யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
 • Content Count

  39,562
 • Joined

 • Days Won

  25

nunavilan last won the day on May 20 2018

nunavilan had the most liked content!

Community Reputation

2,680 நட்சத்திரம்

2 Followers

About nunavilan

 • Rank
  நிர்வாகம்
 • Birthday 02/16/1980

Profile Information

 • Gender
  Male
 • Location
  USA
 1. சோபா உடன்பாட்டினால் சிறிலங்கா பிளவுபடும் – உதய கம்மன்பில அமெரிக்காவுடன் சோபா உடன்பாடு, மிலேனியம் சவால் நிறுவனம் போன்ற உடன்பாடுகளை செய்து கொள்வதால், அமெரிக்க- சீனா இடையிலான மோதல்களுக்கான களமாக சிறிலங்கா மாறி விடும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்திருக்கிறார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், “அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான மிலேனியம் சவால் நிதிய ஒத்துழைப்பு உடன்பாடு ஒரு பொருளாதார தாழ்வாரத்தை உருவாக்கி விடும். அது பனாமா கால்வாயைப் போன்று சிறிலங்காவைப் பிளவுபடுத்தி விடும். அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர் போன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய செயற்படுகிறார். சபாநாயகருக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசகருக்கு, அமெரிக்க நிறுவனம் ஊதியம் வழங்குகிறது. அதனை சபாநாயகர் ஏற்றக் கொண்டிருக்கிறார். இது, அவருக்கும் அமெரிக்காவுக்கும் இரகசியத் தொடர்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். http://www.puthinappalakai.net/2019/06/20/news/38618
 2. அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் ஆலோசனை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை, சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில், நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பரஸ்பரம் ஆர்வமுள்ள விடயங்கள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, சிறிலங்கா கடற்படைத் தலைமையகம், தெரிவித்திருந்தது. அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் சிறிலங்கா பயணம், ரத்துச் செய்யப்பட்ட சூழலில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. முன்னதாக, மைக் பொம்பியோ, சிறிலங்கா பயணத்தின் போது, திருகோணமலை துறைமுகத்துக்குச் செல்வதற்கும் திட்டமிட்டிருந்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/06/20/news/38620
 3. பொம்பியோவின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கும் ‘சோபா’வுக்கும் தொடர்பு இல்லை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் சிறிலங்கா பயணம் ரத்துச் செய்யப்பட்டதற்கும், ‘சோபா’ உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வரும் 24ஆம் நாள் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ, சிறிலங்காவுக்கு எதிர்வரும் 27ஆம் நாள் குறுகிய பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். எனினும், தவிர்க்க முடியாத திட்டமிடல் முரண்பாடுகளால், அவரால் சிறிலங்காவுக்கான பயணத்தை இம்முறை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று அறிவித்திருந்தது. அமெரிக்காவுடனான படைகளை நிலைப்படுத்தல் தொடர்பான ‘சோபா’ உடன்பாட்டுக்கு, சிறிலங்கா எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளி்யிட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் பயணம் ரத்துச் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகியது. இதுகுறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், “பொம்பியோவின் இந்தப் பயணத்தின் போது, ‘சோபா’ உடன்பாடு குறித்துப் பேசத் திட்டமிடப்பட்டிருக்கவில்லை. அவரது சிறிலங்கா பயணம் ரத்து செய்யப்பட்டதற்கும், ‘சோபா’ உடன்பாட்டுக்கும் தொடர்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார். அதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ சிறிலங்கா வரத் திட்டமிட்டிருந்த போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கம்போடியா, லாவோசுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். எனினும், இந்தப் பயணம், ஓகஸ்ட் மாதத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக, நேற்றுமுன்தினம் இரவே தமக்கு தெரியவந்தது எனவும் அந்த அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/2019/06/20/news/38639
 4. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களோடு தமிழர்களை மோதவிட பிக்குமார் திட்டம் உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் பௌத்த ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஏற்பாடு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களை மோதவிட்டு. மேலும் பிளவுகளை உருவாக்க பௌத்த பிக்குமார் முற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அம்பாறை- கல்முனை பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் பௌத்த பிக்குமாரினால் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றது. இதற்கு சில தமிழ்ப் பிரமுகர்களும் தங்களை அறியாமல் உடன்பட்டுள்ளனர். வேறு சில தமிழர்கள் நன்கு திட்டமிடப்பட்ட இலங்கைப் புலனாய்வுத் துறையின் தந்திரத்தை அறியாமல் துணைபோயுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்று அனைத்தையும் இழந்து நிற்கும் தமிழச் சமுகத்தின் பண்பாட்டைச் சிதைத்து, முஸ்லிம் சமுகத்தையும் கேவலப்படுத்துவதே பௌத்த பேரினவாதிகளின் பிரதான நோக்கமென பெயர் குறிப்பிட விரும்பாத அருட் தந்தையொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். தமிழ்- முஸ்லிம் மோதலை உருவாக்கி அதன் மூலம் இலங்கைத் தீவு முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதே பௌத்த பேரினவாதிகளின் நோக்கம். அதன் முதல் நடவடிக்கையே இந்த உண்ணாவிரதப் போராட்டமென பிரதேச மக்கள் கூறுகின்றனர் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் சிவசிறீ சச்சிதானந்தசிவம் சிவாச்சாரியார், பெரியநீலாவணை தேவாலய அருட்தந்தை தங்கமணி கிருபைநாதன், ஆகியோருடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்தினம் ஆகியோரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுத் திங்கட்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சைவ, கத்தோலிக்க மதகுருக்கள் மற்றும் பிரதேச மக்களும் ஆதரவு வழங்கி வருவதாக பௌத்த குருமார் கொழும்பில் உள்ள சிங்கள ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் வரை தமது உண்ணாவிரதப் போராட்டம் தொடருமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல. ஆனால் அதனைக் கையாள வேண்டிய வழிமுறைகள் வேறு. அதற்காக பௌத்த பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்ந்து போராடுவது தற்கொலைக்கு ஒப்பானதாகும் ஆனால், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை திட்டமிட்டு நடத்தும் சில பௌத்த பிக்குமார், இலங்கை இராணுவப் புலனாய்வுடன் இணை்ந்து போர்க்காலத்தில் பணியாற்றியவர்கள் என்வும் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனவின் உறுப்பினர்கள் எனவும் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது அவசியமெனில் அது குறித்து தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச வேண்டும். கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அது குறித்துப் பேசியுள்ளனர். ஆனால் இதுவரையும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லை. எனினும் சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரும் மற்றும் சிலரும் அதற்காக இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாதெனவும், அது பௌத்த பேரினவாத அரசியல் நாடகம் என்றும் பிரதேச மக்கள் பகிரங்கமாகவே கூறுகின்றனர். இந்தியாவில் இருந்து வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் ஊடுருவியுள்ள இந்துத்துவா அமைப்பும் இதன் பின்னணியில் செயற்படுகின்றது. பௌத்த- இந்து உறவுப்பாலம் என்று கூறிக் கொண்டு, தமிழ் மக்களுக்குள்ளேயே சமய முரண்பாடுகளை தோற்றுவிப்பதே இந்துத்துவா அமைப்பின் நோக்கம் என்று ஏலவே குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. பௌத்த- இந்து என்ற அடிப்படையில் ஒற்றுமை ஒன்றைக் கட்டியெழுப்ப பௌத்த பிக்குமாரும் சில தமிழ் சைவக் குருக்களும் ஒன்றினைந்துள்ளனர். அதற்கு ஆதரவாக தமிழ்க் கிறிஸ்த்தவ குருமாரையும் இவர்கள் அழைத்துமுள்ளனர். ஆனால் இதனைத் தமிழ் மக்கள் ஏற்கவில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். தமிழ் மக்களுடன் தங்களுக்குப் பிரச்சினை இல்லையென்றும் போர்க்காலத்தில் சில தவறுகள் நடத்ததாகவும் ஆனாலும் அதனை மறந்து தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணி பௌத்த- இந்துசமய உறவை வளர்க்க வேண்டுமென்றும் கூறி பௌத்த பிக்குமார் சிலர் அம்பாறையில் தமிழ்ப் பிரதேசங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வடக்கு- கிழக்கு தாயகப் பிரதேசங்களில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகள் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அபகரிக்கப்பட்டு, அங்கு பௌத்த பிக்குமார் விகாரைகளைக் கட்டி வருகின்றனர். புத்தர் சிலைகளை வைக்கின்றனர். இவற்றையெல்லாம் எதிர்க்காத பௌத்த பிக்குமார், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்காக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் நகைப்புக்கிடமானதென மக்கள் கூறுகின்றனர். மீண்டுமொரு தமிழ் முஸ்லிம் மோதலை உருவாக்கி அதன் மூலம் இலங்கைத் தீவு முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதே பௌத்த பேரினவாதிகளின் நோக்கம். அதன் முதல் நடவடிக்கையே இந்த உண்ணாவிரதப் போராட்டமென பிரதேச இளைஞர்கள் கூறுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல. ஆனால் அதனைக் கையாள வேண்டிய வழிமுறைகள் வேறு. அதற்காக பௌத்த பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்ந்து போராடுவது தற்கொலைக்கு ஒப்பானதாகுமென அவதானிகள் கூறுகின்றனர். https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=1034&fbclid=IwAR3KbS_7YKETQMXqF9NpMGw0NAF4fSzwjiKlR5Woxb1Fco90XHQi8xAhx1U
 5. பதில் அமைச்சர்கள் நியமன மோதல் உச்சம் – பணியாற்ற வேண்டாமென ரணில் உத்தரவு ஐதேகவைச் சேர்ந்த பதில் அமைச்சர்களான, லக்கி ஜயவர்த்தன, புத்திக பத்திரன, அனோமா கமகே ஆகியோரை, அந்தப் பதவிகளுக்கான கடமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட பதில் அமைச்சர்களின் நியமனம், அரசியலமைப்பு மீறல் என்பதாலேயே, சிறிலங்கா பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் இந்த நியமனங்களை ஏற்றுக்கொண்டதால், எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களின் நடவடிக்கை அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சர்களாக இருந்து பதவி விலகிய ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், கபீர் ஹாசிம் ஆகியோரது இடங்களுக்கே, பதில் அமைச்சர்களாக லக்கி ஜயவர்த்தன, புத்திக பத்திரன, அனோமா கமகே ஆகியோரை சிறிலங்கா அதிபர் நியமித்திருந்தார். எனினும், இந்த நியமனங்கள் குறித்து சிறிலங்கா பிரதமருடன், அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடவில்லை என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவித்தன. பதில் அமைச்சர்களின் நியமனங்கள் சட்டரீதியானது அல்ல என்பதால், அவர்களை புதிய பொறுப்புகளில் பணியாற்ற வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நியமனங்கள் தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். நாளை அமைச்சரவைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், பதில் அமைச்சர்கள் அதில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. http://www.puthinappalakai.net/2019/06/17/news/38560
 6. படையினரைக் கொன்றதாக குற்றச்சாட்டு – முன்னாள் புலிகளுக்கு எதிராக வழக்கு போர்க்காலத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவர் மீது வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு இந்த மாதம் 24 ஆம் நாள் தொடக்கம் விசாரிக்கப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள், 18 கடற்படை அதிகாரிகள், 08 இராணுவத்தினர் என, விடுதலைப் புலிகளின் தடுப்பில் இருந்த 26 சிறிலங்கா படையினர் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர். அவர்களின் சடலங்களை அடையாளம் காண முடியவில்லை. புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த புலிகளின் புலனாய்வு முகாமை கைவிடும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த போர்க்கைதிகள் கொலை தொடர்பான விசாரணைகளை, 2010ஆம் ஆண்டு தீவிரவாத விசாரணைப் பிரிவு ஆரம்பித்திருந்தது. நீண்ட விசாரணைகளின் பின்னர், இந்தக் கைதிகள் சுடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என, மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு எதிரான வழக்குகள் வவுனியா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள், எதிர்வரும் 24ஆம் நாள் தொடக்கம் ஆரம்பமாகி நடைபெறவுள்ளன. http://www.puthinappalakai.net/2019/06/17/news/38566
 7. புடினுக்கு அழைப்பு விடுத்தார் சிறிலங்கா அதிபர் – அமெரிக்காவின் தடை குறித்தும் பேச்சு ரஷ்யாவில் இருந்து சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் மீது, அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாக, சிறிலங்கா, ரஷ்ய அதிபர்கள் கலந்துரையாடியுள்ளனர். தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடந்த ஐந்தாவது, ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் உச்சி மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் பக்க நிகழ்வாகவே, நேற்று முன்தினம் இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவதில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பல்வேறு பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ரஷ்யாவில் இருந்து சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் மீது, அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாகவும், இந்த விடயத்தில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஆராய்ந்தனர். அத்துடன் ரஷ்ய அதிபரை கூடிய விரைவில் சிறிலங்காவுக்கு வருமாறும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்தார். http://www.puthinappalakai.net/2019/06/17/news/38563
 8. புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’ தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் கொழும்பு வந்த இந்தியப் பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அவசரமாக அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று, கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியிருந்தது. அரசியலமைப்பு திருத்தங்கள் ஒரு சிக்கலான பிரச்சினை என்பதால் இந்த விவகாரத்தை ஆய்வு செய்த பின்னரே, அதுகுறித்து பார்க்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி கூறியிருந்தார். அதேவேளை, பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அதிகாரிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இந்தியப் பிரதமரிடம் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கோரியிருந்தனர் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது. எனினும், கூட்டமைப்பு பிரதிநிதிகளின் புதுடெல்லி பயணம் எப்போது என்ற தகவல் அந்தச் செய்தியில் கூறப்படவில்லை. http://www.puthinappalakai.net/2019/06/17/news/38570
 9. சிறிலங்கா அதிபர் கம்போடியா பறக்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத இறுதியில் கம்போடியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கம்போடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்றே சிறிலங்கா அதிபர், இரண்டு நாட்கள் பயணமாக நொம்பென்னுக்கு செல்லவுள்ளார். எதிர்வரும் 26ஆம் நாள் அவர் கம்போடியாவுக்குப் புறப்பட்டுச் செல்வார் என்றும், 27ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் அதிபர் செயலக தகவல்கள் கூறுகின்றன. கடந்தவாரம் தஜிகஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர், நேற்றைய தினமே நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/06/17/news/38568
 10. குழப்பத்தில் சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள் அரச பாதுகாப்பு அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்கக் கூடாது என, சிறிலங்கா அதிபர் விடுத்துள்ள உத்தரவை அடுத்து, தெரிவுக்குழு விசாரணை நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதுகுறித்து தெரிவுக்கு உறுப்பினர்கள் நாளை சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்து, அவரது நிலைப்பாட்டை அறிந்து கொள்ளவுள்ளதுடன், தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயவுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, பதவியில் இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹெமசிறி பெர்னான்டோ, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிஸ் உள்ளிட்டவர்களிடம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு சாட்சியங்களைப் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் அரச புலனாய்வு சேவையின் தலைவரான நிலந்த ஜயவீரவையும் சாட்சியமளிக்க தெரிவுக்குழு அழைக்க எதிர்பார்த்துள்ளது. ஆனால், சிறிலங்கா அதிபரின் உத்தரவை மீறி அவர் சாட்சியமளிக்க முன்வருவாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ், எந்தவொரு அரச அதிகாரிக்கும் அழைப்பு விடுக்கும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு உள்ளது. தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க மறுக்கும் எந்த அதிகாரிக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடியும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். எனினும் இந்த விடயம் குறித்து, சபாநாயகரைச் சந்தித்த பின்னரே, முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். அதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக, சாட்சியமளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாத குழப்ப நிலையில் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன http://www.puthinappalakai.net/2019/06/17/news/38557
 11. தந்தையர் தினம் இன்று தந்தையர் தினம். இறந்த, இருக்கின்ற, காணாமற் போன, மறக்கப்பட்ட அத்தனை தந்தையர்களையும் நினைவுகூர வேண்டிய நாள். பல வருடங்களுக்கு முன்னர் கனடிய சீ.பி.சீ. வானொலியில் ஒரு நிகழ்ச்சியைக் கேட்டேன். தலைப்பு இப்போது மறந்து விட்டது, நிகழ்ச்சியையும் இப்போது நிறுத்தி விட்டார்கள். நேயர்கள் தொலைபேசியில் அழைத்து தமது வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நிகழ்ச்சி அது. அன்றைய நாள் தந்தையருக்குரிய நாள். நிகழ்ச்சியில் ஒரு நேயர் வினிபெக்கில் இருந்து அழைத்திருந்தார். தான் ஒரு டாக்சி சாரதி என்றும் ஒரு நாள் தன் வண்டியில் பயணம் செய்தவர் பற்றியும் கூறினார். கதையில் அவரது வாழ்வும் இழையோடியது. “நான் ஒரு தனிமையில் வாழும் தந்தை. எனது ஒரே மகன் எங்கு போனான் எப்படி இருக்கிறான் என்பது தெரியாது. அவனை இழந்ததற்கு நான் தான் முக்கிய காரணம். நான் ஒரு பொறுப்பற்ற தந்தை. போதை வஸ்துப் பாவனையில் அடிமையாகிப் போனவன். அதனால் குடும்பத்தை இழந்தவன். ஒரு நாள் நான் எனது மகனைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் என் நாட்கள் நகரும். ஒரு நாள் என் வண்டியில் ஒரு இளைஞர் ஏறினார். மிகுந்த போதையில் இருந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு என்னையறியாமல் ஒரு ஈர்ப்பு வந்தது. அவன் என் மகனாக இருக்கக்கூடாதா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். கண்ணாடியூடு அவனை அடிக்கடி பார்த்தேன். மயக்கத்தில் கிடப்பது போலிருந்தது. அவன் சொல்லிய இடம் வந்ததும் இறங்கும்படி பணித்தேன். தள்ளாடிக்கொண்டே இறங்கினான். பணம் தரும்போது என்னால் பொறுக்க முடியவில்லை. உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டேன். முணு முணுத்துக் கொண்டு முதற் பெயரைச் சொன்னான். சொந்த இடத்தைக் கேட்டேன். சொல்லிவிட்டுத் தெருவைக் கடந்து சென்றான். எங்கேயோ விழுந்து தொலைக்கப் போகிறவன் போல் நடை இருந்தது. இன்னுமொரு பயணிக்கான அழைப்பு வந்தது. கண்ணாடியினூடு அவனைப் பார்த்துக்கொண்டே வண்டியை நகர்த்தினேன். அவன் தான் என் மகன்” தழு தழுத்த அவரது குரலும் வானொலி அறிவிப்பாளரின் மெளனமும் துக்கத்தை மேலும் பன்மடங்காக்கின. சில தருணங்கள் சுமையைப் பஞ்சாக்கும். இது அப்படியொன்று. தந்தையருக்கு வாழ்த்துக்கள்! சிவதாசன் http://marumoli.com/தலையங்கம்-தந்தையர்-தினம/?fbclid=IwAR16eAzcYZ2Tddt0oaiGZf5afZQQ5MYKEn164yW4gBW3yFOyEpHP6Sm5QIk
 12. நான் ”மாடுகளுக்கு” பிரதிநிதி அல்ல ! சீறும் வியாழேந்திரன் !!! நான் மக்களுக்குத்தான் பிரதிநிதி மாட்டுக்கு பிரதிநிதியல்ல என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து கல்வித்திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மண்முனை மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் வள நிலையம் மீளமைக்கப்பட்டு இன்று காலை திறந்துவைக்கப்பட்டது. பட்டிப்பளையில் அமைந்துள்ள படுவான்கரை பிரதேசத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நிலையம் இறுதி யுத்ததினை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு தொடக்கம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையமாக செயற்பட்டுவந்தது. இந்த நிலையில் வடகிழக்கு அபிவிருத்திக்கான செயலணி கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த வள நிலையம் விடுவிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. மண்முனை மேற்கு கல்வி வலயத்தின் வலய கல்வி பணிப்பாளர் த.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் உட்பட கல்வி திணைக்கள அதிகாரிகள், பிரதேசசபை உறுப்பினர்கள்,ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் ஆசிரிய பௌதீகள வளப்பற்றாக்குறை கொண்ட வலயங்களாக கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்கள் காணப்படுகின்றன. இதற்கு காரணம் கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சிசெய்தவர்களும் கிழக்கு கல்வி பணிப்பாளர்களும்தான் காரணமாகும். மாகாண ரீதியாக ஆட்சிசெய்யும் அரசியல்வாதியாக இருந்தாலும்சரி, மாகாணத்தில் இருந்த கல்வித்துறைக்கு பொறுப்பானவர்களும்சரி இந்த இரண்டு கல்வி வலயங்களிலும் உள்ள ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஆசிரிய வெற்றிடத்தினைக்காட்டி ஆசிரியர் நியமனம்பெற்றுவந்ததன் பின்னர் அரசியல்வாதிகளை பிடித்துக்கொண்டு தமது இடத்திற்கும் மாவட்டத்திற்கும் சென்ற நிலைமையும் அம்பாறையில் இருந்து கொண்டு இங்கு ஆசிரியர் சம்பளம் எடுத்த நிலைமையும் இருக்கின்றது. இதற்கு அரசியலும் மாகாணத்தில் துணைபோனது, மாகாண கல்விபணிப்பாளரும் துணைபோயிருக்கின்றார். 41வருடமாக வாகரை பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய பகுதியான கட்டுமுறிவு பாடசாலைக்கு ஒரு ஆங்கில ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. கல்வி அமைச்சராக கிழக்கில் ஒரு தமிழர் இருந்துள்ளார். வெட்ககேடு. தரம் 01 தொடக்கம் 11வரையான பாடசாலையில் ஒரு ஆங்கில ஆசிரியர் இல்லை. இதேபோன்று வாகரை பிரதேசத்தில் உள்ள மருதங்கேணிகுளம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் 01 தொடக்கம் 03வரையுள்ள வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாத காரணமாக எந்தவித கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இல்லாமல் பாடசாலை வந்துசெல்கின்றனர். எங்களிடம் செய்யக்கூடிய அதிகாரங்கள் இருந்தும் நாங்கள் அதனைச் செய்யவில்லை. அண்மையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களை இரத்துச்செய்ய பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தவேளையில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்போது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வேறு மாவட்டங்களை சேர்ந்த, சகோதர இனத்தினை சேர்ந்த 22 பேர் கல்விசாரா ஊழியர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். கடந்த காலத்தில் இருந்த மாகாண அரசியலே இந்த நியமனத்தினை வழங்கியுள்ளது. சாதாரண சிற்றூழியர் நியமனத்திற்கு, சாதாரண காவலாளர் நியமனத்திற்கு கூட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் கற்ற பிள்ளைகள் இல்லையா என்ற கேள்வி எங்களுக்குள் எழுகின்றது. தற்போது வந்துள்ள ஆளுனர் நீதியாக நியாயமாக செயற்பட வேண்டும் என கோரியுள்ளோம். இந்த மாகாணம் மூவின மக்களும் வாழும் மாகாணம். இந்த மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கின்றார்கள். மூன்று இன மக்களுக்கும் சமமான சேவையினை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.குரங்கு சேட்டைகளை காட்டினால் நாங்களும் எங்கள் சேட்டைகளை களரீதியாக காட்டவேண்டிவரும். இந்த நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதம் ஒரு சமூகத்தினை கருவோடு அழிக்கும் செயற்பாட்டினை செய்துள்ளது. இன்னும் அந்த பயங்கரவாதம் முடிவடையவில்லை. அப்பாவி மக்களை நாங்கள் ஒருபோதும் குற்றம் சொல்வதில்லை. யாராகயிருந்தாலும் நீதியாகவும் நியாயமாகவும் செயற்பட வேண்டும். நாங்கள் மக்களுக்கு சேவைசெய்யும்போது கட்சிபேதங்கள் காட்டத்தேவையில்லை. அரசியலில்தான் அந்தந்த கட்சிசார்ந்து திறமைகளை காட்டவேண்டும். மற்றைய சமூக அரசியல்வாதிகளில் மூன்று பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் 21பேரும் பதவி விலகியுள்ளனர். தேர்தல் காலங்களில் பல்வேறு நோக்கங்களுடன் செயற்பட்டாலும் தேர்தல் முடிந்ததன் பின்னர் தமது சமூகம் சார்ந்த ஒரு குறிக்கோளுடனேயே அவர்கள் செயற்படுவார்கள். கடந்த காலத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது. எனக்கு அழைப்பிருந்தால் பாடசாலை நிகழ்வுகளில் எனது பெயரை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. நான் தமிழ் மக்கள் வாக்களித்துவந்த பிரதிநிதி. நான் மக்களுக்குத்தான் பிரதிநிதி மாட்டுக்கு பிரதிநிதியல்ல. எமது சமூகத்திற்காக சேவைக்காக வந்துவிட்டால் அனைவரும் ஒன்றித்து பயணிக்கவேண்டும். எங்களுக்குள் மாறுபட்ட கொள்கைகள், கருத்துகள் இருக்கலாம். தேர்தல் காலங்களில் அவற்றினை பார்த்துக் கொள்ள முடியும். கல்விக்குள்ளும் விளையாட்டுக்குள்ளும் அரசியல் வரக்கூடாது என எதிர்பார்ப்பவர்கள் நாங்கள். 20 இலட்சம் மக்களைக் கொண்ட ஜமேக்கா ஒலிம்பிக்போட்டிகளில் தங்க பதக்கங்களை அள்ளிக்குவிக்கின்றது. இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் இரண்டு வெள்ளி,ஒரு வெண்கலப்பதக்கமே இதுவரையில் பெறப்பட்டுள்ளது. கல்விக்குள் அரசியல். எல்லாவற்றுக்குள்ளும் அரசியல். இதன்காரணமாகவே இந்த நிலைமை காணப்படுகின்றது என்றார். https://sltnews.com/archives/22199