• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சாணக்கியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,889
 • Joined

 • Last visited

Community Reputation

13 Neutral

About சாணக்கியன்

 • Rank
  Advanced Member
 • Birthday 08/24/1975

Contact Methods

 • MSN
  saanakiyan@yahoo.com
 • Website URL
  http://www.yarl.com
 • ICQ
  0
 • Yahoo
  saanakiyan@yahoo.com

Profile Information

 • Gender
  Male
 • Location
  பனிவிழும் புகலிடம்
 • Interests
  நன்றே வாழ்வது... இன்றே வாழ்வது.. !

Recent Profile Visitors

2,975 profile views
 1. காரை அப்கிரேட் பண்ணுறதா அல்லது.. கியுபாவுக்கு ரிப் போறதா அல்லது.. ஊரில கடையை கட்டி வாடகைக்கு விடுறதா.. என்பது காசு வைச்சிருக்கிறவனுடைய விருப்பம்..! ஆனா இதுல இருக்கிற செய்தி என்ன என்டா.. இப்ப ஊரில இருக்கிற பலருக்கு வேலை தொியாது.. தொிந்து கொள்ள ஆர்வமும் இல்லை.. அவையின்ட ஈகாேவும் அதிகம்.. என்னுடைய அனுபவத்தில் சொல்லுறன்.. ! ஆபத்தான கட்டிடம் எனத் தொிந்ததும் மக்களுக்கு பாதிப்பில்லாம இடித்ததற்கு உரிமையாளரை பாராட்டலாம்..!
 2. அப்படி எண்டாலும் திண்ணை காலியானா சரிதானே... ஆனால் அவருக்கு பிறகு திண்ணை யாருக்கு போகுதோ தொியேல.. அல்லது வீட்டையே யாரும் வாங்குவினமோ தொியேல..?
 3. பேசாம ஐயாவை கூப்பிட்டு ஒரு தலைக்குத்துச் சடங்கு ஒன்று செய்ய வேண்டியதுதான்... பத்து இளநிரும் குடுத்து கொஞ்சம் எண்ணையும் தேச்சுவிட்டாச் சரி... !
 4. காதல் வெறுப்புநோயுள்ளவர்கள் தயவு செய்து சில்லுக்கருப்பட்டி படம் பார்க்கவும். அழகான அவசியமான காதலை அடக்கக முயல்வது பின்னர் பிறந்த குழந்தையின் சடலத்தை தோண்டியெடுப்பதில் வந்து முடிகிறது. குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிட்டு அவர்கள் தேவையை அறிந்து வழிகாட்டுவது பெற்றோரின் கடமை, மாநகராட்சியினுடையது அல்ல. ஆனால் மாநகராட்சி இப்படி மழைக்கு முளைக்கும் காளான் போல கடைகளை அமைக்க அனுமதித்து இதனால் போக்கவரத்திற்குத் தடையும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படாமல் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை எங்களில் ஒருவனான அதிகாரியிடம் அந்த எங்களில் ஒருவனான வியாபாரி வழங்கிய கையூட்டு அனுமதித்து விட்டது. (இதுவரை கையூட்டு வழங்காத அல்லது வழங்க ஊக்குவிக்காதவர்கள் இருந்தால் மன்னிக்கவும்.) கலாச்சார காவலர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை நல்லூர் கோவில் திருவிழாவில் எதற்காக பொம்மை மற்றும் குளிர்களி கடைகளை அமைத்து அங்கே துப்பாக்கி, வாள் பொம்மைகளை விற்க அனுமதிக்கிறார்கள். சாமி கும்பிட வேண்டிய இடத்தில் அவை எதற்கு என நிறுத்தியிருக்கலாமே. (செய்திருந்தால் அங்கும் தோிழுக்க டிரக்டர் தேவைப்பட்டிருக்கும்) வாழ்வாதாரத்திற்காக ஒரு இளம் குடும்பம் (அங்கே படத்தில் தொியும் இருவரும் கணவன் மனைவி என்ற எடுகோளுக்கமைய) தனக்கு தொிந்த, முடிந்த வழியில் பொருளீட்ட முயல்வதை கேள்விகேட்பவர்கள், இளம்பெண் விபச்சாரம், இளைஞன் தற்கொலை போன்ற அவலங்களை தடுக்க யாழ்ப்பாணத்தில் உடனடி சாத்தியமான தீர்வுகளையும் தரவேண்டும். சிறுவர்கள் மற்றும் மாணவர்களை வழிகாட்டுவதாக கூறிக் கொண்டு மேலும் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது சிறப்பான பயன் தராது. மாறக அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிப்பதும், சுய ஒழுக்கத்தையும், தைரியத்தையும் ஊக்குவிப்பதே சிறந்தது என எண்ணுகின்றேன்.
 5. பதிவுக்கு நன்றி நிழலி மற்றும் சுகன் அண்ணையின் கருத்துகளுக்கும் பாராட்டுகள்.
 6. மாப்ஸ், அதுதான் முதலிலேயே சொன்னேனே... கழட்டிப் போட்டு பாக்க வேணும் என்று. நீங்கள் கழட்டாமலேயே அது அப்படித்தான் இருக்கும் இது இப்படித்தான் தெரியும் என்கிறீர்கள். 30 வருசமா போட்டுக்கொண்டு இருந்ததை அவ்வளவு சீக்கிரமாக கழட்டுவது கஸ்டம்தான். அதுவும் கனடாவில இருந்து கொண்டு கழட்டுவது என்றா கனவுதான். இன்னமும் குழந்தைப்பிள்ளை மாதிரி சிங்களவன் கெட்டவன், நீதி, நியாயம் என்று கதைக்கிறியள். ஒரு எதிரி என்ற முறையில் அவன் செய்யிறதை சிறப்பா செய்யிறான். இனி அவனோடதான் வாழ்வு. அவன் எங்களுக்கு நல்லவனாக நடக்க வேணும் என்றா நாங்கள் முதலில நட்பாக நடந்து சந்தேகங்களை அகற்ற முயற்சிக்க வேணும். இனியும் புலி, தமிழீழம், நாடுகடந்த தமிழீழ அரசு என்று பேசிக் கொண்டு அதை சாதிக்க முடியாது. இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம். அதாவது நீங்கள் உங்கடை நம்பிக்கைகளோடு நாளாந்த வாழ்கையை சீராக நடத்தமுடியும். அது உங்களுக்கு ஒரு பொழுது போக்கு அம்சம். நம்பிக்கை பலிக்காவிட்டால் ஒரு நாள் துக்கம் கொண்டாடிவிட்டு, நீங்கள் உங்கடை பதவி உயர்வுக்கான பரீட்சையை எழுத போய்விடுவீர்கள். எங்களுக்கு வெறும் நம்பிகையை வைச்சு இன்றைக்கு சாப்பிட முடியாது, தொழில் செய்ய முடியாது. நீங்கள் காசையும், ஒரு நாள் லீவையும், வைச்சு போராட்டம் நடத்துவீங்கள். ஆனா நாங்கள் அதற்கு ஈடா எங்கட உயிரையும் எதிர்காத்தையும் பிள்ளைகளையும் குடும்பத்தையும் அழிச்சு போராட வேணும். இதை பற்றி இனி நான் கனக்க அலட்ட வேண்டியதில்லை, நீங்கள் சொன்ன மாதிரி உண்மைதான் எப்பவும் வெல்லும், இனியும் அது வெல்லும்! மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம் வணக்கம்! நெடுக்ஸ், நல்லா எழுதுறியள் வாழ்த்துக்கள். வணக்கம்!
 7. மாப்பிள்ளை, தப்பித்தவறி நீங்கள் கௌரவ, குரோத, பழிக்குபழி என்ற கண்ணாடிகளை கழட்டிப்போட்டு சிந்தித்தீங்கள் என்றா அந்த மினுமினுப்பா தெரியிறது ஒரு மதிலே இல்லை அது ஒரு கதவு என்கிற விசயம் தெரியவரும். ஆனா பிறகு நீங்கள் துரோகியாகி டக்கிளசோட சேர வேண்டி வரும் பறவாயில்லையா?
 8. X-Files, ஏலியன்கள் பற்றிய படங்கள் பார்த்ததன் தாக்கமோ? என்ன கோதாரியையோ செய்யுங்கோ ஆனா மீண்டும் மக்களுக்கா என்று சொல்லி எங்களை மாட்டி விடாதையுங்கோ... ! ஆக மொத்தத்தில "அதிரடித்தாக்குதலில் படையினர் பலி, பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு, இராணுவத்தினரின் சடலங்கள் கையளிப்பு, கிளைமோர் தாக்குதலில் இராணுவ உயரதிகாரி பலி, கொழும்பில் பாரிய குண்டுவெடிப்பு, மீண்டும் விமானத்தாக்குதல்" போன்ற செய்திகள் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு கஸ்டமாக இருக்கிறது!
 9. ஆ 44Brawo... ????? திருநெல்வேலி.. தபால்பெட்டிச்சந்தி.. ஆடி.... 83.... நீங்க மட்டும் அண்டைக்கு வராம இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்!
 10. நானும் இந்தப்படத்தை பாத்தனான்தான், ஆனா இப்பிடி இன்னொருவன் மாதிரி படத்துக்குள்ள, மேல, கீழ, பக்கவாட்டிலை எல்லாம் பாக்கேலை! வழமையா காதல் படங்கள் எல்லாம் காதலனும் காதலியும் கட்டிப்பிடிக்கிறதோடை அல்லது திருமண பந்தலில தாலிகட்டுறதோடை முடியிறது. அப்ப நான் நினைக்கிறனான் இதுக்குப் பிறகு எல்லோ வாழ்க்கையில பரபரப்பான சண்டை கட்டம், சோக கட்டம் எல்லாம் வருது, அட அதை காட்டாம விட்டிட்டாங்களே என்று. இந்தப்படத்திலையும் ஒரு நாயகன் இருந்தார், நண்பன் ஒரு தொழிலதிபரின் மகளை காதலித்துப்போட்டு சேர்த்து வைக்கச் சொல்லி நாயகனிட்ட வருவார். பிறகு வழமை போல வாடகை வான் ஒன்றிலை வெளியூருக்கு போய் உளவு பாத்து, விறுவிறுப்பான கட்டத்தில நாயகியை கடத்திக் கொண்டு வந்து இருவரையும் வேறை ஊருக்கு அனுப்பி சேர்த்து வைக்கிறதோட கதை முடியுதாகும் என்று நம்பி எழும்பிறதுக்கிடையில, திருப்பி பின்னாலை போய் வழமையான படங்களில விடுபடுகிற காட்சிகளை எல்லாம் காட்டி... உதாரணமா இறுதி சண்டைக்காட்சியிலை வில்லன் அடிக்கிற அடிகளை எல்லாம் காதலுக்காக அல்லது நட்பிற்காக தாங்கிக் கொண்டு வெற்றிகரமாக தப்பி வந்து, பிறகு சின்னதா ஒரு காயக்கட்டுடோடை இல்லாட்டி கொஞ்சம் நொண்டிக் கொண்டு வர உடன "சுபம்" வந்து விழும். ஆனா எங்க போய் அவர் காயத்திற்கு மருந்து போட்டவர், எப்படிப்பட்ட காயம் எல்லாம் காட்டமாட்டாங்கள். (ஓம் இது ரொம்ப முக்கியம் என்றுதான் நீங்கள் கேப்பீங்கள்) ஆனா இங்க அதையும் காட்டி "சுப்புரமணியபுரம்" போலத்தான் முடிக்கப் போறாங்களோ எண்டு நினைச்சு நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு இருக்க, பிறகு அப்பிடி முடிச்சா படம் ஓடாது என்ற படியால பழையபடி இருவரையும் சேர்த்து வைக்கிறதோடை முடியுது. இப்பிடி நாலு வரியிலை எழுதுறதைப் போய்.... நான் நினைக்கிறன் இன்னொருவன் உண்மையிலேயே ஒரு ஏபி ஆகத்தான் இருக்க வேணும்?