Jump to content

PSIVARAJAKSM

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    164
  • Joined

  • Last visited

Blog Entries posted by PSIVARAJAKSM

  1. PSIVARAJAKSM
    இக்கரை இருந்தே
    சக்கரை சொல் சொல்கின்றீர்
    அக்கரை மீதென்ன
    அக்கரையா? அதனால் வருவதோ
    இக் கறை படிந்த வாதங்கள்?
    அலைந்திடும் மனமென்றே
    கலைத்திடவே கான்போர்
    மலத்திடவே; மொழிபெயர்ப்பால்
    வலைத்திடவே; மானத்தின்
    காலை எடுத்துவிட்டு
    மனத்தின் பெயரால் மருட்டுகின்றார்
    மனத்தின் குணத்தை கூறிடுவார் - நம்மை
    கணத்தில் சுருட்டிடவே
    சூது செய்தே வாது செய்வார்
    வம்பலப்பார் அவர்
    நம்பலம் வேண்டாமென்பார்
    மனபலம் போதுமென்பார் அவரை
    அம்பலம் செய்திடுவோம்
    நம்பலத்தை நம்பலாமே
    நம்பலத்தை நம்பினால் வென்றிடுவோம்
    பிறர் பலமென்றால் வெம்பிடுவோம்
    மனமென்பார் ஆத்மபலமென்பார்
    கர்ம பலனென்றே கடைசியி கவிழ்த்திடுவார்
    பாதை இதுவென்று பகர்ந்திடுவார்
    பற்பலவாக கதை விரித்திடுவார்
    நம் ஒற்றுமைச் சிதைத்திடுவார்
    தலைகாலிங் கறியாதே
    நிலைபாடு எடுத்திடுவார் - அவர்
    வலை விரித்திடுவார்
    பல கட்சியென்பார் மலை உச்சியென்பார்
    குச்சியில் இருக்கும் கோமனதுண்டே போதுமென்பார்
    கச்சிதமாய் நம்மை கவிழ்திடவே
    திரை மரைவில் திட்டஙகள் செய்து
    உரைத்திடுவார் நம் பெருமை குலைத்திடுவார்
    கரைத்திடுவார் நம் மனத்தை இல்லையெனில்
    குரைத்திடுவார் குற்றம் கூறிடுவார்
    இரையுறும் பொய்க்கு உலகென்றே
    குறைத்து கூறிடுவார்; குற்றம் கண்டிடுவார்
    மறையென்றே மருட்டியவர் ஏற்றம் கண்டிருந்தார்
    கூறிடுவார் எப்போதும் அகிம்சையென்றே
    கூடுவது சாது சங்கம் வேதாந்தமென்பார்
    அடிமை கொள்ள அலைந்திடுவார் ஏனையோரை
    அப்படியும் உலகத்தில் அனேகம் பேர்
    கழன்றிடுவோம் அவர் அடிக்கும் கூத்தை
    கணக்கில் கொள்ளார் சிங்களவன் அடிக்கும் கூத்தை
    கானாமல் தமிழர் நிலையை; புரட்டு பேசி கூத்து
    ஏணிந்த உலகத்தில் மாய கூத்து!
    துனிந்து தமிழா நீ இந்த நிலையை மாத்து
    ஏங்கினார் சீரழிந்தார்
    வீடிழந்தார் மனையிழந்தார்
    மாணவர்கள் படிப்பிழந்தார்
    மங்கையர்கள் மானமிழந்தார்
    துணைக்கு அங்கு யாருமில்லை
    சூழ்ச்சியினால் பிரிந்திருந்தார்
    மாட்சியினால் அரசாண்ட அவர் மண்ணில்
    சூழ்ச்சியினால் சிங்களவர் குடியேற்றம்
    தெளிவாக சூட்டசமத்தை தெளிந்ததனால்
    சொல்லாத மெளனமுதல் அகிம்சை வரை
    அத்தனையும் செய்துபார்த்தார் அழிக்கப்பட்டார்
    ஒளிப் பிறக்குமென்றே உறுதிக் கொண்டு
    அடிமையாய் இருந்து அழிவதைவிட
    போராடி வீழ்வதென்றே புகுந்தார் சமர்களத்தே
    வலிமையொன்றே இனி வாழவைக்குமென்று உணர்ந்துவிட்டார்
    மானம் போற்றும் மறவர் முன்னின்று
    மங்கையர் மானமிழந்தால் பாதகமில்லை
    மகத்தான மானத்தில் கால் எடுத்து விக்கினமாக்கி
    மனத்திலே வலியனாகி; மானம் போக்கி
    பேரான வறுமையும் அச்சமும் போக்கிடாமல்
    வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துகின்றார் - அவர்
    வாய்மைப் பாரீர்; அவரின் தூய்மை பாரீர்
    அச்சத்தினால் உறுதி அசைத்திடவே
    அச்சத்தினால் அவர் அமெரிக்கர் கால்பிடித்தால் - என்றே
    கூசாமல் பகர்ந்திடுவார்
    அமெரிக்காருக்கு அடைமையாவதை விட
    அருகிலிருக்கும் சிங்களவருக்கு அடிமையாவதே மேன்மையென்பார்
    சிறப்பென்பார் சிந்திக்கச் சொல்வார்
    யாருக்கு அடிமையென்பதே பிரச்சனையாக்கி
    ஊருக்கு உபதேசம் செய்தால் - அவர்
    பேருக்கு சுதந்திரம் வேண்டுபவர் என்றே
    பாருக்கு பாரதியின் பாட்டினாலும் பறையறைவோம்!
    தொண்டு செய்யும் அடிமை - உனக்குச்
    சுதந்திர நினைவோடா?
    பண்டு கண்டதுண்டோ? - அதற்கு
    பாத்திரமாவாயோ?
    ஜாதிச் சண்டைப் போச்சோ? - உங்கள்
    சமயச்சண்டைப் போச்சோ?
    நீதி சொல்ல வந்தாய்! - கண்முன்
    நிற்கொணாது போடா!
    அச்சம் நீங்கினாயோ? - அடிமை
    ஆண்மை தாங்கினாயோ?
    பிச்சை வாங்கி பிழைக்கும் - ஆசை
    பேணுதலொழித்தாயோ?
    கப்பல் லேறுவாயோ! - அடிமை!
    கடலைத் தாண்டுவாயோ?
    குப்பை விரும்பும் நாய்க்கே- அடிமை!
    கொற்றத் தவிசுமுண்டோ?
    ஒற்றுமை பயின்றாயோ? - அடிமை!
    உடம்பில் வலிமையுண்டோ?
    வெற்றுரை பேசாதே! -அடிமை
    வீரியம் அறிவாயோ?
    சேர்ந்து வாழுவீரோ -உங்கள்
    சிறுமை குணங்கள் போச்சோ?
    சோர்ந்து வீழ்தல் போச்சோ?- உங்கள்
    சோம்பரை துடைத்தீரோ?
    வெள்ளை நிறத்தைக் கண்டால்- பதறி
    வெறுவலை ஒழித்தாயோ?
    உள்ளது சொல்வேன் கேள்- சுதந்திரம்
    உனக்கில்லை மறந்திடடா!
    நாடு காப்பதற்க்கே - உனக்கு
    ஞானம் சிறிதுமுண்டோ?
    வீடுகாக்கப் போடா! - அடிமை!
    வேலை செய்யப் போடா!
    சேனை நடத்துவாயோ! - தொழும்புகள்
    செய்திட விரும்புவாயோ?
    ஈனமான தொழிலே - உங்களுக்கு
    இசைவதாகும் போடா!

  2. PSIVARAJAKSM
    தன்னைத் தான் புசிக்கும் நரபுசிப்பு - என்றே
    மண்ணைத் தான் நேசிக்கும் மாவீரர்களை
    கண்ணைத் தன் நோக்கில் மேயவிட்டு
    வெந்தப்புண்ணித் தான் வேலைப் பாய்ச்சுகின்றோய்!
    எண்ணித்தான் பார்த்தீரோ எம் தமிழர்களை
    தண்டித் தான் தருக்குடை நீசர்களை
    கண்டித் தான் கள்ளமிட்டோரை
    மன்னித் தான் மற்ற மற்ற தவறுகளை
    துன்பத்தில் தான் துவன்டிருந்த மக்களுக்கு
    துன்பம்மிக தான் கொடுத்தால் மென்மேலும்
    கன்னத்தில் தான் கை வைப்பனையோ?
    தன்னைத் தான் எதிர்கும் தற்குறிகளை போல்
    தமிழரை தான் எதிர்கும் புல்லோருடன்
    நன்மைத் தான் சிறிதுமில்லா மிலேச்சருடன்
    தேசமும் தான் வேறான சிங்களவருடன்
    பேசும் மொழியும் வேறான புலையருடன்
    கடைச் சிறியோர் காதல் கொண்டே
    தம்முடைச் சோதரரிடம் மோதல் செய்தல் முறையோ
    நாட்டில் பொங்கும் சுதந்திர கனலை
    விட்டில் பூச்சிகள் விரைந்தழித்திடுமோ
    வீணர்களின் தூண்டுதலால் விபீடனனாகி
    விடுதைக்கும் விடுதலை வீரருக்கும் விலைகூறினால் அவரை
    வெம்மையோ டொறுத்தால் வீரர்தஞ் செயலாம்


    நம்மைத் தடுத்து வழி நடத்த
    தம்மைச் சாரதியாக்கிக் கொண்டு - கண்ணன்
    பார்த்தன் வழிப் பாருக்குரைத்ததை
    பாரதி நமக்குரைக்கின்றார்
    நல்லதோர் வீணை செய்தே
    நலம்கெட பூமியில் எறிவதுண்டோ என்றபாரதிதான்

    முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
    தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
    மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
    காதலின் நண்பர் கலைதரு குரவரென்று
    இன்னவர் இருத்தல் கண்டு இதயம் நொந்தோனாய்த்
    தன்னரும் தெய்வத் சாரதி முன்னர்
    அய்யனே! இவர் மீதம்பையோ தொடுப்போன்?
    வையகத் தரசும் வானக ஆட்சியும்
    போயினும் இவர்தம்மை போரினில் வீழ்த்தேன்
    மெய்யினில் நடுக்கம் மேவுகின்றதுவால்;
    கையினில் வில்லும் கழன்று வீழ்கின்றது;
    வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது;
    ஓய்வுறுங்கால்கள்; உலைந்தது சிரமும்
    வெற்றியை விரும்பேன்; மேன்மையை விரும்பேன்
    சுற்றமிங்கருத்து சுகம்பெறல் விரும்பேன்;
    எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,
    சினையறூந்திட்டபின் செய்வதோ ஆட்சி?
    எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
    கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து
    சோர்வோடு வீழ்ந்தனன்; கருதியின் முடிவாய்த்
    தேர்வையின் நின்றநம் தெய்விகப் பெருமான்
    வில்லெறிந்திருந்த வீரனை நோக்கி
    புல்லிய அறிவோடு புலம்புகின்றனையால்
    அறத்தினைப் பிரிந்த சுயோதனாதியரைச்
    செறுத்தினி மாய்ப்பது தீமையென்கின்றாய்
    உண்மையை அறியாய்; உறவையே கருதிப்
    பெண்மைகொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்
    வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்
    நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் - இன்னோர்
    தம்மோடு பிறந்த சகோதரர்ராயினும்
    வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.

  3. PSIVARAJAKSM
    எம்மொழி பேசி எம்மிலும் பிறறாய்
    எம்முணர்வு அறிவு இரண்டிலும் வேறாய்
    என்ன கருத்திலோ கரிகாலன்
    என்னிலும் அறிவில் குறைந்தவன் போலவும்
    என்னைத் துணைக் கொண்டு என்னுடை முயற்சியால்...
    என்னுடை பழகலால் எம்மொழி கேட்டலால்
    மேம்பா டெய்த வேண்டினன் போலவும்
    எம்முடை அறிவை என்மதி அளவை
    இவற்றினைப் பெருமையிலங்கின வென்று
    கருதுவான் போலவும் கரிகாலன் கண்ணன்
    சீடனாக வந்தென்னை சேர்ந்தனன், தெய்வமே!
    பேதை போல் நானும் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்தேன்!
    கள்ள கண்ணனாம் கரிகாலன்
    மெல்ல என்னை அனுகி அகிம்சையால்
    வெல்ல ஆலோசனை வேண்டுமென்றான்
    மெல்லும் வெறும் வாய் கிழவிக்கு
    வெல்லம் கலந்த அவுள் கிடைத்தது போல்
    நல்ல கருத்தினை நவிழ்கின்றேன் - என்றே
    மெல்ல ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தேன்
    நல்ல பேச்சை நாட்டிலே முழங்கு
    வல்ல கருத்தை வரிசையாய் வழங்கு
    இந்நூல் கற்பாய்; இப்படி மொழிவாய்
    இணையமுள்ளிட்ட இருநூற்றுக்கும் இரண்டே குறைவான வழிகள்தாம்
    இனவெறியினின்றும் தப்பிட இவையே போதுமென்றேன்
    உளவியல் தாக்கும், அரசியல் தலையீடென்றே
    அமைதியாக அரசுடைமைகளில் ஆளுமை செய்
    என பல தர்மம் எடுத்துக் கூறி
    ஓய்வில்லாது அவனொடு உயிர் விட்டேன்
    கருத்து பரவலை கவனமாக செய்ய
    பருத்த கொடிகளை பல வண்ணங்களில் கட்டிடென்றேன்
    சொந்த உடைமைகளை சுக்கலாக்கு
    கந்தலாடை உடுத்தி கவனத்தை ஈர்
    நன்றாக நடித்துக் காட்டு
    நயம்பட பாடிக் காட்டு
    கொடும்பாவியை எரித்துக் காட்டு
    கொடும் பாவியிடம் பல்ளித்துக் காட்டு
    வெளி நடப்பு செய்துக் காட்டு
    வாயில்லா ஊமைபோல் நடித்துக் காட்டு
    காட்டு காட்டு என்றே கட்டுக் கட்டாய் கதையை நான்
    காட்ட அவனோ கதையிலே கணவன் சொல்லுக்கு
    எதிர் செய்யும் மனைவிப் போல்
    நான் காட்டும் நெறிக்கெல்லாம் நேர் எதிரே
    நடக்கலானான் நானும் விடாமல்
    குறிப்பிட்ட சமூக புறக்கனிப்பு
    சரிப்பட்டால் சாத்தியபட்டால்
    சரிபடேல் ஒட்டுமொத்த புறக்கனிப்பு
    நானிலம் போற்றிடும் புகழும்
    நன்றாக அறிவும் கொண்டிருந்தும்
    நான் காட்டிய வழி விலகியே நடக்க
    என் மனம் நோக நடந்திட கண்டே
    இன்னும் சிலவற்றை சொல்லிடலுற்றேன்
    அரசு பணத்தை அவமரியாதை செய்
    அசலோ வட்டியோ அடைத்திடாதே
    வாங்கிய கடனை கொடுத்திடாதே
    வங்கியில் பணத்தை வைத்திடாதே
    அரசு வேலை செய்யாதே
    அரசவையில் பங்கு பெறாதே
    சொல்லிநான் கண்ணனை தொளைத்திடலானேன்
    தேவ நிலையில் சேர்ந்திடா விடிலும்
    மானுடந் தவறி மடிவுறா வண்ணம்
    கண்ணனை நானும் காத்திட விரும்பித்
    தீயெனக் கொதித்து சினமொழியுரைத்தும்
    சிரித்துரைக் கூறியும் செள்ளென விழுந்தும்
    கேலிகள் பேசிக் கிளரியும் இன்னும்
    எத்தனை வகையிலோ என் வழிக்கவனைக்
    கொணர்ந்திட முயன்றேன் கொள்பயனொன்றில்லை
    கவனம் செலுத்தாதது கவனத்தை ஈர்த்ததனால்
    கடும் கோபம் மேலிட கடுமொழி உரைத்தே
    செள்ளன விழுந்து சொல் என உரைத்தேன்
    கொள்ளென சிறித்தவன் கூறினான் ஒவ்வொன்றாய்
    ஒரு நூற்று தொன்றூற்று எட்டில் ஒன்றிரண்டை பலவற்றை நான் விட்டுவிட்ட போதும்
    ஒன்றும் விடாமல் ஒன்றொன்றாய் ஒப்பித்தான்
    ஒன்றும் விடாமல் எண்ணினேன் இருநூற்றுக்கு இரண்டே குறைச்சல்
    நன்றென்று கூறி நானும் கேட்டேன் எப்படி என்று
    நாங்கள் நடந்து வந்த பாதையை
    எங்கள் முன்னோர் கடந்து வந்த பாதையை
    நீங்கள் படித்து வந்து சொன்னீர் பலவற்றை விட்டுவிட்டீர்
    நாங்கள் பயண்படுத்தி பார்த்தவர்கள் - என்றே
    நமுட்டுச் சிரிப்புடன் நயமாகத்தான் சொல்லிவிட்டான்
    ஆனாலும் நான் நாணிவிட்டேன்
    சட்டென மறைந்து விட்டான்
    சடுதியில் ஏடொன்றை எடுத்து கொடுத்தான்
    படித்துப் பார்த்தேன் பதறிவிட்டேன்
    என்னவிருந்தது ஏட்டில்?


    அனைத்துக் கட்சிக் குழுவுக்கு ஜாதிக கெல உறுமய முன் வைத்த யோசனைகளின்படி தமிழர்களுக்கு இந்த நாட்டில் நில உரித்து இல்லை அதனால் அவர்களுக்கு சுயாட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது

    தமிழர்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினர் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்களுக்கு பிரஜா உரிமை உண்டு ஆனால் நில உரித்தோ சுயாட்சி உரிமையோ அவர்களுக்கு இல்லை, சிங்களவருக்கே உரித்தான ஒரே நாடு இது

    - கெல உறுமயா (தேதி 24.07.2007 பத்திரிக்கை: உதயன்)


    சொத்துடைமை இல்லையென்றதும்
    பொதுவுடைமை அங்கே பூத்துவிட்டதாக
    புள்ளறிவாளர்கள் சொல்லக்கூடும்
    நல்லறிவாளர்கள் நம்ப மாட்டார்
    நன்றி

  4. PSIVARAJAKSM
    பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும்
    செருபகையும் சேராதிருப்பது நாடு

    என வள்ளுவம் காட்டும் வளம்மிகு நாடாக நாடாத, நாடாததற்க்கு நாணாத நம் தமிழர்கள் இன்று இருப்பது போலவே என்றும் இருந்திருக்கின்றனர். எல்லையற்ற புகழுக்கு சொந்தக்காரர்களை ஏளனம் செய்யவும் ஏற்பாடு செய்துவிட்டது போலும் இயற்கை.இயற்கையின் சதியோ, இதயமற்றவர்களின் சூழ்சியோ! இன்று இல்லாதிருப்பதே மேல். இருந்தால் ஈழத்தில் வேழம் இருந்தாலும் வேங்கை இருந்தாலும் கீழாகும் தமிழர் நிலை. பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் உடைத்துவிடக் கூடும் தமிழர்தம் உறுதியை, உதாரணத்துடன் விளக்க உறுதி கொண்ட எமக்கு ஓடி வந்து உதவுகிறார் கலைஞர் இன்றும். இதோ அவர் கூறுகிறார் முதலில். முடிவில் நாமும் கூறுவோம். முதலில் அவர் முறை முதல் அமைச்சர் அல்லவோ அவர், அமைச்சரின் ஆலோசனைக்கு பின்பே அரசனாகிய நாம் (அதாங்க ராசா சிவராசா) முயற்சிப்பது நலம் என்பதால் அவர் ஆலோசனையைக் கேட்கிறோம். அவர் சொல்கிறார்.

    பகல் நேரக் கதிரொளியாய்
    பரந்து விரிந்து வெளிச்சம் தந்த
    பழந்தமிழ்ச் சோழர்களாம்
    பாண்டியர் பல்லவர் சேரர்களாம்
    பயண் விளைக்கும் ஏர் முனையாய்
    பகை சாய்க்கும் வாள் முனையாய்
    பாரினிலே புகழ் எய்திப் பின்னர்
    தேரினிலே அச்சானி கழன்றாற் போல்
    தேயமெங்கும் ஒற்றுமை கட்டுக் குலைந்து
    தேய்ந்திடும் நிலவின் கோட்டும் பிறைகளாகி
    குழுக்களாய் குறுநில மன்னராட்சிகளும் - அவை
    குருவித் தலை பணங்காய் எனும் காட்சிகளும்-
    செங்கோல் மட்டுமே உடைமையாய்க் கொண்ட
    சிற்றரசர்கள் செயல்பட்ட மாட்சி (?)களும்
    இப்படி பல பிரிவுடனே களப்பிரர், கள்ளவரும் கலந்து,
    மூவேந்தர் முத்தரையர் கூட்டும் சேர்ந்து
    முரண்பட்ட சூழ்நிலைகள் முட்டியும் மோதியும்
    முடிவாகப் பகை, படை, போர் அழிவு என சிதைந்து
    "நேற்றிருந்தார் இன்றில்லை என்பதுபோல் எம்மோடு
    வீற்றிருந்தார் எங்கு போனார்?" என்று வினவிடும் நிலையில்
    வேற்படை, வாட்படை, வேழப்படை, புரவிப்படையிருப்பினும்
    வேலைகள் அவற்றுக்குள்ளவற்றை வீரர்பால் ஒப்படைத்துவிட்டு
    வியர்வை நீக்கிடவும், அயர்வைப் போக்கிடவும்- ஓய்வுக் கொண்டு
    உல்லாசம் அனுபவிக்க ஓடிவிடும் உத்தம தலைவர்களை விடுத்து;
    யுத்த களத்தில் போராட உத்தி வகுத்துச்
    செயல்பட்டவர்களால் பெருவெற்றி கிட்டியது-
    பெயருக்கு அரசர்களாக இல்லாமல் - அவர்கள்
    பேரரசர்களாகவே விளங்கினர்-
    வீரமும் வெற்றியும் கடையில் விற்றிடும் பொருள் என்றும்
    அதை பெறுவதற்குக் கூட கடவுள் அருள் தேவை என்றும்
    எண்ணுவோர், லட்சியத்தில் திண்ணியராய் இல்லாத காரணத்தால்
    கண்ணியம், கடமை, கட்டுபாடு கெட்டுப் போய், அந்த
    கெடுநிலைக்கான காரணங்கள் அனைத்தும் போக்கிட
    நெடுநாள் காத்திராமல் பெருந்திரன் காட்டியதால்
    இடைகாலமென அறுநூறு ஆண்டுகாலம்;
    எடைக்கேற்பத் தராசுத் தட்டு மேலும் கீழும்
    மாறி மாறி உயர்ந்தும் தாழ்ந்தும்
    ஏறியும் இறங்குவதும் போல
    தோன்றிய பல்லவ அரசில் துளிர்த்துப்
    பாண்டிய அரசில் செழித்த - இந்தத்
    தமிழகத்தின் மறுமலர்ச்சி, மீண்டும்
    சங்க காலப் பெறுமைப் பெற புத்துருகொண்ட சரிதத்தை
    இங்கிருந்து தொடங்கிடுவோம்
    இருண்டிடுந்த சோழ கிழக்குச்
    சங்கின் வெண்மை வானில் பரவும்; நம்
    வரலாறு, அந்த வான் மேவி ஒளிரும்.

    நன்று கலைஞரே
    நல் ஆலோசனை நயமுடன் தந்தீர்
    நடந்ததை நாமும் முன் கூறி
    நடப்பதை பின்பு கூறி
    நாடிடுவோம் நல்லோர்
    கருத்தை கருத்துக் களத்தில்.
    முன் ஒன்று கூறி
    பின் ஒன்று கூறி
    தடம் மாறும் தற்குறிகள்
    பின்கூறி புறமும் கூறிடுவர்
    தடுமாறி தம் நிலை மாறி
    செருபகை முன்னே
    பாழ் செய்யும் உட்பகையால்
    பல் குழு அரசியல் என்றால்
    பலமாய் மறுத்துரைப்போம் - தமிழர்களே
    சீண்டிடும் செருபகையின் முன்னே
    சீரழிவோம் பாழ்படுவொம் பல் குழுவாய் பிரிந்தால்
    சிந்தையில் கொண்டால் சிறப்புறலாம்.
    அகிலத்தின் அங்கீகாரத்திற்க்கு பின்னான
    அரசியல் அமைப்புக் கான - அவர்
    அடிதளத்தை இட்ட பின்பும்
    அதுவல்ல அரசியல் முறை
    அறம் தோற்க மறம் புறம் போக
    அறங்கேற்றிடலாம் பல் குழுவை
    அடித்துக்கொள்ள செய்வோம் உட்பகையால்
    அடித்துகொள்ளும் அவரை
    அடுத்தடுத்து கெடுத்து கொல்வோம்
    அடிமை கொள்வோம்
    அதற்கான அரசியல் அங்கே ஏன்
    அறங்கேறவில்லை என்று அலுத்துக் கொள்வோர்
    அவணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பர்
    அவர் அறவழி நின்று கூறட்டும்
    அவர் அவாவின் உண்மை நோக்கத்தை.


  5. PSIVARAJAKSM
    அவர் இருந்தால் இவர் இருந்தால், அவரெல்லாம் இருந்திருந்தால் இந்நேரம் மாற்று வாய்ப்புகள் மள மள வென்று வந்து ஐ.டியிலும் அண்டை நாட்டிற்க்கு சவால் விட்டிருப்பார். எல்லாம் குட்டி சுவராகிவிட்டது குற்றமில்லையா? குறிக்கோளை அடைய குறுக்கு வழியில் செல்கிறார்கள். அதனால்தான் அத்தனை தாமதம். குற்றம் சாட்டுகிறார்கள் சிலர். அழகான வார்த்தைகளும் வகை வகையான சான்றுகளும் வந்து விழுந்தபோது, நாமும் சற்றே சலனப் பட்டோம், சட்டென வந்து கலைஞ்சர் சொல்கிறார். அவர் இவர் வளரவில்லை என்பது அவசியமற்றது. இந்த மாற்றமே மகத்தானது அதுதான் படிமுறை வளர்ச்சி என்று சொல்லி வழிபடுத்துகிறார் பாருங்கள்.

    மாற்றம் எதுவும் மறுநாள் விடிந்ததும் வந்திடவில்லை
    மாந்த குரங்கினம் எழுந்து நிற்கவே
    மாமாங்க காலம் ஒன்றிரண்டு பலகோடி வரவேண்டியிருந்தது
    மனிதனாய் குரங்கு மாறிட மாநாடு போட்டுத் தீர்மானம்
    நிறைவேற்றினால் போதுமா?
    பரிணாம வளர்ச்சி என்பது பல்லாயிரம் ஆண்டுகள்
    பட்டறையில் வைத்து உளியொன்றை உடை வாளாக்குவதன்றோ?
    இலெமூர் குரங்குகளுக்கு பற்கள் முப்பத்தி ஆறு
    இதற்க்கடுத்து தோன்றிய குரங்கிற்க்கு முப்பத்தி நாலு
    மணிகணக்கில் மாறிவிட்ட பல் எண்ணிக்கையல்ல - அந்த
    எண்ணிக்கை மாற்றத்துக்கே இடையில் எத்தனையோ நூற்றாண்டு!
    கற்கால மனிதர்க்கு பற்கள் முப்பத்தி இரண்டென முளைத்துளதும்;
    பிற்காலத்தில் இருபத்தி எட்டேதான் என மாறிடும் என்கின்றார்;
    வாலூன்றி நின்ற வானரப் பிராணி
    காலூன்றி நிற்பதற்க்கும் நடப்பதற்க்கும்
    ஒலிம்பிக் தடகளத்தில் ஓடுகின்ற
    மனிதப் பிராணி ஆவதற்க்கும்
    இடையில் ஓடியது: எத்தனை ஆயிரம் நூற்றாண்டு
    இதற்குப் பெயர்தானே படிமுறை வளர்ச்சி, பரிணாம வளர்ச்சி என்றும் பகிர்ந்திடுவர்.
    - கலைஞர்

    பேரின இனவெறியின் இறுமாப்பு
    இறங்கிட இயங்கியதும் வேங்கையின்
    இணையற்ற வீரமே காரணம்
    இயம்பிடுவர் இயல்புணர்ந்தோர்
    இந்தியாவிற்கு விடுதலை
    இரவினில் கிடைத்ததனால்
    இரவே விடுதலைக்கு காலம் - என்று
    இயம்பிடுதல் அறிவோ! முறையோ!
    அகிம்சையா? ஆயுதமா? என்பதுவும்
    அடக்கியாள்பவரின் ஆணவம் தீர்மானிப்பது
    அகிம்சை காப்பதற்க்கும் ஆயுதம் தேவை
    அறிவிப்பதும் அகிம்சை நாடுதான்
    அதனால்தான் அகிலத்தில் நான்காவது பெரிய இராணுவம்!
    அகிம்சை வென்றும் ஆயுதம் இங்கே
    அகிம்சை தோற்றதனால் ஆயுதம் அங்கே
    இது சரி ஆனாலும் அது தவறு!
    ஆகா! என்னே அழகான நிலைப்பாடு?
    அவரரெல்லம் வளர்ந்திருந்தால்
    அகிம்சையாலே விடுதலை அடைந்திருப்பார்!
    அதற்க்கெல்லாம் காரணம்...
    அழகாகத்தான் சொல்கின்றார்
    அதற்கும் கலைஞரே பதிலிருக்கிறார்


    பழம்பெரும் நாகரிகத்தின்
    தொட்டில்கள் என சுட்டிக் காட்டப்படும்
    எகிப்து, மாயா, மெசபதோமியா
    அவைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு
    எடுத்த எடுப்பிலேயே
    சிந்துவெளி நாகரிகம்
    கண் சிமிட்டுவதால்
    கருநிலை அதற்க்கெங்கே யென்று
    கடும் ஆய்வு நடத்தியவர்கள்
    கடலுக்குள் மூழ்கிய குமரிக் கண்டப் பகுதியை
    கழறுகின்றார்; நாமும் காணுகின்றோம்
    மலைப்பு விளைக்கும் கேள்வியொன்றை
    மதிவாணர் எழுப்பி விடையும் கூறுகின்றார்
    குரங்கிலிருந்து மாந்தன் தோன்றியதாய்ப்
    பரினாம வளர்ச்சி பகற்கிறதே
    இன்றுள்ள குரங்குகள் ஏன்
    அன்று போல் மாந்தராய் மாறவில்லை?
    சிறிய செடி பெருமரமாய் வளரும் போது
    உச்சக் கிளை மட்டுமே உயர்ந்து கொண்டே போகும்
    பக்கக் கிளைகள் நாம் பார்த்த இடத்திலேயே
    நிற்கும் நிலை போலவே
    படிமுறை யெனும்
    பரிணாம வளர்ச்சியும்
    பாடமாய் அமைகிறது
    பகுத்தறிவு பதில் தறுகிறது
    மிதித்தி குழைத்த சேறு; நம்
    மதித்து காத்திடும் சுவராய் மாறுது!
    குழைத்த இடத்தில் கிடக்கும் சேறு
    குட்டிச் சுவராகக் கூட பெறுவதில்லை பேறு
    குரங்கினமும் அப்படித்தான்
    கொலுவேறிக் குந்துகின்ற
    மனித இனமாக ஒருபக்கம் உயர்ந்தாலும்
    மண்ணிலே குழைந்த சேறு மிச்சமாக
    மண்மீதே கிடப்பது போல
    மனிதரிடையே மாந்த குரங்கும் இருக்கும்.

    அன்புள்ள அங்கைனெட் இப்போது புரிகிறதா? அவரும் இவரும் வளராததற்க்கு காரணம்.

  6. PSIVARAJAKSM
    நகைவர நாணம் கொள்வார் நம் காந்திய வழியை வழிமொழிபவர்களும் நாகரிக சமூகத்தின் விடுதலைக்கான வழி இதுவே என்று நாசூக்காக சுட்டுபவர்களும் நடந்ததை உணர்ந்தால்.

    தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியேற்றி தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகளில் அவர்களை சிறுபான்மையாளர்களாக மாற்றிட்ட சிங்கள நய வஞ்சக தந்திரங்களை தரணிக்குணர்த்த தன்னந்தனியனாக தமிழர்களில் ஒருவன் உண்ணா நோன்பிருந்தான். உண்மையை நேசிக்கும் உயர் குணமுள்ள உங்களிடம் கேட்கிறேன், உண்ணா நோன்பை உலகுக்குணர்திய உத்தமர் காந்தி உண்ணா நோன்பிருந்துதான் உயிர் விட்டாரா? இல்லையே! ஆனால் அயோக்கியர்களிடமிருந்து தம்முடைய உயிரை உடமையை மானத்தை காக்க ஆயுதம் ஏந்தியிருக்கும் அந்த தமிழ் மண்ணில் தமிழன் ஒருவன் உயிர் விட்டானே அது தானே உண்மை, அதுதானே வரலாறு.

    இதோ அருணாசல பிரதேசத்திற்க்கு அருகில் இருக்கும் சீனா, நம்மிலும் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, நம் நாட்டின் அருணாசல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா, நம்மைவிட வலிமையுள்ள சீனா, அய்க்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்க ஆசை கொண்டு ஆள் தேடி கொண்டிருக்கும் நமக்கு முன்னரே அங்கம் வகிக்கும் சீனா, தன் மக்களை வலிந்து குடியேற்றி அருணாசல பிரதேசத்தை தம் பிரதேசமாக தரணிக்குணர்த்த முற்ப்பட்டால், இந்தியாவின் இணையற்ற ஆய்வாளர்களும் ஆலோசகர்களும் என்ன செய்வார்கள்? அகிம்சை நாடுதானே இந்தியா? அகிம்சை நாடுதானே இந்தியா! அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்து அருணாசல பிரதேசம் இந்தியாவின் பகுதி என்று அறிவிக்கத்தான் இந்திய இராணுவத்தை பயண் படுத்துவோமா? அல்லது தமிழ்நாட்டில் தரமான மந்திரங்களை பயின்ற அய்யர்களையும் அய்யங்கார்களையும் அழைத்து சென்று யாகமும் பூசையும் நடத்துவோமா? அல்லது மலையாளத்து மந்திர வாதிகளையும் நம்பூதிரிகளையும் அழைத்து மந்திரம் ஏவுவோமா?

    அகிம்சை நாட்டிலேயே மொழிவாரி மாநிலங்கள் பிர்க்கப்பட்டு கர்நாடகம், பஞ்சாப், வங்காளம் என்று மொழிகளின் பெயரால் மாநிலங்கள் இருந்த போதும், தமிழ் நாட்டிற்கு தமிழ் நாடு என்று பெயர் வைப்பதற்கே உண்ணாவிரதமிருந்து உயிர் விட்ட சங்கரலிங்கனார் கதையை வரலாற்றை கேட்ட பிறகும் அகிம்சை நாட்டிலேயே அகிம்சை வழி போராட்டங்களின் கதி இதுதான் என்றபோதும் அகிம்சை வழியில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு 1987ல் இலங்கை பேரினவாத இனவெறியாகட்டும் இந்தியாவாகட்டும் அகிம்சைக்கும் அகிம்சை போராட்டங்களுக்கும் எதிராகத்தான் நடந்திருக்கின்றன என்பதை தன் உடலால் உயிரால் நிறுபித்து காட்டிய தீயாக செம்மல் "திலீபன்" 1987 செப்டெம்பர் 15ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திலீபன். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலங்கி நிற்க

    திலீபன் அழைப்பது சாவையா - இந்த
    சின்ன வயதில் இது தேவையா
    திலீபன் உயிரை அளிப்பாரா - அவன்
    செத்தபின் மாற்றார் பிழைப்பாரா

    என உணர்ச்சி கவிஞ்சர் காசி ஆனந்தன் குமுற

    விண்ணிலிருந்து பார்ப்பேன்
    விடுதலையை என்ற மகன்
    கண்ணெதிரே இந்த கட்டிலிலே
    முடிகின்றான்
    பத்தோடு ஒன்றா- இவன் பாடையிலே
    போவதற்கு
    சொத்தல்லோ - எங்கள் சுகமல்லோ
    தாலாட்டு பாட்டில் தமிழ் தந்த
    தாய்குலமே
    போராட்ட வீரன் போய் முடியப்
    போகின்றான் - போய்
    முடியப் போகின்றான்
    போய் முடியப் போகின்றான்

    என்று புதுவை இரத்தின துரை கதற உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட திலீபன் சொல்கின்றான்

    " இந்த இனம் - இந்த தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் போராடும்! புல்லையும் எடுத்து அது போராடும்; அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது; ஆயுதம் இல்லாவிட்டாலும் உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக நியாயத்திற்க்காக நீதிக்காக அது எந்த சக்தியையும் எதிர்த்து போராடும்."

    ஆனைமங்களத்து செப்பேடுகளும் அகழ்வாராய்ச்சிகளும் அதிசயித்து போற்றும், இதோ இன்றும் தஞ்சை தரணியிலே தலைநிமிர்ந்து நிற்கும் பெருவுடையார் கோயிலும் சொல்லும் இராஜராஜன், புத்த சங்கத்தினர் மனமுவந்து தங்களது அரசை அளித்த போது மறுத்தளித்து தனது 19ம் பிராயத்தில் சொன்னானே

    "சொந்த தமக்கைகளையே காமுறும், தாயாதிகளையே அரசுக்காக கொள்ளும் இந்த சிங்களவரின் கிரீடத்தை எனது இடது கையாலும் தோடேன்"

    என்று அந்த சிங்களவரிடமா அகிம்சை போராட்டம் வெற்றிப் பெரும்? இதயமுள்ளவர்களே இயம்பிடுங்கள். இத்தனைக்கும் பிறகும் இதுதான் வழியென்று நீங்கள் சொன்னால்!, நாங்கள் எதைச் சொல்லி எப்படி உங்களுக்கு புரிய வைப்போம்.


  7. PSIVARAJAKSM
    ஒழுங்கா மரியாதையா அடிமையாக இருந்தா இப்படி நடக்குமா? இனவெறின்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அது கடுமை குறைய கொஞ்ச நாள் ஆகும் குறையாம கூட இருக்கும். பட்டினியும் படுகொலையும் இருக்கத்தான் செய்யும்.

    பயங்கரமா இருக்குங்க, அவங்கள பார்த்தா பரிதாபமா இருக்குங்க, நெஞ்சு துடிக்குதுங்க.

    இருக்கும் இருக்கும் இருக்காத பின்னே! அதுக்கு என்ன செய்யிறது, ஆனாலும் பாதகமில்லையே, ஒட்டு மொத்தமா கொல்லலியே அங்கே இங்கேன்னு 100ம் 200மாகதானே கொல்கிறாங்க. இப்போது இருக்கிற இந்த அமைப்பு மட்டும் இல்லாம வேற அமைப்பு இருந்திருந்தா அடடா?

    என்னங்க சொல்றீங்க?

    அசடு!, ஈழத்தமிழர் நிலமய முதல்ல பார்த்ததும் சத்தியமாச் சொல்றேன், நான் பயந்துதான் போனேன். ஏன் இனவெறி அப்படி இருந்தது. பிறகுதான் அமைப்பை பார்த்தேன், அது தானே முக்கியம். நல்ல வேலை அது நல்லாத்தான் இருக்கு, அதனால ஒரே அடியா அழிஞ்சிடமாட்டாங்க, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கும், இந்த அமைப்பு மாறுச்சுன்னா ஒட்டுமொத்தமால்ல அழிஞ்சிடுவாங்க!

    என்னன்னமோ சொல்றீங்க, ஒன்னும் புரியல

    அசடு! அசடு! நானா சொல்றேன் நாட்டு நடப்பு அப்படித்தானே. அந்த நாட்டிலேயும் அப்படித்தானே இருக்கு இந்த நாட்டிலேயும் அப்படித்தானே இருக்கு, இருக்காதா பின்னே, அதுதானே முக்கியம். நான் என்ன மத்தவங்கள போல உலக அறிவு இல்லாதவனா? அல்லது மூலை சலவை செய்யப்பட்டவனா? நான் சொல்கிறேன் இப்ப இருக்கிறதும் ரொம்ம மோசமில்லை. பிறந்தவங்க எல்லாம் ஒருநாள் சாகத்தானே போறாங்க. எல்லாரும் என்ன கல்லும் சாந்தும் போட்டு கட்டி வச்சிருக்க முடியுமா? அது அவங்க அவங்க விதிப்படிதானே நடக்கும். அண்ணன் தம்பிக்குள்ளேயே அடிச்சிகிறது இல்லையா? அதோட இது கொஞ்சம் பெரிசு அவ்வளவுதான். அதுக்கு ஏன் அலட்டிகிறீங்க. அளவுதான் பெரிசு மத்தபடி எல்லாம் ஒன்னுதான். நாட்டிலே நடக்குறதுதான்.

    நம்மளுக்கு அந்த நாட்டிலேயும் இந்த நாட்டிலேயும் நடக்கிறத பத்தி ஒரு மண்ணும் புரியல. ஆனாலும் அந்த அண்ணன் தம்பி பிரச்சனையின்னு சொல்லுறது சரியாத்தான் படுது. இருக்காதா பின்னே அவரு எவ்வளவு கணக்கு போட்டு கச்சிதமா சொல்லுறாரு!. அவருக்கு தெரியாதா? அவர் சோர(ர)ம் போ(ன்)றவங்க பத்திரிக்கையெல்லாம் படிக்கிறாங்க, ஆங்கிலமெல்லாம் அழகாத்தான பேசிறாங்க. ஆனாலும் அங்க ஒரு அண்ணன் வேற மாதிரி சொல்றாரே! அதனால கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கு! பார்ப்போம்.

    ஆனாலும் ஈழத்தமிழருக்கு அவர் சொன்னதுல அவ்வளவு நம்பிக்கையோ திருப்தியோ இல்லை! சாவு விழுவது அவங்க வீட்டிலல்ல. ஆனாலும் யார் மீதும் நம்பிக்கை இழக்கவில்லை. எல்லோரையும் நம்புறவர்தான் அவர்கள். அனால் அவர் சொல்வது சரியல்ல என்பது தான் ஈழத்தமிழரின் எண்ணம். அது மட்டும் தானா இதோ இன்னொன்று.

    எல்லாம் தெரிந்த ஏகாம்பர ஆய்வாளர் முழங்குகிறார்.

    சீனாவின் ஆயுதம்
    இந்தியாவின் ரேடார் தெரிஞ்சு கொடுத்தது தெரியாம என்னன்னவோ!
    உலகத்தின் தாரள கடன்,
    அமெரிக்காவின் ஆதரவு
    அய்ரோப்பாவின் பார்வை
    பாகிஸ்தானின் பார்வை
    ஆள்பலம், மிக்29, மல்டி பரல் பீரங்கிகள்

    கூட்டி கழிச்சி பார்த்தா ஈழத்தமிழர்கள் அடிமையா இருக்கிறதே நல்லதா படுது. என்ன நான் சொல்றது? ஒரே அடியா அழியாம, கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சி போறது நல்லதுதானே! இனவெறி அப்பப்ப கூடும் குறையும் அதுக்கு பேரு சமூகவியல்ல என்னமோ சொல்லுவாங்க, சட்டுன்னு நினைவுக்கு வரல, மனசிலேயே இருக்கு வாயில வரல. ஏகாம்பரத்துக்கும் ஊர்ல நல்ல பேரு.

    ஈழத்தமிழர்கள் சோர(ர)ம் போ(ன்)றவங்க கணக்கு, ஏகாம்பரத்தின் கணக்கு இரண்டையும் தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு அல்ல என கருதி அடிக்கடி மெல்லிய குரலில் ஆனாலும் தீர்மானமான குரலில் இதனால என்ன நடக்கும். இவைகள் எப்படி என் பிரச்சனையை தீர்க்கும் என்று கூறுவார்.

    ஆதோ நம்ம இனவெறி அண்ணன் தன் தம்பிகிட்ட என்னவோ சொல்றார் என்னன்னு கேட்போம். நம்ம நிலம மோசமா இருக்கும்போல இருக்க என்ன செய்யலாம்

    மிக்29ம் ஆயுதங்களும் வாங்கனும்ண

    யாரு கடன் கொடுப்பா?

    இப்படி சொல்வோம்ண

    எப்படி

    குடு..குடு...குடு..குடு..................

    ஓம் மலையாள பகவதி......

    குடு..குடு...குடு..குடு..................

    சக்கம்மா சட்டுன்னு வந்து சொல்லு

    எல்லாருக்கும் கெட்ட காலம் தொடங்கிடுச்சு...

    அதோ நாராயணன் வந்து சொல்றார் நமக்கும்தான்னு...

    இந்தியாவுக்கு ஆபத்து!......

    ஆசியாவுக்கும் ஆபத்து!...............ஏன்

    உலகத்துக்கே ஆபத்து.... ஆனாலும்

    வரப்போற ஆபத்த பத்தி கவலைபடாதீங்க...

    நான் இருக்கன்ல நான் எல்லோரையும் காப்பாத்துரேன்...

    எனக்கு காணிக்கையை வெட்டுங்க........

    இல்லன்னா நீங்களெல்லாம் அழிஞ்சிடுவீங்க...........

    சக்கம்மா சொல்றா.........

    நம்புலன்னா நாராயணன கேட்டுப் பாருங்க..............


    இதுவும் ஒர்கவுட் ஆகுத தம்பி. ஆனாலும் அங்க இருக்க அவனுங்க சொந்த கார பசங்க அழுது அழிச்சாட்டியம் பன்ன மாட்டாங்களா..

    அத பத்தி நமகென்னண்ணே கவலை..அவங்களுக்கு ஆறுதல் சொல்லதான் நம்மக்கிட்ட சோர(ர)ம் போ(ன்)றவங்க இருங்காங்க இல்ல...அத அவங்க பார்த்துப்பாங்க..

    அது சரி தம்பி அவங்க வீரனுங்களா இருக்காங்களே நம்மை ஓட ஒட விரட்டுராங்களே நம்மால அவங்கள அழிக்க முடியுமா?

    முடியும்னே அதுக்கு 3 ஆண்டு திட்டம் இருக்குன்னே?

    என்ன தம்பி சொல்றே

    அங்கே ஈழத்தம்பி ஒருத்தன் இருக்காண்ணே, அவன மூன்று ஆண்டுல முடிச்சுட்டு. அவங்ககுள்ள போட்டிய உருவாக்கி விட்டுட்டா அவனுங்கக்குள்ளேயே அடிச்சுக்குவானுவ.. அதையும் நம்மகிட்ட சோரம் போனவங்க துவக்கி வச்சிடுவானுங்க. அந்த கவலைய விட்டுடுவோம்ன...

    இவ்வளவு நடக்கும் போதும் அந்த நண்பர் எதோ சொன்னபிறகு ஈழத்தமிழர் கொஞ்சம் பயம் கொறஞ்சாபோல இருக்கிறார் என்னனு கேட்போம்

    என்ன சொன்னார் அந்த நண்பர்?

    அதுவாண்ணே, நம்ம தம்பி புத்திசாலியாகவும், திறமையாகவும் இருப்பதாலே அவங்க எங்கேயிருந்து ஆயுதம் வாங்கினாலும் அதுல பலது நம்ம தம்பிக்கிட்ட வந்துடும்ன்னு சொல்லுண்ணே..இல்லியாண்ண பின்னே!

    தம்பிங்க இருக்கிற வரைக்கும் எங்களுக்கு நிம்மதி அண்ணே! அது நல்லயிருக்க ஏதாவது செய்யினும்ணே!.
  8. PSIVARAJAKSM
    விடுதலை வேட்கை கொண்ட வேங்கைகளில்
    ஆணும் பெண்ணும் சரிசமமாம்- அகிலம்
    வியக்க ஆற்றிடும் பணிகள் பலப் பலவாம்
    ஆணும் பெண்ணும் சரிசமமாம்- அதனால்
    அங்கில்லை பேரணிகள் பெண்கள் நியாம் கேட்டிடவே!

    கற்புக் கரசி சண்ணகியின் வழித் தோன்றல்களாம்
    கயவர்களெல்லாம் கலங்கிடவே ஈன்றிடுவர் அவர் களைகளாம்
    களம் சென்றால் அவர் வேங்கைகளாம்
    கயவர்கள் இவர் எதிர் நின்றால் பேடிகளாம்!

    வின்வெளி பயண வில்லியம்ஸ் சுனிதாவுக்கும்
    வீசிடும் கரத்தால் வெற்றிகள் குவிக்கும் மிர்சாவுக்கும்
    சமர்களத்தில் சாதனைகள் பலப் புரியும்
    சத்தியத்தின் புதல்விகளாம் சாதனை மகளிர் இவர் சளைத்தவரோ!


    பிறர் வாட பலப் பல செயல் புரிச்து
    பொருள் தேடி பொருள் குவித்து
    பொதுவுடைமை கொள்கைகளை தூக்கிலிடும்
    பேய் மகளிர் பிள்ளைகள்தாம் பிள்ளைகளோ!

    வேடமிட்டு வேடம் மாற்றி வேசம் போட்டு
    விதவிதமான வேடிக்கை கதை புணைந்து
    வேண்டியவர்களை காமுற்று பிள்ளைபெறும்
    வேசி மகளீரெல்லாம் மகளீரோ!

    சதிராடி சாமார்தியம் பேசி
    சமயம் கிடைக்கும் போதெல்லாம்
    சோரம் போய் சபை நடுவே நின்று
    சத்தியம் பேசுவோர் இவை உணரார்

    சம தர்ம சமுதாயம் படைத்திடவே
    சளைக்காமல் செயல் புரிந்த
    சாதனை மனிதன் லெனினின் தாயை
    சல்லடையாக துளைத்த வார்த்தைகள் எத்தனை? எத்தனை?

    உனக்கென்னம்மா கவலை
    ஒரு பிள்ளை தூக்கில்
    ஒரு பிள்ளை சிறையில்
    இதுவல்லவோ குடும்பம்
    இவளல்லவோ தாய்
    இவளால் இங்குள்ளவர்களுக்கு
    எத்தனை எத்தனை பிரச்சனை
    அன்று அங்கைநெட் இருந்தாலும்
    அப்படித்தான் கூறியிருப்பார்
    அவர் கூற்று அவலங்களை துடைப்பதற்க்கா?
    அவலங்களை காட்டி அச்சுறுத்தி
    ஆதிக்க வர்கம் அடிமை கொள்ள துணைநிற்க்க
    அவர் ஆதிக்க வர்கத்தின் அடிவருடிதானே
    ஏகாதிபத்தியத்தின் எடுபிடிதானே
    அதனால் தான் கூறுகின்றார் பாருங்கள்!
    ஆனாலும் அங்கு உணவனுப்ப ஒருக்கார்
    உடண்படார் மருந்தனுப்ப
    மானுடம் பேசுவர் இதற்கு மறுப்பது ஏன்?
    இப்போது திரும்பவும் படியுங்கள்
    அவர் மொழியை அழகாகத்தான்
    அழுதிருப்பார் அதற்க்கு இருக்கும் ஆயிரம் காரணங்கள்
    ஆடு நனைய ஓனாய் அழுதகதை
    அறீயீரோ நீங்கள்?
    அதோ பாருங்கள் அங்கைநெட்டை
    அழகாக புரியும்! அதுவல்லவோ அழுகை
    ஆராரோ! ஆரிராரோ பாட ஓம்பிரகாஷ்
    வரலாம், வலியுள்ளவர்களுக்கு தெரியும்
    வாய் ஜாலாம் அதுவென்று

  9. PSIVARAJAKSM
    அண்டம் நடுங்கும் இராணுவமுண்டு
    பிண்டத்திற்கஞ்சா கப்பல்களுமுண்டு
    விண்னை கிழிக்கும் விமானமுண்டு
    வேண்டிய மட்டும் திறமையுண்டு

    நாட்டில் இழந்ததை மீட்டிடுவார்- அதற்கு
    நாட்டில் கொடியும் அவர்கண்டார்
    தபால் தலைகளும் வெளியிட்டார்
    காற்றினில் ஒலி ஒளியை பரப்பிவிட்டார்

    அடைந்துவிடுவார் ஈழம் தனையே
    அகிலம் அறிய அறிவிப்பார் - அங்கு
    யாழில் குடிபுகுந்த பேய்களை விரட்டிடுவர்
    அகிலத்தின் அங்கீகாரம் வேண்டிடுவர்
    அறிவுடையோர் ஆவது அறிவர்
    அறிவிப்பார் அவர் தேர்தல் - எப்போது
    அங்கீகாரத்திற்கு பிறகே அறிவிப்பார்
    அதற்க்கும் வேண்டும் அவகாசம் அய்ந்து வருடம்
    அகிலத்தில் அதுவே முறையாகும்
    அகிம்சை நாட்டில் நடந்ததுவும் அதுவேயாகும்!
    அடைந்த விடுதலையின் ஆண்டு 1947
    அகிம்சை நாட்டில் தேர்தல் 1952
    அதற்க்கு பின்பே குடியரசு அந்த ஆண்டும் 1956
    அனைத்தும் அறிந்தே ஆணவம் பிடித்தே
    அறிவிழந்து பித்தெரன பேசுவதும் பேச்சோ!
    அறிந்திடுவர் நன்மதிக் கொண்டோர்
    அது அறியார் குமைந்திடுவர் குறை கூறி குடைந்திடுவர்
    அவர் குணத்தை கூறிடுவேன் குறித்திடுவாய் தமிழா
    தன் குற்றம் பிறனில் கான்பார்
    அவர் மேய்வார் வேலி வேண்டார்
    வேண்டும் பரிகாரத்தை தயிர்சாதத்தில் வைப்பார்
    வேலைகள் செய்யார் வேந்தனை அண்டிப் பிழைத்தார்
    மதியுள்ளோர் வெறுத்திடும் இச்சிறுமைமை
    மற்றவர்மேல் ஏற்றிடுவார் அவர் மான்பினை அறிந்திடுவோம்
  10. PSIVARAJAKSM
    யாரது ஈழத்து தம்பியா? என்னப்பா இது அடையாளமே தெரியவில்லை ஒரே அடியாக மாறிவிட்டாய்?

    ஆமாங்க என்ன செய்வது? இந்த பாழப்போன சண்டை வந்ததிலிருந்து ரேஷனும் கிடைக்கலை பயிரையும் விளையவிடல விளைந்த பயிரையும் அழிச்சிடுராங்க பஞ்சம் ஏற்ப்பட்டுவிட்டது, ஏற்கனவே இருந்த பிரச்சனையில இதுவும் சேர்ந்ததால் உடம்பு பாழாப் போச்சி உடம்பு இளைச்சாலே உருமாறித்தானே போகும் உடம்பு!

    அடப்பாவமே முகம் கருத்துக் கிடக்கு?

    நான் எப்பன்னே சிகப்பா இருந்தேன்?

    மாநிறமா இருப்பியே?

    கவலைதான் எல்லாத்துக்கும் காரணம்

    ஆமாம் ஆமாம் அதுக்கு ஏதாச்சும் செய்யுப்பா, ஆமாம் உன் தம்பி ஒருத்தன் இருந்தானே துறு துறுன்னு அவன் எப்படி இருக்கான்?

    ஆண்டவன் புண்ணியத்துல அவன் நல்லாதான் இருக்கான். அவன் இருக்கிறதுதான்ணே எங்களுக்கு பாதுகாப்பு, அவன் இல்லேன்னா நாங்க இருந்த இடத்துல புள்ளு மொளச்சிருக்கும்னே,

    என்னமோப்பா உடம்ப நல்லா பார்த்துக்க இரும்பா இருந்த நீ துரும்பா போயிட்ட

    முதல்ல உன்னை பார்த்த போது அடையாளமே தெரியல உருவமே மாறிடிச்சு

    ஆமாண்ணே அப்படித்தான் கோவலண்ணன் கூட சொன்னாறு

    என்ன கோவால பார்த்தியா? பாத்தியா என்ன பார்க்கரத்துக்கு முன்னடியே அவன பாத்திருக்க, அவன் என்ன என்னோட பெரியவனா? எங்கிட்ட இருந்தவன் தானே என்னமோ என் புள்ளைங்களோட போட்டி போட்டதனால அவன கழட்டி விட்டுட்டேன்

    இப்ப என்னடான்னா அவன் குண்டம்மாக்கிட்ட சேர்ந்துகிட்டு கும்மாளம் போடறான், அவன் குண்டக்க மண்டக்கன்னு அப்ப அப்ப பேசுனதினால அவன கும்மி எடுக்குது அந்தம்மா ஆனாலும் இரண்டு இட்லி அதிகமா கொடுத்ததாலா அதுகிட்டயே போயிட்டான்.

    என்னன்னே என் பிரச்சனையை தீர்த்து வைப்பீங்கன்னு வந்த உங்க பிரச்சனையை சொல்லுறீங்க, சரிண்ணே நா வரேன்!

    செய்யுப்பா உடம்ப பார்த்துக்கப்பா என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு போறார் கலை அண்ணன்.

    கலை அண்ணனின் வீடு பெரியது தான் ஆனா கூட்டுக் குடும்பம் ஒவ்வொறுத்தரும் ஒரு மாதிரி. விருந்தாளியெல்லாம் வீட்டுக்கு போக முடியாது. அம்மையார் அவ்வளவு சுதந்திரா தேவி. அந்த அம்மையார் அந்நியம்தான் அவருக்கு அது ஒரு பெரிய கதை அது இருக்கட்டும் அந்த ஈழத்தம்பிய கொஞ்சம் பார்ப்போம், அங்க கொஞ்சம் வேலை இருக்கு.

    அந்த ஈழத்து தம்பி அதுபாட்டுக்கு போயிட்டு இருக்கு நாம அந்த கடைக்கு போயிட்டு போவோம். அட அந்த உயரமான இருக்கிற அண்ணன் நம்ப ஈழத் தம்பிய பார்த்து என்னமோ சொல்றார் என்னன்னு கேட்போம்

    அண்ணே அந்த ஈழத்து தம்பி முன்ன நல்லா இருந்தாராம் இப்பதான் இப்படி ஆயிட்டாராம் அங்க ஒரு அண்ணன் சொன்னாரு இனவெறிதான் இதுக்கொல்லாம் காரணம்னு.

    அப்படியா சொன்னான் அவன் சொல்லுவான் சொல்லுவான்

    என்னண்ணே தப்பு அவர் சொன்னதில முந்தி அவர்

    ஆள் முன்ன மாதிரி இல்ல இளைச்சிதான் போயிருக்கிறான். எல்லாம் அவன் செஞ்ச வினை. அடிமையா ஒழுங்கா மரியாதையாதான் இருந்தாம்பா, அப்புறம் ஏம்பா நல்ல படிச்சான்? புத்திசாலி ஆயிடலாம்னு நினைச்சான், அவனெல்லாம் முன்னுக்கு வந்துட்டா நாங்க எப்படி பொழைக்கிறது, இங்க நாங்க 3, 4 பேர் இருந்துகிட்டே இவனுங்கள கடவுள் பெயரால காவடி எடுக்க வச்சுட்டோம், பத்தும் பத்தாதற்க்கு பஞ்சாயத்து நாட்டமெல்லாம் நாங்கதானே விட்டு விடுவோமா?அதனால தான் அங்க அங்க ஆப்பு வைக்கிறோம்

    நாங்க எங்க ஆத்துல இருந்துகிட்டே இவனுங்கள குளத்து மீனாகவும் குளக்கரை எறும்பாகவும் பிரிச்சி வச்சி இருக்கோம். எங்க தேவைக்கு தகுந்தா போல எங்க ஆத்துல தண்ணிய கூட்டி குறைச்சி குட்டையை குழப்பி ஆட்டம் காமிக்கிறோம். குளத்து மீனையும் குளக்கரை எறும்பையும் ஆட்டுவிப்பது ஆத்து நீரும் அருகில் உள்ள தர்ப்பையும்தான்னு அங்கைனெட் அழகாக கூறியபிறகும் அத நாமே ஏன் எழுதனும் அத படிங்க புரியும்.

    ஆனாலும் அவங்க முரண்டு பிடிக்கிறாங்க விடுவமா, நாங்க 3, 4 பேர் இருந்துகிட்டே சமாளிக்கிறோம். அங்க அதிகமா இருக்கவங்க கிட்ட இவனுவ பாட்சா பலிக்குமா? அதான் சாவுராங்க சாவுட்டும் சாவுட்டும். அவங்கல்லாம் எங்களுக்கு போட்டியா வந்துட்டா நாங்க அவங்க வேலையையா செய்ய முடியும்? நாங்க எங்கேயிருந்து பொறந்தவங்க!

    உயரமான ஆள் இவ்வளவு கோவமாக பேசும் போது நாம ஏன் விவாதத்த வளர்க்கனும். அவங்கள வேற இடத்துல பார்த்துக்கலாம்.

    ஈழத்து தம்பி கஷ்டத்துல இருக்கிறத இரண்டு பேரும் ஒத்துகிறாங்க ஆனாலும் அதுக்கு காரணம்தான் வேற வேற சொல்லுராங்க. அதுக்கு காரணம் அவங்க குணமும் பண்பாடும் அப்படி.

    நாம ஈழத்து தம்பிய தொடர்ந்து பார்ப்போம் அவருக்கு இருக்கிற பிரச்சனைய பேசுவோம். நல்லவங்க நாலு பேர் காதுல விழுந்தா அதுக்கு நல்லது நடக்காம போயிடுமா?
  11. PSIVARAJAKSM
    அன்றொரு நாள் அமர்ந்திருந்தான் ஓர் மன்னன்
    அடிபட்ட புறா ஒன்று அவன் மடியில் வீழ்ந்தது
    அடித்த வேடுவனும் வந்தே வேந்தனிடம் முறையிட்டான்
    அடித்ததற்கு நாணாதனால் நான் என்றான் நமக்கே சொந்தம்!
    அளித்திடு எமக்கே என்றான்! அகிலத்தில் அன்று அதுதான் நீதி!
    அரசனவந்தான் அதனால் அதட்டி விரட்டவில்லை வேடனை!
    அதற்கு பதில் தருவேன் என்றே அரிந்து கொடுத்தான் தன் சதையை!
    அவன் பெயர் சிபிச் சக்ரவர்த்தி! சீரிய நீதிக்கு மறுபெயர்!
    அறிஞ்சர்களை அண்டிடும் வருமையை - கான
    அஞ்சி பகுத்துண்டு வாழ்ந்தவர்கள் தான் தமிழர்கள்! -என்றாலும்
    அன்பு குழந்தைகள் யானையை கண்டும்
    அஞ்சிடாமல் அழகாக அழகு காட்டி அதன் முன்னே நின்றிடும்
    அவர்களை கூட கொன்றவர்களை கும்பிட்டு தொழுவாரோ?
    குழந்தைகளை கொன்று குலப் பழிதேடியதால்
    குறுகியது வாழ்நாள் சிலருக்கு! குற்றமென்ன?
    நடந்ததெல்லாம் அறிந்திட்டால் நாணிடாதோ நம்நெஞ்சம்!
    நமக்கதனை அறிவிக்காதது ஏன்? நாணியதாலோ!
    பத்திரிக்கை சுதந்திரமென்றே பறையரைவோர்
    பார்க்க மறந்தனரோ! பார்வையிழந்தனரோ!
    அமெரிக்காவின் மையாயை அகிலத்திற்குணற்தியதும்!
    பத்திரிக்கைகள்தான்! அவர் மொழியில் ஆங்கில
    பத்திரிக்கை நடத்துவோர் அவரிடமிருந்து பயிலவில்லையோ பண்பாட்டை!
    பயிற்றுவிப்பதெல்லாம் பண்பாட்டுச் சீரழிவை!
    பயணற்ற குப்பைகளை! பணம் குவிக்கும் முறைகளை!
    நாங்களும் அவ்வாறு இருப்போமா? நன்றாக
    எடுத்துறைப்போம் ஒவ்வொன்றாய்!

    எங்கே தம்பி? என்று கேட்டுக் கொண்டே ஒரு வீட்டின் பின்புறமுள்ள சமையல் அறைக்கும் சென்றான் இந்திய அமைதிப் படையின் சிப்பாய் ஒருவன், அங்கே பயந்து நடுங்கிக் கொண்டிருந்த 19 வயது மாணவர்கள் அருட்பிரகாசம் சுவர்ணதாஸ், குமாரவேல் செவ்வானந்த வேல் என்பவர்களை கண்டதும், அவர்களின் தலைமயிரை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தான். சுவர்ணதாஸ் வெற்றிலை கேணி பரமேஸ்வரா வித்யாலயாவிலும் செல்வானந்த்வேல் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    செல்வானந்தவேலின் வீடு தீருவில் தெருவில் இருந்தது, அங்கு முதல் நாள் நடந்த பிரச்சனையால் பயந்து இங்கு வந்து தங்கியிருந்தான். சம்பவம் நடந்த இடத்திலிருந்து 1 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடத்திற்கு இராணுவம் வருமென்று நினைத்துக் கூட பார்க்கவில்லை அவன். சுவர்ணதாஸ் வெற்றிலை கேணியில் இருந்து தனது பாட்டி வீட்டிற்கு வந்து இருந்தவன்.

    அந்த இரு மாணவர்களையும் வெளியே இழுத்து அவர்கள் இருவரது கைகளையும் நைலான் கயிறால் கட்டி தெருவழியே இழுத்துப் போனார்கள். அவர்களின் பின்னால் தள்ளாடும் வயதில் சுவர்ணதாசின் பாட்டி இராஜேஷ்வரி அம்மாள் அழுதுக் கொண்டே பின் தொடர துப்பாக்கியின் கைப் பிடியால் ஓங்கி அவரது தோள் பட்டையில் அடித்தான். அந்த அடியின் வேதனை தாங்காமல் கிழவியால் நகர முடியவில்லை. அப்படியே தரையில் விழுந்துவிட்டால்.

    அந்த இளம் மாணவர்களின் அலரல் அந்த சலையெங்கும் எதிரொலித்தது, தமிழர்களாக பிறந்ததற்கு இப்படியா தண்டனை அனுபவிக்க வேண்டும்?

    அவர்களை அப்படியே கட்டி இழுத்துக் கொண்டு சென்று கடற்கரையோரமாக உள்ள ஊரணி அரசினர் வைத்திய சாலைக்குச் சற்று எதிர்புறமாக உள்ள தீர்த்தக் கடற்க்கரைக்கு முன்னால் படுக்க வைத்து கத்தியினால் நெஞ்சிலும் தலையிலும் குத்திக் காயத்தை ஏற்படுத்தினார்கள்.


    உடலில் இருந்து குருதி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் அந்த இரு சிறுவர்களும் எங்களை ஒன்றும் செய்யாதீர்கள், நாங்கள் அப்பாவிகள் படித்துக் கொண்டிருக்கிறோம்................

    ஈனஸ்வரத்தில் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு சிப்பாய் அவர்களுக்கு மிக அருகில் நெருங்கி அவர்களை குறிவைத்து துப்பாக்கியின் விசையைத் தட்டி விட்டான்.

    அவ்வளவுதான்.

    அய்யோ!....அம்மா!...என்று வானமே அதிரும் வண்ணம் ஒலித்த குரலை தொடர்ந்து அந்த இரு சிறுவர்களும் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்...

    இது நம் கண்ணெதிரே நம் சகோதரனுக்கும், சகோதரிக்கும் , குழந்தைக்கும் நடந்திருந்தால், நாம் பொருத்திருப்போமா? பொங்கி எழமாட்டோமா
  12. PSIVARAJAKSM
    இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்த அக்கால கட்டத்தில் பின்னால் இந்திய இராணுவ அமைச்சராகவிருந்த முன்னால் இந்திய இராணுவ அமைச்சர் திரு ஜார்ஜ் பெர்னான்டஸ் எழுதியது.

    இராஜிவ் காந்தியின் இராணுவ சாகசத்தால் இலங்கை இந்தியாவின் வியட்நாமாக மாறும் என்று நான் 1987 ஆகஸ்ட் ஆரம்பத்தில் சொன்னேன். அப்போது இந்திய வியட்நாமிலும் ஒரு மையாய் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. இராணுவத்தினர் எங்கும் ஒரே மாதிரியானவர்கள்தான் என்று நான் அறிந்திருந்தேன் மீண்டும் மீண்டும் நான் இதை வலியுறுத்தியிருக்கிறேன். அவர்களது பயிற்சியும், கடுமையான வாழ்க்கை முறையும் போர் அவர்களிடம் தூண்டிவிட்ட மிருகத்தனத்துடன் இணைந்து சிக்கலான சமயங்களில் அவர்களை மனிதாபமற்று நடக்கச் செய்கின்றன. இதனால்தான் ஆரம்பக் கால இந்திய இராணுவ நடவடிக்கைகளின் போது கிளம்பிய பாலியல் வல்லுறவு, கொலை கதைகளை இந்திய அரசின் பிரச்சாரகர்கள் மறுத்த போதும். நமது இந்திய இராணுவ வீரர்கள் சாரணச் சிறுவர்கள் போல் போர்களங்களில் தினமும் நற்காரியங்களை குறிப்பாக திக்கற்ற அபலைகளுக்கு செய்து கொண்டிருக்கின்றனர் என்ற வாதங்களை கேள்விக்குள்ளாக்கினேன்.

    இன்று வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் தனது மையாயை நிகத்தியிருக்கிறது. இந்திய இராணுவம் வல்வெட்டித்துறையில் காட்டிய காட்டுமிராண்டி தனத்தைப் பற்றி லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் தனது தலையாங்கத்தில் விமர்சிக்கிறது. இந்த நாச வேலை மையாயை விட கொடுமையானது. அங்கே அமெரிக்க படைகள் நிதானமிழந்து வெறியாட்டம் ஆடினர். இலங்கையின் கிராமத்தில் இந்தியப் படையினர் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கின்றனர். ஆட்களை படுக்க வைத்து முதுகில் சுட்டு கொன்றிருக்கின்றனர்.

    வேற்றுமை அதுமட்டுமல்ல மையாய் அமெரிக்க பத்திரிக்கைகளால் உலகின் கவனத்திற்க்கு கொண்டுவரப்பட்டது. மையாய் பொது மக்களுக்கெதிரான அமெரிக்க இராணுவத்தின் அடாவடிச் செயலை அமெரிக்க மக்கள் குறிப்பாக பத்திரிக்கையாளர், மாணவர், இளைஞர்கள் ஒன்று திரண்டு எதிர்தனர். வல்வெட்டித் துறையில் இந்த கோர சம்பவம் நடந்து பதின்மூன்று நாட்களுக்கு புறகு அங்கு சென்ற பைனான்சியல் டைம்ஸ் (லண்டன்) பத்திரிக்கையின் டெல்கி நிருபர் டேவிட் கவுஸ்கோ இச்சம்பவத்தை அறிந்தார். இதைப் பற்றிய அவரது செய்தி ஆகஸ்ட் 17 அன்று அவரது பத்திரிக்கையில் வெளியானது. அதற்கு முன்பே ஆகஸ்ட் 13ம் தேதி லண்டன் டெலிகிராப் பத்திரிக்கை டெல்லியிலிருந்தப்படி தனது நிருபர் ஜெராமி கவ்ரான் தொகுத்தனுப்பிய செய்தியை வெளியிட்டது. இந்திய பத்திரிக்கையாளர்களின் ஒரு சிறு பகுதியினரே அதுவும் செப்டம்பர் 3ம் தேதிக்கு பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ் ரீட்ட செபாஸ்டியன் கொடுத்த செய்தியை தொடர்ந்தனர்.

    உண்மை என்னவென்றால் வல்வெட்டித்துறை சம்பவம் இந்திய அரசால் திட்டமிட்டு மறைக்கப் பட்டது. இந்திய பத்திரிக்கையாளர்களின் பெரும் பகுதியினர் இதில் கூட்டுச் சேர்ந்துக் கொண்டு புளகாங்கிதம் அடைந்தனர். இந்தியாவின் இராணுவம் புனிதமாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் அடாவடித்தனங்களில் ஈடுபடும்போது இப்புனிதத்தன்மை மேலும் கெடுகிறது. வட கிழக்கு மாகானங்களில் இராணுவ உடையில் நம்மவர்கள் நடத்தும் பாலியல் வல்லுறவுகளையும், கொள்ளைகளையும் பற்றி யாரேனும் வாய்திறப்பதுண்டா? ஒயினம் என்ற இடத்தில் நடந்த கேவலத்தைப் பற்றி கேள்விப்படாதவர்கள் கூட இந்தியாவில் இல்லை. இராணுவ உடையணிந்த கயவர்களும் வக்கிரம் பிடித்தவர்கலும் நடத்திய மிருகமான செயல் அது.

    இந்த இடத்தில் இன்னொன்றையும் நினைத்துப் பார்க்கிறேன். இப்படுகொலை குறித்து ஒரு மாதம் கழித்து செய்திக் கட்டுரை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை " இந்தியப் படைகளால் எரிக்கப்பட்ட வீடுகளில் காந்தி, நேரு, சுபாஸ் சந்திர போஸ் போன்ற இந்தியாவின் தலைச் சிறந்த தலைவர்களின் படங்கள் கூட எரித்து நொறுக்கப் பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது ( செப்டம்பர் 3, 1989) அவர்களது கண்களுக்கு மனிதர்களே மனிதர்களாக தெரியாதபோது படங்களா தலைவர்களாக தெரியப் போகின்றனர். - ஜார்ஜ் பெர்னான்டஸ்

  13. PSIVARAJAKSM
    மாடு மணியடிக்க!
    மறுத்தானா! தடுத்தானா!
    மனமுவந்தே! தண்டித்தான்!
    மனுநீதிச் சோழன் தன் மகனை!
    மானுடத்தில் அவன் பெயரே!
    மாறாத நீதிக்கு மறு பெயர்!
    மங்காத புகழ் அவனுக்கு அதனாலே!
    மகனவனும் மனம் தெரிந்து செய்தானா!
    தவறிதான் தடுமாறிய கன்றுக்குட்டி
    தவறாமல் அவன் தேர்க்காலில் அது அவன் தவறோ!
    தவராமல் தண்டித்தார் தமிழர்!
    தமிழர் நீதியில் மாடென்ன! மனிதரென்ன! எல்லாம் உயிர்!
    தவறிய நீதிக்கு தன்னுயிர் விட்டான் பாண்டியன்!
    தாமும் ஓர் காரணமென்றே தயங்காமல் உயிர்விட்டால் பாண்டிமாதேவி!
    காவலன் அவளென்றே கடிது விளகினாளா கண்ணகி!
    கடிது நோக்கினால் கற்பு தீ பரவிட்டது!
    கற்புக்கு கண்ணகி! காவலனின் நீதிக்கு பாண்டியன்!
    காலம் போற்றும் இவரெல்லாம் தமிழ் முடியரசர்! தமிழச்சி!
    வேண்டாம்! வேண்டாம்! இந்திரன் என்றே ஒருவன்!
    அவனே அமரர்களுக்கு தலைவன்! அரசன்!
    அவனோ ஆசை மிகக் கொண்டு அகலிகையை கெடுத்தான்!
    அவள் கணவனோ ஒரு முனிவன்!
    முற்றும் துறந்தவன் தான் முனிவன்! எனினும்
    அகமிக மகிழ்ந்து ஆகட்டும்! ஆகட்டும்! என்றே
    ஆசிர்வதித்தானா! அடிக்கடி வர அழைப்பு விட்டானா!
    அதிர்ந்தே சாபம்விட்டான் அதனால் ஆயிரம்புண் இந்திரனுக்கு!
    தவறான உடன்பாட்டை மனதில் கொண்டே
    தயங்காமல் மனதில் கொண்டே
    தயங்காமல் வரவழைத்து தடுப்பு காவலில் வைத்து
    தவறினால் கையெழுத்திட தவறினால்! தமிழரை
    தப்பாமல் அழித்திடுவோம் அரை நொடிக்குள்!
    சிகரெட் கருகுவதற்க்குள் சிதைத்திடுவோம் சில நொடியில்! என்றே!
    சீறியதும் முறையோ! சிந்தையில் வன்மன் கொண்டே!
    சிக்கவைத்து சீரழித்தது சிறப்போ! சீரிய செயலோ!
    அப்படித்தான் ஏற்ப்பட்டது உடன்பாடு!
    அதனால் புறப்பட்டது அமைதிப்படை!

    எனது இராணுவத்தினர் நடந்துக் கொண்ட முறைக்காக நான் வெட்க்கப் படுகிறேன். இது எனது இந்திய நாட்டையே அவமான படுத்துவதாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி எதிர்காலத்தில் நடைபெறாது என்பதை உங்களுக்கு உறுதிப் படுத்துகிறேன்...அப்படி இனிமேலும் நடக்குமானால், நான் உங்கள் முன்னிலையில் வந்து நிற்க்கிறேன்..என்னை கல்லால் அடித்துக் கொள்ளுங்கள்.

    - டெபுடி கமாண்டர் கேணல் அவுஜூலா
    இந்திய அமைதிப் படை.

    இவ்வுரை கேட்ட நீங்கள்
    இது எங்கே நடந்தது அறிவீரோ!
    அமெரிக்கா என்றொரு நாடு!
    அது அடிமை கொண்டிட விரும்பியது ஓர் நாடு!
    அச்சத்தை விதைத்து வீழ்த்தவே!
    அதிகார வர்க்கம் வாழவே!
    அங்கு அனுப்பினர் ஒருவனை!
    அவனை பேயென்று ஒதுக்கினர் அவர்களே!
    அமைதியாய் இருந்தது ஓர் ஊர்!
    ஆக்கிரமிப்பாளர்களுக்கு அது வேறா!
    ஆடி அடங்கியது அமெரிக்க இராணுவம்!
    அதில் பிறிந்தன உயிர்கள் நூறு நூறென்றே!
    கொம்புடை பேய் அவன் பெயர் காலி!
    ஆதிக்க வர்கத்தினருக்கு அவன் ஒரு கூலி!
    ஆனாலும் அமெரிக்கர் அதிர்ந்தனர்! நாணினர்!
    அதனால் அவனுக்கும் கிடைத்தது தண்டனை!
    அந்த சம்பவம் நடந்தது "மையாய்"
    அதுவே வியட்நாமின் விடுதலைப் போரில் "மைல்கல்லாய்"
    விடுதலையை வேண்டி நின்றால்!
    வெறுத்திடுமே! ஆதிக்கவர்க்கம்!
    அச்சத்தை விதைத்தே அழித்திடுமே!
    அதில் ஆயுத போராட்டமென்ன! அகிம்சை போராட்டமென்ன!
    அமிர்தசரசிலே அகிம்சைப் போராட்டம்!
    அதிரடியாய் புகுந்திட்டான் ஜெனரல் டயர்!
    அதிகார குரல் ஆணவமாய் ஒலித்தது!
    ஓய்ந்தன உயிர்கள்! ஒன்றா! இரண்டா!
    ஆயிரத்துக்கும் அதிகம் படுகாயம்!
    அதில் பாதி மரணம்!
    அவனுக்கும் விருதுகள்! ஆதிக்கவர்க்கத்தின் பரிசுகள்!
    விந்தையான உலகமட இது! - இங்கு
    விடுதலைக்கும் விலையாக வேண்டும் உயிர்கள்!
    இந்திய சுதந்திரப் போரில் இருண்டப் பக்கங்கள் இவை!
    இவை நடந்த இடம் ஜாலியன் வாலப்பாக்!
    இவையெல்லாம் ஆதிக்க வர்க்கம் ஆக்கிரமிக்க!
    இருந்தவற்றை இழக்காமல் தக்கவைக்க!
    ஆனால் அமைதி காக்க போனவகள்!
    அமைதியை கொன்றதுவும் நடந்ததுவே!
    நல்லோர் நானினரே! நயவஞ்சகர் செய்கையினால்!
    அகிலத்தின் நான்காவது பெரிய இராணுவம்!
    அதை அகிலத்திற்க்குணர்திடவோ!
    அமெரிக்கவை விஞ்சிடவோ!
    பிரிட்டாஸாரை பின்னுக்கு தள்ளிடவோ!
    பிரிட்டீஸாரின் பெயர் விளங்க ஜாலியன் வாலாபாக்
    அமெரிகாவின் ஆற்றலுக்கு ஓர் "மைலாய்"
    இந்தியா இவருக்கு சளைத்திடுமோ! இவ்வாய்ப்பு!
    இனி கிடைத்திடுமோ! என்றே விரைந்தனரோ!
    இல்லை! இது விதியோ! வீணர்களின் சதியோ!
    அகிம்சை இராணுவம் அமைதியான ஊருக்குள்!
    அகிம்சை அகிம்சை வெளியேற ஆணவ பேயாட்டம்!
    "மைலாயும்" ஜாலியன் வாலாபாக்கும்!
    எம் ஆற்றலுக்கு சரியோ! அமெரிக்காவும் பிரிட்டிஸாரும் நேரோ!
    அவற்றை விஞ்சிடுவோம்! அவர்களை வென்றிடுவோம்! என்றே
    இந்திய அமைத்திப் படை சென்றதுவோ! வல்வெட்டித்துறைக்கு!
    அமைதிப்படையின் ஆணவ வெறியாட்டம் அறங்கேற்றம்!
    அகிம்சை நாட்டின் கிரீடத்தில் ஒரு வடு ஏற்றம்!
    பேய் புகுந்த வீடு போல் வல்வெட்டித் துறை!
    நெஞ்சு கொதித்ததனால் வந்த அவமானத்தினால்!
    வந்த நாணத்தினால்! வார்த்தைகள் வரவில்லை!
    வரிசைப் படுத்துகிறேன் வாக்கு மூலங்களை! வரும் பக்கங்களில்!
    அத்தனைக்கும் பிறகும் அமைதியாக இருக்க
    அவர்களென்ன சிலையா? மரமா?
    சாபமிட்டு சாபம் விலக்க முனிவனோ!
    இல்லை! இல்லை! அவர் மூவேந்தர் வழித்தோன்றல்!
    கைது செய்து கழுமரமேற்ற காவலனோ!
    கற்புக்கரசி கண்ணகியின் வழித் தோன்றல்!
    மானம் போற்றும் மறத்தமிழர் வீரர் தோன்றல்!
    எதிரியவன் எங்கிருந்தால் என்ன? எவராயிருந்தால் என்ன?
    எருதவன் முன்னே கதிரவனும் கருகிடுவான் எனில்
    சூரிய காந்தி பூ வென்ன சுடர்விட்டு பிரகாசிக்குமோ!
    கதிரவன் இராஜ கிரகம்தான்! காட்டிக் கொடுத்ததும் அவன் பண்புதானே!
    இணைந்து உழைத்ததால் விளைந்த பயிரை!
    தனித்துண்ண முனைந்தவர்கள் தேவரோ! முனிவரோ!
    அவெரெல்லாம் ஏதோச்சதிகாரத்தின் எடுபிடிகளே!
    இடையில் புகுந்துண்ண இணைந்திட்டார் இருவர்!
    இருவரையும் காட்டிக் கொடுத்ததும் கதிரவன் தானே!
    உதய சூரியனும் கதிரவனின் இளம் பருவமே!
    உணவுக்கே ஒருக்காதவர்! உரிமையை மதிப்பாரா!
    காட்டிக் கொடுத்தனால் கலங்குகின்றார் கதிரவனும், மதியும்!
    தலை மாறியதால் தடுமாறினரா! இராகுவும்! கேதுவும்!
    தயங்காமல் தண்டிக்கின்றனர்! தரணியில் சோதிடத்தில் சூட்சுமம் அதுவே!
    தவறி தவறிழைத்தால் தன்னுயிர்விடுவது தமிழர் பண்பு!
    தம்முயிரை உடைமையை மானத்தை விலை பேசினாலும் விடுவதோ தமிழர் பண்பு!
    மாடு மணியடிக்க மறுக்காமல் நீதி சொன்ன!
    மனுநீதிச் சோழனின் வழித் தோன்றல்களே!
    மனசாட்சி மணியடிதால் மறுத்திடுவீரோ நீதியை!
    எல்லைகள் தாண்டினால் நீதி மாறிடுமோ!
    நீங்கள் அங்கிருந்தால்! நீதி அதுவே என்றிடுவீர்!
    குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் நீதி என்ன நீதி?
    எல்லைகள் கடந்து நீதி சொல்வோம்!
    எம் தமிழர் கண்ணீர் துடைக்க கடமை செய்வோம்!
    தடை என்பார் தடா என்பார்! பொடா என்பார்!
    தங்க தாரகை என்பார் அவர்! இல்லை! இல்லை!
    தாடகை என்போம் நாம் அவர் வழியில் சிந்தித்தால்!
    அவர் நம் வழியில் சிந்தித்தால்
    தாடகை என்பதும் தவறாய் படுமோ!
    சிந்தனையின் மாறுபாடே சிக்கலுக்கு காரணம்!
  14. PSIVARAJAKSM
    ஆனையிறவில் அடிபட்டு ஓடியவர்!
    பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடியவர்!
    ஆதிக்க சக்திகளின் ஆயுத உதவிகளால்
    மீண்டும் தலைகாட்டி சம்பூர் வாகரை என்றே
    சதிராட்டம் ஆடுகிறார்! சதிகாரர் கூட்டுறவில்!
    கூட்டுறவும் ஆதிக்க வர்கத்திற்க்கு அழகாக பயண்படுவது ஏன்?
    அகங்காரம் கொண்டவரும் அழித்திடுவேன் என்கின்றார்!
    தரணியில் தமிழர்கள் தனித்தனியாய் பிளவுண்டதனால்!
    தண்டல்காரரென்றே தடியெடுத்து தாக்குகின்றார்!
    தருக்கனவன் தலைகால் புரியாமல் தலைகனத்து ஆடுகின்றான்
    தரணியில் தமிழர்கள் ஒன்றிணைந்தால் தருக்கரின் செருக்கழியாதா?
    சிங்கமென்றாலும் சிறுநரி கூட்டம் ஒன்று சேர்ந்தே எதிர்த்தால்
    கூற்றுவன் வந்தழைத்து போகானா அடலேறுஆனாலும் சிங்கத்தை!
    புலி குணமேவிய தமிழன் புரிந்து நடந்தால்!
    புத்தி கொண்டே புறப்பட்டு ஒன்றிணைந்தால்!
    புவியும் உணரும் தமிழர் வலிமை! பின்
    ஆப்பசைத்த குரங்கதுவும் வால்மாட்டி கதறியதுபோல்
    சம்பூரில் வாகரையில் சதிராடியவர்! சாமார்த்தியம் காட்டியவர்!
    சமர்களத்தில் சரணடைவார் சத்தியம் சொல்கின்றேன்!
    நித்தியம் இதுவென்றே நீ உணர்வாய் என் தமிழா!
    சாத்தியமா இதுவென்றே சற்றே மனம் தளர்ந்தால்
    சரித்திரம் சொல்கின்றேன் சகித்திருப்பாய் சற்றே என் மொழிக்கு!
    கந்தனுக்கு முன் பிறந்தான் கணேசன்
    ஆனைமுகத்தான் அவன் என்றே ஆன்மீகத்தார்
    அழைத்திடுவர் அவனையே முதல்வனென்று துதித்திடுவர்!
    ஆனை அடி போல் அதிரசங்களும்!
    குதிரை அடி போல் கொழுக்கட்டைகளும்
    படைத்திடுவர் பாடி தொழுதிடுவர்!
    சொந்த கதைகள் பலப் பல உண்டு அவருக்கு
    வந்த கதையுமுண்டு தமிழகத்திற்க்கு வந்த கதையுமுண்டு!
    அதில் அபிப்ராய பேதங்களும் ஆயிரம் உண்டு!
    வாதாபி கணபதி வந்த கதை அவர் சொந்த கதை!
    வாகனம் சுண்டெலியாம்! வாதாபி பிறப்பிடமாம்!
    வாதபியை தலைமையிடமாக கொண்டே
    வாழ்ந்து வந்தான் நாட்டை ஆண்டுவந்தான் புலிகேசி!
    ஆசை மிகக் கொண்டதனால் புவி மேல் பாசம் கொண்டே
    நாடு பிடிக்க நடத்திட்டான் படையை காஞ்சி நோக்கி!
    கலைகள் பல வளர்த்த காஞ்சியை ஆண்டவனும்
    கற்கோவில் கலைகளை உலகுக்கு தந்தவனும்
    மகேந்திர வர்ம பல்லவன் என்றே பேர் கொண்டவனும்!
    சிங்கமென சீறி சீறும் எரிமலையாக போர் புரிந்தான்
    அப்போதும் அழகாக பொய் ஒன்றை சோடித்தே
    பரப்பிட்டான் புலிகேசி! மகேந்திரவர்மன் புறமுதுகிட்டானென்றே!
    மாகேந்திர வர்மனின் மகன் நரசிம்ம வர்ம பல்லவன்
    மல்லனுக்கு மல்லன்! மாமல்லபுரமே அவன் பெயரால்!
    ஆணையிட்டே நடந்தான் வாதபிக்கு உளவு பார்க்க!
    தரணிபோற்ற கலைபோற்றியவன் தன்னந் தனியனாக!
    அப்போது பல்லவ தலபதியாம் பரஞ்சோதியும்!
    படையுடன் பின் தொடர்ந்தான்!
    பார் வியக்க படை நடத்தி பகை முடித்து
    வாதாபி நகரழித்து வாகை சூடினான் பரஞ்சோதி
    பின்னாளில் சித்தத்தை சிவன் பால் வைத்தே
    சீரிய சிவனடியனாகி சிறப்புற்றான் நாயன்மாராக!
    வாதாபி வெற்றியை வையகத்திற்கு உணர்த்த
    வரிசையாய் சீர் வரிசையாய் கொண்டுவந்த திரவியத்தில்!
    ஆணைமுகம் கொண்ட அழகான சிலையுமொன்று!
    அதுவே வாதாபி கணபதியாயிற்று இது வரலாறு!
    வாதாபியிலிருந்து வந்ததனால் வஞ்சிக்காமல்
    அனைவரும் ஆண்டவன் பிள்ளைகள் என்றதனால்
    அதுவே தரணியில் தமிழர்களின் கொள்கை என்றதனால்
    ஆணைமுகத்தானும் ஆதி சிவனுக்கு பிள்ளையானான்!

    திருத்தொண்டர் புராணமென்றும் பெரிய புராணமென்றும்
    சைவர்கள் போற்றும் நயான்மார் வரலாற்றை
    நமக்குவந்து நற்றமிழில் அளித்த சேக்கிழார்
    வாதாபி வெற்றிக்கு வாழ்த்து பாடுகிறார்!

    மன்னவர்க்கு தண்டுபோய் வடபுலத்து வாதாபித்
    தொன்னகரம் துகளாகத் துளை நெடுங்கை வரையுகத்தும்
    பன்மனி நிதிக் குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
    இன்னன எண்ணிலகவர்ந்தே இகலரன் முன் கொணர்ந்தார்."

    வாதாபி வீழ்ச்சிக்கு பதிலிருக்க
    பகை கொண்டே வெகுண்டெழுந்தான்
    புலிகேசியின் வழித் தோன்றல்
    வெஞ்சினம் கொண்டவன் பேர் விக்கிரமாதித்தன்
    விரைந்தான் காஞ்சி நோக்கி
    இடியாக புயலாக சுழன்று சுழன்று தாக்கினான்
    திடீர் தாக்குதலால் திக்குமுக்காடி தினறியது
    பல்லவ சேனை! பார்த்தும் பொறுப்பாறா?
    பண்பாடு போற்றும் தமிழர் அவர்!
    மானமுள்ள தமிழர் சேனை! மறுபடியும் கூடியது!
    தமிழர் ஒன்றுபட்டால் தாக்குபிடிப்பாரா எதிரி!
    சரணடைந்தது சாளுக்கியப் படை!
    சமர்களத்தை விட்டு ஓடியது!
    பரமேஸ்வர வர்ம பல்லவர் தன் பட்டத்து யானை
    அரிவாரண மீதமர்ந்து ஆர்த்தெழுந்தான்!
    கந்தலாடையுடன் கலக்கிய பல்லவன்!
    உதவி கேட்காமலேயே ஓடி வந்த
    தமிழரசர்களுக்கு தலைவணங்கி நன்றி சொன்னான்!
    விக்கிரமாதித்தன் விதி வலியதென்றே!
    ஓடினான் ஓடினான் தமிழக எல்லையைவிட்டே!
    தமிழர்கள் ஒன்றினைந்தாள் தருக்கர்களின் செருக்கழியாதா?
    நம்மை பிரிப்பதற்க்கே சதிவலையை பின்னிடுவர் - அவர்
    பெயரில் பரிவு (அதாங்க கிரேஸ்) இருக்கும் என்னத்தில் விஷம் இருக்கும்!
    இனத்தால் ஒன்றுபடு நீ தமிழா!
    இல்லையெனில் தரணியில் தாழ்ந்திடுவாய் தமிழா!
  15. PSIVARAJAKSM
    கூலிப்படை என்பவர்கள்
    கூனிகுறுக சம்பவங்கள் பல பல
    அவையன்றோ சரித்திரங்கள்!
    உலகத்தவர் உயர்த்திக் கூறும்
    மனித நேயமும் மகத்தான சுதந்திரமும்
    மக்களாட்சி என்ற மான்புறு சனநாயகமும்
    இமயம் போல் இருக்கிறது இங்கிலாந்தில் என்று
    நம்புவார் நாநிலத்தில் பலர்!
    அய்ரிஸ் மக்கள் ஆண்டாண்டாய்
    ஆயுதம் ஏந்தி போராடியது அகிலம் அறியும்!
    அங்கு சிறைப்பட்ட ஆறு விடுதலை வீரர்கள்
    அகிம்சை வழியில் அயராமல் இருந்தனர் உண்ணாவிரதம்!
    இசைய மறுத்தது இங்கிலாந்து!
    இறந்தனர் வீரர்கள்! இரங்கவில்லை இங்கிலாந்து!
    அசைந்து கொடுக்கவில்லை ஆதிக்கவர்க்கம்!
    அனாதையாக நின்றது அகிம்சை!
    அங்கேயே அகிம்சை அனாதை எனில்
    அகிலம் அறிந்த நவீன கிட்லர் - என்றே
    செகமெல்லாம் வர்னித்த ஜெயவர்த்தனாவின்
    இனவெறி அரசு இருந்த இலங்கையில்!
    இருந்தனர் உண்ணாவிரதம்! இருந்தது மாணவர்கள்!
    இசைந்ததா இனவெறி! இல்லை! இல்லை!
    இசைந்தால் தான் ஆச்சரியம்!
    இசையாததில் ஆச்சரியமென்ன?
    நடத்தியது ஒன்பதுபேர் அதில் நங்கையர் நால்வர்!
    மணிகணக்கில் நாள் கணக்கில் மாணவர்களின் உண்ணாவிரதம்!
    துவண்டது உடல்! துவளவில்லை மனம்!
    நாட்கள் கடந்தன! நாடே அழுதது!
    நாடவில்லை இணக்கத்தை இனவெறி அரசு!
    வீதிகளெல்லாம் கறுப்புக்கொடி! கதவடைப்பு!
    திறந்ததா இதயத்தை இனவெறி! இருந்தால் தானே திறக்க!
    மூடியது பல்கலைகழகத்தை! முயற்ச்சித்தது மாணவர்களை கடத்த!
    மூடிய கண்களும் முனகிய வாயுமாக மாணவர்கள் உண்ணாவிரதத்தில்!
    மரணத்தின் விளிம்பிற்க்கே சென்றனர்!
    மருத்துவமணை செல்லவில்லை!
    மருத்துவர்கள் வந்தனர்! மருத்துவமணையில் சேர்க்காவிட்டால்!
    மரணம் நிச்சயம் என்று கைவிரித்தும் விட்டனர்!
    ஆனால்! ஆனால்! அலச்சியப்படுத்தியது இனவெறி!
    ஏழுநாட்கள் நகர்ந்து விட்டது!
    எங்கும் எவரிடத்தும் ஓங்கியது மனிதாபிமானம்!
    நாட்கள் கடந்தால் நாடிடுவான் நமன்! - என்றே
    நல்லோரும் நாட்டோரும் அழுதனர்!
    நானவில்லை இனவெறி இலங்கை அரசு!
    நல்லோர்கள் சிலர் உயிர்காக்க நாடியே வந்தனர்!
    பிற உயிர்காக்க தம்முயிர் கொடுக்க காக்கவேண்டும் உயிர்- என்று
    உணர்ந்தனர் மாணவர்கள்! உணர்த்தியது யார்?
    அவர்களா கூலிப்படைகள்?
    கூச்சமில்லாமல் சொல்லுவது யார்?
    நரம்பில்லாத நாக்குதான் என்றாலும்!
    நாளும் நாலும் பேசிடுமோ!
    நாமும் ஆத்ம பரிசோதனை செய்கிறோம்!
    நம்மில் மாறுபடுவோர் செய்வார்களா?
    நாம் போற்றும்! நாடு போற்றும் மகாத்மா!
    நம் கண்ணெதிரில் சுடப்பட்டார்!
    நாணவில்லை நம்மில் சிலர்!
    மாறாக மகிழ்ந்திருந்தனர் பலர்!
    இந்தியாவில் இது இயல்பாய் போனதோ!
    வார்த்தையில் ஆத்மபரிசொதனை செய்வோர்
    வந்திங்கு சொல்லட்டும்! வாய்திறந்து பேசட்டும்!
    அகிம்சையை அகிலத்துணர்த்தியவரை கொன்றவர் சிறந்தவரா?
    அகிம்சை வழி நடப்போரை காத்தவர்கள் சிறந்தவரா?
    அவர்கள் அன்று இங்கிருந்திருந்தால்- இன்னும்
    சில காலம் இருந்திருப்பாரோ காந்தி மகான்!

  16. PSIVARAJAKSM
    தாயாதிகளுக்குள் கொண்ட பொறாமையினால்
    பொறாமல் புழுங்கினான் துரியோத்தனன்!
    பொறாமை தீ புசு புசுவென வளர
    கள்ள சகுனி கவனமாக வளர்த்துவிட்டான்!
    அரசர்க்கு அரசனாக ஆசைக் கொண்ட தர்மனவன்
    அருமை தம்பியருடன் அறங்கேற்றினான் வேள்வித்தீயை!
    தீயை தீ தீண்டியதால் திகு திகுவென வளர்ந்தது பொறாமைத் தீ!
    வேள்வித் தீயினால் வெதும்பினான் துரியோதனன்!
    வேண்டிணான் பொறாமை தீத் தணிக்க சகுனியிடம்!
    வெஞ்சமர் புகுந்தால் வெற்றியோ தோல்வியோ!
    விருந்துக்கழைத்திடுவாய் வெற்றியை உமக்களிப்பேன் என்றான் சகுனி!
    அருமை மாமனின் ஆலோசனை அதுவென்றால்
    அப்படியே நடக்கட்டும் என்றான் துரியோதணன்!
    விருந்துக்கழைத்தனர் விரும்பியே வந்தான் தர்மன் தம்பியருடன்!
    வல்ல சகுனியின் வாய் வீச்சில் வகையாக சிக்கினர்!
    மெல்லத் தொடங்கியது சூது மெதுவாக வைத்திழந்தான் ஒவ்வொன்றாய்!
    தம்பியரை இழந்தான்! தன்னைவைத்து பின் தாரத்தையும் சேர்த்திழந்தான்!
    மாய சூதினில் மதிமயங்கி மானத்தை இழந்துவிட்டான்!
    மாமனோர் தெய்வமென்றே மகிழ்ந்தான் துரியோதனன்!
    மங்கை திரெளபதியின் துகிலுரித்தான் துச்சாதனன்!
    வீரு கொண்டெழுந்த வீமன் ஆணையிட்டே உரை செய்தான்!
    ஆண்மையில்லா துரியோதணனின் தொடை பிளந்து மாய்ப்பேன்!
    அவன் தம்பி துச்சாதணன் தோள்களை பிய்ப்பேன்!
    அங்கு கள்ளென ஊரும் இரத்தம் குடிப்பேன் இது பராசக்தி மீது ஆணை!
    அர்சுணனும் ஆணையிட்டே சொன்னான்
    கர்ணனின் கதை முடிப்பேன் இது- கரிய
    கண்ணனின் மீதும் என் காண்டீபம் மீதும் ஆணை!
    பாவி துச்சாதணன், துரியோதணன் செந்நீர் கலந்தே
    சீவி குழல் முடிப்பேன் இது செய்யும்முன் முடியேன்!
    இது பாண்டவர்தேவி திரெளபதியின் ஆணை!
    குடும்ப பகை முடிக்க பாண்டவர் தேவி குழல் முடிக்க தொடங்கியது போர்!
    குருஷேத்திரம் என்பதே களத்தின் பேர்!
    பதினெட்டு நாள் நடந்தது போர்! பாரினில் உயர்ந்தது தமிழனின் பேர்!

    ஆம் சகோதரர்களே, பதினெட்டு நாள் நடந்த பாரதப்போரில் காயம் பட்டவர்களுக்கும் களம் கண்டவர்களுக்கும் கணக்கில்லாது உணவளித்தான்! மருத்துவம் செய்தான் ஒரு மன்னன்! நெருக்கமுடைய நிலமும் அதன் மீது விரிந்த வானமும், அதற்க்கிடையில் தவழ்ந்து வரும் காற்றும், காற்றில் பரவும் தீயும், தீயை அனைக்கும் நீரும் போல நிலையாக நீதி காக்க பகைவர் செய்த பிழையை பொருத்து குலப்பகையை வெல்லும் ஆற்றலும் கொண்டே மானுடம் போற்றினான் அவன்! அவன் வேறுயாருமல்ல தோழர்களே! "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று அகிலத்துக்கு சொன்ன தமிழரின் முடியரசன்! அவர் பேர் பெருஞ்சோறளித்த சேரன்!

    அலங்குளைப் புரவி அய்வரோடு சினைஇ
    நிலந்தலைக் கொண்ட பெலாம் பூந்தும்பை
    ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்!
    பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

    என்று பதிவு செய்கிறது புறநானுறு!

    இன்றும் நடக்கிறது போர் ஈழத்தில்
    இன்று நடப்பது குடும்ம பகைக்கா? குறுகிய நோக்கிலா?
    இல்லை! இல்லை! இது மானம் காக்க மறத்தமிழர் வீரம் காக்க!
    அந்தோ பரிதாபம்! அவருக்கு மருந்தளிக்க உணவளிக்க
    அனுமதிக்க தயங்குகின்றார் அரசு செய்வோர்!
    தமிழரின் தயவினால் ஆட்சி செய்வோர்!
    தயங்காமல் தருகின்றார் தமிழரின் எதிரிக்கு ஆயுதங்கள்!

    தமிழினத் தலைவருக்கு,

    பிறகேன் வினா? என்பதே என் வினா?
    என்று தாங்கள் கூறிவிட்டபோதும்!
    பின்னோக்கி பார்க்கமாட்டீர்களா?
    என்பதுதான் எங்கள் வினா?
    காலப்பேழையும் கவிதைச்சாவியும்
    கண்களை திறக்குமா?
    உங்கள் கவிதையே பேசுகிறது!

    பல்வேறு உணர்வுகளை சுமந்து கொண்டு
    பயணம் நடத்துகிறேன்; உம்மோடுக்கூட!
    முன்னோக்கி செல்லும் பயணத்தில் சற்றுப்
    பின்னோக்கி திரும்பிப் பார்க்கிறேன்
    இதைத்தான் "அறிமா நோக்கு" என்பர் அறிஞ்சர்
    அடியேன் நோக்கு அறியா நோக்காக கூட இருக்கலாம்;
    இதில் தன்னல நோக்கு இல்லை,
    தமிழர் வரலாற்று நோக்கும் இருப்பதால்
    குறுகிய நோக்கென கொள்ளாமல்; என்
    கொள்கை நோக்கெனக் கொள்வீர்!
    நோக்கின் காரணம்; விடையாக
    விரிந்து நிற்கிறது-
    "பிறகேன் வினா?" என்பதே என் வினா?

    நன்று கலைஞர் அவர்களே,
    வருங்காலத் தமிழர்கள் வினவாமல் இருக்கத்தான்
    வேண்டுகிறோம் பின்னோக்கி சற்றே பாருங்கள்!
    பெருஞ்சோற்று சேரன் அவன் பெருந்தீனிக்காரனல்ல!
    பெருஞ்சோற்று சேரன் அவன் பெருஞ்சோறு படைத்தவன் பசித்தவருக்கு!
    வரலாறு திரும்பட்டும்! வளம்பெற வாழ்ந்திடுவர் நம் தமிழர்!

    இதையும் சற்று பாருங்கள் கலைஞரே!
    இதுவும் நீங்கள் எழுதியதுதான்!

    தனது உள்ளங்கவர்ந்த செல்வனாம் விக்கிரம சோழனை
    தனக்குத் துணையாகவும் தனக்குபின் அவனேதான் எனவும்
    அறிவித்து ஆட்சி நடத்திய குலோத்துங்கன், அய்ம்பது ஆண்டுகள்
    அரசு நடத்தினான் எனினும்; கலிங்கத்து பரணிக்கு காரணமான
    கலிங்கப் போரில் அவன் கண்ட வெற்றியே
    அவன் ஆட்சியில் பெற்ற கடைசி வெற்றிப்போலும்
    விக்கிரம சேழனின் ஆட்சியும் நேர்மை நியாயம் போற்றிய ஆட்சியாக தந்தை
    விட்டு சென்றதை இழக்காத ஆட்சியாக விளங்கிற்று, எனினும்
    இலங்கையில் இருந்த பிடிப்பை இழந்தது; அதனை
    பேரிழப்பின் ஆரம்பம்; பின்னடைவின் துவக்கமாயிறு எனலாம்!

  17. PSIVARAJAKSM
    இந்த பரந்த உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளும் வல்லரசு நாடுகளும் தமது இராணுவத்துக்கு அதன் மேம்பாட்டிற்க்கு செலவிடும் பணமும் பொருளும் அளவிட முடியாததும் ஆண்டுக்கு ஆண்டு அதிகறிக்கிறது என்றால் இராணுவம் என்பதே பொருளாதரம் சார்ந்தது என்பது புலனாகிறது. ஊதியமற்ற வீரர்கள் அல்லது ஊதியம் குறைந்த விரர்கள் எதிரியின் வஞ்சக வலையில் சிக்க வாய்ப்பிருக்கிறது, சிக்கிய வரலாறும் இருக்கிறது, இன்றும் அது தொடர்கிறது. உலக வல்லரசுகள் தன் பொருளாதரத்தை வளர்ப்பதற்க்கு தம் இராணுவங்களுக்கு தாராளமாக செலவிடுகின்றன. இப்படி பொருளால் கட்டமைக்கபடும் இராணுவத்தில் சேருபவர்கள் அனைவரும் கட்டுபாடுகளுடன் கடமை கருதி உணர்வுடன் உள்ளன்புடன் மட்டிலுமே சேர்வார்கள் என்பதற்க்கு எந்த உத்திரவாதமுமில்லை! பொருளுக்காகவும் இருக்கலாம்! என்பது பொய்யாய் இருக்க வேண்டும் என்றாலும் பொய்யாய் இருக்கும் என்பதும் நிச்சயமில்லை! நிச்சய மற்ற நிலைமை நீண்டு கொண்டே போகும் நிறைய நாடுகளில்.....இங்கு கூலிக்கு மாறடிக்க வாய்ப்பிருக்கிறது!

    அதிகார வர்க்கத்தின், ஏகாதிபத்தியத்தின், ஆக்கிரமிப்பாளர்களின் சர்வாதிகார பிடியில் அகப்பட்டு அடிமைப்பட்டு அல்லல் பட்ட மக்களின் விடியலுக்காக தன்னுயிரை தாமே உவந்து தத்தம் செய்யும் தத்தம் செய்ய தயாராகும் தன்னலம் போற்ற உணர்வுள்ள போர்ப்படையை இப்படைத் தோற்க்கின் எப்படை ஜெயிக்கும் என்று அகிலத்து நாடுகளுக்கு அறிவித்து நிற்க்கும் அவர்களை கூலிப்படை என்று குதற்க்கம் பேசுவார் சிலர் அது அவர் குணத்தின் குற்றம்! குணமற்ற அவரின் கூற்றுக்கெல்லாம் அறமே கூற்றம்!

    களம் சென்றால் வெற்றியன்றி வேறொன்றும் அறியா! தமிழ் குலத்தின் மானம் காக்கும் மறவர் அவரை நாத்தழும்பேறி நாலும் நாளும் பேசுவார் சிலர், அவர் வான்மீது தொங்குவதாக கூறும் சொர்க்கம் காட்டுவதாக வையகத்தை நாசமாக்கி நரகமாக்கி வதைத்தவரே ஆவார்! அவர் யார் வெற்றி பெற்றாலும் அவர் பக்கம் சாய்ந்தே நடந்திடுவார்! அவர் உலைக்களத்து இரும்பு உறிஞ்சிய நீர்த்துளியாய் போவார் நம் தீந்தமிழின் தமிழரின் தியாகத்தில்! கனல் கக்கும் கடும்பார்வையால்!


    மானமும் வீரமும் போற்றி வாழ்ந்த நம் மறக்குல மக்கள் தமக்குள்ளே எழுந்த போட்டியால் பொறாமையால், சிறிய மனம் கொண்ட சிறுமதியாளர் சூழ்ச்சியால் தமக்குள்ளே சகோதர சண்டையிட்டு சிறுத்து சின்னாபின்னமாகி சிறப்பு குன்றியபோது தடுமாறி தடம் மாறி பரிசம் போட்டனர் பக்கத்து நாட்டு பகைவனிடம் பாழ்பட்ட குடும்ப பகையால் குலப்பகைவனிடம். அந்த நிகழ்வுகளை அவ்வப்போது சொல்லி நம் நெஞ்சில் நாம் அறியாமலே நஞ்சை கலப்பர் சிலர். அவர் மொழியை அலட்சியப்படுத்துவோம்! அதற்க்காக நாணிடுவோம்! நாணுவதும் நாநிலத்தில் நல்ல பண்புகளில் ஒன்றுதானே!

    நாணுவதற்க்கும் நாம் போற்றி வளர்ப்பதற்க்கும் இருவேறு பண்புகளை இப்போது பார்ப்போம், இவைதான் இமயம் முட்ட நம்மை வளர்க்கும்.

    "நகை வர நாணுட்கொண்டான்" இது கம்ப நாட்டாழ்வானின் காவிய வாக்கு! எங்கு எழுதினான்? ஏன் எழுதினான்? இராமன் மறைந்திருந்து எய்த அம்பில் அடிபட்டு குற்றுயிரும் குலை உயிருமாக கிடந்த போது தன் மனைவி தாரையை பார்த்து வெட்கித் தலைகுனிகின்றான் வாலி! ஏன்? சுக்ரீவன் வாலியை போருக்கு அழைத்தபோது வெகுண்டெழுந்த வாலியை தடுத்துச் சொன்னால் தாரை, அவன் இரமன் என்பவனின் சகாயம் பெற்று வந்திருக்கிறான் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று, ஆனாலும் அப்போது வாலி சொன்னான் இராமன் அறத்தின் வழி நடப்பவன்! என் தம்பியும் நானும் சண்டையிடும் போதா என்னை கொள்வான்? குடும்ம சண்டையை பெரிதாக்கி குழிபறிப்பானா? பண்பாட்டுச் செல்வன் பரதனுக்கு மூத்தவனல்லவா? அவன் என்றான். ஆனாலும் நடந்தது என்ன? அதற்க்குத்தானே நாணினான் வாலி. அப்படித்தான் சகோதர சண்டையை நமக்குள்ளே மூட்டி விடுவர் சிலர்! அதற்க்கு மறைந்திருந்தே இராமனைப்போல் கள்ள கதைகளையும் அம்பனைய எய்திடுவர் அவர் மொழியில் எச்சரிகையுடன் இருப்போம்! இனத்துக்குள்ளே தமிழினத்துக்குள்ளே சண்டையென்றாலும், பிரிந்தாலும், பட்டும் படாமல் இருந்தாலும் நமக்கழிவு நிச்சயமாய் காத்திருக்கும்! நமனே ஆவார் நம்மவர் போல் நடிப்பவர்கள்! நாம் நல்ல வழிநடந்திட நமக்கு வழி காட்டினார் நம் முன்னோர் வாருங்கள் அவர் வழி நடப்போம்! நாநிலம் நமைப் போற்றும்!

    "நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
    களி இயல் யானைக் கரிகால் வளவ!
    சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
    வென்றாய்! நின்னிலும் நல்லான் அன்றே
    கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
    மிகப் புகழ் உலக மெய்திப்
    புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே!"

    இன்றைய தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில் வெண்ணியில் போர் நடக்கிறது, சேரன் சேரலாதனும், சோழன் கரிகால் வளவனும் மோதுகின்றனர், வாளும்! வாளும்!, வேலும்! வேலும்! மோதுகின்றன, வீரர்கள் பலர் வீழ்ந்துபட்டனர். செந்நீர் தண்ணீர் போல் காவிரி வெள்ளத்துடன் போட்டி போடுகிறது! கண்ணிமைக்கும் நேரத்தில் கரிகாலன் எறிந்த வேல் சேரலாதன் மார்பில் தைத்து முதுகில் எட்டி பார்த்தது! வீழ்ந்துவிட்டான் சேரன்! மாண்டும் விடவில்லை மயங்கிவிட்டான், விழித்தான், விழித்தவன் விரைந்திட்டான் வடக்கிருக்க! ஆம் உண்ணாமல் உயிர் துறக்க! உண்ணா விரதத்தை பட்டினிப் போரை பாருக்குனர்த்தினான் அன்றே! புறமுதுகிடவில்லை அவன், ஆனாலும் புறத்தே வேல் முனை வெளிப்பட்ட காயம் கூட போரில் தமக்குற்ற அவமானமாக கருதினான்! விழுப்புண் என்று அகமகிழவில்லை! அகிலம் போற்ற வீரமும் மானமும் போற்றிய தமிழருக்கு அவனே சான்று. அதனால் தான் வெண்ணிகுயத்தியார் கரிகாலனைப் பார்த்து சொன்னார், கரிகாலா! நீ போரில் வென்றாய், வென்றாலும் உன்னிலும் அவனே சிறந்தவன் என்று!

    முரசு ஒலிக்க மறந்தது
    யாழ் இசைக்க மறந்தது
    வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன
    தேனைத் தீண்டுவாரில்லை
    உழவர் யாரும் கழனிக்கு செல்லவில்லை
    ஊர்புற வெளிகள் அனைத்தும்
    வெறிச்சோடிவிட்டன
    எங்கள் சேர மன்னன், மானம் காக்க
    வடக்கிருந்து உயிர் விட சென்றதாலே!

    என்று புலவர் காழத்தலையார் பாடினான் அன்று! அந்த தமிழர் மானமும் வீரமும் மீண்டும் நிலைநாட்டப்படுகிறது ஈழத்தில். அதை குறைத்து மதிப்பிடுவார் பலர், கூலிப்படை என்பார் சிலர், அது அவர் குணத்தின் குற்றம், அவரின் கூற்றுக்கொல்லாம் அறமே கூற்றம்
  18. PSIVARAJAKSM
    கலைஞ்சரின் இதயத்துடன்
    கலைஞ்சரின் கவிதை பேசட்டும்
    காலப் பேழையின் கவிதை சாவி
    கலைஞ்சரின் கண்களை திறக்கட்டும்

    இருப்பிடம் வேறானாலும்
    இனம் ஒன்றேயாகும்
    ஈழத்தில் சிங்களவன் சீண்டிப்பார்த்தால்
    இணையற்ற சோழர் வீரம்!
    இங்கிருந்து சேனை திரட்டும்!
    இன்றும் சிங்களவன் சீண்டிபார்க்க
    இந்தியாவின் உதவிநாடி
    புது புது திட்டங்கள் வகுத்துவிட்டான்
    வீதிகளை மூடிவிட்டான்!
    விரும்பியே தள்ளிவிட்டான் - தமிழர்களை
    பசிப்பிணியில் பாழ்கினற்றில்!
    பசிப்பிணியால் பரிதவிக்கும் தமிழருக்கு
    இங்கிருந்து திரட்டிய உணவை மருந்தை
    இந்தியாவும் தடுத்து நிற்க்க
    இங்கிருந்து தருகின்றார் ஆயுதங்கள் சிங்களனுக்கு
    தன்னிகரிலாத் தமிழர் தலைவர்
    தயவுடன் ஆட்சி செய்வோர்!
    என் துணையைப் பயண்படுத்தி
    எம் இனத்தை கொன்றொழிக்க அயுதங்கள் தருவாயோ!
    பாதுகாப்பு ஆயுதம் என்பாய்- பார்த்திருப்பேனா நான்!
    இல்லை! இல்லை! இழிசெயல் என்பேன் நான்!
    கவலை மிக கொண்டேன் கடிது அனுமதி
    தாருங்கள் தமிழருக்கு உணவை மருந்தை அனுப்ப
    என்று இயம்ப கலைஞ்சரின் கண்கள் திறக்குமா?
    காலப் பேழையும் கவிதை சாவியும்
    கலைஞ்சரிடம் பேசட்டும்! கவிதை வாரிசு!
    கனிமொழியாவது கருத்து களத்துக்கு பதில் தரட்டும்.

    கலைஞ்சர் அவர்களே உங்கள் "காலப் பேழையும் கவிதைச் சாவியும்" என்ற கவிதை தொகுப்பில் உள்ள கவிதையின் ஒரு பகுதியைதான் கீழே கொடுத்துள்ளேன். சொல்வதை செய்வோம்! செய்வதை சொல்வோம்! என்று வாழும் நீங்கள் முழங்கிய நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் கவிதை வரிகள் உங்களுடன் பேசும் போது நெஞ்சில் நீதி பேசுமா? நெஞ்சுக்கு நீதி எழுதியவர்களாயிற்றே நீங்கள்!

    கலைஞ்சரின் கவிதை பேசுகிறது!

    திராவிட இனத் தமிழர்களிடம் வீரம் இருந்தது விவேகம் இருந்தது,
    திக்கெட்டும் புகழ் மனக்கும் திறன் இருந்தது,
    போரில் புலி என்கிற புய வலிமை இருந்தது; பகைவனிடம்
    புறமுதுகிடா மான உணர்வு மண்டிக்கிடந்தது!
    நெஞ்சில் வேல்தாங்கி களச்சாவை சந்திக்கும்
    அஞ்சாமை அணுப்பொழுதும் அகலாமல் இருந்தது-

    ஆனால்
    ஆனால்
    அந்தோ; தமிழரிடையே
    இன ஒற்றுமை என்ற
    அந்த ஒன்றுதான் இல்லை என்பதற்கு
    இந்த வரலாற்று நிகழ்ச்சி நம்மை
    மிக வருந்தச் செய்யும் நிகழ்ச்சியன்றோ!

  19. PSIVARAJAKSM
    இந்திய ஒருமைப்பாட்டின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களுக்கும் அது ஏதோ ஒரு சிலரின் உடமை என்று ஆன பிறகு அதற்க்குள் போக முடியாமல் தடுக்கப்பட்டிருக்கும் ஏனைய எம் எளிய சகோதரர்களுக்கும் வணக்கம்.

    சுதந்திரா அவர்களின் வினாக்களுக்கு யூகத்தின் மூலமே சரியாக பதில் தந்திருக்கும் திரு பாண்டியன் அவர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்து விட்டு தொடர்கிறேன்.

    மூர்க்கத்தனமான ஜெர்மனியின் தாக்குதல்! இத்தாலி முழுதும் இடி ஓசை கேட்கிறது, பீரங்கிகள் முழங்குகின்றன. துப்பாக்கி குண்டுகள் நெஞ்சை பிளக்கின்றன. அந்த சமரில் காசினோ என்றொரு களம். அங்கே கண்ணி வெடிகளை கவனமாக அப்புற படுத்தி கொண்டிருந்தனர் பலர். அச்சமயம் நாயக் ஒருவனின் கால் கண்ணி வெடி மீது இடரவே தீப்பிடித்து தீய்ந்தது அது, அவன் உணரவில்லை அதை. ஆனால் அருகில் இருந்தவன் கவனித்துவிட்டான். நாயக் அசைந்தால் அடுத்த வினாடி அவன் உயிர் அவனுக்கு சொந்தமில்லை, உடலும் உருகுலைந்துவிடும். அருகிலிருந்த ஒருவன் அதை பார்த்துவிட்டான் ஆனாலும் அவன் அச்சப்படவில்லை, அதிர்ச்சியடைந்து எச்சரிக்கவில்லை, "நாயக்" விலகு ஓடு தப்பிப்பிழை சுரங்க வெடி என்று கூவவில்லை. மரணம் தன்னை தொட்டு இழுப்பதை தெரியாத அந்த நாயக்கை ஒரு வினாடியும் தாமதியாது தள்ளிவிட்டு அந்த குண்டின் மீது பாய்ந்து அதனை கட்டி பிடித்து அதன் மீது படுத்துவிட்டான். குண்டு வெடித்தது அவன் உடல் சிதறியது, சின்னாபின்னமானது. தப்பினான் நாயக்! தன்னுயிரை விட்டான் வீரன் ஒருவன். பிறிந்தது உயிர்! பிறந்தது புகழ்! தன்னுயிர் விட்டேனும் தடுத்து காப்பது தரணியில் தமிழர் பண்பு! ஆம் ஆபத்து நேரத்தில் அஞ்சா நெஞ்சம் கொள்ளும் ஆண்மை அவன் பெயர் சுபேதார் சுப்பிரமணி! செங்கல்பட்டை அடுத்த வாலாஜாபாத்துக்கு அருகில் உள்ள குக்கிராமம. கடல் கடந்து சென்றும் காசினோ களத்தில் தமிழ் மரபை வீரத்தை தரணிக்கு உணர்த்தினான். நெஞ்சில் நினைக்கும் தோறும் கண்ணீரும் புன்னகையும் கலந்தே வரும். சுபேதார் சுப்பிரமணியின் வீரத்தை வியந்து போற்றுகிறது உலகம். அந்த சுப்பிரமணிபோல் ஆயிரம் ஆயிரம் அடலேறுகள் ஆர்த்தெழுகின்றனர், அகிலம் வியக்கிறது! ஆச்சரியத்துடன் நோக்குகிறது! இத்தனை சின்னஞ்சிறு தேசத்தில் ஈழத்தில் உலக நாடுகள் அனைத்தும் தடை செய்த பின்பும் சுதந்திர வேள்வித்தீ சுடர்விட்டு பிரகாசிக்கிறது, அந்த வெளிச்சத்தில் பீடு நடை பயிலுவாள் சுதந்திர தேவி! அதில் எங்களுக்கு அய்யமில்லை. தியாகிகள் பற்றி பேசுவதும், எழுதுவதும், படிப்பதும், படிக்க கேட்பதும், வீரத்தை பண்பை தரணிக்கு உணர்த்துமே? அதனால்தான் அதை நாங்கள் சொல்கிறொம் செய்கிறோம். ஆனாலும் நான் ஈழத்தில் பிறந்தவனல்ல எனினும் இதயத்தால் நாங்களும் அவர்களும் வேறு வேறு அல்ல.


    ஈழத்தமிழரை பிழைக்கச் சென்றவர்கள் என்று சிலர் சொல்கிறார்கள் அதை பிறகு பார்ப்போம்.


    இதோ இன்னும் ஒரு திங்களில் ஆடி பிறக்கப்போகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கன்று தஞ்சை தரண்யெங்கும் நதிகளில் எல்லாம் வெள்ளம் இரு கரையையும் தொட்டு ஓடியதும். அதில் பெற்றத் தண்ணீரில் ஏரிகள் நிரம்பி அலைமோதியதும் வரலாறு. பதினெட்டாம் பெருக்கன்று காவிரித்தாயை வணங்க பெண்களும் குழந்தைகளும் கும்பல் கும்பலாக கூடி கொட்டாங்கொட்டுவது தமிழர் பண்பாடு. தென்னங்குருத்துகளால் சப்பரம் சோடித்து இழுத்து வரும் குழந்தைகள், தென்னங்குருத்துகளை காவிரி மதகின் ஒரு புறம் விட்டு அது நீர்ச்சுழலில் சிக்கி, சிக்கி சுழன்று சுழன்று மறுபக்கம் வருவதை பார்த்து கைக்கொட்டி சிறித்து மகிழ்ந்ததெல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போனதோ!

    முப்பத்திரண்டு போர்களங்களின் தொண்ணூற்று ஆறு விழுப்புன் சுமந்து சோழர் சாம்ராஜ்யத்தை தோற்றுவித்த விஜயால சோழனும் அவன் மகன் கவிரியின் இருகரைகளிலும் காவிரியின் தொடக்கம் முதல் இருதிவரை கடலில் கலக்கும் இடம் வரை அறுபத்து நான்கு சிவாலங்களை எடுப்பித்து ஆண்டதும். அது கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது வேறுகதை! அவன் மகன் பராந்தக சோழ மகராசா ஈழத்துக்கு படையெடுத்து வெற்றி நாட்டியதும் (குறித்துக் கொள்ளுங்கள்) அந்த சோழர்கள் வரிசையில் வீர லட்சுமியும், ஜய லட்சுமியும் ஒருங்கே கொண்டு இன்றைய இந்திய கூட்டமைப்பின் பெரும் பகுதியை சற்றேறக்குறைய 450 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சோழர் வரலாற்றில் ஏன் இந்திய வரலாற்றிம் ஏன் உலகவரலாற்றிலும் இல்லாத நிர்வாகம், குடவோலை வாயிலாக சனநாயகம் என்று ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஈழம் கொண்ட (குறித்துக் கொள்ளுங்கள்) இராஜராஜனும் இராஜேந்திரனும் அரசு செய்த சோழ நாட்டை தஞ்சை தரணியை சேர்ந்தவன் நான்.

    எங்களுக்கும் காவிரிக்கும் உள்ள தொடர்பு போல்தான் எங்களுக்கும் ஈழத்திற்க்கும் உள்ள தொடர்பு காலங்காலமானது அது அய்ம்பது ஆண்டு சொந்தமல்ல ஆண்டாண்டு சொந்தம். அது உணர்வு பூர்வமானது உள்ளப்பூர்வமானது. சோழநாடு சோறுடைத்து, தமிழ்நாட்டின் நெற்க்களஞ்சியம் என்றெல்லாம் புகழ்பெற்று சோழர்காலத்தில் பொற்க்காலமாக இருந்த்தெல்லாம் இன்று காலமாகி இன்று எங்கள் மக்கள் எலி கறி சாப்பிடுவதற்க்கு யார் காரணம்? எது தடுத்து நிற்க்கிறது தண்ணீரை? காலங்காலமாக எங்களுடன் தொடர்புடைய காவிரிக்கும் ஈழத்திற்க்கும் எங்கள் குரல் இணைந்தே ஒலிப்பதில் ஆச்சரியமென்ன? அதில் தவறுதான் என்ன? இது எவ்வாறு இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊரு செய்யும்?

    நாங்கள் என்ன? இன்போசிஸ் நாராயனமூர்த்திகளைப்போல் நாட்டுப்பண்னை அவமதித்தோமா? நாட்டு பாதுகாப்புக்கு வாங்கிய ஆயுதத்தில் ஊழல் செய்தோமா? செய்ய சொன்னோமா? அல்லது உடந்தையாகத்தான் இருந்தோமா? இல்லை பா ஜ க எம்பிக்களை போல் இந்த நாட்டு இளம் பெண்களை அயல் நாட்டிற்க்கு கடத்தினோமா? அயல் நாடு சென்று அவர்கள் நம்மை அடிமை கொண்டிருந்ததற்க்கு நன்றி சொன்னோமா? ஆனால் இவர்கள் எல்லாம் இந்நாட்டில் பிரதமர்கள்?! எம்பிக்கள்?! எங்கள் உயிர் பிரச்சனையான கவிரிக்கும் எங்கள் உறவுகள் உயிர்வாழ உரக்க குரல் கொடுத்தால் விரோதிகள்?! என்ன கொடுமை இது? எப்படி சொல்லத் துனிந்தீர்கள்? மருந்துக்கும் மனசாட்சி கிடையாதா? இந்திய ஒருமைப்பாடு என்று இன்று கூச்சலிடும் நீங்கள் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆற்றிய பணியை பாரதி படம்பிடித்து காட்டவில்லையா? வெற்று பேச்சில் மனநிறைவு கொண்டு சொல்லம்பரின் வெல்லப் பேச்சுக்கு மயங்க மாட்டார்கள் வருங்காலத் தமிழர்கள்.பிரச்சனைகளை தீர்க்க முயலாமல் பிரச்சனையை பேசுபவரை கொச்சை படுத்தாதீர்கள். காலம் மாறும் காட்சிகள் மாறும்


  20. PSIVARAJAKSM
    நண்பர்களே வணக்கம்,
    திரு பாண்டம் மற்றும் திரு பாண்டியன் அவர்களுக்கும் முதலில் என் நன்றியை அறிவித்துவிட்டு தொடர்கிறேன்.


    மனிதன் தன் தேவைகளுக்காக காலம் தோறும் இடம் பெயர்ந்து வருவது வரலாற்று உண்மை அந்த வகையில் அந்த காலங்களில் ஆற்றங்கரையோர வளமான நிலங்களில் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. காலப்போக்கில் பல்வேறு காரணங்களுக்காக இடப்பெயர்வு தொடங்கியது. சிலர் வளமான வாய்ப்புகள் வசதிகள் கருதியும், வேலை வாய்ப்பு கருதியும் நடந்த இடப்பெயர்வு பொருளாதர வல்லரசுகள் தோன்றையவுடன் அந்த நாடுகளில் அடிமை வேலையாவது கிடைக்காதா என்று இங்கு சுதந்திரமாக சகல வசதியுடன் வாழ்வோரும்கூட இடப்பெயர்வுக்கு ஆளாய் பரந்து அமெரிக்க தூதராலய வளாகத்தில் அவதிபடுகிறார்கள் அந்தி வெயிலில். நான்கூட சில காலம் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சில காலம் வேலை செய்துவிட்டு வந்தால் பொருளாதர தன்னிரைவு பெற்று கவலையில்லாமல் செயல்படலாம் குறிக்கோள் நோக்கி என்று கருதுவதுண்டு. இப்படியான இடப்பெயர்வில் சமூக அமைதியின்மையினால் ஏற்ப்படும் இடப்பெயர்வும் நடக்கிறது. ஆனாலும் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவரும் அனைவரும் ஒட்டுமொத்தமாக விரும்பி இடம் பெயர்வதில்லை.

    ஒட்டுமொத்த இடப்பெயர்வு என்பது நாடுகளுக்கிடையே எல்லைகள் ஏற்ப்பட்டபோதே தடுக்கப்பட்டு வந்துள்ளது எனும் போது கடவு சீட்டுகள் அனுமதி சீட்டுகள் என்று கட்டுபாடுகள் இருக்கும் போது இடப்பெயர்விற்க்கான சாத்தியங்கள் மிககுறைவு. வேண்டுமானால் அரசு இயந்திரங்கள் அச்சுருத்தி ஆதிகவர்க்கத்தின் அவசியத்திற்க்காக இடம் பெயர வைப்பதெல்லாம் இன்று சர்வ சாதாரனமாக விசயங்களாகிவிட்டன. அப்படித்தான் அனுமின் நிலையம் அமைக்க இடப்பெயர்வு, பொருளாதர வளாகம் அமைக்க இடப்பெயர்வு, விமான நிலைய விரிவாக்க இடப்பெயர்வு இவை மட்டுமா எங்காவது ஒரு பனக்காரனுக்கு அரிப்பெடுத்து பிளாட் போட நினைத்தால் அங்கும் இடப்பெயர்வு என்று செய்யும் அரசுகள் அகிலமெங்கும் இருக்கத்தானே செய்கின்றன. இப்படியாக இடம் பெயரும் அனைவரும் தங்கள் சொந்தங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என்று சர்வ நிச்சயமாக சொல்ல முடியாது எனில் வசதியான வாழ்வைத்தேடி வருபவர்கள் நிச்சயமாக திரும்பி செல்ல மாட்டார்கள் அவர்கள் தாங்களின் சொந்தங்களையும் தருவித்து கொள்வதில் ஆச்சரியத்திற்க்கு ஒன்றுமில்லை. அதில் தவறேதுமில்லை. ஆனாலும் அப்படி இடம் பெயர்கிறவர்களின் சதவிகிதம் குறைவாகத்தான் இருக்கும் என்பதைவிட அதற்க்கான சாத்தியங்கள் மிக மிக குறைவு. எனவே ஒப்பீட்டளவிலும் கூட முதியவர்களும் போராளிகளும் மட்டுமே அங்கிருக்கிறார்கள் என்பது ஏற்ப்புடையதல்ல ஆனாலும் முதியவர்களும் போராளிகளும் மட்டுமே அங்கிருக்கிறார்கள் என்பதும் உண்மையே! அதாவது முதியவர்களை தவிர அனைவரும் போராளிகளாகத்தான் அங்கு இருக்கிறார்கள். ஆயுதம் தாங்கி களமுனையில் சாவை சந்திக்கும் மறவர்கள் மட்டுமல்ல போராளிகள். சுதந்திர காற்றை சுவாசிக்க சகலவித சங்கடங்களையும் சகித்து சமாளித்து சமர்களத்திலேயும் வாழ்க்கை நடத்தும் எம் ஏனைய சகோதரர்களும் போராளிகளே! அங்கே மக்கள்தான் போராளிகள். அங்கு நடப்பது மக்களின் அவர்களே விரும்பி நடத்தும் விடுதலைப்போராட்டம்.

    புலம் பெயர் தமிழர்களுக்கும் தாயக தமிழர்களுக்கும் தொடர்பு குறைவாக இருக்கும் என்பது உண்மையானாலும் கூட உணர்வால் உதவி செய்யும் குணத்தால் தொடர்ந்து தொடர்பு பேனப்படுவதாகவே கருதுகிறேன். இன்றைய இணையதள வசதிகள் தொலைகாட்சிகள் அவற்றை அகிகறித்திருக்கவே செய்யும் எனவே உணர்வால் ஒன்றுபடுவது அதிகமாகத்தான் இருக்கும் ஆனாலும் அதை வளரும் சமுதாயம் தொடர்ந்து வளர்க்க முயற்ச்சிக்க வேண்டும் என்று நாமும் இது சமயத்தில் வேண்டுகிறோம்.

    கொழும்பில் வாழும் நம் சகோதரர்கள் தனிப்பட்ட எண்ணிக்கையில் அதிகமாக தோன்றினாலும் ஒப்பிடும்போது தமிழீழ எல்லையில் வாழும் நம் சகோதரர்களை விட மிக மிக குறைவாகத்தான் இருப்பார்கள். யாருடைய நன்மைக்காக யார் விட்டு கொடுக்கப் போகிறார்கள் என்பதை கொழும்பில் வசிக்கும் நம் சகோதரர்களே முடிவு செய்யட்டும்! அடிக்கடி ஏற்ப்படும் சிறு சலனங்களுக்கே நம்மீது தாக்குதல் நடத்தி நம்மை கொன்றொழிக்க முற்ப்படும் சிங்கள வெறியர்களுடன் வாழ்வதற்க்காக நம் ஏனைய சகோதரர்கள் அடைமையாக வாழ வேண்டுமா? என்று அவர்கள் மனசாட்சி அவர்களுடன் பேசும்போது அது முடிவு செய்யப்பட்டுவிடும். ஏற்க்கனவே அங்கு வாழும் நம் சகோதரர்களின் எண்ணிக்கை சொர்ப்பமாகத்தான் இருக்கும் ஒப்பீட்டளவில் என்று கருதுகிறேன். மேலும் கொழும்பில் வழும் எம்மக்களை கொன்றொழிக்கும் அளவுக்கு சிங்களவர்கள் அயோக்கியர்களா? அப்படியெனில் அந்த அயோக்கியர்களின் வாழ்வுக்காக தமது அறிவை ஆற்றலை உழைப்பை ஏன் வழங்கவேண்டும் நம் சகோதரர்கள்? விழலுக்கு நீர் பாய்ச்சி ஓயப்போகிறார்களா?


    அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே அங்கு இரு நாடுகள் இரு ராணுவங்கள் இருக்கின்றன என்பது சர்வதேசத்திற்க்கு உணர்தப்பட்டுவிட்டது. இன்று தமிழீழத்தில் தம் மக்களை மானமுடையவர்களாக இறையான்மையுள்ள குடிகளாக வாழவைக்க தம் உயிரை கொடுத்து போராட முப்படைகளும் உள்ளன ஏன் நாலாவதாக உலகில் எங்கும் இல்லாதா ஏன் நினைத்தும் பார்க்காத தற்க்கொலைப் படையும் அங்கிருக்கிறது. இங்கு சோழர்களின் வேளக்காரப் படையை நினைவு கூற்வது சாலப் பொருந்தும்.

    நீதி, நிர்வாக, நிதி போன்ற அரசு கட்டமைப்புகள் அங்கு அழகாக இயங்குகிறது. ஆழிப்பேரலை தாக்குதலின் போது அகிலத்தில் உதவிகள் அவர்களை சென்றடையாத போதும் அவர்கள் காட்டிய மீள் நடவடிக்கைகள் அகிலத்தின் கவணத்தை கவர்ந்தது வரலாறு. ஆகவே யாரும் வெல்லமுடியாத தோற்க்கவும் முடியாத போராக காட்சியளித்தாலும் உண்மையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் வாகை சூடியிருக்கின்றனர். எனினும் இன்னும் சில பகுதிகள் மீட்கப்படும் வரை அங்கு போர்ச்சூழல் நிலவும் என்பது உண்மை. இராணுவத்தின் எண்ணிக்கை, ஆயுதபலம் மட்டுமே போரின் முடிவை தீர்மானிக்கும் என்ற கருத்துக்கள் உலக போர் வரலாற்றில் பல முறை பொய்பிக்கப்பட்டுவிட்டன ஏன் நம் தமிழீழச் சகோதரனே பலமுறை அவற்றை பொய்பித்து காட்டியிருக்கிறான். அதை மீண்டும் மீண்டும் செய்வார்கள் என்று நம்பும் அதே வேலையில் உலகத்தில் ஒப்புயர்வற்று தொழில்நுட்பத்திறமை காட்டும் நம் தமிழ் சகோதரர்கள் அவர்கள் அறிந்திருக்கும் தொழில் நுட்பங்களை நம் ஈழச் சகோதரனுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுவோம்.

    ஏற்க்கனவே சர்வதேசத்தல் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கிடையே பிரச்சனைகளும் போரும் நிகழும் போது. புதிதாக அங்கீகாரம் வேண்டி நிற்க்கும் நாடும் அதனால் தம் அதிகாரம் பறிப்போவதாக கருதும் நாடும் பகையுடன் இருப்பது சாதாரனமானது அது கலப்போக்கில் தனிந்துவிடும்.

    வெற்றி தோல்வி இல்லை என்ற நிலை வந்த பிறது அங்கு இருநாடுகள் இருப்பது என்பதுதான் சரியாக இருக்கும். பிறநாடுகள் தம்மை வெற்றி கொண்டுவிட கூடாது என்றுதானே அகிலத்து நாடுகள் எல்லாம் ஆயுதத்தை பெருக்குகின்றன? ஒன்றை ஒன்று வெற்றி கொண்டால் மட்டுமே ஒரே நாடாகும் வெற்றிக்கொள்ள படாவிட்டால் இருநாடுகள் என்பதே இயல்பான உண்ம. எனவே சகோதரர்களே தனியாளாக தொடங்கி தரணியில் தமிழர்களுக்கான முதல் நாட்டை அருகில் இருக்கும் எண்ணிக்கையில் பலமடங்குள்ள, பல நாடுகளின் உதவியையும் பல நாடுகளின் ஆயுத வழங்களையும் கொண்ட ஆனவ சிங்கள பேரினவாத இராணுவத்தால் வெற்றிக்கொள்ள முடியாத ஒரு நாட்டை நம் ஈழச்சகோதரர்கள் ஈட்டி கொடுத்திருக்கிறார்கள்! இத்தனைக்கும் உலக நாடுகள் பலவும் ஏன் அனைத்தும் தடை செய்த பிறகும் நடத்தி காட்டப்பட்டிருப்பது மகத்தான சாதனை. அதில் அடங்கியுள்ள அர்ப்பனிப்புணர்வும், தியாகமும் போற்றி அவர்களுக்கு நன்றி சொல்லி அதற்க்கான அகிலத்தின் அங்கீகாரத்தை பெற்றுத்தர ஆவன செய்ய அகிலத்து நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்போம்! கொடுத்தால் அவணியில் சிறப்போம்!.


    கலைஞ்சர் மற்றும் செல்வி! ஜெயலலிதா குறித்து சிந்திப்போமேயானால் ஜெயலலிதா தமிழீழத்தை வேண்டாத மருமகளாகத்தான் பார்ப்பார். அவாளுக்கு இது விசயத்தில் ஆலோசனை சொல்வது அவாள்கள்தானே! சோவுடனும் இந்து சிங்கள ரத்னா ராமுடனும் அவாள் ஒத்துபோகாவிட்டால்தான் ஆச்சரியம்.

    கலைஞ்சரை பொருத்தவரை பட்டும்படாமல் இருக்கும் தாயைப்போன்று இருக்கிறார். பல சமயங்களில் சொந்த சுற்றங்களையே எதிரியாக பார்க்கும் மன நிலைக்கும் வந்து விடுகிறார் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. அவர் தாயாக நடக்கவேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்ப்பதில் ஆச்சரியமில்லை அவர் அதில் தவறினால் மோசமான தாய்க்கு அவரே இலக்கணமாகிப் போவார்! கலைஞ்சர் என்ன செய்கிறார் என்பதை ஏனைய சகோதரர்களைப் போல நாமும் எதிர்நோக்குகிறோம்.

    இந்திய கூட்டமைப்பின் நடுவன் அரசைப் பொருத்தவரை மகன் பிறந்தால் தனக்கு பிரச்சனை என்று கருதி பிள்ளை பெற்றுக்கொள்ளாத பேதையை ஒத்து இயங்குகிறது ஏனெனில் அவர்களுக்கு ஆரூடம் கூறுவது சோவும் சிங்கள ரத்னா ராமும் தானே! ஏற்க்கனவே கண்ணனை அழிக்க முயன்று கானாமல் போன கம்சன்கள் பலர் என்பதை இந்தியா உணரவேண்டும். இன்னும் வெளிப்படையாக பார்ப்போமேயானால் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டால் தமிழகத்திலும் பிரிவினைவாதம் மேலோங்கும் அதற்க்கு தமிழீழம் உந்து சக்தியாக அமைந்துவிடக் கூடும் என்று சோவும் ராமும் ஜோதிடம் கணிக்கக்கூடும். அவர்களுக்கு சொல்லுவோம்! கேட்போம்! மனசாட்சியுடன் கூறுங்கள் காவிரியை தடுத்து நிற்க்கும் கண்ணடரைவிட, பெரியாரில் பிரச்சனை செய்யும் மலையாளியைவிட பாலாற்றுக்கும் பால் ஊற்ற துடிக்கும் ஆந்திர சகோதரனைவிடவா எம் எளிய தமிழீழச் சகோதரர்கள் இந்திய ஒருமைபாட்டுக்கு ஊரு செய்துவிடுவார்கள்?

    காலல் மடைதிறந்த காவிரி பாசன பகுதிகள் பாலைவனமாகும்போது , பாலாறு பால்படும்போது பெரியாறு பெரிய பிரச்சனையாகும் போதுதான் ஒருமைப்பாடு குறித்து கேள்வி எழும் அதற்க்கு பதில் சொல்ல அதைகளைய ஆவன செய்வதைவிடுத்து கண்ட கண்ட பிரச்சனைகளையெல்லாம் ஈழப் பிரச்சனையை தொடர்பு படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.


    அழுதழுதாலும் அவள்தான் பிள்ளைபெற வேண்டுமானாலும் அதற்க்கான மருத்துவ மருத்துவமணை வசதிகளையும் ஆறுதலும் கூற வேண்டியது அருகில் இருப்பது கடமையாகும்போது சுற்றத்தின் கடமை மேலும் அதிகமாகும். அப்படிதான் தமிழர்களே நாமும் தமிழீழ தமிழர்களுக்கு சுற்றமாகிவிட்டதனால் நம்து கடமையில் தவறினால் காலம் முழுதும் பழி சுமப்போம்!

    உலக வல்லரசுகளின் ஆதிக்க சக்திகளின் கைப்பாவையாக அங்கிகரிக்கப்பட்ட நாடுகளே மாறியிருக்கும் போது வல்லரசுகளே பல நாடுகளின் அரசுகளை நிர்ணயிக்கும் புறச்சூழலில் இன்றும் அங்கீகாரம் வேண்டி நின்றாலும் ஆதிக்க சக்திகளின் அடிபணியாமல் , தொடர்ந்தும் தொய்வில்லாமல் தமிழர்களின் தாகமென தமிழீழத்தை நோக்கி நடக்கும் நடத்துவிக்கும் பிரபாகரனார் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றே கருதுகிறேன். அங்கீகாரம் பெறும் வரையில் எவ்வித அச்சத்திற்க்கும் ஆட்படாமல் அவரவர் அவர்பணி செய்யதான் வேண்டும். அங்கீகாரத்திற்க்கு பின்னான அரசியல் நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக அவர்கள் அமைத்திருக்கும் அரசியல் பிரிவே அந்த அச்சத்தை போக்க போதுமான சான்றாக கருதுகிறேன்.

  21. PSIVARAJAKSM
    வணக்கம் தோழர்களே,

    நண்பர்கள் சிலர் இங்கு ஈழப்பிரச்சனை தொடர்பான தாங்களது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர் அவற்றில் சிலவற்றுக்கு எம்மால் ஆன சில பதில்களை தர விழைகிறேன்.

    1) தமிழ் ஈழத்தை நோக்கிய போராட்டத்தில் சிலர் ஓரங்கட்டப்படுகின்றனர் அல்லது ஒழித்து கட்டப்படுகின்றனர்.

    எமது கருத்து

    ஆண்டாண்டு காலமாக சிங்கள பேரினவாதத்தால் சொல்லொனா கொடுமைகளுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடுமைகளுக்கு ஆளான இரு இனம் அதிலிருந்து விடுபட நிமிரும்போது பல குழுக்களாக இருப்பது அவர்களை பலவீனப்படுத்தும் என்பது மறுக்க முடியாத எதார்த்தமான உண்மை அதை நன்குணர்ந்த சிங்கள பேரினினவாதம் தமிழர்களிடையே போட்டியாளர்களையும் குழுக்களையும் வளர்க்கிறது அதற்க்கு அவர்கள் பல பல வழிகளை கையாள்கின்றனர். எனவேதான் சுயநல நோக்கோடு தலைத்தூக்கும் தீய சக்திகள் ஓரங்கட்டப்படுகிறார்கள் அல்லது ஒழித்துக் கட்டப்படுகிறார்கள். நோக்கம் நிறைவேறும் வரை அது காலத்தின் கட்டாயமகிறது.


    ஏன் அவரே தலைவராக இருக்கிறார்? அவர் சொகுசாக வாழ்ந்துகொண்டு மற்றவர்களை ஏன் முன்னனில் நிறுத்துகிறார்? அவர்கள் பிள்ளைகள் அயல் நாட்டில் படிக்கிறார்கள்?


    பதில்

    இது அங்குள்ள பிரச்சனைகள் அதன் நிவர்த்திக்கான தேவைகள் மற்றும் அதை நோக்கி பயணிப்பவர்களின் மீது போதுமான தகவல் அல்லது அவர்கள் தொடர்பான அறிவு அல்லது ஞானம் இல்லாதவர்களின் குற்றச்சாட்டு.

    முதன் முதலில் சிங்கள பேரினவதிகளால் தமிழ் குழந்தைகள் கொதிக்கும் தார்ச்சட்டியில் போட்டு கொல்லப்பட்டபோது தனியொருவராகதான் அவர் ஆயுதம் ஏந்தினார் அதனால் தான் இன்று தமிழர்களுக்கு தமிழனத்திற்க்கு ஒரு நாடு அமைவதற்க்கான அரிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஒரு நோக்கத்திற்க்காக போராடும் இனத்தில் இயக்கத்தில் தலைமை குறித்து முடிவு செய்ய வேண்டியது நாமோ, கருத்துக்கள நண்பர்களோ, இந்திய அரசோ சிங்கள அரசோ அல்ல அங்குள்ள மக்களின் விடியலுக்காக தமது உயிரை தத்தம் செய்யும் போராளிகள் அதை முடிவு செய்வார்கள். துரோகம் தலைத்தூக்கினால் அதையும் துடைத்தெரிவார்கள்.

    அவர் குழந்தைகள் அயல் நாட்டில் படித்தார்கள், ஆம் படித்தார்கள் அவர்கள்தான் இன்று வான் படையை வழிநடத்துகிறார்கள். அவர் பிள்ளைகள் மட்டுமல்ல தமிழ் ஈழத்திற்க்கான போராட்ட வேள்வித்தீயில் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் குழந்தைகளுக்கும் அங்கு அறிவுச்சோலைகளும் செஞ்சோலைகளும் அதிகம் ஆகவேதான் அயோக்கிய சிங்கள வெறியர்களின் விமான குண்டு வீச்சில் அடிக்கடி ஆளகின்றன செஞ்சோலைகள். செஞ்சோலையில் ஓடிய செங்குருதியை பார்த்த பிறகும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுவது வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானது.
    அங்கு போரில் காயம் படும் வீரர்களுக்கும் அவர்தம் குழந்தைகளும் உலகில் வேறு எங்கும் இல்லாதவாறு கவனிக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு உலகின் சிறப்பான அனைத்தும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல ஆதரவற்றவர்களுக்கான இல்லங்களுடன் மனிதபிமானமுள்ள வீரம் செரிந்த நடைமுறை அரசு அங்கு நடக்கிறது.


    அங்கு மக்கள் வாழ்க்கை நடத்துவது மிகவும் சிரமாக உள்ளது? அகதிகளாக மக்கள் உள்ளனர்.


    பதில்:

    ஆம் அவர்கள் வாழ்க்கை நடத்த சிரமப்படுகிறார்கள் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் வாழ்கிறார்கள் அதற்க்கு காரணம் தனது சொந்த நாட்டிலேயே விமானங்களின் வழியாக குண்டு வீசும் கொண்றொழிக்கும் சிங்கள பேரினவாதம். போய் அரசாண்டால் பினம் தின்னாதா சாத்திரங்கள்? இது போன்ற எத்தனை எத்தனையோ சிக்கல்களை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள் சமாளித்தும் இருக்கிறார்கள். அவர்களின் விடுதலைக்காக அவர்களின் சகோதரர்கள் போராளிகள் என்ன செய்கிறார்கள் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள் அதற்க்கு வேண்டிய ஆதரவையும் பங்களிப்பையும் அவர்கள் செய்கிறார்கள் அதற்க்கு நிதர்சனமான சான்றுதான் மக்கள் படை கட்டுமாணம்.

    இன்று கஷ்டப் பட்டாலும் மீண்டும் சிங்கள பேரினவாதத்தில் சிக்காமல் சிக்கி சீரழியாமல் சிறிது கஷ்டங்களை சகித்துக் கொண்டால் வரும் காலம் வளமானதாக இருக்கும் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள்! அறிந்திருப்பதுதான் அவர்களுக்கும் நல்லது
  22. PSIVARAJAKSM
    வணக்கம் தோழர்களே,

    ஒரு கதையோடு ஆரம்பிக்கிறேன்.

    முடி வெட்டும் தொழிலாளி ஒருவர் வேலை தேடி வெளிநாடு சென்றார். அங்கு அரசு செய்த மன்னனிடம் வேலை செய்து கிடைக்கும் பணத்தை சிறிது சிறிதாக சேகரித்து ஒரு தங்க கட்டி செய்து அதை தன் பெட்டியில் பத்திரமாக வைத்து அவ்வப்போது எடுத்து பார்த்து மகிழ்ந்து கொள்வார். ஒருநான் மன்னனுக்கு முடிவெட்டும்போது மன்னனுக்கு மக்களை பற்றி அறிய அவால் ஏற்ப்பட்டது! உடனே நம்ம ஆளு முடிவெட்டுகிறவர்கிட்டே மக்களின் நிலை பற்றி கேட்டார். நம்ம ஆளுக்கு மகிழ்ச்சி ஒங்க அரசுல மக்கள் எல்லாம் சுபிச்சமாக இருக்காங்க, எல்லாருகிட்டேயும் ஒரு தங்ககட்டியாவது இருக்குதுன்னா பார்த்துக்குங்களேன் என்று சொல்ல. மன்னர் மகிழ்ச்சியுடன் அமைசரை அழைத்து பகிர்ந்துகொண்டார். அமைச்சர் சொன்னார் அரசே அவரை நாளை அரசவைக்கு வரசொல்லுங்கள் அவையோர் எல்லாம் அவர் வாயாலேயே தெரிந்துக் கொள்ளட்டும் என்று கூற அப்படியே ஆகட்டும் என்று ஆணையிட்டான் அரசன். அன்றிரவே அமைச்சர் நம்மாளுகிட்ட இருந்த தங்ககட்டிய திருட செய்துவிட்டார். மறுநாள் அரசவை கூடியது அரசன் தன் புகழ் குறித்த பெருமிதத்துடன் நம்மாளுகிட்ட சொன்னான் நேற்று நீ என்னிடம் சொல்லியதை இன்று இந்த அரசவையில் கூறு. நம்மாளுக்கு கோவம்னா கோவம் குமுறிதீர்த்திட்டான் ஒங்க அரசில் ஒரு தங்ககட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை ஒரே கொள்ளை, கொலை திருட்டு பஞ்சம் என்று.....அப்படித்தான் நண்பர்களே நாமும் பல நேரங்களில் பலபிரச்சனைகளில் கருத்து சொல்கிறோம். இதில் ஈழப்பிரச்சனை மட்டும் விதிவிலக்கா?


    தங்க கட்டியுடன் தொடர்பு படுத்தி முதலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கருத்து கூறியவன் அது கானாமல் போனவுடன் அனைத்து மக்களும் துன்பத்தில் இருக்கிறார்கள் என்று அவன் மனநிலையை கொண்டே அனைவர் மனநிலையையும் கூறியது போல சமயங்களில் உலக புகழ் பெற்ற நமது நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை தெரிவிப்பது போல நாமும் ஈழப்பிரச்சனையில் பிரச்சனையை மையப்படுத்தாமல் இராஜிவ் காந்தியை மையப்படுதுகிறோம். எனவே தங்க கட்டி நம்ம முடிவெட்டியின் கருத்தில் ஆதிக்கம் செலுத்தியது போல ராஜிவ் காந்தி நம் மனதில் அதிக்கம் செலுத்துகிறார் என்றால், உண்மை எவ்வாறு நமக்கு விளங்கும்? இராஜிவ் காந்தியை தூக்கி தூர வைத்துவிட்டு பிரச்சனையை பாருங்கள் நெச்சில் நீதி போசும்! இதயத்தில் ஈரம் சுரக்கும் அன்பு பெருகும்! ஆதரவு தருவீர் ஈழத்தமிழர்களுக்கு!
  23. PSIVARAJAKSM
    உதவிக்கு சென்று ஆங்கே
    உரிமை பறித்து உடைமை சிதைப்பது
    ஆதரவு நீக்கி அடிமை கொள்வது
    அமைதிக் கான்பதின் மான்போ!
    உதவிக்கு சென்றவரே உயிர் பறித்த
    உண்மையை உணர்ந்ததால் தானே
    திராவிட தலைவர்களி திரும்பியும் பார்க்கவில்லை
    தீங்கிழைத்து திரும்பியவரை அன்று
    அவனும் பொருப்பானா? தம் மனைவி
    மகளை கரகரவென தான் இழுத்து
    கற்பழித்த கொடுமைதனை! கமுகரின் செய்கையினை!
    கனவிலும் மறப்பானா! கலங்கியது கண்கள்!
    விம்மியழுதாலும் வேகம் குறைந்திடுமோ!
    "என்ன கொடுமை அது" எப்படி பொருத்திருப்பான்?
    மறத்துபோய் மரமாக சிலையாக நிற்ப்பானா?
    தன்னை அழித்து தரணியில் தழ்த்தியவனை
    ஏவியது யார்? எப்படிப் பொருப்பான் அவன்!
    நெட்டை மரங்களன நின்று புலம்புவானா?
    வேங்கையவன் வீருகொண்டெழுவானா?
    வெகுண்டெழுந்தான்! வீழ்த்திவிட்டான்!
    விதி வலியது வெறென்ன சொல்ல?
    விதியால் நிகழ்ந்த ஒன்றை
    விரும்பியே மனதில் கொண்டு
    தவறிய தம்பியை தள்ளுவதும் முறையோ!
    மாறாத எதிரியவன் மனந்துனிந்தே
    தள்ளுகின்றான் பசிப்பிணியில்! பாழ் கிணற்றில்!
    கூறாத துன்ப கொடுங்கிணற்றில்!
    ஆறாது அரற்றி அழுகின்றான் தம்பி!
    புண்ணாக புழுங்காதோ எம் நெஞ்சம்!
    தம்பி தவித்திருக்க ஆறுதல் கொடுக்கா
    அண்னன் வளம்பெற வாழ்ந்தென் பயண்?
    ஆனாலும் அந்தோ தூரேகியாக கருணா!
    நிதி பணம் பதவி பகட்டுக்காக?
    நாமும் இருப்பதுவோ அவ்வாறு?
    நவிழுங்கள் தோழர்களே?
  24. PSIVARAJAKSM
    வணக்கம் நண்பர்களே,

    எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். யாரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைச்சுகிட்டிருந்தேன். இந்த பக்கத்தை பார்த்த பிறகுதான் எனக்குள் தோன்றியது இங்கிருக்கும் நண்பர்களால் என் சந்தேகத்தை போக்க முடியும்னு? என்ன செய்வீங்களா?


    எங்க தாத்தாவுக்கு பல பையங்க அவங்க எல்லோரும் ஒன்னாத்தான் குடியிருந்தாங்க யார் கண்ணு பட்டுச்சோ தெரியல இயற்க்கை சீற்றத்தால எங்க ஊர் இரண்டு பகுதியாயிடுச்சு. காலம் போய்கிட்டிருந்தது. எங்க காலத்துல அந்த பக்கம் இருந்த எங்கள் சகோதரனுக்கு பக்கத்து வீட்டுக்காரனால ஒரே பிரச்சனை அவன் எங்கள் சகோதரனை அழிச்சுட்டுதான் மறு வேலை பார்பது நின்னுகிட்டுருந்தான். போக்கத்த எம் தம்பி என்னுகிட்ட உதவி கேட்டான். என்னால எந்த உதவியும் செய்யமுடியாத நிலையில நான் இருந்ததால, எங்க பக்கத்து வீட்டு பணக்காரங்கிட்ட என் தம்பி நிலைய சொல்லி உதவி கேட்டேன் அவனும் சரி செய்ரன்னு என் தம்பி ஊருக்கு ஆள் அனுப்பினான் அப்புரம் தான் தெரிந்தது என் பக்கத்து வீட்டு பணக்காரனும், என் தம்பிக்கு பக்கத்து வீட்டுக்காரனும் தூரத்து சொந்தம்னு. என் தம்பி ஊருக்கு போன எங்க பக்கத்து வீட்டுகரனில் ஆட்கள் எம் தம்பி குடும்பத்தையும் சின்ன பின்ன படுத்திட்டாங்க, சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளான என் தம்பி வீட்டிலிருந்து ஒரு முன்கோபி எல்லாத்துக்கும் கரணம் எங்க பக்கத்து வீட்டுக்காரன்னு நினைச்சு அவனை கொன்னுட்டு அதுக்கு தண்டனையும் அனுபவிச்சுட்டான்.


    இப்பவும் என் தம்பிக்கு பெரிய பிரச்சனைதான் பக்கத்து வீட்டு காரணால அவனுக்கு எங்களை விட்டா யாரும் கிடையாது, எனவே நாங்க மீண்டும் எங்க பக்கத்து வீட்டு காரங்கட்ட உதவி கேட்டோம் அவங்க செய்யாட்டியும் பரவால்ல எங்க தம்பி பக்கத்து வீட்டுக்காரனுக்கு உதவி செய்யாமல் இருந்தாலே போதும் என் தம்பியே பாத்துக்குவான் சொல்றோம் ஆனாலும் அவங்க என் தம்பிய அழிக்கிற அவன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு திருப்பாச்சி அருவாவ தீட்டி அனுப்புராங்க! என்னையும் என் தம்பியோட பேசக்கூடாதுன்னு தடுத்து எந்த உதவியும் செய்யக்கூடாது என்று சொல்றாங்க!

    இப்ப நான் என்ன செய்வது? என் மனசு ஓங்கி சொல்லுது என்ன இருந்தாலும் அவன் ஒந்தம்பி அவனுக்கு உதவாம அவன் எதிரிக்கு உதவி விபிடனாக இருக்க போரியா? ஒந்தம்பிய கைவிட்டு எட்டப்பனா இருக்க போறியா? உனக்கு உதவுதாக சொல்லி உன் தம்பியின் பக்கத்துவீட்டுக்காரனுக்கு அன்னைக்கும் இன்னைக்கும் உதவிய உன் குலத் துரோகிய நம்பி உன் குடும்பத்தை அழிக்க போறியான்னு என் மனசு கிடந்து அடிச்சுக்குது!

    யாராச்சும் பதில் சொல்லுங்களேன் ப்ளிஸ்......

  25. PSIVARAJAKSM
    இட ஒதுக்கீடும் இனவெறியும் இதயமுள்ளவர்களுக்கே புரியும்.

    ஒன்று போலவே தெரியும்
    ஒன்றில் ஒன்று மாறுபடும்
    உணர்வுள்ளோருக்கே அது புரியும்
    உடன்பிறந்தோர் பிள்ளைகள்தான்
    ஒன்று மனைவியாகும்!
    ஒன்று மகள் ஆகும்!
    ஒத்துக் கொள்ளாதவர்கள் ஒழுக்கமுடையவரா?
    மகளின் பிள்ளைகள்
    மறுபடியும் மனைவியாவர் மகனுக்கு
    மானமுள்ளோர் வகுத்த விதி இது!
    நடந்தால் மகனின் மகனுக்கு தாய்
    நடக்காவிட்டால் மகனின் மகனுக்கு தாரம்!
    முன்னது நடந்தால் பின்னதை நடக்கவிடார்
    பின்னது நடந்தால் முன்னதை நடக்கவிடார்
    மானமுள்ளோர்! நாணமுள்ளோர்!
    கட்டுபடுவார்கள் கண்ணியவான்கள்!
    கட்டுபடாதவர்கள் காமுகர்கள்! -அவர்
    பிரிவினைவாதம் என்பார், பிரித்தாழும் சூழ்ச்சி என்பார்!
    மீன் என்பார் மீனவர் என்பார் எறும்பென்பார்!
    பிதற்றித் திரியும் பித்தர் அவர்
    பேச்செல்லாம் வெறும் பேச்சு!
    கல்யாணத்திற்கும் கற்பழிப்பிற்கும் வேறுபாடு
    காமுகருக்கு தெரியாது! கயவருக்கும் தெரியாது!
    மானமுள்ளவர்களுக்கே தெரியும்! மறுப்பது யார்?
    இடஒதுக்கீட்டிற்க்கும் இனவெறிக்கும்
    இடையிலான வேறுபாடும்
    இதயமுள்ளவர்களுக்கே தெரியும்!
    இதயமற்றோர் ஏர்பரோ? ஏளனம் செய்வர்!
    இட ஒதுக்கீடு சமூக நீதிக்கான நுழைவாயில்!
    இனவெறி சமர்களத்திற்க்கான நுழைவாயில்!
    இனவெறியில் வீழ்சியில் தொடங்கும்
    இட ஒதுக்கீடு இயல்பாய் மாற்றங்களை கொணரும்!
    இலங்கை இனவெறிக்கு இலக்கணம்
    இருவேறு இனங்களில் ஒன்று ஒன்றை அழித்தது!
    இனவெறியால் அழிந்துபோன இனங்கள்
    இவ்வுலகில் எத்தனை! எத்தனை!
    இவையறியா போதையர்
    இயம்பிடுவர் இதுவும் அதுவும் ஒன்றென்றே!
    வேடிக்கை மனிதருக்கு வேறுபாடு புரியாதோ!
    அல்ல! அல்ல! புரிந்தும் புரியாதவர் போல் நடிப்பார்!
    வேடிக்கை நிகழ்சி என்பார்
    வேடிக்கை என்பார் - பின்னர்
    வேதனையில் தள்ளிடுவார் நம்மை!
    விழிப்புடன் இருப்பாய் தமிழா!
    இங்குள்ள வேறுபாடுகள்
    இதயமற்றவரின் சூழ்ச்சியால்
    இனத்திற்குள்ளேயே பிரிவினையானது!
    இருவரை மோதவிட்டே
    இருந்தனை ஏய்த்து பிழைத்து சிலர்
    இறைவன் பெயரால் இன்னல்கள் பல தந்து
    இறவனின் விதி இதுவே என்று
    இவர் சோடித்த கதைகளை
    பரப்பி விட்டு பாழ்படுத்தினர் மானுடத்தை!
    இன்றும் தொடர்கின்றார்! தொடரட்டும்!
    விழித்திருந்தால் விரட்டிடலாம்!
    இங்கு இனவெறி தலை தூக்கியிருந்தால்
    இக்கயவர்கள் இல்லாமல் போயிருப்பர்
    இயல்பாய் தமிழருக்கு இரக்ககுணம்
    இருந்ததனால் இருக்கின்றார் இன்னும்
    இன்றும் அவரை அழிக்காமல்! இருப்பதுவும்
    இட ஒதுக்கீடு இருப்பதுவும் - அவர்
    ஆதிக்கம் தகர்பதற்கே! அழிப்பதற்கல்ல!
    அனைவரையும் சமண்படுத்துவதற்க்கே!
    அங்கேயும் அது தொடங்கும்!
    அது இனவெறியின் வீழ்சியில் தொடங்கும்!
    பொது எதிரியை வீழ்த்தும் வரை
    பொருத்திரு தமிழா! புயலென எழு தமிழா!
    பொது எதிரியை வீழ்த்த!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.