Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    51081
  • Joined

  • Days Won

    38

Posts posted by nunavilan

  1. 5 minutes ago, goshan_che said:

    இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣.

    பயிற்று மொழிதொகு

    அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன.

    https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி

    சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே?

    நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம்.

    ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?

     

    கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா?
    மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா?
    இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?
     

  2. என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.

    • Haha 1
  3. French journalist Anne Nivat does not hide her delight at the “success of the Ukrainians at Crocus”: But it should still be ...

     

     

    French journalist Anne Nivat does not hide her delight at the “success of the Ukrainians at Crocus”: But it should still be said that if it is the Ukrainians, then this is a masterstroke. I'm not saying that it's them, but if it's Ukrainians, then that's phenomenal!

     

    https://t.me/European_dissident

  4. 2 hours ago, விளங்க நினைப்பவன் said:

    சில மாதங்களுக்கு முன்பு கடந்த வருடம் என்று நினைக்கிறேன் நுணாவிலானும், உடையாரும் யாழ்களத்தில் தகவல், வீடியோவும் தந்திருந்தவர்கள். யாழ்பாண மாவட்டம் கிளிநொச்சியில் நடந்தத. 😄   தேடிபார்த்தேன் காணவில்லை பின்பும் நேரம் கிடைக்கின்ற போது தேடிபார்க்கிறேன்.

     

    • Thanks 1
  5. 1 minute ago, goshan_che said:

    நன்றி. 

    நான் எழுதுவது ஜனவரி 24 க்கு பின்னான நிலை. 

    இரெண்டுக்கும் அதிக இடைவெளியில்லை.

    நான் எழுதுவதை விட மிக அதிக தூரம் விலகியதாக இருந்ததா உங்கள் இலங்கை பயண அனுபவம்?

    இம்முறை அதிக இடங்களுக்கு செல்லவில்லை. பெற்றோரை கவனிக்க தான் குடும்பமாக சென்றிருந்தேன். பாசிக்குடாவுக்கும், திருக்கோணேஸ்வரத்துக்கும் போயிருந்தோம். அடுத்த முறை தனிய போகும் போது பல இடங்களை பார்க்கலாம் என இருக்கிறேன். நண்பர்கள், உறவினர்கள் தங்களை சந்திக்கவில்லை என்ற பெரிய குறை. அடுத்த முறை பார்க்கலாம் என கூறியுள்ளேன்.

    • Like 1
  6. உயர் ஜாதியைச் சேர்ந்தவர் எனக் கூறும் மம்தா பானர்ஜி; ஜாதி அரசியல் செய்கிறார்: ஒவைசி கண்டனம்

    653282.jpg
     
     

    கொல்கத்தா

    மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை உயர் ஜாதியைச் சேர்ந்தவர் என்று கூறியிருப்பதன் மூலம் அவரும் ஜாதி அரசியல் செய்வது உறுதியாகி விட்டது, பிரதமர் மோடி, பாஜகவுக்கும் இவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும்.

     

    2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்றாகும். இங்கு முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சுவேந்து அதிகாரி பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார்.

     

    16171996222949.jpg

    நந்திகிராம் தொகுதியில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 3-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் அவர் இன்று பிரச்சாரம் செய்து வருகிறார். மம்தா பானர்ஜி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் ‘‘மேற்குவங்கத்தில் எப்படியாவது ஆட்சியை கைபற்றி விட வேண்டும் என்ற வெறி கொண்டு பாஜக செயல்படுகிறது.ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள மேற்குவங்க மக்கள் பாஜகவை ஒரு போதும் ஆதரிக்க மாட்டர்கள்.

    எனக்கு ஜாதி, மதத்தில் நம்பிக்கையில்லை. கடந்த 2-ம் கட்ட பிரச்சாரத்தின்போது நான் ஒரு கோயிலில் சென்று வழிபாடு நடத்தினேன். அப்போது வழிபாடு செய்வதற்காக அர்ச்சகர் எனது கோத்திரம் என எனக் கேட்டார். நான் ஒரு தாய், பெண், மனுஷி அவ்வளவு தான் எனக் கூறினேன்.

    திரிபுராவில் உள்ள திரிபுரேஷ்வரி கோயிலில் சென்று வழிபாடு நடத்தினேன். அங்கும் எனது கோத்திரத்தை கேட்டபோது அவ்வாறே கூறினேன். ஆனால் உண்மையில் நான் சாண்டில்ய பிராமண கோத்திரத்தை சேர்ந்தவர்’’ எனக் கூறினார்.

     

    இந்த விவகாரம் தேர்தல் சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மம்தா பானர்ஜியின் இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். தான் ஒரு உயர் ஜாதியைச் சேர்ந்தவர் என்று ஒரு முதல்வர் கூறலாமா. இவரும் வர்ணாஸ்சிரம தர்மத்தை பின்பற்றுவது தெரிந்து விட்டது. பிரதமர் மோடி, பாஜகவுக்கும் இவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருவருமே ஜாதி- மத அரசியல் செய்துகிறார்கள். இருவருமே சமமானவர்கள் தான்’’ எனக் கூறினார்.

    https://www.hindutamil.in/news/india/653282-asaduddin-owaisi-aimim.html

    31 Mar, 2021 07:37 PM

    • Thanks 1
  7. 5 hours ago, பெருமாள் said:
      On 26/3/2024 at 18:11, goshan_che said:

    ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது

    அலி சப்ரி வெளிநாட்டுக்கு காசை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று காணொளி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அநேகமான முஸ்லிம்கள் படு தூசணத்தால் திட்டி வேலை இல்லாமல் இங்கு என்ன செய்வது என்று திட்டி தீர்த்திருந்தார்கள்.

  8. 6 hours ago, வாலி said:

    இந்தக் கூத்து எப்ப நடந்தது! 😂

    அந்த அழகியிண்ட படம் எங்க கிடைக்கும்?! 👀

     

    கிளிநொச்சி அழகி போட்டி

    IMG_20230106_124413-1024x477.jpg

    Miss_Kilinochie_01.jpgநாம் வாழ்கின்ற இந்த உலகில் அரசியல் பற்றி மனிதர்கள் அக்கறையில்லாமல் இருப்பதென்னவோ உண்மைதான். உண்ணும் உணவு, உடுத்துகின்ற உடை, சுவாசிக்கும் காற்று எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. அரசியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை. அழகும் அழகுப் போட்டிகளும் கூட அதற்கு விதிவிலக்கு அல்ல. 2022ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் கிளிநொச்சியில் நடந்த அழகுப்போட்டி அது அழகிப் போட்டியா அல்லது அழகிகளை உருவாக்குபவர்களுக்கான போட்டியா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இதன் பின்னுள்ள கருத்தியல் தொடர்பானதே இப்பதிவு.

     

    கிரேக்க பெண் தெய்வங்களுக்கு இடையே அழகுப்போட்டிகள் இடம்பெற்றதாகவும் அந்தப் போட்டிகளில் வெற்றிபெற அத்தெய்வங்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் புராண இதிகாச கதைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் உண்மையான அழகுப்போட்டி ஆண்டு தோறும் நடைபெறும் எதென்ஸ் விழாவில் ஆண்களுக்குத்தான் நடந்துள்ளது. ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இங்கிலாந்தில் ஆங்கிலேய மே தினக் கொண்டாட்டங்களில் அரசியைத் தெரிவு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அமெரிக்க மே தினக் கொண்டாட்டங்களில் இளம் பெண் அழகி ஒருத்தி போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சமூகப் பிரதிநிதியாக்கப்படுவது நடைமுறையாக இருந்து வந்துள்ளது. 1789இல் இளம்பெண்கள் வரிசையாக நின்று அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்கும் முறை உருவானது.

    இந்த அழகுப் போட்டி தொடர்பாக குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பெரும்பாலும் ஆண்களினால் மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்விமர்சனங்கள் பெரும்பாலும் ஆக்கபூர்வமானவையாக இல்லாமல் அப்போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் மீதான விமர்சனங்களாகவே அமைந்தன. இந்த விமர்சனங்களில் ஒன்று தங்களை அழகாக்கி இப்பெண்கள், ஆண்களை ஏமாற்ற முயல்கின்றனர் என்பது. இது தான் 2022இன் மிகப்பெரிய நகைச்சுவையாக அமையும் என்றால் மிகையல்ல. புலம்பெயர்ந்த ஆண்கள் தங்களுடைய அழகை மட்டுமல்ல, வயது, கல்வி, தொழில், தங்களிடம் உள்ள சொத்துக்கள் என்று பலதிலும் ஏமாற்றி தங்கள் மணப்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வது என்பது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகவே அன்று இருந்தது. இப்போது இவர்கள் சொல்லும் பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது கொஞ்சம் ஓவர்தான்.

    இந்த புலம்பெயர்ந்த ஆண்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்த போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் இதற்கு பதிலளிக்கின்ற போது ஒட்டுமொத்தமாக புலம்பெயர்ந்தவர்கள் மீது காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளனர். விமர்சனங்களை முன்வைத்த ஆண்களுக்கு பதிலளித்ததோடு அவர்கள் நிறுத்திக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும்.

    1971இல் கதிர்காமத்தைச் சேர்ந்த அழகுராணிப் போட்டியில் வெற்றிபெற்ற பிரேமாவதி மன்னம்பேரி படுகொலைசெய்யப்பட்டார். ஜேவிபி உறுப்பினராக இருந்த அவர் ஜேவிபி கிளர்ச்சியின் போது இலங்கை பாதுகாப்புப் படையால் நிர்வாணமாக்கப்பட்டு தெருக்களில் கொண்டு திரியப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார்.

    சென் லுயிஸில் 1905இல் பெண் அழகிகளுக்கான போட்டி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டமை தற்போதுள்ள அழகிப் போட்டிகளுக்கு வித்திட்டது. அப்போது 40,000 பேர் இவ்வழகிப் போட்டிக்கு தங்கள் புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தனர். 1921ஆம் ஆண்டு செப்ரம்பரில் அமெரிக்க அழகி அட்லான்டிக் நகரில் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் நீராடும் அழகிப் போட்டி இடம்பெற்றது.

    1951 முதல் உலக அழகிப் போட்டி இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் நடைபெற்ற அழகிப் போட்டி அல்லது அழகு கலைஞர்களுக்கிடையேயான போட்டியும் இந்த உலக அழகுப் போட்டியும் அடிப்படையில் ஒன்றே. இதன் கருத்தியல் தளத்தில் தான் நாம் கவனம் செலுத்தவேண்டுமே அல்லாமல் போர் தின்ற கிளிநொச்சியில் அழகுராணிப் போட்டி அவசியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. வெறும் அடைமொழிகளை வீசி அவ்விளம் பெண்களை குற்றவாளியாக்குவது நியாயமற்ற செயல்.

    ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன அழகு என்பது முக்கியமான அம்சம். ஒவ்வொருவரும் தன்னளவில் தாங்கள் அழகானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வது அவர்களுடைய தனித்துவத்திற்கும் ஆளுமைக்கும் மிகவும் அவசியமானது. அதனால் அவரவர் தங்களை அழகுபடுத்தி வெளிப்படுத்துவது ஆரோக்கியமான விடயமே. அதில் எவ்வித தவறும் கிடையாது. ஆண்களுக்கு அழகு அவசியம் இல்லை என்றால் சிகை அலங்கார நிலையங்கள் எதற்கு?

    ஆனால் இந்த அழகும் அதற்கான போட்டி என்பதும் சிக்கலான ஒன்று. ஆணழகன் போட்டிகள் இருந்தாலும் அவை பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஏனெனில் அது ஆண்களின் அம்சமாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால் மிஸ்வேர்ல்ட், மிஸ் கிளிநொச்சி என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றது. அதற்குக் காரணம் சந்தைப் பொருளாதாரமும் அது ஏற்படுத்திய நுகர்வுக் கலாச்சாரமுமே. பெண்ணியம் சார்ந்த பெண் விடுதலைக்கான அமைப்புகள் இதற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டனர் 1970இல் லண்டன் அல்பேர் ஹோலில் இடம்பெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டிக்குள் நுழைந்த பெண்ணியவாதிகள் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்தனர்.

    2018 இல் இடம்பெற்ற உலக அழகிப் போட்டியை வழங்கிக்கொண்டிருந்த பொப் ஹோப் “இன்றைய இரவைப் பார்க்க இதுவொரு கன்றுகளின் சந்தையாகத் தெரிகின்றது” எனக் குறிப்பிட்டிருந்தார். பிரித்தானியாவில் கன்றுகள் காட்சிப்படுத்தப்பட்டு ஏல விற்பனை செய்யப்படும் முறையிருப்பதன் பின்னணியில் அவர் இக்கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவ்வாறு இந்த உலக அழகிப் போட்டிகளுக்கு எதிரான பல போராட்டங்கள் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வருகின்றது.

    2002 இல் நைஜீரியாவின் அபுஜாவில் நடக்கவிருந்த மிஸ் வேர்லட் போட்டி அதுதொடர்பான சர்ச்சையால் அங்கு நடைபெறவில்லை. முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கணிசமான அளவில் வாழ்கின்ற நைஜீரியவில் மிஸ் வேர்ல்ட் ஏற்பாடு செய்யப்பட்டதுமே வாதப் பிரதிவாதங்கள் இரு மதத்தரிப்பினரிடையேயும் உருவானது. அது ஏற்கனவே முரண்பாடுகளோடு இருந்தோரிடையே மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பின்னணியில் “முகம்மது நபிகள் இன்று இருந்தால் இந்த உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் ஒருவரையே திருமணம் செய்ய விரும்பி இருப்பார்” என்று கிறிஸ்தவ பெண் ஊடகவியலாளர் ஒரு கட்டுரையை எழுதினார். அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் வெடித்த கலவரத்தில் 215 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கட்டுரையாளருக்கு மரண தண்டனை – அறிவிக்கப்பட அவர் தற்போது மேற்கு நாடு ஒன்றில் தற்போதும் தலைமறைவாக வாழ்கின்றார்.

    மீண்டும் நாங்கள் உலக அழகிப் போட்டிக்கு வருவோம்,
    விளையாட்டுப் போட்டிகளை நாங்கள் பார்த்து மகிழ்கின்றோம், குத்துச் சண்டைகளில் யார் வெல்வார்கள் என்று பந்தயம் கட்டுகின்றோம், காளையை அடக்கும் பாட்டிகளை பார்த்து ரசிக்கின்றோம், போட்டிப் பரீட்சைகளில் போட்டி போட்டு கலந்துகொள்கின்றோம் ஆனால் அழகிப் போட்டி மட்டும் ஏன் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது? என்ற கேள்வி நியாயமானதே.

    ஏனைய போட்டிகளுக்கும் அழகுப் போட்டிக்கும் உள்ள பிரதான வேறுபாடு தான் இதற்குக் காரணம். ஏனைய போட்டிகளில் ஒருவரின் பலம், திறமை: எழுத்தாற்றல், பேச்சாற்றல், வரையும் ஆற்றல், ஓடும் ஆற்றல் போன்ற பல்வகைப்பட்ட ஆற்றல்கள், சிந்திக்கும் ஆற்றல் என்ற அளவீடு செய்யக்கூடிய சுட்டிகள் போட்டியின் போது மதிப்பீடு செய்யப்படுகின்றது. இது புறநிலையானது பொருள்வகைப்பட்டது. அதற்கு நீங்கள் பரிவர்த்தனை மதிப்பை ஏற்படுத்த முடியும். அதாவது விலை நிர்ணயம் செய்ய முடியும். உதாரணத்திற்கு சீதனச் சந்தையில் ஓஎல் பெயில் விட்டவருக்கும் பட்டதாரிக்கு இடையே உள்ள சந்தைவிலை – சீதனம் ஒன்றல்ல.

    இதற்கு முற்றிலும் மாறாக அழகு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. அகநிலையானது. அதனை அளவீடு செய்ய முற்படுவதே அடிப்படையில் தவறான அணுகுமுறை. நாங்கள் விரும்புகின்றவர் எங்களுக்கு பேரழகனாகவோ பேரழகியாகவோ தோன்றலாம். ஆனால் எங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு அவ்வாறே தோண்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கறுப்புப் பற்றி வரலாற்றினூடு எங்களுக்கு திணிக்கப்பட்ட தகவல்களால், கறுப்புப் பற்றிய தவறான புரிதலை எங்களை அறியாமலேயே எங்களுக்குள் கொண்டுள்ளோம். அகத்தில் உள்ள இந்தச் சிக்கலை மறைக்க நாங்கள் முகத்தையும் தோலையும் ப்பிளீச் பண்ணி கொஞ்சம் கூடுதலாக வெள்ளையாக்க விரும்புகின்றோம். ஆபிரிக்க பெண்கள் கூட இதனையே செய்ய ஊக்கப்படுத்தப்படுகின்றனர். அழகு என்ற பெயரில்.
    1500களில் இருந்து ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்தும் அதன் பின் நவகாலனித்துவ ஆதிக்கத்தினாலும் வெள்ளைத்தோல் அழகு, பண்பு, அறிவு ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு பார்க்கப்படலாயிற்று. ஐரோப்பிய வெள்ளையினத்தவர்கள் எம்மை ஆண்டதால் வெள்ளை மீது அல்லது கறுமை குறைந்தவர்கள் மீது எமக்கு காதலுருவாவது ஒன்றும் வியப்பில்லை. மேலும் கறுப்பாடு, கறுப்புப் பணம், கறுப்புச் சந்தை என்ற சொல்லாடல்கள் எல்லாம் கறுப்புப் பற்றிய கீழ்நிலைக் கருத்துருவாக்கத்தை எம்மத்தியில் மிக ஆழமாக பதிவு செய்துள்ளது. வெள்ளை தான் அழகு என்ற உணர்வை இவை ஏற்படுத்தி உள்ளது. மிஸ் வேர்ல்ட் போட்டியும் இதனையே பிரதிபலிக்கின்றது. வெள்ளையினத்தினரைக் கொண்ட நாடுகளும் அவர்களை ஒத்தவர்களுமே பெரும்பாலும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவது இதனையே உறுதி செய்கின்றது. ஆய்வுகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

    இவற்றுக்கு அப்பால் இப்போது வெள்ளையினத்வரல்லாதவர்களும் இந்த அழகுப் போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு ஏற்பட்டு இருப்பது ஒன்றும் வெள்ளையரல்லாதோரை அல்லது கறுப்பை அழகாகக் கருதுவதால் அல்ல. தங்கள் ப்பிளீச் பவுடரையும் தாங்கள் அழகென்று கருதுவதை சந்தைப்படுத்தி தங்கள் சந்தையை விரிவாக்கம் செய்யவே. அதனால் தான் இலகுவில் விலைபோகக்கூடிய உலகின் இரண்டாவது பெரிய சந்தையுடைய இந்தியா மிஸ் வேர்ல்ட் போட்டிகளில் ஆறு தடவைகள் வெற்றி பெற்றதன் ரகசியம். உலகின் மிகப்பெரிய சந்தையையுடைய சீனா தன் சந்தையை சர்வதேசத்துக்கு திறந்துவிடாததால் சீனா 2007 இல் ஒரு தடவை மட்டுமே மிஸ்வேர்ல்ட் போட்டியில் வெற்றிபெற்றது.

    உயிருள்ள உணர்வுள்ள ஜீவன்களான பெண்கள் சந்தைப் பொருளாதாரத்தின் விற்பனைப் பண்டமாக மாற்றப்படும் தன்மைதான் இந்த அழகுப் போட்டிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. அழகில்லாத ஆணோ அழகில்லாத பெண்ணோ கிடையாது. படைக்கப்படவும் முடியாது. அழகை அவரவர் தமக்கேற்ப மெருகூட்டுவது அவரவர் உரிமை. ஆனால் அதற்கு போட்டி வைத்து தெரிவு செய்கின்ற போது அது தீவிரமான அரசியலாக மாற்றப்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு பெண்ணின் அழகை அளவீடு செய்வதும் அதன் மூலம் அவளை மதிப்பீடு செய்வதும் இந்த நூற்றாண்டின் கருத்தியல் அவலம் என்றே கருதுகிறேன். அவளின் அழகிற்கு அவள் மட்டுமே நிகர். இதற்கு ஒருபடி மேலே சென்று இப்போது க்கீயூட் பேபி கொன்ரெஸ்ட் வேறு நடத்த ஆரம்பித்துவிட்டது பேஸ்புக். லாபமீட்டலாம் என்றால் என்னவும் செய்யலாம் என்பது பல்தேசிய நிறுவனங்களின் கொள்கை. அதற்கு அவர்கள் பார்பி டோலின் இடுப்பை சிறிதாக்கி அதனையும் செக்ஸியாக்கி விற்பனை செய்கிறார்கள். இப்படி எத்தனை போட்டிகளுக்கு எம் எதிர்கால சந்ததியினர் முகம்கொடுக்க வேண்டி வரும் என்பது பல்தேசிய நிறுவனங்களுக்குத் தான் வெளிச்சம். இதில் கிளிநொச்சி இளம்பெண்கள் என்ன பாவம் செய்தார்கள், நீங்கள் சொல்லம்புகளால் அவர்களைத் தைக்க?

    https://www.thesamnet.co.uk/?tag=கிளிநொச்சி-அழகி-போட்டி

  9. சிறிலங்காவை விட வேறெங்காவது போக முடியுமெனில் அது நல்லது. முதலில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

  10. பாம்பின் கால் பாம்பறியுமோ இல்லையோ  அமெரிக்காவை பற்றி நன் கு அறிந்த ஸ்கொட் றிட்டர் என்ன சொல்கிறார்? 

     

    • Like 1
  11. 2 hours ago, ragaa said:

    டிரம்ப்பை நம்பிறவைகளுக்கு என்னத்தைச் சொன்னாலும் விளங்காது. Mad MAGAs

    நீங்கள் கிணற்று தவளையாகவே இருக்கலாம்.

    • Haha 1
  12. 34 minutes ago, இணையவன் said:

    ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.

     

    37 minutes ago, இணையவன் said:

    ரஸ்யாவின் கை ஓங்கியுள்ளது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ?

    உக்ரைன் கடைசியாக ஏன்  அட்விக்காவை விட்டு பின்வாங்கியது நேட்டோவின்  இவ்வளவு உதவி வழங்கப்பட்டும் என்பதை வைத்து சொல்கிறேன்.
    பிரான்ஸ் படை ஏன் உக்ரேனுக்குள் செல்ல வேண்டும்( மக்ரோனின் குறளி வித்தையாக இருந்தாலும்)

    52 minutes ago, இணையவன் said:

    ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.

          உரிமை கோரியதை வைத்து  எந்த முடிவுக்கும் வர முடியாது. அவர்களை இயக்குபவர்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும். 9/11 தாக்குதலை கண்டு பிடிக்க முடியாதவர்கள் ரஸ்யாவில் நடக்க போகும் தாக்குதலை முன்பே எதிர்வு கூறுகிறார்களாம்.

    57 minutes ago, இணையவன் said:

    பொதுமக்களைத் தாக்கினால் போரின் போக்கு மாறும் என்பதால்தான்  ஆரம்பத்திலிருந்தே ரஸ்யாவுக்குள் உக்ரெய்ன் தாக்குதல் நடத்துவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. ரஸ்யாவுக்குள் சென்று தாக்கும் நீண்டதூர ஏவுகளைகளையும் உக்ரெயினுக்கு வழங்கவில்லை.

    நீண்ட தூரம் சென்று தாக்கும் ட்ரோன் களை கொடுக்கலாமோ?

  13. ISIS ஐ உருவாக்கியவர் ஒபாமா என கூறியவர் டொனால்ட் ட்ரம்ப்

     

    https://www.theguardian.com/us-news/2016/aug/11/donald-trump-calls-barack-obama-the-founder-of-isis

    ISIS  இவ்வளவு காலமும் ரஸ்யாவில் தாக்குதல் செய்யாமல் இப்போ செய்வதன் அவசியம் என்ன?
    உக்ரேனில் ரஸ்யாவின் கை ஓங்கும் போது ரஸ்யாவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த ஏன் மேற்கு நாடுகளின் அடிபொடி ISISஐ ஏவி இருக்க கூடாது. ?இந்த கோணத்தில் ஆராய சிலருக்கு மனம் பிடிக்காது.

    • Like 1
  14. 21 hours ago, பெருமாள் said:

    உலகத்திலே முழு சோம்பேறி இனமென்றால் அது இந்த சிங்கள இனம்தான் அங்கிலேயர் ஆட்சியில் முஸ்லீமை கொன்ற சிங்கள காடையர்களை சிறையில் இருந்து மீட்க்க தமிழன் வேணும் .ரப்பர் பால் எடுக்க தமிழன் வேணும் .தேயிலை வளர்க்க பறிக்க தமிழன் வேணும் அதே தமிழர்களை சர்வதேச அரசியலில் பின்வாங்க வைக்க கதிர்காமர் சுமத்திரன் போன்ற தமிழர்கள் வேணும் உள்நாட்டு ஜேவிபி கலகத்தை அடக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர் வீரம் அடக்க முடியாமல் போன போது 32 நாடுகளின் உதவியுடன்தான் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது ................இந்த சொம்பிஸ் சோம்பேறிகளா கனடாவில் சமபலம் நான் நினைக்கவில்லை இரண்டு குளிர் தாங்க மாட்டார்கள் .

    சாப்பிடுவதற்கும்  IMF வேணும் என்றதை விட்டு விட்டீர்கள்.:)

    • Like 1
    • Haha 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.