Jump to content

இசைக்கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  22123
 • Joined

 • Last visited

 • Days Won

  63

Everything posted by இசைக்கலைஞன்

 1. வைகோ மட்டுமல்ல. அவரது மொத்த குடும்பமுமே உதவி செய்தது. ஆனால், வைகோ தனது ஆதரவை அரசியல் லாபம் ஆக்கி துரோகம் இழைத்த திமுகவின் காலடிகளில் சமர்ப்பித்துவிட்டார். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மாத்தையா, கருணா இவர்களை விமர்சனம் செய்யக்கூடாது. ஏனென்றால் அவர்களும் ஒருகாலத்தில் போராளிகளே?! யார் என்பதைப் பார்த்து விமர்சனங்கள் செய்வது தவறு. செயல்கள் மட்டுமே விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. இனி, நாம் தமிழர் எனும் சிறு அணில் என்னவெல்லாம் செய்து வருகிறது?!
 2. புலிகள் தமிழக அரசியலில் தலையிடவில்லை. ஆனால் இறுதிப்போரில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கவே, தமிழகத்தில் உள்ள ஆதரவாளர்களை அழைத்து சந்திப்புகள் நடந்தன. குறிப்பாக, பாரதிராஜாவும் சென்று பார்த்தார். தீர்க்கமாக போராட்டங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார், (இயக்குநர் சங்கம்). ஆனால் நீடிக்க முடியவில்லை. அவரது வாகனத்தை எரித்துவிடவும், ஒதுங்கிக் கொண்டார். இன்றுவரையில் தனது பலத்துக்கும் அதிகமாக முயற்சி செய்து வருவபவர்களில் சீமான் முக்கியமானவர். ஆனால் தமிழகத்தில் தமிழர்களே அடிமை. இந்திய அளவிலும் அடிமைகள் என்பதை விளங்கியே செயற்பட்டு வருகிறார். சீமான் இந்திய அரசின் கைப்பொம்மை என்பதுபோல நிழலி எழுதியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தபோது கூடவே ஒருங்கிணைந்து வேலை பார்த்தவர் சுப. முத்துக்குமார். தமிழகத்தை சேர்ந்த இவர் புலிகளிடம் பயிற்சி பெற்று தமிழகத்தில் வேலை செய்தவர். பின்னர் 2013 இல் அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதான் அங்கே நிலைமை.
 3. போர் முடிந்தபோது வெளியில்தான் இருந்தார் என்பது எனது நினைவு. ஆனால் அவரது உயரம் அன்று போதாது. அவரை சுற்றி ஒரு ஐநூறு பேர் இருந்தாலே அதிகம். அதனால்தான் கருணாநிதி ்அன்று வெட்டி ஆடினார்.
 4. இங்கு பல உரையாடல்களை காணும்போது ஆயாசமாக இருக்கிறது. மனிதன் நாளை இருப்பானா என்பதே கேள்வியாக இருக்கும்போது, தனிமனித வெறுப்புகள் தேவையில்லை என்பதே என் கருத்து. சீமான் நாளை வெல்வாரா என்பது யாருக்குமே தெரியாது. நடந்தால் மகிழ்ச்சி. இல்லையேல் செய்தோம் ஒரு முயற்சி என்பதில் ஒரு திருப்தி. ஆனால் மாற்று சிந்தனை கொண்ட ஒரு இளைஞர் கூட்டம் வந்துவிட்டது என்பதே அங்குள்ள நிலைமை. இவரை விழுத்தாமல் ஓயப்போவதில்லை என்றும் கங்கணம் கட்டி சில வேலைகள் நடங்கின்றன. காலம்தான் பதில் சொல்லும்.
 5. சீமான் ஈழப்போரில் குரல் கொடுத்தபோதுதான் வெளியே தெரிய வந்தார் (சன் தொலைக்காட்சியின் தவறு). ஆனால் அவர் அரசியல் கட்சி நடத்துவதில் நமது கதையும் ஒரு அங்கம்தானே தவிர, இது மட்டுமே இங்கே நிலைப்பாடு அல்ல. அங்கே வேறு 20, 30 Agendas இருக்கின்றன.
 6. தலைவரை சீமான் சந்தித்தார். அவர்களிடையே நடந்த விடயம் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம். அதை நாம் விவாதித்து பயனில்லை. சரியான தர்க்கமும் அல்ல. இன்று நான் அலுவலகத்தில் யாருடன் என்ன பேசினேன் என்பதை யாழில் மற்றவர்கள் சொல்ல முடியாதுதானே. Mine shaft collar door இல் ஒரு காலியான Muck bucket வைக்க பாரம் தாங்கும் என சொல்லியிருந்தேன். Mine ஆவது, மண்ணாவது.. கிடங்கு கிண்டித்தான் பார்த்திருக்கிறம் எண்டு யாராவது வாதம் பண்ண முடியுமோ?! தலைவரை சந்தித்த ஒரு உறவினர் (2006) தலைவர் கோழிப்புக்கை சமைத்து பரிமாறியதை எனக்கு சொன்னார். அதை யாழில் எழுதியபோது வெட்டும் விழுந்தது (சரியான நடவடிக்கைதான்; அப்போதைய பாதுகாப்பு). அதுவரையில் கோழிப்புக்கை எனக்கு தெரியாது. அதுக்காக நான் அவ வை பகிடி பண்ண முடியாது இல்லையா?! அவ்விடத்தில் இல்லாத எனக்கு ஒரு கருத்தும் இருக்க முடியாது. இது மிக சாதாரணமான ஒரு புரிதல். சீமான் உணவு உண்டதை நாம் பேசுகிறோம். ஆனால் தமிழகத்தில் திமுக போன்ற கட்சிகளில் இருக்கும் சிலர் அவர் இலங்கைக்கே போனதில்லை என சொல்கிறார்கள். கடைசியில் சீமான் என்கிற ஆளே இல்லை உலகத்தில் என்று சொல்லாத வரைக்கும் சரிதான்.
 7. இறுதிப்போர் முடிந்த பின்னால் ஓரிரு மாதங்கள் வீட்டை விட்டே வெளியே வருவதல்லை என சீமான் ஒரு தடவை சொல்லியிருந்தார்.
 8. இறுதிப்போர் சமயத்தில் முதலில் சீமான் கைது செய்யப்பட்டது ஐப்பசி 19, 2008. விடுதலை செய்யப்பட்ட நாள் ஐப்பசி 31, 2008 (இணைப்புகள் போகமாட்டுது). பின்னர் மாசி 2009 இல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி உள்ளார். இடையில் நடந்த விவரங்களை திரட்டினால்தான் தெரியும்.
 9. இன்னும் விரிவாக நீங்கள் சிந்திக்க வேண்டும். ஈழத்தை விட்டு வெளியே வந்து சிந்திக்கலாம். மற்றும்படி Retrospective ஆக சிந்தித்துக் கொண்டிருப்பதால் பயன் கிடையாது. நடந்த சம்பவங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்வதே சிறப்பானது. 2009 முன் வரையில் நானும் ஈழ அளவில்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதீத எதிர்பார்ப்புகளே காரணம். ஆனால் சம்பவங்கள் என்றுமே நேர்கோட்டில். நடப்பதில்லை. பக்கவாட்டிலும் சிந்திக்க வேண்டும். ஈழத்தமிழரின் பிரச்சினைகளுக்கு ஈழத்தமிழர் தலைமையில்தான் தீர்வு என்பது நான் 2009 வரையில் கொண்டிருந்த கருத்து. ஊர்கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்பது இப்போது கொண்டிருக்கும் கருத்து. மக்களின் திரட்சிதான் பலமாக வெளிப்படுகிறது. இன்று அமெரிக்காவில் இடம்பெறும் நிகழ்வுகள்கூட அதைத்தான் சொல்கின்றன. இத்தகைய திரட்சியை நாம் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என சிந்திப்பதுதான் எமக்கான ஒரே பாதுகாப்பு. ஈழத்தில் இருக்கும் 15 லட்சம் மக்களினால் இது கைவரப் பெறாது. இங்குதான் இந்த துரோகம் சம்பந்தமான கருத்துகள் வெளிப்படுகின்றன. ஈழப்பிரச்சினை இலங்கை சம்பந்தப்பட்டது என்பது திமுகவின்.. ஏன் வட இந்தியரின் கருத்தும்கூட. அவர்கள் தமிழ் மக்களின் திரட்சியை விரும்பும் தரப்பு அல்ல. பிரித்துவிடுவதுதான் அவர்களுக்குப் பலம். அதே மாதிரியான கருத்துகளை இங்கே பதிவுகளில் கண்டால் திமுகவை ஒத்த கருத்து இது என எண்ணுவதை தவிர்க்க முடியாது ்அல்லவா?!
 10. சிறப்பான கருத்து நாதம். ஈழத்தீவினில் தமிழருக்கான தலைமை அமைந்து அரசியல் தீர்வும் எடுக்கலாம் என எண்ணுவது எட்டாக்கனிக்கு (கனிமொழி அல்ல ) கொட்டாவி விட்ட கதைதான். தேசியத் தலைவரே போராட்டத்தை புலம்பெயர் தமிழரிடம் ஒப்படைக்கிறேன் என்று சொல்லி சென்றுவிட்டார். 2009 பிற்பாடு தமிழர்களுக்கு ஒற்றைத் தலைமை என்பதே கிடையாது. அப்படி இருக்கவும் கூடாது. யார் எப்போது துரோகச் செயலில் ஈடுபடுவார் என்பதை அறுதியிட்டு கூற முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேணும். எனது தனிப்பட்ட கருத்து என்பது தேசியத்தலைவர் மற்றும் புலிகளின் அர்ப்பணிப்பும், தியாகமும் மட்டுமே இனி தமிழினத்தை வழிநடத்த வேண்டும். வேறு ஒற்றைத் தலைமை என்பது கூடாது.
 11. அப்படியல்ல மச்சாள். சீமான்தான் தமிழரின் தலைமை, விடுதலைப் போராட்ட தலைமை என நினைத்து விடுகிறார்கள் சிலர். அதன் காரணமாக, திமுகவினர் எடுத்துவரும் வாதங்கள் இங்கே நுழைந்துவிடுகிறது. ஆகவே, அப்படி ஒரு பார்வை தானாக அமைந்துவிடுகிறது. உண்மையில் சீமான் கட்சியின் தலைவர்கூட கிடையாது. ஏனென்றால், அந்தக் கட்சியை உருவாக்கிய தலைவர் சிபா ஆதித்தனார்தான் (மறைந்துவிட்டாலும்) தலைமைக்கு உரியவர். சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. ஆகவே, சீமானை அதீத கற்பனை செய்து எதிர்க்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து. தமிழர் தலைமையாக சீமானும் எம்மைப் போன்றவர்களும் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் தேசியத் தலைவர் மட்டுமே.
 12. உண்மையில் அந்தப் பேட்டியில் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது விகடனுக்கும், அண்ணன் சீமானுக்கும் மட்டுமே வெளிச்சம். எதை கேட்காமல் தவிர்த்தார்கள், எதை கத்தரித்து விட்டார்கள் என்பதை விகடன்தான் தெளிவு படுத்தவேண்டும். எதுவாகினும் விகடன் என்பது ஒரு வியாபார நிறுவனம்தானே. எதை கேட்பது, கத்தரிப்பது என்பது அவர்களது உரிமை.
 13. அட டா.. இவ்வளவு பெரிய திரி ஒண்டு ஓடியிருக்கு.. இந்த ஆமைக்கறி என்பதை பிரபலமாக்கியது வைகோவே. அதையேதான் அனைத்து துரோக கட்சிகளும் (திமுக, காங்கிரஸ், பாஜக), இயக்கங்களும் (மே 17, திக, சுபவீ) தூக்கிப் பிடிக்கிறார்கள். இதை ஈழத்தமிழர் நாங்களும் தூக்கிப் பிடிப்பது என்பது இந்த துரோகிகளுடன் சம பந்தி விருந்து உண்பதற்கு சமமானது. சீமானின் குணத்தை ஓரளவு அறிவேன். இதை பிரச்சினை ஆக்கினால், அதை மீண்டும் அடுத்த பேட்டியில் சொல்லுவார். அடுத்த மேடையிலும் பேசுவார். அது அவரது இயல்பு. நீங்கள் உங்கள் பேச்சுகளின் / எழுத்துக்களின் மூலமாக இன்னொருவரின் கருத்தை தடுக்க நினைக்கிறீர்கள் என்றால், அவரை நீங்கள் அடிமைப் படுத்துகிறீர்கள் என பொருள். அதை அவர் ஒருபோதும் ஏற்கமாட்டார். இதே உணவு விடயத்தை தாய்லாந்தில் சாப்பிட்டேன் என சொல்லியிருந்தால், யாருமே பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், புலிகளின் விருந்தோம்பல் என்றவுடன் வெகுண்டெழுந்து விட்டார்கள். காரணம் புலிகள் மீதான அக்கறையா?! அல்ல. புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு. இதை உணராமலும், அறியாமலும், தெரிந்தும் தனிமனித விரோதங்களாலும் நாம் தூக்கித் திரிவது காலத்துக்கு ஏற்ற பணியல்ல.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.