Jump to content

mooki

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    781
  • Joined

  • Last visited

Posts posted by mooki

  1. என்ன பல்லு விழுந்திட்டு என்றதால இளமை தொலைச்சிட்டம் என்று நினைக்கிறீங்களோ..?! அப்பு ராசா என்ர அண்ணன் 94 வயசில டிகிரி எடுத்தவர். தெரிஞ்சுக்கோங்க. :rolleyes:

    வயசு அண்ணோன் என்று போட்டதைப் பார்த்திட்டுத்தான் இப்படியும் ஒரு விசயம் இருக்கு என்று தெரிஞ்சு வயசைப் போட்டமில்ல. அதிலும் சந்தேகமா...?!

    மூக்கி மேம் 95 வயசு வரைக்கும் வாழ்ந்தாப் பிறகுதான் உலகத்தில இன்னும் வாழ நிறைய இருக்கு என்ற நிலை புரிஞ்சுது. இப்பதான் வாழ்க்கையிட அர்த்தம் புரிஞ்சுது. வாழ்க்கையிட அர்த்தம் புரிஞ்சு வாழுறதுதான் வாழ்க்கை.

    போகப்போற இந்தக் கிழட்டை ஏன் போட்டுத்தள்ள அவதிப்படுகிறீர்கள். தொந்தரவா இருக்கோ. பஸ்ஸுக்க வந்து சில்மிசம் செய்யுமென்று கவலைப்படுறியளோ. அப்படி செய்யாது இது. :lol::lol::lol:

    வாழுங்கோ வாழுங்கோ..ஆனால் முதலில் சொல்லுங்கோ,ஏன் இந்த திடீர் நாடகம்?..இங்க உள்ளவர்கள் அப்பாவிகள் என்ற படியால், ஏமாத்த பார்கிறீங்களோ?..

    உங்களை போட்டு தள்ளுவது தான் நான் பெண்ணினதுக்கு செய்ய்ம் மிக பெரிய உதவி..அது நீங்க எத்தனை வயது ஆனாலும்...

    ஓகோ..பஸ்ஸில வேற உங்கட திறமை நடக்குதோ.. ..இப்ப தானே உங்கட குட்டு வெளிகிடுது!

  2. உது பொய்யான Date of Birth. நேற்று நான் நெடுக்கின் Profile ஐ Check பண்ணி பார்த்தபோது Date of Birth Unknown என்று இருந்தது. ஆள் சரியான வம்புப் பார்ட்டி. :o:o:o ஏதோ லொள்ளு பண்ணத்தான் இப்படி போட்டு இருக்கிறார்.

    மூக்கி வந்து வாழ்த்து தெரிவிக்கிறாவா என்று பொறுத்திருந்து பார்ப்போம்! :lol::lol::lol:

    நானே எப்ப போட்டு தள்ளலாம் என்று இருகிறன். :P .இதுலே பிறகேன் வாழ்த்து சொல்லவேண்டும்..95 வயது வரை வாழ்ந்தாச்சு தானே..பிறகென்ன வாழ்த்து வேண்டி கிடக்கு! :lol:

    மாப்பிள்ளை, நீங்க சொன்ன போல இது ஏதோ லொள்ளு பண்ரதுக்கு போட்ட மாதிரி தான் எனக்கும் தெரியுது... :P

  3. உங்களுக்கு பெண்கள் சுதந்திரமாக விபச்சாரம் செய்வது வசதியா இருக்கென்பதற்காக பெண் விடுதலை அவசியம் என்று சொல்லக் கூடாது. பெண் விடுதலை என்பது பாலியல் ஒழுக்கம் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடுவதல்ல. பெண் மனிதனாக இருந்தும் மறுக்கப்படுகின்ற மனித உரிமைகளை பெறுவதாகும்.

    பெண்விடுதலை என்பதே பாலியல் சுதந்திரத்தில் தான் துவங்குகிறது. பெண் தனது உடலை முழுக்க, முழுக்க தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதன் அறிகுறியே பாலியல் சுதந்திரம். ஒரு பெண்ணின் உடலுக்கு சமூகம் உரிமைகோரும் அவலத்தை இன்னும் எத்தனை நாள் சகிப்பது? பெண்ணின் கருப்பையை அரசு நிர்வகித்து அவள் தாயாவதா, வேண்டாமா எனும் முடிவெடுக்கும் சுதந்திரத்தை பறிக்கும் உரிமையை அடிப்படைவாத ஆசிய சமூகங்கள் துவங்கி, மனித உரிமைகள் செழித்து வளரும் அமெரிக்க அரசு வரை அனைவரும் தட்டி பறிக்கின்றனர்.

    • Like 1
  4. உங்களைப் போன்ற சிலர் தினம் தினம் கழிவறைக்குள்ளும் படுக்கையிலும் பல மில்லியன் சிசுக்களை உருவாக்கும் சக்தியுள்ளவற்றை ஏன் வீணாக்குகின்றீர்கள்.. அவையெல்லாம் "அம்மா, அம்மா" என்று அலறிக் கொண்டு மறைந்துபோகின்றனவே. கொஞ்சம் கருணை காட்டவேண்டாமா? :o :P

    :icon_idea::lol::lol::lol:

  5. நீங்கள் கலியாணம் செய்யுங்கள் விடுங்கள் அது உங்கள் உங்கள் உரிமை.

    ஆனால் பாலியல் சுதந்திரம் என்ற போர்வைக்குள் திருமணம் ஆகாமலும் ஆகியும் உடல் இச்சைக்காக உறவுகள் கொள்வதோடு கருக்கலைப்புகளையும் சர்வசாதாரணமாக்கி வருவதை நிறுத்துங்கள்.

    கட்டுப்பாடற்ற பாலியல் தொடர்புகளை நிறுத்துங்கள்.

    நீங்கள் வாழும் நாட்டில் மட்டும் கடந்த ஓர்மாதத்தில் கருவில் அழிக்கப்பட்ட மனித சிசுக்கள் 6000. இவையெல்லாம் கலியாணம் கட்டவும் பிள்ளைப் பெறவும் ஆசையில்லாமல் பாலியல் சுதந்திரம் என்ற -போர்வையில் வைத்துக் கொண்ட உறவுகளால் விளைந்தவையா அல்லது சுயாதீனமாக முளைத்தவையா..??!

    உலகில் ஏழை நாடுகளில் தான் அதிகம் பிறப்பு வீதம் இருக்கிறது. மனிதன் ஓர் உயிரிக்குரிய அடிப்படையாகத்தான் சந்ததிகளை உருவாக்கிறான். இனப்பெருக்கம் செய்யாதவற்றை உயிரினங்கள் என்று கொள்வதில்லை. இனப்பெருக்கத் தகுதியை இழக்கும் (உடற்குறைபாடுள்ள ஆண்கள் பெண்களை அல்ல. எல்லாத் தகுதி இருந்தும் இனப்பெருக்கும் தகுதியை இல்லாது புறக்கணிக்கும் பெண்களை மட்டும் ஜடப்பொருட்கள் எனலாம்) பெண்கள் ஜடங்கள் என்றால் அவர்கள் சடப்பொருட்களாக மட்டும் இருக்க வேண்டும். பாலியச் சுதந்திரம் என்று கண்டவர்களோடும் பாலியல் உறவுகளை உடல் இச்சைக்காக வைப்பது அனுமதிக்கப்பட முடியாதது. அது நோய்களையும் சமூகச் சீரழிவுகளையும் வன்முறைகளையும் அதிகரிக்கின்றன.

    பொலூசன் பிரச்சனைக்கு ஒரு 3 அணுகுண்டுகளை அமெரிக்கா சீனா இந்தியாவில் தள்ளிவிட்டால் போதும். பெண்கள் குழந்தைப் பெறுவதால் பொலூசன் என்றால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. காரணம் மனித இனத்தின் இருப்பே சந்ததிகளின் உருவாக்கத்தில் தான் தங்கியுள்ளது.

    ஒன்றைச் செய்யலாம் அனைத்து கொண்டோம் மற்றும் கருத்தடைச் சாதனப் பாவனைகளைத் தடை செய் வதோடு மருத்துவ வசதி அளிப்பையும் நிறுத்தினால் சனத்தொகை பெருவதை நிறுத்துவதோடு பெண்களையும் அழிக்கலாம். செய்யக் கோருவமோ...??!

    ஏதாவது உருப்படியாக பேசுங்கள் மூக்கி. மூக்கச் சிந்திற்தை விட்டிட்டு. நடமுறை உலகுக்கு அவசியமானதைப் முன்வையுங்கள். பாலியல் சுதந்திரம் என்று தறிகெட்ட பாலிய நடத்தைக்கும் சமூகச் சீரழிவுக்கும் வித்திட அனுமதிக்க முடியாது. அது நடப்ப போவதும் இல்லை. சீனாவில் சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் போய் இப்போ முதிய ஊழியர்களின் தொகை அதிகரிப்பால் நாடு பிரச்சனையை எதிர் கொள்கிறது. ஆக இயற்கைக்கு மாறான மனித விதிப்புக்கள் தோல்வியடைவது இது முதன்முறையல்ல. அந்த வகையில் பாலியல் சுதந்திரம் என்பது அளவோடு கட்டுப்பாட்டோடு அமைய வேண்டும் என்பதே அவசியமானது. அதையே குத்தி முறிஞ்சு வலியுறுத்திறம். :lol::icon_idea:

    சரி, ஜப்பானிய பெண்கள் பிள்ளை பெறவில்லை என்டு கத்துறிங்க?...இந்தியா, சீனா போன்ற நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எதனால்?..பெண்கள் பிள்ளை பெறுவதாலா, பெறாததாலா? அதற்க்கும் பெண்களாஇ தான் குறை சொல்வீங்க! சீனாவில் ஒரு பிள்ளை தான் பெறமுடியும் என்ற கட்டாயத்தில், பல பெற்றோர்கள், பெண் சிசுக்களை கருவிலே அழித்துவிட்டு,ஆண் குழந்தைகளை மட்டும் பெறுகிறார்களே, எதனால்?..சில காலத்துக்கு பிறகு சீனாவில் 3 மில்லியன் ஆண்களுக்கு, துணை இருக்காதாமே..அப்பொ என்ன சொல்ல போறீங்க?..உங்கள் இயற்க்கை சமனிலை இதற்க்கு என்ன சொல்ல போகிறது..நீங்க, பிள்ளை பெறு எண்டால், பெறவேண்டும்..புரொடக்சன் கூடிட்டுது..நிப்பாட்டுங்கோ என்டால், நிப்பாட்ட வேன்டும்..

    நீங்கள் வாழும் நாட்டில் மட்டும் கடந்த ஓர்மாதத்தில் கருவில் அழிக்கப்பட்ட மனித சிசுக்கள் 6000. இவையெல்லாம் கலியாணம் கட்டவும் பிள்ளைப் பெறவும் ஆசையில்லாமல் பாலியல் சுதந்திரம் என்ற -போர்வையில் வைத்துக் கொண்ட உறவுகளால் விளைந்தவையா அல்லது சுயாதீனமாக முளைத்தவையா..??!

    அது எந்த நாடுங்கோ?

  6. கிருவன்சு பெண்களே அதிகம் எச் ஐ வி தொற்றுள்ளவர்கள் என்று நாம் எழுதவில்லை. பெண்களே அதிகம் காவிகளாக உள்ளனர் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. ஒரு எச் ஐ வி பொசிரிவ் விபச்சாரி எத்தனை ஆண்களுக்கு வழங்குவாள். அதுதான் காவி என்பதன் அர்த்தம்.

    சரி உங்கள் கணக்கு வந்தாலும் 40 மில்லியனில் 18 மில்லியன் பெண்கள். 3 மில்லியன் சிறுவர்கள் ஆக 19 மில்லியனே மிகுதிகள்.

    ஆக பெண்களில் உள்ள தொற்றுள்ளோரும் ஆண்களில் தொற்றுள்ளோரும் கிட்டத்தட்ட சமன்.

    எச் ஐ வி தொற்றில்

    பாலியல் தொடர்புகள்

    போதைப் பொருள் ஊசிகள்

    பாதுகாப்பற்ற குருதி மாற்றீடு

    தாயில் இருந்து சேய்க்கான தொற்று என்பனவே அதிகம் தாக்கம் செலுத்துகின்றன.

    ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் விபச்சாரிகளிடமிர்ந்தும் ஒழுக்கக்கேடான பெண்களிடமிருந்தும் போதைப் பொருள் ஊசிகள் மூலமும் அதிகம் தொற்றைப் பெறுகின்றனர்.

    பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் ஓரினச் சேர்க்கை மற்றும் தொற்றுள்ள ஆண்களிடம் இருந்து பெறுகின்றனர். போதைப் பொருள் ஊசிகள் மூலமும் பெறுகின்றனர். போதாக் குறைக்கு கருவில் சுமக்கும் சேய்களுக்கு வழங்குகின்றனர். ஆக பெண்களே அதிகம் எச் ஐ வி காவிகளாக விளங்குகின்றனர்.

    ஆண்களும் குழந்தைகளுமாக கிட்டத்தட்ட 22 மில்லியன் பேர் பெண்கள் மூலம் தொற்றுப் பெருகின்றனர் என்று வைத்துக் கொண்டால் 18 மில்லியன் பெண்கள் ஆண்களிடம் இருந்து பெறுகின்றனர் எனலாம். ஆக மொத்தம் 4 மில்லியன் பேருக்கு மேலதிகமாக பெண்கள் எச் ஐ வியை பரப்பி விடுகின்றனர். ( இந்தக் கணிப்பீட்டில் ஆண்கள் போதைப் பொருள் பாவனை ஊசிகளால் பெறும் அளவு மற்றைய முறைகளை நாம் புறக்கணித்துள்ளோம்.)

    இன்னும் நுணுக்கமாக நோக்கின் பெண்களால் எச் ஐ வி பெறும் குழந்தைகளைப் பற்றி பெண்கள் சிந்திப்பதே கிடையாது. பாலியல் சுதந்திரம் என்பது 18 மில்லியனுக்கு 19 மில்லியன் அதாவது கிட்டத்தட்ட சம எண்ணிக்கையான எச் ஐ வி தொற்று தெளிவாக வழங்கியுள்ளதைப் பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலே கட்டுரை வடிஉத்த அறிவாளியும் புரிஞ்சு கொள்ள வேணும். பாலியல் சுதந்திரம் என்பது பாலியல் ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்ட விடயம். அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பொறுப்பை வலியுறுத்த வேண்டிய நேரத்தில் பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் கொடுக்கின்றனராம். அது மானுட விடுதலையாம்.

    ஜப்பானில் பெண்கள் குழந்தை பெறப் பஞ்சிப் படுகின்றனர். குழந்தை பெறுவது தங்கள் உரிமை என்று வாதாடும் அவர்கள் தங்கள் நாட்டின் எதிர்கால சந்ததி பற்றி சிந்திக்காத மனிதர்களாக உள்ளனர். இதுதான் பெண் பாலியல் சுதந்திரமா. பெண் என்ற நிலைக்குரிய வாழ்வியல் கடமையைக் கூட செய்ய மறுப்பதுதான் பெண் விடுதலையா. அல்லது கருத்தடை சாதனங்களைப் பாவித்து பல ஆண்களோடும் உறவு வைத்துக் கொண்டு உடல் இச்சையைத் தீர்ப்பதுதான் பெண்களின் பாலியல் விடுதலையா...?! அப்படி ஒன்று மனித இனத்துக்கு ஏன் அவசியம்....??! அதனால் அதற்குக் கிடைக்கும் நன்மை என்ன...??! முற்போக்கு என்று முரண்பாடாக எழுதி சில விலாங்குகள் மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டி இணையத்தில் உலா வருவது தமிழர்களின் அறியாமையின் வெளிப்பாடு. :P :icon_idea:

    இப்ப உங்கட பிரச்சனை தான் என்ன?ஜப்பனில் பெண்கள் குழந்தை பெக்காவிட்டால், உங்கட பிரச்சனை என்ன?அது அவர்களின் விருப்பம்..அழுதாலும் அவள் தானே பெற வேண்டும்..இதுக்கு நீங்க ஏன் கிடந்து குத்தி முறியிறீங்க? நான் இருக்கும் நாட்டிலும் தான் சனம் கலியாணம் செய்யவே யோசிகிறார்கள், அது அவர்களின் சொந்த விருப்பம்..அதற்குரிய சரியான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுகிறது..இருந்தாலும் சனத்தொகை குறைவது நல்லது தானே, இந்த pollution எல்லாம் குறைந்துவிடும் :P :lol:

  7. சுதந்திரம் இல்லாமல் தான் தினமும் பல்லாயிரம் கருக்க்கலைப்புக்கள் செய்ய முடிகிறது. கலைக்க கருக்களை உருவாக்க முடிகிறது. விபச்சாரம் நடத்த முடிகிறது. எயிட்ஸைப் பரப்ப முடிகிறது. பாலியல் ஒழுக்கத்தை தொலைக்க முடிகிறது... கிளம்பிட்டாங்கையா மானுட விடுதலையும் பெண் விடுதலையும் என்று கொண்டு. பெண்கள் அப்ப மானுடரே அல்ல மாக்கள் என்றீங்களா...??!

    உங்களுக்கு பெண்கள் சுதந்திரமாக விபச்சாரம் செய்வது வசதியா இருக்கென்பதற்காக பெண் விடுதலை அவசியம் என்று சொல்லக் கூடாது. பெண் விடுதலை என்பது பாலியல் ஒழுக்கம் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடுவதல்ல. பெண் மனிதனாக இருந்தும் மறுக்கப்படுகின்ற மனித உரிமைகளை பெறுவதாகும்.ஆண்களுக்கும் பாலியல் ஒழுக்கம் கட்டுப்ப்பாடு என்ற நிலை உண்டு. அதை தகர்க்க முடியாது. தகர்த்தால் மனிதனை மானுடம் சார்ந்து நோக்க முடியாது. மிருகமாகத்தான் நோக்க வேண்டும். மனித உரிமைகளில் இன்று ஆண்களுக்குள்ள உரிமைகளும் பெண்களால் மறுக்கப்படுகின்றன.அதற்காக ஆண் பாலியல் சுதந்திரம் பெறுவதே மானுட விடுதலை என்று கூற முடியுமா..??!

    ஏதோ 9 பவுணுக்கு இணையத்தளம் நடத்தலாம் என்பதற்காக ஈழத்து அரசியல் ஆய்வு போல ஆதாரமற்ற ஆய்வுகளற்ற முட்டாள் தனமான வாதங்களை கட்டுரைகளை தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் என்ற நிலலயில் வரைவதை நிறுத்தி உலக நடப்புக்களை உலகலாவிய ஆய்வுகளின் பிரகாரம் சமகால உலக ஒழுங்கு கற்றுத்தரும் பாடங்களூடு வளமான கருத்துக்களை முன் வையுங்கள். பெண்கள் உசுப்பேத்தி நாமும் பெண்கள் நலன் காக்கிறோம் என்று பீற்றுவதே பெண்களை இரண்டாம் நிலையில் வைத்து நோக்குவதன் விளைவே. பெண் மனிதன் ஆணும் மனிதன். உரிமைகள் என்பது இருவருக்கும் ஆனது. ஒழுக்கம் கட்டுப்பாடுகள் இருவருக்குமானது. ஆக மானுட விடுதலை என்பது ஆண் பெண் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் மனித சமூகம் உயரிய சிறப்புக்களை கொள்ளும் தன்மையாகும்.

    காதல் தினம் அவசர உலகில் ஓய்வெடுக்க ஒரு பொழுது அவ்வளவும் தான். அது வியாபாரமும் ஆகியுள்ளது. தவறுகளுக்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகிறது அதையும் நிராகரிக்க முடியாது.

    ஆண்களால் எயிட்ஸ் பரப்ப முடியாது..பெண்களால் மட்டும் தான் முடியும்...இது உங்களின் கண்டுபிடிப்பா?... :D

  8. பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

    Friday, 16 February 2007

    காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.

    காதல் என்ற ஒருவார்த்தை அடக்குமுறைவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்கும் எத்தனை கசக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். இவர்களின் அடிப்படைவாதத்தை தகர்த்தெறியும் சக்தி படைத்த ஒரே ஆயுதம் காதல் என்பதே அதை இவர்கள் முழுமூச்சில் எதிர்க்க காரணம்.

    காதல் என்பது மானுட விடுதலைக்கான ஒரு ஆயுதம் என்பதை மானுட விடுதலைக்கு போராடும் பலரும் உணர்ந்தே வந்துள்ளனர். அடிப்படைவாத சமூகங்களில் மறுக்கப்படும் முதல் உரிமையே காதல் தான். காதலை இச்சமூகங்கள் எதிர்க்க காரணம் பெண்விடுதலையை வலியுறுத்தும் தன்மையை காதல் கொண்டிருத்தலே ஆகும்.

    பெண் விடுதலையை மானிட விடுதலை எனும் கோட்பாட்டிலிருந்து பிரித்து பார்த்தல் இயலாத காரியம். பெண் விடுதலையை ஆண்-பெண் சமத்துவம் எனும் ஒற்றை பரிணாமத்தில் அடக்குதல் முறையான செயலன்று. சான்றாக தலித்பெண் ஒருவருக்கு தலித் ஆணுக்கு சமமான உரிமை தந்தால் போதுமா? இங்கே ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை எனும்போது அவனது உரிமைக்கு சமமான உரிமையை பெண்களும் அடைதல் என்பது தவறான ஒருகுறிக்கோளாகும்.

    பெண்விடுதலை என்பதே பாலியல் சுதந்திரத்தில் தான் துவங்குகிறது. பெண் தனது உடலை முழுக்க, முழுக்க தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதன் அறிகுறியே பாலியல் சுதந்திரம். ஒரு பெண்ணின் உடலுக்கு சமூகம் உரிமைகோரும் அவலத்தை இன்னும் எத்தனை நாள் சகிப்பது? பெண்ணின் கருப்பையை அரசு நிர்வகித்து அவள் தாயாவதா, வேண்டாமா எனும் முடிவெடுக்கும் சுதந்திரத்தை பறிக்கும் உரிமையை அடிப்படைவாத ஆசிய சமூகங்கள் துவங்கி, மனித உரிமைகள் செழித்து வளரும் அமெரிக்க அரசு வரை அனைவரும் தட்டி பறிக்கின்றனர்.

    பாலியல் சுதந்திரம் என்பது ஏதோ கிளப்புகளுக்கும், டிஸ்கோக்களுக்கும் போகும் பெண்களின் பிரச்சனை என்றும் கிராமப்புற பெண்களின் பிரச்சனைகள் வேறானவை என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. கிராமப்புற (நகர்ப்புற) பெண்கள் சந்திக்கும் கல்வி அறிவின்மை, ஜாதி கட்டுப்பாடுகள், சிசுக்கொலை,வரதட்சணை, குடும்ப வன்முறை போன்றவற்றுக்கு பாலியல் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேட்கப்படுகிறது.

    கூர்ந்து பார்த்தால் இதுபோன்ற சமூக கட்டமைப்புகள் நிலவ அடிப்படையே பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் மறுக்கப்படுவதுதான் என்பது புரியும். காதல் எனும் ஒற்றை வார்த்தையை போல் வரதட்சணையை அழிக்க கூடிய ஆயுதம் வேறேதுமில்லை. ஜாதி, மதம் எனும் சமூக இழிவுகளையும் அழிக்கும் சக்தி காதலுக்கு உண்டு. காதல் திருமணங்கள் நடந்து வரதட்சணை ஒழிந்தால் பெண் சிசுக்கொலை, குடும்ப வன்முறை ஆகியவை அடியோடு அழிந்து ஒழிந்துவிடும். ஜாதியாலும், மதத்தாலும் கட்டப்பட்டு சீரழியும் சமூகங்களுக்கு விடுதலை அளிக்க அந்த சமூக கட்டமைப்புகளையே அழித்து ஒழிக்க சக்தி படைத்த காதல்மணங்களாலும், பாலியல் சுதந்திரத்தாலும் தான் சாத்தியம். இது போன்ற அடிப்படைவாத சமூகங்கள் நிலவ காரணமே இவற்றில் பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் மறுக்கப்படுவது தான்.

    ஆக பெண் விடுதலை துவங்குவதே பாலியல் சுதந்திரம் எனும் புள்ளியில்தான். இதை மறுத்து வேறு கோணத்தில் பெண் விடுதலையை அணுகும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடியும். காமம், காதல், குடும்பம்,ஜாதி, மதம் எனும் அனைத்து புனிதங்களையும் அறுத்து போஸ்ட்மார்ட்டம் செய்தால் அவற்றின் அடிநாதமாக விளங்கும் ஒற்றை கோட்பாடு பெண்களுக்கு பாலியல் சுதந்திர மறுப்பு என்பதாகவே இருக்கும்.இந்த ஒரு விஷயம் மட்டும் நடந்தால் மேலே சொன்ன கோட்பாடுகள் பலவும் புரட்டி போடப்பட்டும், ஜாதி, மதம் போன்ற கோட்பாடுகள் ஒட்டுமொத்தமாக துடைத்தும் எறியப்படும்.

    இந்துத்வா இயக்கங்கள், இஸ்லாமிய இயக்கங்கள், ஜாதிகட்சிகள் ஆகிய கொள்கை முரண்பட்ட கும்பல்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் ஒன்றிணைந்து முழுமூச்சாக காதலர் தினத்தை எதிர்ப்பது ஏன் என்று சிந்தித்து பார்த்தால் எளிதில் விளங்கும். இவற்றின் இருப்புக்கு வேட்டு வைக்கும் சக்தி படைத்த ஒரே ஆயுதம் காதல் தான் என்பது.

    மதம் ஒழிந்தால் அதன்பின் மதவாத இயக்கங்களுக்கு வாழ்வேது? ஜாதி அழிந்தால் ஜாதிக்கட்சிகளுக்கு எதிர்காலமேது? இதை எல்லாம் செய்யும் வலிமை வாய்ந்த காதலையும், அதன் அடிப்படையான பாலியல் சுதந்திரத்தையும் இந்த இயக்கங்கள் எப்படி ஆதரிக்க இயலும்?

    மானிட விடுதலையையும், பெண்விடுதலையையும் வலியுறுத்த வந்த காதலர் தினத்தை வாழ்த்தி வரவேற்கிறேன்.

    http://www.sooriyan.com/index.php?option=c...990&Itemid=

  9. பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் ஈழவன், யமுனா, யாழ்பாடி!.

    அடப்பாவிகளா, :angry: என் பிறந்தநாள் கூட கிட்டடியில் தானே வந்திச்சு? யாரவது வாழ்த்து சொன்னிகளா? :(

    எல்லாமே கேட்டு தான் வாங்க வேனும் போல இருக்கு? :D

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.