Jump to content

இசைக்கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  22123
 • Joined

 • Last visited

 • Days Won

  63

Posts posted by இசைக்கலைஞன்

 1. நான் இந்தக் காணொளியை பார்த்தவரையில் விளங்கிக்கொண்டது..

  காட்சி 1:  ஒரு மேல் நடுத்தர வர்க்க மனிதர் வலுக்கட்டாயமாக விமானத்துக்கான பேருந்தில் ஏற முனைகிறார். அதை ஒரு சாதாரண ஊழியர் தடுக்கிறார். தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியாகிறது. கண்டனங்கள் எழுகின்றன. விமான நிறுவனம் வருத்தம் தெரிவிக்கிறது.

  காட்சி 2: ஒரு ஏழை உழவரால் உழவு இயந்திரத்திற்கான கடனை அடைக்க முடியாமல் போகிறது. வங்கி ஒன்று அடியாளை அனுப்புவதுபோல காவல்துறையை அனுப்பி அடித்து இழுத்து வருகிறது. வாழ்க்கை இயல்பு நிலையில் நகர்கிறது.

  நீதி என்பது யார் செய்தார்கள் என்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது. என்ன செய்தார் என்பதில் அல்ல. :unsure:

 2. நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி என்ற ஒரு அமைப்பை சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது. சீமான் முதற்கொண்டு அக்கட்சியில் இருக்கும் Humayun, அப்துல் காதர் வரை வேல் ஏந்தி சென்றார்கள். அப்போது அது வேடிக்கையாக பார்க்கப்பட்டது. அதை ஏன் செய்தார்கள் என்பதற்கான விடை ஈரான் கொடியில் இருக்கிறது. tw_astonished:

  இன்று பாஜக தமிழர்களை இந்துக்கள் என சொல்லி அரசியல் செய்ய வருகிறது. இல்லை.. முருகன், சிவன், கண்ணன் எல்லோரும் தமிழ் மூதாதைகளே. அவர்களை திருடிச் சென்றவர்கள் நீங்கள் என்ற கருத்தியலை நாம் தமிழர் கட்சி வலுவாக முன் வைக்கிறது. இதனால் பாஜகவின் இந்து மத அரசியல் தமிழகத்தில் அடிபட்டுப் போகிறது. 

 3. On 10/20/2017 at 2:54 PM, தமிழ் சிறி said:

  "உண்மைகள்... உறங்கும் போது, பொய்  ஊரை சுற்றி வந்து விடும்" என்ற பழமொழி உள்ளது.
  அதற்கு ஏற்ற மாதிரி.... ஆரியன், உலகின் மூத்த இனமான தமிழினத்தை, ஏறக்  குறைய அழித்தது  விட்டான் என்றே  நினைக்கின்றேன்.
  அதனை... கொஞ்சம், தட்டி நிமிர்த்துவம் என்று, ஈழத்தில் ஆரம்பித்த போராட்டமும்  சோகத்தில் முடிந்தது மிக வேதனை
  "வந்தாரை... வாழ வைத்ததால், இருந்தவனுக்கு இடமில்லை"  என்ற நிலைமை வந்து விட்டது.

  புரட்சி.... நீங்கள் முன்பு எழுதிய கருத்துக்களில் பார்க்கும் போது....
  நீங்கள்,  யாழ்ப்பாண... "ஆறுமுக நாவலரின்"   சைவ சமயத்தை, சேர்ந்தவராக இருக்க வேண்டும். :)

  ஈரான் நாட்டின் கொடி:

  irlarge.gif

  ********************************************************************************************

  இந்திய நாட்டின் கொடி:

  National-Flag-of-India-ili-59-ogimg.jpg

  இது எதேச்சையாக ஒரே மாதிரியாக அமைந்துவிட்டதா? :unsure:

  • Thanks 1
 4. On 10/16/2017 at 12:51 AM, தமிழ் சிறி said:

  Bild könnte enthalten: 3 Personen, Text

  தமிழர்கள் இந்து இல்லை. அவர்கள் சைவம், ஆசிவகம், கெளமாரம் போன்ற நெறிகளைப் பேணியவர்கள்.

  ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியில் இருந்து (இன்றைய துருக்கி, ஈரான் போன்ற இடங்கள்) நகர்ந்து வந்தபோது அவர்களிடம் இருந்தது வேதங்கள் மட்டுமே.. இன்றும் ரிக் வேதத்தின் பகுதிகள் ஈரானின் சில பகுதிகளில் நூலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  நகர்ந்து வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த நாகர்களின் வழிமுறைகளை சூறையாடி விட்டார்கள். பிற்காலத்தில் அதற்கு இந்து மதம் என்று வெள்ளையன் பெயரிட்டுவிட்டான். tw_blush:

  • Thanks 1
 5. தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன் அண்ணன்.

  இந்த திடீர் முனைப்புக்கு காரணம் என்ன? சீனர்கள் இலங்கையில் குடி புகுந்துவிட்டார்கள் என்பதா? :unsure:

 6. இதை எங்கே இணைக்கிறது என்று தெரியல்ல.. இங்கே இணைத்துவிட்டன்.. இந்த மதபோதகர்கள் ஏமாற்றூப் பேர்வழிகள் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனால் காணொளி வழியாக பார்க்கும்போது சுவாரசியமா இருக்கு.. :unsure:

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.