• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இளங்கோ

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  426
 • Joined

 • Last visited

Community Reputation

2 Neutral

About இளங்கோ

 • Rank
  உறுப்பினர்

Contact Methods

 • ICQ
  13
 1. (சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதியது இது. 2000 ஆண்டு நோர்வேயின் சமரச முயற்சியைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள நோர்வே நாட்டுத் தூதரகத்தின் முன்பு சமாதானத்திற்கு எதிராக சிங்களப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது புத்தன் எங்கே! சிங்களப் பிக்குகள் எங்கே! என மனத்தில் ஏற்பட்ட கேள்வியைத் தொடர்ந்து எழுதிய ஒன்று இது. தற்போது ஈழத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் விடுதலைப் போரைச் சிதைத்திருந்தாலும் பெளத்தமும் சிங்களமும் அப்படியேதான் இருக்கின்றன.) கி.மு 260, மௌரியப் பேரரசின் மூன்றாவது அரசன் மாமன்னன் அசோகன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்தான். கலிங்க நாடு (தற்போதைய ஒரிசா மானிலம்) மிகப் பெரிய நிலப்பரப்பையும் படைபலத்தையும் கொண்ட நாடு கலிங்கத்தின் வெற்றி அசோகனின் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. தன் கனவை நனவாக்கும் பொருட்டு தன் பாரிய படையுடன் கலிங்கத்திற்குள் புகுந்தான் அசோகன். பெரும்போர் மூண்டது பல்லாயிரக்கணக்கான வீரர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டனர் குருதி ஆறாக ஓடியது ஈற்றில் கலிங்கம் அசோகனிடம் வீழ்ந்தது. வெற்றிக்களிப்பில் மிதந்தவன் அன்று மாலை போர்க்களத்தைப் பார்வையிடச் சென்றான். அங்கு அவன் கண்ட காட்சிகள் அவனை நிலைகுலையச் செய்தன, அறுபட்ட தலைகளையும், வெட்டுண்டு சிதறிக்கிடக்கும் உடலுறுப்புக்களையும், உயிரற்ற உடல்களையும் அவைமீது அழுது ஆராற்றும் தாய்மார்களையும்; பெண்களையும் கண்டான். போர் எவ்வளவு கொடியது என்பதை அவன் கண்ட காட்சிகள் அவனக்கு உணர்த்தின. இவ்வளவு பெரிய அழிவுக்குத் தான் காரணமாகிவிட்டேனே என மனம் வருந்தினான் அன்றிலிருந்து அவனால் ஒரு கணம் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை ஓடிச்சென்று புத்த துறவி ஒருவரின் பாதங்களில் அடைக்கலம் புகுந்தான். அவருடைய போதனைகளை ஏற்று அவரின் மார்க்கத்தைத் தழுவிக்கொண்டான். அன்றிலிருந்து அவன் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகியது போரை வெறுத்தான் சமாதானத்தை விரும்பினான் நாடுகளுக்கிடையே அன்பும் நட்புறவும் பேணப்பட வேண்டுமேயன்றி போரும் பகையும் கூடாதென்று தீர்மானித்தான் அது மட்டுமல்ல தான் செய்த தவறை வேறு எவரும் செய்யக் கூடாதெனும் முடிவுக்கு வந்தான், நாடுகளுக்கிடையே அன்பையும் அறத்தையும் தழைக்கச் செய்யும் நோக்கோடு தான் தழுவிய அப்புதிய மார்க்கத்தை பாரெங்கும் பரப்பத் தொடங்கினான் அசோகன். புத்தரால் தோற்றுவிக்கப்பட்டு அசோகனால் பரப்பப்பட்ட உயரிய மார்க்கம்தான் பௌத்தம். ஆம் பௌத்தம் மதமல்ல அது ஒரு மார்க்கம் அன்பின்மீதும் அறத்தின்மீதும் கட்டியமைக்கப்பட்ட மார்க்கம் மதமென்றால் கடவுளைப் பற்றி சொல்லியிருக்கவேண்டும் கடவுளையே காட்டாத பௌத்தம் எவ்வாறு மதமாகயிருக்க முடியும்? பௌத்தத்தை ஆய்வு செய்து பின்னாளில் அம் மார்க்கத்தைத் தழுவிக்கொண்ட அண்ணல் அம்பேத்கர் கூறுகையில் புத்தரின் போதனைகளும் மார்க்கமும் தவறாக பல நாட்டவர்களால் கடைப்பிடிக்கப் பட்டுவிட்டதென்றும், கடவுளை மறுத்த புத்தரை கடவுள் அவதாரமாகவே கருதிவிட்டார்கள் என்கிறார். பௌத்தம் ஒரு மார்க்கம்தான், என்றாலும் மக்களின் மன எண்ணப்படி மதமாக எடுத்துக் கொண்டாலும,; தமிழர்களைப் பொறுத்தவரை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் போல் பௌத்தமும் தமிழர்களுக்கு அந்நிய மதம்தான். பண்டைய தமிழர்களின் வழிபாடு இயற்கையோடு இணைந்திருந்ததேயன்றி மதப்பேதங்கள் இருக்கவில்லை என்பதை சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. அதிலும் குறிப்பாக போரில் வீரமரணம் அடைந்தவர்களையோ அல்லது வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் எனும் வள்ளுவரின் வாக்குப் படி நல்ல முறையில் வாழ்ந்து மடிந்த தம் முன்னோர்களை வணங்கும் நடுகல் முறையே பரவலாகக் கணப்பட்டது. அதேசமயம் பௌத்தத்தின் எழுச்சி எவ்வித மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதையும் பௌத்தம் தமிழர்களால் எவ்வாறு கையாளப் பட்டது என்பதையும் அதே பௌத்தம் சிங்கள இனவாதிகளால் எவ்வாறு கையாளப்பட்டது என்பதையும் பார்ப்போம். பௌத்தத்திற்கு முன் கி.மு. 15 ஆம் நூற்றாண்டளவில் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஹைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் பண்பாட்டு படை எடுப்பாளர்களான ஆரியர்கள். இவர்களின் வருகையால் ஏற்கனவே சிந்து சமவெளி நாகரிகத்தை அமைத்து மேம்பாட்டுடன் வாழ்ந்த தமிழர்களின் பண்பாடும் நாகரிகமும் சிதைவுற்றது. ஆரியர்களின் வரவுக்குப் பின் அவர்களின் வேதமதமாகிய ஆரிய மதம் பரவத் தொடங்கியது. பிறப்பினால் ஏற்றத் தாழ்வுகளையும் யாகமெனும் பெயரில் உயிர்க்கொலைகளையும் நியாயப் படுத்திய இம்மதம் திராவிட மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது. ஆரிய திராவிட மோதல்கள் அக்காலத்தில் ஏராளமாக நடந்திருக்கின்றன. தமிழுலகத்தை எடுத்துக்கொண்டால் பண்டைய தமிழிலக்கியங்களில் ஆரிய எதிர்ப்புக்கள் கணிசமாகவே காணப் படுகின்றன. இவ்வேளையில் மனிதநேயமே சிறந்தது, உயிர்க் கொலை கூடாது, மனிதரில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிப்பது கயமைத்தனம் போன்ற உயரிய கோட்பாடுகளுடன் உருவாகிய பௌத்தம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பௌத்தத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தர் திராவிட இனத்தில் தோன்றிய ஓர் ஆரிய எதிர்ப்பாளரே, இவர் தமிழ் படித்தார் என்பதை வடமொழி நூலான 'லலித விஸ்தரம்' கூறுகிறது. வடநாட்டில் செல்வாக்குப் பெற்ற பௌத்தம் தென்னாட்டிலும் பரவியது ஏற்கனவே வைதீகப் புரட்டல்களால் வெறுப்புற்றிருந்த தமிழர்களை பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது. பெருவாரியான தமிழர்கள் பௌத்தத்தைத் தழுவிக் கொண்டார்கள். சங்க காலத்திற்குப் பின் தமிழில் தோன்றிய பெருவாரியான இலக்கியங்களான ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவற்றில் சமணத் துறவிகளுக்கு அடுத்து பௌத்தர்களின் பங்கே காணப்படுகின்றது. இவற்றுள் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை முழுக்க முழுக்க பௌத்த நெறிகளை உள்ளடக்கிய ஒன்றாகவே அமைந்துள்ளது. மணிமேகலை எனும் இளம் பெண்துறவியின் வாழ்க்கையை வைத்தே இக்காப்பியம் அமைக்கப்பட்டுள்ளது. மனிதனால் எதைத் தாங்கினாலும் பசியைத் தாங்கமுடியாது அதனால்தான் பண்டைய தமிழர்கள் பசியைப் பிணி என்று அழைத்தனர் அவ்வகையில் இளம் வயதில் துறவறம் மேற்கொண்ட மணிமேகலை, மக்களின் பசிப் பிணியைப் போக்கி சென்ற இடமெல்லாம் அன்பையும் அறத்தையும் போதித்து இறுதியில் பௌத்த நெறிப் படி மடிகிறாள். மதுரையைச் சேர்ந்த சீத்தலைச் சாத்தனார் எனும் தமிழ்ப்புலவரால் இயற்றப்பட்ட, தமிழர்களின் கலை பண்பாட்டுக் கருவூலமான இக்காப்பியத்திற்கு நிகரான ஒரு பௌத்த நெறிக் காப்பியம் உலகில் வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் போன்று ஈழத்திலும் ஏராளமான தமிழர்கள் பௌத்தத்தைத் தழுவிக் கொண்டார்கள் அதனால்தான் தமிழீழ மண்ணில் பல பௌத்த சின்னங்களும் விகாரைகளும் இருக்கின்றன இந்த உண்மை தெரியாமல் பௌத்த சின்னங்களும் விகாரைகளும் இருப்பதால் ஒட்டு மொத்த இலங்கையும் தங்களுக்குத்தான் சொந்தம் என்கிறது சிங்களம். ஆனால் உண்மை என்ன? இலங்கைத் தீவானது ஒரு காலத்தில் தமிழர்களுக்குத்தான் சொந்தமாய் இருந்தது என்பதுதான் வரலாறு. சிங்களவர்களே இலங்கையின் தொன் குடிகள், தமிழர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்த அந்நியர்கள், வந்தேறு குடிகளான தமிழர்களுக்கு தனி நாடு எதற்கு என்று இலங்கையில் உள்ள சிங்களக் கட்சிகளும் ஊடகங்களும் ஆண்டாண்டு காலமாகக் கருத்து தெரிவித்து வருகின்றன. எது நடந்ததோ அதுதான் வரலாறு. தன்னை நியாயப்படுத்துவதற்காக வரலாற்றைத் திரித்து வருகிறது சிங்களம். இலங்கையின் தொன் குடிகள், யார்? ஏன்ற வினாவுக்கு வரலாறு என்ன விடையளிக்கிறது என்று பார்ப்போம். கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்து நாட்டின் ரோயல் சொசைட்டி உறுப்பினராக இருந்த பி.எல். ஸ்கிலேட்டர் என்ற உயிரியல் அறிஞர் கடல் கொண்ட கண்டம் ஒன்று இருந்தது என்றும் அதற்கு லெமூரியா என்றும் பெயர் சூட்டினார். இக்கூற்று பல வரலாற்று அறிஞர்களால் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளை உற்று நோக்கையில் லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகத் தெரிகிறது. இதில் வரும் குமரிக் கண்டத்தில்; ஈழமும் தமிழகமும் ஒரே நிலப்பரப்பைக் கொண்டு இருந்தன. பின்னாள்களில் ஏற்பட்ட கடல்கோள்களினால் இரண்டும் தனித்தனியே பிரிந்தன. பல வரலாற்று ஆசிரியர்களால் ஆய்வு செய்து கூறப்பட்ட இவ்வுண்மை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. 'பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன் வாழி!' ஈழத்தோடு இணைந்திருந்த தென்பாண்டி நாடு தமிழ் பேசும் மக்களைக் கொண்ட நாடு, ஈழத்தின் ஆதி குடிகளான வேடர், நாகர், இயக்கர் ஆகியோர் பேசிய மொழி தமிழ்தான் என்றும் கூறப்படுகிறது அதன் பின் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கழித்து கி.மு 6 ஆம் நூற்றாண்டில் ஆரிய இளவரசன் விசயனின் வருகையிலிருந்தே சிங்களவரின் வரலாறு தொடங்குகிறது, சிங்களவர்கள் வந்தேறு குடிகள்தான் என்பதை சிங்களவர்களாலே போற்றிக் கொண்டாடப்படும் மகாவம்சமே பின் வருமாறு கூறுகிறது. 'வங்க நாட்டு இளவரசியான சுபதேவி ஒரு நாள் அரண்மனையை விட்டு வெளியேறி லாலா எனும் நாட்டை அடைந்தபோது அங்கு மனிதர்களைக் கொன்று தின்னும் சிங்கன் என்பவன் அவளைக் கடத்திக் கொண்டு போய் குகை ஒன்றில் அடைத்து வைத்தான் பகலில் வெளியில் போய் மனிதர்களை வேட்டை ஆடுவதும் இரவில் குகைக்குள் வந்து சுபதேவியுடன் காலம் கழிப்பதுமாய் இருந்து வந்தான், நாளடைவில் இருவருக்கும் சிங்கபாகு சிங்கவல்லி என ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாய் இரு குழந்தைகள் பிறந்தன. சிங்கபாகு வளர்ந்து பெரியவனானதும் தன் தந்தையைக் கொன்று விட்டு தாயையும் தங்கையையும் கூட்டிக்கொண்டு தன் பாட்டனின் நாடான வங்கத்திற்குச் சென்று அங்கு தன் தங்கை சிங்கவல்லியையே பட்டத்து அரசி ஆக்கி நாட்டை ஆண்டு வந்தான் அவர்களுக்கு 32 பிள்ளைகள் பிறந்தன அவர்களுள் மூத்தவனான விசயனை இளவரசனாக்கினர். விசயன் பெரியவனானதும் பல தீய செயல்களில் ஈடுபட்டதால் அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் அவனது தந்தை சிங்கபாகு நாடு கடத்தினான். விசயனும் அவனது தோழர்களுடன் பல நாள்கள் கடலில் அலைந்து இறுதியில் இலங்கைத் தீவை வந்தடைந்தான், அங்கு இயக்க இனத்தைச் சேர்ந்த இளவரசி குவேனியை மணம் முடித்தான் அவனது தோழர்களும் இயக்க இனத்தைச் சேர்ந்த பெண்களை மணம் முடித்தனர்' இவ்வாறே இலங்கையில் சிங்களவர்; குடியேறினர். ஆரியர்கள் எந்த நாட்டில் குடியேறுகிறாகளோ அந்த நாட்டு மண்ணின் மக்களை சூழ்ச்சியால் வென்று தங்கள் வழி இன மொழிப் பண்பாட்டைத் திணிப்பது வழக்கம் ஈழத்திலும் அவ்வாறே நடந்தது அதற்குப் பின்பும் பெருவாரியான ஆரியக் கூட்டங்கள் ஈழத்தில் வந்து குடியேறியதாக மகாவம்சம் கூறுகிறது. விசயனின் வருகைக்கு முன் ஒட்டு மொத்த இலங்கையும் ஒரு காலத்தில் தமிழர்களுக்குத்தான் சொந்தமாய் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் சிங்கள அரசு ஒரு முத்திரையை வெளியிட்டது. விசயன் கப்பலில் இருந்து இறங்குவது போலவும் இளவரசி குவேனி அவனை வரவேற்பது போலவும் அம்முத்திரை சித்தரிக்கப்பட்டிருந்தது. தன்னையும் அறியாமல் உண்மையைக் கக்கிவிட்ட சிங்கள அரசு அவசர அவசரமாக முத்திரையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. விசயன் ஈழத்தில் நிலையான சிங்கள ஆட்சியை ஏற்படுத்தி அமைதியக வாழ்ந்த தமிழர்களுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினான் இருந்தபோதிலும் தமிழ் சிங்கள மோதல்கள் அப்போது இருந்ததற்கான சான்றுகள் இல்லை. கி.மு 2 ஆம் நூற்றாண்டில் தமிழ் அரசன் எல்லாளனுக்கும் சிங்கள அரசன் துட்டகாமினிக்கும் இடையில் நடைபெற்ற போர்களில் இருந்தே சிங்கள இனவாதம் தமிழர்கள் மேல் வளர்க்கப்பட்டு இருத்தல் வேண்டும் அதுமட்டுமல்லாது இப்போர்களில் பௌத்தமும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. போர்கள் கூடது என்பதற்காக அசோகனால் பரப்பப்பட்ட பௌத்தம் தமிழர்களுக்கெதிரான போரில் துட்ட காமினியால் பயன்படுத்தப்பட்டது. இன்றும் சிங்கள பிக்குகள் துட்டகாமினியை தங்கள் வரலாற்று நாயகனாகக் காண்பதுடன் பெரும்பாலான சிங்களவர்களுக்கு காமினி என்ற பெயர் இருப்பதன் வழியாக இந்த உண்மையத் தெரிந்து கொள்ளலாம். இலங்கை வரலாற்றில் எல்லாளன் - துட்டகாமினி போர் மிக முக்கிய ஒன்றாகக் கருதப் படுகிறது. கி. மு 205 முதல் அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த தமிழ் வேந்தன் எல்லாளன். இலங்கைத் தீவை நீதி நெறி தவறாமல் 44 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதன்பின் கி. மு 161 இல் துட்ட காமினியால் தந்திரமாகக் கொல்லப் பட்டு வீரமரணம் எய்தினான், அப்போது எல்லளனுக்கு வயது அறுபதைத் தாண்டி விட்டதென்பதும் துட்டகாமினி முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மன்னன் ஒருவனை தந்திரத்தால் வெற்றி கண்ட இப் போரை சிங்கள வரலாற்றாசிரியர்கள் புனிதப் போர் என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்களால் வெற்றி கொள்ளப் பட்ட எல்லாளன் பௌத்தத்தையும் போற்றி மதித்த பெருமகன் என்பதை மகாவம்சமும் குறிப்பிடத்தவறவில்லை. அதன்பின், தமிழ் அரசர்களுக்கும் சிங்களஅரசர்களுக்கும் தொடர்ந்து போர்கள் நடந்த வண்ணம் இருந்தன, தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்கள் சிங்களஅரசர்களை அடக்கியாண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. அப்போதெல்லாம் பெரும்பாலான தமிழர்கள் பௌத்தத்தையே தழுவியிருந்திருக்க வேண்டும். ஒரு காலத்தில் இந்திய முழுவதும் செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்தம் பின்னாள்களில் மாபெரும் வீழ்ச்சி கண்டது, இதன் விழ்ச்சிக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன பௌத்தத்தின் பிராமண எதிர்ப்புக் கொள்கைகளும், சாதியத்திற்கு எதிரான சமரசப் போக்கும் வேத மதத்தையும் அதன் வைதீகப் புரட்டல்களையும் ஆட்டம் காணச் செய்தது. இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள் பௌத்ததுக்குள் புகுந்து அங்கேயும் தங்கள் வர்ணாசிரமக் கொள்கைகளைப் பரப்பி புத்தரும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று என்பது போன்ற கட்டுக்கதைகளைப் பரப்பி இறுதியில் பௌத்தத்தை இந்தியாவை விட்டே துரத்தி விட்டார்கள் இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியவில் இல்லாமல் ஏனைய ஆசிய நாடுகள் முழுவதிலும் இருப்பதற்கு இதுவே காரணமாகக் கருதப் படுகிறது. 7 ஆம் நூற்றாண்டில் நாயன்மார் காலத்தில் தமிழகத்தில் பக்தி இயக்கம் தோன்றியபோது சைவம் மாபெரும் எழுச்சியுற்றது. சைவத்தின் எழுச்சி தமிழர்களை சைவத்தின்பால் கொண்டு சென்றது. ஈழத்தில் சிங்களத்தின் பால் தமிழர்களுக்கு ஏற்பட்ட மொழி இனம் சார்ந்த கருத்து வேறுபாடுகளும் பௌத்தத்தைச் சிங்களம் பயன்படுத்திய விதமும் தமிழர்களுக்கு பௌத்தத்தின் மேல் ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். நாளடைவில் பௌத்தம் தமிழர்களை விட்டுச் சென்று விட்டது. இன்று பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள் சைவத்தையே தங்கள் சமயமாகக் கொண்டிருக்கிறார்கள் அதே சமயம் பௌத்தம் சிங்கள இனத்தை ஆட்கொண்டது. அடுத்து சிங்களவர்களால் கற்பிக்கப்படும் மற்றுமொரு வரலாற்றுப் பொய் கௌதம புத்தர் இலங்கைக்குச் சென்று சிங்களவர்களுக்கு தேரவாத பௌத்தத்தைப் போதித்தார் என்பதாகும். புத்தர் இலங்கைக்குச் சென்றதற்கு எந்த விதமான வரலாற்றுக் குறிப்பும் இல்லை. ஒருவேளை அப்படி அவர் சென்றிருந்தாலும் அவர் வாழ்ந்த காலத்தில் சிங்கள இனம் தோன்றியிருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கௌதம புத்தர் கி.மு. 563 இல் பிறந்து கி.மு. 483 இல் தனது 80 வது வயதில் இறந்தார் என்று வரலாறு கூறுகிறது. கி.மு. 260 இல் நடந்த கலிங்கப் போருக்குப்பின், அப்போருக்குக் காரணமாக இருந்த மாமன்னன் அசோகனே பௌத்தம் உலகெங்கும் பரவுவதற்கு காரணமாக இருந்தான். கி.மு. 247 இல் தேவநம்பிய திசனின் ஆட்சிக்காலத்தில் அசோகனின் மகன் மகிந்தனால் பௌத்தம் முதன் முதலாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கையின் புராதன வரலாற்று நூலாகிய மகாவம்சம் கூறுகிறது. அதாவது புத்தர் இறந்து 236 ஆண்டுகளுக்குப் பிறகே பௌத்தம் இலங்கைக்கு வருகிறது. வரலாற்றுச் சான்றுகள் இவ்வாறு இருக்கும்போது புத்தார் தங்களுக்கு பௌத்தத்தை நேரடியாகவே கற்பித்தார் என்று கூறுவது வரலாற்றைத் திரிக்கும் முயற்சியே. அசோகப் பேரரசின் காலத்தில் இலங்கைத் தீவில் வடமொழி, பாளிமொழி, கலிங்கமொழி, தமிழ் மொழி அனைத்தையும் கலந்த ஒரு புதிய மொழி உருப்பெற்று வளரத் தொடங்கியது அந்தப் புதிய மொழியையே பிற்காலத்தில் இளவரசன் விசயனோடு இணைத்து சிங்கள மொழி என அழைத்தனர். ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் இன்று மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளனர். 1833 ஆம் ஆண்டு தனித்தனியாக இருந்த தமிழ் அரசையும் சிங்கள அரசையும் கோல்புறூக்-கமரோன் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின்படி ஆங்கிலேயர்கள் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். அப்போது மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்பில் தமிழர்கள் இலங்கைத் தீவின் 35 விழுக்காடு நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டிருந்தனர். 1995 இல் வெறும் 17 விழுக்காடு நிலப்பரப்பே தமிழர்களுக்கு சொந்தமாக இருந்தது. 1833 இற்கும் 1995 இற்கும் இடைப் பட்ட நூற்றி அறுபத்து ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் 50 விழுக்காடு நிலப் பகுதியை சிங்களவர் கைப்பற்றி உள்ளனர். ஓட்டு மொத்த இலங்கையையும் சிங்களவருக்குச் சொந்தமாக்க வேண்டும் என்ற நோக்கோடு கடந்த 50 ஆண்டுகளாக இன அழிப்பை திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது சிங்களம். உயிர் வாழ விரும்பினால் தமிழா! உனக்காக ஒரு நாட்டை உருவாக்கிடு என்று உறைப்பாக உணர்த்தியதே சிங்கள அரசுதான். ஓவ்வொரு தாக்கத்திற்கும் அதற்குச் சமமான எதிர்த்தாக்கம் இருக்கும் என்றார் நியுட்டன். ஆம், ஜார் மன்னனின் அடக்குமுறை ரஷ்யாவில் வர்க்கப் போராட்டத்திற்கு வித்திட்டது. சிங்கள அரசின் அடக்குமுறை ஈழப் போராட்டத்திற்கு வித்திட்டது. 1948 இல் ஆங்கிலேயேரிடமிருந்து இலங்கை விடுதலை பெற்றவுடன் இலங்கையின் ஆட்சியதிகாரம் முழுவதும் சிங்களவர் கைக்குச் சென்றது, இதன் காரணமாக தமிழர்களுக்கெதிரான சிங்கள பௌத்த பேரினவாதம் பல மடங்கு தீவிரமடைந்தது. புத்தரின் போதனைப்படி உள்ளத்தில் அன்பையும் பார்வையில் அருளையும் நடத்தையில் கண்ணியத்தையும் கொண்டவர்களைப் பௌத்த பீடங்களில் சேர்க்காமல் கொலை வெறி கொண்டு கத்தி, கடப்பாரையோடு அலையும் சிங்களக் காடையர்களும் குண்டர்களும் பௌத்த பீடங்களில் பிக்குகளாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். புத்தம் சரணம் கச்சாமி தானம் சரணம் கச்சாமி என்று கூறுவதற்குப் பதிலாக யுத்தம் சரணம் கச்சாமி இரத்தம் சரணம் கச்சாமி எனக் கூறி தமிழர்களை வேட்டையாட அலைந்தனர். சிங்கள மக்கள் மத்தியில் இவர்களுக்கு இருந்த செல்வாக்கும் அதிகாரமும் இலங்கை அரசியலையே தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ள அனுமதித்தது. 1957 ஆம் ஆண்டு இலங்கைத் தலமை அமைச்சர் பண்டாரநாயக்காவிற்கும் தந்தை செல்வாவிற்கும்மிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிவிடும் என அறிந்து ஏராளமான பிக்குகள் பண்டாரநாயக்காவின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தனர் அதனைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு சோமராமதேரோ என்ற பிக்குவால் பண்டாரநாயக்கா சுட்டுக் கொல்லப் பட்டார். மற்றும் 1958 1983 களில் நடைபெற்ற தமிமினப் படுகொலைகளையும் திட்டமிட்டு நிறைவேற்றியது சிங்கள அரசு, அதன் தூண்டு கோலாக பௌத்த பீடங்களே துணை நின்றன. இன்று நோர்வே நாட்டின் உதவியுடன் ஏற்படும் சமாதான முயற்சிகளுக்கு சிங்கள பௌத்த பீடங்களே மாபெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன 2000 ஆம் ஆண்டு நோர்வே அரசு தன் சமாதான முயற்சியைத் தொடங்கியபோது நோர்வே நாட்டுத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் தமிழ் விரோதப் போக்கைக் காட்டிக் கொண்டர்கள் சிங்களப் பிக்குகள். சமாதானத்திற்காகவும், போரின்றி மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் மார்க்கம் கண்ட புத்தபிரானின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்பவர்கள் இன்று சமாதனத்திற்கு எதிரியாகப் போர்க் கொடி தூக்கி நிற்கிறார்கள். பொதுவாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது மதங்கள் அனைத்தும் அன்பையே போதிக்கின்றன அவற்றைப் புரிந்து கொள்ளாத மக்களின் மனம்தான் வெறித்தனமான வன்முறைகளில் ஈடுபட வைக்கிறது என்று. இக்கருத்தை முழுவதுமாக நிராகரித்துவிடவும் முடியாது அதேசமயம் முழுவதுமாக ஏற்றுக் கொண்டுவிடவும் முடியாது ஏனெனில் புனித நூல்கள் என்று கூறப்படும் மத நூல்களில் கூறப்பட்டுள்ள விடயங்களைச் சற்றும் சிந்தித்துப் பார்க்காமல் அப்படியே பின்பற்றுவதாலே மதப் பூசல்கள் ஏற்படுகின்றன. உண்மையில் மதங்களில் திருத்தம் செய்வதற்கு ஏராளமான விடயங்களும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செய்திகளும் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் இப்படி ஒரு குற்றச்சாட்டைப் பௌத்தத்தின் மேல் சுமத்த முடியாது. பகுத்தறிவுக்குப் புறம்பான எந்தக் கருத்தையும் புத்தர் கூறவில்லை, மற்ற மதங்கள் எல்லாம் மனிதனுக்குக் கடவுளைக் காட்ட முயற்சித்த போது புத்தர் மட்டுமே மனிதனுக்கு மனிதத்தைக் காட்ட முயற்சித்தார் பௌத்தத்தில் கடவுளும் இல்லை ஆன்மாவும் இல்லை சொர்க்கமும் இல்லை நரகமும் இல்லை புத்தர் தன்னைக் கடவுள் அவதாரமாகவோ அல்லது கடவுளின் தூதராகவோ காட்டிக் கொள்ளவில்லை தன்னுடைய ஞானத்தைத் அவர் தன்னிடம் இருந்தே பெற்றார் அவருக்கு கடவுளோ அல்லது வேறு ஆவிகளோ வந்து ஞானம் கொடுக்கவில்லை அவர் தன் வாழ்நாளில் அற்புதம் என்று சொல்லி எந்த ஒரு செயலையும் செய்துகாட்டவில்லை. அப்படியானால் பௌத்தம் எதைத்தான் கூறுகிறது ? பகுத்தறிவு, இன்னா செய்யாமை, வாய்மை, கொல்லாமை, ஒழுக்கம், நல்லூக்கம், நல்லுறுதி போன்றவற்யையே புத்தர் அதிகமாக போதித்தார் அன்பின் ஆணிவேரையே தொட்டவர் புத்தர் ஆறறிவுள்ள மனிதனில் தொடங்கி புழு, பூச்சி போன்றவற்றின் உயிரையும் தன்னுயிரினும் மேலாக மதித்தவர். அவரது அருள் ததும்பும் பார்வையும் புன்னகை பூத்த முகமும் இனிமை கொண்ட பேச்சுக்களும் மானுடத்தின் மீது அவர் காட்டிய மாறாப் பற்றும் கல்நெஞ்சர்களையும் கண்ணீர் விடவைத்தது போர் வெறியர்களையம் சமாதான விரும்பிகளாக மாற்றியது புல்லரையும் நல்லோராக்கியது புத்தரின் மார்க்கத்தில் சாதிகளுக்கு இடமில்லை குலப் பேதங்களுக்கு இடமில்லை அதனால்தான் தாழ்த்தப்பட்ட இந்துவாகப் பிறந்து சொல்லணாத் துன்பங்களுக்கு ஆளான அண்ணல் அம்பேத்கர் தன் சமுகத்தைச் சேர்ந்த 54 ஆயிரம் தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் இந்து மதத்தை விட்டு விலகி பௌத்தத்தைத் தழுவிக்கொண்டார். பௌத்தத்தில் அன்பே கடவுள் அதுவே உயிர், அதுவே வாழ்க்கை, அதுவே மூச்சு, அதுவே முக்தி. பௌத்த மதம் என்று சொல்வதைக் காட்டிலும் பௌத்த நெறி அல்லது மார்க்கம் என்று சொல்வதே சாலப் பொருந்தும் மனிதராகப் பிறந்த புத்தர் மனிதராகவே மறைந்தார் இதுவே பௌத்தத்தின் சிறப்பு. அப்பேர்ப் பட்ட பௌத்தத்தைக் கடைப் பிடிப்பவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இலங்கையில் நடத்திய ஓர் இனப் படுகொலை போல் வேறு எவரும் நடத்தியதில்லை, தமிழனின் கண்ணைத் தோண்டி எடுத்து கீழே போட்டு காலால் நசுக்கிய வரலாறும், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளிருந்த சிசுவை வெளியில் தூக்கிப் போட்ட வரலாறும், பெண்களின் மார்பகங்களை அறுத்து வீதியில் போட்ட வரலாறும் இலங்கையைத் தவிர வேறு எங்கும் நடக்கவில்லை. ஆரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அல்லல் பட்ட ஈழத்தமிழர்களைக்கு விடிவேதும் வந்துவிடக் கூடது என்பதற்காக சிங்கள பௌத்த பீடங்களும் பேரினவாத சக்திகளும் சிங்கள அரசுடன் கைகோர்த்து நிற்கின்றன. இன்று தங்களைவிட்டால் பௌத்தத்தைக் காக்க வேறுயாருமில்லை என்று கூறித்திரியும் சிங்கள பௌத்த பீடங்கள் பௌத்தத்தைக் காக்க சிங்களத்தை விட்டால் வேறு வழி இல்லை என்பது போலவும் சிங்களத்தைக் காக்க பௌத்தத்தை விட்டால் வேறு வழி இல்லை என்பது போலவும் சிங்கள மக்கள் மத்தியில் தீவிரவாதத்தை வளர்த்து புத்தர் காட்டிய மனிதநேயத்தையும் அன்பையும் குழிதோண்டிப் புதைத்து வருகின்றனர். ஆனால் பௌத்தம் சன்மார்க்கம் மிக்க மார்க்கம் அது தமிழர்களாலும் போற்றிவளர்க்கப் பட்டிருக்கிறது.
 2. http://www.youtube.com/watch?v=QUnxxrijZFE&feature=related மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்.
 3. நெடுக்கின் இந்தக் கருத்தை ஏற்றக் கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. இலக்கியங்கள், திரைப்படங்கள், நாடகங்கள் காட்டும் பெண்மையும் நடைமுறை ஏதார்த்தமும் வெவ்வேறாகவே உள்ளது. தமிழ்ச் சமூகத்தை எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிலும் பலவீனாமான பெண்களைத்தான் பார்க்க முடிகிறது. விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் விதிவிலக்குகளால் விதிகள் அவ்வளவு எளிதில் மீறப்படுவதில்லை. குடும்பங்களை எடுத்துக் கொண்டால் எத்தனையொ குடும்பங்கள் பிளவு பட்டதற்கு நான் அறிந்தவரை எந்த ஆண்களுமே காரணமாக இருக்கவில்லை. அறிவியல் உண்மைகளையோ நடை முறை எதார்த்தத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் பக்குவமும் இருப்பதில்லை. இன்றைய பெண்களுக்கு பெண் விடுதலை என்றால் என்ன என்றே தெரியவில்லை. சமத்துவத்தையும் பின் நவீனத்துவத்தையும் போட்டுக் குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனையும் பெண்களே ஏராளம். இப்போதெல்லாம் தீவிரப் பெண்ணியம் என்ற சொல்லாடல் ஊடகங்களில் அடிபடுகிறது. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் பெண்ணியம் முற்போக்கானதாம் பெண்மை பிற்போக்கானதாம்!!!! அட ஞானசூனியமே! தமிழ் இலக்கணப்படி இரண்டுமே ஒரே பொருளுடைய சொற்கள்தான்!!! எந்த வேறுபாடுமே இல்லை. நான் ஆணாதிக்கத்திற்கு வாக்காலத்து வாங்கவில்லை ஆதிக்க வெறி எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்க வேண்டியதுதான் பெண்களுக்கெதிரானான கொடுமைகள் இன்னமும் தொடர்கின்றன என்பதும் உண்மைதான் ஆனால் நான் இங்கு வலியுறுத்துவது இவை தொடர்பன தெளிவான அறிவு பெண்களுக்கு இல்லை. பெண்களுக்காக போராடியவர்கள் அனைவருமே ஆண்கள்தான். இந்த உண்மை தெரியாமல் கூச்சல் போடும் அரைவேக்காட்டுத்தனத்தை என்னவென்பது?? பெண்விடுதலை பேசும் தமிழ்ப் பெண்கள், பெண்களை ஈவிரக்கம் இன்றி கூறு போடும் இந்து மதத்தின் மீது கை வைக்கவே அவர்களுக்கு துணிவில்லை. சரி அரசியலை எடுப்போம் நன் அறிந்தவரை, அத்தனை பெண் அரசியல்வாதிகளும் மோசமானவர்கள்தான் இந்திரா காந்தி சிறிமாவோ பண்டாரநாயக்கா மார்கிரட் தச்சர் ஜெயலலிதா ஈசாபெல் பெறன் (அர்ஜென்டினா) என இவர்களில் பட்டியல் நீளுகின்றன. ஓரு ஆபிரகாம் லிங்கனையோ, அறிஞர் அண்ணாவையோ இந்தப் பட்டியலில் தேட முடியாது. அனைவருமே அதிகாரத்தை துஷ்பிரயோகித்தவர்களே!. அன்னை தெரிசா, நைற்றிங்கேல் போன்றவர்கள் அன்பு சார்ந்த துறையை தேர்ந்தெடுத்ததால் அவர்கள் பெரு மதிப்புக்குரியவர்களானார்கள். அரசியல் போன்ற துறைகளில், பெண்கள் வெறும் சுழியம் என்பதை வேறு வழியில்லாமல் ஒத்துகொள்ள வேண்டித்தான் உள்ளது பெண்மை அழகானதுதான், அந்த அழகியலைத் தாண்டிய எதார்த்தம் வேறுவிதமாக இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை!!! புத்திசாலித்தனம், சகிப்புத்தன்மை, வீரம், விவேகம், துணிவு இத்தியாதி இத்தியாதி போன்றவற்றை சாத்தனாரின் மணிமேகலை முதற்கொண்டு ராதிகாவின் நாடகங்கள் வரை கலைப் படைப்புக்களில் மட்டும்தான் ரசிக்க முடிகிறது!!!!!!!!!!!!!
 4. மகாபாரதத்தில், கர்ணன் துரியோதனனின் நட்பின் உயர்வை விளக்கி 'தளபதி' திரைப்படத்தை எடுத்த மணிரத்னம், இலங்கையரசன் ராவணனின் உயர்வை விளக்கும் வண்ணம் இயக்கியிருக்கும் திரைப்படம்தான் 'ராவணன்'. வரலாற்றில் நடந்த ஒரு சில சம்பவங்களோடு ஏராளமான கட்டுக்கதைகளையும், பத்துத்தலை ராவணன் போன்ற பகுத்தறிவுக்குப் புறம்பான கற்பனைகளையும் கொண்டு எழுதப்பட்ட ஒரு Fiction தான் ராமாயணம். அப்படியானால் வரலாற்றில் நடந்த அந்த சம்பவங்கள் என்ன? இந்து மதத்தின் புராண இதிகாசங்கள் அனைத்தும் ஆரியரின் பண்பாட்டுப் படை எடுப்புக்களின் தொகுப்புக்கள்தாம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினை ஆய்வு செய்த ராகுல் செங்கிருத்யாயன், ஜவகர்லால் நேரு போன்றவர்கள், ஆரியர்களுக்கும் தமிழர் மற்றும் சில பழங்குடியினருக்கும் நடந்த போர்கள்தாம் புராண இதிகாசங்கள் என்பதனை ஒப்புக் கொள்கின்றனர். வடமொழியில் வால்மீகியால் எழுதப்பட்ட இந்த கதை அதன் பின்னர் பலரால் பலவிதமாக எழுதப்பட்டுள்ளன. இன்று எத்தனையோ விதமான ராமாயணக் கதைகள் உலாவுகின்றன. இந்தியில் எழுதப்பட்ட துளசிராமாயணம், தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணம் என பல உள்ளன. ஆனந்த ராமாயணம் என்று ஒன்று உள்ளதாம். அதில் சீதை ராவணனின் மகளாக குறிப்பிடப் பட்டிருக்கிறதாம். அதனை வைத்து நடிகர் ஆர்.எஸ். மனோகர் 'இலங்கேஸ்வரன்' எனும் நாடகத்தை பட்டி தொட்டி எங்கும் நடத்தினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த புலவர் குழந்தை அவர்கள் 'இராவணகாவியம்' எனும் நூலை எழுதினார். ராமனை தெய்வமாக்கி ராவணனை அரக்கனாக்கிய கம்பரின் நூலுக்கு சரியான மறுப்பு நூலாகவே புலவர் குழந்தையின் 'இராவணகாவியம்' அமைந்தது. சிறுகதை எழுத்தாளர் தி.க.சி. அவர்கள் ராமனைக் காட்டிலும் ராவணன் எவ்வளவோ மேல் என சீதையே எண்ணுவதாக ஒரு சிறுகதையை எழுதியிருந்தார்( சிறுகதையின் பெயர் நினைவில் இல்லை, வெற்றிக் களிப்பு என நினைக்கிறேன்) மணிரத்னத்தின் இத்திரைப்படமும் அப்படிப்பட்ட ஒன்றுதான். எல்லா ராமாயாணக் கதைகளிலும் ஒன்று மட்டும் மாறாமல் உள்ளது. ராமனால் ராவணன் கொல்லப்பட்டான் என்பதுதான். இத்திரைப் படமும் அவ்வாறே அமைந்துள்ளது. இனி திரைப்படத்திற்குச் செல்வோம். ராமாயணத்தை நன்கு அலசியவர்கள் இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் நுணுக்கமாக பதிவு செய்திருப்பதை ஒப்புக் கொள்வார்கள். முரட்டுத் தோற்றமும், வன்முறையாளனாகவும் உள்ள ராவணன் அதேசமயம், நேர்மையும், வீரமும் கொண்ட ஒருவனாக காட்டப்பட்டிருக்கிறான். இன்று போய் நாளை வா! என்ற கம்பரின் வரிக்கு மாறாக, கடைசியில் ராவணனாலயே ராமனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கப் படுகிறது. கண்ணியமான தோற்றத்துடனும் கௌரவமான பதவியுடனும் வரும் ராமன், பேடித்தனமும் கபடமும் நிறைந்த ஒருவனாகவே காட்டப் பட்டிருக்கிறான். ராமாயணக் கதையில் தனது தங்கை சூர்ப்பனகையை ராமனின் தம்பி லட்சுமணன் அவமதித்த உடனேயே ராவணன் சீதையைக் கடத்துகிறான். இங்கும் அவ்வாறே காட்டப்பட்டுள்ளது. ராவணனின் தங்கை வெண்ணிலா (சூர்ப்பனகை) காவல்துறை அதிகாரியால் (லட்சுமணன்) கெடுக்கப் பட, அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்கு பழி வாங்க எஸ்.பி. தேவ் பிரசாத்தின் (ராமன்) மனைவி ராகினியை (சீதை) கடத்துகிறான் ராவணன். ராவணனை முதலில் வெறுக்கும் சீதையின் மனம் பின்னர் மாறுகிறது. காவல் துறையால் அந்த மக்கள் பட்ட அவமானங்களையும் துயரங்களையும் அவர்களுக்கு அரணாக விளங்கும் ராவணனின் பாசமும் வீரமும் அந்த மாற்றத்தை அவளிடம் கொண்டு வருகிறது. சீதையின் மேல் ராவணன் கட்டுக்கடங்காத காமத்தில் திளைத்திருந்தான் என ராமாயணம் கூறுகிறது. இத்திரைப்படத்திலும் அது காட்டப் படுகிறது, ஆனால் கரைபுரண்டோடும் காம உணர்வாக அல்லாமல், முரட்டு ராவணனிடமிருந்து மென்மையான காதலாக அது அரும்புகிறது. கண்ணியத்தோடு பழகும் ராவணன் மேல் சீதைக்கு மதிப்பு வந்து விடுகிறது. ராமாயணத்தில் யாராலும் நியாயப் படுத்த முடியாத பாதகச் செயல் என்றால் அது ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றதுதான். ஆச்சாரியார் ராஜகோபாலரால்கூட (ராஜாஜி) அதனை நியாயப் படுத்த முடியவில்லை. அதுவும் இத்திரைப் படத்தில் காட்டப் படுகிறது. ஆனால் வாலியை அல்ல ராவணனையே கூட்டத்திற்கு நடுவில் மறைந்திருந்து துப்பாக்கியால் சுடுகிறான். ராமாயணக் கதையில் தன்னை நாடிவரும் விபீஷணனை ராமன் சகோதர பாசத்துடன் ஆட்கொள்வதுபோலவும், ராவணனிடம் தூது செல்லும் அனுமானின் வாலில் ராவணன் நெருப்பைக் கொளுத்திவிடுவது போலவும் சொல்லப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் அது வேறு விதமாக காட்டப் பட்டிருக்கிறது (ஒரு வேளை இப்படித்தான் உண்மையாக நடந்திருக்குமோ!) நிராயுதபாணியாக சமாதானம் பேசப்போகும் ராவணனின் தம்பி விபீஷணனை ஈவிரக்கமற்று சுட்டுத்தள்ளுகிறான் ராமன். அதே சமயம் யாருக்கும் தெரியாமல் சீதையிருக்குமிடம் சென்று ராமனின் கணையாளியை கொடுக்க முனையும் அனுமானை கைது செய்து அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறான் ராவணன். ராமாயணத்தில் ஜடாயு என்றொரு பாத்திரம் இருக்கிறது. அது ஒரு பறவை. ராவணன் சீதையைக் கடத்திக் கொண்டு செல்கையில், இடைமறித்த ஜடாயு ராவணனுக்கு எதிராகப் போராடியது. அப்போது அதன் இறகுகளை ராவணன் வெட்டி வீழ்த்தியதாக எழுதப் பட்டிருக்கிறது. இத்திரைப் படத்திலும் அது போன்ற சம்பவம் வருகிறது. தனது தங்கையை காதலித்து ஏமாற்றிய மேட்டுக்குடி வாலிபனின் கையை ராவணன் வெட்டுகிறான். குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் அவனை ராமன் சந்திக்கும்போது ராவணனின் தங்கையை காதலித்த குற்றத்திற்காக அவனை மேலும் சித்திரவதை செய்கிறான் ராமன். உயர்சாதியைச் சார்ந்த நீ, தாழ்த்தப் பட்ட பெண்ணை எப்படிக் காதலிக்கலாம் என்று கேட்பது போல்தான் உள்ளது. இறுதியில் சீதைக்காக ராமனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறான் ராவணன். கட்டுக்கடங்காத காதலுடன் ராமனை நோக்கி வரும் சீதையிடம், உன்னை ஏற்க முடியாது நீ கெட்டுப்போனவள் என மறுக்கிறான் ராமன். அப்போது, "ராவணனிடத்தில் நான் சிறைவைக்கப் பட்டபோது நீ வந்து என்னை நிச்சயம் மீட்பாய் என்ற மன உறுதியுடன் நான் உயிரோடு இருந்தேன் இப்போது எனது மனமே உடைந்து விட்டது" என ராமாயணக் கதையில் சீதை பேசிய அதே வசனங்கள் ஒரு வரியும் பிசகாமல் இதிலும் சீதையால் சொல்லப் படுகிகின்றன. அவள் எவ்வளவோ கெஞ்சியும் ராமன் அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். நிர்க்கதியற்ற அவள் ராவணனின் இருப்பிடத்திற்கே வந்து அவனுடன் சேருகிறாள். சீதையைப் பின்தொடர்ந்து அவளுக்கே தெரியாமல் தனது சக பரிவாரங்களுடன் அங்கு வந்து சேரும் ராமன், தனக்கு உயிர்ப்பிச்சை அளித்த ராவணனை நயவஞ்சகமாகப் போட்டுத் தள்ளுகிறான். ராவணனின் இறப்பைத் தாங்க முடியாத சீதையின் கதறலுடன் நிறைவடைகிறது படம். படத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பு சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு. தமிழ் இந்தி இரண்டையும் பார்த்தவன் என்ற வகையில் சொல்கிறேன். சில காதாபாத்திரங்களும் உடைகளும் மாற்றப் பட்டுள்ளன. மற்றும்படி படத்தில் வேறு எந்த மாற்றமும் இல்லை. இந்தியைக் காட்டிலும் தமிழில்தான் ராவணன் ராவணனைப் போன்று இருக்கிறான். இறுகிய உடலும் முரட்டுத் தோற்றமும் அபிஷேக் பச்சானைக் காட்டிலும் விக்ரமிற்குத்தன் மிக நன்றாகப் பொருந்துகிறது. அபிஷேக் பச்சானின் ஒல்லியான தோற்றம் ராவணன் பாத்திரத்திற்கு பொருத்தமில்லை. அதைப் போன்று வெளியில் கம்பீரமாகவும், அழகாகவும், மற்றவர்களால் போற்றப்படும் காவல்துறை அதிகாரியாகவும் அதேசமயம் உள்ளத்தில் வில்லத்தனமாகவும் உள்ள ராமன் பாத்திரம் இந்தியில் விக்ரமைக் காட்டிலும் தமிழில் பிருதிவிராஜ் இற்குத்தான் கனகச்சிதமாகப் பொருந்துகிறது. நகைச்சுவைக் காதாபாத்திரமான அனுமான் பாத்திரம் இந்தி கோவிந்தாவைக் காட்டிலும் தமிழில் கார்த்திக்குக்குத்தான் பொருந்துகிறது. குரங்கு போல் மரத்திற்கு மரம் தாவுவதில் கார்த்திக் செய்யும் போது இருந்த தத்ரூபம் கோவிந்தா செய்யும்போது காணவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பிரபுவைப் பார்த்தால் அசல் கும்பகர்ணன் போல் தெரிகிறது, இந்தியில் நடித்த நடிகருக்கும் கும்பகர்ணனுக்கும் வெகு தூரம். படத்தில் குளிர்ச்சி சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் மட்டுமல்ல, 37 வயதிலும் ஐஸ்வர்யா ராயின் அழகும் அவ்வாறே உள்ளது. தகிக்கும் சூரியனாக ராவணனும் தண்ணிலவாக சீதையும் இருப்பது படத்தின் கூடுதல் அழகு.
 5. ரதி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் நமது தமிழ்க் குடிப் பெருமக்கள் அன்றிலிருந்து செய்த தவறு இதுதான். இந்தியா என்ற அந்த ஏகாதிபத்தியப் பிசாசிடம் அபரீதமான நேசத்தையும் நம்பிக்கையையும் காட்டியதுதான். பாகிஸ்தான் என்ன நினைக்கிறது தெரியுமா? நாம் இந்தியாவை நேச நாடு நேச நாடு என்று தோத்திரம் பாடுவதால் நாளை தமிழீழம் அமைந்தால் நாம் இந்தியாவோடுதானே ஒட்டுவோம் என நினைத்து அது எங்களை ஆதரிக்க மறுக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சீனாவும் பாகிஸ்தானும் எங்களை எதிர்ப்பதற்கு இதுதான் காரணம். சிங்களமும் இந்தியாவை எதிர்ப்பதுபோல் பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் காட்டிக்கொண்டு அதி புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்துகிறது. உண்மையில் மோடன் சிங்களவன் இல்லை நாம்தான். அவனிடமிருந்து நாம் கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது. அது மட்டுமல்ல முஸ்லீம்கள் எனக் கூறிக்கொள்ளும் இஸ்லாமியத் தமிழர் நம்மவர்களே. அவர்கள் ஒன்றும் அரேபியாவிலிருந்தோ ஆப்கானிஸ்தானிலிருந்தோ வரவில்லை. சிங்களப் பெருந்தேசியத்திற்கெதிரான போரில் நாம் அவர்களையும் இணைக்க வேண்டும். 1915 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய இனக் கலவரத்தில் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிராக நமது பச்சைத் தமிழர் சேர்.பொன்.இராமனாதன் நடந்து கொண்ட சிங்களச் சார்பு நிலை இங்கு கவனிக்கத் தக்கது. இது போன்ற நிகழ்வுகளால் தொடக்கத்திலிருந்தே அவர்களுக்கு எங்கள் மீது ஒரு வெறுப்பு வந்திருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் அது நடக்கவில்லை . 1930 களில் நடந்த தமிழ்த் தேசியப் போராட்டங்களில் இஸ்லாமியத் தமிழர்களும் பங்கெடுத்தனர். இன்றும் தமிழீழத்தை முழு மூச்சாக ஆதரிக்கும் இஸ்லாமியத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் அங்கு உள்ளனர். இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு ஆதிக்கத்திற்கு எதிரான ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். தமிழ் நாடு வேறு. (நாம் இங்கு எதிர்ப்பது வல்லாதிக்க வெறி கொண்ட இந்திய நடுவண் அரசைதான்) அவர்கள் நமது சகோதரர்கள் எமது உயிர்கள். எங்களுக்காக அவர்கள் குரல் கொடுப்பது போல் அவர்களுக்கு ஒரு சிக்கல் என்றால் நாமும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்
 6. சோ என்ற பார்ப்பன வெறியரின் கருத்தை அறிந்து கொள்ளவும். இவரது கருத்துத்தான் இந்திய ஆளும் கும்பல்களின் கருத்து. CNN போன்ற அனைத்துலக ஊடகஙகளில் இருக்கும் இந்திய வெறியர்களுக்கு அனிதா பிரதாப் போன்ற பத்திரிகையாளர்களோ. ராம் ஜெத்மலானி போன்ற சட்ட வல்லுனர்களோ கண்ணுக்குத் தெரியவில்லை. இந்த வக்கிரப் பிறப்புத் தான் தெரிந்திருக்கிறது. http://uk.youtube.com/watch?v=IQX29Wusebs
 7. இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்! தி.வழுதி வன்னியில் இன்று மும்முரமாக முன்னெடுக்கப்படும் போரின் மூலம் என்ன?... தமிழினத்தின் உண்மையான எதிரி யார்?... அந்த எதிரியை முறியடிக்க உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியது உண்மையில் என்ன?... என்ற விடயங்களை இங்கே ஆராய்கின்றார் தி.வழுதி. "புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772. அதாவது - சராசரியாக - ஒவ்வொரு நாளும் 14 தமிழர்கள் கொல்லப்பட்டு, 57 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை - இந்த ஒவ்வொரு நாளும் - போர்க்களத்தில் வீழ்ந்து போன, விழுப்புண்பட்ட புலிப் போராளிகளின் எண்ணிக்கை இங்கே சேர்க்கப்படவில்லை. இறந்து போன, போர்க்காயமடைந்த அவர்களும் தமிழர்களே. இது தவிர - வன்னியில் இருந்து வெளியேறிய 160 வரையான தமிழ் இளம் பெண்களும், இளைஞர்களும் - இரகசியமான சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு - வதை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாக வெளியில் சொல்ல முடியாத ஆதாரங்களில் இருந்து நம்பகமான தகவல்கள் உண்டு. தெளிவாக - இது ஓர் இனப்படுகொலைப் போரே அன்றி வேறொன்றும் அல்ல. ஆனால் - இந்த இனப் படுகொலைப் போரை நடத்துவது யார் என்பதிலும், அதற்கு எதிராக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதிலும் தான் எமக்கு தெளிவு தேவை. "அன்னை சோனியாவின் ஆன்மா கரையப்போவதில்லை" இது இந்தியாவின் போர்; சிறிலங்கா ஒரு பொம்மை மட்டுமே. இந்தப் போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு இந்தியா விடப்போவதே இல்லை: அதாவது, சிறிலங்கா விரும்பினாலும் கூட இந்தப் போர் நிற்கப் போவதில்லை. இந்தியப் படை அதிகாரிகள் - வன்னிப் போர் முனையில் - வெறுமனே பிரதான கட்டளை மையங்களில் மட்டுமன்றி - நேரடியான போர்ச் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர். இந்திய உளவு வானூர்திகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை 24 மணி நேரமும் கண்காணித்தபடியே உள்ளன. இந்திய கடற் கண்காணிப்பு கதுவீ (Radar) கருவிகள் வங்காள வரிகுடாவை 24 மணித்தியாலமும் கண்காணித்த வண்ணம் உள்ளன. இந்தியாவின் கண்களுக்கு தப்பி ஒரு மீன்பிடிப் படகு கூட அங்கு நீந்த முடியாது. இந்தத் தகவல்கள் எல்லாமே விடுதலைப் புலிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பினும் கூட - அரசியல் இராஜதந்திர நோக்கங்கள் கருதி - சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாதவர்களாக அவர்கள் உள்ளனர். ஒரு புறத்தில் போரை நடத்திக்கொண்டு - மறுபுறத்தில், அனைத்துலக நாடுகளிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்கள் எல்லாவற்றையும் முறியடிப்பதற்கான இராஜதந்திர ஆலோசனைகளையும் சிறிலங்காவுக்கு வழங்குகின்றது இந்தியா. பொருளாதாரம் சீரழிந்து சிறிலங்கா வீழ்ந்தாலும், அதனை முட்டுக்கொடுத்து தூக்கிவிட்டு - இந்தியா இந்தப் போரை நடத்தும். ஆட்பலம் குறைந்து சிங்களப் படை தவித்தாலும், தன் படைகளை இந்தியா போருக்கு அனுப்பும். தனக்காக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையிலேயே இவன் சிரிக்கின்றான் பிண மலையாகத் தமிழர்கள் வன்னியில் குவிந்தாலும் சரி, முத்துக்குமாரர்களாக "சாஸ்திரி பவன்" முற்றத்தில் தமிழர்கள் எரிந்தாலும் சரி - அன்னை சோனியாவின் ஆன்மா கரையப் போவதில்லை. தமிழ்த் தேசிய எழுச்சித் தீயை அணைத்து அடக்கும் வரை - காங்கிரசின் இந்திய வல்லாதிக்கம் ஓயப்போவதில்லை. பிரபாகரனின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடிக்கும் வரை - சோனியா காந்தி நிம்மதியாக தூங்கப் போவதில்லை. என்றோ இறந்து போன ராஜீவ் காந்திக்காக - நேற்றும் இன்றும் நாளைக்கும், இனி என்றும் தமிழர்களைப் பழி தீர்த்துக்கொண்டே இருக்கப் போகின்றது காங்கிரசின் இந்தியா. சிவ்சங்கர் மேனனையும், பிரணாப் முகர்ஜியையும், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த உணவு மூட்டைகளையும் சிறிலங்காவுக்கு பகிரங்கமாக அனுப்பி - மற்ற நாட்டுக்காரர்களைத் தள்ளி நிற்க வைத்து விட்டது இந்தியா. நோர்வேயின் எரிக் சொல்கெய்ம் - மிக அண்மையில் - புலிகளிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார், "இப்போது எமது கையில் எதுவுமே இல்லை", என்று. உலகத் தமிழர்களே! இது எமக்குரிய நேரம்: இதுவே தான் எமக்கான நேரம்! எமக்காக எழுந்துவிட்ட ஏழு கோடி தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து - உலகத் தமிழர்கள் நாம் - எம்மைப் பழி தீர்க்க முனையும் இந்தியாவின் இந்த குரூர வெறிக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும். ஊரில் நடைபெறும் நிகழ்வுகளின் செய்திகளைப் பார்த்து, கொதிப்படைந்து - ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வுப் பெருக்கோடு எதையாவது செய்து கொண்டிருக்கின்றோம். உலகு எங்கும் - கவனயீர்ப்பு நிகழ்வுகள் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து, மனுக்கடிதங்கள் எழுதி, மனிதச் சங்கிலிகள் பிடித்து - எங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் பிழையான இடங்களின் மீது நாம் காட்டிக்கொண்டிருக்கின்றோம். சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் போட்டு தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தமாறு உலக நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் நாம் வேண்டுகின்றோம். இந்தியா நடத்தும் போர்: இனி நடக்க முடியாதவள் ஆனாள் தங்கை ஆனால் - தமிழர் இனப் படுகொலையை நிகழ்த்துவது சிறிலங்கா அல்ல; அது இந்தியாவே என்பதை நாம் உணர வேண்டும். சிறிலங்கா இப்போது வெறும் பொம்மை மட்டுமே; இது இந்தியா இயக்கும் போர் என்பது எல்லோருக்குமே தெரியும். இப்போதுள்ள சூழலில் - தென்னாசியாவில், இந்தியாவை மீறி எதுவுமே நடக்கப்போவதில்லை. மேற்குலக நாடுகள் என்றாலும் சரி, ஐக்கிய நாடுகள் சபை என்றாலும் சரி - ஆகவும் மிஞ்சிப் போனால் - எமது ஆய்க்கினை தாங்காமல் - ஒரு அறிக்கையை விடுவார்கள்; கவலை தெரிவிப்பார்கள். அதற்கு மேல் அவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள்; அவர்களால் எதுவும் செய்யவும் இயலாது. இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம். "வெள்ளை மாளிகை" முன்றலிலும், "டவுணிங் ஸ்ட்றீட்"டிலும், ஒட்டாவாவின் வீதிகளிலும் மற்றும் மேற்குலகின் சாலைகளிலும் நாம் நடத்தும் பேரணிகள் உண்மையில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்குச் சங்கடங்களையே ஏற்படுத்தும். எம் மீது ஒரு வகையான சினத்தைக்கூட - அந்தந்த நாட்டு அரசுகளினதும், அந்தந்த நாட்டு மக்களினதும் மனங்களில் - உருவாக்கப் பார்க்கும். ஒரு வகையில் - தேவையற்ற பகை உணர்வைக்கூட, அது தமிழர்களுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஏற்படுத்தும். மேற்குலக அரசுகளின் ஆதரவு பின்னால் எமக்கு தேவை: இப்போது, எதுவும் செய்ய முடியாத சூழலில் அவர்கள் இருக்கும் போது - அவர்களைச் சங்கடப்படுத்துவது நமக்கு நன்மையைச் செய்யாது; அது அழகும் அல்ல. எனவே - அளவுக்கு அதிகமான தொந்தரவைக் கொடுக்காமல் ஓரு தூர நோக்கப் பார்வையோடு மேற்குலகை நாம் விட்டுவைக்க வேண்டும். இப்போது - எமது துடிப்பு - சக்தி - கவனம் எதனையும் வேறு இடங்கள் நோக்கிச் சிதற விடாமல் - எல்லாவற்றையும் இந்தியாவை நோக்கியே நாம் செலுத்த வேண்டும். உலகத் தமிழர்களின் பொங்கும் உணர்வு எழுச்சியைப் பல திசைகளிலும் பரவ விட்டு, எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்காமல் - அதை ஒருங்கே குவித்து - சரியான இலக்கை நோக்கி நகர வைக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்களின் கைகளிலேயே இப்போது உள்ளது. அந்த சரியான இலக்கு - இந்தியா. என்றுமில்லாத அளவுக்கு பேரெழுச்சி கொண்டுள்ள தமிழக மக்களுக்குப் பின்னால் உலகத் தமிழர்கள் உடனேயே அணிதிரள வேண்டும். எமக்காகப் போராடும் அவர்களோடு நாம் ஒன்றிணைய வேண்டும். விடுதலைப் புலிகளின் கோலாகலமான ஒரு போர் வெற்றிக்காக இரண்டு வருடங்கள் நாம் காத்திருந்தோம்: எதுவுமே நடக்கவில்லை; நடக்க இந்தியா விடவில்லை. இப்போது - காங்கிரஸ் ஆட்சியின் கேவலமான ஒரு வீழ்ச்சிக்காக நான்கு மாதங்கள் காத்திருக்க எமக்கு அவகாசம் எதுவும் இல்லை; அதன் பிறகு கூட ஏதாவது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவதமும் இல்லை. உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்களை நாம் இப்போதே முற்றுகைக்கு உள்ளாக்க வேண்டும். தொடர்ச்சியாக - இடைவிடாமல் - ஒருங்கு திரட்டப்பட்ட செயல் வீச்சோடு - அதை நாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு செய்ய வேண்டும். லண்டன் நகர வீதிகளில், ஒரு லட்சம் பேர், ஒரே நாளில் திரண்டு பிரித்தானிய மக்களின் அன்றாட வாழ்வுக்குச் சிரமங்கள் தருவதைத் தவிர்த்து விட்டு - லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தை 5 ஆயிரம் பேராக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும். அதேபோல - ரொறான்ரோ நகர வீதிகளில், 80 ஆயிரம் பேர், ஒரே நாளில் திரண்டு கனடிய மக்களின் அன்றாட வாழ்வுக்கு அலுப்புத் தருவதைத் தவிர்த்து விட்டு - கனடாவுக்கான இந்தியத் தூதரகத்தை 4 ஆயிரமாக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும். இதே போல ஒவ்வொரு நாடுகளிலும் செய்ய வேண்டும். தமிழர் பிரச்சினை தவிர வேறு எதைப் பற்றியுமே சிந்திக்க முடியாத - நாளாந்த அலுவல்களில் சிரத்தை காட்ட முடியாத - செயலிழப்பு நிலைமைக்கு வெளிநாட்டு இந்தியத் தூதரகங்களை நாம் உள்ளாக்க வேண்டும். எமது இடைவிடாத முற்றுகைகள் மூலம் - தூதரக அதிகாரிகளையும், தூதுவர்களையும் செயற்பட முடியாத அளவு எரிச்சலுக்கும், சினத்திற்கும் உள்ளாக்க வேண்டும். தமது தூதரகங்களுக்கே சென்றுவர முடியாதுள்ள - தமது பணிகளை ஆற்ற முடியாதுள்ள தமது கையாலாகாத்தனத்தை அவர்கள் டெல்லித் தலைமைக்கு முறையிட வைக்க வேண்டும். தமிழ் இனத்தைப் படுகொலை செய்து அழிக்கும் போரின் சூத்திரதாரி சிறிலங்கா அல்ல; இந்தியா தான் என்பதை இந்த உலகின் முற்றத்தில் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும். இந்தியா நடத்தும் இந்தப் படுகொலைப் போரின் பழியை இந்தியாவின் தலையிலேயே நாம் சுமத்த வேண்டும். ஓரு பழம்பெரும் இனத்தை அழிக்கும் நாடு என்ற அவமான வெட்கத்தை இந்தியாவின் முகத்தில் நாம் பூச வேண்டும். அதனை நோக்கியே எமது செயற்பாடுகள் யாவும் அமைய வேண்டும். உண்மையில் - மேற்குலகத் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் நாம் நேரடியாக எதனைமே சொல்ல வேண்டியதில்லை: உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன்னால் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நாம் நடத்தும் முற்றுகைப் போராட்டமே - சொல்ல வேண்டிய செய்தியை அந்தந்த நாட்டுத் தலைவர்களுக்குச் சொல்லும். படுகொலைப் பழியை இந்தியா மீது சுமத்தி - இந்தியாவை கூனிக்குறுக வைத்து - தமிழர்களின் விடயத்தில் இந்தியாவின் விருப்பத்தை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் மேற்குலக நாடுகளை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும். மேற்குலக நாடுகளை அவ்வாறான முடிவுகளை எடுக்க வைப்பதன் மூலம் - சோனியா காந்தியின் குரூர விருப்பங்களை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் காங்கிரஸ் தலைமையை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும். நாம் தெளிவாக இருப்போம் - சிறிலங்கா அல்ல, இந்தியாவே தமிழர்களின் எதிரி. அதனையே நாம் இலக்கு வைக்க வேண்டும். மேற்குலக நாடுகளையும், அதன் தலைவர்களையும் நோக்கி எமது கவனத்தையும், சக்தியையும் சிதறவிடாமல் - இந்தியாவை நோக்கியே எமது எண்ணங்களையும், செயல்களையும் நாம் ஒருங்கு குவிக்க வேண்டும். ஒரேயடியாக - இந்தப் பிரச்சினைக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும். இந்தியாவை நோக்கிய எமது செய்தி - உலகம் முழுவதிலும் - ஒன்றாகவே இருக்க வேண்டும்: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு! தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி! சிறிலங்காவுக்கான போர் உதவிகள் அனைத்தையும் நிறுத்து! ஓவ்வொரு நாளும் 15 தமிழர்கள் சாகின்றனர். ஓய்ந்திருந்து யோசிக்க எமக்கு நேரமில்லை. அவர்களையும், எம் தேசத்தையும் காக்கும் வழியும் எமக்குத் தெரிகின்றது. செயற்படுவோம், இப்போதே! கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com நன்றி : புதினம்
 8. போர் கொண்டு சென்றது போக, சுனாமி அள்ளிச் சென்றது போக இது போன்று பாம்புகளும் தேள்களும் கடித்து எத்தனை உறவுகள்! நெஞ்சு வலிக்கிறது
 9. இந்தியா வல்லரசு ஆகுமா? - இயக்குனர் சீமான் http://uk.youtube.com/watch?v=AabnViHZZ8w&...feature=related
 10. தூயவன் பகுத்தறிவுவாதியான என் மீது அதே பட்டத்தை தேவையற்று தர முற்படுகிறார் தமிழனின் உரிமைப் பிரச்சனையில் நாம் நாத்திகம் ஆத்திகம் பார்ப்பதில்லை! கொல்லப் பட்ட நந்தனிலிருந்து தாக்கப்பட்ட ஆறுமுக ஓதுவார் வரை பார்ப்பன இந்துத்துவ வெறிக்கு பலியானவர்கள் தமிழர்கள். எங்களுக்கு கொதிக்கும் ரத்தம் ஆரிய அடிவருடிகளுக்கு கொதிக்காததில் வியப்பேதுமில்லை. சைவம் வேறு இந்துத்துவம் வேறு என்பது பல அறிஞர்களின் கருத்து. அதற்காக சைவத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஓரே ஒரு கேள்வி எல்லோரும் இந்துக்கள் என்றால் சிதம்பரம் தீட்சிதர் பொறுப்பிற்கு மாரியம்மன் கோவில் பூசாரியை நியமிப்பார்களா??????? சங்கர மடத்தின் தலைவராக பண்டார சன்னதியையோ மதுரை ஆதீனத்தையோ நியமிப்பார்களா??? இவைகள் நடந்தால் எல்லோரும் இந்துக்கள் என்பதை நாமும் ஒத்துக் கொள்கின்றோம்.
 11. இணைப்பிற்கு நன்றி நாரதரே! செத்துச் சுடுகாட்டிற்குப் போன இழவு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனக் குடுமிகளுக்கே இவ்வளவு திமிரும் தினவும் இருக்கும் என்றால் தமிழர்களுக்கு இருக்காதா? நந்தனை தீயில் தள்ளிக் கொன்றார்கள், வடலுர் வள்ளலார் இராமலிங்க அடிகள் வடலூரிலிருந்து மேட்டுக்குப்பம் சென்று கொண்டிருந்த போது அடித்துக் கொன்று விட்டு சோதியோடு ஐக்கியமானார் என்று கட்டுக்கதை பரப்பினார்கள். பார்ப்பன வெறியர்களின் சாதிவெறிக்கு பலியான இறையியலாளர்கள் எத்தனையோ ! சிதம்பர ரகசியம் என்றாலே இதுதான்! தமிழர்கள் விழ்த்துக் கொண்டதால் ஆறுமுக ஓதுவார் தப்பினார். ஆறுமுக ஓதுவாரின் நெஞ்சுறுதிக்கும் அவரோடு தோள் நின்ற தமிழுணர்வாளர்களுக்கும் பாராட்டுக்கள். அவர்களின் உறுதி பார்ப்பனியத்தை கருவறுக்கட்டும் வெல்லட்டும் தமிழ்!
 12. (செப்டம்பர் திங்கள் 1997 ஆம் ஆண்டு, 'Tamil Tribune' எனும் இதழில் பேராசிரியர் தஞ்சை நலங்கிள்ளி அவர்கள் எழுதிய "Eyes Of Kuttimani" என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்) குட்டிமணியின் கண்கள் "எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்." - குட்டிமணி விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக் கொண்டார்கள். தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித அடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக தன்னை அழித்துக் கொண்டவர்தான் குட்டிமணி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா யோகச்சந்திரன். ஈழத் தமிழர்களின் இன்னல்கள் நிரந்தரமாகக் களையப் படவேண்டுமென்றால் தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மிக உறுதியாக இருந்தவர் குட்டிமணி. அந்த விடுதலை வீரரை 08-05 1981 அன்று சிங்களக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிங்கள நீதிமன்றம் அவருக்கு மரணதன்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்த நீதிபதி குட்டிமணியின் இறுதி ஆசையைக் கேட்டபோது, அதற்கு குட்டிமணி கூறிய பதில் அவரது உள்ளக் கிடக்கையையும் விடுதலைமேல் அவர் கொண்டிருந்த தீராத பற்றையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. "எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்." இதுதான் அந்த விடுதலை வீரரின் கடைசி ஆசை. அதற்குப் பின் அவர் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப் பட்டார். அந்தச் சிறையில் ஏற்கனவே பல சிங்களக் கைதிகளும் தமிழ்க் கைதிகளும் இருந்தனர். சிங்களக் கைதிகள் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருந்தனர். தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை வைக்கப் பட்டிருந்தனர். இனமோதல்களை தவிர்ப்பதற்காக தமிழ்க் கைதிகளும் சிங்களக் கைதிகளும் வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். குட்டிமணி 34 தமிழ்க் கைதிகளுடன் அடைத்து வைக்கப் பட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக் கலவரம் மூண்டது. யூலை மாதம் 24 ஆம் திகதி தொடங்கிய அந்தக் கலவரம் பல வாரங்கள் தொடர்ந்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். பலர் உயிரோடு கொழுத்தப் பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P.) கலவரத்தை அடக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்ததுமில்லாமல் கலவரத்தை மேலும் தூண்டும் வேலைகளிலும் இறங்கியது. இந்தக் கலவரத்தின் தீ வெலிக் கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளையும் பற்றிக் கொண்டது. சிறைக் காப்பாளர்கள் அந்தச் சிங்களக் கைதிகளின் இனவெறிக்கு தீனி போடும் வகையில் தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப் பட்டிருந்த சிறைக் கதவுகளைத் திறந்து விட்டனர். கத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயதங்களுடன் தமிழ்க் கைதிகளின் அறைகளுக்குள் நுழைந்து அவர்களை வெட்டி வீழ்த்தினர். குட்டிமணியின் கடைசி ஆசையை ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த அந்தச் சிங்களக் கைதிகள் அவரை வெட்டிப் படுகொலை செய்தது மட்டுமல்ல அவரது கண்களைத் தோண்டி எடுத்து அதை தங்களது கால்களால் நசுக்கி அழித்தனர். குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்ட 35 தமிழ்க் கைதிகளின் உடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச் சாலை முற்றத்தில் இருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக் கூத்தாடினர். குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள். அந்த விடுதலை வீரரின் இறுதி ஆசையை நிறைவேறாமல் செய்தனர். குட்டிமணி மட்டுமல்ல பல்லாயிக்கணக்கான பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த அந்தத் தமிழீழத் தனியரசைக் காணும் முன்பே போர்க்களத்தில் தங்கள் உயிர்களைக் காணிக்கையாக்கிக் கொண்டனர். இவர்கள் எதைக் கேட்டார்கள்? உரிமைகள் மறுக்கப்பட்ட தங்கள் இனத்துக்காக விலங்கிலும் கேவலமாக நடத்தப்பட்ட தங்கள் மக்களுக்காக நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் விடுதலையையும் கேட்டார்கள்.
 13. நன்றி புத்தன். தொடர்ந்து படித்து அவ்வப்போது கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள். சிந்திக்கத்தோன்றும் வரிகள் புத்தன்! மற்றக் கோபுரங்களுக்கும் சாயி பாபா என்ற கோபுரத்திற்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு உள்ளது. ஆம் எனக்கு இறை நம்பிக்கை சமய நம்பிக்கை இருந்த காலத்திலேயே அது சாய்ந்து விழுந்து விட்டது. நன்றி சாத்திரி! கோபுரமாக உயர்ந்து நின்ற விடயங்கள் சாய்ந்து போனதைப் பற்றிய தொடர் தான் இது. எல்லாவற்றையும் எழுதிவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். வேறு ஒரு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி தோழரே!
 14. யாழ்களத்தில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அன்பிற்கினிய தோழர்கள் ரசிகை, புத்தன், கௌதமன், நெடுக்காலபோவான், தூயா, சாத்திரி, ஓவியன், லிசான், சுவி, கர்ணன், ஜமுனா, கந்தப்பு, சுகன், தேவன், ஜனனி, சபேசன், பண்டிதர், கௌரிபாலன், இணையவன், பொன்னையா ஆகிய அனைவருக்கும் வாசித்த தமிழ் உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்