/ஆங்கிலம், தமிழ், வரலாறு, அறிவியல், கணிதம் போன்ற அடிப்படை பாடங்கள் எவையும் கட்டாயமாக கற்பிக்க தேவையில்லை, இவற்றில் தேர்வு எழுதவும் அவசியம் இல்லை என்கிறார்./
திருட்டு சாவிக்கு இணைய தளம் காழ்ப்புணர்ச்சியில் இருந்து வெளியே வரவேண்டும்! 😁 யாராவது கணித பாடத்தை வேண்டாம் என்பார்களா?!
நாம் தமிழர் சொல்வது, தனித்திறன் கல்வியை. எனக்கு உயிரியல் துறையில் ஆர்வம் என்றால், அது குறித்த கல்விதான் முதன்மைப் பாடங்கள். கணிதம், வரலாறு, புவியியல் எல்லாம் துணைப்பாடங்கள். இதைத்தான் நாம் தமிழர் வலியுறுத்துகிறது.
இதை தற்போதைய மிழக கல்வித் திட்டத்தில் இருந்து நோக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் ஒரு பிரிவு உண்டு. அதில் உயிரியலும், கணிதவியலும் முதன்மைப் பாடங்கள். தேர்ச்சி பெறும் மாணவர்கள் பொறியியலுக்கும் விண்ணப்பிப்பார்கள்; மருத்துவத்துக்கும் விண்ணப்பிப்பார்கள். மருத்துவம் கிடைத்தால் பொறியியலை கைவிடுவார்கள்.
இதுபோன்ற அபத்தமான கல்வித் திட்டம் அங்கே உள்ளது. அதன் பொருட்டுதான் கல்விச் சீழ்திருத்தத்தை முன்மொழிகிறார்கள். இது கனடா போன்ற நாடுகளில் உள்ள திட்டம்தான்.