Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
 • Posts

  46725
 • Joined

 • Days Won

  33

Posts posted by nunavilan

 1. 55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

  55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

   

  இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

  நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு மாதகால சாதாரண சிறை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 5 வருட காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

  ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
 2. //அணியினர் முடிந்தவரை நன்றாக விளையாடினர். சிறிய தவறுகளால் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது. தோனிக்கு பிறகு நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான இடத்தை பூர்த்தி செய்யக் கூடிய நபர் இன்னும் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை. வரும் தொடர்களில் இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று அந்த குறையும் சரியாகலாம்.'' என்கிறார் பாலாஜி.//

  புதிய வீரர்களுடன் அனுபவமுள்ள வீரர்களையும் சேர்த்து ஒரு குழு அமைக்க முடியாமல் இந்தியா திணறுவது நகைப்புக்கு இடமாக உள்ளது.

  வடக்கு,  தெற்கு என  பிரிவினை,  குழுவின் அரசியல் என்பன இந்திய குழுவின் தோல்விக்கு காரணமாக கருதுகிறேன்.

  • Like 2
 3. படைகள் குவிப்பு… உக்ரைனை ஆக்கிரமிக்கும் ரஷ்யா? அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்?

  உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1 லட்சம் படைவீரர்களை குவித்துள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இது, உக்ரைன் மீது போர் புரிவதற்கான சாத்தியக்கூறுகளை காட்டுவதாக தெரிகிறது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாடு போர்ப்பாதையில் இல்லை என்றும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒரு தவறான நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தடைகளை ஏற்படுத்தியுள்ளன.
  கிழக்கு ஐரோப்பாவில் தனது ராணுவத்தை அதிகரிப்பதன் மூலம், அதன் பிராந்திய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமின்றி குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காக அமெரிக்கா தலைமையிலான வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) மீது குற்றம் சாட்டுகிறார்.
  அமெரிக்க, நேட்டோ மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான தொடர் பேச்சுக்களில், பல பெரிய கோரிக்கைகளை பட்டியலிட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  நேற்று முன்தினம்(ஜனவரி 21) ராஜதந்திரத்தை தக்கவைத்து கொள்ளும் முயற்சியிலும், உக்ரைனில் சாத்தியமான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் முயற்சியிலும், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கனும், ரஷ்ய பிரதிநிதி செர்ஜி லாவ்ரோவும் ஜெனீவாவில் 90 நிமிட சந்திப்பை நடத்தினர். ஆனால், இச்சந்திப்பில் பெரியளவில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. ஆனால், இவ்விவகாரம் குறித்து மீண்டும் பேச திட்டமிட்டுள்ளதாகவும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், புதினுக்கும் இடையில் மற்றொரு உரையாடல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
  முன்னதாக, வியாழன் அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பைடன், “உக்ரைனை ஆக்கிரமிக்க விரும்பினால் ரஷ்யா அதிக விலை கொடுக்க நேரிடும்” என்று எச்சரித்திருந்தார்.
  ரஷ்யா உக்ரைனை அச்சுறுத்தவது ஏன்?
  ஐரோப்பிய நிறுவனங்களுடன், குறிப்பாக நேட்டோவுடன் உக்ரைன் வளர்ந்து வரும் நெருக்கத்தை ரஷ்யா நீண்டகாலமாக எதிர்த்து வருகிறது. ரஷ்யா தனது எல்லையை ஒருபுறம் முன்னாள் சோவியத் குடியரசுடனும், மறுபுறத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பகிர்ந்துகொள்கிறது.
  ரஷ்யா-உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள தற்போதைய ராணுவம், 2014 ஆம் ஆண்டு, உக்ரைனின் தெற்கு கிரிமியன் தீபகற்பத்தை ரஷ்யா இணைத்து, கிழக்கு உக்ரைனின் பெரும்பகுதியைக் கைப்பற்ற முடிந்த பிரிவினைவாதிகளை ஆதரித்ததை நினைவூட்டுகிறது.
  இது ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் நாடு முழுவதும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியதையடுத்து ஏற்பட்டது. மேலும், அப்போதைய பிரபலமற்ற ரஷ்ய சார்பு அதிபர் விக்டர் யானுகோவிச் பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. அவர் புதினால் ஆதரிக்கப்பட்டார்.
  இன்றும் மோதல் தொடரும் வேளையில், 2014 மற்றும் 2015ல் மின்ஸ்க் ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு, கடுமையான காலம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஆனால் கிழக்கு உக்ரைனில், குறிப்பாக தொழில்துறை மையமான டான்பாஸில், கிளர்ச்சியாளர்கள் உக்ரைனின் ராணுவப் படைகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.கடந்த ஏழு ஆண்டுகளில், சுமார் 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
  உக்ரைனின் சுதந்திரத்தை ஏற்க ரஷ்யா முன்வரவில்லை. கடந்தண்டு புதின் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் “ஒரு தேசத்தின்” ஒரு பகுதி என்று குறிப்பிட்டிருந்தார். அதே சமயம், உக்ரைனின் தலைமை “ரஷ்ய எதிர்ப்பு திட்டத்தை” நடத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
  இம்முறை உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரஷ்யா கூறினாலும், கிழக்கு ஐரோப்பாவில் மேற்கு நாடுகளை அதன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய புதின் போர் அச்சுறுத்தலை ஒரு பேரம் பேசும் பொருளாக பயன்படுத்துகிறார். உக்ரைன் முழுவதும் ஆயுதங்களை நிரப்பி பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக மாஸ்கோ குற்றச்சாட்டியுள்ளது.
  கடந்தாண்டு டிசம்பரில், உக்ரைன் போன்ற எந்த முன்னாள் சோவியத் நாடுகளையும் நேட்டோவில் சேர்க்க வேண்டாம் என்றும், கிழக்கு ஐரோப்பாவில் ராணுவ கூட்டணி தனது இருப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் புதின் தெரிவித்திருந்தார்.
  அதாவது, போலந்து, லாட்வியா, எஸ்டோனியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளில் இருந்து நேட்டோ நாடுகள் தனது அனைத்து போர் பிரிவுகளையும் வெளியேற்ற வேண்டும் என்பதே பொருள் ஆகும்.
  ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு அமெரிக்காவின் பதில் என்ன?
  அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் புதினின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்தன. அத்தகைய கோரிக்கையை அங்கீகரிப்பது நேட்டோவின் ஸ்தாபக உடன்படிக்கைக்கு எதிரானது ஆகும். வடக்கு அட்லாண்டிக் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உறுப்பினர் கடமைகளை நிறைவேற்றவும் உதவும் எந்தவொரு விருப்பமுள்ள ஐரோப்பிய நாட்டையும் அமைப்பு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
  ஆனால்,இவ்விவகாரத்தில் ரஷ்யா சமாதான போக்கை தொடரவில்லை.அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் எழுத்துப்பூர்வ பதிலை விரைவில் வழங்குமாறு கேட்டுக்கொண்டது. அதன் பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.
  russia-ukra-300x203.jpg
  இதற்கிடையில், ரஷ்யா விரைவில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று பைடன் நம்புகிறார்.அப்படி நடந்தால், மாஸ்கோ அதன் நடவடிக்கைகளுக்கு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார்.
  உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா புதிய ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அச்சுறுத்தியுள்ளன.
  எல்லையில் குவித்துள்ள படைகள் மூலம் செய்யக்கூடியதை ரஷ்யா செய்துவிட்டால், அது பேரழிவாக இருக்கும் என பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
  ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பது இது முதல் முறையல்ல. கிரிமியாவை இணைத்ததைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு முதல் அவ்வாறு செய்து வருகிறது.
  அட்லாண்டிக் கவுன்சிலின் ஆய்வின்படி, அமெரிக்க நடவடிக்கையால் ரஷ்ய பொருளாதாரத்தில் ஆண்டுதோறும் சுமார் 50 பில்லியன் டாலர்கள் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
  ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால், உக்ரைனில் புதின் ஏற்படுத்தும் பிரச்சனைகளை தடுத்திட முடியவில்லை. சில ஆய்வாளர்கள் ரஷ்யாவின் பல பில்லியன் டாலர் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் திட்டத்தை குறிவைப்பதே சிறந்தது என கூறுகின்றனர்.
  உக்ரைன் மற்றும் போலந்து போன்ற நாடுகளை எதிர்த்து குரல் கொடுக்கும் நாடுகளை கடந்து செல்லும் இந்த குழாய் பாரிய புவிசார் அரசியல் விவாதத்தின் மையமாக உள்ளது. ஜெர்மனியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டால் ரஷ்யாவுக்கு பில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  தி நியூயார்க் டைம்ஸ் படி, கடந்த நிதியாண்டில் $450 மில்லியனுடன் கூடுதலாக இந்த வாரம் உக்ரைனுக்கு தற்காப்பு ராணுவ உதவியாக $200 மில்லியனுக்கு பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  சமீபத்திய வாரங்களில், ரஷ்யாவின் முன்னேற்றங்களை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் கிழக்கு ஐரோப்பாவில் ராணுவத்தை பலப்படுத்திடம் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
  உதாரணமாக, மத்தியதரைக் கடல் மற்றும் கருங்கடலில் உள்ள நேட்டோவின் கடற்படைப் படைகளில் சேர ஸ்பெயின் தனது போர்க்கப்பல்களை அனுப்புவதாகவும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் ருமேனியாவுக்கு படைகளை அனுப்ப முன்வந்துள்ளதாகவும், இங்கிலாந்து தரப்பிலும் படைகள் மற்றும் ஆயுதங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
  வெள்ளியன்று பிளிங்கன் மற்றும் லாவ்ரோவ் பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. பிரச்சனையை தீர்க மீண்டும் சந்தித்து பேச முடிவெடுத்துள்ளனர்.
  அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்கத் தயாராக இல்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்திய பிளிங்கன், ரஷ்யாவின் முன்மொழிவுகளுக்கு அமெரிக்கா எழுத்துப்பூர்வ பதிலை அடுத்த வாரம் அளிக்கும் என்றும், அதன் பிறகு மற்றொரு சந்திப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
  tamil.indianexpress.

  Thinakkural.lk

 4. அரசாங்கம் விழ முன் நாடு விழுந்து விட்டது!

   

   
   
  நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஊழல் எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இன்று முன் சாட்சியம் அளித்து விட்டு, ஊடகங்களிடம் உரையாற்றிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது, வழமையாக அரசாங்கங்கள் பதவிக்கு வரும். பின்னர் அது விழும். அதையடுத்து புதிய அரசாங்கம் பதவிக்கு வரும். அதுவும் விழும். இன்னொரு அரசாங்கம் வரும். இதுவே வழமை. ஆனால், இன்று அரசாங்கம் விழுவதற்கு முன் நாடு விழுந்து விட்டது. அண்டை நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி கைமாற்று வாங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பெருங்கடன்களின் மீள் செலுத்தும் தொகையை செலுத்தி காலத்தை ஓட்டும் நிலைமைக்கு நாடு விழுந்து விட்டது.

  ஆகவே, புதிதாக கட்டி எழுப்ப வேண்டியது புதிய அரசாங்கம் என்பதை விட, புதிய நாடு என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே இன்று இந்நாட்டின் அரச எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் கரங்கோர்க்க வேண்டும். அதற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும், 43ம் படையணி தலைவர் பாடலி சம்பிக்க ரணவக்கவும் கரங்கோர்க்க வேண்டும்.

  “இல்லை, இல்லை” என்ற கூக்குரலை விட இந்நாட்டில் இன்று எதுவும் இல்லை என்றாகி விட்டது. எண்ணெய் இல்லை. எரிவாயு இல்லை. பால்மா இல்லை. உரம் இல்லை. மருந்துகள் இல்லை. எதுவும் இல்லை. சொல்லப்போனால் இந்நாட்டில் இன்று அரசாங்கமே இல்லை.

  உரம் இல்லை என்று கையை விரித்து மன்றாடும் விவசாயிகளிடம் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, “உங்கள் நிலங்களில் நெல் விளைவிக்க முடியாவிட்டால், பாசிபயறு விளைவியுங்கள்” என்று கூறுகிறார். இது, “பாண் இல்லாவிட்டால், கேக் சாப்பிடுங்கள்” என்று சொன்ன பிரான்ஸ் நாட்டு கொடுங்கோல் அரசியை ஞாபகப்படுத்துகின்றது.

  வெள்ளைபூண்டு ஊழலை கண்டு பிடித்து, அம்பலப்படுத்திய முன்னாள் நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் துசான் குணவர்தன, வெளிநாடு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார். இது என்ன கோலம்? குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி திரிவது ஒருபுறம் இருக்க, குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் நடவடிக்கையை எடுத்த நேர்மையான அதிகாரிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

  இன்று இங்கே “ஊழல் எதிர்ப்பு குழு என்று ஏன் முன்னாள் அரசாங்க பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்கள்” என என்னை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். ஊழல் செய்தவர்கள் மீதான வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் மூலம் வாபஸ் வாங்கி விட்ட நிலையில், ஊழல் செய்தவர்கள் எல்லாம் சுதந்திரமாக திரியும் போது, ஏன் நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்கள் என இவர்கள் என்னை கேட்கிறார்கள்.

  நான் மனோ கணேசன். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவன். எங்கள் கூட்டணி, எவருக்கும் எடுபிடி வேலை செய்யாத, ஒரு பலமான, தைரியமுள்ள சுதந்திரமான கட்சி. இது மக்களின் கட்சி. எம்மை எவரும் பயமுறுத்த முடியாது. நாங்கள் பயந்து ஒதுங்க மாட்டோம். அதை இன்னமும் பலமாக நாம் வளர்ப்போம். அது ஒன்றே எமது பலம்.
 5. அமைச்சர் வியாழேந்திரனின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை செய்ய கோரிக்கை

  அமைச்சர் வியாழேந்திரனின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை செய்ய கோரிக்கை

   

  கொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் கொலை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் கையடக்க தொலைபேசி அழைப்பு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னாள் சுட்டுக்கொல்லப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தர படுகொலை தொடர்பில் நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்தவழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

  இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி என். கமலதாஸ் ஆஜராகியிருந்தனர். குறித்த வழக்கானது நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

  சம்பவம் நடைபெற்ற வேளையில் இராஜாங்க அமைச்சர் தன்னுடைய வீட்டிலிருந்தார் என்றும் அதன் பின்னரே அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார் என்ற தகவலும் இருக்கும் காரணத்தினால் இரண்டு விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என்று நீதிவானிடம் கோரியிருக்கின்றோம்.

  இராஜாங்க அமைச்சர் எப்போது வீட்டைவிட்டு வெளியேறினார் என்பதை அறிவதற்காக வீதிகளில் உள்ள சிசிரிவி காட்சிகள் விசாரணை செய்யப்பட வேண்டும்.

  குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முறையாக முன்னெடுக்காத காரணத்தினால் குறித்த வழக்கானது கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீதிவான் தெரிவித்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

  சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முதன் முதலில் தொடர்பினை ஏற்படுத்திய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அந்த அழைப்பை எடுத்த இடம் மற்றும் வழியில் இருந்த சிசிரிவி காணொளிகளை உடன் பரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கை சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

  குறித்த வழக்கானது எதிர்வரும் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
   

  -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

  அமைச்சர் வியாழேந்திரனின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை செய்ய கோரிக்கை (adaderana.lk)

 6.  

  மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த நீங்கள் தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம்

   

   

 7. ஒரு பின்னூட்டம்

  நாட்டில் ஐந்து தொழினுட்ப பூங்காக்கள் நிறுவப்படவுள்ளன.
  அதில் மட்டக்களப்புக்கும் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை பெரிய விடயம்.
  01.மட்டக்களப்பு மாவட்ட தொழினுட்ப பூங்கா. ( TECHNO PARK)
  02. குருணாகல் மாவட்ட தொழினுட்ப பூங்கா. ( TECHNO PARK)
  03. காலி மாவட்ட தொழினுட்ப பூங்கா. ( TECHNO PARK)
  04. கண்டி மாவட்ட தொழினுட்ப பூங்கா ( TECHNO PARK)
  05. அனுராதபுர மாவட்ட தொழினுட்ப பூங்கா. ( TECHNO PARK)
  குறித்த தொழினுட்ப பூங்காத் திட்டத்தில் முழுக்க முழுக்க தற்போதைய அதிக இலாபமீட்டும் ஏற்றுமதித் தொழிலான ஆடைத் தொழிற்சாலைகளே அதிகம் நிறுவப்படவுள்ளன.
  அத்தோடு நூல்களை இறக்குமதி செய்து துணி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் வரலாம்.
  நாட்டின் சுற்றுச்சூழல் அதிகாரசபையின் அனுமதிகளுடன்தான் நாட்டில் எந்தத் தொழிற்சாலையும் அமைக்கப்படும்.
  நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இங்குள்ள சூழலியலாளர்கள், புத்திஜீவிகள் கண்டுகொள்ளாமல் இருக்கப்போவதில்லை.
  கடல் வளத்தைப் பாதிக்க கூடிய வகையில் தொழிற்சாலை ஒன்று அமைக்க யாரும் அனுமதிக்கமாட்டார்கள்.
  குறித்த தொழிற்சாலைத் திட்டம் நீங்கள் கற்பனையில் கூறுவது போல தென்பகுதிக்குச் சென்று எதிர்ப்பு காரணமாக இங்கு வரவில்லை.
  இப்போதுதான் புதிதாக ஆரம்பிக்கப்படுகிறது.
  மட்டக்களப்பில் தற்போது ஒரு ஆடைத்தொழிற்சாலை உள்ளது.
  மட்டக்களப்பில் சுமார் 4000 குடும்பங்கள் அந்த ஆடைத் தொழிற்சாலையால் சீவிக்கின்றனர்.
  அதற்கான மூலப்பொருட்கள் அனைத்தும் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டு உற்பத்திகள் யாவும் வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகின்றன.
  தற்போதைய நிலையில் காகித ஆலையை புனரமைப்பு, அரசி ஆலையைப் புனரமைப்புகளை விட நாட்டுக்கு இலாபம் தரக்கூடிய உற்பத்திகளுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்.
  காகித உற்பத்தியை விட கொள்வனவு செய்வது இலாபமாக உள்ளதாம்.
  புன்னைக்குடாவில் சிங்கள மக்கள் நீண்ட காலமாக வாழ்கின்றனர்.
  புதிதாக குடியேற்றப்படவில்லை.
  அதுபோக அந்தப பகுதி காணிகள் தொடர்பான இன்னுமொரு பிரச்சனையும் உண்டு.
  ஊடகவியலாளரான நீங்கள் விரும்பினால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.
  மறுபக்கத்தையும் சொல்கிறேன்.
  முடிந்தால் அதைச் செய்தியாக்குங்கள்.

   

 8.  

  தமிழர் தாயக் கடற்கரையில் இரவோடு இரவாக பதிக்கப்படும் பாரிய மர்ம குழாய்கள்!! களத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!!

  மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பாரிய இரும்புக் குழாய்கள் கொண்டுவரப்பட்டு நிலத்தினுள் பதிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  எதற்காக அந்தக் குழாய்கள் கடற்கரையில் பதிக்கப்பட்டு வருகின்றன என்ற அந்தப் பிரதேச வாழ் மக்களின் கேள்விக்கு சரியான பதில் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

  பதிலைத் தேடுகின்ற ஒரு முயற்சியில் நாம் இறங்கிய போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

  தமிழ் மக்களின் வாழ்வியல் மாத்திரமல்ல, அவர்களது எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய பல சந்தேகங்களையும், கேள்விகளையும், எச்சரிக்கைகளையும் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

  https://ibctamil.com/article/secrets-behind-the-iron-pipes-laying-in-the-beach-1642443375?fbclid=IwAR3aHTI4Ou0a2LH5XY3GWgvLT0DA9aqP4KaDv2pA0yVXKHEwIU352tFUlhY

 9.  

  இங்கிலாந்தில் ஒரு குட்டி யாழ்ப்பாணம்; உத்தியோக பூர்வ அறிவிப்பு!

   
   
   
   
  uk-jaffna.jpg?v=1642925851
   

  தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேற்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

   
  22-61ebf479b4619.webp
  தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளை பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த டிசம்பர் (2021) மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியாவில் தமிழர் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியது.

  அதன் பிரகாரம் பிரித்தானியாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை திங்கள் பிரித்தானிய பாரளுமன்றம் உட்பட பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.22-61ebf47a2efaf.webp

  இரு நகரங்கள் இணைவுத்திட்ட அடிப்படையில் லண்டனின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரம் இலங்கையின் யாழ்ப்பாண நகரை கடந்த 2016 ஆம் ஆண்டு தனது இரட்டையராக ஏற்றுக்கொண்டது.

  இதற்கான ஒப்பந்தத்தை அப்போதைய வட மாகாண முதலமைச்சாராக இருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மேற்கொண்டிருந்தார்.

  இந்நிலையிலேயே லண்டன் கிங்ஸ்ரன் நகர பெயர் பலகையுடன் யாழ்ப்பாணத்தின் பெயரையும் இணைத்து ‘Twinned with Jaffna‘ என்ற பெயர் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.22-61ebf47a91689.webp

  தமிழர்களின் மங்கள வாத்தியம் நாதஸ்வரம் மற்றும் பறை வாத்திய இசைகள் முழங்கள் வண்ண நிற பலூன்கள் வானில் பறக்கவிட பிர்த்தானிய பாராளுமன்ற உறுப்பிடன் எட் டேவி குறித்த பெயர் பலகையினை திறந்து வைத்தார்.

  பின்னர் தமிழர் கலைகளான குதிரையாட்டம் கோலாட்டம் என மங்கள வாத்திய இசைகளுடன் விழா நடை பெறும் மண்டபம் நோக்கி கலாச்சார ஊர்வலம் நடைபெற்றதுடன் அங்கு பொங்கல் விழாவும் தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உட்பட புலம் பெயர் தமிழர்கள் மற்றும் பிற இனத்தவர்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.22-61ebf47991376.webp

  இரு நகரங்கள் இணைவுத்திட்ட அடிப்படையில் லண்டனின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரம் இலங்கையின் யாழ்ப்பாண நகரை கடந்த 2016 ஆம் ஆண்டு தனது இரட்டையராக ஏற்றுக்கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தை அப்போதைய வட மாகாண முதலமைச்சாராக இருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மேற்கொண்டிருந்தார்.

  இந்நிலையிலேயே லண்டன் கிங்ஸ்ரன் நகர பெயர் பலகையுடன் யாழ்ப்பாணத்தின் பெயரையும் இணைத்து ‘Twinned with Jaffna‘ என்ற பெயர் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

  தமிழர்களின் மங்கள வாத்தியம் நாதஸ்வரம் மற்றும் பறை வாத்திய இசைகள் முழங்கள் வண்ண நிற பலூன்கள் வானில் பறக்கவிட பிர்த்தானிய பாராளுமன்ற உறுப்பிடன் எட் டேவி குறித்த பெயர் பலகையினை திறந்து வைத்தார்.

  பின்னர் தமிழர் கலைகளான குதிரையாட்டம் கோலாட்டம் என மங்கள வாத்திய இசைகளுடன் விழா நடை பெறும் மண்டபம் நோக்கி கலாச்சார ஊர்வலம் நடைபெற்றதுடன் அங்கு பொங்கல் விழாவும் தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

  இதில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உட்பட புலம் பெயர் தமிழர்கள் மற்றும் பிற இனத்தவர்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

  https://tamilseithi.com/2022/01/23/இங்கிலாந்தில்-ஒரு-குட்டி/?fbclid=IwAR2uwwB_u_qWded6pMyL92wf6vp1VnHB6KgQdkXBo-u2OIDdJXggrzoHIRk

  • Like 1
 10. இலங்கைக்கு ரூ.18,000 கோடி கடன்: இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்! : டாக்டர் ராமதாஸ் பட்டியல்

   
   
   
  சென்னை
   
  இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்திய அரசு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பட்டியலிட்டு உள்ளார்.
   
  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
  “வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக ரூ.18,090 கோடி கடன் வசதியை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் இம்முடிவு ராஜதந்திர நடவடிக்கை என்றாலும் கூட, இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இதை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
   
  சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, இப்போது கிட்டத்தட்ட திவால் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட பணம் இல்லாமல் தவிக்கும் இலங்கை அரசு, இந்தியாவிடம் கடனுதவியை கோரியது. இலங்கை நிதியமைச்சரும், அதிபர் கோத்தபாயா ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே டெல்லிக்கு வந்து கடனுதவி கோரியதைத் தொடர்ந்து ரூ.18,090 கோடி மதிப்பிலான கடன் வசதித் திட்டத்தை இலங்கைக்கு இந்தியா அறிவித்திருக்கிறது. இது தொடக்கம்தான். வருங்காலத்தில் இலங்கைக்கு இன்னும் கூடுதலான கடனை இந்தியா வழங்கும்.
  சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டிருந்த இலங்கை அரசை இந்தியாவின் பக்கம் திருப்புவதற்கான ராஜதந்திர நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. ஆனால், கச்சத்தீவு உள்ளிட்ட நிலப்பரப்பையும், கோடிக்கணக்கில் நிதியுதவியையும் பெற்றுக் கொண்டு, பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கை அரசு, இம்முறையாவது நமது உதவியை பெற்றுக் கொண்டு ஆதரவாக இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மாறாக, ஈழத்தமிழர்கள் தான் இந்தியாவுக்கு எல்லா தருணங்களிலும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்; இனிவரும் காலங்களிலும் ஆதரவாக இருப்பர். அதனால்தான் அவர்களை வளைக்கும் முயற்சியில் சீன அரசு அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகிறது.
  இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த இந்த அம்சத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையை சீனாவிடம் இருந்து பிரிக்கும் நோக்குடன் கடனுதவி வழங்கும் அதே நேரத்தில், இந்தியாவுக்கு ஆதரவான இலங்கைத் தமிழர்களை அரசியல்ரீதியாக வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிடம் தொடர்ந்து கடன்களையும், பிற உதவிகளையும் வாங்கிக் குவிக்கும் இலங்கை அரசு, 1987-ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 13-ஆவது திருத்தத்தின்படி, இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 35 ஆண்டுகள் ஆகியும் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் எட்டாக்கனியாகவே உள்ளது.
  இலங்கை போரின்போதும், போருக்குப் பிறகும் இலங்கைத் தமிழர்களுக்கு 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட கூடுதலான அதிகாரங்களையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ராஜபக்சே சகோதரர்கள் உறுதியளித்தனர். ஆனால், அதன்பின் 13 ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதிகள் வெற்று வார்த்தைகளாகவே உள்ளன. இப்போதும் ராஜபக்சே சகோதரர்கள்தான் இலங்கை அதிபர், பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகிக்கிறார்கள் என்றாலும் கூட, ஒரு காலத்தில் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை.
  SEA-FISHERMEN-BOAT-1-300x150.jpg
  இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அநீதிகளை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது. அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை அண்டை நாட்டின் விவகாரம் என்று கூறி இந்தியா விலகி நிற்க முடியாது. ஏனெனில், இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதற்கான 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது இந்தியா – இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது. அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய இந்திய அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
  உலகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கவும், இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டித்து, இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தரவும் இந்தியாவைத் தான் நம்பியிருக்கின்றனர். அந்த நம்பிக்கைக்கு இந்தியா துரோகம் செய்து விடக் கூடாது; இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டிய கடமையிலிருந்து இந்தியா விலகி விடக் கூடாது.
  எனவே, இலங்கைக்கு முதற்கட்டமாக ரூ.18,090 கோடி கடன் வசதி அறிவித்துள்ள இந்திய அரசு, அதற்கான முதன்மை நிபந்தனையாக இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படியான அரசியல் அதிகாரங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும்; போர்க்குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும்படியும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தையும், நீதியையும் வென்றெடுத்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”  இவ்வாறு அவர் கூறி உள்ளார்

  https://thinakkural.lk/article/161842

 11. குடும்பம், பங்காளிகளை பாதுகாக்கும் அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை – சஜித்

   

   

   
  ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலானது குடும்பம்,பங்காளிகளை பாதுகாக்கும் அரசியலன்றி நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் அரசியலாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
  18 இலட்சம் வரையான நெற் பயிர் செய்கையாளர்களையும் பெருந்தோட்ட பயிர் செய்கையாளர்களையும் அரசாங்கம் பாதாளத்திற்கு தள்ளியுள்ளதாகவும் தற்போது உரம்,சமையல் எரிவாயு,சீனி,அரிசி போன்றவை மாத்திரமின்றி முழு அரசாங்கமும் தர அற்றதாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  272438412_481461980006706_67145663885036 272536572_481462080006696_65409511757449 272394054_481461996673371_88545251227788 272409584_481462050006699_37560070419369
  ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் இயங்கும் ஐக்கிய இளைஞர் சக்தியின் கேகாலை மாவட்ட மாநாடு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.
  அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
  இளைஞர்களை கல்வி,அரசியல்,பொருளாதார,சுகாதார,கலாச்சார, மற்றும் மார்க்க ரீதியாக ஊக்குவிப்பதே ஐக்கிய இளைஞர் சக்தியினுடைய கொள்கையின் நோக்கமாகும் என கூறிய எதிர்க்கட்சி தலைவர், என்னுடைய ஆட்சியின் கீழ் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஆலோசனை சபையை இளைஞர்களை மையமாக கொண்டு ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
  எவராயினும் நாட்டு மக்களின் பணத்தையோ அல்லது அரச உடைமைகளையோ மோசடி செய்திருப்பின் அவர்களை நிபந்தனைகள் எதுவுமின்றி சட்டத்தின் முன் நிறுத்தி,தண்டனை வழங்குவது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கொள்கையாகும் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர், குறித்த பணங்களை பெற்று உடனடியாக மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும் என்றும் கூறினார்.
  தமது வயிற்றையும் பொக்கெட்டுகளையும் நிரப்புவதற்காக அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறிய அவர்,அது எதிர்கால அரசாங்கத்தின் நிலையான கொள்கை என்றும் குறிப்பிட்டார்.
  அன்று ஜே.ஆர்,பிரேமதாச,லலித், காமினி உள்ளிட்ட அரசியல் செயற்திறன் மிக்க ஞானிகள் அதற்கு முன்பு இருந்த தூர நோக்கற்ற ஏழாண்டு கால ஆட்சியின் ஊடாக படு மோசமாக சீரழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்புவதற்காக பாரிய புரட்சியை முன்னெடுத்ததாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அந்த யாதார்த்தபூர்வமான வேலைத்திட்டத்தை மனதில் நினைத்து, வெறும் வார்த்தைகள்,பொய் வாக்குறுதிகளுக்கு பதிலாக யதார்த்த வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை கட்டியெழுப்பும் எதிர்கால வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
  இந்நாட்டின் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பாக தான் விசேட அவதானம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இளைஞர்களுக்காக விசேட கொள்கை பிரகடணம் வெளியிட்டு எதிர்கால இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டத்தை சான்றுப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  https://thinakkural.lk/article/162207

 12. கட்சியை அபகரிக்கச் சதி; ஆனந்தசங்கரி

  தமிழர் விடுதலைக் கூட்டணியினை அபகரிக்க ஒரு குழுவினர் தந்திரமாக செயற்பட்டுவருவதாகவும் அவர்களை கட்சியின் ஆதரவாளர்களும் மக்களும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
  தமிழர் விடுதலைக் கூட்டணி பொதுக்குழு மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
  Anandasangaree.jpg
  தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க கட்சி. இதனை பொய்களை வாரி வழங்கும் ஒரு குழுவினர் தந்திரமாக அபகரிக்கத் திட்டமிட்டு என்மேல் அவதூறு சொல்லி என்னை அவமானப்படுத்தி கட்சி ஆவணங்களையும், அலுவலகத்தையும் அபகரிக்கத்திட்டமிட்டதோடல்லாமல், 24.01.2022 அன்று நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும் 29.01.2022 அன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நியமனங்களை வழங்க இருப்பதாகவும் அறிகிறேன். இதில் கலந்துகொள்வது சட்டவிரோதமான செயலாகும். ஆதலால் தயவு செய்து சட்டவிரோதமான இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதீர்கள்.
  இந்த மோசடிக்கார்களுக்கெதிராக எனது சட்டத்தரணி மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் இந்த மோசடிக்காரர்களை மக்கள் நம்ம வேண்டாம் என்றும், அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அனைத்து ஆதரவாளர்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  https://thinakkural.lk/article/162213

 13. இலங்கை இந்தியாவிற்கு ஒரு மூலோபாய அச்சுறுத்தல் இல்லை –நாங்கள் சீனா பக்கம் சாய்கின்றோம் என்பது உண்மையில்லை – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

   

   

   
  இந்தியாவிற்கு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயனத் கொலம்பகே அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை சீனாவின் பக்கம் சாய்கின்றது என்ற விமர்சங்களை நிராகரித்துள்ளார்.
  Adm.Dr_.Jayanath-Colombage-August-2020-3
  பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
  இலங்கை வரலாறு முழுவதும் சமமான உறவுகளை பேணிவந்துள்ளதுடன் நாங்கள் அதன் மூலம் நன்மையடைந்துள்ளோம்.
  நாங்கள் முக்கியமான தருணங்களில் சில துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளோம்- உதாரணத்திற்கு சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை மீள ஏற்படுத்துதல்- இரப்பர் அரிசி உடன்படிக்கையில் கைசாத்திட்டமை-கச்சதீவை மீளப்பெற்றமை போன்ற நடவடிக்கைகள் இதற்கான உதாரணங்களாகும்.
  எங்கள் வெளிவிவகார அமைச்சர் தனது நிபுணத்துவத்தை மேற்கு கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளுடனான உறவுகளை பேணுவதில் மிகச்சிறந்த சிறந்த விதத்தில் செயற்பட்டுள்ளார்.
  நடுநிலைமையை பேணுவதும் அதிகார போட்டியில் சிக்காமலிருப்பதுமே எங்கள் வெளிவிவகார கொள்கையின் முக்கிய உத்தரவு.
  நாங்கள் எந்த பக்கமும் சாய்வதில்லை-நாங்கள் அனைவரினதும் நண்பர்கள் அனைத்து சிறந்த விடயங்களிற்கும் நாங்கள் ஆதரவு வழங்குகின்றோம்.
  ஏனைய நாடுகளிற்கு இலங்கை தொடர்பான புவிசார் அரசியல் நோக்கங்கள் உள்ளன.
  இந்தியப்பெருங்கடலின் இயக்கவியலை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்,யாரையும்; பகைத்துக்கொள்ள கூடாது.
  எங்கள் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான எங்கள் முக்கிய கவனத்திற்குரிய விடயம் அனைவருடனும் ஈடுபாடுகளை கொண்டிருத்தலாகும்.
  ஏற்கனவே ஐரோப்;பிய ஒன்றிய சீன ஹங்கேரி பிரிட்டன் அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
  இந்தியாவின் அளவையும் முக்கியத்துவத்தையும் கருத்தில்கொள்ளும் போது அந்த நாட்டிற்கு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை.
  இலங்கையை இந்தியாவிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கான தளமாக பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பது குறித்து ஜனாரிபதி மிகவும் உறுதியாக உள்ளார்.
  இது எங்கள் அயல் – எங்கள் ஸ்திரமானதாக இல்லையென்றால் நாங்களும் பிரச்சினைகளை எதிர்கொள்ளநேரிடும்.
  கேள்வி- அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை சீனா பக்கம் சாய்கின்றது என தெரிவிக்கின்ற ஆய்வாளர்கள் சீனாவை நம்பியிருப்பதை விமர்சிக்கின்றார்களே?
  பதில்-நாங்கள் சீனாவுடன் மாத்திரம் ஈடுபாட்டை கொண்டிருக்கவில்லை,எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா எங்களிற்கு இன்னுமொரு500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.பங்களாதேஸ் கூட நாணயபரிமாற்றத்திற்கு இணங்கியுள்ளது.நாங்கள் எங்கள் நண்பர்களை ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
  பெருந்தொற்று காரணமாக உருவாகியுள்ள முன்னொருபோதும இல்லாத நிலைமை இது .
  வருடத்திற்கு 4.5பில்லியன் டொலர்களை பெற்றுத்தந்த -மூன்று பி;ல்லியன் மக்களிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கிய சுற்றுலாத்துறை முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.
  இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு இது பெரும் பாதிப்பாகும். ஆனால் சுற்றுலாத்துறை தற்போது மீண்டும் உயிர்பெறதொடங்கியுள்ளது.
  ஆனால் நாங்கள் எங்கள் நண்பர்களிடம் தங்கியிருக்கும் நிலையை தவிர்த்துக்கொள்ளவேண்டும் -எங்கள் ஏற்றுமதி வருமானங்கள் மீள கிடைக்க தொடங்கியுள்ளமை நல்ல அறிகுறியாகும்.
  புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கின்ற வெளிநாட்டு வருமானம் மெல்ல மெல்ல அதிகரிக்கின்றது.நாங்கள் எங்கள் கையிருப்பை கட்டியெழுப்பவேண்டும்.
  கடந்த 73 வருடங்களாக எங்கள் பொருளாதார கொள்கையில் ஏதோ தவறு இடம்பெற்றிருக்கின்றது.பல பிரச்சினைகள் ஒன்றுசேர்ந்து தற்போதைய நெருக்கடியை உருவாக்கியுள்ளன.
  நாங்கள் உற்பத்திகளை அதிகரிக்கவேண்டும்,வர்த்தகங்களை கவரவேண்டும் – அதிகாரிகள் மட்ட தலையீடுகளை நீக்கவேண்டும்.
  கொழும்பு துறைமுகநகரம் சிறந்த உதாரணம்,வர்த்தக நடவடிக்கைகளை இலகுவாக முன்னெடுப்பதற்கு அதிகாரிகள் மட்ட தலையீடுகளை தவிர்ப்பதற்கு அங்கு விசேட சட்டங்கள் உள்ளன.
  ஆகவே நாங்கள் சீனா பக்கம் சாய்கின்றோம் என்பதில் உண்மையில்லை – எங்களிற்கு அதிகளவு தெரிவுகள் இல்லை.
  சர்வதேச சமூகம் எங்களிற்கு திட்டங்கள் முதலீடுகள் தொடர்பில் அதிகளவு தெரிவுகளை வழங்கவேண்டும் .

  https://thinakkural.lk/article/162189

 14. விடுதலைப்புலிகள் தற்போது ஆட்டிலறிகளையும் தற்கொலை குண்டுதாக்குதலையும் பயன்படுத்துவதில்லை- பிரச்சாரமும் பரப்புரையுமே அவர்களின் ஆயுதங்கள் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

   

   

   
  விடுதலைப்புலிகள் தற்போது தற்கொலை குண்டுகளை பயன்படுத்துவதில்லை – பரப்புரையும் பிரச்சாரங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளுமே தற்போது அவர்களின் ஆயுதம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே எனினும் விடுதலைப்புலிகளின் ஈழக்கொள்கை மாறவில்லை என குறிப்பிட்டுள்ளார்
  பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

  ஆனால் இலங்கையர்களை விசாரணை செய்வற்கான வெளிநாட்டு பொறிமுறைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
  Adm.Dr_.Jayanath-Colombage-August-2020-3
  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டம் குறித்த அறிக்கை எவ்வாறானதாக காணப்படும் என்பது குறித்த உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
  பதில்-
  நாங்கள் மனித உரிமைகளை மதிக்கின்றோம் மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்ட போதிலும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு.
  எப்பிஐ 2008 இல் அறிவித்தபடி இலங்கை உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத இயக்கத்தை எதிர்த்துப்போராடியது.
  மீறல்கள் – பிரச்சினைகள் இருந்தால் இலங்கை உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் இலங்கை அதற்கு தீர்வை காண்கின்றது.
  விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர்.
  அவர்களது ஆயுதங்கள் தற்போது தற்கொலை குண்டுகளும் ஆட்டிலறிகளும் இல்லை மாறாக பரப்புரை நீதிமன்ற நடவடிகைகள் -பிரச்சாரமே தற்போது அவர்களின் ஆயுதங்கள் .
  ஆனால் அவர்களின் கொள்கை மாறவில்லை- தமிழீழம் என்ற தனிநாடு;.
  குறிப்பிடத்தக்க அளவு புலம்பெயர்தமிழர்கள் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை முன்னெடுப்பதால் – வாக்குகளை பெறுவதற்காக அவர்களிற்கு ஆதரவளிக்கும்- தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ளவர்களின் ஆதரவை அவர்களால் பெறமுடிகின்றது.
  மனித உரிமைகளை சில குழுக்களும் நாடுகளும் துஸ்பிரயோகம் செய்கின்றன என நாங்கள் கருதுகின்றோம் நாங்கள் கொள்கைகளை ஐநாவின் பிரகடனத்தை ஐநாவை நாங்கள் மதிக்கின்றோம்.
  ஆனால் இலங்கையர்களை விசாரணை செய்வற்கான வெளிநாட்டு பொறிமுறைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
  மனித உரிமை ஆணையாளர் தன்னிடம் 120,000 ஆதாரங்கள் உள்ளன என தெரிவிக்கின்றார்.
  அந்த ஆதாரங்கள் என்ன? ஆதாரங்கள் என்னவென தெரிவிக்காமல் குற்றம்சாட்டுவது நீதியா?
  விடுதலைப்புலிகள் இயக்கத்தின் 16 உறுப்பினர்களிற்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
  ஏனையவர்களை விடுதலை செய்வது குறித்து ஆராய்வதற்கான குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
  அதன்பின்னர் பயங்கரவாத தடைச்சட்ட்த்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

  https://thinakkural.lk/article/162216

 15. மிக நீண்டதாக இருந்தாலும் அருமையாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் அக்கா.

  பறை அடிப்பவர்கள் அடிக்காமல் விட்டதால் தான் அது இல்லாமல் போனது என்று கேள்விப்பட்டேன். உண்மையா??

 16.  

  18316ed560e0444d496eea379c8b3cf0.png

  நதியா நடிமின் தந்தை அவள் குழந்தையாக இருந்தபோது தலிபான்களால் கொல்லப்பட்டார். அவள் 11 வயதில் ஒரு டிரக்கில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி, இறுதியாக டென்மார்க்கை வந்தடைந்தாள். இப்போது அவர் 200 கோல்களை அடித்துள்ளார் மற்றும் டேனிஷ் தேசிய அணியை 99 முறை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 11 மொழிகளைப் பேசுகிறார் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் Forbes பட்டியலில் உள்ளார்.
  இந்த வாரம், கால்பந்து விளையாடிக்கொண்டே 5 ஆண்டுகள் படித்து மருத்துவராக தகுதி பெற்றார்.

   

 17. Amirthanayagam Nixon 

   
  13 பற்றிச் சம்பந்தன் சொன்னது என்ன?
  2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்த தீர்வு யோசனைகளை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய சம்பந்தன் 13 ஐ தும்புத் தடியாலும் தொட்டுக்கூடப் பார்க்கமாட்டோம் என்று கூறியிருந்தார்.
  மகிந்த ஜனாதிபதியாக இருந்தபோது புலிகளுடன் சமாதானப் பேச்சு நடத்தி இழுபறிப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சுதந்திரக் கட்சி தீர்வு யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாகச் சமர்ப்பித்திருந்தது.
  அந்த விவாதத்தின்போது 13 இன் குறைபாடுகள் பற்றியும் சம்பந்தன் நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் சம்பந்தன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையை, நான் நாடாளுமன்றச் செய்தியாளராக இருந்தபோது முழுமையாக வீரகேசரியில் எழுதியிந்தேன்-
  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை ”தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த அடி என்றுதான் நான் சம்பந்தனின் உரைக்கு வீரகேசரிச் செய்தியில் தலைப்பிட்டிருந்தேன்-
  ஆனால் அப்படியொரு நேரடி வார்த்தையைச் சம்பந்தன் தனது ஆங்கில உரையில் கூறவில்லை. இருந்தாலும் உரையின் முழுப்பகுதிக்கும் அந்தத் தலைப்பு பொருந்தும் என்ற அடிப்படையில் நான் அவ்வாறு தலைப்பிட்டிருந்தேன்-(அன்று நான் இரவுக் கடமை என்பதால் செய்திக்கு நானே தலைப்பிட முடிந்தது)
  அடுத்த நாள் நாடாளுமன்றத்தில் என்னை நேரில் சந்தித்த சம்பந்தன் நீங்கள் இட்ட தலைப்பு தனது உரைக்குப் மிகப் பொருத்தமானது என்று கூறினார்.
  13 ஐ தும்புத்தடியாலும் கூடத் தொட்டுப் பார்க்கமாட்டோம் (We will not even touch the 13th Amendment by the Broom) என்று அவர் கூறியதையும் முக்கியப்படுத்தி எழுதியிருந்தேன்.
  ஆங்கிலத்தில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்தால் துடைப்பம் என்றுதான் வரும். ஆனால் சரியான பொருள்கோடலுடன் தமிழில் அதனை மொழிபெயர்த்தால் தும்புத்தடி என்றுதான் வரும்-
  ”தும்புத் தடியாலும்” என்று மொழிபெயர்த்து எழுதியிருந்ததையும் சரியான தமிழ்ச் செற்பதம் என்றுதான் சம்பந்தன் என்னிடம் சொல்லிப் பொருமைப்பட்டிருந்தார்.
  தும்புத் தடியாலும்கூடத் தொட்டுப் பார்க்க முடியாது என்று சம்பந்தன் கூறிய அந்தக் கருத்தை நான் எனது அரசியல் பத்தி எழுத்துக்களிலும் பல தடவை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
  அத்துடன் என்னிடம் அரசியல் விஞ்ஞானம் படிக்கும் மாணவர்களுக்கும் 13 பற்றி விரிவுரை நிகழ்த்தும்போதும் சம்பந்தன் இவ்வாறு கூறினார் என்று சொல்லியிருக்கின்றேன்-
  அதனாலேயே இந்தக் கருத்துப் பிரபல்யம் அடைந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
  2001 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டுவரை சம்பந்தன் ஆங்கிலத்தில் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து வெளியிட்டால், வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கட்டமைப்பே (North East Combined Autonomous Structure) ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்த அரசியல் தீர்வு என்பது வெளிப்படும்.
  மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் சந்திரிகா, மகிந்த ஆகியோர் முன்மொழிந்த பரிந்துரைகள், உறுதிமொழிகள் பற்றிய விபரங்கள் சம்பந்தனின் நாடாளுமன்ற உரைகளில் இருந்தே தொகுப்பட்டிருக்க வேண்டும்.
  ஏனெனில் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் தீர்வு யோசனைகள், மங்கள முனசிங்க ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்துப் பரிந்துரைகள் மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் கூறிய அறிவுரைகள், ஐக்கிய நாடுகள் சபை அவ்வப்போது இலங்கை தொடர்பான அறிக்கைகளில் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் சம்பந்தன் அக்குவேறு ஆணிவேறாக சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
  ஆனால் 2009 இற்குப் பின்னர் முற்று முழுதாக மாறி ஒற்றையாட்சியை (unitary state) ஏற்கும் மன நிலையிலேயே பேசுகிறார் சம்பந்தன்.
  ஆகவே 2009 வரையான அத்தனை உரைகளையும் தொகுத்தால் தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடம் அம்பலமாகும்.
  2001 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரையான மாவீரர் நாள் உரைகள் கூட தமிழ் நெற்றில் வரும் ஆங்கிலப் பிரதியைக் கொண்டு வந்து அதில் கூறப்பட்டுள்ள பிரதான அம்சங்களைச் சம்பந்தன் நாடாளுமன்றத்தில் வாசித்துமிருக்கிறார்.
  ஆங்கிலத்தில் மற்றுமொரு மாவீரர் நாள் உரை என்று நாங்கள் நாடாளுமன்றச் செய்தியாளர் களரியில் இருந்து சிரித்துப் பேசியிருந்தோம்-
  என்னுடன் அப்போது சக செய்தியாளராகக் கடமையாற்றியவர் R. Priyadharshini Sivarajah. (தற்போதைய தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர் .சிவராஜாவின் மனைவி)
  • Thanks 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.