி குடைந்திடுவர் அவர் குணத்தை கூறிடுவேன் குறித்திடுவாய் தமிழா தன் குற்றம் பிறனில் கான்பார் அவர் மேய்வார் வேலி வேண்டார் வேண்டும் பரிகாரத்தை தயிர்சாதத்தில் வைப்பார் வேலைகள் செய்யார் வேந்தனை அண்டிப் பிழைத்தார் மதியுள்ளோர் வெறுத்திடும் இச்சிறுமைமை மற்றவர்மேல் ஏற்றிடுவார் அவர் மான்பினை அறிந்திடுவோம்
 13. யாரது ஈழத்து தம்பியா? என்னப்பா இது அடையாளமே தெரியவில்லை ஒரே அடியாக மாறிவிட்டாய்? ஆமாங்க என்ன செய்வது? இந்த பாழப்போன சண்டை வந்ததிலிருந்து ரேஷனும் கிடைக்கலை பயிரையும் விளையவிடல விளைந்த பயிரையும் அழிச்சிடுராங்க பஞ்சம் ஏற்ப்பட்டுவிட்டது, ஏற்கனவே இருந்த பிரச்சனையில இதுவும் சேர்ந்ததால் உடம்பு பாழாப் போச்சி உடம்பு இளைச்சாலே உருமாறித்தானே போகும் உடம்பு! அடப்பாவமே முகம் கருத்துக் கிடக்கு? நான் எப்பன்னே சிகப்பா இருந்தேன்? மாநிறமா இருப்பியே? கவலைதான் எல்லாத்துக்கும் காரணம் ஆமாம் ஆமாம் அதுக்கு ஏதாச்சும் செய்யுப்பா, ஆமாம் உன் தம்பி ஒருத்தன் இருந்தானே துறு துறுன்னு அவன் எப்படி இருக்கான்? ஆண்டவன் புண்ணியத்துல அவன் நல்லாதான் இருக்கான். அவன் இருக்கிறதுதான்ணே எங்களுக்கு பாதுகாப்பு, அவன் இல்லேன்னா நாங்க இருந்த இடத்துல புள்ளு மொளச்சிருக்கும்னே, என்னமோப்பா உடம்ப நல்லா பார்த்துக்க இரும்பா இருந்த நீ துரும்பா போயிட்ட முதல்ல உன்னை பார்த்த போது அடையாளமே தெரியல உருவமே மாறிடிச்சு ஆமாண்ணே அப்படித்தான் கோவலண்ணன் கூட சொன்னாறு என்ன கோவால பார்த்தியா? பாத்தியா என்ன பார்க்கரத்துக்கு முன்னடியே அவன பாத்திருக்க, அவன் என்ன என்னோட பெரியவனா? எங்கிட்ட இருந்தவன் தானே என்னமோ என் புள்ளைங்களோட போட்டி போட்டதனால அவன கழட்டி விட்டுட்டேன் இப்ப என்னடான்னா அவன் குண்டம்மாக்கிட்ட சேர்ந்துகிட்டு கும்மாளம் போடறான், அவன் குண்டக்க மண்டக்கன்னு அப்ப அப்ப பேசுனதினால அவன கும்மி எடுக்குது அந்தம்மா ஆனாலும் இரண்டு இட்லி அதிகமா கொடுத்ததாலா அதுகிட்டயே போயிட்டான். என்னன்னே என் பிரச்சனையை தீர்த்து வைப்பீங்கன்னு வந்த உங்க பிரச்சனையை சொல்லுறீங்க, சரிண்ணே நா வரேன்! செய்யுப்பா உடம்ப பார்த்துக்கப்பா என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு போறார் கலை அண்ணன். கலை அண்ணனின் வீடு பெரியது தான் ஆனா கூட்டுக் குடும்பம் ஒவ்வொறுத்தரும் ஒரு மாதிரி. விருந்தாளியெல்லாம் வீட்டுக்கு போக முடியாது. அம்மையார் அவ்வளவு சுதந்திரா தேவி. அந்த அம்மையார் அந்நியம்தான் அவருக்கு அது ஒரு பெரிய கதை அது இருக்கட்டும் அந்த ஈழத்தம்பிய கொஞ்சம் பார்ப்போம், அங்க கொஞ்சம் வேலை இருக்கு. அந்த ஈழத்து தம்பி அதுபாட்டுக்கு போயிட்டு இருக்கு நாம அந்த கடைக்கு போயிட்டு போவோம். அட அந்த உயரமான இருக்கிற அண்ணன் நம்ப ஈழத் தம்பிய பார்த்து என்னமோ சொல்றார் என்னன்னு கேட்போம் அண்ணே அந்த ஈழத்து தம்பி முன்ன நல்லா இருந்தாராம் இப்பதான் இப்படி ஆயிட்டாராம் அங்க ஒரு அண்ணன் சொன்னாரு இனவெறிதான் இதுக்கொல்லாம் காரணம்னு. அப்படியா சொன்னான் அவன் சொல்லுவான் சொல்லுவான் என்னண்ணே தப்பு அவர் சொன்னதில முந்தி அவர் ஆள் முன்ன மாதிரி இல்ல இளைச்சிதான் போயிருக்கிறான். எல்லாம் அவன் செஞ்ச வினை. அடிமையா ஒழுங்கா மரியாதையாதான் இருந்தாம்பா, அப்புறம் ஏம்பா நல்ல படிச்சான்? புத்திசாலி ஆயிடலாம்னு நினைச்சான், அவனெல்லாம் முன்னுக்கு வந்துட்டா நாங்க எப்படி பொழைக்கிறது, இங்க நாங்க 3, 4 பேர் இருந்துகிட்டே இவனுங்கள கடவுள் பெயரால காவடி எடுக்க வச்சுட்டோம், பத்தும் பத்தாதற்க்கு பஞ்சாயத்து நாட்டமெல்லாம் நாங்கதானே விட்டு விடுவோமா?அதனால தான் அங்க அங்க ஆப்பு வைக்கிறோம் நாங்க எங்க ஆத்துல இருந்துகிட்டே இவனுங்கள குளத்து மீனாகவும் குளக்கரை எறும்பாகவும் பிரிச்சி வச்சி இருக்கோம். எங்க தேவைக்கு தகுந்தா போல எங்க ஆத்துல தண்ணிய கூட்டி குறைச்சி குட்டையை குழப்பி ஆட்டம் காமிக்கிறோம். குளத்து மீனையும் குளக்கரை எறும்பையும் ஆட்டுவிப்பது ஆத்து நீரும் அருகில் உள்ள தர்ப்பையும்தான்னு அங்கைனெட் அழகாக கூறியபிறகும் அத நாமே ஏன் எழுதனும் அத படிங்க புரியும். ஆனாலும் அவங்க முரண்டு பிடிக்கிறாங்க விடுவமா, நாங்க 3, 4 பேர் இருந்துகிட்டே சமாளிக்கிறோம். அங்க அதிகமா இருக்கவங்க கிட்ட இவனுவ பாட்சா பலிக்குமா? அதான் சாவுராங்க சாவுட்டும் சாவுட்டும். அவங்கல்லாம் எங்களுக்கு போட்டியா வந்துட்டா நாங்க அவங்க வேலையையா செய்ய முடியும்? நாங்க எங்கேயிருந்து பொறந்தவங்க! உயரமான ஆள் இவ்வளவு கோவமாக பேசும் போது நாம ஏன் விவாதத்த வளர்க்கனும். அவங்கள வேற இடத்துல பார்த்துக்கலாம். ஈழத்து தம்பி கஷ்டத்துல இருக்கிறத இரண்டு பேரும் ஒத்துகிறாங்க ஆனாலும் அதுக்கு காரணம்தான் வேற வேற சொல்லுராங்க. அதுக்கு காரணம் அவங்க குணமும் பண்பாடும் அப்படி. நாம ஈழத்து தம்பிய தொடர்ந்து பார்ப்போம் அவருக்கு இருக்கிற பிரச்சனைய பேசுவோம். நல்லவங்க நாலு பேர் காதுல விழுந்தா அதுக்கு நல்லது நடக்காம போயிடுமா?
 14. அன்றொரு நாள் அமர்ந்திருந்தான் ஓர் மன்னன் அடிபட்ட புறா ஒன்று அவன் மடியில் வீழ்ந்தது அடித்த வேடுவனும் வந்தே வேந்தனிடம் முறையிட்டான் அடித்ததற்கு நாணாதனால் நான் என்றான் நமக்கே சொந்தம்! அளித்திடு எமக்கே என்றான்! அகிலத்தில் அன்று அதுதான் நீதி! அரசனவந்தான் அதனால் அதட்டி விரட்டவில்லை வேடனை! அதற்கு பதில் தருவேன் என்றே அரிந்து கொடுத்தான் தன் சதையை! அவன் பெயர் சிபிச் சக்ரவர்த்தி! சீரிய நீதிக்கு மறுபெயர்! அறிஞ்சர்களை அண்டிடும் வருமையை - கான அஞ்சி பகுத்துண்டு வாழ்ந்தவர்கள் தான் தமிழர்கள்! -என்றாலும் அன்பு குழந்தைகள் யானையை கண்டும் அஞ்சிடாமல் அழகாக அழகு காட்டி அதன் முன்னே நின்றிடும் அவர்களை கூட கொன்றவர்களை கும்பிட்டு தொழுவாரோ? குழந்தைகளை கொன்று குலப் பழிதேடியதால் குறுகியது வாழ்நாள் சிலருக்கு! குற்றமென்ன? நடந்ததெல்லாம் அறிந்திட்டால் நாணிடாதோ நம்நெஞ்சம்! நமக்கதனை அறிவிக்காதது ஏன்? நாணியதாலோ! பத்திரிக்கை சுதந்திரமென்றே பறையரைவோர் பார்க்க மறந்தனரோ! பார்வையிழந்தனரோ! அமெரிக்காவின் மையாயை அகிலத்திற்குணற்தியதும்! பத்திரிக்கைகள்தான்! அவர் மொழியில் ஆங்கில பத்திரிக்கை நடத்துவோர் அவரிடமிருந்து பயிலவில்லையோ பண்பாட்டை! பயிற்றுவிப்பதெல்லாம் பண்பாட்டுச் சீரழிவை! பயணற்ற குப்பைகளை! பணம் குவிக்கும் முறைகளை! நாங்களும் அவ்வாறு இருப்போமா? நன்றாக எடுத்துறைப்போம் ஒவ்வொன்றாய்! எங்கே தம்பி? என்று கேட்டுக் கொண்டே ஒரு வீட்டின் பின்புறமுள்ள சமையல் அறைக்கும் சென்றான் இந்திய அமைதிப் படையின் சிப்பாய் ஒருவன், அங்கே பயந்து நடுங்கிக் கொண்டிருந்த 19 வயது மாணவர்கள் அருட்பிரகாசம் சுவர்ணதாஸ், குமாரவேல் செவ்வானந்த வேல் என்பவர்களை கண்டதும், அவர்களின் தலைமயிரை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தான். சுவர்ணதாஸ் வெற்றிலை கேணி பரமேஸ்வரா வித்யாலயாவிலும் செல்வானந்த்வேல் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்வானந்தவேலின் வீடு தீருவில் தெருவில் இருந்தது, அங்கு முதல் நாள் நடந்த பிரச்சனையால் பயந்து இங்கு வந்து தங்கியிருந்தான். சம்பவம் நடந்த இடத்திலிருந்து 1 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடத்திற்கு இராணுவம் வருமென்று நினைத்துக் கூட பார்க்கவில்லை அவன். சுவர்ணதாஸ் வெற்றிலை கேணியில் இருந்து தனது பாட்டி வீட்டிற்கு வந்து இருந்தவன். அந்த இரு மாணவர்களையும் வெளியே இழுத்து அவர்கள் இருவரது கைகளையும் நைலான் கயிறால் கட்டி தெருவழியே இழுத்துப் போனார்கள். அவர்களின் பின்னால் தள்ளாடும் வயதில் சுவர்ணதாசின் பாட்டி இராஜேஷ்வரி அம்மாள் அழுதுக் கொண்டே பின் தொடர துப்பாக்கியின் கைப் பிடியால் ஓங்கி அவரது தோள் பட்டையில் அடித்தான். அந்த அடியின் வேதனை தாங்காமல் கிழவியால் நகர முடியவில்லை. அப்படியே தரையில் விழுந்துவிட்டால். அந்த இளம் மாணவர்களின் அலரல் அந்த சலையெங்கும் எதிரொலித்தது, தமிழர்களாக பிறந்ததற்கு இப்படியா தண்டனை அனுபவிக்க வேண்டும்? அவர்களை அப்படியே கட்டி இழுத்துக் கொண்டு சென்று கடற்கரையோரமாக உள்ள ஊரணி அரசினர் வைத்திய சாலைக்குச் சற்று எதிர்புறமாக உள்ள தீர்த்தக் கடற்க்கரைக்கு முன்னால் படுக்க வைத்து கத்தியினால் நெஞ்சிலும் தலையிலும் குத்திக் காயத்தை ஏற்படுத்தினார்கள். உடலில் இருந்து குருதி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் அந்த இரு சிறுவர்களும் எங்களை ஒன்றும் செய்யாதீர்கள், நாங்கள் அப்பாவிகள் படித்துக் கொண்டிருக்கிறோம்................ ஈனஸ்வரத்தில் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு சிப்பாய் அவர்களுக்கு மிக அருகில் நெருங்கி அவர்களை குறிவைத்து துப்பாக்கியின் விசையைத் தட்டி விட்டான். அவ்வளவுதான். அய்யோ!....அம்மா!...என்று வானமே அதிரும் வண்ணம் ஒலித்த குரலை தொடர்ந்து அந்த இரு சிறுவர்களும் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்... இது நம் கண்ணெதிரே நம் சகோதரனுக்கும், சகோதரிக்கும் , குழந்தைக்கும் நடந்திருந்தால், நாம் பொருத்திருப்போமா? பொங்கி எழமாட்டோமா