Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  31500
 • Joined

 • Days Won

  264

Everything posted by nedukkalapoovan

 1. அண்ணா என்ற வித்தில் முளைத்ததே தி மு க. அதொன்னும் கருணாநிதி சொத்தில்லையே. அண்ணா தான் தி மு க வை தொடங்கினதே.
 2. சிங்கள மக்கள் மட்டும் ஏதோ கேட்டாங்க போல.. ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி வை.. 20 திருத்தம் கொண்டுவா.. புதிய அரசியலமைப்பை சிங்கள பெளத்த தேசமாகக் கட்டியமைன்னு.. சீனனுக்கு நாட்டை வில்லென்னு.. அவங்க காஸும்.. அங்கரும்.. பாணும்.. பருப்பும் தான் கேட்கிறாய்ங்க. அது தெரியாமல்.. இவர் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களுக்கு நாடிச் சாத்திரம் சொல்லுறார். முதலில் சிங்கள மக்களிடம் அந்தச் சாத்திரத்தைப் பார்க்கவும்.
 3. பாடல் பாடினதுக்கு கொடுத்தாய்ங்களோ இல்லையோ.. இவாட அப்பா ஒரு தமிழினப் படுகொலையாளி.. போர்க்குற்றவாளி. தமிழனை கொன்றால்.. பதவி.. அதிகாரம்.. பவிசு எல்லாம் கிடைக்கும் தானே சிங்களவர்களுக்கு. என்ன எங்கட இனத்தில இருக்குது கொஞ்சம்.. சொந்த இனம் செத்து வீழ்ந்தாலும்.. சாகடிச்சவனை வாழ்த்தவும் போற்றவும்.. அவனுக்கு வக்காளத்து வாங்கவும். எப்படி முடியுதோ.. அதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்.
 4. எல்லாத்தையும் விசாரிக்கிறாங்கள்.. ஒரு சாதாரண தையல்காரனிடம்.. துப்பாக்கியும்.. அதனை இலக்குத் தவறின்றி சுடும் பயிற்சியும் எப்படி வந்ததுன்னு.. மட்டும் எவரும் எழுதிறாங்களில்லை. அதை பற்றி ஆழ்ந்து துருவிப் பிடித்தால்....... தான் இந்தப் படுகொலையின் பின்னால் இருந்த.. உண்மையான நோக்கம்.. சக்திகள் யார் என்பது தெரிய வரும். கோட்சே ஒரு அம்பு மட்டுமே. அதெப்படி ஹிந்திய மக்கள்.. காந்தியை கொன்றதற்காக.. கோட்சேயை தூக்கிலிட்டதும் அடங்கி விட்டார்கள். ஆனால்.. ராஜீவ் காந்தி விடயத்தில் மட்டும் முழு ஈழத்தமிழரையும் ஏன் தண்டிக்க துடிக்கிறார்கள்.. அப்படி பார்த்தால்.. முழு ஹிந்திய ஹிந்துக்களையும் அல்லவா.. கோட்சேக்காக தண்டித்திருக்க வேண்டும்.. இப்பவும் தண்டித்துக் கொண்டிருக்க வேண்டும்.
 5. இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு எனலாம். காரணம்... செலவு குறைவு.. ஆக்கள் கூடி கூத்தடிச்சு நோய் பரப்புவதை தவிர்க்கலாம் (குறிப்பாக இன்றைய காலக் கட்டத்தில்).. வர முடியாதவர்களும் பங்கெடுக்கலாம்.. அதுபோக முக்கிய விடயம்.. இறந்து போன சொந்தங்களையும் அழைக்கலாம். அது நிறையப் பேருக்கு மனத் திருப்தியை அளிக்கும்.
 6. தீவகமும் பொதுவாக ஈபிடிபியின் கோட்டை என்று சொல்லப்பட்ட காலம் உண்டு.. ஏனெனில்.. ஈபிடிபிக்கு பொதுவாக அங்கு விழும் வாக்கு சதவீதம் அதிகமாக இருந்ததால். யாழ் நகரை அண்டி.. பார்த்தால்.. குருநகர்.. பாசையூர் சார்ந்து ஈபிடிபிக்கு விழும் வாக்கு சதவீதம் அதிகம். இதே நல்லூர் உட்பட்ட இதர பகுதிகளில் விழும் வாக்கு வெகு குறைவாகும். இந்த அடிப்படையில் தான் சொல்லப்பட்டுள்ளதே அன்றி குருநகர் மக்களை ஒட்டுமொத்தமாகச் சொல்லவில்லை. அப்படி கருத்துப் புரியப்பட்டிருந்தால்.. எங்கள் கருத்துக்காக அந்த மக்களிடம் மன்னிப்புக் கோரலாம். அதில் எந்த இடர்ப்பாடும் இல்லை. விடுதலைப்புலிகள் காலத்தில்.. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விடயத்தில்.. குருநகரின் சில பகுதிகள் அஞ்சலி நிகழ்வுகளை செய்வதில் பின்னடித்ததையும்.. குறிப்பாக சோக கீதம் ஒலிக்க விடுவதை தவிர்த்ததும்.. புலிகளும் அறிந்த செய்தியே. யாழ் நகர வாசி என்ற வகையில் இந்த வேறுபாட்டை.. அனுபவித்ததுண்டு. அதேபோல்.. புலிகள் 2009 இல் தோற்கடிக்கப்பட்ட போது.. இங்கிருந்து தான் டக்கிளஸ் சிங்கக் கொடியை தூக்கிக் கொண்டு வெற்றிக் கொண்டாட்டம் போட்டவர். அதற்காக முழு குருநகர் மக்களும் பின்னால் போனார்கள் என்றில்லை. அப்படி ஒரு நிகழ்வை நல்லூரையோ.. யாழ் நகர் மத்தியையோ வைச்சு செய்ய முடியவில்லை.
 7. தெரியாது என்றே வைச்சுக் கொள்ளுவம். நீங்கள் மேற்குறிப்பிட்ட இரண்டையும் விபரியுங்கள். அதற்கு பின் யாருக்கு எது தெரியவில்லை என்பதை இனங்காணலாம். வாசகர்களுக்கும் பயனளிக்கும். அதைவிடுத்து.. இப்படி மொட்டையா சூட்சுமமா கருத்துச் சொல்லி பயனில்லை.
 8. இந்த தமிழக - அமெரிக்க தமிழ் இளைஞருக்குள்ள துணிவு கூட இஞ்ச பலரிடம் இல்லை.
 9. குருக்கள் சமூகமா..?! சில குருக்கள்மார்.. அவங்க இந்துக்கலாசார அமைச்சிடம் இருந்து காசு வாங்க அப்படி ஆமாப் போடுறாங்க. ஏன் கம்பன் கழக ஜெயராஜ் பொன்னாடை போர்க்கல்ல.. காசோலை வாங்க. அப்படித்தான் குருநகரிலும் ஒரு கூட்டம் இருக்குது. அதனால்.. மொத்தக் குருநகர் மக்களும் என்றாகாது.
 10. சொந்தக் கட்சியை பாதுகாக்கக் கூட வக்கில.. இதுக்கு யாருக்கு காட்டிக்கொடுப்புக் கடிதம் எழுதலாமுன்னு யோசியப்பு யோசி. அதுதானே உங்க அரசியல்.
 11. ஆக.. மொத்தத்தில் ஹிந்தியாவின் ஒரு மாநிலமாக இன்னும் இருக்கும் தமிழத்தின் மீனவர்களினது படகுகளையே சொறீலங்காவுடன் பேசி.. மீட்க முடியாத ஹிந்தியா.. ஈழத்தில் தமிழர்களுக்கு அதிகாரம் வாங்கித் தரும்.. 13 ஐ முழுசா அமுல்படுத்தும் என்று எங்க சில ஹிந்திய வாலுகள் அளந்துகிட்டு திரியினம். ஹிந்தியாவை.. சீனாவோடு சேர்ந்து தனது பொறிக்குள் சிக்க வைத்து.. கடன் வாங்க சிங்களச் சொறீலங்கா பாவிக்குமே தவிர.. வேற எதுவும் உருப்படியாக நடக்காது. நடக்கும் என்று கனவும் காணாதேங்கோ.
 12. இப்படியாவது லஞ்சம் வாங்கி திண்ட இந்த தொப்பையை குறைக்கிறது..??!
 13. இதே.. நம்ம பொரிஸ்.. நாட்டைப் பூட்டிட்டு தான்... தண்ணியும் பார்ட்டியும் என்றிருந்திருக்குது. குழந்தைகள் வேறு.. பிறந்திருக்குது.. ஒன்றல்ல.. இரண்டு.
 14. சீனா இருக்குது கொடுக்குது. கொரோனா காலத்தில் கூட அதன் பொருளாதார வளர்ச்சி +8.1% (எதிர்பார்த்ததை விட அதிகம்). கொரோனா பரவல் கிட்டத்தட்ட 0 %. கொரோனா மரணம்..வெறும் 4600. கொரோனா தொற்று 100,000. கொரோனா தடுப்பூசி.. 1.6 பில்லியன். இதே ஹிந்தியாட நிலை..??! இப்படி ஹிந்தியா அள்ளிக் கொடுத்திட்டு... தான் பிச்சை எடுக்கப் போகுது.. மிக விரைவில். புலி அழிப்பின் விளைவுகள்.. சொறீலங்காவை மட்டுமல்ல.. ஹிந்தியாவையும் பலவீனப்படுத்தியே வருகிறது.
 15. எல்லாம்.. 1987 கனவில இருப்பதாலாகும். அப்ப ஹிந்திய அமைதிப்படை இருந்திச்சு. இப்ப சொறீலங்கா படை இருக்குதொண்டதை மட்டும் மறந்திட்டினம். அதிலும் சிலர் அப்ப ஹிந்தியப் படை வால். இப்ப சொறீலங்காப் படை வால்.
 16. இப்படியான தறுதலைகள் மீது.. இன ஒற்றுமையை தகர்க்கிறான்.. இன ஐக்கியத்தை.. புடுங்கிறான்.. மத நல்லிணக்கத்தை கெடுக்கிறான்.. சட்டங்கள் பாயாது. இதையே தலதா மாளிகை நோக்கிச் சொல்லிப் பார்த்தீங்கன்னா.. எல்லா சட்டமும் பாயும். ஆக.. இப்படியான தறுதலைகளை தூண்டி விடுபவர்கள் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதனால்.. தான் இந்த வெறிபிடித்த நாய் குரைக்க முடியுது இப்படி.
 17. இங்கிலாந்தில் கேம்ரிஷ் நகரில் Travelodge விடுதி ஒன்றில் நிலம் கூட்ட பாவிக்கப்பட்டு வந்த தானியங்கி வக்கூம் கிளீனர்.. திறந்திருந்த கதவுக்குள்ளால்.. தப்பி ஓடிவிட்டது. நாள் கடந்தும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ரோபோ கிளீனர் தற்போது ஒரு பத்தைக்குள் செருகி இருந்த நிலையில் மனிதக் கிளீனரால் கண்டுபிடிக்கப்பட்டு.. மீண்டும் அதன் குடும்பத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாம். இதைப் போன்ற ஒன்று தான் தப்பி ஓடியுள்ளது. Robot vacuum cleaner escapes from Cambridge Travelodge. https://www.bbc.co.uk/news/uk-england-cambridgeshire-60084347
 18. 13ஐ வேண்டாம் என்பதில் இரு தரப்பு இருக்குது. ஒரு தரப்பில் நியாயம் இருக்குது மறுதரப்பில் அநியாயம். தமிழர் தரப்பில் நியாயம் ஏனெனில்.. தமிழ் மக்களின் உரிமையை 13 எந்த அளவில் மீட்டுத்தரும் என்பதற்கு 13 உருவாகி 35 ஆண்டுகள் பதில் சொல்லிட்டுது. ஆனால் தமிழர்களுக்கு எதுவுமே கொடுத்த முடியாது என்ற நிலையில்.. உப்புச் சப்பற்ற 13 ஐயும் சிங்களம் எதிர்க்குதென்றால்.. அதனிடம்.. எதை தீர்வாகப் பெறப் போயினம்.. எப்படி..??! அதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட.. தமிழர் தரப்பில் 13 ஐ ஆதரப்பவர்களும்.. எதிர்ப்பவர்களும் விளக்க வேண்டும்..!!
 19. பூனைக்குட்டி பாவம்... அதென்ன தப்புச் செய்திச்சு. வேட்டிக்குள்ள செத்த எலி நாத்தமடிச்சிருக்குது.
 20. இது இன்னும் சோதனைக் கட்டத்தை தாண்டேல்லையா. நாங்க பள்ளிக்கூடம் போற காலத்தில இருந்து சோதனை வெற்றி வெற்றி என்று தானே தலைப்புப் போடுறாங்க.
 21. சோல்பரி காலத்திலேயே இந்தா 50:50 என்று கொடுக்க முன்வந்த போதும்.. இராணியின் சேர் பட்டத்துக்கும் சிங்களவனின் பல்லக்கிற்கும் மயங்கினதும் இதே சட்டாம்பிக் கூட்டம் தான். அப்புறம் இயன் பொக்ஸ் வந்த போதும்.. புலிகளை சாட்டி அவரையும் விரட்டினது இதே சம் சந்திரிக்கா கும்பல் தான். இப்ப மீண்டும்.. பழைய பல்லவி...??! இங்கிலாந்திற்கு சொறீலங்கா எப்பவும் செல்லப்பிள்ளை.... இந்த நிலை இருக்கும் வரை சிங்கள பெளத்த பேரினவாத அடக்குமுறைக்கு இங்கிலாந்து முடிவுகட்ட முடியாது.
 22. இவர் மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி.. என்றதை கடாசி வீசினது தெரியாமல் உளறும் போது.. அவங்களும் பதிலுக்கு ஏதாவது செய்வாங்கள் தான். சகிப்பு அவசியம்.. குத்தியர்.
 23. இந்தப் பாடத்தை 1987 இலேயே தமிழீழ தேசிய தலைவர் தமிழ் மக்களுக்கு எடுத்திட்டார். இவை இப்ப தான் எடுக்கினம்..!!
 24. கருணாநிதிட கட்சி.. பெண்களை.. நடிகைகளை வைச்சு அரசியல் செய்வது சகஜம் தானே. ஏதோ புதிசு மாதிரி.. கதைக்கிறாய்ங்க. சீமானை கருணாநிதியே உள்ள வைச்சவர் தானே. அப்பன் செய்ததை மகன் செய்யக் காலம் எடுக்காது. சீமான் எதையும் தாண்டி வரக் கூடியவாராக வளர்த்துவிட்டுவிட்டார்கள். அதுதான் தி முக செய்த நன்மை. தமிழகத்தில் திராவிட **** ஆட்சி நிலவும் வரை உண்மையான சனநாயகத்துக்கு வழியில்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.